டிமாண்டி காலனி படத்தின் கதை என் வலைப்பதிவில் இருந்து சுட்டது
கடந்த 2 மாதங்களாக கடுமையான வேலை, புதியதொரு சிஸ்டம் என் கீழ் வந்துள்ளதால் அந்த வேலையில் மூழ்கி இருந்ததால் ஃபேஸ்புக்கில் அவ்வளவாக எதுவும் எழுதவில்லை, இந்த நேரத்தில் ஆஸ்த்திரேலியாவில் இருக்கும் சத்யா சிங்கப்பூர் வந்திருந்தார், அவரோடு டீமாண்டி காலனி படம் பார்க்க சென்றிருந்தேன்.
படத்தின் மொத்தமுமே ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் முடிச்சில் தான் இருந்தது, ங்கொய்யால அந்த சஸ்பென்ஸ் முடிச்சி உடையும் போது தான் தெரிந்தது ஆகா நம்ம கிட்ட இருந்து தான் சுட்டிருக்கிறார்கள் என்று.
அருள்நிதி உடன் கூட இருக்கும் ஒரு நண்பர் ஏற்கனவே இறந்து போனவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டவர் என்பது நாடி ஜோதிடம் பார்க்க போன ஜோசியர் மூலமாக தெரியும், இது தான் படத்தின் சஸ்பென்ஸ் அதுவும் படத்தின் ஒரே சஸ்பென்ஸ்சும் இது தான். இதை தான் ஆவிகளின் புரிதல் (எ) ஷியங் - என்று 2005ம் ஆண்டில் நான் எழுதியிருந்தேன். டீமாண்டி காலனி படத்தை பார்த்தவர்கள் இந்த லிங்கை ஒரு முறை படித்து பாருங்கள், படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் காட்சியே இது தான், இதன் மேல் தான் மொத்த படத்தின் கதையும் உள்ளது.
வலைப்பதிவுகளின் வெளியான கதையை சுட்டு அதனை டெவலப் செய்து படம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல, மிகப்பிரபலமாக ஓடிய மைனா படத்தின் மொத்த படத்தின் அடிப்படையே கற்பகம் என்ற வலைப்பதிவர் எழுதிய கதையில் இருந்து தான் சுடப்பட்டது.
படம் குறித்து சொல்வதென்றால், மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம், நல்ல நடிப்பு ஒரு முறை பார்க்கலாம்.
ஒன்றரை கோடிக்கு பட்ஜெட் என்று சொல்லி தயாரிப்பாளரை ஒத்துக்கொள்ள வைத்து படம் முடிவதற்குள் ஒன்றரை கோடி செலவை 4 கோடிகளாக்கிவிட்டு படம் குப்பையாக வந்திருக்கும் பட்சத்தில் பட்ஜெட் பத்தலை என்று தயாரிப்பாளரை குறை சொல்லும் புது இயக்குனர்களுக்கு இப்படியும் மிகக்குறைவான செலவில் சிம்பிளாக படம் எடுக்கலாம் என்று சொல்லும் பாடம்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Saturday, June 13, 2015
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: டிமாண்டி காலனி
சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க நினைக்கும் திராவிட பொறுக்கிகள்
ஆந்திராவில் தெலுங்கு இனவெறியர்களால் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் சாதி குறித்த விபரங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்தது, பாமக, தவாக, நாம் தமிழர்கள் மற்றும் பல்வேறு சிறு குறு தமிழ் தேசிய இயக்கங்கள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என போராடிக்கொண்டிருக்க இந்த சிக்கலில் வடுக வந்தேறி திராவிட கும்பல்கள் களின் நாடக வேடகங்கள் கலைந்ததை அடுத்து போராட்டத்தில் இருக்கும் இயக்கங்கள் மீது சேறு வாரி இறைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது.
மிக கடுமையாக திராவிடத்தை விமர்சனம் செய்திருந்தாலும் இதுவரை பொறுக்கிகள் என்று நான் விமர்சித்ததில்லை, இப்போதும் திராவிடம் பேசும் அனைவரையும் நான் பொறுக்கிகள் என்று சொல்லவில்லை, தமிழர்களாக நான்கு நாட்களுக்கும் மேலாக உணர்வால் ஒன்றுபட்டு இந்த படுகொலையை தமிழகமே எதிர்க்கும் நேரத்தில் சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க செயல்படும் ஒரு சில திரா"விட" பொறுக்கிகளை மட்டுமே பொறுக்கிகள் என்று விமர்சிக்கிறேன்.
தற்போது திராவிட பொறுக்கிகள் கொல்லப்பட்ட 20 பேரில் 6 பேர் வன்னியர்கள் அவர்களின் உடலை மட்டும் திரும்பவும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டுமென்று பாமக வழக்கு தொடுத்ததாகவும் இந்த 6 வன்னியர்கள் மட்டும் தான் தமிழர்களா? மற்றவர்கள் தமிழர்கள் இல்லையா என்று பல திராவிட பொறுக்கிகள் குறிப்பாக செந்தில் நாதன் என்பவர் பதிவிட்டுக்கொண்டுள்ளார்கள், இதில் எவிடென்ஸ் கதிர் என்கிற ஒருவரோ மூன்றே நாளில் தமிழர்கள் சாதியாக பிரிந்தனர் என்று தனது வழக்கம் போல சொல்லும் பொய்யை அவிழ்த்து விடுகிறார்.
உண்மையில் நடந்தது என்ன வென்றால் பாமக வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் போலூரை சேர்ந்த முனியம்மாள் சார்பில் வழக்கு தொடர்ந்தார், இவரின்கணவர் சசிக்குமாரும் இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார், அதற்கு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தார், ஆனால் அதற்கு உத்தரவிட மறுத்த உயர்நீதிமன்றம் எரிக்கப்படாமல் உள்ள மீதி உள்ள அனைத்து உடல்களையும் (6 உடல்கள்) ஏப்ரல் 17ம் தேதி வரை பாதுகாத்து வைக்க உத்தரவிட்டுள்ளது.
கொல்லப்பட்ட 20 பேரின் உடல்களில் 14 பேரின் உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டன, எந்த அதிகாரம் அவர்களை மிரட்டியது என்பது அனைவரும் அறிந்ததே, இந்த உடல்கள் வெறும் உடல்கள் அல்ல ஆந்திர அரசின் இனவெறி படுகொலைகளை வெளிப்படுத்தும் ஆதாரம், ஒன்றிரண்டு உடல்களாக இருந்தாலும் அவைகள் தான் முக்கியம், 20 உடல்களும் எரிக்கப்பட்டுவிட்டால் அவ்வளவு தான் முடிந்தது ஒன்றுமே செய்ய இயலாது, அதற்காக தான் அரசு அழுத்தம் கொடுத்து எரிக்க வைக்கின்றன, 6 பேரின் உடல்கள் மட்டுமே எரிக்கப்படவில்லை, அதிலும் 3 பேர் உடல்களை நடுரோட்டில் போட்டு மக்கள் போராடிக்கொண்டுள்ளார்கள், இதைத்தான் திராவிட பொறுக்கிகள் வன்னியர்கள் 6 பேருக்காக மட்டும் வழக்கு தொடர்ந்த பாமக என்று சேற்றை வாரி இறைத்துக்கொண்டுள்ளார்கள்.
2009ல் காங்கிரஸ் தலைமயிலான மத்திய அரசின் ஆட்சியே கருணாநிதியின் ஆதரவினால் நடந்து கொண்டிருந்ததை போல அல்லாமல் தற்போது மத்திய அரசில் தமிழகத்தின் பங்கு எதுவுமில்லை, எனவே மத்திய அரசின் மூலம் அழுத்தம் தரமுடியாது, உணர்வுகளை வெளிப்படுத்த போராட்டங்கள், அழுத்தங்கள் தந்தாலும் பிற மாநில அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுகளுக்கும் மத்திய அரசுக்கும் மட்டுமே உள்ளது என்று பாமக கோர்ட் படியேறியது, சந்திரபாபுவுக்கு வலிக்காதது போல ஒரு அறிக்கை விட்டு பதுங்கி கொண்ட திராவிட கட்சிகள் மத்தில் கோர்ட் படியேறியது பாமக.
இந்த 20 பேர் படுகொலையில் திராவிட கட்சிகளின் சாயம் வெளுத்ததையடுத்து திராவிட பொறுக்கிகள் சாவிலும் சாதியரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர் திராவிட பொறுக்கிகள்.
புரிகிறதா தமிழா தமிழர்களை சாதிகளாக பிரித்து யார் அரசியல் செய்து அதிகாரத்தை சுவைக்கிறார்கள் என்று.
இவர்கள் குற்றச்சாட்டின் படியானாலும் எப்படி பார்த்தாலும் பாமக 6 உடல்களை பாதுகாத்து விட்டது, இந்த உடல்கள் வெறும் உடல்கள் அல்ல ஆந்திர அரசின் இனவெறி படுகொலைகளை வெளிப்படுத்தும் ஆதாரம், ஒன்றிரண்டு உடல்களாக இருந்தாலும் அவைகள் முக்கியம், ஆனால் 14 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன, பாமக மீது குற்றம் சொல்லும் இவர்கள் என்ன செய்தார்கள்?
http://www.thenewsminute.com/news_sections/3572
http://www.newindianexpress.com/cities/chennai/Madras-HC-Orders-Preservation-of-Six-Woodcutters-Bodies/2015/04/10/article2757789.ece
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D17-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7089233.ece
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Saturday, April 11, 2015
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: ஆந்திர போலி என்கவுண்டர், செம்மர படுகொலை, திராவிட சதி
லீ குவான் யூ
வெள்ளி இரவு ஆரம்பித்து சனி காலை வரை எனக்கு கட் ஓவர் இருந்தது, சனி இரவு 8 மணி வரை தான் லீயின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இயலும் என்பதால் வியாழன் மாலை அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பார்லிமெண்ட்டுக்கு செல்லலாம் என வியாழன் அன்று கருப்பு உடையணிந்து வந்திருந்தேன், புதன்கிழமையே இரவு இருந்து வேலைகளை முடித்திருந்தோம், ஆனால் வியாழன் அன்று ஆறுமணிக்கு கிளம்பும் நேரத்தில் எங்கள் பிராஜெக்ட்டில் ஒரு பிரச்சினை வந்தது, அதை சரி செய்ய உட்கார்ந்தால் அன்று இரவும் போனது, வெள்ளிக்கிழமை ஆரம்பித்து சனி காலை வரை அலுவலகம், அப்போதும் அஞ்சலி வரிசை நிலையை பார்த்துக்கொண்டே இருந்தேன் வெள்ளி இரவு 11 மணிக்கு வரிசை நிறுத்தப்பட்டது காலை 5 மணி வரை வரிசையில் ஆரம்பிப்பது குறித்து எதுவும் செய்தி இல்லை, காலை 6 மணிக்கு வீடு வந்து படுத்தவன் மாலை தான் எழுந்தேன்.
எனது மகனையும் லீ உடல் வைக்கப்பட்டிருந்த படாங்கிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தேன், ஆனால் முடியவில்லை, எனது மகனிடம் சரி வா ஜூராங்கில் போய் அஞ்சலி செலுத்தி விட்டு வருவோம் என்றேன், அவன் அதற்கு நான் ஏற்கனவே அஞ்சலி செலுத்திவிட்டேன் என்றான், எப்படி டா என்றேன்? எங்கள் வீட்டிற்கு கீழ் உள்ள சமுதாய கூடத்தில் லீயின் புகைப்படம் வைத்து அங்கே புத்தகம் வைத்திருக்கிறார்கள், இவன் அங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அஞ்சலி குறிப்பும் எழுதி வைத்திருக்கிறான்.
ஞாயிறு காலை நானும் மகனும் சென்று ஜூராங்கில் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தோம், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த செல்ல வில்லை என்ற வருத்தம் வாட்டினாலும் வேலை பொறுட்டு தானே செல்லவில்லை என்று தேற்றிக்கொள்கிறேன், லீ குவான் யூ அவர்கள் இறந்த பின்பு அரசு பொது விடுமுறை விடவில்லை, அவ்வளவு ஏன் இன்று அவரது இறுதி ஊர்வலத்தின் போது பல இடங்களில் பின்னால் பார்தால் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன, ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன, போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.
8 வயது ஆகும் மகன் 4 வயதில் ஒரு முறை போலிஸ் வேலைக்கு போக வேண்டும் என்று சொல்லியிருந்தான், நேற்று இரவிலிருந்து பல முறை லாயர் ஆக போகிறேன் என்கிறான், கேட்டால் மிஸ்டர் லீ லாயர் அவரைப்போலவே நானும் லாயர் ஆகப்போகிறேன் என்கிறான்.
இந்த ஒரு வாரத்தில் சிங்கப்பூரின் சிறு குழந்தைகளிடம் மிஸ்டர் லீ ஆழப்பதிந்துவிட்டார். உண்மையில் சொல்லப்போனால் நானொரு கொக்கு, வளமான குளம் நோக்கி பறந்தவன், என் படிப்பு திறமையை விற்று நல்ல வாழ்க்கையை தேட முனைந்தவன், சிங்கப்பூர் இல்லையென்றால் இன்னொரு ஊரில் இதை செய்திருப்பேன், அப்படி உள்ளே வந்தவன், இரண்டே வருசம், அப்படியே யுஎஸ் போயிடனும் என்று சொல்லி உள்ளே வந்தவன், அதன் பின் யுஎஸ் விசாவும், வேலையும் தயாராகி இருந்தும் சிங்கப்பூரை விட்டு போக மனமின்றி யுஎஸ் வாய்ப்பை விட்டுவிட்டேன். இனி நான் வளமான குளம் நோக்கி பறக்கும் கொக்காக இருக்க முடியாது, என் அடுத்த தலைமுறை இங்கே வேர் பிடிக்க ஆரம்பித்து விட்டது.
சிங்கப்பூரின் எல்லா புகழும் லீ குவான் யூ வுக்கே
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Monday, March 30, 2015
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: RememberingLKY, RIPLKY, ThankYouLKY, லீ குவான் யூ
கி,வீரமணி ஒரு மொக்கை, பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிவருடி
தந்தி டிவியில் பாண்டே நடத்திய கி.வீரமணி கலந்து கொண்ட கேள்விக்கு என்ன பதில் என்ற நிகழ்ச்சியை பார்த்ததில் இரண்டு விசயங்கள் தெள்ளத்தெளிவானது
1) ஆசிரியர் கி.வீரமணி ஒரு மகா மொக்கை
2) ரங்கராஜ் பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடக பீரங்கி
மிக மோசமாக நடத்தப்பட்ட இரு தரப்பிலும் எந்த தயாரிப்பும் இன்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சி போல தெரிகிறது. பாண்டே கேட்ட கேள்விகள் எல்லாம் பெரிய அதிபுத்திசாலி தனமான கேள்விகள் அல்ல, அவைகள் பார்ப்பனர்களால் காலம் காலமாக வீசப்படும் கேள்விகள், இது போன்ற கேள்விகளை பிரின்ஸ் என்னெரசு, நான் போன்றவர்களே சிலகாலங்களுக்கு முன் இணையத்தில் பார்ப்பனர்களால் எழுப்பப்பட்ட போது அனாயசமாக கையாண்டு பதில் கொடுத்திருந்தோம். கீழ்வெண்மணி படுகொலை குறித்த பெரியாரின் அறிக்கையை நானே கி.வீரமணி அவர்களிடம் நேரில் பேசியுள்ளேன், விமர்சனங்களை கூறியுள்ளேன், பாண்டேவின் எந்த கேள்வியும் புதியது அல்ல.
வீரமணி அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் பாண்டேவை அனாயசமாக கையாண்டு துவைத்திருக்கலாம், ஆனால் நிகழ்ச்சி முழுவதும் ஒரு கான்ஃபிடன்ஸ் இல்லாமல் அனுபவமற்ற புதியவரை போல பதட்டத்துடன் இருந்தார் கி.வீரமணி, அவருடைய உரைகளை நேரில் கேட்டறிந்தவன், அவருடன் நேரில் பேசியிருந்தவன் என்ற முறையில் இந்த பதட்டம் அவருக்கு எழ வாய்ப்பேயில்லை, ஆனாலும் பதட்டப்படுகிறார் எனில் களநிலவரம் அப்படி, திராவிடம் தற்போது தற்காப்பில் இறங்கியுள்ளது, திராவிடத்தின் அழிவு பாதையை வீரமணி உணர்ந்துள்ளார், அதனால் அவருக்கு பதட்டம் அதிகரிக்கிறது, நேற்று அவர் கொடுத்த பதில்களை பார்க்கும் போது நிச்சயமாக வீரமணி அவர்கள் எழுதியதாக சொல்லப்படுகிற நூல்கள் எல்லாம் மண்டபத்தில் எழுதி கொடுக்கப்பட்டதாக தான் இருந்திருக்கும் என்ற அய்யம் எனக்கு எழுகிறது.
திராவிடம் குறித்து தமிழ் தேசியம் பார்வையில், தமிழர்கள் பார்வையில் ஏன் தமிழ்நாட்டு மக்கள் பார்வையில் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தும் பாண்டே வின் கேள்விகள் எல்லாம் பச்சை பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பார்வையில் இருந்துள்ளது.
இங்கே கட்டமைக்கப்படுவது என்னவெனில் திராவிடம் அதை விட்டால் ஆரியம் தான் தமிழ்தேசியம் என்ற ஒரு அரசியலே இல்லை என்பது போன்ற நிலையை காட்ட இரு தரப்பும் விரும்புகிறது.
தமிழர்களே கவனமாக இருங்கள்.
திராவிடமும் ஆரியமும் ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Sunday, March 29, 2015
0
பின்னூட்டங்கள்
"ஐ" ஷங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை
அன்னியன் பட ஸ்க்ரிப்ட்டை முதலில் ஷங்கரிடமிருந்து பிடுங்குங்கப்பா, 5 கதையே ஒரே மாதிரி எடுத்தா அது பாலா, ஒரே கதையை 5 மாதிரி எடுத்தா அது ஷங்கர்னு சொல்வாங்க, ஆனா இப்போது அதுவும் போயிரும் போல பொய் காதல், அப்புறம் அதுவே உண்மை காதல் ஆவது, வில்லன்களை பழிவாங்குதல், கூடவே உதவுபவர் வில்லனாவது என ஒரு மொக்கை திருப்பம் கூட இல்லாத பழைய ஸ்க்ரீன் ப்ளே.
ஏதோ அந்த காலத்து படத்துல அசோகன், நம்பியார் எல்லாம் சுற்றி நின்று ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ என்று எம்ஜிஆரை கீழே தள்ளி உன்னை நாங்க என்ன செய்தோம் தெரியுமா என்று சுற்றி நின்று சிரிப்பது போன்ற ஒரு சீன் அதுவும் மிக முக்கியமாக நாட் ஓப்பன் செய்யற சீனை போய் இவ்வளவு பழசா யோசித்திருக்கிறாரே ஷங்கர்.
கருடபுராணம் போல ஒரு ஒரு வில்லனையும் புதுவிதமாக பழிவாங்குகிறாராம், பூனை மாதிரி மீசை வைத்துக்கொண்டு ஒரு பாட்டு வருமே அது வரும் போதெல்லாம் கொட்டாவியே விட்டேன், படம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது தான் இடைவேளையே, செகண்ட் ஆஃப் செம மொக்கை.
மியூசிக் ஏ.ஆர்.ஆர் ஆம், சொல்லவே யில்லை, மெர்சலாயிட்டேன் பாட்டை தவிர மற்றதெல்லாம் நிக்கவே யில்லை, ஷங்கரோட படம் பார்க்கும்போது அதுக்கு முந்தைய படமே இதைவிட பரவாயில்லை என்று தோன்றும் அது போல இந்த படத்தை பார்க்கும் போது எந்திரன் தரத்தில் பாதிக்கூட இல்லை.
ஒரே நெகட்டிவ்வா இருக்கே பாசிட்டிவா என்ன இருக்கு என்றால்
நிச்சயமாக முதல் பாதி போரடிக்காமல் நன்றாக தான் செல்கிறது, கேமரா சூப்பர், ஸ்டண்ட் ஓகே அதுவும் ஜிம் ஃபைட் சூப்பர், காமெடி சந்தானம் வழக்கம் போல சரவெடி, அட பவர் ஸ்டார் கூட கலக்கியிருக்கார், ஏமி ஜாக்சன் சூப்பரா இருக்கார், இவரு நல்லா நடிக்கிறாரா இல்லையான்னே சொல்ல முடியலை ஒரே கன்பியூசிங். சீனா லொக்கேசன்ஸ் சூப்பர், ஆனால் அதில் வரும் காட்சிகள் சுத்தமாக இண்ட்ரெஸ்ட்டிங்காக இல்லை.
விக்ரம் இந்த ஒருவருக்காக இந்த படத்தை நாலு முறை கூட பார்க்கலாம், என்னா உழைப்பு, என்னா அப்பியரன்ஸ், மிஸ்டர் தமிழ்நாடு வடசென்னை பையனா, அல்ட்ரா மாடலா, அகோரமாக உருமாறிய கூனனா, அதற்கு முன்பு ஒல்லியாகி வரும் சீனா எல்லாவற்றிலும் கலக்கியிருக்கார்.
விக்ரம் மட்டும் இந்த படத்தில் இல்லையென்றால் 100கோடி செலவுக்கு 1 கோடி கூட வசூல் ஆகியிருக்காது. ஷங்கரை பாராட்ட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயத்துக்காக பாராட்டலாம், திருநங்கைகளுக்கு காதல் வரும், அந்த காதலுக்காக அவர்கள் ஏங்குகிறார்கள், காதலுக்காக பழிவாங்கவும் கிளம்புவார்கள் என்று திருநங்கைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என்று எடுத்து சொல்வதற்காக வேண்டுமானால் பாராட்டலாம்.
படம் பிரம்மாண்டமா இருக்கு, படம் ரிச்னெஸ் சான்சே இல்லை, எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் தெரியுமா என்றெல்லாம் சொல்வீர்களேயானால் யானை போட்ட விட்டை பெருசாத்தான் இருக்கும், பெருசா இருக்கு என்பதாலேயே அது விட்டை இல்லையென்றாகிவிடாது.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, January 15, 2015
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: I movie review, ஐ விமர்சனம், திரை விமர்சனம்
பரிதியுடன் நான்
மகன்களை பெத்த மகராசன்களா உங்க வீட்டிலும் இதே கதை தானா?
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Monday, December 08, 2014
0
பின்னூட்டங்கள்
தெலுங்கு வருணாசிரம அரசுக்கு காவல் காக்கும் திராவிடம் தமிழர்களின அரசை இகழ்கிறதே
சங்க கால தமிழர்கள் ஆட்சியாக இருந்தாலும், அதன்பின் வந்த களப்பிரர்கள் ஆட்சி என்றாலும் அதன் பிறகான பல்லவர் ஆட்சி, பிற்கால சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என அனைத்தும் மைய ஆட்சி அதன் பின்பான படிநிலை குறுநில மன்னர்கள், அதன் கீழ் மண்டலங்கள், ஊராட்சிவரை ஒரு அமைப்பு, ஒரு சிஸ்டம் இருந்துள்ளது, வரிவிதிப்புகள் தண்டனைகள் என அனைத்தும் ஒரு அமைப்பாக சிஸ்டமாக இருந்தது, இதில் கட்டிடகலை, போர், நீர்வளம், மருத்துவம், கலை இலக்கியம் என அனைத்தும் செழித்து வளர்ந்தது, என்று தமிழர்களின் ஆட்சி போய் திராவிட தெலுங்கு கும்பல்களின் ஆட்சி வந்ததோ அப்போதிருந்தே தமிழர்கள் அறிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது, அதிலும் பாளையக்காரர்கள் என்ற பெயரில் தெலுங்கு கும்பல் ஆட்சி செய்த போது சிறு சிறு பகுதிகளை கொண்டு எந்த விதமான ஒரு அரசு அமைப்புக்குள்ளும் உட்படாமல் ஒரு சிஸ்டமே இல்லாமல் பொறுக்கித்தனமான ஆட்சி நடந்து மக்களை கொடூரமாக நடத்தி விரும்பிய பெண்களை தூக்கிப்போட்டுக்கொண்டு போய் கெடுத்து (நாட்டார் கதைகளில் மிகப்பல ஜமீன்கள் பெண்களை தூக்கியதால் பெண்ணை கொலை செய்த கதைகள், பெண் ஜமீனை கொலை செய்த கதைகள், பெண் தற்கொலை செய்து கொண்ட கதைகள்) காட்டாட்சி செய்தனர் தெலுங்கு திராவிட கும்பல்கள்.
வருணாசிரமத்தை காக்கவே உருவாக்கப்பட்ட மனுதர்ம ஆட்சி நடத்திய இந்து மத(பார்ப்பன) ஆட்சியான விஜயநகர அரசுகளையும் அதன் வழி தமிழகத்தை பல நூறு ஆண்டுகள் சுரண்டிய தெலுங்கு நாயக்க ஆட்சிகள், நாட்டை கூறு போட்டு பாளையக்காரர்கள் என்ற பெயரில் மக்களை கொள்ளையடித்த தெலுங்கர்களை பற்றி ஒருவார்த்தை கூட பேசாத இதே திராவிட புருடாக்கள் தான் தமிழ் மாமன்னர்களை கொச்சை படுத்துகிறார்கள்
இதில் தமிழ் மாமன்னர்களை பற்றி மிக மோசமாக பேசி பேசி நானும் கூட திராவிட மாயையில் சில ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்டிருக்கிறேன், அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடம் நிற்கிறது, கடலில் நீரோட்டத்தில் வழி கண்டு நாகப்பட்டினத்திலிருந்து மலாக்காவிற்குள் கப்பல்களில் நுழைந்திருக்கிறான், ஒரே நேரத்தில் துறைமுகங்களில் நுழைந்து தாக்கி சீனாவுக்கான வியாபர பாதையான பட்டு பாதையை கட்டுப்படுத்தி தெற்காசியாவை 250 ஆண்டுகள் ஆண்டிருக்கிறான், இன்றைக்கு சிக்ஸ் சிக்மா வைத்துக்கொண்டு ஒரு சேஞ்ச் ரெக்வெஸ்ட்டுக்கு 4 முறை ரீ பேஸ்லைன் செய்யும் காலத்தில் ஒற்றை பாறையில் கோயில்கள் செதுக்கியுள்ளான் ஒரே ஒரு தவறு கூட இல்லாமல், இவ்வளவு அறிவையும் அழித்து மறைத்து எங்களையே எம்ம முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்க வைத்தது திராவிடம்.
திராவிடமாயையை ஒழிக்க வேண்டும், தமிழகத்தில் தெலுங்கு திராவிட கும்பல்களின் அரசியல் அழிவில் தான் தமிழர்களின் வரலாறும், அதிகாரமும் மீண்டு வரும்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Sunday, November 16, 2014
0
பின்னூட்டங்கள்
ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றும் திராவிட புரட்டுகளை அறிந்து கொள்வோம்.
வீரமணி என்கிற ஜால்ரா மணி அவர்கள் தமிழ் மாமன்னன் ராசேந்திர சோழன் மீதும் சோழ அரசர்கள் மீதும் புழுதி வாரி இறைத்து அவர்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்குமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், ஒழுக்கம், நெறிகள், சரி தவறுகள், உயர் கோட்பாடுகள் என்பது அந்த காலகட்டத்துக்கும் வேறுபட்டது, அன்று ஒழுக்கமாகவும் உயர் கொள்கையாகவும் கருதப்பட்டது இன்று தவறாக கருதப்படலாம், இன்று ஒழுக்க நெறியாக உயர் கொள்கையாக கருதப்படுவது நாளை தவறக கருதப்படலாம், இந்த அறிவு எதுவும் இன்றி ஜால்ரா மணி அவர்கள் இன்றைய கோட்பாடுகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுடன் இணைத்துள்ளார்.
பல வரலாற்று தகவல்களை திரித்து வெட்டி ஒட்டி அது அம்மன்னனுக்கு களங்கம் விளைவிக்குமாறு அறிக்கையில் சேர்த்திருந்தார், இது திராவிட கும்பல்களுக்கே கைவந்த கலை, அதில் முக்கியமான ஒன்று சோழ மாமன்னன் ராசேந்திரன் பார்ப்பனர்களுக்கு நிலங்களை தானமாக கொடுத்து அவைகளுக்கு வரிவிலக்கு செய்திருந்தான்(ர்) என்பதும் பார்ப்பனர்களுக்கு மாமன்னர்கள் காவல் காத்து வருணாசிரமத்தை காத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஒரு அரசன் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவன் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகவே செயல்பட வேண்டும், பெரியாரையே எடுத்துக்கொண்டாலும் கூட அவர் அவர் இந்து சமயத்தை கடவுளை விமர்சித்திருந்தாலும் அவர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்துள்ளார்.
தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி - 1 என்ற நூலில் இருந்து இந்த தகவல்களை அளித்துள்ளேன். சோழர் செப்பேடுகள் பக்கம் 280 ல் இருந்து பக்கம் 363 வரை 83 பக்கங்கள் உள்ளன, அதில் நான் பக்கம் 280ல் இருந்து 296 வரை 17 பக்கங்கள் மட்டுமே படித்துள்ளேன், அதிலே சைவ வைணவ வேதியர்கள்(பார்ப்பனர்கள்) மட்டுமின்றி பெளத்த, சமண மற்றும் நாட்டார் கள் வரை பலருக்கும் நிலங்களும் வரிவிலக்குகளும் சோழ மன்னர்கள் அளித்துள்ளனர்.
அன்பில் பகுதியை சேர்ந்தஅனிருத்த பிரம்மராயன் என்று ஒரு முக்கியமான பார்ப்பன மந்திரி ராஜராஜசோழனுக்கு இருந்துள்ளார், ராஜராஜசோழனிடம் இருந்த பல்வேறு மந்திரிகளுள் இருந்த ஒரே பார்ப்பன மந்திரி அனிருத்த பிரம்மராயன், இவர் அரசனிடம் முறையாக விண்ணப்பித்து நிலங்களை தானமாக பெற்று அந்த செப்பேடு அன்பில் பகுதியில் வீடு கடைக்கால் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இந்த செப்பேட்டை போல இன்னும் பல செப்பேடுகள் இருக்கலாம், அவைகள் எல்லாம் கிடைக்காமல் உள்ளது, அதில் பல்வேறு இறையிலி நிலங்கள் குறித்த தகவல்கள் இருக்கும், ஆனால் புரட்டு திராவிடம் அனிருத்த பிரம்மராயன் ஊரில் கிடைத்த செப்பேட்டை வைத்து சதிராடுகிறது, என்றாலும் மேலும் பல இடங்களில் கிடைத்த செப்பேடுகள் சோழர்கள் பல்வேறு சமயத்தவருக்கும் அளித்த தானங்கள் கிடைத்துள்ளன, சோழர்கள் சமன, பெளத்த பள்ளிகளுக்கு கொடுத்த தானங்கள் குறித்து சொல்லாமல் பார்ப்பனர்களுக்கு அளித்ததை மட்டும் அறிக்கையில் சொல்லி சோழர்களை பார்ப்பன கைக்கூலிகள் போல் காட்டியுள்ளர் ஜால்ரா மணி.
மேலும் தமிழ் மொழியை மதிக்காதவர்கள் என்பது போன்ற பிரச்சாரத்தை திராவிட இயக்கங்கள் சோழர்கள் மீது சுமத்துகின்றன, தான விவரங்கள் தமிழ் பகுதியில் தான் உள்ளன, தமிழே அலுவல் மொழியாக இருந்துள்ளது, மெய்கீர்த்தனைகள் அரசர் வம்ச விவரங்கள் தான் வட மொழியில் இருந்துள்ளன, அவைகளே தமிழிலும் இருந்துள்ளன
இந்த நூலில் வெறும் 17 பக்கங்களிலேயே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இவ்வளவு தானங்கள் வழங்கிய தகவல்கள் இருக்கும் போது இன்னும் மீதியுள்ளா 67 பக்கங்களிலும் கிடைக்காத ஆயிரக்கணக்கான செப்பேடுகளிலும் எவ்வளவு இருக்கும்.
ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் திராவிட பூச்சாண்டிகள் என்பதற்கு ஜால்ரா மணியின் அறிக்கையைவிடவும் சான்று எதுவும் வேண்டுமா?
ஒரே படமாகவும் இணைத்துள்ளேன், தனித்தனியாக படிக்க ஏதுவாகவும் இணைத்துள்ளேன்.
முந்தைய பதிவு
---------------------------
மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள் தான்
https://www.facebook.com/photo.php?fbid=10205002166004006&set=a.1674151063785.90834.1537700703&type=1&theater
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Sunday, November 16, 2014
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: இராசேந்திர சோழன், திராவிட மாயை
மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள்
வீட்டிற்குள் மலம் கழிக்க ஆரம்பித்ததும் அதை அள்ளுவதுமான சாதியினர் பேசிய மொழி என்ன? தமிழர்கள் கட்டிடக்கலையிலும் கட்டிடங்கள் அரண்மனைகளிலும் எங்கேயாவது கழிவறைகள் இருந்திருக்கிறதா? வீட்டிற்குள் மலம் கழிப்பது என்பது எங்கேயாவது தமிழ் இலக்கியங்களிலோ தமிழ் சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ செப்பேடுகளிலோ இருந்துள்ளதா? வீட்டிற்குள் மலம் கழிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததில்லை.
வீட்டுக்குள் மலம் கழிக்கும் வழக்கம் எவனிடம் இருந்ததோ அவனுக்கு தான் மலத்தை அள்ளி போடும் தேவையும் இருந்தது அதை கொண்டுவந்தது தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு பின் வந்த திராவிட தெலுங்கு வந்தேறி அரசர்கள் தான். மலம் அள்ள பயன்படுத்தப்பட்ட அருந்ததி சாதியினர் பேசிய மொழியும் தெலுங்கு தான்.
பாலியல் சுரண்டலின் முக்கிய காரணமாக இருந்த பொட்டுகட்டும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட சாதியில்(சின்ன மேளம்) இருந்தது, அந்த சாதியினரின் தாய்மொழியும் தெலுங்கு தான், அதை கொண்டுவந்ததும் இதே திராவிட மன்னர்கள் தான் இப்படி மனித மலத்தை மனிதனே அள்ளும் வழக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை பாலியல் சுரண்டலுக்காக தேவதாசிகள் ஆக்கியதும் ஆக சாதியை ஆக கீழ்த்தரமாக கொடூரமாக திராவிட அரசர்களான தெலுங்கு வந்தேறிகள் பயன்படுத்திவிட்டு தெற்காசியாவினை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை ஆர்.எஸ்.எஸ் சை விமர்சிக்கிறேன் பார்ப்பன அடிவருடியாக ராஜேந்திர சோழரை திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.
வந்தேறி திராவிடர்கள் செய்த கொடூரத்துக்கு தமிழ் மா மன்னன் ராசேந்திரன் மீது பழி போடுவதா?
ஆரிய ஓநாய்களின் சதியும் திராவிட நரிகளின் தந்திரமும் தமிழ் சாதிகளுக்கு நன்றாகவே தெரியும், இனியும் வேண்டாம் இந்த கீழ்த்தர சதி வேலை அய்யா வீரமணி அவர்களே.
பின்குறிப்பு
தேவரடியார்கள் வேறு, தேவதாசிகள் வேறு, இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த வழக்கங்கள்.
தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் ஆயிரமாவது பட்டமேற்பு விழாவிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் மாமன்னர் ராசேந்திரனை விமர்சித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையை அடுத்து விமர்சித்து எழுதியது
பிற்சேர்க்கை
பார்ப்பனர்களுக்கு மட்டுமே தானம் வழங்கினார்கள் சோழர்கள் எண்ற திராவிட புரட்டுகளை உடைக்கும் சோழர்கள் பார்ப்பனர்கள் அல்லாத சமண, பெளத்த மதங்கள் நாட்டார்களுக்கு வழங்கிய நில தானங்கள் குறித்த கட்டுரை.
https://www.facebook.com/kuzhalipuru/posts/10205053293282156?pnref=story
கி.வீரமணியின் அறிக்கை
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Sunday, November 16, 2014
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: இராசேந்திர சோழன், திராவிட மாயை
யட்சினி - 2
அகால வேளையில் கதவை தட்டமால் திறந்துவிட்டேன்
யாரோ ஒரு சின்ன பையனை புணர்ந்து கொண்டிருந்தாள்
அவள் நிர்வாணம் எனக்கொன்றும் புதுசு இல்லை தான்
பயம் போலும் அந்த பொடியனுக்கு
கண்களை இறுக்க மூடி இருந்தான்
மேலே முயங்கி கொண்டிருந்தவளோ
அறுபதடிக்கும் மேலான உயரத்திற்கு இருந்தாள்
சத்தம் காட்டாமல் ஹாலில் உட்கார்ந்தேன்
தெரிந்திருக்கும் அவர்களுக்கு நான் வந்தது
பையன் பூனை போல் பதுங்கி ஓடினான்
கொண்டை போட்டுக்கொண்டு நைட்டியோடு வந்தவள்
என்ன இந்நேரத்தில் என்பது போல்
கண்ணால் கேட்டுக்கொண்டு பாத்ரூம் நோக்கி போனாள்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, November 14, 2014
0
பின்னூட்டங்கள்
யட்சினி
அவளுக்கு கூச்சமே இருக்காது
நூறு பேர் கூட்டத்திலும் மாமா மாமா என்று
புருசனை கூப்பிடுவாள்
டிவிஎஸ்50ல் சல சலவென பேசிக்கொண்டே புருசனுடன் போவாள்
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை
இப்போதும் கல்யாணம் காட்சிக்கு புருசனுடன் பைக்கில் போயிருக்கிறாள்
விசாரித்ததில் தான் தெரிந்தது பக்கத்து வீட்டு சின்ன பெண்ணை ஏறிவிட்டான் என்று
அழுகை, ஆர்பாட்டம், பஞ்சாயத்து எதுவுமில்லை
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை
அன்றொரு காலை
அவள் வீட்டில் வயசுக்கு வந்த பெண் சத்தம் போடாமல் கிளம்பினால்
கண் விழித்து பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்தது
ஒருக்களித்து படுத்து கண்ணை மூடினாள்
கத்தியை தூக்கிக்கொண்டு சுற்றி சுற்றி வந்தான் புருசன்
எல்லாம் இந்த தேவடியாவால தான் என்று கையை ஓங்கி அடிக்க வந்தான்
கிட்ட வந்தவன் கையை இறக்கி பம்மி பின்னால் சென்றான்
அப்போதும் கூட அவள் பேசவில்லை.
அவள் புருசன் செத்த மறுநாள் துக்கம் விசாரிக்க போனேன்
வா புருசோத்து நல்லா இருக்கியா? என்றாள்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, November 07, 2014
0
பின்னூட்டங்கள்
சூதுகவ்வும் இயக்குனர் நலன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, August 07, 2014
1 பின்னூட்டங்கள்
குறிசொல்: சூதுகவ்வும் இயக்குனர் நலன்
பாலுமகேந்திரா - கறுத்த நாயகிகளின் காதலன், நானும் கூட...
பாலு மகேந்திரா என்றால் எனக்கு எதையும் விட அழியாத கோலங்களும், வண்ண வண்ண பூக்களும், ராமன் அப்துல்லாவுமே எனக்கு நினைவுக்கு வரும், இந்த மூன்று படங்களுமே பாலுமகேந்திராவின் தோல்வி படங்கள் என்றாலும் எனக்கு நெருக்கமான படங்கள்.
ஷோபா என்னை சுற்றி சுற்றி பறந்து என் மேல் அமர்ந்த வண்ணத்துப்பூச்சி என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மெளனிகா என்ற இன்னொரு வண்ணத்துப்பூச்சி சுற்றி வந்தபோது அதை விரட்டி விடாமல் விட்டுவிட்டாரே இந்த மனுசன் என்றும் தோன்றியது, வலிகள் என்னவோ எப்போதும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தான்.
In the end, only three things matter:
how much you loved,
how gently you lived,
and how gracefully you let go of things not meant for you.
பாலுமகேந்திரா சில வண்ணத்துப்பூச்சிகளை விரட்டிவிட்டிருக்கலாம் அவைகள் அவர் மீது உட்கார ஆசைப்பட்டிருந்தாலும்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, February 14, 2014
3
பின்னூட்டங்கள்
பாடிலாங்க்வேஜூம் வடிவேலுவும் - உடல்மொழி - 2
பாடில்ங்க்வேஜ் பற்றி சும்மா ஒரு போஸ்ட் போட்டேன், நிறைய நண்பர்கள் உள்பெட்டியில் வந்து (சரி சரி இரண்டு நண்பர்கள் தான்) இதைப்பற்றி அடிக்கடி எழுதலாமே என்றார்கள், சரி நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன்,
நம்ம வடிவேலு என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர் படங்களில் வந்ததற்கும் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில் வந்ததற்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? அவருடைய வாய்ஸ் மாடுலேஷன், பாடிலாங்குவேஜ்களில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலு ஃபீல்டில் இல்லாத போதும் இன்னும் வடிவேலுவின் இடம் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணம்.
நாம் பேசும் வார்த்தைகள் மூலமே பெரும்பாலும் பிறருடன் கம்யூனிகேஷன் செய்துவிடுகிறோம், நம்முடைய வார்த்தைகளே பிறருக்கு நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்களா? அது மட்டும் போதுமா? என்றால் நிச்சயம் இல்லை.
"ராஸ்கல் என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு"
இது வடிவேலுவின் பிரபலமான ஒரு டயலாக், இந்த டயலாக்கை ரகுவரன் சொல்வது போல நினைத்து பாருங்கள், வடிவேலு சொல்வதை போல நினைத்து பாருங்கள். ரகுவரன் சொல்வது வில்லத்தனமாகவும் வடிவேலு சொல்வது காமெடியாகவும் இருக்கும்.
ஆராய்ச்சி முடிவுகள் நிரூபிப்பது என்னவென்றால் நாம் தொடர்புகொள்ள பயன்படுத்தும் மொழி, சொற்கள் மூலம் பிறர் புரிந்து கொள்வது வெறும் 7% மட்டுமே... ஆனால் 93% நாம் சொல்வதை பிறர் புரிந்து கொள்வது நம் வார்த்தைகள் மூலம் அல்ல.
நம்ப முடியவில்லையா? நம் வார்த்தைகள் நாம் சொல்ல வருவதை பிறருக்கு புரிய வைப்பதில் வெறும் 7% மட்டுமே துணைபுரிகிறது மீதி 93% என்பது நம் குரல், மாடுலேஷன், நம் உடல்மொழிகள் மூலம் தான் பிறருக்கு புரியவைக்கிறோம்.
நம் வார்த்தைகள் பிறருக்கு வெறும் 7% மட்டுமே புரியவைக்கும் என்றால் மிச்சம் 93%த்தை ஏன் நாம் கவனிக்காமல் இருக்கிறோம்? இந்த 93% ஐயும் திறமையாக பயன்படுத்தியதால் தான் சிவாஜி கணேசன், வடிவேலு போன்றவர்கள் காலத்தை தாண்டியும் நிற்பதும் எல்லா டயலாக்கையும் ஒரே மாடுலேஷனில் பேசும் நடிகர்கள் டொக்காவதும் காரணமாகும்.
நாம் பிறரிடம் தொடர்புகொள்வது
1) நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் - 7%
2) நம் குரல் (வாய்ஸ் டோன், மாடுலேஷன்) - 38%
3) நம் உடல்மொழி(பாடிலாங்க்வேஜ்) - 55%
நம் குரல் மூலம் நம்மை பிறர் புரிந்து கொள்வதும், குரல் மூலம் நாம் பிறருக்கு உணர்த்துவதும் நாம் நன்றாக அறிந்ததே.
ஆனால் 55% உடல்மொழிகள் மூலம் நாம் தொடர்புகளை மேற்கொண்டாலும் நாம் அதில் பெரும்பாலும் கவனம் செலுத்துவதே இல்லை.
ஒருவர் பேசும் வார்த்தைகளை அவர் உண்மையாக பேசுகிறாரா, அல்லது மறைத்துக்கொண்டு பேசுகிறாரா என்பதை நம்மால் கண்டுபிடித்து விட முடிந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்?
பிசினஸ் டீலிங்குகளில் கலக்கலாம், மேனேஜர் அப்ரைசலில் பட்டைய கிளப்பலாம், யாரேனும் டிவியில் பேட்டி கொடுத்தால் ஏய் பார்ரா டுபாக்கூர் உடறான் என்று கண்டுபிடித்து கலாய்க்கலாம். ஆனால் சில கில்லாடிகள் இருக்கிறார்கள் உடல்மொழியை வைத்து எங்கே நாம் டுபாக்கூர் விடுகிறோமா என்பதை கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பொய் உடல்மொழிகளை வெளிப்படுத்துவது, டிவி விவாதங்களில் பேசும்போது மண்டையை மண்டையை ஆட்டி முடியை சிலுப்பி விடுவதும், உடல் மொழியில் ஆக்ரோசமாக வெளிப்படுத்துவதையும் உற்று நோக்கினால் அது உண்மையான உடல் மொழிகளை மறைக்கும் உத்தியாக இருப்பதாக கருத வேண்டியுள்ளது.
ஒருவரின் வார்த்தைகள் பொய் சொல்லலாம் ஆனால் எவ்வளவு தான் மறைத்தாலும் நம் உடல்மொழி மட்டும் பொய் சொல்லாது.
ஐந்தறிவு நாய் ஒன்று கூட்டல் கழித்தல் கணக்கிற்கெல்லாம் கூட சரியான விடையை சொன்ன அதிசயம் நடந்தது எப்படி? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Saturday, January 25, 2014
3
பின்னூட்டங்கள்
தலித்கள் பொய்வழக்குகள் போடுபவர்களா? தலித்களுக்கு எதிரான சாதிவெறி பிடித்த கட்சி திமுக!
ஒரு நியாயமான கட்சியாக தலித் ஆதரவு கட்சியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? கட்சித்தலைமை தலித் கொடுமை புரிந்த கட்சிகாரரை தானே கட்சியை விட்டு நீக்க வேண்டும்? ஆனால் இன்று காலை அழகிரியை அழைத்து கோபாலபுரத்தில் வைத்து கட்டை பஞ்சாயத்து செய்கிறார்கள் அந்த வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென்று.
இந்த மாதிரி வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்கவேண்டுமென்று ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தலித் சாதி மருமகனை கூப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளார்கள் சாதிவெறி பிடித்த தலித் விரோதி கருணாநிதி குடும்பத்தினர்கள். தலித் பெண்ணை திருமணம் செய்திருப்பதால் தானே அழகிரிக்கு இந்த அவமானத்தை செய்துள்ளது சாதிவெறி பிடித்த கருணாநிதி குடும்பம்.
ஒரு பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் பெறவைக்க தலித் மருமகனை மிரட்டியும் அடிபணியாததால் சாதிவெறிபிடித்த திமுக தலைமை ஆதிக்க முதலியார் சாதிவெறியர் அன்பழகன் மூலம் ஒரு தலித் விரோத அறிக்கையை வெளியிடுகிறார்கள், அதில் சாதிவெறியால் பாதிக்கப்பட்டவரையே கொடுமை செய்ததை போல சித்தரித்து வன்கொடுமை கேஸ் கொடுத்தவர்கள் பழிவாங்கும் நோக்குடன் பொய் புகார் கொடுத்துள்ளார்கள் என்று முதலியார் சாதிவெறி அன்பழகன் அறிக்கை சொல்கிறது, பிசிஆர் கேஸ்களை பொய்யாக கொடுப்பவர்கள் தலித்கள் என்று சாதிவெறியர் அன்பழகன் கூறுகிறாரா?
தலித்களுக்கு எதிரான சாதிவெறி கொண்ட திமுக தலைமை பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்க சொல்லி கட்டை பஞ்சாயத்தும் செய்து, தலித்கள் பொய்யாக கேஸ்கொடுக்கிறார்கள் என்பது போன்று அறிக்கையும் கொடுத்து கடைசியாக தலித்களின் மீதான மிரட்டலை அஞ்சாமல் எதிர்கொண்டு கேசை வாபஸ் வாங்காத தலித்களின் மருமகன் அழகிரியையும் கட்சியை விட்டு நீக்கி தான் ஒரு ஆதிக்க சாதிவெறி பிடித்த, தலித்களுக்கு எதிரான கட்சி என்று திமுகவும், அதன் தலைமையும் நிரூபித்துள்ளது.
----சாவுங்கடா---
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, January 24, 2014
4
பின்னூட்டங்கள்
ஒரு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்
ஏற்கனவே இதை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன், தற்போது இங்கேயும்
சமூகம் காலத்துக்கேற்றவாறு தன்னை தானே சரிசெய்து கொள்ளும் வலிமை உடையது, அதற்கு தேவை ஏற்படும் போது அந்த பிரச்சினையின் தீர்வுக்கும் மாற்றத்துக்குமான தலைவர்களை தானே உருவாக்கும், அரசியலில் தூய்மை, நேர்மை, ஊழல் இல்லாத அரசியல் என்ற ஒரு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பும் சுதந்திரத்துக்கு பின்பும் சில காலங்கள் இருந்து வந்தது. ஆனால் அது சமூக பிரச்சினைகளை சுத்தமாக ஒதுக்கிவைத்திருந்தது, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அதிகார பரவலாக்கத்துக்கு தேவையான தலைவர்கள் அப்போது தேவைப்பட்டதால் சமூகம் பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை உருவாக்கியது, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்காக அது சோஷலிஸ்ட் கட்சி ஆட்கள், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், அண்ணாதுரை, கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்றவர்களை சமூகம் தனது தேவைகளுக்காக உருவாக்கியது.
அரை நூற்றாண்டுகாலத்தில் தற்போது மீண்டும் அரசியலில் தூய்மை, ஊழலற்ற நிர்வாகம், அரசியலில் வெளிப்படை தன்மை இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் சமூகம் தனக்காக அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களை உருவாக்குகிறது. தேவை ஏற்படின் மீண்டு இந்த சமுதாயமே பெரியார், அம்பேத்கார், லல்லு, முலாயம், கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்ற தலைவர்களையும் உருவாக்கும்.
பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்...
ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி அதன் சமூக பார்வை குறித்து டிப்பிக்கல் தமிழ்நாட்டு முற்போக்கு ஸ்டைல் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன, அர்விந்த் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர் அல்ல விமர்சனங்கள் வரட்டும் நல்லது தான்.
இந்திய தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என முழங்கும் கெஜ்ரிவால் போல தமிழ்தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என்று தமிழகத்தில் வந்தால் ஒரு மாற்றத்துக்கான ஆரம்பம் ஏற்படலாம். கவிஞர் தாமரை சில நாட்களுக்கு முன் அவரது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது போல பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் தூய்மையில்லாதவர்களால் நல்ல அரசியலை முன்னெடுக்க முடியாது.
மாற்று கொண்டு வருவோம் என முழங்குபவர்கள் புதியவர்களை, பொது வாழ்வில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டியதேவை உள்ளது, விஜயகாந்த் மாற்று கொண்டு வருகிறேன் என மற்ற கட்சியில் சீட்டு கிடைக்காதவர்கள், பணக்காரர்கள், உள்ளூர் தாதாக்களை எல்லாம் களம் இறக்கினால் சீன் தான்.
அப்படி வரும் புதியவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்றால் இந்த டெக்னிக்கெல்லாம் தெரிய வர கொஞ்ச நாளாவது ஆகும், அது வரை சமூகத்துக்கு லாபம் தானே!
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, January 23, 2014
1 பின்னூட்டங்கள்
கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? - உடல் மொழி
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Tuesday, January 21, 2014
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: body language, உடல் மொழி, பாடிலாங்வேஜ்
சாதியொழிப்பு பற்றி பொய் சொல்லும் சுப.வீ அல்லது உண்மையை மறைக்கும் சுப.வீ.
நீயாநானா விவாதத்தில் சாதி என்பது 2000 ஆண்டு பழமையானது அதை நூற்றாண்டுகால சாதி எதிர்ப்பு போராட்டத்தால் அழித்துவிடமுடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்ய முடியும்.என்று குறிப்பிட்டார் சுப.வீ
இது தொடர்ச்சியாக திராவிட மற்றும் போலி சாதி எதிர்ப்பு ஆட்களினால் தங்களது இயலாமையை மறைக்க தொடர்ந்து சொல்லிக்கொண்டு வரும் பொய்.
2000ம் ஆண்டுகால தமிழர்களின் சித்தமருத்துவத்தை நூறாண்டில் அலோபதிக்கு மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் உணவை இட்லி தோசையாக நூறாண்டில் மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் மதிய உணவான புளிக்காய்ச்சலை சாம்பாராக மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் குடுமியை நூறாண்டுகளில் கிராப்பாக மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தேவதாசிகள் ஆடிய சதிர் ஆட்டமென்ற நடனத்தை பரதநாட்டியமாக மாற்றி உச்சியில் தூக்கி வைக்க முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழ்பெயர்கள் சுரேஷ், ரமேஷாகி இப்போ ராகுலில் வந்து நிற்க முடிகிறது
ஆனால் சாதியை மட்டும் நூறாண்டுகளில் ஒழிக்க முடியாதாம், அட ஒழிக்க கூட வேண்டாம் சாதியொழிப்பில் எவ்வளவு தூரம் முன்னேறி உள்ளது என்றால் நம் முன் தெரிவது முட்டை தான்.
நூறாண்டுகாலம் என்பது மூன்று தலைமுறை என் தாத்தா தலைமுறை, என் அப்பா தலைமுறை, என் தலைமுறை என மூன்று தலைமுறை பெரியார் தமிழகத்திலே நேர்மையாக உருவாக்கிய சாதிய ஒழிப்பு என்பதை சாதியொழிப்பு முற்போக்கு பேசுபவர்கள் நேர்மையாக கடைபிடித்திருந்தால் இந்த மூன்றாம் தலைமுறையில் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போல தமிழ்நாட்டில் பாதி பேராவது சாதியை கடந்திருப்பார்கள்.
உண்மையில் சாதியொழியாமல் இருக்க காரணம் சாதி ஆதரவாளர்களால் அல்ல... போலி சாதியொழிப்பாளர்கள் தான் சாதியை காப்பாற்றுகிறார்கள். சுபவீ ஜிங் சாங் கொட்டிக்கொண்டிருக்கும் திமுக தலைவர் அரசியலில் சாதிபார்த்து சீட்டு தருகிறார், கழகத்தின் பொதுச்செயலாளரான அன்பழகனுக்கே முதலியார் கோட்டாவில் சீட்டு கொடுத்திருந்தார்கள். தர்மபுரியின் தலித்களின் மீதான தாக்குதலில் கைதானவர்களில் 10 பேர் பாமக ஆனால் 16 பேர் திமுக, உண்மை அறியும் குழு எல்லாம் அனுப்பிய திமுக அந்த தாக்குதலில் கைதான 16 பேர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? நியாயமாக சாதியொழிப்பை பற்றி பேசும் சுப.வீ இதை கருணாநிதியிடம் கண்டிக்க வேண்டாமா? எதிர்த்து பேச வேண்டாமா? சாதிக்கு ஆதரவளிக்கும் திமுக தலைமைக்கு எதிராக போராட வேண்டாமா? ஏன் திமுகவிடம் மட்டும் ஜால்ரா?
சாதியொழிப்பை நேர்மையாக முன்னெடுத்திருந்தால் சாதியொழிப்பு பேசும் கட்சிகள் குறிப்பாக சமீபமாக ரொம்ப சீன் போடும் திமுக காரர்கள் அனைவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும், இல்லையெனில் கட்சியிலிருந்து வெளியே போ என்று நேர்மையான சாதியொழிப்புக்கு போராடலாமே ஆனால் செய்ய மாட்டார்கள், ஏன் தெரியுமா? இவர்களுக்கு எல்லாம் தெரியும், வெளியே சாதியொழிப்பை பேசிக்கொண்டு வீட்டினுள், கட்சியினுள் எல்லாம் சாதியை காப்பாற்றுபவர்கள்.
எங்கள் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் வட்டத்திலேயே நிறைய திருமணங்களை பேராசிரியர் அன்பழகனும், வீரமணியும், முக ஸ்டாலினும் நடத்தியுள்ளார்கள், அவைகள் எல்லாம் சாதி திருமணங்கள் தான், என்ன ஒரே வேறுபாடு என்றால் பார்ப்பன புரோகிதர்களுக்கு பதில் இந்த புரோகிதர்கள், இங்கே நேர்மையான சாதியொழிப்பு இல்லை, நேர்மையான முற்போக்கு இல்லை. நேரடியான சாதி ஆதரவாளர்களை you can identify them, you can argue with them, you can convince them. ஆனால் சாதியொழிப்பு பேசிக்கொண்டே சாதியை வைத்திருக்கும் போலி முற்போக்காளார்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கொல்லும் எய்ட்ஸ் போன்றவர்கள்.
என்னையே எடுத்துக்கொள்ளலாம் சாதியொழிய வேண்டுமென்று வீரவசனமெல்லாம் பல ஆண்டுகளாக பேசிவிட்டு நான் எந்த பெண்ணுடனும் இரு தலை காதலில் இல்லாமல் இருந்ததால் திருமணத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தேன், பெற்றோர் சாதி பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நான் சாதி எதிர்ப்பாளனாம் அதனால் திருமண சான்றிதழில் 6 இடங்களில் Caste not mentione என்று குறிப்பிட்டிருந்தேன், போலித்தனமாக இல்லையா இது, திருமணம் ஒரே சாதியில் ஆனால் திருமண சர்ட்டிபிக்கேட்டில் கேஸ்ட் நாட் மென்ஷன்ட் என்றால் நான் சாதியொழிப்பாளனாகிவிடுவேனா? இது போன்ற பேச்சொன்றும் செயலொன்றுமாக செயல்படுபவர்களால் தான் சாதி சைலண்ட்டாக கட்டிகாக்கப்படுகிறது.
உதாரணமாக சுப.வீ யையும் ஜால்ராமணி ஐ ஆம் ஸாரி வீரமணி அவர்களையும் எடுத்துக்கொள்வோம். சாதியொழிப்பை எப்படியாகினும் செய்வேன் என்ற உறுதியிருந்திருந்தால் சாதியின் அடிப்படை, பார்ப்பனியத்தின் அடிப்படை பிறப்பால் வேறுபாடு பார்ப்பது, இன்று திமுகவின் தலைமை பதவிச்சண்டையில் இருப்பவர்கள் கருணாநிதிக்கு பிறந்த மகன்கள் ஸ்டாலின் மற்றும் அழகிரி. திமுகவின் தலைமை பதவியின் அடிப்படை ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பிறப்பால் கிடைக்கிறது.
பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக சொல்லும் ஜால்ராமணியின் திகவின் தலைமை பொறுப்புக்கு தயாராக இருப்பவர் ஜால்ராமணியின் மகன் அன்புராஜ், இது பார்ப்பனியம் இல்லையா?
பெரியார் சொல்லிக்கொடுத்தது சுயமரியாதை, காரைக்குடியில் திராவிடமணி என்ற ஒரு திக தலைவர், 90களின் மத்தியில் அவரது மகனை 10-12 வயதான சிறுவனை தம்பி என்று தான் அழைக்க வேண்டும், இல்லையென்றால் திராவிடமணிக்கு கோபம் வந்துவிடும், சுயமரியாதையை அடிப்படையாக கொண்ட திராவிட கழகத்தின் தொண்டர்கள் அந்த சிறுவனை சுயமரியாதையை விட்டுவிட்டு தம்பி தம்பி என்று குழைவார்கள்.
சாதியொழிப்பிற்காக நேர்மையாக போராடாமல் பதவிக்காக சாதி, பணத்துக்காக சாதி, அதிகாரத்துக்காக சாதி, விசுவாசத்துக்காக என அவர்களின் சாதி நடவடிக்கைகளை ஆதரித்து விட்டு வாயால் சாதியொழிக என வடை சுட்டால் நூறாண்டுகள் அல்ல சுப.வீ அய்யா ரெண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்களை போன்ற போலிகளால் சாதியை ஒழிக்க முடியாது.
இதே நேரத்தில் கொளத்தூர் மணி, கோவை ராமக்கிருஷ்ணன், புதுவை லோகு அய்யப்பன் போன்ற நேர்மையான சாதி எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிக குறைவே. நமது வட்டத்திலேயே குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சுகுணா திவாகர் சாதி மறுப்பு திருமணம் தான் செய்வேன் என்று பெண் பார்த்து வேறு சாதியில் தான் திருமணம் செய்தார்(அவருடையது காதல் திருமணம் அல்ல) இவர்களைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும், போற்ற வேண்டும் போலிகளை அல்ல...
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Tuesday, January 22, 2013
1 பின்னூட்டங்கள்




































