இட்லிவடை கருத்து கணிப்பு முடிவுகள்

கள்ள ஓட்டு, இலவசத்துக்கு ஓட்டு, காசுக்கு ஓட்டு, வன்முறை ஓட்டு, சாதி ஓட்டு, அந்த சாதிக்கு எதிர் ஓட்டு, கட்சி ஓட்டு, அந்த கட்சிக்கு எதிர் ஓட்டு, கூட்டணி ஓட்டு, சொந்தக்காரங்க ஓட்டு, தெரிஞ்சவங்க ஓட்டு, புடிச்ச ஆளுக்கு ஓட்டு, புடிக்காத ஆளுக்கு எதிர் ஓட்டு இந்த ஓட்டெல்லாம் அரசியல் கட்சிகள் பங்கு பெறும் படிக்காத சிந்திக்காத மக்களுக்குத்தான் என்று நம்புவோம், படித்த, பண்பான, உலக அரசியலையே அலசிப்போடும் சிந்தனை செல்வங்கள் நிறைந்த வலைப்பதிவுலகில், இங்கே "மனசாட்சி" ஓட்டு மட்டும் தான்னு சொல்லத்துடிக்குது மனசு.

இட்லிவடை வலைப்பதிவை பற்றிய கருத்து கணிப்பில் இட்லிவடையின் பதிவு சூப்பர் பதிவு என்று 45% வாக்குகள் விழுந்துள்ளன, அதாவது பதிவான 272 வாக்குகளில் 123 வாக்குகள் இட்லிவடையின் வலைப்பதிவு சூப்பர் என வாக்களித்துள்ளனர். அவருக்கு எம் மனமார்ந்த வாழ்த்துகள்.... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

வாக்கு விவரங்களை இந்த சுட்டியில் காணலாம்இந்த கருத்துக்கணிப்பிற்கு இவ்வளவு பேர் ஆர்வமாக வந்து வாக்களித்தமைக்கு நன்றி, இந்த ஆதரவு மேலும் மேலும் இது போன்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

உங்களின் பேராதரவிற்கு நன்றி.... எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்குப்பதிவிற்கு தன் மேலான ஆதரவையும் அளித்து, விளம்பரமும் அளித்த வலைப்பதிவர் இட்லிவடைக்கு என் மேலான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

6 பின்னூட்டங்கள்:

said...

வோட்டெடுப்பில் வெற்றி பெற்ற இட்லி வடையாருக்குப் பாராட்டுக்கள்
அதேபோல வோட்டெடுப்பை நடத்தி 272 பேர்களை உங்கள் பதிவிற்குள் வரவைத்த உஙகளுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக!
அன்புடன்
SP.VR.சுப்பையா

said...

இந்த கருத்துக் கணிப்பு நேர்மையானதாக நடந்ததா என்று யாராவது கருத்து கணிப்பு நடத்தும் வரையில் ....
போட்டியில் இட்லி வடை வென்றதற்கு வாழ்த்துக்கள் !

:)))

said...

குழலி நன்று என்று சொன்னவர்களையும் இட்லிவடைக்கு ஆதரவான ஓட்டுகளாக கணக்கில் கொள்ளவும். அப்ப மொத்தம் 167 ஓட்டுக்கள் :)

மனசாட்சி ஓட்டு என்ன பர்சென்டேஜ் என்று நம்மளால கண்டுப்புடிக்க முடியாதே :(


//கள்ள ஓட்டு, இலவசத்துக்கு ஓட்டு, காசுக்கு ஓட்டு, வன்முறை ஓட்டு, சாதி ஓட்டு, அந்த சாதிக்கு எதிர் ஓட்டு, கட்சி ஓட்டு, அந்த கட்சிக்கு எதிர் ஓட்டு, கூட்டணி ஓட்டு, சொந்தக்காரங்க ஓட்டு, தெரிஞ்சவங்க ஓட்டு, புடிச்ச ஆளுக்கு ஓட்டு, புடிக்காத ஆளுக்கு எதிர் ஓட்டு இந்த ஓட்டெல்லாம் அரசியல் கட்சிகள் பங்கு பெறும் படிக்காத சிந்திக்காத மக்களுக்குத்தான் என்று நம்புவோம்//

இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமாம். இங்கயும் உண்டு அந்த மாதிரி ஓட்டுக்கள் அது இட்லிவடையைப்பற்றியானாலும் சரி, குழலியை பற்றியானாலும் என்று நான் இந்த வலைப்பதிவிலும் கண்டுக்கொண்டேன். இந்த மக்களை திருத்தவே முடியாது குழலி.

//படித்த, பண்பான, உலக அரசியலையே அலசிப்போடும் சிந்தனை செல்வங்கள் நிறைந்த வலைப்பதிவுலகில்//

இதெல்லாம் ரெம்ப ஓவர் ஆமாம். படித்த ஓ.கே யாருங்க அந்த பண்பான, உலக அரசியலையே அலசிப்போடும் சிந்தனை செல்ல்வங்க??!!!

said...

//குழலி நன்று என்று சொன்னவர்களையும் இட்லிவடைக்கு ஆதரவான ஓட்டுகளாக கணக்கில் கொள்ளவும். அப்ப மொத்தம் 167 ஓட்டுக்கள் :)
//
ம்... சரிதான், ஆனாலும் நாம என்ன இட்லிவடைக்கு ஆதரவு, எதிர்ப்பு பற்றியா வாக்குப்பதிவு வைத்தோம், நீரே சிண்டுமுடிந்துவிடுவீர் போலிருக்கே...

said...

//நாம என்ன இட்லிவடைக்கு ஆதரவு, எதிர்ப்பு பற்றியா வாக்குப்பதிவு வைத்தோம், நீரே சிண்டுமுடிந்துவிடுவீர் போலிருக்கே...//

ஐயோ என்னங்க நீங்களே நம்மள(இங்க நம்மள என்பது என்னை, அது கோயம்பத்தூர் வட்டார வழக்கு) கோத்துவிட பார்க்கிறீங்க.. அதுவும் அவர் பதிவு நல்ல இருக்குன்னு சொன்ன ஓட்டுன்னு மட்டும் தானே சொன்னேன்...

said...

//இந்த கருத்துக் கணிப்பு நேர்மையானதாக நடந்ததா என்று யாராவது கருத்து கணிப்பு நடத்தும் வரையில் ....
போட்டியில் இட்லி வடை வென்றதற்கு வாழ்த்துக்கள் !
//

கோவியை வழிமொழிகிறேன்.. வாழ்த்துக்கள் :)))