பொய் சொல்லும் விஜயகாந்த், பாராட்டும் இட்லிவடை

இட்லிவடை பதிவில் விஜயகாந்த் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியை படித்தேன்.

அதில் ஒரு கேள்வி பதில்.

கே:- உங்கள் திருமண மண்டபம் இடிப்பு பற்றி நீங்கள் கட்சி தொடங்கும் முன்பே தகவல் சொல்லி விட்டதாக டி.ஆர்.பாலு கூறி விட்டரே?

ப:- அது தவறான தகவல். நான் கட்சி தொடங்கும் முன்பு கூறி இருந்தால் கலைஞரையே நான் பார்த்து இருப்பேன். டி.ஆர்.பாலு சொல்வது பொய்.என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.

கேப்டன்(?!) விஜயகாந்த் செப்டம்பர் 19, 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார், அதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே நெடுஞ்சாலை விரிவாக்க பணித்தொடர்பாக அவரது மண்டபமும் அதனோடு சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு 2005 மே மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் விஜயகாந்த் ஒரு சந்திப்பு நடத்தினார், இது தொடர்பாக மே 30, 2005 அன்று இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும் என்று ஒரு பதிவெழுதியிருந்தே.

அதிலிருந்து சில வரிகள் (நினைவில் கொள்ளுங்கள் கீழ் கண்ட வரிகள் எழுதப்பட்டது மே-30, 2005)


நெடுஞ்சாலைத்துறை மண்டபத்தை கையகப்படுத்தும்போது இடிக்கும் போது ஒரு பெரிய
மறியல் போராட்டம் நடத்தி மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு
வந்திருக்கலாம், தவறவிட்டுவிட்டீர்களே விஜி.கட்சி தொடங்கியது செப்டம்பர் 14, 2005 மேற்கண்ட பதிவு எழுதப்பட்டது மே 30, 2005, மண்டபம் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு கலைஞருடன் சந்திப்பு மே 2005ல் நடந்துள்ளது.

ஆனால் இப்படி கூசாமல் ஒரு பொய்யை சொல்லியுள்ளார் விஜயகாந்த், இப்படிபட்ட பதில்களை பாராட்டி இட்லிவடை நல்ல பதில்கள், நிச்சயம் இவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று சான்றிதழ் வேறு வழங்கியுள்ளார். பாவம் இட்லிவடை ஒலகம் அறியாத(?!) புள்ளையா இருக்கார்.

31 பின்னூட்டங்கள்:

said...

அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே!! ஏன் ரொம்ப ஃபீல் பண்ணுறீங்க! இன்னைக்கு பொய் சொல்லாதா ஒரே ஒரு அரசியல்வியாதியை சொல்லுங்க பார்ப்போம்!!!

இடிக்கப்படும் என்று தெரிந்து தானே, எந்த இடம் அடிபடுமோ அந்த இடத்துல கட்சி ஆபீஸ் கட்டி, அந்த தக்கவைக்கப்பார்த்துக்கிட்டு இருக்காரு...

கடந்த பத்து நாட்களா, இங்க கோயம்பேடு பக்கம் ஏரியா ஃபுல்லா எங்க பார்த்தாலும் எங்க கட்சி அலுவலகத்தை உடைத்து கட்சியை அழிக்கப்பார்க்கும் கருணாநிதியேன்னு ஏக வசனத்துல Stunt...

லூசுல விடு தல... என்னமோ விஜயகாந்த் மட்டும் தான் பொய் சொல்லறாமாதிரி...

said...

enna kuzhali ulagam theriyaadha pulaiku karuthu kanippu nadathi,..aapum vachiteengalae:)) idhai thaan maalai pottu, thaara thambatai vaithu aatai orae poda poduttingalae:)) paavum idli vadai..

said...

என்னமோ விஜயகாந்த் மட்டும் தான் பொய் சொல்லறாமாதிரி
:)

said...

கலைஞர் சொல்ற பொய்ய ஒப்பிடும் போது இது ஜூஜூபி.

சரி, இந்த அறிவிப்ப உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டியது தானே.

பாலம் கட்டுவதற்கு தான் இடிக்கப் போறோம்னா, தேர்தலுக்கு முன்பே இடிக்க வேண்டியது தானே, இவ்ளோ பொறுமையா ஏன் செய்யனும்.

said...

எனக்கு ஒரு டவுட்டு...டி.ஆர் பாலு அவர்கள் விஜய காந்துக்கு க்ரீட்டிங்ஸ் கார்டு அனுப்பியதாகவும், அதில் புதிதாக கட்டப்படும் மேம்பால வரைபடத்தை போட்டு அனுப்பியதாகவும் இன்று பேப்பரில் படிச்சேன்..இது எந்த அளவு உண்மை ?

said...

//எங்க கட்சி அலுவலகத்தை உடைத்து கட்சியை அழிக்கப்பார்க்கும் கருணாநிதியேன்னு ஏக வசனத்துல
//
அடேடே அப்போ திமுகவை அழிக்கணும்னா அண்ணா அறிவாலயத்தை இடிச்சா போதுமா? அதிமுகவை அழிக்கனும்னா எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் அதிமுக அலுவலகத்தை இடிச்சா போதுமா? காங்கிரசை அழிக்கனும்னா சத்தியமூர்த்திபவனை சரி வேணாம் விட்டுடுவோம்....

ஆனாலும் விஜயகாந்த் படம் பாத்து பாத்து பசங்க ரொம்பத்தான் கெட்டு போயிருக்காங்க அக்காங்.....

//லூசுல விடு தல... என்னமோ விஜயகாந்த் மட்டும் தான் பொய் சொல்லறாமாதிரி... //
ஜெய் நாளைக்கு ஒரு கதை என் பதிவில் போடப்போறேன் மறக்காம வந்து படிங்க...

//என்னமோ விஜயகாந்த் மட்டும் தான் பொய் சொல்லறாமாதிரி
:)
//
யோவ் அனானி, ஜெய் எவ்ளோ ஃபீல் செய்து சொல்றாரு உமக்கு சிரிப்பா இருக்கா?

//கலைஞர் சொல்ற பொய்ய ஒப்பிடும் போது இது ஜூஜூபி.
//
பொய் சொல்ல கலைஞர் இருக்காருனா அப்புறம் எதுக்கு விஜயகாந்த்து, நீங்களும் நாளைக்கு பதிவுக்கு வந்து பாருங்க ஒரு கதை போடப்போறேன்...

//enna kuzhali ulagam theriyaadha pulaiku karuthu kanippu nadathi,..aapum vachiteengalae:)) idhai thaan maalai pottu, thaara thambatai vaithu aatai orae poda poduttingalae:)) paavum idli vadai..
//
பாலாஜி குசும்பு?

said...

சுயநலத்தின் மொத்த உருவமான உங்கள் மரம் வெட்டி ஜ்யாவுக்கே ஆப்படிக்க முயலும் விஜயகாந்த் எது சொன்னாலும் அதை பொய் என்று தான் சொல்வீர்கள்.

தம்மாத்துண்டு மீடியாவான நீங்களே கண்கானிக்கும் போது சன் டிவி போன்ற பெரிய திமிங்கிலங்களுக்கு இது தெரியாமலா இருக்கும்.
இப்படி அணைவரும் பார்க்க பொய் சொல்ல விஜயகாந்த் என்ன உங்களை போல விசிரா?

said...

//என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.//


//நெடுஞ்சாலை விரிவாக்க பணித்தொடர்பாக அவரது மண்டபமும் அதனோடு சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது,//

இவ்விரண்டும் இப்பதிவில் இருந்து எடுக்கப் பட்டவையே!

இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் புரியாமல் நீங்கள் 'பொய் சொல்லும் விஜயகாந்த்' என எழுதியிருப்பது வேடிக்கையே!

:))

said...

////என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.//


//நெடுஞ்சாலை விரிவாக்க பணித்தொடர்பாக அவரது மண்டபமும் அதனோடு சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது,//

இவ்விரண்டும் இப்பதிவில் இருந்து எடுக்கப் பட்டவையே!

இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் புரியாமல் நீங்கள் 'பொய் சொல்லும் விஜயகாந்த்' என எழுதியிருப்பது வேடிக்கையே!

:)) //

ஹய்யோ ஹய்யோ...(வடிவேலு பாணியில் படிக்கவும்), அது எப்படிங்கய்யா இப்படி சாமார்த்தியமா வெட்டி ஒட்டுறிங்க....

//என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.//
இது வேண்டுமானால் சொல்லாமலிருக்கலாம், ஆனால் இடிக்கப்படும் என்பது சென்ற ஆண்டு மே மாதமே உறுதியாகிவிட்டது, உங்களுக்காக மீண்டும் ஒரு முறை கேள்வியை ஒட்டுகிறேன்.

//கே:- உங்கள் திருமண மண்டபம் இடிப்பு பற்றி நீங்கள் கட்சி தொடங்கும் முன்பே தகவல் சொல்லி விட்டதாக டி.ஆர்.பாலு கூறி விட்டரே?

ப:- அது தவறான தகவல். நான் கட்சி தொடங்கும் முன்பு கூறி இருந்தால் கலைஞரையே நான் பார்த்து இருப்பேன்.
//

அருள்குமார் தன்னுடைய நட்சத்திர வாரத்தில் ஒரு அருமையான பதிவிட்டிருந்தார்...

தலைவனும் தொண்டனும் என்ற பதிவு, இத்தனை நாள் எனக்கும் மற்ற சிலருக்கும் மட்டும் தான் என நினைத்திருந்தேன், அட அது உங்களுக்கும் கூட பொருந்தி தொலைக்கிறது

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஏனைய கட்டடங்களோடு கல்யாண மண்டபமும் இடிக்கப்படும் என்பதற்கும், எந்த அளவு இடிக்கப்படும் என்பதற்கும் வித்தியாசம் புரியாமல் பொய்யர் என்று அவரையும், உண்மையை எடுத்துக் காட்டினால் 'தொண்டன்' என்று என்னையும் ஏளனம் செய்வதில் உங்களுக்கு மகிழ்ச்சியெனில், எனக்கும் அதுவே!

-ஹய்யோ. -ஹய்யோ!
[இதையும் அதே வடிவேலு பாணியில் படிக்கவும்!]
:))

said...

அய்யா
எஸ்.கே அய்யா
எக்காலமும் எல்லாம் புரியாத
எவனுக்கும் முழுதும் தெரியாத
பாமரனுக்கும் பெற்றோருக்கும்
பாங்காக எடுத்து சொன்னீர்
பாலியல் கல்(ல)வியை
பாங்கு தமிழில்

பக்கத்து வீட்டு
சங்கீதா சறுக்குமரத்தில்
சறுக்கி விளையாடுவதைப்போல்
சங்கத்தமிழ் சறுக்கி
விளையாடும் உம்மிடம்

கடைசி வீட்டு கவிதா
சில்லறையை சிதறவிடுவது
போன்று சிரிக்கும்
சிறு பொழுதில்
கவிதை பொங்கி வரும்
உம் நெஞ்சில்

(கீழே இருப்பதை சிவாஜி குரலில் படிக்கவும்)
அய்யகோ...!
என்ன ஆனது
சங்கத்தமிழ் சதிராடும்
எஸ்.கேவுக்கு
என் சாதா
தமிழே புரியலையா?
என் சாதா
தமிழே புரியலையா?
அல்லது
நான்
எழுதும் தமிழ் தான்
புரியாத அளவிற்கு
சோதாவாகிவிட்டதா?
சோதாவாகிவிட்டதா?

said...

//சுயநலத்தின் மொத்த உருவமான உங்கள் மரம் வெட்டி ஜ்யாவுக்கே
//
உம் தந்தையின் சுயநலம், உம் குடும்பத்தின் நலம், உம்முடைய சுயநலம் உன் பிள்ளைகளின் பொது நலம் அது போல இத்தனை நாள் உங்களுக்காக மட்டுமே இருந்த பொது நலன்கள் கொஞ்ச நாள் மற்றவர்களின் சுயநலனாகத்தான் இருந்துவிட்டு போகட்டுமே, மரம் வெட்டி அய்யாவின் சுயநலம் குழலியைப் போன்றோர்களுக்கான பொது நலம், எனவே நீர் சுயநலம் என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும், பொது நலம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் எமக்கு அதைப்பற்றி கவலையில்லை...

//ஆப்படிக்க முயலும் விஜயகாந்த் எது சொன்னாலும் அதை பொய் என்று தான் சொல்வீர்கள்.
//
உங்களுக்கு விஜயகாந்த் பொய் சொன்னாலும் பரவாயில்லை, அது பிரச்சினையில்லை, உங்கள் சுயநலனுக்கு சே... சே... உங்கள் பொது நலனுக்கு பாதிப்பு வரக்கூடாது அவ்ளோதானே?

//இப்படி அணைவரும் பார்க்க பொய் சொல்ல விஜயகாந்த் என்ன உங்களை போல விசிரா?
//
அப்போ எல்லோரும் பாக்காத மாதிரி பொய்சொன்னா சரியோ? அதான் சொல்லிட்டாரே எல்லோரும் பாக்குற மாதிரி பொய்யை,(வடிவேலு பாணியில் படிக்கவும்) ஹைய்யோ ஹைய்யோ ஒரு பொய்யை கூட ஒழுங்கா சொல்ல தெரியலை இவரெல்லாம் கல்யாண மண்டபத்தை காப்பாத்தி, கட்சி நடத்தி... என்னமோ போங்கப்பா...

said...

//தலைவனும் தொண்டனும் என்ற பதிவு, இத்தனை நாள் எனக்கும் மற்ற சிலருக்கும் மட்டும் தான் என நினைத்திருந்தேன், அட அது உங்களுக்கும் கூட பொருந்தி தொலைக்கிறது//

//யோவ் அனானி, ஜெய் எவ்ளோ ஃபீல் செய்து சொல்றாரு உமக்கு சிரிப்பா இருக்கா?//

குழலி நீனும்மா?? என்ப்பா இது எல்லாரும் ஜெய்யை கலாக்க கெளம்பிட்டாங்க??

//என்னமோ விஜயகாந்த் மட்டும் தான் பொய் சொல்லறாமாதிரி... ////

இதுக்கு நான் என்ன நினைத்து எழுதினேன்னு சொல்லவந்தேன்... கீழே கண்ட கமெண்டை பார்த்தது நிறுத்திக்கிடேன்.

//தலைவனும் தொண்டனும் என்ற பதிவு, இத்தனை நாள் எனக்கும் மற்ற சிலருக்கும் மட்டும் தான் என நினைத்திருந்தேன், அட அது உங்களுக்கும் கூட பொருந்தி தொலைக்கிறது //

அது உங்களுக்கும் தான் தெரியுதா தல அப்ப சொல்லி யூஸ் இல்லைன்னு விட்டுவிட்டேன் :)

said...

"இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்"

Dear Kuzhali,

I have been reading your blog for a very long time. I agree with most of your writing and thought provoking enquiries. But I am disturbed by some serious lopsided and deliberate twists to certain stories, simply to suit your agenda.

Though my question is bit off the topic from the current post, I cannot but help wonder about few things.

In the link provided above, you have questioned the integrity and motivation behind rajini donating his mandapam and starting the trust.

Though I do not have first hand evidence to counter your arguments, but there are some strong and definitive evidences that actually debunk your smear campaigns.

I recently read about Mr. Velu Prabhakaran a strident and vocal critic of rajini, a rabid critic of the superstar. He has been like this for more than 15 yrs now. But recently he came out in open about how, rajinikanth gave him large amounts ( crores?) to help him release his movies about periyar(!?). Though rajini is a practicing hindu, he has proved himself to be above the petty differences and rose up to the occasion and won over his enemy. I truly beleive, thats the kind of men we need in puclic life. There are two things to note, as per Mr. Velu, his movie was funded by some "dravidian" party, but they sold his only house to redeem his loan. If the periyar devotees cannot fund a movie of their own leader, who else will? But rajini who did not have to fund movies based on athiesm and especially made by his critics, has really surprised me with his large heartedness.

I have a hard time beleiving that, he would have had some other motivations to donate his mandapam. I firmly beleive, rajini actually practises the proverbial tamil saying, "what you give in your right hand shouldn't be disclosed to your left hand".

I think, you need deduce characters and personalities after serious thought. Selectively picking news to suit your agenda might make your blog popular, but it does not do any good for you as a writer.

Thats my two cents. I do beleive, Vijaykanth to be a well intentioned rather naive individual. I do not think he is a crook!

Vignesh

said...

http://www.dinamalar.com/2006dec05/political_tn4.asp

04. விஜயகாந்த் பெயரை "மிஸ்யூஸ்' செய்து டெண்டர் எடுத்துள்ள தே.மு.தி.க.,வினர்

விருத்தாசலம்; கம்மாபுரம் ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி டெண்டரின் போது எம்.எல்.ஏ., விஜயகாந்தின் பெயரை தவறாக பயன்படுத்தி தே.மு.தி.க.,வினர் பல லட்சம் ரூபாய்க்கான டெண்டரை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

விருத்தாசலம் தொகுதி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு என எம்.எல்.ஏ., விஜயகாந்த் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. ஒரு கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். எம்.எல்.ஏ., நிதியில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தரமானதாகவும், ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும் என கலெக்டரிடம் விஜயகாந்த் கேட்டு கொண்டார். கம்மாபுரம் ஒன்றியத்திற்கு ரூ. 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கம்மாபுரம் ஒன்றியத்தில் விடப்பட்ட டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக எம்.எல்.ஏ., விஜயகாந்திற்கு தெரியவந்தது. அதனால் அந்த டெண்டரை கேன்சல் செய்து வேறு தேதிக்கு மறு டெண்டர் விடுமாறு கலெக்டரை கேட்டு கொண்டார். அதன் பேரில் கடந்த வாரம் அதே வேலைக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் எம்.எல்.ஏ., விஜயகாந்த் பெயரை சொல்லி ஊழல் செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலின் போது இருப்பு கிராமத்தில் பொதுக்கூட்டத்திற்கு விஜயகாந்தை அழைத்து வந்து பிரபலமான நபர், எம்.எல்.ஏ.,வின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களையும், அதிகாரிகளையும் மிரட்டி பெரும்பாலான டெண்டர்களை வாங்கிவிட்டார். இதை கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தாமல் இருக்க ஒன்றிய பொறுப்பில் இருப்பவருக்கு கார், மோட்டார் பைக், மாவட்ட பொறுப்பு, பணம் என கவனித்துள்ளதாக அக்கட்சியினரே கூறுகின்றனர்.

கம்மாபுரம் ஒன்றியத்தில் ரூ. 48 லட்சத்திற்கு 42 வேலைகள். இதில், ரூ. 35 லட்சத்திற்கு மேல் 30 வேலைகள், விருத்தாசலம் ஒன்றியத்தில் 10 வேலைக்கு ரூ. 15 லட்சம், நல்லுõர் என அனைத்து ஒன்றியத்திலும் உள்ளூர் கட்சியினரின் உடந்தையால் அந்த நபருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஒரே நபராக விருத்தாசலத்தைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்ற பெயரில் "பினாமி டெண்டராக' ரூ. 70 லட்சத்திற்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கான்ட்ராக்ட் உரிமம் உள்ள நபருக்கு அந்த அளவிற்கு ஒன்றியத்தில் "சால்வன்சி' பத்திரம் உள்ளதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆயிஷா பேகம் கடந்த ஜனவரி மாதம் செய்த பணிக்கு பொருள்கள் வாங்கியதற்கு ரூ. 2 ஆயிரத்து 500க்கு செக் கொடுத்துள்ளார். அந்த செக், அவரது கணக்கில் பணம் இல்லை என "பவுன்ஸ்' ஆகிவிட்டது. மேலும், கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட பல வேலைகள் இன்னும் முடிக்காத நிலையில் உள்ளன. இப்படி இருக்கும் போது, அதே நபருக்கு எப்படி மீண்டும் பல லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கொடுக்க முடியும் என மற்ற கான்ட்ராக்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கம்மாபுரம் ஒன்றியத்தில் டெண்டர் விடப்பட்ட வளர்ச்சி திட்டப் பணி அனைத்தும் ஒரு மாத காலத்தில் முடிக்கப்பட வேண்டும். தற்போது பெரும்பாலான வேலைகளை ஒரே நபர் எடுத்துள்ளதால், பணிகள் குறிப்பிட்டப்படி தரமானதாக நல்ல முறையில் செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கட்சி தலைவர் எம்.எல்.ஏ., விஜயகாந்த், தனது தொகுதியில் ஊழல் இல்லாத நிர்வாகம், தரமான திட்டப் பணிகள் இருக்க வேண்டும் என கூறி வருகிறார். ஆனால் தொகுதி தே.மு.தி.க.,வினர் கட்சி தலைவர் கொள்கைகளை புறக்கணித்து ஊழல், தரமற்ற வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் தே.மு.தி.க., மீது தொகுதி மக்கள் வைத்திருந்த இமேஜ் குறைந்து அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.

said...

நானும் இட்லிவடையின் பதிவை படித்துவிட்டு இதையே நினைத்தேன், குழலி

said...

நல்ல பதிவு குழலி.

விஜயகாந்துக்கு வால் பிடிப்பவர்கள் அவரை ஏதோ உத்தமர், நல்லவர், வல்லவர் என்றெல்லாம் சொல்லுவது செம காமெடி.

இட்லிவடை வலைப்பூவில் சோவின் ஒரு Version.... அவ்வளவே :-)

said...

லக்கி மேலே அனானி தினமலரிலிருந்து எடுத்து போட்டிருப்பதை பார்த்திங்களா? ம்... விஜயகாந்த்தை ஏற்றிவிட்டவர்களே இறக்கிவிட்டுவிடுவார்கள், விஜயகாந்த் வைத்த ஆப்பு ஜெயலலிதாவுக்காச்சே, தாங்குமா தினமலர்.... கடந்த ஞாயிறு வாசகர்(?!) கடிதத்தில் விஜயகாந்த்தை வாறு வாறென வாறிவிட்டார்கள், பாவம் விஜயகாந்த்....

said...

இட்லிவடை வலைப்பூவில் சோவின் ஒரு Version.... அவ்வளவே

That is much better than being a xerox copy of irrationalists and
casteist politicians.

said...

//That is much better than being a xerox copy of irrationalists and
casteist politicians.
//
என்னங்க இட்லிவடையை இப்படி கலாய்க்குறிங்க....
லக்கியாவது இட்லிவடையை 'சோ' வெர்ஷன்னு சொன்னாரு, நீங்க அதுக்கும் மேல இப்படி கலாய்க்குறிங்களே நியாயமா?

said...

முந்தைய பின்னூட்டத்துல ஒரு ஸ்மைலி மிஸ்ஸிங்க, அதையும் போட்டுடறேன் :-)))))

said...

விஜயகாந்தாவது சொந்தமா சம்பாத்யதில் கட்டிய மகாலுக்காக மருகுகிறார்....உங்க தாலைவர் அரசுக்குச் சொந்தமான ஜிப்மர் ஆஸ்பத்திரிய சொந்தமாக்க பார்க்கிறார்...முன்னம் தான், தனது நெருங்கிய உறவினர்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் அப்பிடின்னாரு...இப்போ தன் மகன் ஆட்சியில் இருப்பதால் அந்த பந்ததினை அறுத்திட்டார்.....அந்தமாதிரி அரசியல் வருமா?...

said...

//விஜயகாந்தாவது சொந்தமா சம்பாத்யதில் கட்டிய மகாலுக்காக மருகுகிறார்....//
அது சரி, இன்னாத்துக்கு அந்த மண்டபம் மதிப்பு 75 இலட்சம்னு சொல்லனும்(பார்க்க சட்டமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த விஜயகாந்த்தின் சொத்து அபிடவிட்) இப்போ மண்டபம் போனா 75 இலட்சம் தான் தருவாங்க, ஒழுங்கா பத்திரபேப்பருக்கும் இன்கம் டாக்ஸ்க்கும் கணக்கு பார்த்து செய்திருந்தா இப்பிடி 75 இலட்சத்துக்கு பதிவு செய்து நொந்து நூடுல்ஸ் ஆக வேண்டாமில்லையா?

//உங்க தாலைவர் அரசுக்குச் சொந்தமான ஜிப்மர் ஆஸ்பத்திரிய சொந்தமாக்க பார்க்கிறார்...
//
தோடா வந்துட்டாரு, AIIMS கூடத்தான் தன்னாட்சி அதிகாரம் உள்ளது, அது என்ன அன்புமணி ஜேப்பியிலா இருக்கிறது? GCT, MIT, CITனு தமிழ்நாட்டுல எத்தனையோ பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி பெற்றது, அதெல்லாம் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி சட்டை பையிலா இருக்கு.....

//முன்னம் தான், தனது நெருங்கிய உறவினர்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் அப்பிடின்னாரு...இப்போ தன் மகன் ஆட்சியில் இருப்பதால் அந்த பந்ததினை அறுத்திட்டார்.....அந்தமாதிரி அரசியல் வருமா?...
//
இதெல்லாம் நல்லா வக்கனையா லாஜிக்கா தான் பேசுறிங்க, ஆனா அவரு செய்றதையே விஜயகாந்த்தும் செய்வாருன்னா அப்போ விஜயகாந்த் வேற இன்னாத்துக்கு புச்சாங்கறேன்....

said...

//அதிமுகவை அழிக்கனும்னா எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் அதிமுக அலுவலகத்தை இடிச்சா போதுமா//

எல்டாம்ஸ் சாலைக்குப் போனா அதிமுகவை அழிக்க எப்படி முடியும் குழலி?

அவ்வை சண்முகம் சாலைக்குப் போனால் ஏதோ கொஞ்சம் செய்யலாம். உங்க GPS ஐ அப்டேட் செய்ங்க.

said...

//அது சரி, இன்னாத்துக்கு அந்த மண்டபம் மதிப்பு 75 இலட்சம்னு சொல்லனும்//

அதிகமா இன்கம்டாக்ஸ் கட்டுகிற எல்லோரும் செய்யருதானுங்களே....அவரு அரசியலுக்கு புச்சு அதுனால வந்த வினை....இப்பவும் பாருங்க...எத்தினி தொழிலதிபர்கள் இந்த தில்லாலங்கடி வேலை செய்யுறாங்க....

//AIIMS கூடத்தான் தன்னாட்சி அதிகாரம் உள்ளது, அது என்ன அன்புமணி ஜேப்பியிலா இருக்கிறது//

ஜோப்பில வெச்சுக்க முயற்சி பண்ணினததான் பார்த்தோமே...அங்கன இவுக அரசியல் திறமை காணாம போச்சுதே...உங்க தலைவர் கூட கருணாநிதி அதுல சப்போர்ட் பண்ணல்லைன்னு பொங்கினாருங்களே...

//அவரு செய்றதையே விஜயகாந்த்தும் செய்வாருன்னா அப்போ விஜயகாந்த் வேற இன்னாத்துக்கு புச்சாங்கறேன்//

ஏன் புச்சா ஒருத்தரு வரக்கூடாதுங்கறேன்...தமிழகமென்ன அதிமுக, திமுக, பாமாக பரம்பரை சொத்தா?.....ஒங்க பயம், ஒங்கள பிடிச்சி ஆட்டுது...வேற ஒரு புண்ணாக்கும் இல்ல....

said...

நாராயணா... !

இந்தப் பிஞ்சி போன அரசியல்வாதிங்களை எல்லாம் யாராவது கொசு மருந்து அடிச்சு Close பண்ணுங்களேண்டா... !

நல்ல பதிவு... !

said...

//பொய் சொல்லும் விஜயகாந்த், பாராட்டும் இட்லிவடை//

இட்லிவடை அய்யா,..

நம்ம குழலிக்காகவாவது நீங்க அரிச்சந்திரனின் மறு அவதாரமான மருத்துவர் ராமதாசு அய்யாவைப் பாராட்டி ஒரு பதிவு போட்டுருங்க.

பாலா

said...

//இட்லிவடை அய்யா,..

நம்ம குழலிக்காகவாவது நீங்க அரிச்சந்திரனின் மறு அவதாரமான மருத்துவர் ராமதாசு அய்யாவைப் பாராட்டி ஒரு பதிவு போட்டுருங்க.

பாலா//
என்ன பாலா என்னைய மாதிரி ஒரு காமெடி பதிவருக்காக, சூப்பர் பதிவர் கிட்ட வேண்டுகோள் வைக்கிறிங்க?

சரி பாலா இதைத்தவிர இந்த பதிவிலே பேச ஒன்னுமில்லையா உங்களுக்கு?

said...

நன்றி குழலி....திரும்பவும் நீங்க உங்களுடைய விகல்பமில்லாத மனதினை வெளிப்படுத்தியதற்கு....

நான் என்னுடைய 2 ஆவது பின்னூட்டத்த நீங்க பிரசுரிக்க மாட்டிர்கள்ன்னு நினைத்தேன்...ஆனால் நீங்க அதனையும் பிரசுரித்தீர்கள்....எப்படிங்க லக்கியுடன் கூட்டணி அமைத்தபின் இன்னும் இப்படி வெள்ளேந்தியா இருக்கிறீங்க....

said...

//சரி பாலா இதைத்தவிர இந்த பதிவிலே பேச ஒன்னுமில்லையா உங்களுக்கு//

குழலி அய்யா,

இதுக்கு உங்க பாணியிலேயே ஒரு பதிலை வைக்கிறேனுங்கய்யா.

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு கூசாமா விடுபவர்களின் முன், ஒரு சின்னப் பொய்யை சொன்னதற்கே எரிச்சல் அடைகிறீர்களே? இதுக்காகவாவது நம்ம கேப்டன் ஆட்சிக்கு வந்து, 40 ஆண்டு கால ஆட்சியிலே, எம் மக்கள் கையில் ,பெரியார் திராவிடீயம் கொடுத்த மலத்தை எடுத்து ,பெரியார் திராவிடீய தலைவர்கள் கையிலேயே கொடுத்துவிட வேண்டும்.
சினிமா ஹீரோ பாணியில் இந்த ஒரிஜினல் வில்லன்களை அவர் அடக்குவதை உலகமே வியந்து பாராட்டவேண்டும்.

கேப்டனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நல் மனம் படைத்த நம் கவிஞர்கள் கேப்டனை பாட்டில் வைப்பார்கள்.அதைக் கேட்டு மேலும் எரிச்சல் அடையும் கும்பலில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.நூறாண்டுகள் வாழ வேண்டும் அவர்.

பாலா