ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்

பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முழு அடைப்பு நடைபெறவிருக்கிறது, இந்த அமைப்பின் முக்கிய கட்சியாக பங்கேற்றுள்ளது பாமக, ஆனால் இங்கு மட்டுமல்ல இனவாத சிங்கள அரசிற்கு தமிழர்களை அழிக்க ஆயுத உதவி, ரேடார், பீரங்கி டாங்கி அனுப்புதல் என்று மட்டுமல்லாமல் ஆள் உதவியும் செய்து கொண்டிருக்கும் மத்திய அரசிலும் பங்காளியாக உள்ளது.

பாமக தம்மை வெறும் சாதிக்கட்சியாக மட்டுமே அடையாளம் காட்டிக்கொண்டிருந்தால் யாரும் கேள்விகேட்க போவதில்லை, ஆனால் தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து அதன் முக்கிய கூட்டாளியாகவும் செந்தமிழில் தொலைகாட்சியும், பத்திரிக்கையும் நடத்தி தமிழை பாதுகாப்பதாக கூறும் பாமக ஈழத்தமிழர்களை அழிக்கும் மத்திய அரசிற்கு பங்காளியாக முட்டுக்கொடுத்துக் கொண்டே இங்கே ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கெடுப்பது மிக கடுமையான முரணாக உள்ளது.

ஆட்சியும் அதிகாரமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை, நீக்குபோக்கான நிலைப்பாடும், அதிகாரத்திற்கான சமரசங்கள் தேவை, ஆனால் எதை எதற்காக சமரசம் செய்கிறோம் என்பது மிக முக்கியமானது, தமிழர் அழிவை தடுப்பதை தாண்டி வேறென்ன காரணத்துக்காக சமரசம் செய்து கொண்டுள்ளார்கள் தற்போது அமைச்சரவையில் தொடர்வதற்கு.

நாங்கள் ஆறு உறுப்பினர்கள் வெளியேறினால் மத்திய அரசாங்கம் கவிழுமா? என்று எதிர்கேள்வி கேட்கலாம், ஆனால் இனவாத சிங்கள அரசிற்கு உதவி செய்ய்யும் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேசுவதே இரட்டை வேடமாக உள்ளது.

முந்தைய காலங்களில் சட்டமன்றத்திலேயே ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மாணத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியிருக்கலாம், கடந்த கால கதைகளை சொல்வதை விட தற்போது மத்திய அரசிலிருந்து விலகாமல் பாமக ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேச பாமகவிற்கு எந்த அருகதையுமில்லை.

கலைஞரின் தமிழ்துரோக அரசியலை சுட்டிக்காட்டும் விரல்கள் பாமகவையும் சுட்டி காட்டும் என்பதும் உறுதி.

பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழ் பாதுகாப்பு இயக்கம் முழு அடைப்பு போராட்டம் நடத்தும் முன் பாமக மத்திய அரசிலிருந்து வெளியேறினால் மட்டுமே பாமகவிற்கு தார்மீக உரிமையுள்ளது, இல்லையென்றால் எத்தனையோ பேர் தமிழன் தலையில் அரைத்த மிளகாய் கணக்கில் பாமகவும் சேர்ந்து கொள்ளட்டும்.

16 பின்னூட்டங்கள்:

said...

அன்பின் நண்பர் குழலி,

ஞாயமான குரல். பாராட்டுகள்.
இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.
நேற்று முன் தினம் முத்துக்குமார் இறுதிச் சடங்கை தமிழன் தொ.காவில் பார்த்தவர்கள்,
பெரியவர்களிடம் பேசியபோது
இராமதாசும், வைகோவும் அவர்கள்
கூட்டணியில் இருந்து வெளிவந்து
மக்கள் கூட்டணி அமைத்தால் கட்டாயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்கள்.

இராமதாசு சிந்திக்க வேண்டும்.

ஓங்கி குரல் எடுப்போம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

said...

they know these things...they all political actors, ramodoss is very fit in this category ...if they want to choose between family or Tamil.All the citizen in the world know the answer...

said...

enna kodumai kuzali ithellaam?

said...

ஆசை...தோசை...அப்பளம்...வடை...

கருணாநிதி என்ற நபரின் அரசியலைக் காப்பியடிக்கும் ராமதாஸ் செய்வாரா?


எதற்கும் இதுபோன்ற பதிவுகளையும் எழுதிவிட்டால்,வரும் காலத்தில்,

"நான் 1956-லே தீர்மானம் முன்மொழிந்தவனாக்கும்",

"83-ல் பதவியைத்துறந்தவனாக்கும்",

"2-முறை ஆட்சியை இழந்தவனாக்கும்"

என்று கருணாநிதி பாணியில் எழுத உதவியாக இருக்கும்.

said...

/ நாங்கள் ஆறு உறுப்பினர்கள் வெளியேறினால் மத்திய அரசாங்கம் கவிழுமா? என்று எதிர்கேள்வி கேட்கலாம், ஆனால் இனவாத சிங்கள அரசிற்கு உதவி செய்ய்யும் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேசுவதே இரட்டை வேடமாக உள்ளது.
/
குழலி எனக்கும் கூட இந்த உருத்தல் இருந்தது...

said...

மருத்துவர் காங்கிரஸை விட்டும், வைகோ அதிமுகவை விட்டும் வெளியேறினால் நன்றாக இருக்கும்..

said...

குழலி,

சரியான வேண்டுகோள்.

தி.மு.க, அ.தி.மு.க இரண்டுக்கும் சமாதி கட்டியாக வேண்டும். காங்கிரசுக்குக் கட்ட வேண்டிய தேவையில்லை. அது எப்பவுமே சமாதிக்குள்தான் இருக்கிறது. சில எச்சிக்கலையும் நாய்கள்தான் தமிழ்நாட்டில் இன்னும் காங்கிரசுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றன. காங்கிரசுக்கு தன் சுயமரியாதையை அடகு வைத்து எப்பொழுதும் உயிர்கொடுப்பதே கருணாநிதிதான். செயலலிதா கூட காங்கிரசையும், அதன் இத்தாலித் தலைமையையும் எந்தக் காலத்திலும் மதித்ததே இல்லை.

//
இராமதாசும், வைகோவும் அவர்கள்
கூட்டணியில் இருந்து வெளிவந்து
மக்கள் கூட்டணி அமைத்தால் கட்டாயம் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்கள்.//

தமிழகத்தில் புதிய அரசியல் உருவாகும் சாத்தியமுள்ளது. இராமதாசு, திருமா, வைக்கோ, பொதுவுடைமைக் கட்சிகளை நோக்கிக் கடிதங்களும், அழைப்புகளும் குவியட்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டவேண்டும்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

said...

பா.ம.க விலகும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது.இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடியும் போது
விலகுவதால் ஆட்சிக்கு பாதிப்பில்லை. விலகினால்
பின் கூட்டணியில் தொடர முடியுமா என்ற கேள்வி பா.ம.க தலைமை முன் உள்ளது.காங்கிரசும், திமுகவும் கூட்டணி வைக்கட்டும், நான்
அதிமுகவுடன் கூட்டணி வைப்பேன்
என்று பா.ம.க தலைமை முடிவு
செய்யவில்லை. இன்றுள்ள நிலையில்
பாமக, திமுக இரண்டுமே 2009 ஏப்ரல்-மே தேர்தல் கூட்டணிகளுக்கே
முதன்மை தருகின்றன, ஈழத்தமிழர்
சிக்கலுக்கு அல்ல.1998 முதல் மத்திய அமைச்சரவையில் இருந்து சுகம் கண்ட பின் அதை இழக்க மனம் வருமா?. வைகோவை நம்பி பாமக கூட்டணி வைக்க முடியாது.
காங்கிரசுக்கு திமுக,பாமக ஆதரவு
தேவை.அதை விட பதவிக்காக
திமுக,பாமக விற்கு காங்கிரசின்
தயவு அதிகமாக தேவை. எனவே
தமிழ்நாட்டில் வலுவற்ற காங்கிரசை
பகைத்துக் கொள்ள விரும்பாமல்
பாமக இரட்டை வேடம் போடுகிறது.
யாரை யார் கழற்றிவிடுவார்கள் என்பது போகப் போகத் தெரியும்.
சிலவற்றை இப்போதாவது குழலி
உணர்ந்திருக்கிறார்.

said...

எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க,

நானும் நடுநிலவாதிதான்.
நானும் நடுநிலவாதிதான்.

said...

அவர்கள் வெளியிலிருந்து எதிர்ப்பதைவிட உள்ளிருந்து எதிர்ப்பதே நல்லது. அவர்கள் வெளியில் வந்தால் இது ஒரு நாளைய செய்தி மட்டுமே. மேலும் எதிர்கட்சிக்காரன் அப்படித்தான் பேசுவான் என்று இப்பொழுது சொல்லமுடியாது அல்லவா? மேலும் உணர்வாளர்கள் பல்வேறு விதங்களில் / மட்டங்களில் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இன்றே செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பலாஅயிரம் மருந்துகள் தேவை என்றால் வேறு யாரையும் விட நம்மவர் அங்கிருப்பதே உதவும்! யார்கண்டார்கள், வேறுவழியிலும் உதவியிருக்கலாம்! உணர்ச்சிவசப்படுதல் அனைத்து சூழல்களுக்கும் உதவாது. தமிழீனத்தலைவர்களை விட மருத்துவர் ஞாயமானவர். உதாரணம் பணத்தைவிட தமிழ் முக்கியம் என்று காட்டிவரும் மக்கள் தொலைக்காட்சி!

said...

தல,
அரசியல்வியாதிகள் மீது சுத்தமா நம்பிக்கையே போச்சி.. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..

said...

First let us wait and see if the mater-dei kids in delhi also particiate in Feb 4 strike.


And then let us talk about withdrawing support.

said...

மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் அண்ணாச்சி, தலைப்பை பார்த்ததும் தாங்களா இப்படி தலைப்பை வைத்து இருப்பீர்கள் என்றும் உள்ளே ஆதரவோடுதான் எழுதி இருப்பீர்கள் என்று டவுட்டோடு வந்தேன், ஆனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக அருமையாக இருக்கிறது.

said...

ஜெயலலிதாவும் சரி, கருனாநிதியும் சரி, தமிழனை ஒரு சோற்றால் அடித்த பிண்டமாகவே பார்க்கிறார்கள். இல்லையென்றால் கடந்த பொதுத் தேர்தலில் ஆளாளுக்கு இலவசங்களை வாரித் தெளித்திருக்க மாட்டார்கள். மேலும் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழகத்தினருக்கு தேர்தல் என்று வந்துவிட்டால் தலைவன் பின்னாடி தான் ஓடுவார்கள். அது தான் நம்ம பிரச்சினையே!

ராமதாஸ் ஆட்சியிலிர்ந்து விலக மாட்டார். காரணம் உட்கார்ந்த இடத்திலிருந்தே மாதம் 10 கோடி எப்படி கல்லா கட்ட முடியும். இவ்வளவு உணர்ச்சிப் பிழம்புகளை கொட்டும் வைக்கோ ராமதாஸ் தா.பாண்டியன் ஏன் துணிந்து அந்தந்த கூட்டணியில் இருந்து வெளியேறி ஈழத்தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தை தேர்தலின் கூட்டணியாகயே பார்க்கவில்லை. இவர்களனைவரும் செய்வது அரசியல் ஆழம் பார்ப்பது. அதற்கேற்றார் போல் ஏப்ரல் மே வில்நடக்கவிருக்கின்ற தேர்தல்லுக்கு கூட்டணி அச்சாரம் போடுவதேயன்றி வேறொன்றுமில்லை. இவர்களில் இளைச்ச பிள்ளயார் கோயில் ஆண்டி திருமா மட்டுமே!

2009ல் கருனாநிதி ஆட்சி கவிழ்வது உறுதி. அது மட்டுமெ தெரிகிறது.

said...

கருணாநிதி ஒழிக!

http://www.luckylookonline.com/2009/02/blog-post.html

ஈழத்து உறவுகளுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம். இன்றைய தேதியில் எந்த தமிழக அரசியல்வாதியும் ஈழம் பிரச்சினையில் யோக்கியன் இல்லை

said...

திருமாவோ ராமதாசோ காங்கிரஸின் கூட்டணிஇல் இல்லை அவர்கள் திமுக கூட்டணி மைய அரசில் பங்குபெற்றனர் .மொழி போர் நடத்தி அரசியலுக்கு வரவில்லை .படுகொலை நடத்தி அரசியல் செயவில்லை .அவர்கள் அரசியலுக்கு வராமல் இருக்க நடந்த நடக்கின்ற படுகொலைக்களுமே புரளிகளுமே நீங்கள் சுமத்தும் ஊடக குற்றசாட்டு .அவர்கள் அரசியல் பலம் பெற்று தமிழுக்காகவும் தமிழர்களுக்க போராடுகின்றனர் .அவர்கள் யாருடைய களிலும் நிற்கவில்லை ....அவர்கள் பணி என்றும் தொய்வின்றி தொடரும் .அவர்களை ஒழிக்க நினைக்கும் ஊனைகளின் கைக்குளிகளின் ஓலம் பலிக்காது .


உனக்கு அரசியல் தெரிந்தால் குரல் கொடு .இலையேல் உனது பெண்ணுக்கும் பொண்டடிக்கும் வேறுபாடு கனதேரியாய்தா நீ ஒரு கிசுகிசு கைக்கூலி ,,,,,,,,,