கலைஞரை கும்மாமல் ஹர்பஜன்சிங்கையா கும்முவது?

ஈழப்பிரச்சினையில் அனேகமாக கலைஞர் ஜூரம் பல உடன்பிறப்புகளுக்கு தனிந்துவிட்டாலும் கலைஞரை கும்முவது தவறு என்றோ அல்லது இன்னமும் மற்றவர்களை கைகாட்டி அவர்களை கலைஞரை கும்மும் அளவுக்கு கும்மாமல் கலைஞரை மட்டும் இப்படி கும்முவது ஏனென்ற மிகக்கடுமையான கவலை வெகு சில உடன்பிறப்புகளை வாட்டோ வாட்டென்று வாட்டுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவம் அல்லது ஒவ்வொரு முதன்மையான கொள்கை அல்லது கடமை இருப்பதாக அடையாளப்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஒரு கட்சியோ தலைமையோ அந்த அடையாளத்திலிருந்து விலகும் போது மற்றவர்களும் அதையே செய்திருந்தாலும் மற்றவர்களை விட இவர்களே மிகக்கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள்.

கம்யூனிஸ்ட்கள் முதன்மை கொள்கையாக கொள்வதும் அவர்களின் அடையாளமும் தொழிலாளர் முன்னேற்றமும் பாட்டாளி வர்கத்தினை வளமை படுத்துவதும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதும், குஜராத் எங்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் வைத்து விளைநிலங்களை முதலாளிகளுக்காக தாரை வார்த்த போது பாஜக விமர்சிக்கப்பட்டதை விட நந்திகிராமில் கம்யூனிஸ்ட்கள் முதலாளித்துவத்துக்கு வக்காலத்து வாங்கியபோது கம்யூனிஸ்ட்கள் விமர்சிக்கப்பட்டது மிக மிக அதிகம், ஏனென்றால் பாஜக பாட்டாளி நலம் என்று சொல்லி ஆட்சியை பிடிக்கவில்லை, பாஜகவின் கொள்கையும் அதுவல்ல, ஆனால் கம்யூனிஸ்ட்கள் பாட்டாளிகள் நலமென்றும், விவசாயிகள் நலமென்றும் சொல்லி அதனால் ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர்கள். இப்படிபட்ட நிலையில் ஒரு கம்யூனிஸ்ட் தொண்டர் வந்து பாஜகவை கும்மாமல் கம்யூனிஸ்ட்களை கும்முகிறார்களே என்று வருத்தப்பட்டால் காமெடியாக இருக்குமா? இருக்காதா?

டெண்டுல்கர் ரன் குவிப்பதற்காகவே அணியில் சேர்க்கப்பட்டிருப்பவர், ஹர்பஜன் சிங் பந்து வீசவே அணியில் சேர்க்கப்பட்டிருப்பவர், டெண்டுல்கர் சரியாக ரன் குவிக்கவில்லை அதனால் அவரை அணியை விட்டு தூக்குங்கள் என்றால் ஹர்பஜன் கூட தான் பேட்டிங் செய்தார் அவரும் தான் ரன் அடிக்கவில்லை அவரை அணியில் வைத்துக்கொண்டு டெண்டுல்கரை தூக்க சொல்றாங்களே என்று டெண்டுல்கர் ரசிகர்கள் கதறினால் எப்படியிருக்கும்?

அப்படித்தான் தமிழர்களுக்காக என்றும் தமிழுக்காக என்றும் தமிழின உணர்வையும் முன்னிறுத்தி அரசியல் செய்த கருணாநிதி இனஅழிப்பில் இருக்கும் ஈழத்தமிழருக்காக தம்மால் முடிந்த விசயங்களை கூட செய்யாமல் பதவிக்காக மூடிக்கொண்டு இருக்கும் போது தமிழுக்காவும், தமிழ் உணர்வுக்காகவும் மற்றவர்களை எல்லாம் விட கருணாநிதியை ஆதரித்தவர்கள் மற்றவர்கள் எல்லோரையும் விட கருணாநிதியை அதிகமாக கும்மு கும்மென்று கும்மத்தான் செய்வார்கள் உடன்பிறப்பே!

சரி இவ்வளவு நாள் தமிழுக்காக கருணாநிதியை பாராட்டாதவர்களும் ஆதரிக்காதவர்களும் கும்முகிறார்களே என்றால் அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு , கருணாநிதியின் தமிழ் பற்றை பாராட்டியவர்கள் தான் கருணாநிதியை கும்மலாமென்றால் திக காரர்கள் இந்து மதத்தின் அருமை பெருமைகளை பாராட்டியிருந்தால் தான் இந்து மதத்தை விமர்சிக்கலாமென்பதோ, ஜெயலலிதாவின் துணிச்சலான(?) நடவடிக்கைகளை பாராட்டியவர்கள் மட்டும் தான் ஜெயலலிதாவின் அகங்கார அராஜகத்தை விமர்சிக்கலாம் என்று சொல்வதற்கு இணையானது, இது கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, அந்த வாய்ப்பை அவர்களுக்கு அள்ளி வழங்கியது திருவாளர் மு.கருணாநிதியே...

வைகோவை ஏனய்யா கும்ம மாட்டேங்கிறார்கள் என்றால் "வர்றார் சண்டியர்" என்று நெப்போலியன் படத்திற்கு வைத்த பெயர் பிரச்சினை ஆகவில்லை ஆனால் "சண்டியர்" என்று கமல் பெயர் வைத்த போது பிரச்சினையானது, மேலும் வைகோ தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார் என்பது மட்டுமல்ல அவருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவ்வளவு தான் செய்ய முடியும்.

பாமக இராமதாசை ஏன் கம்மியாக கும்முகிறார்கள் என்றால் நீயே சொல் உடன்பிறப்பே திமுகவையும் பாமகவையும் ஒரே தட்டில் வைத்தா பார்த்தாய்? நீ மட்டுமல்ல பெரும்பாலானோர் அப்படித்தான் என்பதால் அவருக்கு கொஞ்சம் கும்முதல் லைட்டா தான் இருக்கும். அது கூட அவர்கள் போடும் இரட்டை வேடத்தினால் தான்.

ஜெயலலிதாவை ஏன் கும்மவில்லை என்றால் ஜெயலலிதாவின் அரசியலே வேறு, ஜெயலலிதாவின் தமிழ் ஆதரவற்ற அல்லது எதிர்ப்பு அரசியலுக்காகத்தான் தமிழ் உணர்வாளர்கள் ஜெயலலிதாவை விட்டுவிட்டு கருணாநிதியை ஆதரிக்கிறார்கள்.

உடன்பிறப்பே, தமிழை வைத்து அரசியல் செய்து தமிழுக்காகவே ஆதரிக்கப்பட்ட கருணாநிதி தமிழருக்கு பாதகம் செய்தால் மற்ற எல்லோரையும் விட அவர் ஆதரிக்கப்பட்ட தமிழரசியலுக்காகவே அதிகமாக கும்மப்படுவார்....

சரியாக ரன் குவிக்காததற்கு டெண்டுல்கர் தான் கும்மப்படுவார், பவுலர் ஹர்பஜன்சிங் அல்ல...

28 பின்னூட்டங்கள்:

said...

கருணாநிதியை டெண்டுல்கர் என்று நினைத்துக் கொண்டிருந்த உம்மைப் போன்றவர்களைத்தான் அய்யா கும்ம வேண்டும்.

said...

கலைஞர் "அசாரூதினாக" மாறி கொள்ளை காலம் ஆச்சு

said...

very good article keep it up.

said...

very good article keep it up.

said...

//சரி இவ்வளவு நாள் தமிழுக்காக கருணாநிதியை பாராட்டாதவர்களும் ஆதரிக்காதவர்களும் கும்முகிறார்களே என்றால் அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு , கருணாநிதியின் தமிழ் பற்றை பாராட்டியவர்கள் தான் கருணாநிதியை கும்மலாமென்றால் திக காரர்கள் இந்து மதத்தின் அருமை பெருமைகளை பாராட்டியிருந்தால் தான் இந்து மதத்தை விமர்சிக்கலாமென்பதோ, ஜெயலலிதாவின் துணிச்சலான(?) நடவடிக்கைகளை பாராட்டியவர்கள் மட்டும் தான் ஜெயலலிதாவின் அகங்கார அராஜகத்தை விமர்சிக்கலாம் என்று சொல்வதற்கு இணையானது, இது கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, அந்த வாய்ப்பை அவர்களுக்கு அள்ளி வழங்கியது திருவாளர் மு.கருணாநிதியே...//

லாஜிக்லயே அடிக்கறான் பாஸ்..

ஒரே அடில பல பேரோட மூக்கு காலி..

said...

ஈழர் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு என்ன செய்யலாம்?
ஈழர் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு என்ன செய்யலாம்?
http://thamilnaadu.blogspot.com/feeds/posts/default

said...

Good one!factual metaphor!

Guru...

said...

கலைஞரை தண்டல்கராக உருவகப் படுத்தியது சரியாகத் தான் வருகிறது.

said...

//கருணாநிதியை டெண்டுல்கர் என்று நினைத்துக் கொண்டிருந்த உம்மைப் போன்றவர்களைத்தான் அய்யா கும்ம வேண்டும்//

:))

கம்மியாக கும்முவது, அதிகமாக கும்முவது என்ற கான்செப்ட் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.

said...

//கம்மியாக கும்முவது, அதிகமாக கும்முவது என்ற கான்செப்ட் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.//

பின்னே எவ்வளவு தேன் எடுத்தாங்களோ அந்த அளவுக்கு தானே புறங்கையை நக்க முடியும்... லிட்டர் லிட்டரா தேன் எடுத்தவங்க நல்லா மொழங்கை வரை நக்கலாம்,கையளவு தேன் எடுத்தவங்க விரலை மட்டும் தானே சூப்ப முடியும்.... அது போல எவ்வளவு தமிழ் பெயரை சொல்லி எவ்வளவு அதிகமாக அனுபவிச்சாங்களோ அந்த அளவுக்கு அதிகமா கும்மிதான் ஆவாங்கோ... என்ன தல நாஞ் சொல்றது சரியா?

said...

உண்மையான உடன்பிறப்புங்க பாதிக்கு மேலேஎ தெளிவடைஞ்சாச்சு. பாதிக்கு மேலே இங்கே உடன்பிறப்பா முதியவர் கருணாநிதிக்கு சப்போர்ட்டு பண்ணற நாயிங்க போன மாசம் வரைக்கும் தீரா'விட'க்கழகம் அப்படின்னு திட்டிட்டிருந்த கூட்டமேதான். அதுக்கு ஈழத்தமிழன் செத்தாலும் ஜாலி கருணாநிதி செத்தாலும் ஜாலி. இன்னிக்கு ஈழதமிழனை காலி பண்ணிட உத்தேசம். கருணாநிதிய தூக்கி வெச்சு ஆடுதுங்க. அவன் செத்தாப்பறம் கருணாநிதிய அமுக்கும். இதுங்களயும் சேத்து ஸ்பெசலா கும்மணும்

said...

//கலைஞர் "அசாரூதினாக" மாறி கொள்ளை காலம் ஆச்சு//

100% True.

I like it.

said...

உங்க லாஜிக் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் கலைஞரை எப்படா கவுக்கலாம் என்று காலம் பார்த்து கொண்டு இருந்த திடீர் தமிழ்ப் பற்றாளர்களுக்கு நீங்கள் ஒரு கருவியாக போய்விட்டது தான் உதைக்கிறது

said...

கருணாநிதியை ஆதரித்தவர்கள் மற்றவர்கள் எல்லோரையும் விட கருணாநிதியை அதிகமாக கும்மு கும்மென்று கும்மத்தான் செய்வார்கள் உடன்பிறப்பே!//
ஒரே அடில பல பேரோட மூக்கு காலி..//

very good article keep it up.

said...

//"வர்றார் சண்டியர்" என்று நெப்போலியன் படத்திற்கு வைத்த பெயர் பிரச்சினை ஆகவில்லை ஆனால் "சண்டியர்" என்று கமல் பெயர் வைத்த போது பிரச்சினையானது//

one small carrection : varraar sandiyar is Krotham Pugazh Prem's movie...

said...

கலைஞரின் தமிழர் தமிழ்உணர்வே என்னை போன்றவர்களை அவர்பால் இழுத்தது, அவர் என்ன தவறு செய்தாலும் பொறுத்து கொள்ளலாம். ஆனால் தமிழர் வாழ்வே இருண்டுகொண்டு இருக்கும் போதே என்னால் அவரை திட்டாமல் இருக்க முடியவில்லை.

said...

//திக காரர்கள் இந்து மதத்தின் அருமை பெருமைகளை பாராட்டியிருந்தால் தான் இந்து மதத்தை விமர்சிக்கலாமென்பதோ//

திக காரர்கள் இந்து மதம் தங்கள் மதம் என்பதாலேயே அதை உரிமையுடன் விமர்சிக்க முடிகிறது, ஆகவே உங்கள் லாஜிக் சகிக்கவில்லை

said...

குழலி
இந்த பதிவால் சிக்ஸ்சர் அடிச்சிட்டிங்க

said...

//கலைஞரை கும்மாமல் ஹர்பஜன்சிங்கையா கும்முவது?//

இது யாருங்க கலைஞர்?ஓ...அந்த சிங்கள ரத்னாவா?

said...

////கலைஞர் "அசாரூதினாக" மாறி கொள்ளை காலம் ஆச்சு////

shouldn't it be Shastri or Dravid?

said...

இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புளே!

அருமை நண்பர் கருணாநிதி என்னிடம் தேர்தலில் தோற்றபோதெல்லாம், போட்டியிட்ட எல்லா கட்சிகளின் வாக்குகளையெல்லாம் பட்டியல் இட்டு நம் தேர்தல் முறை நியாயமற்றது என்பதை வலியுறுத்தி விகிதாசார முறைக்கு மாற வேண்டுமென்று ஆணித்தரமாக வாதிடுவார்.

அதேபோல கடந்த தேர்தலில் தமிழுணர்வை மூலதனமாக வைத்து யார் யார் எந்தெந்த விகிதாசாரத்தில் ஓட்டு பொறுக்கினார்களோ அவர்களை அந்தந்த விகிதாசாரத்தில் கும்ம வேண்டுமென்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

வாழ்க அண்ணா நாமம்.

said...

//திக காரர்கள் இந்து மதம் தங்கள் மதம் என்பதாலேயே அதை உரிமையுடன் விமர்சிக்க முடிகிறது, ஆகவே உங்கள் லாஜிக் சகிக்கவில்லை
//
ஹலோ மிஸ்டர் பிரியாணி குஞ்சு, அப்போ 786 என்ன அல்லாவின் போன் நம்பரா என்றும் பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்றும் கலாய்க்கும் திக காரர்கள் என்ன இஸ்லாமியர்களா அல்லது கிறித்துவர்களா?

பெரியார்தாசன் என்ன கிறித்துவரா? ஆனால் செம்மெயா யேசுவுக்கு ஸ்தோத்திரத்தை கலாய்ப்பாரே....மைடியர் பிரியாணி குஞ்சே...

போ போ வேற இடத்துல இன்னைக்கு பிரியாணி ஆக்கி வச்சிருக்காங்கோ அங்கே போய் துண்ணு ஓகே வா...

said...

//இது கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, அந்த வாய்ப்பை அவர்களுக்கு அள்ளி வழங்கியது திருவாளர் மு.கருணாநிதியே//

Good One.

Pulikutty

said...

//போ போ வேற இடத்துல இன்னைக்கு பிரியாணி ஆக்கி வச்சிருக்காங்கோ அங்கே போய் துண்ணு ஓகே வா...//

சரி சரி பிரியாணி செய்ய விறகு வேணும் கொஞ்சம் மரத்தை வெட்டிதர முடியுமா

said...

//ஹலோ மிஸ்டர் பிரியாணி குஞ்சு, அப்போ 786 என்ன அல்லாவின் போன் நம்பரா என்றும் பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்றும் கலாய்க்கும் திக காரர்கள் என்ன இஸ்லாமியர்களா அல்லது கிறித்துவர்களா?//

டேய் மரம்வெட்டி, அதிகமா தெரிஞ்சத பத்தி தான அதிகமா விமர்சனம் பண்ண முடியும் வெங்காயம்

said...

mika arumai,karunanithiyai sollamal,"""komalinithi"""akkiviteerkal.arivili avargal ethai paddikka vendum.

said...

avvvvvvvvvvv :(

said...

///அதிகமா தெரிஞ்சத பத்தி தான அதிகமா விமர்சனம் பண்ண முடியும் வெங்காயம்///

எந்த உடன் பிறப்பு எழுதுச்சோ தெரியல..ஆனா லாஜிக்கு ஜூப்பர்.

ங்கொய்யால...மு க வோட திருட்டுத்தனம் அதிகமா தெரிஞ்சதுனாலதான் அது பத்தி அதிகமா விமர்சனம் பண்னுரானுங்க அப்படீன்னும் வச்சுக்கலாம்.