உதயகுமாரிலிருந்து முத்துகுமார் வரை - கலைஞரின் பிண அரசியல்


முத்துக்குமார் மரணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது, இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது, சொன்னது வேறு யாருமில்லை அன்று உதயகுமார் பிணத்தின் மீதும், ஜெயலலிதா ஆட்கள் கொளுத்திய மூன்று மாணவிகளின் பிணத்தின் மீது இடைத்தேர்தலுக்காகவும், மதுரையில் அஞ்சாநெஞ்சன் அனுப்பிய ரவுடிகள் கொளுத்திய மூன்று ஊழியர்கள் பிணத்தையும் வைத்து அரசியல் நடத்திய அதே தமிழின தலைவர் கருணாநிதி தான் சொல்கிறார் முத்துக்குமார் மரணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாதாம்...

முத்துக்குமார் இறுதி மரியாதை செலுத்துமிடத்தில் நேற்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் பாபுவுக்கு கிடைத்த கவனிப்பு அப்படியல்லவா இருந்தது, அதான் தலைவர் பொங்கி எழுந்து பண்பாடு பற்றியெல்லாம் கிளாஸ் எடுக்கிறார்.

மற்றவைகள் எல்லாம் விவரமாக தெரிந்திருக்கும் அதென்ன உதயகுமார் மரணம் என்று தெரியாதவர்களுக்கு இன்னமும் கடலூர் மாவட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு செய்தியாக சொல்லப்படும் மூன்று கொலைகள், முதல் கொலை சிதம்பரத்தில் நெருப்பில் புகுந்து கடவுளோடு சேர்ந்த நந்தனார் என்ற கதைகளை ஒரு வரியில் உடைத்து சொல்லுவார்கள் தீட்சிதர பசங்க நந்தனாரை எரிச்சிட்டு நெருப்புல போயிட்டாருன்னு கதை உடுறானுங்க... இரண்டாவது கொலை வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஜோதியில் ஐக்கியமானார் என்பதை, பாப்பார பசங்களோட அடியாளுங்க அடிச்சி கொண்ணுட்டானுங்க வள்ளலாரை என்பார்கள், மூன்றாவது கொலை தான் உதயகுமார், கலைஞரின் வீரபிரதாபங்களில் கட்சி வித்தியாசமின்றி கடலூர் மாவட்டத்தில் சொல்லும் ஒரு விசயம் கலைஞருக்கு அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கிய போது அதை கடுமையாக எதிர்த்து போராடிய மாணவர்களில் அடித்துக் கொள்ளப்பட்டவர் உதயகுமார், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த உதயகுமாரின் பெற்றோர்களிடம் உதயகுமார் தன் மகன் அல்ல என்று எழுதி வாங்கப்பட்டது தான் இதில் உச்சகட்ட கொடுமை.

இன்றைய காலத்தில் உள்ளது போல உடனடி செய்திகள் தொலைக்காட்சி, இணையமென இல்லாமல் உதயகுமார் காலத்தை போல முதல்நாள் நடக்கும் நிகழ்வுகள் மறுநாள் செய்தி தாளில் தான் காண முடியுமென்றால் அதிகார பலம் முத்துக்குமார் தீக்குளிப்பை காதல் தோல்வியால் எடுத்த முடிவென்றல்லவா இருட்டடிப்பு செய்திருப்பார்கள்.

இதே கலைஞர் எதிர்கட்சியக இருந்திருந்தாலோ கலைஞர் புறங்கையை நக்கியவர் என முத்துக்குமாரால் விமர்சிக்கப்படாமலிருந்திருந்தாலோ முத்துகுமார் பிணத்தை வைத்து என்ன அரசியல் செய்திருப்பார் என நிச்சயம் யோசிக்க முடிகிறது.

தன் பிணத்தை கைப்பற்றி துருப்பு சீட்டாக வைத்து போராடுங்கள் என்றார் முத்துக்குமார், இப்படியாக பிணங்களின் மீது அரசியல் செய்த தமிழின தலைவர் தான் சொல்கிறார்
பிணத்தின் மீது அரசியல் செய்யக்கூடாது என்றும் பண்பாடு என்றும்.


உடன்பிறப்புகளே நீங்க திமுக கட்சி பொறுப்பில் இருக்கின்றீரா? கவுன்சிலராகவோ அதற்கு மேலும் பதவி வகிக்கின்றீர்களா? உங்களின் இருப்பை புரிந்து கொள்ள முடிகிறது, கலைஞரின் அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு கட்டிட காண்ட்ராக்டோ கக்கூஸ் காண்ட்ராக்ட்டோ எடுக்க முடியாமல் உங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமென்பதால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

இவையெதுவும் இல்லாமல் இருக்கும் கலைஞரின் ரசிக கண்மணிகளே, கலைஞர் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும், கலைஞரை எதிர்ப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லது பார்ப்பன அடிவருடிகள், ஆரிய சதி அல்லது ஏதோ ஒரு இயக்க முத்திரை அல்லது அனுதாபி அல்லது ஏதேனும் ஒரு சாதி முத்திரை என மூடிய மனதுடன் திரைப்பட ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இணையாக இருக்கும் கலைஞர் ரசிகர்களே, தமிழின தலைவரை நார் நாராக கிழித்திருக்கும் முத்துக்குமாருக்கு எந்த சாதி முத்திரை, எந்த இயக்க முத்திரை தரப்போகின்றீர்கள்?

கலைஞரின் ரசிகர்களே திறந்த மனதுடன் யோசியுங்கள், தமிழர்களுக்கான அரசியல் என்ற ஒற்றை காரணத்திற்காக மனசாட்சியை மூடி எத்தனை விசயங்களில் கலைஞரை ஆதரித்திருப்போம், ஆனால் அந்த தமிழர்களுக்கான அரசியலே இல்லாமல் இருக்கும் போது எதற்காக ஆதரிக்க வேண்டும்?

ஜெயலலிதாவின் எதிர் அரசியல் என்ற சப்பைகட்டு காரணம் சொல்லாதீர்கள், முழுக்க தேநீர்
நிரம்பியிருக்கும் கோப்பையில் வேறு எவ்வளவு ஊற்றினாலும் கீழே வடியத்தான் செய்யும், அது போல கலைஞர் உங்கள் மனதில் நிரம்பியிருக்கும் வரை வேறு மாற்றுகளை சிந்திக்க கூட செய்யாது உங்கள் மனம், கொஞ்சம் உங்கள் மனதை காலி செய்துவிட்டு சிந்தியுங்கள், கலைஞர் என்ற இந்த துரு பிடித்த போர் வாள் இன்னமும் உங்களுக்கு தேவையா என்று?

முத்துக்குமாரின் மரண சாசனத்தை இங்கே படிக்கலாம்

18 பின்னூட்டங்கள்:

said...

Fantastic Kuzhali. It is very imperative to find who is our true enemy and who is our true friend.

"Who are our enemies? Who are our friends? This is a question of the first importance for the revolution. The basic reason why all previous revolutionary struggles achieved so little was their failure to unite with real friends in order to attack real enemies. A revolutionary party is the guide of the masses, and no revolution ever succeeds when the revolutionary party leads them astray. To ensure that we will definitely achieve success in our revolution and will not lead the masses astray, we must pay attention to uniting with our real friends in order to attack our real enemies. To distinguish real friends from real enemies, we must make a general analysis of the economic status of the various classes in society and of their respective attitudes towards the revolution.

Chairman Mao "Analysis of the Classes in Chinese Society" (March 1926), Selected Works, Vol. I, p. 13.

said...

//மூன்றாவது கொலை தான் உதயகுமார், கலைஞரின் வீரபிரதாபங்களில் கட்சி வித்தியாசமின்றி கடலூர் மாவட்டத்தில் சொல்லும் ஒரு விசயம் கலைஞருக்கு அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கிய போது அதை கடுமையாக எதிர்த்து போராடிய மாணவர்களில் அடித்துக் கொள்ளப்பட்டவர் உதயகுமார், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த உதயகுமாரின் பெற்றோர்களிடம் உதயகுமார் தன் மகன் அல்ல என்று எழுதி வாங்கப்பட்டது தான் இதில் உச்சகட்ட கொடுமை.//

இது பற்றி யாருமே கதைக்காதது தான் கொடுமை. இணையத்தில் கூட எவனும் உதயனின் மரணம் பற்றி எழுதத் துணியவில்லை. ஒரிரு வருடத்திற்கு முன் நான் அதைப்பற்றி எழுத நினைத்தபோது ஒரு அனானி நண்பர் தடுத்துவிட்டார். பார்ப்பன அடிவருடிகளுக்கு நாமளே எடுத்துக் கொடுப்பது போல் ஆகிவிடுமென்று.

அரசியல் சாண"நக்கியன்" கருனாநிதிக்கு பிணவரசியல் பற்றி பேச அருகதையே இல்லை. நீங்கள் குறிப்பிட்ட அரசியல் கொலைகளையெல்லாம் விட "அய்யய்யோ கொல்றாங்க" நவீன நாடகத்தொடரைத் தொடர்ந்து நடைபெற்ற மெரினா பொதுக்கூட்டத்தில் அயோத்திகுப்பம் வீரமணியால் போடப்பட்ட ஒரு திமுக தொண்டனின் இறந்த் உடலை மேடையில் வைத்துக்கொண்டே பேசிய இந்த நயவஞ்சகக் கிழவனா பிணவரசியல் பற்றி பேசுவது. அடத்தூ!

உதயனின் படுகொலைக்குப்பின்னும் அரசியல் நாடகக்குழுவான மார்க்ஸிய கம்முனாட்டிகளுடன் தேர்தலில் கூட்டணி...மதுரை லீலாவதி கொலைக்குப்பின்னும்! பிச்சையெடுத்தானாம் பெருமாளு, பிடுங்கித்தின்னானாம் அனுமாரு!
என்ன கொடுமைய கருனாநிதி! நீயெல்லாம் பிணவரசியல் செய்வதும் அதை நானெல்லாம் விமரிசிப்பதும்...

உனக்கு ஏனடாப்பா இன்னும் நாள் வரவில்லை!

said...

:|
Anputan
Singai Nathan

said...

//Pot"tea" kadai said...

இதெல்லாம் டுமாங்கோலி ஸ்டண்டு. அந்தாண்ட பேனர்ல இருக்க பேமானிய
ரிசைன் பண்ண சொல்லி உண்ணாவிரதம் இருக்க சொல்லுங்க வரவணையான் சார்.

திமுக, பாமக, பொய்க்கோ குரூப்போட் ஸ்டண்ட் உங்களுக்குத் தெரியாதா?

http://kuttapusky.blogspot.com/2009/01/blog-post_6500.html//

நீ விசிலடிச்சான் குஞ்சுன்னு சொல்லலாம் ஆனா நீ ஜாதி வெறியன்னு சொன்னா கோவம் வருதோ. உன்னை மாதிரி ஒரு ஜாதிக்கு மட்டும் பயன்படுற ஜாதி சங்க கக்கூஸ் காண்டிராக்ட் எடுக்கலடா நாங்க மொத்த சனத்துக்கும் பயன்படுற கக்கூஸ் காண்டிராக்ட தான்டா எடுத்துருக்கும் அயோக்கிய பயலே. உன்ன மாதிரி அரைவேக்காட்டு நாய்க்கு இதெல்லாம் புரியுமாடா

முதலில் அன்புமணியை பதவி விலகச் சொல்லிவிட்டு ஒரு பதிவை எழுதிவிட்டு அதில் இதே மாதிரி வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிட்டு அப்புறம் கலைஞரை பற்றி எழுதுடா ஜாதி வெறி பிடித்தவனே...த்தூ உனக்கெல்லாம் வீரம் வேற கேடா

said...

இங்க இருக்குடா உனக்கு ஆப்பு http://suriyanudhayam.blogspot.com/2009/01/blog-post_30.html

said...

100% true.

said...

மான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க!
http://emugu.blogspot.com/2009/01/blog-post.html

said...

//ஒரிரு வருடத்திற்கு முன் நான் அதைப்பற்றி எழுத நினைத்தபோது ஒரு அனானி நண்பர் தடுத்துவிட்டார். பார்ப்பன அடிவருடிகளுக்கு நாமளே எடுத்துக் கொடுப்பது போல் ஆகிவிடுமென்று.
//
இப்படியே தான் நம் அரசியல் வீணாப்போனது, பார்ப்பானுக்கு டொக்காயிடும் டொக்காயிடும்னு சொல்லி சொல்லியே எந்த சுயபரிசோதனைகளும் செய்யப்படாமல் இப்போ குத்து வாங்கி கிடக்கிறோம்....


//நீங்கள் குறிப்பிட்ட அரசியல் கொலைகளையெல்லாம் விட "அய்யய்யோ கொல்றாங்க" நவீன நாடகத்தொடரைத் தொடர்ந்து நடைபெற்ற மெரினா பொதுக்கூட்டத்தில் அயோத்திகுப்பம் வீரமணியால் போடப்பட்ட ஒரு திமுக தொண்டனின் இறந்த் உடலை மேடையில் வைத்துக்கொண்டே பேசிய இந்த நயவஞ்சகக் கிழவனா பிணவரசியல் பற்றி பேசுவது. அடத்தூ!
//
இதை இணைக்க மறந்துட்டேன்...

said...

தமிழை இது வரை பாதுகாத்த மருத்துவர் இப்போ ஈழத்தமிழரை பாதுகாக்க கெள்ம்பிட்டார்.... இரண்டு பேரும் போடுற நாடகம் அய்யா சாமி தாங்கலை....

said...

முழுக்க முழுக்க ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய கருத்து. இந்தக் கருத்தை எதிர்ப்பவர்கள் கூட "நீ ஒழுங்கா" என்ற கேள்வியைத்தான் எழுப்ப முடிகின்றதே தவிர... பதிவின் கருத்திலிருக்கும் உண்மைக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அதற்கான விடை அவர்கள் மனதிற்கே நன்றாகத் தெரியும். கருணாநிதியை எதிர்ப்பவர்கள் ஜெயலலிதா ஆதரவாளராக இருக்க வேண்டியதில்லை. இருவரையும் தவறு என்று சொல்ல வேண்டியிருந்தால் சொல்லித்தான் ஆக வேண்டும். அதை நடுநிலமை, ஓர நிலைமை என்று எப்படிச் சொல்லிக் கொண்டாலும் கவலையில்லை.

said...

s you are 100% correct.. we agree

just a question.. what vaiko , ramadass, thiruma doing ? dont you think they use this to do politics??

let me ask you something.. can u write a post about a person who is still in center govt.. has MP and Minister there in the cabinet..
he is showing himself as supporter of tamils but doesnt have time to ask his ministers to quit from center cabinet..??

atleast karunanidhi shown that he cannot go against congress and so had to compromise on tamil eelam..

but this guy is trying to be a cat on the wall.. take both the benefits.. that is more worse ..

please write a post abt that leader too!

said...

i fully agrees with you kulali.
but let us wait till 3rd Feb. DMK has its executive body meeting. I think this is the last chance for karunaithi to save himself from being branded as tamil thuroki in the history.

said...

He is blaming the whole present day politicians. since he left few unimportant politicians so they are now doing politics. But request the students to do revolution and find out a new leader from it. All the present day politicians are well riped fruits in politics soon all this well riped fruits will get spoiled. because this old style politics will not apply to thier grand childrens. we expect the change. I believe it will soon happen.

said...

//please write a post abt that leader too!
//
தொடர்ந்து என் பதிவுகளில் எழுதிக்கொண்டே தான் இருக்கிறேன்.... மேலும் என் பதிவையும் விட அதிக அளவில் ரீச் ஆகக்கூடிய இடங்களுக்கும் எழுதி அனுப்பிய்யுள்ளேன் அவர்கள் வெளியிட்டவுடன் சொல்கிறேன்...

//முதலில் அன்புமணியை பதவி விலகச் சொல்லிவிட்டு ஒரு பதிவை எழுதிவிட்டு அதில் இதே மாதிரி வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிட்டு அப்புறம் கலைஞரை பற்றி எழுதுடா ஜாதி வெறி பிடித்தவனே...த்தூ உனக்கெல்லாம் வீரம் வேற கேடா
//
டேய் பாடு... என்னோட சமீப பதிவுகள் அத்தனையிலும் பாமகவின் இரட்டை வேடத்தை சொல்லிக்கொண்டே தான் டா இருக்கேன், எவனும் பாமகவின் டகால்ட்டி வேலைக்கு சப்பை கட்டு கட்டலை... முடிஞ்சா இங்கே போய் பின்னூட்டத்துல என்ன எழுதியிருக்குன்னு போய் பாரு...

http://pamakathondan.blogspot.com/2009/01/blog-post_29.html

வந்துட்டான்....

said...

//டேய் பாடு... என்னோட சமீப பதிவுகள் அத்தனையிலும் பாமகவின் இரட்டை வேடத்தை சொல்லிக்கொண்டே தான் டா இருக்கேன், //

:) அப்படி போடுங்க அரிவாளை. கிடைச்சுதரா வாய்ப்பு ஆளுங்கள பார்த்தீங்களா

said...

//i fully agrees with you kulali.
but let us wait till 3rd Feb. DMK has its executive body meeting. I think this is the last chance for karunaithi to save himself from being branded as tamil thuroki in the history.//

இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க! உங்களை என்ன சொல்லறதுன்னே தெரியல... இன்னைக்கு வந்திருக்கு தி.மு.க செயற்குழு கூட்ட முடிவுகள் இங்கே உங்களை திருத்தவே முடியாது சாமீ!! அடுத்த என்ன கொஞ்சம் வெயிட் பண்ணூங்க பொதுக்குழு மீட்டிங் விரைவில் போடுவாங்க அதில் நல்ல முடிவு வரும்ன்னு சொல்லுவீங்க போல...

said...

Just to bring to your quick notice

Diaspora Tamil dies in self-immolation urging Obama to stop Colombo's war
http://tamilnet.com/art.html?catid=13&artid=28344

said...

இதே கலைஞர் எதிர்கட்சியக இருந்திருந்தாலோ கலைஞர் புறங்கையை நக்கியவர் என முத்துக்குமாரால் விமர்சிக்கப்படாமலிருந்திருந்தாலோ முத்துகுமார் பிணத்தை வைத்து என்ன அரசியல் செய்திருப்பார் என நிச்சயம் யோசிக்க முடிகிறது.
*************************************
பிணத்தின் முன் நின்று கலைஞர் மூக்கச் சிந்தி விக்கித்த கரகரத்த தொண்டையால் எழுந்து வாடா தம்பி முத்தக் குமாரா என ஓநாய் அழுகை அழுதிருப்பார்.

தமிழகத்தின் தலைவிதிய கலைஞர் குடும்பத்தின் கால்களில் இல்லையினித் தமிழரின் கையில் என்பதை முத்துக்குமார் நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டான். ஆயினும் முத்துக்குமாரன் போன்ற துடிப்பான இளைஞர்கள் தீக்குளித்துத் தம்மை அழித்து இந்தத்தறுதலை அரசியல்வாதிகளைத் தோலுரிக்க வேண்டாம். உங்கள் பலத்தால் இந்தத் துறுதலைகளை வெல்லுங்கள். போதும் தீக்குளிப்பு.

இது எனது கவிதையொன்று...

தற்கொடைகள் வீண் தற்கொலைகளாக வேண்டாமே...!
10:53 | Author: tamil24.blogspot.com
முத்துக்குரமன் மூட்டிய தீ
எங்கும் மூசியெரிகிறது.
தமிழன் செத்துக் கிடப்பதை
உலகோ சத்தமின்றிச் சகிக்கிறது.

பலம் கொண்ட மட்டும்
பகைவன் பலியெடுக்கும்
கொலையிருந்து மீளுதற்காய்
புலமெங்கும் தமிழன்
போர் வீச்சாய் எழுகிறான்.
ஈழம் பெறும் நாளை
கையிலெண்ணிக் கடுங்குளிரின்
விறைப்பிலும் வீதிகளில் இறங்கி
நீதி கேட்கும் நிலையிலுள்ளான்.

பலம் வெல்லும் என்ற நிசம்
புரிந்தும் நம்பிக்கையுடன் தமிழன்
நெடுந்தவம் புரிகின்றான் - இக்
கடுந்தவத்தின் பரிசெமக்கு
காலம் தருமென்ற நினைப்போடு.

தினம் வரும் செய்திகளால் - உயிர்
மனம்வாடித் துவளுகின்ற
துயர் உயிரைத் தின்கிறது - எனினும்
தொடரான ஈர்ப்புக்கள்
குறயாமல்......

மனம் தாளாச்சுமை தாங்காத்
தமிழரின் மனங்களில் மூண்ட தீ
மரணங்களை தமிழகத்தில் மலேசியாவில்
மாறி மாறித் தருகிறது.
துயர் இன்னும் மனசேறி
இத் தொடர் மரணப் போராட்டம்
பற்றியே அழுகிறது.

சாவதே தமிழன் விதியாக
எந்தச் சாமியெழுதி வைத்தானோ
சாபமோ இல்லை - எம்
சந்ததியின் கோபமோ ?
எதுவெனப் புரியாமல்
இதயம் துயர் முட்டி
வலியில் துடிக்கிறது.

'போதும் தீக்குளிப்பு'
பெறற்கரிய உயிரழிப்புப் போதுமினி.
போராடுவோம் புலத்திருந்து
நிலம் நோக்கிய வலுவாக - எம்
வலுவுணர்த்தும் போராட்டம்
வலுக்கட்டும்.
போதும் தீக்குளிப்பு.

தற்கொடைகள் வீண்
தற்கொலைகளாக வேண்டாமே...!
தமிழ் ஈழத் துயர் காக்க எரிந்து கருகக்
காத்திருக்கும் எங்களின் உறவுகளே...!
எரிதல் எமக்கு முடிவு அல்ல.

வாழ்தலுக்காய் போராடுவோம்
வாழும் வழியடைத்துச்
சாவில் நிற்கும் எம்முறவுகட்காய்
நீங்கள் வாழும் மூலைகளிலிருந்தெல்லாம்
போராடலாம் வாருங்கள்
தோழரே தோழியரே...!
போராடலாம் வாருங்கள்.
போதும் தீக்குளிப்பு.

http://tamil24.blogspot.com/

சாந்தி