சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா மறைவு


பாவாணர் என்னும் போது கூடவே நினைவுக்கு வரும் மற்றொருவரின் பெயர் திரு.கோவலங்கண்ணன். பாவாணரின் நூல்களை ஆதரித்து பாதுகாத்தது மட்டுமின்றி அந்நூல்களை இணையத்திலும் தன் சொந்த கைப்பொருளை செலவு செய்து வெளியிட்டுள்ளார். நேற்று இரவு(14.05.2012) அன்று சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்.

அய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. நாளை (16.05.2012) நண்பகல் வரை கீழ் கண்ட முகவரியில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.


No 10, UBI Road 4,
Teochew Funeral parlour,
singapore 408609

முனைவர் மு.இளங்கோவனின் பதிவு

பாவாணர் இணையதளம்

ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், தம்பி அண்ணன் ஷாநவாஸ் அழைக்கிறார்


"ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்"

சாப்பாட்டு இடம் : ஜூராங் நூலகம், சிங்கப்பூர்

சாப்பாட்டு நாள் : ஞாயிறு, பிப்ரவரி 12, 2012



தமிழ் படைப்பாளிகள் என்னும் திமுக ஃபேஸ்புக் அணி

தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையும் என் எதிர்வினையும்.

இனி அறிக்கைக்கான என் எதிர்வினை சிவப்பு வண்ணத்தில்...

ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது எல்லாம் முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவது வழக்கமாகிவிட்டது. காப்பீட்டுத் திட்டத்தை மாற்றுவது, இலவசத் திட்டங்களை நிறுத்தி வைப்பது அல்லது பெயரை மாற்றுவது, தலைமைச்செயலகத்தை அரசு மருத்துவமனையாக அறிவிப்பது என்று தொடரும் திட்டங்களில்

SO WHAT?
ஊழலுக்காக அதுவும் இதற்க்கு முன் ஒரு பாலிசி கூட இல்லாத ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்க்கு பல்லாயிரம் கோடி இன்சூரன்ஸ் பாலிசியாக மக்கள் வரிப்பணத்தை கொடுத்து கொள்ளையடிக்க தரப்பட்ட காப்பீட்டு ஊழல் திட்டத்தை மாற்றுவதும், விதான் செளதா போன்று ஐகானிக் கட்டிடமாக இருக்கபோகின்ற தலைமை செயலகத்தை ஊழலே செய்தாலும் குறைந்த தமிழ், திராவிட கட்டட கலையையாவது கொண்டிருக்குமேயென்று பார்த்தால் தண்ணி தொட்டி போன்ற இந்த தலைமைசெயலகத்தையும் மாற்றும் செயலுக்காகவெல்லாம் பொங்கி போராட தேவை இல்லை.

தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும். என்று அறிக்கையின் அடியில் இருக்கின்றதே, இவர்களெல்லாம் யார்? யார்? இந்த அறிக்கையில் சிலபகுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாத படைப்பாளிகளுக்கும் கல்வியாளர்களுக்கும் நீங்கள் சொல்லும் இந்த தமிழ்படைப்பாளிகள் லிஸ்ட்டில் இடமிருக்கின்றதா?

ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் இது வரை வந்ததெல்லாம் வெறும் டிரெயிலர் தான் இன்னும் மெயின் பிச்சரே ஆரம்பிக்கவில்லை இவ்வளவு விரைவாக தமிழ்மான போராட்டத்தை ஆரம்பித்துவிட்டீர்களே இன்னும் மெயின் பிக்சரின் போது போராட சக்தி வேண்டாமா?


இப்போது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இதற்கு எதிராக எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையாணையும் ஜெயலலிதாவின் திட்டத்தை ஒத்திப்போட்டிருக்கிறது.

நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்கிற அறிவிப்பு, ஏதோ எல்லாவற்றையும் மாற்றியமைக்கிற எதேச்சதிகாரப் போக்கு என்றோ பழைய ஆட்சியின் சாதனைகளாகச் சொல்லப்படுபவற்றின் மீதான சேறு வாரியிறைப்பு என்றோ இருபெரும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான அதிகாரப்போர் என்றோ மட்டும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. ஏனெனில் ‘தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்ற முந்தைய அரசின் அறிவிப்பை மாற்றி ‘சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று அறிவித்தது, சமச்சீர்க்கல்வியை நிறுத்திவைத்தது, தலைமைச்செயலகத்தில் இருந்த நூலகத்தை முடக்கிப்போட்டது, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்பவை எல்லாம் அறிவுத்தளத்தின் மீது நடத்தப்படும் வன்முறை, கலாச்சாரத் தாக்குதல், சிறிய அளவிலான மாற்று அரசியல் முன்னெடுப்புகளையும் சிதைப்பது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியெல்லாம் எல்லோரும் அறிவுத்தளத்தின் மீதான தாக்குதல் மண்ணாங்கட்டி என்று புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, இதெல்லாம் மிகைப்படுத்தும் செயல.


தமிழ்புத்தாண்டு தொடர்பான விசயத்தில் தமிழ் தேசிய மொழியாக இருக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கூட இந்த தமிழ்புத்தாண்டு மாற்றத்தை முறைப்படி கூட அறிவிக்காத வெற்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டு தமிழ் மக்களிடத்தில் தம்மிடமிருக்கும் ஊடகம் வழியாகவாவது அதற்க்கான மனமாற்றத்தை செய்யாமல் சித்திரை திருநாளென்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி காமெடி செய்துகொண்டே புத்தாண்டு அறிவிப்பதெல்லாம் வெயிட் வெயிட் எனக்கு தமிழ்துரோகி பட்டம் எதுவும் கொடுக்கும் முன் கருணாநிதி தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவிப்பதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் தை ஒன்றை தான் தமிழ்புத்தாண்டாக கருதி புத்தாண்டு வாழ்த்துகள் சொல்கிறேன்.


கருணாநிதியின் வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற ரீதியிலான அரசு ஆணைகள், "பப்புலிசிட்டி பரமசிவமாக" செய்த செயல்களுக்கெல்லாம் தமிழ் கவசத்தை போர்த்திக்கொண்டு போராட கிளம்ப வேண்டாம்

இன்னொருபுறம் தலித் மக்களின் தலைவர் இமானுவேல்சேகரனின் நினைவுநாளில் பரமக்குடியில் ஏழு தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட போலீஸ் வன்முறையும் துப்பாக்கிச்சூடும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சாதியச்சார்பையும் மனித உரிமைகளைக் கிஞ்சிற்றும் மதிக்காத மனப்போக்கையுமே காட்டுகிறது. தங்கள் முன்னோடிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய தலித் மக்களின் மீது தாக்குதல் நடத்தியது, ‘கலவரம் நடக்கும்’ என்று காரணம் சொல்லி தலித் தலைவர் ஜான்பாண்டியனைப் பரமக்குடிக்கே செல்லவிடாமல் தடுத்து கைது செய்தது ஆகியவை ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. இன்னொருபுறம் மற்ற ஆதிக்கசாதித் தலைவர்களின் விழாக்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிற அரசு, இமானுவேல் சேகரனின் நினைவுநாளை இனி வரும் காலங்களில் மரணத்தின் கரும்நாளாக அடையாளப்படுத்துவது, கலவர பீதியூட்டி தலித்மக்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை தொடரத்தான் போகின்றன.
தலித்கள் மீதான பரமக்குடி தாக்குதல்கள் தொடர்பான கண்டனங்களையும் கோரிக்கைகளையும் நான் மதிக்கிறேன், ஆதரிக்கிறேன்.


எல்லா ஆட்சிகாலத்திலும் தலித்துகளின் மீதான அரச ஒடுக்குமுறை நடந்துவருகின்றது இதற்க்கு கருணாநிதி ஆட்சி என்றோ ஜெயலலிதா ஆட்சியென்றோ எந்த வேறுபாடுமில்லை, இது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே நடைபெறுவதாக சித்தரிப்பது கருணாநிதியை காப்பாற்றி அவருக்கு கூஜா தூக்கும் செயலே.


உண்மையில் இப்பிரச்சினையில் இந்த படைப்பாளிகளுக்கு அக்கறை இருக்குமெனில் பரமக்குடி துப்பாக்கி சூட்டை மட்டுமே முன்னிருத்தி ஒரு போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமேயொழிய இதில் கொண்டுவந்து ஊழல் இன்சூரன்ஸ் திட்ட எதிர்ப்பு பப்புலிசிட்டி பரமசிவமான கருணாநிதியின் ஊழல் மற்றும் பப்புலிசிட்டி திட்டங்களை நீக்குவதை எதிர்ப்பதையும் இதில் இணைத்து ஒரு விதமான இந்த திமுக ஆதரவு ஜால்ரா குழுவின் போராட்டத்தை எதிர்ப்பவர்களை பலவீனப்படுத்தும் முகமாக இணைக்கப்பட்ட அஜெண்டாவோ என்றே சந்தேகப்பட வைக்கிறது.


நேரடியாகப் போலீஸ் தலித் மக்களின் மீது நடத்திய தாக்குதலைத் தமிழக முதல்வரே ‘இது ஒரு இன மோதல்’ என்று வர்ணித்தது சமூகமாற்றத்தை விரும்பும் எழுத்தாளர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் நடந்துமுடிந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணக் கமிஷன் அமைப்பதற்கே மறுத்த ஜெயலலிதா, பிறகு எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்குப் பிறகு ஒப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக்கமிஷனை அமைத்துள்ளது. இதுவரை தமிழக அரசுகளால் நியமிக்கப்பட்ட எல்லா ஓய்வுபெற்ற நீதிபதிகளின் விசாரணைக்கமிஷன்களுமே அரசுக்குச் சாதகமான அறிக்கைகளையே அளித்துள்ளன. அதிலும் தொடக்கத்திலேயே போலீஸைக் காப்பாற்றும் மனோபாவத்தோடும் நோக்கத்தோடும் ‘இன மோதல்’ என்று வர்ணித்த ஒரு முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கமிஷன் நீதி வழங்கும் என்பதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைப்போல எங்களுக்கும் நம்பிக்கையில்லை. எனவே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவினை எதிர்த்தும் பரமக்குடியில் தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரசு வன்முறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தும் நாங்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

* வாக்களித்தபடி குழந்தைகளுக்கான சர்வதேசத் தரத்திலான மருத்துவமனையைத் தமிழக அரசு வேறு இடத்தில் கட்டித்தர வேண்டும்.

* அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.

* சமச்சீர்க்கல்வி, தமிழ்ப்புத்தாண்டு, நூலகம் போன்ற உணர்வு ரீதியிலான பண்பாட்டு விஷயங்களில் எதேச்சதிகாரப் போக்கை மேற்கொள்வதைத் தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

* தலித் மக்களின் முன்னோடி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

* மனித உரிமைகளையும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளையும் மீறி பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

* கண்துடைப்பு சம்பத் கமிஷன் கலைக்கப்பட வேண்டும்.

* பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைச் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

* துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும்.

* துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

- தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும்.
ஏனிந்த அறிக்கையில் 13,000 மக்கள் நலப்பணியாளர்களை நீக்கியதை விட்டு விட்டார்கள் இந்த தமிழ்படைப்பாளிகளும் கல்வியாளர்களும்? எந்தவிதமான தகுதியும் இன்றி(வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி என எதுவுமே இல்லாமல்) வெறும் கட்சிக்காரனுக்காகவும் கட்சிகாரன் சிபாரிசுக்காகவுமே உருவாக்கப்பட்டு போடப்பட்டிருந்த திமுக நலப்பணியாளர்களை நீக்கியதை விட்டுவிட்டார்களே... கட்சிக்காக அறிக்கை விடும் போது அவர்களை மட்டும் கழற்றிவிடுவது பாவமில்லையா?


கிறித்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு, பிறகு கிறித்துவர்களே வந்து எங்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டாமென்று அறிவித்த பின் திரும்ப பெற்றுக்கொண்டது என வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற ரீதியில் கருணாநிதியின் செயல்பாடுகளின் முக்கியமானது "சோ கால்ட்" சமச்சீர் கல்வி,

சென்ற ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட புத்தகங்கள் இந்த ஆண்டு வழக்கம் போல 2,7ம் வகுப்புகளுக்கு மாற்றி1,2,6,7 என 4 வகுப்பு மாணவர்கள் படிக்க இந்த பாட திட்ட மாற்றம் ஒரு தொடர்ச்சியாக வரும், ஆனால் வரலாறு முக்கியம் என்கிற ரீதியில் ஆட்சி பறிபோகும் நேரத்தில் சாகும் போது சங்கரா சங்கரா என்று எல்லா வகுப்பு பாடங்களையும் மாற்றியதின் விளைவு புதிய பாடத்திட்டத்தில் தொடர்ச்சியற்று இருக்கிறது.


இது மட்டுமின்றி உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்றுவிப்பி திறன், ஆசிரியர் மாணாக்கர்கள் விகிதம், பயிற்றுவிப்பு முறைகள் அதன் பின் பொது பாடத்திட்டம் என பல்வேறு படிநிலை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் வெறும் "பொதுப்பாடத்திட்டத்தை" சமச்சீர் கல்வி என்று சொல்வதே ஒரு ஏமாற்று வேலை, பொது பாடத்திட்டத்தை சமச்சீர் கல்வி என சொல்வது உண்மையான சமச்சீர் கல்வி எது என்பதை அறியவிடாமல் இருந்தால் உண்மையான சமச்சீர் கல்வியை மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்துவிடும்.


இந்த படைப்பாளிகளும் கல்வியாளர்களும் உண்மையிலேயே தமிழ் உணர்வோடும் மக்களுக்காகவும் போராட வேண்டுமெனில் போராட்டத்தை முதலில் போலி தமிழ், போலி முற்போக்கு பேசும் கருணாநிதியையும் அவரது கட்சி திமுகவையும் எதிர்ப்பதிலிருந்து ஆரம்பிக்கட்டும், இவ்வளவு நாளும் டீக்குடிக்க போயிருந்தார்களோ இந்த படைப்பாளிகளும் கல்வியாளர்களும். இல்லையில்லை ஜெயலலிதா ஆட்சியை எதிர்க்க தானென்றால் தமிழ் படைப்பாளர்களும், கல்வியாளார்களும் என்ற பெயரில் அறிக்கை தராமல் திமுக இணைய அணி, திமுக ஃபேஸ்புக் அணி என ஏதேனும் ஒரு பெயரில் அறிக்கையை அனுப்புங்கள் சிரித்து விட்டு சென்று கொண்டே இருப்போம்.

சோதனை இரண்டு

தமிழகத்தின் சோதனை இரண்டு

சோதனை ஒன்று


தமிழகத்தின் சோதனை ஒன்று

திமுகவுக்கு வாக்களிக்க போகும் மதிமுகவினரே சிந்திப்பீர்

திமுகவுக்கு வாக்களிக்க போகும் மதிமுகவினரே சிந்திப்பீர்

இத்தனை நாள் நீங்கள் பேசிவந்த கருணாநிதியின் தமிழின துரோகமும் ஈழத்துரோகமும் கருணாநிதியின் குடும்ப அரசியலும் வைகோ மீதான கருணாநிதியின் வஞ்சமும் உங்களின் ஈகோவின்முன் ஒன்றுமில்லாமல் போய்விட்டதா?

கருணாநிதியின் தமிழின துரோகத்தைவிட உங்கள் ஈகோ பெரிதா?
கருணாநிதியின் ஈழத்துரோகத்தைவிட 21 சீட்டு உங்களுக்கு பெரிதா?
வைகோவுக்கு வந்து சேரவேண்டிய திமுக தலைமை பதவி கருணாநிதியின் குடும்ப அரசியலால் பழிவாங்கப்பட்டதை எதிர்ப்பதைவிட உங்களுடைய ஈகோ பெரிதா?

உங்களின் இனப்பாசம் உண்மையெனில் உங்களின் ஈழப்பாசம் உண்மையெனில் உதயசூரியனுக்கு வாக்களிக்காதீர்கள்... இல்லை எங்களுக்கு எங்களின் 21 சீட்டு ஈகோதான் பெருசு என்றால் உங்களுக்கும் கருணாநிதி ஈழப்பிரச்சினையின் போது நடந்துகொண்ட முறைக்கும் வேறுபாடு எதுவுமில்லை

திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள்

திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள் இங்கே விளக்கங்கள் கீழே


1. உண்மையான தமிழின ஆதரவு தலையெடுக்க விடாமல் இருக்கும் திமுகவின் போலி தமிழின ஆதரவு

2. தமிழின துரோகம்

3. ஊடக ஆதிக்கம்

4.சுமங்கலி கேபிள்விஷன் மற்றும் மீடியா மாஃபியா

5. டாஸ்மாக் வியாபரத்தின் உச்சம், போதையில் தள்ளாடும் தமிழகம்

6. திரைத்துறையை கபளீகரம் செய்த கருணாநிதி குடும்பம்.

7.நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப வருமானத்தை பெறுக்குதல்

8.ஸ்பெக்ட்ரம் ஊழல்

9.சங்கராச்சாரியின் விடுதலையை நோக்கி நடத்தப்படும் வழக்கு, தாகி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு

10.பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிக்காரர்களின் சொத்துகள் மற்றும் குடும்ப அரசியல்.

இது மட்டுமின்றி உமாசங்கர், சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளின் மீதான அப்பட்டமான தாக்குதல்கள், அதிகார துஷ்பிரயோகம், வெளிப்படையாக பேசியதற்காக அவமானப்படுத்தப்பட்ட அஜீத், ஈழ விழிப்புணர்வு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்த வழக்கறிஞர்கள் மீது போலிசை ஏவி தாக்குதல் நடத்தி திசை திருப்பியது என வேதனைகள் ஏராளம் ஏராளம்...

கடந்த ஐந்தாண்டுகளில் மாபெரும் ஆக்கிரமிப்பை நடத்திய கருணாநிதி குடும்பத்திற்க்கு ஒரு அதிகார இடைவெளி கொடுக்கவில்லையென்றால் தமிழகம் ஒரு மாபெரும் மோசமான ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்...


1. உண்மையான தமிழின ஆதரவு தலையெடுக்க விடாமல் இருக்கும் திமுகவின் போலி தமிழின ஆதரவு

போலி தமிழின ஆதரவு போலி முற்போக்கு போலி சாதியொழிப்பு போலி பார்ப்பன எதிர்ப்பு பேசும் திமுக அழிந்தால் மட்டுமே உண்மையான தமிழின ஆதரவு முற்போக்கு

சாதியெதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு அரசியல் சக்திகள் வளர இயலும் இதற்க்கு மிகப்பெரும் தடைகல்லாக இருப்பது போலித்தமிழின ஆதரவு பேசும் திமுக.

தமிழின ஆதரவு என்று சொல்லிக்கொண்டே ஈழ அழிவுக்கெதிராக தமிழார்வலர்கள் நடத்திய போராட்டங்களையெல்லாம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது, அரசில் இருந்து கொண்டே தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் எதுவும் செய்யாதது, சாதிக்கெதிரானவர்கள் என சொல்லிக்கொண்டே ஆதிக்க சாதி சார்பு அரசியல் செய்வது என அனைத்தும் போலித்தனமே... இந்த போலி கட்சி அழிந்தால் மட்டுமே உண்மையான தமிழின ஆதரவு முற்போக்கு கட்சிகள் தலையெடுக்க இயலும்.

2. தமிழின துரோகம்

2008ல் தமிழீழத்தின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பு போர் உச்சத்தில் இருந்து மாபெரும் மனித அழிவு பேரவலத்திற்க்கு பின்புலமாக காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது, அந்த காங்கிரஸ் கூட்டணி அரசினை தாங்கி பிடித்துக்கொண்டிருந்தது திமுக.

திமுக என்பது தமிழின ஆதரவு கட்சி என்பதாலேயே வேறு எக்கட்சிக்கும் கிடைக்காத பல தமிழ் ஆர்வலர்கள் மொழி இனப்பற்றாளார்கள் முற்போக்காளார்களின் பலத்த ஆதரவு கிடைத்தது, இதனால் தமிழினத்தினை காக்க வேண்டிய கடமை வேறு யாரையும் விட இக்கட்சிக்கு உண்டு. மேலும் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது ஆனால் துரோகத்தின் உறைவிடமாக திமுக ஈழப்படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததால் இதற்கான பொறுப்பை திமுக ஏற்க்க வேண்டும். தமிழக மக்களே நேற்று ஈழத்தமிழன் பிணங்களை எண்ண முடியாமல் எண்ணியபோது இங்கே திமுக குடும்பம் ஸ்பெக்ட்ரம் பணங்களை எண்ணமுடியாமல் எண்ணிக்கொண்டிருந்தது... நேற்று ஈழத்தமிழனுக்கு நேர்ந்த போது கடமை தவறி வேடிக்கை பார்த்த திமுக நாளை தமிழக தமிழனுக்கு நேரும்போதும் வேடிக்கை தான் பார்க்கும்.


3. ஊடக ஆதிக்கம்

எந்த ஒரு மோசமான அரசாங்கம் அமைந்தாலும் அந்த அரசின் ஊழல்களையும் அராஜகங்களையும் வெளிப்படுத்துபவை ஊடகங்களே, 1991-96ல் நடைபெற்ற அதிமுக அரசின் மிக மோசமான ஊழல் மலிந்த அரசாட்சியை ஊருக்கு தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டி அதை எதிர்த்து போராடி அடிவாங்கியது கருணாநிதியோ திமுகவோ அல்ல, அதை செய்தது தமிழ் ஊடகங்கள் குறிப்பாக நக்கீரனும் சட்டப்போராட்டம் நடத்தியது கோமாளி என வர்ணிக்கப்படும் சுப்பிரமணியசாமியும்தான்(சுப்பிரமணிய சாமியின் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விசயத்தில் பாராட்டவே செய்கிறோம்). ஆனால் இன்று தமிழக மக்களிடம் எந்த செய்தி சேரவேண்டும் எது சேரக்கூடாது என்பதை முடிவு செய்வது கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள்.

ஈழப்படுகொலை உச்சத்தில் இருந்த போதும் அதை மக்களிடம் சென்று சேரவிடாமல் தடுத்ததும் இந்திய துணைக்கண்டம் முழுதும் ஸ்பெக்ட்ரம் ஊழல், அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் கனிமொழி நடத்திய பேரங்கள் வெளியானதும் அது தொடர்பான செய்திகளை தமிழக மக்களிடம் சென்று சேராமல் செய்யும் அளவிற்க்கு ஊடகங்களை கையில் வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தின் ஊடக ஆதிக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

30 சேனல்கள் 60 எஃப் எம் ரேடியோக்கள் பத்திரிக்கைகள் என இக்குடும்பத்தின் ஆதிக்கம் மிகப்பெரியதும் ஆபத்தானதும்.

4.சுமங்கலி கேபிள்விஷன் மற்றும் மீடியா மாஃபியா
தங்கள் குடும்ப தொலைக்காட்சியை தவிர்த்து வேறு எந்த தொலைக்காட்சியையும் சரியாக தெரியவைக்காமல் அழிக்கும் வேலையை செய்வது மாறன் குடும்பத்தின் சுமங்கலி கேபிள் விஷன் மூலமே, தமிழகத்தின் 90% கேபிள் இணைப்புகளை அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல், ரவுடித்தனத்தின் மூலம் கொண்டு வந்து இதன் மூலம் பிற தொலைக்காட்சிகள் நல்ல நிகழ்ச்சிகளை அளிக்கும்போது அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரச்சினை செய்வது, தொலைக்காட்சிகளுக்கு பிரைம் பேண்ட் தராதது மட்டுமின்றி இத்தொழிலில் ஏற்கனவே இருந்த

ஹாத்வே போன்ற நிறுவனங்களின் கேபிள்களை அறுத்து ரவுடித்தனம் செய்து வேறு மாற்றே இல்லாமல் செய்தது.மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்ததை பயன்படுத்தி பிற தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுத்தது, என்டிடிவி யுடன் ஸ்டார் விஜய் இணைந்து செய்திகளை வெளியிடுவதை பல்வேறு காரணங்களை கூறி தடைசெய்தது, ராஜ்டிவியை கிட்டத்தட்ட அழித்தது என மீடியா மாஃபியாவாக செயல்படுவது.


5. டாஸ்மாக் வியாபரத்தின் உச்சம், போதையில் தள்ளாடும் தமிழகம்

அரசாங்கமே சாராயம் விற்க்கலாமா என கண்டனம் செய்த திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்தது டாஸ்மாக் கடைகளை தெருவுக்கு தெரு திறந்ததும் கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மாக் வியாபரத்தை 500% ஆக உயர்த்தியதும் டாஸ்மாக் கடைகளை நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பதுமாக தமிழகத்தின் பெரும் இளைஞர்களை குடிகாரர்களாக ஆக்கியதும்.

நல்ல கட்டிடங்களும் கழிப்பறை வசதிகளும் இல்லாமல் இயங்கும் பள்ளிக்கூடங்கள் எத்தனையோ இருந்த போதும் மூன்று இலட்ச ரூபாய் செலவில் டாஸ்மாக் பார்களை ஏசி வசதி செய்ய அனுமதித்ததும் பின் கடும் எதிர்ப்புகளுக்கு பின் இத்திட்டத்தை திரும்ப பெற்றதென்றாலும் இந்த அரசின் நோக்கம் எதை நோக்கி இருந்தது என குறிக்கின்றது.


6. திரைத்துறையை கபளீகரம் செய்த கருணாநிதி குடும்பம்.

முப்பதாயிரம் ரூபாய்க்காக முதுகொடிய வேலை செய்யும் உயர்கல்வி படித்த கடுமையாக உழைக்கும் நம் போன்றவர்களிடையே முந்தா நாள் வரை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த தயாநிதி அழகிரி கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து விநியோகிக்கும் அளவுக்கு பணம் வந்ததெப்படி? உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி, கலாநிதி மாறன் போன்றவர்கள் தமிழகத்தின் பெருமளவிலான திரை அரங்குகளை மிரட்டியும் அதிகார துஷ்பிரயோகம் செய்து வளைத்தும் வைத்து பிறர் யாருமே இத்தொழில் செய்யமுடியாத அளவிற்க்கு கபளீகரம் செய்துள்ளனர்.

சிறு வியாபாரிகளே, சிறுமுதலாளிகளே, பஸ் உரிமையாளர்களே, முதலாளிகளேஉங்களுக்கும் இதே நிலைதான் இவ்வாட்சி தொடர்ந்தால். உங்கள் தொழிலை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

7.நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப வருமானத்தை பெறுக்குதல்

ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் 2006ல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், கலைஞர் காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு ஆயிரத்தி ஐநூறூ கோடி ரூபாய்களென ஐந்து ஆண்டுகளில் 7500கோடி ரூபாய் காண்ட்ராக்டை எந்த அனுபவமுமில்லாத ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பித்த உடனேயே பெறுகிறது.

ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையை நவீனமாக்க 50கோடிகள்
தேவையென்று மத்திய அரசின் குறிப்பு தெரிவிக்கிறது 2500 கோடிகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் நவீனமாக்க இயலும் அனைத்து PHC க்களையும் நவீனமாக்க இயலும் ஆனால் மிகச்சிறப்பாக செயல்படும் அரசாங்க எல்.ஐ.சி நிறுவனத்தையும் தாண்டி ஸ்டார் இன்சூரன்ஸ்க்கு இத்தனை கோடி காண்ட்ராக்ட் தரப்பட்டதன் காரணம் ஊழலே...

இலவச வண்ணத்தொலைக்காட்சியினால் பெருகிய கேபிள்வருமானம், குடும்பத்தொலைக்காட்சிக்கு பெருகிய பார்வையாளர்கள் என ஒவ்வொன்றிலும் குடும்பத்தின் வருவாயை பெருக்கும் காரணங்களே முண்ணனியில் உள்ளன.


8.ஸ்பெக்ட்ரம் ஊழல்

தமிழனுக்கு இப்படியொரு தலைகுனிவை தமிழின விரோதிகளாலும் கூட ஏற்படுத்தியதில்லை, உலகின் மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு இலட்சத்தி எழுபத்தியாறாயிரம் கோடி ஊழலின் ஊற்றுக்கண் தமிழன் என்ற தலைகுனிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஊழலில் கிடைத்த பணமே ஈழத்தமிழினத்தின் மரண ஓலத்தையும் மறைத்தது. ஊழலே அனைத்துக்கும் காரணம், ஊழலே கொள்கைகளை மறக்க செய்யும், ஊழலே மக்களை ஏமாற்ற செய்யும், ஊழலே கடமை தவற செய்யும்... ஊழலே அனைத்துக்கும் காரணம்..

9.சங்கராச்சாரியின் விடுதலையை நோக்கி நடத்தப்படும் வழக்கு, தாகி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு

பார்ப்பன சங்கராச்சாரி மீது நடைபெற்று வரும் கொலை வழக்கை மிக பலவீனமாக கையாண்டு இந்த வழக்கிலிருந்து சங்கராச்சாரி விடுதலையாகுமளவிற்க்கு நடத்தப்படுகிறது,ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வாக்குமூலம் அளித்த பலர் பிறழ் சாட்சியாக மாறுமளவிற்க்கு வழக்கை பலவீனமாக கையாள்கிறது இந்த அரசு.''சங்கராச்சாரியார் மீது வீண் பழி சுமத்திக் கைது செய்த ஜெயலலிதாவுக்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது!'' என்று காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்தவர்கள், தீவிரப் பிரசாரத்தில் இறங்கி​யுள்ளனர் என்றால் இந்த அரசு கருணாநிதி அரசு யாருக்கு சாதகமாக நடந்து கொள்கிறது?

தாகி என்கிற முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டினன் தற்கொலையா செய்து கொண்டார்? அவரை கொன்றவர்கள் யார்? ஏன் வழக்கு பலவீனமாக நடத்தப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்? தினகரன் அலுவலகத்தில் மூன்று பேரை உயிருடன் கொளுத்தி எரித்த வழக்கு என்ன ஆனது?

10.பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிக்காரர்களின் சொத்துகள் மற்றும் குடும்ப அரசியல்.

குடும்பத்தின் தலைவர் முதல்வர், ஒரு மகன் துனை முதல்வர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் எம்பி, பேரன் மத்திய அமைச்சர், துணைவியோ ஒரு இணை அரசாங்கத்தையே நடத்துகிறார்... மொத்த குடும்பமுமே கட்சி ஆட்சி என அத்தனையும் கையில் வைத்திருக்கிறதே இதுவே ஒரு வகையில் பார்ப்பனியம் தான் கருணாநிதியினால் பிறந்தவர்கள் என்ற பிறப்பின் அடிப்படை தவிர வேறு என்ன தகுதி இவர்களுக்கு?

பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிகாரர்களின் சொத்தைப்பற்றியெல்லாம் விளக்கவும் வேண்டுமோ?

இப்படம் இன்றே கடைசி - மணற்கேணி 2010 போட்டி இறுதிநாள்

மணற்கேணி 2010

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2010ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2010 நிர்வாகக் குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

மணற்கேணி போட்டியில் கலந்து கொள்ள இறுதிநாட்கள் நெருங்குகின்றது...

சிங்கை வலைப்பதிவர்களும் தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010க்கான கட்டுரை அனுப்ப இறுதி நாளுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன...

உங்கள் கட்டுரைகளை விரைந்து அனுப்பி ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை வெல்லுங்கள்




மேலும் விபரங்களுக்கு http://www.sgtamilbloggers.com/

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com

1. களப்பிரர் காலம்

2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்

3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?

4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை

5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்

6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்

7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை

8. சமச்சீர் கல்வி

9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்

10. புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் science@sgtamilbloggers.com


1.மரபுசாரா ஆற்றல் வளம்

2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை

3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்

5.கணித்தமிழ்


பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் literature@sgtamilbloggers.com

1. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்

2. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

3. நாட்டுப்புற இலக்கியங்கள்

4. சேரர்கள்

5. உரையாசிரியர்கள்

6. தமிழ் விக்கிப்பீடியா

7. மெல்லத்தமிழினி வாழும்

8. எழுத்துச் சீர்திருத்தம்


தமிழிலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்

மன்னர்களின் பெருமைகளையும் போர்களையும், பட்டப்பெயர்களையும் அவர்களின் அந்தப்புர காம களியாட்டங்களையுமே நாம் வரலாறு என்று படித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் குடிமக்களின் வாழ்க்கை தான் உண்மையான வரலாறு என்பார் பெரியார்தாசன் அவர்கள், பெரும்பாலுமான நமது பைந்தமிழ் இலக்கியங்களும் போர்ப்பரணிகளையும் இதிகாசங்களையும் மன்னர் தம் பெருமைகளையும் உயர்குடிக்களின் வாழ்க்கையையும் மதங்களையுமே கொண்டிருக்கும், ஆனால் அதிலும் ஒடுக்கப்பட்டோர்களின் குரல்களாக ஓங்கி ஒலித்த இலக்கியங்களும் உண்டு... குறவஞ்சியும் சித்தர் பாடல்களுமாகவும் பல்வேறு குலசாமிகளின் கதையுமாகவும், நாட்டுப்புற பாடல்களிலும்,நாட்டார் கதைகளாகவும் பல்வேறு இலக்கியங்களில் ஆங்காங்கேயும் ஒடுக்கப்பட்டோர் குரல் ஒலிப்பு நம் தமிழ் இலக்கியங்களிலும் உண்டு... பல இடங்களில் வாழ்க்கைமுறையாகவும், நையாண்டியாகவும் அதிகாரத்துக்கெதிரான குரலாகவும் ஒலிக்கும் இந்த குரல்கள் பற்றிய ஒரு தேடல் இருந்தால் அது தொடர்பான ஆர்வமிருந்தால் உங்கள் கட்டுரைகளை மணற்கேணி 2010 போட்டிக்கு எழுதி அனுப்புங்கள்



"பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்" என்ற தலைப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் அரசியல்/குமுகாயம், தமிழ் அறிவியல் மற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற பிரிவுகளில் சிங்கப்பூர் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக நடத்தும் மணற்கேணி 2010 போட்டியில் கலந்து கொள்ளுங்கள், பிரிவுக்கு ஒருவராக வெற்றிபெறுபவர்கள் மொத்தம் மூன்று பேர் சிங்கப்பூர் வந்து ஒருவாரம் தங்கி இருந்து தமிழ் சார்ந்த நிகழ்வுகளிலும் விழாக்களிலும் கலந்து கொள்வார்கள்...

கட்டுரை அனுப்பவேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31, 2010 மேலும் தகவல்களுக்கு பாருங்கள் http://www.sgtamilbloggers.com/

தோழர் சீமான் விடுதலைக்கு வாழ்த்துகள்

நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் அவர்கள் கருணாநிதியின் அராஜக அடக்குமுறை ஆட்சியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகியிருக்கும் தோழருக்கு வாழ்த்துகள்...

வெகுசில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு அதுவும் தொண்டர்களின் அரவணைப்பிலே சிறையில் இருந்துவிட்டு பாம்புக்கும் பல்லிக்கும் நடுவினிலே பாளையங்கோட்டை சிறையினிலே என்று ஓங்கிய குரலில் பாட்டு போட்டு பம்மாத்து செய்யும் கேவலமான தலைவர்களை பார்த்த இனத்திலே தனிமைச்சிறையில் வதைபட்டு வெளிவந்திருக்கும் தோழர் சீமான் முடிக்கவும் கடக்கவும் வேண்டிய பணி நிறைய உள்ளது... ஏற்கனவே ஏமாற்றிய எம் ஈனத்தலைவர்களை போல அல்லாமல் கொண்ட கொள்கையை கடைபிடித்து நெஞ்சின் உறுதியோடு தலைமையேற்று பணி முடிக்க அன்புத்தம்பியாக வாழ்த்துகிறேன்

"மைனா" திரைப்படம் கதை - வலைப்பதிவிலிருந்து திருடப்பட்டது

வலைப்பதிவுலகிலிருந்து ஒரு கதை திருடப்பட்டு "மைனா" என்ற பெயரில் வெளியாகி அந்த படம் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் புகழையும் கோடிகளையும் அள்ளிக்கொடுத்துள்ளது...



"மைனா" படம் பார்த்த பலரும் சொன்னது காவல்துறையினர் படும் சிரமங்களை புது கோணத்தில் சொல்லியிருப்பதாகவும் படத்தில் தீபாவளி அன்று தப்பித்து ஓடிப்போன கைதியை பிடித்து வர அவர்கள் படும் சிரமத்தையும் சொல்வதாகவுமான அணுகுமுறைய பாராட்டியிருப்பார்கள், காட்சி களன், காட்சி நகர்வுகள், படத்தின் முக்கிய இழையே வலைப்பதிவில் எழுதப்பட்ட பதிவிலிருந்து திருடப்பட்டுள்ளது...

"அரசு ஊழியர்கள் - பகுதி - 3." அப்படிபோடு கற்பகம் அக்கா என்றழைக்கும் கற்பகம் அவர்கள் 2005ம் ஆண்டில் எழுதிய சிறுகதை போலான இந்த வலைப்பதிவு உள்ளடக்கமே காட்சிகளாகவும் படமாகவும் மைனாவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது... கதையின் ஒன் லைனர் ஒத்து போவது போல அல்ல இது... மைனா படத்தின் கதையையும் இந்த கதையும் படித்து பார்த்து சொல்லுங்கள்...

இந்த கதை திருட்டை அம்பலப்படுத்தி மின் மடல் அனுப்பியவருக்கு மிகவும் நன்றி, நிறைய விவரித்து எழுத வேண்டும் என நினைத்தேன், ஆற்றாமையாலும் உடனே வெளிப்படுத்த வேண்டுமென்றும் சுருக்கமாக சொல்லியுள்ளேன்...


கீழே பதிவிலிருந்து சில பத்திகள் மட்டும் முழு பதிவையும் படிக்க "அரசு ஊழியர்கள் - பகுதி - 3." சுட்டியை அழுத்துங்கள்...

**** அந்தநாள்., விடிந்தால் தீபாவளி*** ***அன்று இரவும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க., வெளியில் காவலர் விசில் ஊதும் சத்தம் கேட்டது., நான் முதலில்., சின்னப் பசங்க விளையாடிட்டு இருக்காங்கன்னு நினைச்சுட்டு இருக்கும் போது ஒரு எண்ணம் விடிஞ்சா தீபாவளி., பட்டாச, கிட்டாச வெடிக்காம., இது என்ன?ன்னு நினைச்சுக்கிட்டே வெளிய வந்து பார்த்தா உண்மையிலேயே போலீஸ் பட்டாளம்தான். எங்க ஏரியா மிக அமைதியான ஏரியா. எதுக்கு வந்திருக்காங்கன்னு பார்த்திட்டு இருக்கும் போதே ரெண்டு பேர் எங்க வீட்ட நேக்கி வந்தாங்க. எங்க பக்கத்து வீட்டுல., ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். நம்ம வீட்டுலயே சத்திரம் மாதிரி ஆளுக இருக்கறதுனால பக்கத்து வீட்டயெல்லாம் கவனிச்சதே இல்ல. ஆனா., அந்த வீட்டுல சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது தெரியும். வந்த காவலர்கள் கேட்டார்கள் "பாப்பா... உங்க வீட்டுல ஏதாவது திருடு போயிருக்கா?"., "இல்லங்க., என்ன ஆச்சு?"., விதயம் இதுதான் அந்த வீட்டில் மணமாகி வந்த மாப்பிள்ளை., எங்கையாவது ரோட்டுல அனாமத்தா கிடக்கிற, அல்லது யார் வீட்டுலயாவது பயன்படுத்தாம இராத்திரில நிக்கிற ஹீரோ ஹோண்டா., யமாஹா போன்ற வாகனங்களை பத்திரமா அவர் வீட்டுல கொண்டு வந்து வச்சுக்குவாராம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா., எங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் இடையில் இருக்கும் சந்தில்தான் என் தம்பி எப்போதும் அவனுடைய யமஹாவை வைத்திருப்பான். அவரைப் பிடிக்க வந்த பட்டாளம் அவருடைய மனைவியின் குடும்பத்தை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புது மணப்பெண் அழுத அழுகை மனதை என்னவோ செய்தது. ஆனால் விதயம் தெரிந்து மாப்பிள்ளை எஸ்கேப். அவரைப் பிடிக்க வந்த காவலர்கள்., அந்தக் காவலர் கூட்டத்திலேயே ஒல்லியாக, நிற்க சத்தில்லாத நிலையில் இருந்த இரு கவலர்களை பார்த்து "வந்தா விட்றாதிங்கய்யா!" என்று கூறிவிட்டு கலைந்து சென்றார்கள்.
*
அந்த இரு காவலர்களும் இரவு 7.30 மணியிலிருந்து 10 மணி வரை சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வானம் வேறு தூறிக்கொண்டிருந்தது. எங்கோ சென்று விட்டு வந்த என் அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கினோம்., அவர் இரண்டு நாற்காலி மற்றும் டீ அவர்களுக்கு தரச் சொன்னார். நள்ளிரவு 1.30 மணிவரை அவர்கள் இருந்ததைப் பார்த்தோம். பின்பு படுக்கச் சென்று விட்டோம். காலை நாற்காலிகள் எங்கள் வீட்டின் முன் இருந்தது எப்போது சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுடைய அந்தத் தீபாவளி எப்படி இருந்திருக்கும்? காவலர்களுக்கு குடும்பம்., குழைந்தைகள் இருக்குமல்லவா., அவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?.
*
ஊடகங்களில் அதிகம் தாக்கப்படுபவர்கள்., கேலிக்குள்ளாக்கப் படுபவர்கள் காவலர்களே., ஒரு அரசியல்வாதி ரோட்டில் பவனி வர 2, 3 மணிநேரம் இவர்கள் வெயிலில் காயவும், மழையில் நனையவும் வேண்டியிருக்கிறது. அரசியல் கொலைகளில் பலியான முகம் தெரியாத காவலர்கள் எத்தனை பேர்?., அரசியல்வாதிகளின் பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்..., எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவளிக்களுக்கும் பாதுகாப்பு பணிபுரிய வேண்டிய நிலை. ********

இதை காப்பியடித்தது போல் அப்படியே கிளைமாக்சை மட்டும் மாற்றி (அக்கியூஸ்ட் புதுசா கல்யாணம் ஆனவர் மைனால போலிஸ்காரனுக்கு தலை தீபாவளி). இப்பதிவுடன், படத்தின் முற்பாதிக்கு சமிபத்தில் வெளியான 'வெளுத்துக்கட்டு' படத்தின் சில காட்சிகளையும் வைத்து எடுத்ததுபோல் உள்ளது "மைனா" படம்.

முதற்பத்தியில் (முழு பதிவில்) சொல்லியிருப்பது கூட படத்தில் போலீஸ்காரன் பொண்டாட்டி போனில் சொல்வதாக சேர்த்துவிட்டு, அந்த கேரட்டர வில்லியாக்கிருக்காய்ங்க....

---------------------
இப்போ சொல்லுங்கய்யா காப்பி பேஸ்ட் என்றும் எதையும் எழுத தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்ஸ்டமில் ஆரம்பித்து பல ஊடகங்களிலும் வலைப்பதிவர்கள் பற்றி தவறாக எழுதும் மயிராண்டிகளா வலைப்பதிவர்களின் கதைகளையும் பிரபலமான வசனங்களையும் திருடி படங்களில் பயன்படுத்தி புகழையும் கோடிகளையும் அள்ளும் அளவிற்க்கு உள்ளது...

இயக்குனர் மிஸ்டர் பிரபு சாலமன் இது உங்களுக்கே நியாயமா?

வ.கெளதமன் இயக்கத்தில் சீமான் நடிப்பில் இன்று வெளியாகும் மகிழ்ச்சி திரைப்படம்

இயக்குனர் வ.கௌதமனனின் மகிழ்ச்சி திரைப்படம் இன்று மிகுந்த போராட்டங்களுக்கிடையில் வெளியாகிறது...

அட என்னய்யா போராட்டம் அப்படிங்கறீங்களா, புரொடியூசர் பிரச்சினையா? படம் எடுத்து முடியலையா? டப்பிங் பேசாம ஹீரோயின் ஊருக்கு போயிட்டாங்களா என்றால் அதெல்லாம் ஒன்னுமில்லையாம்.... அட தமிழ்நாட்டுல கருணாநிதி குடும்ப பேனர்ல வெளியாகுற படம் தவிர மற்ற எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைத்து வெளியாவதே பெரிய போராட்டம் தானுங்களே, படம் எப்போதோ தயாராகியும் தீபாவளிக்கு வெளியிட தியேட்டர் கிடைக்காமல் கருணாநிதி குடும்பத்தின் தீபாவளி தியேட்டர் ஆக்கிரமிப்பிற்க்கு பின் தற்போது தான் வெளியாகிறது...



எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1968 எழுதிய தலைமுறைகள் நாவலையே இயக்குனர் வ.கெளதமன் படமாக எடுத்துள்ளார்... இது மட்டுமின்றி படத்தில் செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணை தலித் ஆண் திருமணம் செய்வதாக வருகின்றதாம், அதனால் நம் இனத்துக்கு இழுக்கு என்று சில செட்டியார் இனத்துக்காரர்கள் இந்த படத்திற்க்கு திரையரங்கு தரக்கூடாது என சிலர் வேலை பார்க்க அதே செட்டியார் இனத்துக்கார திரையரங்க உரிமையாளர்களே இந்த மாதிரி சில்லுண்டி வேலை பார்த்தவர்களை போய்யா வேலைய பார்த்துக்கொண்டு என்று துரத்திவிட்டார்களாம்...

செந்தமிழன் சீமானும் இந்த படத்தில் நடித்திருக்கிறார், நீண்ட நாட்களாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதாமல் இருந்த பாவலர் அறிவுமதி அவர்கள் பாடல் எழுதியுள்ளார்...

இவர் ஏற்கனவே கனவே கலையாதே என்ற படத்தையும் இயக்கியுள்ளார்... சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் இவர் இயக்கிய ஒரு புகழ்பெற்ற தொடர்...

பிரிவியூவில் பார்த்த நண்பர்களுக்கு படம் பிடித்திருக்கிறதாம், எதார்த்தமான திரைப்படமாக சிறப்பாக வந்துள்ளது என்கிறார்கள்...

இந்த படம் வெற்றிபெற இயக்குனர் கெளதமனை வாழ்த்துகிறேன்...



அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?


அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

1. முத்தம்
2. கிஸ்
3. பர்ஸ் / பை

இதற்கான விடையை நாம் கடைசியில் பார்க்கலாம்... ஹலோ எக்சூச்மி பதிவை ஸ்க்ரோளை பிடித்து இழுத்து கீழே போவதற்கு முன் கொஞ்சம் பதிவையும் படியுங்க...






சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம் தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய வானூர்திகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், டூரிஸ்ட் விசா எனப்படும் விசிட் விசா, இது தொடர்பான நடைமுறை விதிகள் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது
1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர் டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சென்னை 2 சிங்கப்பூர்...

நண்பர்கள் வெளிநாடு செல்லும் பொது ஸ்வெட்டர் எல்லாம் தாங்காது Thermal wear அப்போதே 5000 ரூபாய் கொடுத்து வாங்கியதை பார்த்து ஆனைக்கு அர்ரம்னா பூனைக்கு புர்ரம் அப்படிங்கற மாதிரி மேலாளரிடம் போய் முதன்முதலில் சிங்கப்பூர் அலுவலகவேலையாக வரும் முன் எங்கள் அலுவலக மேலாளரிடம் போய் ஸ்வெட்டர், Thermal wear லாம் எத்தனை வாங்க வேண்டுமென்றேன், ஏற இறங்க பார்த்தார்.

சிங்கப்பூர் சென்னை கிளைமேட் என்றார் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன், அடடே நூடுல்ஸ்ன்னவுடனே ஞாபகம் வருது, சிங்கப்பூர்ல விதம் விதமா நூடுல்ஸ் சாப்பிடலாம், ம் நம்ம மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு இங்கே வந்து அதே மாதிரி நூடுல்ஸ் என்று நினைத்தால் அவ்ளோதான்...


நூடுல்ஸ் பத்தி பேசிக்கிட்டே பாருங்க மீனம்பாக்கம் கெளம்ப லேட்டாயிரும், வானூர்தி கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்னாலேயே வானூர்தி நிலையத்தில் இருப்பது நல்லது. மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையத்திலேயே உணவுகிடைக்கும், நிலையத்தின் உள்ளே அடையாறு ஆனந்தபவன் இனிப்பகம் இருக்கு, புத்தகக்கடை இருக்கு ஆனால் எல்லாம் கொள்ளை விலை.

ஹலோ ஹலோ என்ன பாக்கெட்ல, சிகரெட் பாக்கெட்டா?, பேக்கிங்கில எதுவும் சிகரெட் பாக்கெட்டுங்க இருக்கா? ப்ளீஸ் தயவு செய்து எடுத்து வெளியில போட்டுறுங்க, சென்னை 2 சிங்கப்பூர் வானூர்தியில் புகைப்பிடிக்க அனுமதியில்லை, மேலும் சிங்கப்பூரில் வெளியூரிலிருந்து எடுத்து வரும் சிகரெட்டுகளுக்கு அனுமதியில்லை, அதற்கு முறையாக சுங்கவரி கட்டி தான் பயன்படுத்த வேண்டும், அப்படியே ஏமாற்றி கொண்டு வந்தாலும் சிங்கப்பூரின் உள்ளே விற்பனையாகும் அத்தனை சிகரெட்டுகளிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் SDPC என்று அச்சாகியிருக்கும், அப்படியில்லாத சிகரெட்டுகளை புகைப்பதும் விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் குற்றம்.

உங்கள் பைகளை சோதனை முடித்து போட்டுவிட்டு கையில் வைத்திருக்க விரும்பும் பையை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பயணச்சீட்டை தந்து போர்டிங் பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே ஒரு விண்ணப்ப படிவம் தருவார்கள் அதை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்..

தெரியாத யாராவது எதையாவது கொடுத்து சிங்கப்பூரில் இதை கொடுத்துடுங்க உங்களுக்கு காசு தரேன், அல்லது ரொம்ப பாவமாக உங்களுக்கு பேக்கேஜ் வெயிட் கம்மியா தானே இருக்கு என் பேக்கேஜை உங்களுடையதில் போட்டுக்கொள்ளுங்க பைசா தரேன் என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிடுங்கள்...

அனுஷ்கா மாதிரி ஒரு அழகான பெண் மும்தாஜ் குரலில் "ஹல்லோ ப்ளீஸ் இந்த பையை கொஞ்சம் தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்றீங்களா" என்றால், கபால்னு பாய்ந்து போய் பையை வாங்காதிங்க, நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க, இமிகிரேசன் முடித்துவிட்டு வாருங்கள்...

சிங்கப்பூரில் போதைபொருள் கடத்தலுக்கு மரணதண்டனை, வாய்தா, அப்புறம் வாய்தாவுக்கு வாய்தா முன் ஜாமீன் பின் ஜாமீன் என்றெல்லாம் கிடையாது, போதைப்பொருள் கடத்தினால் விரைவாக கேசை 'முடித்து' விடுவார்கள்... எனவே மிகுந்த எச்சரிக்கை.

ஹலோ அங்கே என்ன பாக்குறிங்க "மெய்புல அறைகூவலர்"னு எழுதியிருப்பதா ஹா ஹா physically chllange என்பதைத்தான் தமிழ்'படுத்தி' இருக்கிறாங்க...

திரும்பவும் வரிசையில் நின்று இன்னொருமுறை சோதனை, முடிச்சி பின் உள்ளே போய் வானூர்திக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாமென்றால் அதற்கு யானை எதுவாவது இருந்தால் வாங்கலாம் அவ்வளவு விலை...

ஏறக்குறைய நாலு மணிநேரம் பயணம், சரக்கு சாப்பாடு எல்லாம் நாம போற வானூர்திக்கு ஏற்ற மாதிரி இருக்கும், நாலு பேர் வந்து நம்ம போற வண்டியில திடீர்னு காத்து பத்தலைன்னா ஆக்சிஜன் மூடியை மூஞ்சில வச்சிக்கிங்க, கடலுக்குள்ள விழபோச்சின்னா இப்புடி தான் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கனும் அதுல இப்படித்தான் காத்து ஊதனும்னு பயமுறுத்துவாங்க...

ஒரு வெள்ளை அட்டை கொடுப்பாங்க, அதை நிரப்பிடுங்க, முக்கியமா எங்க தங்கப்போறிங்க அப்படிங்கறதை நிரப்பிடுங்க, இந்த வெள்ளை அட்டை முக்கியம் திரும்ப சிங்கப்பூரை விட்டு கிளம்பும்போது இந்த வெள்ளை அட்டையை கேட்பாங்க, அப்புறம் வண்டி கிளம்பிய பிறகு கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்துலயே சிங்கப்பூர் வந்துரும்... கொஞ்சம் கண் அசருங்க..

ஓகே சிங்கப்பூர் வந்தாச்சி, நம்ம ரிட்டர்ன் டிக்கெட், வெள்ளை அட்டை, பாஸ்போர்ட் கொடுத்தால் அங்கிருக்கும் அலுவலர் நமக்கு எத்தனை நாள் தங்கலாமென அனுமதி தருவார், அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே விசிட் பாஸ்ல் தங்க இயலும், அவர்கள் கொடுத்திருக்கும் நாட்களை நாம் Immigiration checkpoint Authority என்ற துறையில் நம் தங்கும் அனுமதி நாட்களை நீட்டிக்கொள்ளலாம், நம்ம பேக்கேஜை எடுத்துவிட்டு வாருங்கள் சிங்கப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது, இன்னும் ஏழு நாள்... பல இடங்கள் சிங்கப்பூரில் சுற்றி பார்க்கலாம்... காத்திருங்கள்...

சிங்கப்பூர் வரனுமா உங்கள் எழுத்து திறமையை காண்பியுங்கள், சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்.. சுற்றுலாவோடு தமிழும் தமிழர்களையும் தமிழறிஞர்களையும் சந்திக்கலாம்... போட்டி தொடர்பான விபரங்கள் இங்கே



பின்குறிப்பு:
எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? கண்டிப்பா படிச்சிருப்பிங்க போன வருசம் இதே கட்டுரையை நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது? என்று போட்டிருந்தேன், இப்போ நயன்தாரா பழசாயிட்டாங்களா? அப்புறம் தாடிக்காரர் வேற கோச்சிக்கிட்டார்னா என்னா செய்றது அதான் அனுஷ்கா

மணற்கேணி போட்டி தலைப்பு - தமிழ் விக்கிப்பீடியா

சிங்கப்பூர் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இரண்டாம் ஆண்டாக இணைந்து நடத்தி வரும் "மணற்கேணி 2010" கருத்தாய்வு போட்டியின் கடைசி நாள் டிசம்பர் 31க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது...


இதில் தமிழ் மொழி / இலக்கியம் என்ற பிரிவில் "தமிழ் விக்கிப்பீடியா" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அன்றாடம் நாம் தகவல்கள் தேடும்போது தினமும் ஒருமுறையாவது இந்த தமிழ் விக்கிப்பீடியா தளத்தை பார்த்து செல்வோம், தமிழ் விக்கிப்பீடியா என்ற தலைப்பு எளிமையானதும் சிறப்பானதுமான ஒரு தலைப்பு.



தமிழ் விக்கிப்பீடியா தளம் தமிழின் மிக முக்கியமானதொரு தளம், அந்த தளம் தொடர்பாக அளிக்கப்படும் சிறப்பான கட்டுரைகள் வருங்காலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பான பங்களிப்பிற்க்கு உதவலாம்...

மணற்கேணி போட்டி தொடர்ச்சியாக இணைய எழுத்துக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் பொறுட்டும் இணைய எழுத்துக்களிலிருந்து சிறப்பானதை பெறும் பொருட்டும் சிங்கப்பூர் வலைப்பதிவர்களால் ஆர்வமுடன் நடத்தபெறுகின்றது... வலைப்பதிவர்களும் மற்றவர்களும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதே எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதுவும் தொடர்ச்சியாக இம்மாதிரியான நிகழ்வுகளை மேற்கொள்ள செய்யவும் ஊக்கமளிக்கும்...

மணற்கேணி 2010 போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெல்லுங்கள் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டு வாருங்கள் உங்களை சந்திக்க சிங்கை வலைப்பதிவர்கள் ஆவலுடன் உள்ளோம்...

மற்ற தலைப்புகளை இங்கே அழுத்தி காணுங்கள்

என்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் துரோகம் செய்யும் திமுக தொழிற்சங்கம்

கொஞ்சம் பெரிய பதிவு, என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனம் நெய்வேலியில் உருவாக்கிய மாற்றங்கள் பற்றியும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம், தொழிற்சங்கங்கள் பற்றியும் சற்று நீளமாக விவரிக்கும் பதிவு...

விமானநிலைய விரிவாக்க திட்டம், அணைகட்டுதல், துணைநகரத்திட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தொழிற்பேட்டைகள், டாடா கம்பெனி திட்டம் இம்மாதிரியான திட்டங்களுக்கு நிலம் தராமல் அழிச்சாட்டியம் செய்தால் நாடு எப்படி முன்னேறும் என்று பேசும் மிடில்கிளாஸ் அறிவுஜீவி மயிராண்டிகள் ஒருமுறையேனும் போய் பார்க்க வேண்டிய இடம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.நெய்வேலி கடலூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த மாவட்டத்தில் பெரும்பாண்மையானவர்கள் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இடத்தில் ஒரு சில ஜமீன் பரம்பரை ஆட்களை தவிர்த்த மீதி அனைவரும் 3-4 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த குறுவிவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளே, இவர்களின் ஒரே வாழ்வாதாரம் இந்த நிலங்களும் விவசாயக்கூலியும் தான். இவர்களிடமிருந்து நிலம் ஊரெல்லாம் மின்சாரம் கொடுத்து விளக்கெரிக்க நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்திற்காக அரசால் பிடுங்கப்பட்டது, பிடுங்கும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் நிரந்தர வேலை நிலத்திற்கான இழப்பீட்டு தொகை என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது, ஆனால் 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை இப்படியான நிலையில் நாட்டு முன்னேற்றம் பற்றி பேசும் எந்த அறிவுஜீவி மயிராண்டியாவது அவனுடைய ஒரு செண்ட் நிலத்தையாவது அரசுக்கு தருவானா? இந்த லட்சணத்தில் ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க போகிறார்களாம் சுரங்கம் தோண்ட.



தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன, அவ்வப்போது நாய்க்கு கொஞ்சம் போடுவது போல கொஞ்சம் கொஞ்சம் போடுகிறார்கள் என்பதை தாண்டி இன்றளவும் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு பிடுங்கிய நிலங்கள் என்னும் வாழ்வாதாரத்துக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

என்.எல்.சி நிறுவனம் இந்திய படிமுறை சமூகத்திற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது, அடிமட்ட கூலித்தொழிலாளிகளாக மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்கள் மற்றும் தலித்கள் பெரும்பாலும் உள்ளனர், அதற்க்கு மேல் உள்ள இடங்கள் (தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தவிர்த்து), நோகாமல் நோன்பு கும்பிடும் அலுவலக வேலைகள் தமிழகத்தின் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத பிற உயர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களும், ஆந்திர கும்பலும் அதற்க்கு ம் மேல் உள்ள உயர் பதவிகள் பவர் செண்டர்கள் எல்லாம் வடநாட்டு கும்பலுமாக ஒரு இந்திய சமூகத்தின் அதிகாரத்துவ படிநிலை எப்படி இருக்கும் என்பதன் அச்சு அசலாக என்.எல்.சி நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தின் அடிமட்ட தொழிலாளர்கள் மூன்று வகையான முறையில் உள்ளவர்கள், எம்ப்ளாயி எனப்படும் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர நேரடி தொழிலாளர்கள், சொசைட்டி எனப்படும் கூட்டுறவு தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள். செய்யும் வேலை இம்மூவருக்குமே ஒன்று தான் ஆனால் சம்பளம் மற்றும் பிற உரிமைகள் சலுகைகள் வெவ்வேறானதாகும். ஒப்பந்த தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 5200 என்ற அளவிலேயே சம்பளம் பெறுகிறார்கள், இதில் பெரும்பாலானவர்கள் நிலம் கொடுத்தவர்கள் வாரிசுகள் மிகப்பிற்படுத்தப்பட்ட வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர். 240 நாட்கள் தொடர்ந்து வேலை செய்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் விதிமுறை, ஆனால் இவர்கள் எப்போதிருந்து வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வேலை செய்கிறார்கள் தெரியுமா? கடைசியாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட பின் 1993லிருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக, இதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் அதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்றும் வேலையை விட்டுவிட்டு போகவும் முடியாமல் மிகக்குறைவான சம்பளம் எப்போது நிரந்தரம் செய்வார்கள் என்று எந்த உறுதியான சூழலும் இல்லாமல் இவர்களால் வேலையைத்தொடரலாமா வேண்டாமா என்று பதைபதைப்பிலும் தடுமாற்றத்திலுமாக தொடர்கிறார்கள்.

ஆண்டுக்கு 1500 கோடி லாபம் கிடைக்கும் நிறுவனம், ஸ்க்ராப் காண்ட்ராட்டுகளிலேயே கோடி கோடியாக பணம் புழக்கம் உள்ள நிறுவனம் என இருந்தும் தொழிலாளர்களுக்கு இந்த கொடுமையான நிலை.

இது மட்டுமின்றி CISF(Central Industrial Security Force) என்ற பாராமிலிட்டரி படையை என்.எல்.சி நிறுவனத்தின் பாதுகாப்பிற்காக என்று சொல்லி நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எஃப் காவலர்கள் தொழிலாளர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ளுவதும் நெய்வேலி அருகில் இருக்கும் கிராமங்களில் தகராறு செய்வதுமென உள்ளனர், இது தொடர்பாக நிறைய போராட்டங்கள் மோதல்கள் நடந்துள்ளன. திருட்டை தடுக்க என்று சொல்லிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட CISF இருக்கும்போதே நான் 15 நாட்கள் பயிற்சிக்கு சென்ற ஆட்டோ யார்ட் இலிருந்து லாரி ஆக்சில்ஸ் காணாமல் போய்விட்டது, லாரி ஆக்சில்ஸ் என்ன சட்டைபையில் மறைத்து எடுக்க கூடிய பொருளா அல்லது காம்பவுண்ட் சுவர் தாண்டி எறியக்கூடிய பந்தா? ஒரு பொருள் மூவ்மெண்ட்டிற்க்கு எத்தனை கையெழுத்துகள் எத்தனை செக்போஸ்ட் சோதனைகள் இதையெல்லாம் தாண்டி லாரி ஆக்சில்ஸ் காணாமல் போகிறது என்றால் CISF என்ன பிடுங்கிக்கொண்டுள்ளதா? அல்லது அதற்க்கும் பங்கு உண்டா? இங்கே CISF கொண்டு வந்து நிறுத்தப்பட்டதே தொழிலாளர்களுக்கு பிரச்சினை கொடுப்பதற்க்கே என்ற என்.எல்.சி தொழிலாளர்களின் ஆதங்கப்படுவதில் உள்ள உண்மையை மறுக்க இயலாது.

இந்நிறுவனத்திலேயும் அனைத்துகட்சிகளுக்கும் தொழிற்சங்கங்கள் உண்டு, திமுகவின் தொமுச , கம்யூனிஸ்ட்களின் ஏஐடியூசி, பாட்டாளி மக்கள் கட்சியின் பிடிஎஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கங்களே இங்கே வலுவான தொழிற்சங்கங்கள். பாமக, டிபிஐ தொழிற்சங்கங்கள் வருவதற்க்கு முன்பிருந்தே திமுகவின் தொமுசவு ஏஐடியூசியும் தொழிலாளர்களிடம் செல்வாக்கு பெற்ற தொழிற்சங்கங்கள், இந்நிலையில் வன்னியர் சங்கமாக இருந்த காலத்திலும் அதன் பின் பாமக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளோடு என்.எல்.சி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமக. அதில் பாமக ஸ்டைல் போராட்டங்களும் நடைபெற்றது உண்டு.

பெரும்பாண்மையான அடிநிலை தொழிலாளர்களாக வன்னியர்கள் உள்ள நிறுவனம் என்பதாலும் பாமக போராட்டங்களால் கிடைத்த நன்மைகளும் பாட்டாளி தொழிற்சங்கத்திற்க்கு வலுவான நிலையை ஏற்படுத்தியது என்றாலும் திமுகவின் தொமுசவிலேயே 10,000க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு பெரும்பலத்தில் இருந்தது. அதன் பின் ஏஐடியூசி, பிறகு டிபிஐ அதன் பின்னே தான் பாட்டாளி தொழிற்சங்கம் என்ற நிலை. தொழிற்சங்க தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்களே என்.எல்.சி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், இந்த இரு தொழிற்சங்கங்கள் மட்டுமே எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும். இதுவரை வாக்கு பெரும்பாண்மை அடிப்படையில் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்தது, இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன் என்.எல்.சி தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. தொமுச வழக்கம்போல வெற்றிபெறும், இரண்டாமிடம் ஏஐடியூசி அல்லது டிபிஐ என்று பலரும் எதிர்பார்த்திருக்க பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாமக வேல்முருகன் அவர்கள் களத்தில் இறங்க பாட்டாளி தொழிற்சங்கம் இரண்டாமிடம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமானது, இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது பாட்டாளி தொழிற்சங்கம் பெற்ற கூடுதல் வாக்குகள் அனைத்தும் திமுகவின் தொமுச பெற்ற வாக்குகளில் குறைந்துவிட்டது. எந்த ஒப்பந்தமும் வெறும் தொமுசவின் கைகளில் மட்டுமல்ல பிடிஎஸ்சும் கையெழுத்திட வேண்டும், இந்த நிலை மட்டும் சென்ற தொழிற்சங்க தேர்தலில் ஏற்படாமல் வெறும் திமுகவின் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்திருந்தால் 10ம் தேதியே என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை புதைத்து பாலூற்றியிருப்பார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் பணிநிரந்தர வாய்ப்பும் வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதி வழங்கப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டது என்.எல்.சி நிறுவனத்தால். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால் சென்ற மாதத்திலிருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5000 சம்பளத்தை 9000 ஆக்க கோரியும் பணி நிரந்தரம் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. ஒப்பந்த தொழிலாளர்களின் மத்தியில் திமுகவின் தொமுசவிற்க்கு வெறும் 300 உறுப்பினர்களே, ஆனாலும் நிரந்தர தொழிலாளர்கள் ஆளுங்கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பதால் திமுகவின் தொமுச கையில் தலைமை பொறுப்பளிக்கப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளார்கள் மத்தியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமும்(ஏஐடியூசி) பிடிஎஸ் மற்றும் டிபிஐ யே வலுவானவைகள்.ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினால் மின்சார தடை ஏற்படும் அளவிற்க்கு (இனி தான் புதுசா மின் தடை தமிழகத்தில் ஏற்படப்போகுதா என்ன?) சென்றவுடன் அக்டோபர் 10ம் தேதி ஆயிரத்து நாற்பது ரூபாய்(1,040) சம்பள உயர்வு மட்டுமே வேறு பணிநிரந்தரம் தொடர்பான எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் திமுகவின் தொமுச என்.எல்.சி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டது, ஆனால் பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் பிடிஎஸ் கையெழுத்து போடாமல் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க திமுகவின் தொமுச போராட்டகளத்திலிருந்து விலகிக்கொண்டது மட்டுமின்றி தொழிலாளர் விரோதப்போக்கை ஆரம்பித்தது, ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை பிசு பிசுக்க வைக்கும் முயற்சியில் இறங்கியது, தொமுச விலகிக்கொண்ட பின்னும் போராட்டம் மேலும் தீவிரமாக போக கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பில் ஆரம்பித்து மறியல் முற்றுகை என போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. ஆனால் இதுவே திமுகவின் தொமுசவின் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது, தாங்கள் விலகியும் போராட்டம் வலுவாக செல்வதா என்ற ஆத்திரத்தில் திமுகவின் தொமுச தொழிலாளர் விரோத நடவடிக்கையில் இறங்கி அதை குலைக்க முயற்சித்தது. மத்திய அரசு தொடர்பான எதிலும் சிறு நெருக்கடி கூட ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் கருணாநிதி அக்டோபர் 10ம் தேதி தொமுச தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னும் அக்டோபர் 16ம் தேதி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், ஈழத்திற்க்கு கடிதம் எழுதி எழுதி எழவு விழுந்த பின்னும் நிறுத்தாமல் கடிதம் எழுதித்தள்ளும் கருணாநிதி இங்கேயும் கடிதம் எழுதும் ஏமாற்று வேலையை ஆரம்பித்துவிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் நடந்த கடையடைப்பு போராட்டத்திற்க்கு வணிகர்சங்கங்கள் ஆரம்பித்து பலரும் ஆதரவு தெரிவிக்க அமைதியாக நடைபெற்றதில் திமுகவை சேர்ந்தவர்கள் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் திறக்க சொல்லி வற்புறுத்தினர், தனியார் பேருந்துகளை ஓட்ட கோரினர், விளைவு சில தனியார் பேருந்துகள் போராட்டகாரர்களால் நொறுக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம் தோல்வி என்று அறிக்கைவிட திமுகவிற்க்கு என்ன அவசியம்? தொழிற்சங்கங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தோல்வியடையச்செய்ய திமுக ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தை தோற்கடிக்க அத்தனை முயற்சிகளை மேற்கொண்டது? அப்படியென்றால் திமுகவும் அதன் தொழிற்சங்கமும் யார் பக்கம் நிற்கிறார்கள்? போராட்டகளத்தில் இருக்கும் தொழிலாளர்களை போலிசை கொண்டு தாக்குதல், மறியல் போராட்டத்தில் இருப்பவர்களை கைது செய்து அவர்களின் மீது கடும் வழக்கு தொடுத்தல் என அடக்குமுறைகளை ஏவி விடுகின்றது என்றால் திமுக யார் பக்கம் நிற்கிறது?

நேற்று வரை தில்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, 13,000 ஒப்பந்த தொழிலாளர்களின் 36 நாள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து என்.எல்.சியின் நிரந்தர ஊழியர்களும் பாட்டாளி தொழிற்சங்கமும் மற்ற ஒன்பது தொழிற்சங்கங்களும் நேற்று அக்டோபர் 25 அன்று ஸ்ட்ரைக் நோட்டிஸ் கொடுத்துள்ளன, நிரந்தர தொழிலாளர்களிடம் செல்வாக்குள்ள தொமுசவில் தான் பாதியளவான நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர், மீதி பாதி அளவில் பிடிஎஸ் மற்றும் மற்ற தொழிற்சங்கங்களில் உள்ளனர் ஆனால் இதில் தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச இதில் கலந்துகொள்ளவில்லை.

விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கம் இந்த அரசியல் இழுப்புகளுக்குட்படாமல் இன்னமும் போராட்டத்தில் தொடர்கிறது என்றாலும் அவர்கள் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்து கூட்டுப்போராட்டமாக நடத்தாமல் தனியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே என்.எல்.சியில் தன் பிடிமானத்தை இழக்க ஆரம்பித்துள்ளா திமுகவின் தொமுச இம்மாதிரியான தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் என்.எல்.சி தொழிலாளர்கள் மத்தியில் தம் செல்வாக்கை இழந்து நிற்கப்போவது நிச்சயம்.தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச விலகியும் திமுக அடக்குமுறைகளை ஏவியும் இன்னும் போராட்டம் தொடர்கிறது இந்த போராட்டம் எல்லா துரோக தடைகளையும் உடைத்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

இது தொடர்பான செய்திகள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் மற்றும் தமிழக அரசியல் பத்திரிக்கைகளில் வந்துள்ளன. ஆனால் ஒரு வலைப்பதிவிலும் வந்தது போல தெரியவில்லை... ஆமாமா எந்திரன் பட ரிலீஸ் அளவிற்க்கு இது ஒன்றும் முக்கியமான ஒன்று அல்ல தானே.

என் ஹீரோவுக்கு வீர வணக்கங்கள்

எந்திரன் திரைவிமர்சனம் - படம் பார்க்கும்போதே எழுதியது

திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்க்கு செல்வதற்க்குள் படம் பற்றிய விமர்சனம் எழுதுபவர்களிடம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதினாயா என்பார்கள், சரி ஏன் நாம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திரையரங்கில் பார்க்கும் ரஜினி படமான எந்திரனுக்கு எழுதலாம் என்று நினைத்து டிவிட்டரில் காட்சிக்கு காட்சி எழுத ஆரம்பித்தேன், இதுக்கு முன்னால யாரும் செய்திருக்காங்களா?


2:45 பிற்பகல் ஆரம்பிச்சி 5:22 பிற்பகல் வரை திரையரங்கில் உட்கார்ந்து 37 டிவிட்டு போட்டிருக்கேன் :-)



நான் டிவிட்டர் தளத்தில் எழுதியதை முடிந்த அளவு மொழி பெயர்த்து இங்கே போடுகிறேன்...

கொஞ்சம் காமெடியாகவும் மீதி மொக்கையாகவும் உள்ளது காதல் அணுக்கள் பாடல் வரை

சந்தானம் எல்லோரையும் விட ஸ்மார்ட்டாக உள்ளார்

குப்பத்தில் படையப்பாவாக தோன்றுமிடம் நல்ல கிராபிக்ஸ்

சில வசனங்களில் சுஜாதா டச்

ரயில் சண்டை செம காமெடி

AIRD எவால்யூவேசன் டுபுக்காட்டம் இருக்கு

தீ விபத்து கிராபிக்ஸ் நன்றாக உள்ளது

நல்லதொரு இடத்தில் இடைவேளை விடப்பட்டுள்ளது

கொசு காமெடி செம காமெடி :-)

இரும்பிலே இதயம் முளைக்குதோ! இரும்பிலே வேறு ஏதோ முளைச்சமாதிரி இருக்கு :-)

இந்த பாடலின் போது பலரும் வெளியே செல்கிறார்கள்

ஐஸ் இந்த பாடலில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார்

மின்னல் அடித்த பின் உணர்ச்சி வருவது கடவுள் நம்பிக்கை? #சந்தேகம்

ரோபா ரஜினி பாடும்போது இன்னொரு ரஜினி காட்டும் முகபாவம் சிறப்பாக உள்ளது

செக்ஸ் இல்லைனா வாழ்க்கையே இல்லையா? ஐஸ்: சீ சீ , எவன் எழுதின வசனம்?

எந்த டூப் நடிகர் ரஜினிக்கு பதிலாக இதில் ஆடினார்?

கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி ஹாஹா

ராணுவ நேர்முகத்தேர்வின் இறுதியில் சிறப்பாக இருக்கிறது

கலாபவன் மணி கலக்குறாரு

ரஜினி பயந்து ஓடுறாரு :-)

கிளிமஞ்சாரோ பாடலை விட குலுவாலியே பாடல் எல்லா விதத்திலும் சிறப்பாக உள்ளது குலுக்குவது உட்பட

அப்கிரேடட் வெர்சன் 2.0 நல்ல வசனம் :-)

சலிப்பூட்டும் சேசிங் காட்சிகள், இதில் வரும் சண்டைகள் ரஜினி ரோபோவாக இல்லாமலிருந்தாலும் செய்வார்.

துப்பாக்கி கிராபிக்ஸ் சிறப்பாக உள்ளது

ரோபோ வில்லன் ரஜினி கலக்கல்

ஏன் ரஜினியும் ஐஸ்ஸும் ஒரே மாதிரி நடக்கிறார்கள்

அறிவோம் பாடல் பலரும் வெளியே செல்கிறார்கள்

எல்லா ரோபோக்களும் கீழே விழுதல், ஏற்கனவே ஆங்கிலப்படத்தில் உள்ளதே

ரோபோக்கள் கோள வடிவத்தில் வருதல் மெய்மறக்க செய்துவிட்டது டிவிட் செய்ய மறந்துவிட்டேன்

கடைசில கோர்ட் சீனா?

ஹீரோக்கு தண்டனை இல்லை

படம் முடிந்து 10 நிமிடமாகியும் ஏன் மொக்கைய போடுறாங்க?

இன்னும் உச் உச் என்று சத்தம், ரோபோ கழற்றப்படுகிறதாம்

ஒரு முறை படம் பார்க்கலாம்

-----------------------

kuzhalipuru
Worth to see one time in theater #enthiran
Sat Oct 02 2010 17:22:44 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Innum ouch ouch nu sound robo dismantle aakudham #enthiran
Sat Oct 02 2010 17:09:10 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Padan mudijum 10 nimishama mokkai #enthiran
Sat Oct 02 2010 17:08:23 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Hero kku punishment illai #enthiran
Sat Oct 02 2010 17:06:21 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kadisila court scene a? #enthiran
Sat Oct 02 2010 17:05:11 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Robo sphere stunned forgot to tweet #enthiran
Sat Oct 02 2010 16:57:16 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
All robo falling down same us one English movie #enthiran
Sat Oct 02 2010 16:50:58 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Arivom song many people going out#enthiran
Sat Oct 02 2010 16:45:08 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Why rajini and aish walk similarly #enthiran
Sat Oct 02 2010 16:42:30 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Robo villain rajini kalakkal #enthiran
Sat Oct 02 2010 16:34:44 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

senthilnath
@kuzhalipuru enna live tweeting frm theatre a? where? JP?
Sat Oct 02 2010 16:29:45 (Malay Peninsula Standard Time) via Mobile Web in reply to kuzhalipuru

kuzhalipuru
Gun graphics good#enthiran
Sat Oct 02 2010 16:27:25 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Bore chasing scene all these stunts rajini will do even not as robo #enthiran
Sat Oct 02 2010 16:24:43 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Upgraded Version 2.0 good dialogue :-)
Sat Oct 02 2010 16:22:55 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kuluvali ye song is better than kilimanjora in all expects including shaking #enthiran
Sat Oct 02 2010 16:15:13 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Rajini bayanthu oduraaru :-) #enthiran
Sat Oct 02 2010 16:09:42 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kalamani kalakuraaru #enthiran
Sat Oct 02 2010 16:07:28 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Pinnadi ucchu kotturanga when the robo broken #enthiran
4:05 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Ending in army interview good #enthiran
4:03 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Kaniporium kathalikka vaikkum kanni pori ha ha #enthiran
4:02 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Sex illaina vaazhkai illaiy aish chee chee Evan ezhudhina vasanam? #enthiran
3:59 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Which dupe dance for rajini he is good #enthiran
3:55 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Rajini reaction in car when robo rajini sing the song #enthiran
3:53 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Minnal aticha pin unarchi vauvadhu kadavul nambikkai #doubt #enthiran
3:50 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Aish looks great in this song#enthiran
3:48 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Many people go out for break in this song #enthiran
3:46 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Irumppile idhaym mulaikudho irumpil Vera edo mulai cha maadhiri irukku :-) #enthiran
3:45 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Kosu comedy sema comedy :-) #enthiran
3:43 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Intermission in good place # enthiran
3:39 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Thee vibathu graphics excellent #enthiran
3:27 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Aird evaluation dubukku aatam iruku but last piece is good #enthiran
3:22 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
# train fight sema comedy #enthiran
3:09 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Some dialogues sujatha touch #enthiran
3:05 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Excellent graphics at kappam padiyappa scene #enthiran
3:03 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Santhanam looks smarter than hero # enthiran
2:45 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Konjam comedy meedhi mokkai until kadhal anukal song #enthiran
2:45 PM Oct 2nd via Twitter for iPhone

அழகிய தமிழ் பெயர் தேவை

நண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தூய தமிழ்பெயர் தேவை, ஆங்கில எழுத்து P,N ஆகியவைகளில் ஆரம்பிப்பது போல இருந்தால் மிக்க சிறப்பு...

நித்திலன் என்ற பெயரின் பொருள் தெரிந்தாலும் யாரேனும் கூறுங்கள்

நன்றி

வலைப்பதிவர் சவுக்கு கைதுக்கு கண்டனங்கள்

சவுக்கு வலைப்பதிவில் ஆதாரங்களுடன் ஊழலுக்கு எதிராக தம் சவுக்கை சொடுக்கியிருப்பார்கள், இதில் திரு சங்கர் அவர்கள் எழுதியுள்ளார், உளவுத்துறை ஐஜி மற்றும் உயர் அதிகாரங்கள், நக்கீரன் பத்திரிக்கையின் முக்கிய பிரமுகர் காமராஜ் ஆகியோர் பற்றியும் எழுதியுள்ளார், சவுக்கு சங்கர் அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளதை கடுமையாக கண்டிக்கிறேன், இது தொடர்பாக பதிவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் இந்நிலை நாளை எந்த வலைப்பதிவருக்கும் வரும் அபாயம் உள்ளது.