இந்தியாவின் புனித பசு (பாகம் - 1)

2003ல் ஜீலை 1, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (உயிர்காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர்த்து) தங்களது வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர், இதற்கு பல மாதங்களுக்கு முன்பே பறிக்கப்பட்ட பல சலுகைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அரசின் அலட்சியத்தாலும் வேலை நிறுத்த அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே வெளியிட்டும் அரசு கண்டுகொள்ளாததாலும் தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்


ஈட்டியவிடுப்பு குறைப்பு, முழு ஓய்வூதியம் கிடைக்க வேலை செய்திருக்க வேண்டிய ஆண்டுகள் அதிகரிப்பு, பி.எஃப் மற்றும் கிராஜிவிட்டி பாதி மட்டுமே ஓய்வு பெறும் போது பணமாக தரப்படும், மீதி ஆறாண்டு காலத்திற்கான பத்திரமாக தரப்பட்டதை (செத்த பிறகு பாலூற்ற இந்த பத்திரங்கள் பயன்படலாம்) மீண்டும் பணமாக வழங்க சொன்னது, அரசாங்க வேலைக்கு பணியமர்த்துதலை நிறுத்தி வைத்ததை திரும்ப பெற வலியுறுத்தல் என்பன அவர்களின் கோரிக்கைகளில் சில ஆனால் இவர்கள் சம்பள உயர்வு எதுவும் கேட்கவில்லை.

சமூகநீதிக்காக சமத்துவ சமுதாயத்தை உருவாக்க, எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக பிற்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்த மத்திய அரசை எதிர்த்து அகில இந்திய மருத்துவ கழகத்தின் (AIMS) அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு கூட வாய்ப்பளிக்காமல் நேரமளிக்காமல் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர் (தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் வேலை நிறுத்தத்தில் இறங்காதவர்கள் மருத்துவர்கள், இங்கேயோ வேலைநிறுத்தத்தில் இறங்கிய ஒரே ஆட்கள் மருத்துவர்கள்) தமது பணி, ஊதியத்தில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத போதும் அரசாங்கம் கொண்டுவந்த இடஒதுக்கீட்டை ஆதிக்க சாதிவெறி ஏறி எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்

நீதிபதி கற்பக வினாயகத்தின் அரசாங்க நடவடிக்கைக்கான இடைக்காலத்தடையை சில மணிநேரங்களில் உயர்நீதிமன்ற பெஞ்ச் ரத்து செய்தது மட்டுமல்லாமல் முதலில் உடனடியாக வேலைக்கு செல்லுங்கள், வேலைக்கு செல்லாமல் எதை பேசவும் உரிமையில்லை, பணி நீக்கம், இடை நீக்கம் நடவடிக்கை அனைத்தையும் பிறகு பேசலாம் என மாதசம்பளக்கார அரசு ஊழியர்களை இடித்துரைத்து உடனடியாக பணிக்கு செல்ல ஆணையிட்டது.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் இந்த சுட்டியில், அதிலிருந்து சில பகுதிகள்
(A) There is no fundamental right to go on strike:--
Law on this subject is well settled and it has been repeatedly held by this Court that the employees have no fundamental right to resort to strike.
(B) There is no legal / statutory right to go on strike. There is no statutory provision empowering the employees to go on strike.
(C) There is no moral or equitable justification to go on strike. Apart from statutory rights, Government employees cannot claim that they can take the society at ransom by going on strike. Even if there is injustice to some extent, as presumed by such employees, in a democratic welfare State, they have to resort to the machinery provided under different statutory provisions for redressal of their grievances. Strike as a weapon is mostly misused which results in chaos and total maladministration. In case of strike by Doctors, innocent patients suffer;

We agree with the said submission. In the prevailing situation, apart from being conscious of rights, we have to be fully aware of our duties, responsibilities and effective methods for discharging the same. For redressing their grievances, instead of going on strike, if employees do some more work honestly, diligently and efficiently, such gesture would not only be appreciated by the authority but also by people at large. The reason being, in a democracy even though they are Government employees, they are part and parcel of governing body and owe duty to the Society.

2. This reinstatement in service would be subject to unconditional apology as well as undertaking to the effect that employees would abide by Rule 22 of the Tamil Nadu Government Servants Conduct Rules 1973 which provides as under: -"22. Strikes: No Government servant shall engage himself in strike or in incitements thereto or in similar activities."
3. It is also stated that Government will proceed under the Disciplinary Rules only against those employees who had indulged in violence and who had incited the other employees to go on strike.

We also agree that misconduct by the government employees is required to be dealt with in accordance with law.

அகில இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட மருத்துவர்களுக்கு வேண்டுகோள்/ஆணையிட்ட உச்ச நீதிமன்றம் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மருத்துவர்கள், மாணவர்கள் மீது எடுக்க கூடாது என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டது.

The court had also assured the medicos that the Government would not take any action against them for acts done during the course of the strike.
A vacation bench comprising Justice Arijit Pasayat and Justice L S Panta said if the strike is called off, the government should appropriately consider the feelings of students and not take any punitive action.

தமிழக அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப ஆணையிடப்பட்டது எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு மூன்று நாள் வழங்கப்பட்டது.

The Court said the government shall recall the doctors whose services were terminated during the agitation and they should be given three days time to join work.

தமிழக அரசு பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்ட சமயத்தில் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்த தகவல் கீழே, அதன் படி வேலை நிறுத்த காலம் சம்பளமில்லா விடுப்பு காலமாக கருதப்படும்(அதாவது No work, No Pay)
"A submission has been made by the State Government among other things in the Apex Court that for the employees who would be reinstated in service, the period of absence will not be treated as break in service. But the treatment of period of absence up to July 24, 2003, as leave on loss of pay in respect of all employees and subsequent periods in respect of all employees who do not possess leave at credit runs counter to the above submission as leave and loss of pay will not count for the purpose of qualifying service under Pension Rules and is deducted from the qualifying service for pension," it said.

06 ஜீலை 2006 அன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்திபடி
போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்ற உத்தரவு நீதிபதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, மத்திய அரசு இது போல் செயல்படும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, உங்கள் அரசு ஒரு முன்மாதிரி முதலாளி போல் செயல்பட வேண்டும் என்று கூறுங்கள் என்று கடுமையாக கண்டிக்கும் வகையில் பேசினார்.

தமிழக அரசு ஊழியர்களின் போராட்ட மற்றும் பணி நீக்க காலங்களில் 80க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்தனர், ஒன்பது நடத்தை விதிகளை மீறியதாக அகில இந்திய மருத்துவ கழகத்தின் இயக்குனர் பதவியிலிருந்து வேணுகோபாலை 17 பேர் அடங்கிய எய்ம்ஸ் நிர்வாக குழுவில் 14 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது, வேணுகோபாலின் பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி In case of strike by Doctors, innocent patients suffer; என்று உச்ச நீதிமன்றம் கருதும் மருத்துவர்கள் செய்த வேலைநிறுத்தத்தினால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்தார்.

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது கீழே

We also agree that misconduct by the government employees is required to be dealt with in accordance with law.

கடைசி செய்தியாக வேணுகோபாலின் பதவி நீக்கத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழுவிபரம் இந்த சுட்டியில்.

வாழ்க சம நீதி, வாழ்க சமூக நீதி

References

http://judis.nic.in/supremecourt/
qrydisp.asp?tfnm=19215

http://www.dinamalar.com/
2006july06/fpnews3.asp

http://www.tribuneindia.com/
2003/20030807/main1.htm

http://www.hindu.com/
2004/07/02/stories/2004070205190400.htm

http://in.rediff.com/news/quota06.html
http://in.rediff.com/news/2006/may/31quota1.htm
http://www.hindustantimes.com/
news/181_1710133,001302220000.htm

http://www.rediff.com/news/2003/aug/06sc.htm
http://pd.cpim.org/2004/1107/11072004_ardhendu%20dakshi.htm
http://www.rediff.com/news/2003/jul/21tn.htm?zcc=rl
http://www.indianexpress.com/sunday/
fullcoverage/38.html

http://www.indianexpress.com/sunday/story/7261.html
http://www.deccanherald.com/deccanherald/
aug07/i1.asp

http://www.hinduonnet.com/
fline/fl2104/stories/20040227004202600.htm

http://www.hinduonnet.com/
fline/fl2015/stories/20030801004201500.htm

http://www.indianexpress.com/sunday/story/7975.html
http://www.newkerala.com/news3.php?action=fullnews&id=18327

67 பின்னூட்டங்கள்:

said...

குழலி

மிக மிக அருமையான பதிவு.

முதலில் நீதிதுறையில் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்று அவலங்கள் சற்று குறையும்.

நன்றி.

said...

i just wrote a similar blog with a slightly different take.

said...

குழலி:

தேவையான பதிவு. வேணுகோபாலின் மேலான நடவடிக்கையை வைத்து ஒரு சமூகத்தின் மீது ஒடுக்குமுறை நடவடிக்கை எடுப்பதாக 'சிலர்' திட்டமிட்டும் பலர் புரியாமலும் புலம்பும் போது வேணுகோபால் யார்? அவர் தலைமையிலான ஒரு அரசு நிறுவனம் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தில் இவ்வளவு முனைப்பாக பங்கேற்க முனைப்பாக இருப்பதன் தேவை என்ன? அதை ஒரு அரசு கையாளுவதில் ஊடகங்களுக்கு இத்தனை ஆர்வமும் முனைப்பும் ஏன்? போன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்ட பிறகே ஒருவர் இன்றைய சூழலில் இயல்பான பார்வையைப் பெறமுடியும். இல்லாவிடில் தேவர்களுக்கும் கடவுளர்களுக்கும் எதிராகக் கிளம்பிய இன்னொரு அசுரவடிவமாக, தண்டகாரண்ய சாதுக்களின் யாககுண்டத்தில் மாமிசம் வீசி அவமானப்படுத்திச் சிதைத்த நவீன வடிவமாக அன்புமணி சித்தரிக்கப்பட்டு, புராணமாக, வரலாறாக நிலைப்படுத்தப்படும் அவலம் தொடரும்.

அதே சமயத்தில் தமிழக அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கும், இன்றைய எய்ம்ஸ் மருத்துவர்களின் போராட்டத்துக்கும் நீதிமன்றங்கள் முகம் கொடுக்கும் விதம் அதை பின்னின்று இயக்கும் சக்திகள் இன்னும் மனுநீதியையே மனதில் கொண்டிருப்பதைக் காட்டியிருப்பதும் நல்ல முயற்சி.

இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் எளிதில் புரியும் வண்ணமும் எழுதியிருக்கலாம். இன்னும் போகப்போக நீதிக்காகக் (வேணுகோபாலுக்கு தாங்கள் நீதி என்று கருதுவதை) குரல் கொடுப்பவர்களின் வரிசயைக் காணும்போது பல உடைந்து போன தியரிகள் உண்மையில் உயிரோடு இருப்பது புலப்படும்.

said...

அன்பின் குழலி.. உங்கள் சுட்டிகளிலிருந்தே இந்தப் பத்திகள். இதை வசதியாக மறந்தீர்களா அல்லது மறைத்தீர்களா?
http://www.indianexpress.com/sunday/story/7975.html
என்ற சுட்டியிலிருந்து..

Solicitor General G E Vahanvati was at a loss of words to defend the Union Health Ministry’s action as a bench of Justice Arijit Pasayat and Justice L S Panta thundered, ‘‘What is this Mr Vahanvati? The government says something at one point of time and something else at other. When the government came on May 29 it was on its knees to do this or that. Gopal Subramanium (Additional Solicitor General) clearly told that no punitive action will be taken. Otherwise, we would have, on that day, said something.’’

The court was referring to the Centre’s assurance before it on May 29, during the hearing of a petition challenging the move to grant 27 per cent reservation for OBCs in higher educational institutions.

The Court even observed: ‘‘when they (the government) came on that day (May 29), they offered an olive branch. It is not done.’’


சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் வாக்கு மீறலைக் கண்டித்திருக்கிறதே.. அது மட்டும் உங்கள் கண்ணில் படவில்லையா.. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தான் சுப்ரீம் கோர்ட்டிடம் சென்று.."நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்.. இது சத்தியம்.. அவர்களை வேலைக்கு வரச்சொல்லுங்கள்..." என்று உறுதிமொழி அளித்துள்ளார்.. கோர்ட் அந்த வாக்குமீறலைத்தான் கண்டித்துள்ளது. அது தான் நீதியும் கூட...

மத்திய அரசு ஏன் அவ்விதமான வாக்குறுதியை தானே முன் வந்து அளித்தது என்பது தனியாக விவாதிக்கவேண்டிய ஒரு விஷயம்.

நீங்களெல்லாம்.. செய்திகளை கலர்க் கண்ணாடிகள் போட்டுத்தான் படித்துப் பழக்கமோ...?
என்னவோ போங்க.. எல்லாத்துக்கும் சாதி ரீதியான ஒரு கண்ணோட்டம் தான் உங்களுக்கு.. உங்களை மற்றும் நம்மை மாதிரி படித்தவர்களிடமிருந்து நாடும் நாட்டு மக்களும் நிறைய எதிர் பார்க்கிறார்கள்.. ஒரு மீடியாவுக்கு என்னென்ன பொறுப்புக்கள் உண்டென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அது எல்லாம் படித்தவர்களுக்கும் உண்டு.. அதில் முதலாவது.. "அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதும்".

இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை.

சீமாச்சு...

said...

சிவபாலன்...

//முதலில் நீதிதுறையில் இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்று அவலங்கள் சற்று குறையும்.
//
அப்புறம் அது நீதித் துறையாக இருக்காது.. அநீதித் துறையாகத்தான் இருக்கும்..
அப்புறம் வழக்கு பதிவு செய்யும் போதே.. இந்த வழக்குக்கு எங்களுக்கு ஒரு படையாச்சி நீதிபதியை அமர்த்தி விசாரித்துத் தீர்ப்பு சொல்ல அனுமதிக்குமாறு வேண்டுகிறேன்.. அப்படீன்னு சொல்லுவீங்களாக்கும்..

அப்படி அவர் உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொல்லாவிட்டால்... இவர் *** சாதி நீதிபதிகளிடம் விலை போய்விட்டார்.. அப்படீன்னு நீங்களே போராட்டம் நடத்தலாமாக்கும்.. அப்புறம் நீதித்துறை என்னய்யா நீதித்துறை... உங்க கட்சி சார்பில் தனித்தனியாக கட்டபஞ்சாயத்துத் துறை வெச்சுக்க வேண்டியதுதானே..

இது தான் சமூக நீதியோ..? இது செஞ்சா நாடு திருந்திடுமோ..?

சீமாச்சு

said...

குழலி

மிக மிக அருமையான பதிவு.
நன்றி.

said...

குழலி,

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் நீதி மன்றம் செயல்பட்டதைப் போலவே மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திலும் செய்திருக்க வேண்டும் என்றுதானே கூறுகிறீர்கள்?

அரசு ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்யவோ, சேவை வழங்க மறுக்கவோ உரிமை இல்லை என்பதும், மருத்துவத் துறையிலும் எந்த விதமான சேவை நிறுத்தங்களும் செய்யப்படக் கூடாது என்பதும்தான் உங்கள் கருத்து?

அரசு தண்டனை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப் போவதில்லை என்று சொல்வதின் பொருள், யாருக்கும் வேலை உயர்வையும், பணி நியமனத்தையும் நிறுத்த மாட்டோம் என்றுதான் கொள்ள வேண்டுமே ஒழிய, வேலை செய்யாத நாட்களுக்கும் சம்பளம் கொடுப்போம் என்று இல்லை. அது தண்டனை இல்லை, இயற்கை நீதி.

இதை சுட்டிக் காட்டி பதிவு போட்டதற்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

குழலி,

மிக சரியான பதிவு. ஏற்கனவே நான் முத்துவின் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அவாள் கோர்ட்டிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் :-)

இது போலத்தான் சுப்பிரமணி வழக்கிலும், இட ஒதுக்கீட்டு வழக்கிலும் அவாள் கோர்ட் நடந்துகொண்டுள்ளது.

தகுதி,திறமை உள்ள சாமி குறைந்தபட்சம் வேலை நிறுத்தம் செய்த சாமிகளை தடுத்து நிறுத்தியதா?. இதுதான் அவர்களின் தயாள சிந்தனை. எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன - எனக்கு தேவையானது வந்தால் போதும்.

இந்த சாமிகள் கவனிக்க வேண்டிய முறையே தனி. அந்த தைரியம் மத்திய அரசிடம் இல்லை.

said...

சீமாச்சு,

//கோர்ட் அந்த வாக்குமீறலைத்தான் கண்டித்துள்ளது. அது தான் நீதியும் கூட...//

சரி ஒரு வாதத்திற்கு அவாள் கோர்ட் சொன்னது சரி என்றே வைத்துக்கொள்வோம்.

இங்கு குறிப்பிட்ட இரண்டு போராட்டங்களையும் சரி சமமாகத்தான் அவாள் கோர்ட் எடை போட்டுள்ளதா என்பதை நீங்கள் போட்டுள்ள கலர்க்கண்ணாடியை எடுத்துவிட்டு பார்க்கவும்.

said...

சீமாச்சு,

//அப்புறம் அது நீதித் துறையாக இருக்காது.. அநீதித் துறையாகத்தான் இருக்கும்..//

அப்ப அவாள் சொன்னாதான் நியாயம் மத்தவா சொன்னா அநியாயம். அடாடா சத்தியமான வாக்கு :-)

said...

அருமையான பதிவு...
ஆனால் பதிவின் மூலம் நாம் எதுவும் சாதிக்க இயலாது.
அரசியல் மற்றும் சக்தி வாய்ந்த பீடங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் சரி சமமான பங்கீடு இருக்க வேண்டும். அதை அடைவதற்கு இடஒதுக்கீடு அவசியத் தேவையாயிருக்கிறது.

//கடைசி செய்தியாக வேணுகோபாலின் பதவி நீக்கத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.//

ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு இறுதியானதாக இருக்காது என நம்புவோம். தேவையில்லாத வெட்டி செயல்களுக்காக பொது நல வழக்கு போடும் பொதுநல வாதிகள், ஒரு உயிரைக் கொன்ற கடமையைச் செய்யத் தவறிய AIIMS மருத்துவர்கள் மீது ஏன் இன்னும் கொலை வழக்கு போடவில்லை என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்தியா இன்று முதல் இந்துஸ்தான் எனவும் பார்ப்பனாதேசம் எனவும் அழைக்கப்பட வேண்டும் என அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

said...

//இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் எளிதில் புரியும் வண்ணமும் எழுதியிருக்கலாம்.
//
ஆமாம் சரிதான், இன்னும் இதை தெளிவாக எழுதினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தாலும் பாயலாம், அல்லது பாயுமென சிலர் அறிவுரை செய்யலாம்(மிரட்டலாம்) :-)

மேலும் கவிதையிலும் பின்னூட்டத்திலும் உள்குத்து கண்டுபிடிக்கும் அளவிற்கு திறமைசாலிகள் நம் வலைப்பதிவர்கள் :-)

said...

//நீங்களெல்லாம்.. செய்திகளை கலர்க் கண்ணாடிகள் போட்டுத்தான் படித்துப் பழக்கமோ...?
என்னவோ போங்க.. எல்லாத்துக்கும் சாதி ரீதியான ஒரு கண்ணோட்டம் தான் உங்களுக்கு..//
வாங்க சீமாச்சு சுகமா? என்னங்க இங்கே செய்திகளை மட்டும் தானே போட்டிருக்கேன், இதிலே சாதி எங்கே வந்தது? பார்த்துங்க இப்படி என்னை சொன்ன மாதிரி நீதிமன்றத்தை சொல்லிடாதிங்க, அப்புறம் நீதிமன்ற அவமதிப்பாயிடும் :-)

said...

சீமாச்சு அய்யா,

நீங்க சொன்ன கருத்து நல்ல காமெடி. வாழ்க உங்கள் நகைச்சுவை வளம்..

said...

குழலி,

நல்ல பதிவு.பொறுமையாக படித்துவிட்டு விளக்கமாக எழுதுகிறேன்.பு.பி களின் இரட்டை நிலைப்பாடு எனக்கு என்றுமே ஆச்சரியம் இல்லை.

இந்த உச்சநீதிமன்றத்தின் கருத்து மிகவும் துரதிஷ்டவசமானது. பாலச்சந்தர் கூறியது போல் கருத்து வேறு தீர்ப்பு வேறு என்று வந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.

said...

அருண்மொழி,
//சரி ஒரு வாதத்திற்கு அவாள் கோர்ட் சொன்னது சரி என்றே வைத்துக்கொள்வோம்.

இங்கு குறிப்பிட்ட இரண்டு போராட்டங்களையும் சரி சமமாகத்தான் அவாள் கோர்ட் எடை போட்டுள்ளதா என்பதை நீங்கள் போட்டுள்ள கலர்க்கண்ணாடியை எடுத்துவிட்டு பார்க்கவும்.
//
கோர்ட் இரண்டு போராட்டங்களை சரி சமமாகப் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் இரண்டு வழக்குகள்.. மற்றும் எடுத்து வைக்கப்படும் வாதங்கள்.. மற்றும் இவை சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள்... கோர்ட் போராட்டங்களுக்குத் தீர்ப்பு சொல்லாது. அது அரசாங்கத்தின் வேலை. கோர்ட் வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு சொல்லும்.

டிஸ்கி:
நான் சட்ட நுணுக்கம் படித்தவனல்ல. என் கருத்துக்கள் பொது அறிவையொட்டியே எழுதப்படுகின்றன.

சீமாச்சு.

said...

தங்கமணி..
//நீதிமன்றங்கள் முகம் கொடுக்கும் விதம் அதை பின்னின்று இயக்கும் சக்திகள் இன்னும் மனுநீதியையே மனதில் கொண்டிருப்பதைக் காட்டியிருப்பதும் நல்ல முயற்சி.
//

:)))
மனு நீதியை பிடிச்சிக்கிட்டிருக்கிறதா நீங்க சொல்றவங்களே விட்டதுக்கப்புறமும் நீங்க விடறதாயில்லை போலிருக்கு...
நடத்துங்க..

சீமாச்சு...

said...

//கோர்ட் இரண்டு போராட்டங்களை சரி சமமாகப் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் இரண்டு வழக்குகள்.. மற்றும் எடுத்து வைக்கப்படும் வாதங்கள்.. மற்றும் இவை சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள்... கோர்ட் போராட்டங்களுக்குத் தீர்ப்பு சொல்லாது. அது அரசாங்கத்தின் வேலை. கோர்ட் வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு சொல்லும்
//
ஹி ஹி, சீமாச்சு விட்டு தள்ளுங்க, அதான் பதிவின் கடைசியில் சொன்னோமே "வாழ்க சமநீதி, வாழ்க சமூகநீதி" :-)

said...

//மனு நீதியை பிடிச்சிக்கிட்டிருக்கிறதா நீங்க சொல்றவங்களே விட்டதுக்கப்புறமும் நீங்க விடறதாயில்லை போலிருக்கு...
நடத்துங்க..
//
சீமாச்சு அதான் சொல்லியிருக்கோமே "வாழ்க சமநீதி, வாழ்க சமூக நீதி" :-)

said...

அன்பின் மா. சிவக்குமார்,
//அரசு தண்டனை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப் போவதில்லை என்று சொல்வதின் பொருள், யாருக்கும் வேலை உயர்வையும், பணி நியமனத்தையும் நிறுத்த மாட்டோம் என்றுதான் கொள்ள வேண்டுமே ஒழிய, வேலை செய்யாத நாட்களுக்கும் சம்பளம் கொடுப்போம் என்று இல்லை. அது தண்டனை இல்லை, இயற்கை நீதி//

வேலை செய்யாத நாட்கள் என்பது இது போன்ற ஊழியர்களுக்கில்லை. அவர்கள் தினக்கூலிகள் இல்லை.. மற்றும் மருத்துவத்துறையில் உள்ளவர்கள் 8 மணி நேர வேலைக் கட்டுப்பாடுகள் மீறியும் உழைக்கக் கடமை பட்டவர்கள்.. அவர்களுக்கு அந்த நாட்களுக்கு சம்பளம் தரமாட்டேன் என்று சொல்வது தவிர்க்க முடியாத பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

இது இயற்கை நீதியில்லை.. சிவகுமாரின் நீதியாக வேண்டுமானால் இருக்கலாம்.

சீமாச்சு

said...

சீமாச்சு,

பயங்கர காமெடி உங்களோட..பதிவுக்கும் உங்க பின்னூட்டத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?

பதிவில் தெளிவாக அவர் சொல்லி இருப்பதை படிக்காமல் வந்து எதுக்கு அவசர குடுக்கையாக உங்கள் அறியாமையை காட்டுகிறீர்?

மேல் நடவடிக்கை என்றால் வேறு அய்யா. வேலை செய்யாமல் சம்பளம் தருவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தூங்குவது மாதிரி தொடர்ந்து இரண்டாவது பதிவாக நடிப்பது நியாயமா?

said...

//கோர்ட் இரண்டு போராட்டங்களை சரி சமமாகப் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் இரண்டு வழக்குகள்.. மற்றும் எடுத்து வைக்கப்படும் வாதங்கள்.. மற்றும் இவை சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள்... கோர்ட் போராட்டங்களுக்குத் தீர்ப்பு சொல்லாது. அது அரசாங்கத்தின் வேலை. கோர்ட் வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு சொல்லும்//


இதுதான் ஹைலைட்..உங்கள் மனம் இயங்கும் விதம் இதில் வெளிப்படுகிறது.

கோர்ட் எப்படி பார்க்கிறதோ ஆனால் சமுகம் ஒன்றாகத்தான் அய்யா பார்க்கும்.பார்க்கவேண்டும்.

said...

//கோர்ட் இரண்டு போராட்டங்களை சரி சமமாகப் பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் இரண்டு வழக்குகள்.. மற்றும் எடுத்து வைக்கப்படும் வாதங்கள்.. மற்றும் இவை சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள்... கோர்ட் போராட்டங்களுக்குத் தீர்ப்பு சொல்லாது. அது அரசாங்கத்தின் வேலை. கோர்ட் வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு சொல்லும்.//

Thanks for highlighting that these courts are just court of LAW & not court of JUSTICE.

குழலி, இந்த கூட்டம் கொடுக்கும் தீர்ப்புகளை "போங்கடா ஜாட்டான்களா" என்று தூக்கி போட்டுவிட்டு போகவேண்டியதுதான்.

said...

அய்யய்யோ சீமாச்சு நல்லா கொட்டை எழுத்துல சிவப்பு நிறத்துல போட்டிருக்கே "as leave on loss of pay in respect of all employees " அப்படினு பதிவில் அது தமிழக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டதுங்கோ...

//வேலை செய்யாத நாட்கள் என்பது இது போன்ற ஊழியர்களுக்கில்லை. அவர்கள் தினக்கூலிகள் இல்லை.. மற்றும் மருத்துவத்துறையில் உள்ளவர்கள் 8 மணி நேர வேலைக் கட்டுப்பாடுகள் மீறியும் உழைக்கக் கடமை பட்டவர்கள்.. அவர்களுக்கு அந்த நாட்களுக்கு சம்பளம் தரமாட்டேன் என்று சொல்வது தவிர்க்க முடியாத பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
//
எனக்கு தெரிந்து தமிழக அரசு ஊழியர்களும் தினக்கூலிகள் அல்ல.... நீங்க என்ன சொல்றீங்க சீமாச்சு

said...

ஹலோ முத்து (தமிழினி),
//பதிவில் தெளிவாக அவர் சொல்லி இருப்பதை படிக்காமல் வந்து எதுக்கு அவசர குடுக்கையாக உங்கள் அறியாமையை காட்டுகிறீர்?//
நான் பதிவுக்கு சம்பந்தமாத்தான் எழுதியிருக்கேன்.. இன்னும் நல்லாப் படிங்க..

தமிழக அரசு போராட்டத்தில் "no work .. no pay" என்று சொன்னது தமிழக அரசுதான் (look at the draft of the affidavit submitted by Govt. of TamilNadu).. அதை சுப்ரீம் கோர்ட் endorse மட்டுமே செய்தது.

மருத்துவர்கள் போராட்டத்தில் இப்படி ஒரு நிலை எடுக்க வேண்டுமென்றால் அதை மத்திய அரசு ஒரு affidavit-ல் முன்னமே தாக்கல் செய்திருக்க வேண்டும் (தமிழக அரசு செய்ததைப் போல). அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்கள் இந்த "no work .. no pay" என்று stand எடுக்க முடியாது. அது இந்த மருத்துவர்கள் வேலையில் சேரும்போது கொடுக்கப்பட்ட காண்ட்ராக்டில் இருந்த கண்டிஷன் கிடையாது...
"punitive action" என்பது தண்டனையாகத் எடுக்கப்படும் எல்லா முடிவுகளையும் குறிக்கும். போராட்ட காலத்தில் சம்பளம் தரமுடியாது என்ற முடிவையும் சேர்த்துத்தான்.

நன்றி,
சீமாச்சு..

பி.கு.: இது அன்பு நண்பர் குழலியின் பதிவு. இதில் நான் தேவைக்கு அதிகமாக நிறையவே பின்னூட்டங்கள் இட்டுவிட்டேன்.. இந்தப் பதிவுக்கு இனி என் பின்னூட்டம் கிடையாது.. :)))
பி.பி.கு: குழலி என் பதிவில் எந்த பின்னூட்டமும் இதுவரை தரவில்லை என்பதை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இது இல்லை.

said...

சீமாச்சு,

அதுதான் இரண்டாவதாக ஒரு பத்தி போட்டிருந்தீங்களே..அதை சொல்றீங்க..இல்லையா?

நியாயம் சட்டத்தின் சந்து பொந்தில் அடைப்பட்டால் தப்பில்லை உங்களை பொறுத்தவரை..

ஹிஹி எனக்கும் குழலி அன்பு நண்பர்தான்:))

said...

தினக்கூலியா யார் என்பதை சாதீய அடிப்படையில் நிர்ணயிக்க நினைப்பதுதான் இந்த நாட்டின் பிரச்சினையே

said...

கொலை செய். ஆனால் சட்ட நுணுக்கங்களின் படி செய்.
அது குற்றமுமாகாது. அதர்மமும் ஆகாது. விடுதலை செய்யப்படுவாய். இதுவே அறம். இதுவே நீதி.
(வேறொரு நீதி புத்தகத்தின் வாசகங்கள் நினைவுக்கு வருகிறது :-) )

அருமையான தத்துவம்...
**

வேணுகோபால் விசயத்தில் புனித பிம்பங்கள் தங்கள் கோர முகங்கள் வெளிப்பட்டு வருவதை உணரமால் மேலும் மேலும் தரிசனம் தருகிறார்கள்.

இது ஒரு நல்ல முன்னேற்றமே என்ற வகையில் ஒரு மகிழ்ச்சி.

said...

Mr.Kuzhali
The doctors went to strike after protesting.They did not go on strike when the announcement about
reservation was made.Since reservations in PG courses would
affect them and reservation in central universities would affect those who do not come under reservation they went on strike,
that too after lodging their
protest for few weeks.You can
see the details in
http://www.youth4equality.org/how-we-came-about.asp
Both the cases are different.The Supreme Court did warn the striking
doctors and asked him to withdraw
strike.It told that them if strike
was not withdrawn contempt of court
would follow.The Central govt. did
try to take action against the
doctors but it could not break the
strike.In case of doctors the central govt. tried to ignore the strike, refused to talk with them
in the beginning.But only later
it realised that doctors would not
bow to its threats and climbed down.Anbumani thretended them with
dire consequnces, eviction notices
were served, police used force-
nothing worked.So govt. failed
in breaking the strike.
In any case there are any number
of bloggers who will support you
because they dont want to think
or check the facts.Have a great day
with them :).

said...

//The Supreme Court did warn the striking
doctors and asked him to withdraw
strike.It told that them if strike
was not withdrawn contempt of court
would follow.//
அஃக்கா ஆகா... அது சரி இந்த எச்சரிக்கைக்கு முன் ஒரு கருணையும்(வேலைநிறுத்தம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது) மூன்று நாள் நேரமும் அளித்த தொழிலாளர்களின் மீது கருணையான நீதிமன்றங்கள் தமிழக அரசு ஊழியர்களின் மீது பொழிந்த கருணை மழையை பதிவில் ஆங்காங்கே கொட்டை எழுத்தில் சுட்டியுள்ளேன்.

வாழ்க சமநீதி வாழ்க சமூக நீதி...

said...

What prevented the central govt. from telling the court that it would treat the strike period
as no work no pay, then.The govt.
terminated their services and three days was given to recall
them.In case of TN employees
the Court asked them to join
work at once as they were on
strike for a longer period.

said...

சமூகநீதிக்காக சமத்துவ சமுதாயத்தை உருவாக்க, எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக பிற்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்த மத்திய அரசை எதிர்த்து அகில இந்திய மருத்துவ கழகத்தின் (AIMS) அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு கூட வாய்ப்பளிக்காமல் நேரமளிக்காமல் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்

April 5, 2006 : The HRD minister Arjun Singh lets it out in the media that the govt. proposes to introduce reservations for OBC's by 27% in central universities, including IITs, IIMs, AIIMS, Delhi University, and many others.

Many of us on learning about this, must have felt a combination of grief, distrust, anger and betrayal. Many of us must felt cynical and dismissed it as yet another gimmick by yet another political party to garner votes.

However a group of Students in UCMS (University College of Medical Sciences) held a small meeting at the boy's hostel, to ponder over the situation. It was decided to create a forum which was tentatively named 'Youth for Equality'.

The same day, they then went to the people with whom they were most familiar, their friends in the 4 other Medical colleges of Delhi. All of them showed a similar feeling of resentment towards this reservation policy and the determination to do something about it. Without any hesitation they immediately joined in.

Thus Youth for Equality was born with Students of UCMS, AIIMS, LHMC (Lady Hardinge Medical College), VMMC (Vardhman Mahavir Medical College) and MAMC (Maulana Azad Medical College) as its founding members.

Though at that time, we were probably driven by the idealism, passion and courage of youth, no one thought that we would one day be a nation-wide movement. The credit for that cannot go to us, or any single entity, but to every single person who supports us.

Since then we have been joined not only by the Medical fraternity of India at large, but also the IITs (who infact helped us develop this website), IIMs, science/art/law/engineering colleges all over India. Also parents, resident welfare associations and corporate bodies.

MAJOR EVENTS THAT MARKED OUR PRESENCE-
17th April - BLACK DAY held in all Delhi medical colleges to show solidarity on the issue.
19th April - Demonstration held at Raj Ghat. Over 700 medical students join in.

26th April - A peaceful protest was to be held in front of HRD minister's residence. Our buses were hijacked and taken to Jantar Mantar. AIIMS and UCMS managed to reach Tughlaq Road, but were carted off to Jantar Mantar after few hours. We waited at Jantar Mantar and gave a deadline to HRD minister to come and meet us. Deadline is not met and the students then marched peacefully on Janpath. Students are barricaded, water cannoned and tear gased. Event is covered prominently on major TV channels and print media.



27th April - Demonstration at INDIA GATE. HRD minister invites our representatives to talk. 5 representatives meet him. The minister delays his comments till state elections are over. The strike by students continues, though Interns and residents return to duties.

28th April- The fire has spread across the nation. Demonstrations in Bangalore, Amritsar,Ludhiana and Rajkot. Meanwhile students continue with demonstrations at India gate.

28th April - Press conference at AIIMS on behalf of Youth for equality. Youth for Equality appeals to all colleges in India to have peaceful protests in their respective cities, and support the cause.

2nd May - A HUGE MARCH from MAMC to Parliament Street. Students from engineering colleges,Delhi University,I.P. university, school students and even general public joined us in our protest. A signature campaign was launched on a 50 metre long paper roll which was spread out on parliament street.

12th May - Close to a thousand students gathered at LHMC at 9 in the morning to continue their protests against extension of reservations. After learning that our "Hon'ble(?)" HRD Minister has refused to comment on the issue even after the elections were over, the students decided spontaneously to start a march. The students rushed out of the Gates of LHMC, dodging the police and RAF deployment and blocked the Connaught Place at several places. Then the students proceeded towards the historic India Gate lawns, dodging thousands of policemen and RAF deployed along the route. After Running for about twelve kilometres, the students managed to reach within half a kilometre of the corridors of power (North & South Blocks, & Rashtrapati Bhawan). There we sat down on the historic Rajpath to wait for a reply from the government. But then…..

13th May - MUMBAI: Peacefully protesting Students beaten up by police....SHAME! SHAME! We all know what happened at Mumbai on 13th May. We saw it on our TV sets, read it in the papers, heard it on radio. We are all deeply anguished and our blood boiled when we saw scenes of how the Mumbai students were being beaten up.
The government had displayed its total apathy on the issue. It had been over 2 days after the election commission's restrictions were over and we were yet to hear an answer.

14th May - Indefinite strike announced by all Resident Doctors Associations of Delhi. ALSO IMA (Indian Medical Association) both DELHI and MUMBAI chapters called for a 24 hour strike on 15th May. They asked both Govt and Private doctors to join the strike. We thank the IMA for their support.

Medical students of Delhi went on indefinite hunger strike at AIIMS.

Our hunger strike has continued since 14th May…….
138 had joined initially…. The number began decreasing after 3 days when students began to get ill….. those remaining continue to suffer as you read this….. we are proud of all those who still fight on to achieve the goals they had started out with.
The hunger strike has been joined by students of IIT and DU among others.
கிட்டதட்ட 4 வாரங்கள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்த பின்பே வேலைநிறுத்தம் செய்தனர். அதன்பின்னரே அரசு இறங்கி வந்தது.அரசு திமிர் பிடித்துத்தான் நடக்கிறது - அது ஜெயலலிதா அரசா இருந்தாலும் சரி,மன்மோகன் சிங் அரசாக இருந்தாலும் சரி.எந்தப் போராட்டத்திலும் அரசு முதலில் மிகக்டுமையாக கையாள முயலும், அது தோற்றால் இறங்கி வரும்.பேச்சு வார்த்தைக்கு
அரசை வரவைக்க போராட்டங்கள் தேவை.மருத்துவ மாணவர்களிடம் அரசு எப்படி நடந்து
கொண்டது, வீடுகளை காலி செய்யச் சொன்னது, போலிஸ் மூலம் அடக்க நினைத்தது, பணி நீக்கம்
என்று உத்தரவிட்டது. எதுவும் பலனற்றுப் போனதால் போராட்டத்தினை விலக்கிக் கொண்டால்
போதும் என்று இறுதியில் இறங்கிவந்தது. நீதிமன்றத்தில் கடுமையான நிலைப்பாட்டினை
எடுக்க வேண்டாம் என்று யார் சொன்னது.

said...

தண்டனை நடவடிக்கை எடுக்க மாட்டோ ம் என்று
சொல்லாமல் முதலிலேயெ எஸ்மா, டெஸ்மா, எல்லா
மாவையும் பாய்ச்சியிருந்தால் கோர்ட் கண்டனம்
செய்திருக்காது அல்லவா? சோ போன்றவர்கள்
'தைரியமான நடவடிக்கை' என்று பாராட்டியிருப்பார்கள்.

:)

said...

//TN employees
the Court asked them to join
work at once as they were on
strike for a longer period.
//
நீண்ட கால வேலை நிறுத்த போராட்டமல்ல, வேலை நிறுத்தம் 3ம் நாளே பிசு பிசுத்ததது,நீதிமன்றம் உடனடியாக வேலைக்கு செல்ல சொன்னது 5ம் நாள் அல்லது 6ம் நாள் என நினைக்கின்றேன், ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்களின் அடாவடி வேலை நிறுத்த போராட்டம் 19நாட்களுக்கு பிறகும் 3 நாள் நேரம் வழங்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தால்...

வாழ்க சமநீதி வாழ்க சமூகநீதி

said...

குழலி உங்கள் பதிவுக்கு நீங்கள் சுட்டி யெல்ல்லாம் தரவேண்டாம் நான் தினமும் மறக்காமல் படிக்கும் பதிவுகளில் ஒன்று கடலூர் காட்டானின் களத்து மேடு ஒருவேளை நான் பின்னூட்டம் எழுதாததால் நான் படிப்பதில்லை என்று நினைத்துவிட்டீர்களோ

said...

இங்கே பதிவுகளை படிக்க வரும் சீமாச்சு போன்றவர்கள் பதிவுகளை படிக்கும் முன்பே எதிராகத்தான் பின்னுட்டமிடவேண்டுமென்று வருபவர்கள் .அவர்கள் என்றும் மாறப்போவது இல்லை..மாறித்தான் ஆக வேண்டும் என்கிற காலகட்டத்தில் மாறியதுபோல் நடிப்பார்கள்..வேண்டுமானால் இப்படி பதிவு போடுங்கள்

ஜகத்தை காத்த ஜகத்குரு ஜெயெந்திரர்..

சாய்பாபாவே தெய்வம்...பெரியார் ஒரு முட்டாள்...சிந்தனைச்செல்வி ஜெயலலிதா .... சொல்லின் செல்வர் சோ...

இப்படி போட்டா அவா வந்து பஜனை பண்னுவா...அத வுட்டு போட்டு சமூக நீதி சாம்பார் நீதின்னு என்ன சின்னபுள்ளத்தனமா எழுதிக்கிட்டு....

said...

இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தையும் சனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பும்முன் வேணுகோபாலின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் போராடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லோரும் ஒரு பிரச்சினையை மறந்துவிட்டோம். இடஒதுக்கீடு பற்றி மட்டுமே பேசுகிறோம்.

இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஒரு வேணுகோபால் காரணமாக நிறைவேற்ற இயலவில்லையென்றால், மக்களாட்சி தத்துவத்திற்கே இது வேட்டாக முடியலாம்.

said...

seemachu has got right understanding of what is going on. I totally support him. It was giverment which gave the promise and broke it later, which was condemned. Total mismanagment by govt. Totally wrong interpretation and unwanted spin to the case.

said...

நீண்ட கால வேலை நிறுத்த போராட்டமல்ல, வேலை நிறுத்தம் 3ம் நாளே பிசு பிசுத்ததது,நீதிமன்றம் உடனடியாக வேலைக்கு செல்ல சொன்னது 5ம் நாள் அல்லது 6ம் நாள் என நினைக்கின்றேன், ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்களின் அடாவடி வேலை நிறுத்த போராட்டம் 19நாட்களுக்கு பிறகும் 3 நாள் நேரம் வழங்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தால்...


-- Ithuku karanam jayalalitha arasin stand in court..in AIIMS case central govt took a vazha vazha kozha kozha stand..so court had to give this verdict..it is not ourt's fault..u are as usual spining the facts..it is obvious.

said...

//so court had to give this verdict..
//
அதான் புனித பசு நீதிமன்றம் கொடுத்துள்ளதை பார்த்தோமே, நீதித்துறையில் இடஒதுக்கீட்டாக போராட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.

said...

I by no means justirfy strike by doctors..they shud be punished for that. In this case, it is not supreme court who said no action shud be taken against striking docs, it was govt who gave that assurance and later went back from its words. Why u want to spin it as some judges were casteists is only known to you.

said...

//it is not supreme court who said no action shud be taken against striking docs,//
சிவப்பில் கொட்டை எழுத்தில் பதிவில் எழுதியது கீழே தந்துள்ளேன்...
the government should appropriately consider the feelings of students and not take any punitive action.

அதன் முழு பத்தி
A vacation bench comprising Justice Arijit Pasayat and Justice L S Panta said if the strike is called off, the government should appropriately consider the feelings of students and not take any punitive action.

இப்போது தெரிகிறதா மத்திய அரசாங்கம் உறுதி மொழி தந்ததா அல்லது உச்ச நீதிமன்றம் தரவைத்ததா என்று....

said...

வேலைநிறுத்த(வேலை செய்யாத) நாட்களுக்கு சம்பளம் வழங்க புனிதப்பசு நீதிமன்றம் உத்தரவு... மேலதிக தகவல் இங்கே

http://www.dinamalar.com/2006july18/court_ind1.asp

said...

சட்டம் ஒரு இருட்டறை
- அறிஞர் அண்ணா.

said...

எதுவும் சொல்வதற்கு முன் என் நிலைப்பாடை முதலில் சொல்லி விடுகிறேன்.
உயிர் காக்கும் மருத்துவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது தவறு.
அதன் பிறகு அந்த நாட்களுக்கு சம்பளம் வேண்டும் எனச் சொன்னது அதை விடப் பெரிய தவறு.
அப்படியே கொடுத்தாலும், அதை ஏதாவது நல்ல காரியத்திற்கு நன்கொடையாக அளித்திருக்க வேண்டும் இவர்கள்.
அட் லீஸ்ட், அந்த மரித்தவரின் குடும்பத்துக்கு கொடுத்திருக்கலாம்.

இப்போது நிகழ்வுக்கு வருகிறேன்.
இதை தமிழக அரசு ஊழியர் போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல.

சரியோ, தவறோ, அரசு ஊழியர்கள் மேல் பாய்ந்தது எஸ்மா சட்டம்.
அதன் சட்ட வரயறைக்கு உட்பட்டே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது.

மருத்துவர்கள் மீது அப்படிப்பட்ட ஏதும் பாயாத நிலையில், இதனை முந்தைய நிலையோடு இணைத்து சமூக நீதி என்று பேசுவது தவறெனக் கருதுகிறேன்.

சுப்ரீம் கோர்ட் சட்டத்தை மட்டுமே பார்ப்பது என்பதனைக் கவனத்தில் கொண்டால், இதன் உண்மை புரியும்.

சட்ட நீதிக்குள், சமூக நீதியைக் கொண்டுவந்து கலப்பது, சரியல்ல.

ஜெ. அரசு மனிதாபிமானத்தோடு நடக்கவில்லை.
ம. அரசு நடந்து கொண்டது.
இதுதான் நடந்தது.

said...

ஹிஹி

என்னத்த சொல்வேணுங்கோ..வடு மாங்கா ஊறுதுங்கோ..வடுமாங்காய் ஊறலையிலே.....தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ...

:))

said...

Anti-quota stir: Pay striking doctors, SC orders Centre
Tuesday July 18 2006 00:43 IST
PTI

NEW DELHI: The Supreme Court on Monday directed the government to release salary of the doctors who participated in the recent anti-quota stir here.

A bench of Justice Arijit Pasayat and Justice L S Panta, however, clarified that the medicos will get salary only from May 14 to 30, the day the apex court had asked them to resume their duties.

The medicos had sought salary of period beginning May 14 to June 3.

The court observed that “as a matter of law, we don’t approve of doctors going on strike. Normally, the principle of ‘no work, no pay’ would have been applied but for your (Centre’s) assurance that no punitive action will be taken against them if they join back duties. So you pay the salary.”

Additional Solicitor General Gopal Subramanian submitted that the departure from the ‘no work, no pay’ principle should not be a precendent.

The bench said it was making the departure only because the government had given an assurance to the students before the court in this regard.

The court has already ordered that the strike period–May 14 to June 3– shall not be taken note of for the purpose of their completion of training and internship and appearance in post-graduate examination.

Earlier, taking strong exception to the government’s decision not to release salary of the doctors who took part in an anti-quota stir, the court had on July 5 said the government should act like a model employer.

The court had said that the government promised no action whatsoever would be taken against the doctors and that it simply wanted them to resume work as patients were suffering.

Complaining that the government was taking punitive action against doctors who took part in anti-quota stir, Resident Doctors Associations of AIIMS and Maulana Azad Medical College had moved the court on June 30.

They had also sought the leave of internship and residency during the strike period from May 14 to June 3, be condoned so that they were not rendered ineligible to appear in the coming PG entrance examinations.

They had drawn the court’s attention to the assurance given by the Prime Minister on May 28 that “no action will be taken against the agitating students, interns and resident doctors in any form as regards service break, termination, pay deduction, legal notice, etc.”

Thereafter, a similar assurance was given by the Additional Solicitor General to the court on May 31, they pointed out.

An AIIMS office note dated June 6 had stated the doctors may be released salary but on June 12 the ministry of Health asked AIIMS registrar to apply “no work, no pay” rule.


-----------------------------------
Centre assured the Court and PM also promised that no action would be taken.So why blame the court.
Blame your Anbumani.

said...

//‘no work, no pay’ would have been applied but for your (Centre’s) assurance that no punitive action will be taken against them if they join back duties. So you pay the salary.”

Additional Solicitor General Gopal Subramanian submitted that the departure from the ‘no work, no pay’ principle should not be a precendent.

The bench said it was making the departure only because the government had given an assurance to the students before the court in this regard.
//
வேலை செய்யாததற்கு கூலி தராதது தண்டனையா? நாளை கூலிக்கார பாட்டாளிவர்க்கம் ஏதேனும் இதே நியாயத்தை இந்த தீர்ப்பை காண்பித்து பேசினால் என்ன செய்வது என இப்போதே ஒரு சப்பைகட்டும் சேர்த்தாகிவிட்டது, நல்லா இருக்கு நியாயம் தூ.....

//So why blame the court.
Blame your Anbumani.
//
யாரை குறை சொல்ல வேண்டுமென படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்...

said...

Kuzhali, as you know Anbumani cannot remove the judges,nor Ramadoss can appoint
them. So you can ask them to create a Vanniyar Court and
have the pleasure of appointing
judges to that.

said...

//Kuzhali, as you know Anbumani cannot remove the judges,nor Ramadoss can appoint
them. So you can ask them to create a Vanniyar Court and
have the pleasure of appointing
judges to that.
//
நீதித்துறையில் இடஒதுக்கீடு கேட்க வேண்டும்(வன்னியர்கள் என்றெல்லாம் பிரிக்க வேண்டாம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் என கேட்டுக்கொள்வோம்), கேட்போம், பெறுவோம்.... இது சமூக நீதிக்காக மட்டுமல்ல சம நீதிக்காகவும்

said...

நீதித்துறையில் இடஒதுக்கீடு கேட்க வேண்டும்(வன்னியர்கள் என்றெல்லாம் பிரிக்க வேண்டாம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் என கேட்டுக்கொள்வோம்), கேட்போம், பெறுவோம்.... இது சமூக நீதிக்காக மட்டுமல்ல சம நீதிக்காகவும்
Some more demands:

Include minorities also.
Only a vanniyar judge can hear cases between vanniyar(s) or
between vanniyar and govt.

If one party is a vanniar then
the case should be heard by a
vanniar judge or bench should
have one vanniyar as judge.

When a vanniyar appeals the
bench that hears that appeal
should have atleast one vanniyar
as judge.

Caste associations and caste based
parties will appoint judges.PMK
for vanniyars,TMMK for muslims.

தாழ்த்தப்பட்டவர்கள் -why do you shed
crocodile tears for them.Vanniyars
prevent them from voting in some
places.

said...

நான் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறேன்.

தீர்ப்புக்கு பற்றிய எனது எண்ணம்.

சமமாக நீதிவழங்கப்படும் இடம் என்று இனிமேல் இந்திய நீதிமன்றங்கள் சொல்லிக் கொள்ள எந்த அருகதையும் இல்லை. குறிப்பாக உச்ச நீதிமன்றத்திற்கு.

த்தூ.

said...

கடைசியாக பின்னூட்டமிட்ட அனானி என் முதலை கண்ணீர் பற்றி தாராளமாக பேசலாம், இதை பேசுவதன் மூலம் நீங்கள் யோக்கியசிகாமணிகளின் நியாயம் நீதி தர்மம் பற்றி என்ன நினைக்கின்றீர், அதை பற்றி முதலில் சொல்லுங்களேன்... முடிந்தால் பெயர் போட்டு(நாளைக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் எதிர்கொள்ள வேண்டுமே)

said...

DK newspaper reports that more than 30000 cases pending in supreme court & 3200000 cases pending in highcourts. Is this true?

26 supreme court judges are there. There is not even a single BC/OBC/MBC judge.

Out of 640 highcourt judges only 125 were from BC/OBC/MBC/SC/ST.

Can anyone explain why so many cases are pending inspite of the "brainy" people occupying most of the seats.

- பெயரா முக்கியம்

said...

எதிர்பார்த்தது தான்...

முத்துக்குமரனின் இந்த பதிவை மீள் வாசிப்பு செய்தேன் இப்பொழுது.

அங்கே இட்ட பின்னூட்டம்
"சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க அதிகார வர்க்கமே தரகு வர்க்கமாக மாறியிருப்பது தான் சுதந்திர, (எதிர்கால) வல்லரசு?! இந்தியாவின் பலம்! வெட்கக்கேடு."

இங்கே பொருந்தி வரும் என நினைக்கிறேன்.

said...

அடடே வெத்து வேட்டு முத்துகுமரனுக்கு என்னா தில்லு பாருங்கய்யா. நீதி மன்ற அவமதிப்பு செய்யுறாராம். முழு முகவரி கொடுத்து எழுதுங்கய்யா முதலில். அப்புறம் நீதி மன்ற அவமதிப்பு செய்யுறதா ப்லிம் காட்டலாம்.

நான் கூட இங்கே பெயர் போடாம எழுதி நீதிமன்ற அவமதிப்பு செய்யுறேன்.

said...

//அடடே வெத்து வேட்டு முத்துகுமரனுக்கு என்னா தில்லு பாருங்கய்யா. நீதி மன்ற அவமதிப்பு செய்யுறாராம்.//
எனண்து நீதிமன்றமா? நீதிமன்றம்னா நீதி கொடுக்கனுங்க.... ஓ... அது மனுநீதிமன்றமா?

// முழு முகவரி கொடுத்து எழுதுங்கய்யா முதலில்.//
அடேடே... அய்யோ முத்துகுமரன் பயந்துட்டாருங்க, முத்துக்குமரனுக்கு சம்மன் அனுப்பும்போது எனக்கும் அனுப்புங்க...

//நான் கூட இங்கே பெயர் போடாம எழுதி நீதிமன்ற அவமதிப்பு செய்யுறேன். //
நம்பிட்டோம்....

said...

அப்படியாவது பெரிய மனுசனா ஆகிடலாம்னு கனவு காணுறீங்க.

த்தூ (வார்த்தைக்கு நன்றி : வெ.வே. முத்துகுமரன்)

- பெயரா முக்கியம்

said...

யப்பா..இவ்வளவு பெரிசா எழுதினா படிச்சு முடிக்கிறதுக்குள்ள கழுத்து நோவுது வாத்தியாரே!

said...

அனானி கோர்ட் அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய சொல்லுங்க. நான் என் விலாசம் முழுவதையும் தரேன். பாஸ்போர்ட் நம்பர் தந்தா போதுங்களா??

பேர், படம் போட்டு எழுத முடிந்த எனக்கு விலாசம் கொடுக்க அதிக நேரம் ஆகப்போறதில்லை. கொடுப்பதற்கும் பெறுவதற்கும் சில அடிப்படை தகுதி வேணும். உனக்கு அது இல்லை. மூடீட்டு போய் வழக்கை பதிவு பண்ணிகிட்டு வந்து கிச்சு கிச்சு மூட்டு.
புரியுதா??

said...

இங்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் முன்பு அவருடைய
சரித்திரம், பழைய தீர்ப்புகள் அனைத்தும் பப்ளிக்காக அலசப்பட்டு
செனட்டின் ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார். இந்தியாவில்
ஜனாதிபதிகளே (இவர்தான் நீதிபதிகளை நியமிப்பவர்) சாமியார் மடத்தில்
போஸ்டர் ஓட்டும் அமைப்பில் ஜனமாவது நாயகமாவது?
நீதிபதிகள் நியமிக்கும் முறையை அடியோடு மாற்ற வேண்டும்.

said...

முத்துக்குமரனின் அந்த லின்க் இங்கே...

said...

நீதிபதிகளை விமர்சித்த எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட் கடுடுடுடுடும் கண்டனம்

http://www.dinamalar.com/2006july20/court_ind1.asp

நீதிபதிகளெல்லாம் புனித பசு :-)

said...

இந்தியாவில்
ஜனாதிபதிகளே (இவர்தான் நீதிபதிகளை நியமிப்பவர்)

why dont you check the facts.The President of India appoints the High Court and Supreme Court judges.(S)he does not select them.
The list is sent to the President by the Central govt.
In USA the President can appoint judges who agree with him on many
issues.In India it is not so.The
Indian system and US system are
different.
The background,credentials of the
proposed judge are checked and
vetted by central govt. before
approval.

said...

நன்றி அனானி அவர்களே,
இதில் இந்தியாவில் மத்திய அரசாங்கம் ஏதாவது ஒரு கட்சி சர்ந்ததாக
இருக்கும். இதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல், ஓட்டு ஏதாவது இருக்கா?

said...

Parliament's approval is not needed.However Parliament of India
can impeach a sitting judge.You assume something and write without
even checking your assumption.
Do a google search and find out
how Supreme Court judges are appointed.If you think that there
are some problems with that, then
write your views.

said...

http://www.viduthalai.com/20060818/news04.htm