காசு காஞ்சனா (தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா)


இன்றைய தினகரன் பத்திரிக்கையில் காசு காஞ்சனா என்ற தலைப்பில் "நாணயவியலில் ஆராய்ச்சி செய்யும் முதல் தமிழ் பெண் காஞ்சனாதேவி" என்ற அறிமுகத்தோடு "இன்று ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளிலும் சாதனை படைத்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் பெண்கள் நுழையாத துறைகள் ஒரு சில இருக்கத்தான் செய்கின்றன, அப்படியொரு துறைதான் நாணயவியல் ஆராய்சி,

முழு கட்டுரைக்கும் இந்த படத்தின் மேல் சுட்டவும்.


காஞ்சனா என் தங்கையின் தோழி, இவருடைய மற்றொரு தோழியும் தொல்பொருள் துறையில் முனைவர் பட்டத்திற்கு தங்கள் ஆராய்ச்சியை சமர்பித்துள்ளனர், இவர்கள் அனைவரும் வரலாறு முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

இன்றைய சமூக சூழலில் ஆண்களுக்கு மேல் படிப்பு சாதாரணம், ஆனால் பெண்களுக்கு மேலே படிப்பதே ஒரு சாதனை, அதிலும் சாதனை புரிந்த காஞ்சனா இந்த நிலைக்கு வருவதற்கு எத்தனையோ தடைகற்கள் ஆனால் அவை அனைத்தும் இன்று அவருக்கு படிகற்கள் ஆகிவிட்டன.

"தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா" என காஞ்சனா & தோழிகளின் ஆராய்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் அவர்களின் கைய்ட், அவர்களுடைய கல்லூரி பேராசிரியை மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் என் வாழ்த்துகள்.

4 பின்னூட்டங்கள்:

said...

குழலி,

காஞ்சனா நியூஸ் சந்தோசம்! தகவலுக்கு நன்றி!

+ தலைவரு பாடல்வரி உங்க பதிவில்! அதுவும் சந்தோசம்! :)))

said...

காஞ்சனாதேவிக்கு வாழ்த்துக்கள்!!

அறிமுகப் படுத்திய தினகரனுக்கு வாழ்த்துக்கள்.

said...

காசு காஞ்சனாவுக்கு வாழ்த்துகள்..

அவங்களுக்குச் சரியான துறை தான்..

பெண்களுக்கும் காசுக்கும் உள்ள ஆசையும் உறவும் தென்றுதொட்டு வருவது. சமையலறை கடுகு டப்பாவிலிருந்து (1970 களில் மாயவரத்தில் எங்க பாட்டி சமையலறையில் ஒரு புதையலே வெச்சிருப்பாங்க..)

இன்றைய ஆராய்ச்சிவரை இந்தத் தொடர்பு வெளிப்படை..

காஞ்சனா நடத்துங்க.. ஏதாவது புதுசா கண்டுபிடிச்சா (காசு வளர செடி, மரம் கொடி விதை மாதிரி) எனக்கும் ஒரு மெயில் தட்டுங்க..

வாழ்த்துகள்.
சீமாச்சு...

said...

நல்லா பண்றாங்களே காஞ்சனா.. நாணயம் சேகரிக்கறவங்களைப் பார்த்திருக்கேன்.. இப்படி ஒரு வரலாற்றோட ஒரு பக்கத்தை எடுத்து நாணய ஆராய்ச்சி பண்றதெல்லாம் நல்லாத் தான் இருக்கு.. புதுப் புது தகவல் வேற சொல்லி இருக்காங்க.. (ஹணம் -> பணம்)...