அது போன வாரம், இது இந்த வாரம்

ஏன்னா நம்ம பையனுக்கு H1B ஸ்டாம்பிங் ஆயிடுச்சி, நெக்ஸ்ட் வீக் கலிஃபோர்னியாக்கு கிளம்பனுமாம்

அதெல்லாம் போகக்கூடாது, ஸ்டேட்ஸ்ம் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்

ஏன்னா போகக்கூடாதுன்றேள்?

பிராமணாள்க்குனு சில சம்பிரதாயம் இருக்கோன்னா? சாஸ்த்திரப்படி சுத்த பிராமணாள் கடல் தாண்டக்கூடாது

போன வீக் கூட பையன் ஸ்டேட்ஸ் போறான்னு சுந்தர் மாமா கிட்ட சொல்லிண்டிருந்தேளே, அப்போ நோக்கு தெரியலையா சாஸ்த்திரமும் சம்பிரதாயமும்

அது போன வாரம், இது இந்த வாரம்.

------------------------

பிள்ளைவாள் உங்க பிள்ளையாண்டான் மெடிக்கல் கவுன்சிலிங் போனானே டாக்டர் சீட் கிடைச்சிடுத்தோன்னா?

டாக்டர் சீட் கிடைச்சிடுச்சிங்க சாமி, ஆனா நான் தான் அவனை டாக்டருக்கு படிக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்!

என்னாச்சி பிள்ளைவாள் உம்ம கனவே உம்ம பையனை டாக்டராக்கி பாக்குறதுனு சொல்லிண்டிருந்தேள், இப்போ வேண்டாம்கறேளே?

டாக்டர்லாம் மருத்துவர் சாதியாளுங்க அதான்க அம்பட்டன் பாக்குற தொழிலு, அது எங்க சாதி தொழில் இல்லை.

நோக்கு உம்ம சாதி என்ன தொழில் பார்க்கனும்னு, போன வாரம் கவுன்சிலிங் போனேளே அப்போ தெரியலையா?

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------

பிஷ்சை, பிஷ்சை

ஏதோ ராப்பிச்சை போலிருக்கு, போய் பாரு

அய்யோ அய்யோ ஈஸ்வரா, பெரியவா, சின்னவா நீங்க ஏன் பிஷ்சை எடுக்குறேள்

முற்றும் துறந்த(?!) எங்களுக்குனு சில சாஸ்த்திரம், சம்பிரதாயம் இருக்கு, நாங்க சம்பிரதாயப்படி பிஷ்சை எடுத்து தான் சாப்பிடனும்

போன வாரம் கூட மடத்துக்கு வந்திருந்தோமே அப்போ அப்படி இல்லையே

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------

ஏங்க, தரகர் வந்திருந்தாரு ஒரு வரன் கொண்டு வந்தாரு, பையன் வாத்தியாரா இருக்காராம்

இனிமே நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை எதுவும் பாக்க வேண்டாம்

ஏங்க, என்னாச்சி திடீர்னு ?

புருசன் செத்த பொண்ணுக்குலாம் ரெண்டாம் கல்யாணம் பண்ண கூடாது

என்னங்க இது தலையில் கல்லை தூக்கி போடுறிங்க

ஆமாம், புருசன் செத்ததுக்கப்புறம் பொண்ணுங்க வாழ்க்கை எப்படி இருக்கனும்னு ஒரு மரபு இருக்கு அதை மீறக் கூடது

போன வாரம் கூட நீங்க தரகர்கிட்ட வரன் பார்க்க சொன்னீங்களே, அப்போ தெரியலையா இந்த மரபு

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------------------------------------


சொடலை பள்ளி கூடம் கெளம்பலையா

இல்லப்பா, இன்னியிலிருந்து நானும் உன் கூடவே தோட்டி வேலைக்கு வர்ரேன்

ஏன்டா கோட்டிப்பயலே, போன வாரம் வரைக்கு ஒளுங்காத்தானடா வாத்தியார் வேலைக்கு போயிகினு இருந்த

நம்ம சாதிக்குனு ஒரு தொழில் இருக்கே, அது தான் நாம செய்யனும், அதுதான் நமக்கு விதி

ஏன்டா போன வாரம் வரை வேலைக்கு போனயேடா

அது போன வாரம், இது இந்த வாரம்.

----------------------------------

என்னடா அதிசயமா இருக்கு சேரிக்காரனுங்க அவனுங்க பொணத்தை நம்ம மயான பாதையில தூக்கிட்டு போகாம சுத்து பாதையில் போறானுங்க

தெரியலையே பண்னை, ஊர் கொளத்துல தண்ணி எடுக்க எவனும் வரலை, ஊருல மேல் சட்டை போடாம, காலுக்கு செருப்பு போடாம நடக்குறானுங்க

இப்பதான் அவனுங்க ஐவேஸ் புரிஞ்சிதோ என்னமோ

போனவாரம் மூக்காயி செத்தப்ப கூட இப்பிடி இல்லியேடா

அது போன வாரம், இது இந்த வாரம்.

--------------------------

டேய் ராசய்யை கன்னம் வக்கிறது தெரியுமா ஒனக்கு, நாம நாளைக்கு தொழிலுக்கு போகனும்

மாமா நீ ஏட்டு தானே, கள்ளன் மாதிரி கன்னம் வக்கிறதை பேசுற என்ன போலிஸ் வேலையை விட்டாச்சா?

ஆமாம் மச்சான் போலிஸ் வேலையை உட்டுட்டேன், நமக்குனு என்ன தொழில் விதிச்சிருக்கோ அதை தான் செய்யனும், அது தான் மரபு

ஏன் மாமா கோட்டி புடிச்சிடுச்சா உனக்கு, போன வாரம் பார்த்தப்ப கூட நல்லாத்தானே இருந்த

அது போன வாரம், இது இந்த வாரம்

----------------------------


இப்படி ஊருல போன வாரத்துக்கும் இந்த வாரத்துக்கும் மக்கள் கிட்ட ஏற்பட்ட மாற்றம் குறித்து படு கோபமாகி நம்ம குவார்ட்டர் கோவிந்தன் அறிவுப்பசி அண்ணாசாமியிடம் கொந்தளித்தான்

யோவ் அறிவுப்பசி அண்ணாசாமி, இன்னாயா அது எல்லாரும் இப்பிடி மாறிட்டானுங்கோ, கேட்டா சம்பிரதாயங்குறானுங்கோ, மரபுங்கறானுங்கோ ஒரு எளவும் புரியலை

குவாட்டரு, இப்போ தான் இந்த மக்களுக்கு புத்தி வந்திருக்குனு சந்தோசப்படுவியா? அவங்கவங்களுக்கு என்ன விதிச்சதோ அது அதுப்படி நடக்கனும், அது தான் மரபு

என்னயா அறிவுப்பசி திடீர்னு இந்த வாரம் நீ இப்பிடி பேசுற?

ஒன்னொன்னுக்கும் ஒரு மரபு இருக்கோல்லியா? சிதம்பரம் கோவில்ல சிற்றம்பலத்துல தமிழ்ல பாடக்கூடாது, சம்ஸ்கிரதத்துல தான் பாடனும்னு மரபு இருக்கோ, அதை மீறி அந்த ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்திலதான் தமிழ்ல பாடுவன்னா அதை கேட்டு நடராசர் காது அறுந்து விழுந்துடாதா? அதுவும் இந்த ஆறுமுக சாமியாரு, தீஷ்சிதரா? அவங்கவங்க என்னென்ன செய்யனும் பொறப்புலயே தீர்மானிச்சிருக்கு, ஆனாலும் இந்த ஆறுமுகசாமி கோயிலை தீட்டாக்க முயற்சி செய்றார், சிவ சிவா என்ன அநியாயம் இது, ஆனா இப்போ இருக்குற மனுசாள்ளாம் அதை புரிஞ்சிக்கிட்டாங்க, அதான் மரபை மீறாம இருக்கனும்னு நியாயத்தை பேசுறாங்க.

குவார்ட்டர் கோவிந்தன் தண்ணி அடிக்காமலே மயங்கி விழுந்துகிடக்காராம், யாராவது பார்த்திங்கனா கொஞ்சம் குவார்ட்டர் வாங்கிகொடுத்து தெளியவைங்க....

49 பின்னூட்டங்கள்:

said...

கோவிந்தன் கெட்ட கேட்டுக்கு குவார்ட்டர் கேக்குதா? பீர் பத்தாதா?

(ஹிஹி....இல்ல அதிலும் ஏதாவது மரபு இருக்குதா?)

said...

உங்கள் உண்மையான குணம்- பார்ப்பன வெறுப்பு இதில் நன்றாகவே வெளியாகியுள்ளது.இனியும் எதற்கு முக்காடு.விடாது கருப்பினை உடன்பிறவா சகோதரர் என்று அறிவித்துவிட்டால் நன்றாக
இருக்கும்

said...

//உங்கள் உண்மையான குணம்- பார்ப்பன வெறுப்பு இதில் நன்றாகவே வெளியாகியுள்ளது.இனியும் எதற்கு முக்காடு.விடாது கருப்பினை உடன்பிறவா சகோதரர் என்று அறிவித்துவிட்டால் நன்றாக
இருக்கும்
//
தோடா வந்துட்டாரு.... என் குணத்தை அனாலிசிஸ் செய்ய வந்த குண அனாலிசிஸ்ட்... :-)

said...

//உங்கள் உண்மையான குணம்- பார்ப்பன வெறுப்பு இதில் நன்றாகவே வெளியாகியுள்ளது.//

too late.

answer: "so what"

said...

Hello Mr Kuzhali,

In your earlier blogs you had debated issues pertaining to very large section of the society. That is good and really constructive. I have also participated in those blogs.

I am very surprised with this blog of yours. You are taking up one single community and portraying them in very bad manner. How many Brahmins do even bother about what is going on in Chidambaram? Very few. When you see the sea change that has happened socially in our state this Chidambaram issue is a very small one in terms of social priority.

I do not have any right to say what one must write and what one should not. Please do not take anything in my reply as an advice. There are so many many bloggers to write on aryan-dravidian race issues and there are many who express only hate against one religion or other in their blogs. But there are very few who will ever discuss real issues. You are one of those few.

I hope to join you in discussions that will kindle the fire of social and economic development of the people in lower strata of the society.

said...

இந்த லிஸ்ட்டிலே விடுபட்ட முக்கியமான ஒரு காட்சி :

"என்னாடா இது.. ஒரே கொடி, தோரணமெல்லாம்?"

"அது தெர்யாதா.. நம்மாளு நாளைக்கு மரம் நடு விழாவுக்கு வர்றாரு!"

"நம்மாளா.. மரம் நடுறதுக்கா? டேய்.. நம்மாளு மரம் வெட்டல்ல செய்வாரு?!"

"அது போன வாரம்..."

said...

மரபுகள் என்ற பெயரில் சில கூத்துக்கள் தொடரபடுவதை கிண்டலடித்துள்ளீர்கள். நன்றாக இருந்தது. நமது கலாசாரத்தில் உள்ள பழக்க வழக்கங்களை, பண்டிகைகளை, கலைகளை தொடர வேண்டும் என்பதிலும் சந்தேகமில்லை.

said...

குழலி அவர்களே. நீங்கள் பட்டியல் இட்டுள்ளதை விட இன்னும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம். சாஸ்திரங்களே சொல்கின்றன - காலநிலைக்கு ஏற்றவாறு சாஸ்திரங்களிலும் மாற்றங்கள் வரவேண்டும் என்று. ஆனால் சிலருக்கு சில மரபுகள் மீறப்படலாம்; சில மரபுகள் மீறப்படக்கூடாது. ஆனால் மாற்றம் என்பது வந்தே தீரும். அதிலும் வரவேண்டிய மாற்றம் என்றால் வந்தே தீரும்.

நீங்கள் எடுத்துவைத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் சிலவற்றில் புரிதல் குறைவுகள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் அவை நீங்கள் சொல்ல வந்தக் கருத்துக்குத் தொடர்பில்லாதவை. நீங்கள் சொல்ல வந்தக் கருத்துக்கு உங்கள் புரிதல்களே போதும்.

//சிதம்பரம் கோவில்ல சிற்றம்பலத்துல தமிழ்ல பாடக்கூடாது, சம்ஸ்கிரதத்துல தான் பாடனும்னு மரபு இருக்கோ, அதை மீறி அந்த ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்திலதான் தமிழ்ல பாடுவன்னா அதை கேட்டு நடராசர் காது அறுந்து விழுந்துடாதா? அதுவும் இந்த ஆறுமுக சாமியாரு, தீஷ்சிதரா? அவங்கவங்க என்னென்ன செய்யனும் பொறப்புலயே தீர்மானிச்சிருக்கு, //

இதில் உள்ளப் புரிதல் தவறை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சிதம்பரம் திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடக்கூடாது என்ற நியதி/மரபு இருப்பதாகத் தெரியவில்லை. தீட்சிதர்கள் திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடுவதாகத் தான் அறிகிறேன். ஆனால் அது தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் திருச்சிற்றம்பலத்தில் போய் பாடக்கூடாது (அது தமிழா, வடமொழியா என்பதில் கருத்தில்லை) என்பது தான் நியதியாக இருக்கிறது. தீட்சிதர்களைத் தவிர மற்றவர் என்பதில் பிராமணர் உட்பட எல்லோரும் அடக்கம். இது அர்ச்சகர்களைத் தவிர மற்றவர் கருவறைக்குள் நுழையக் கூடாது என்ற மரபினைப் போன்றதே.

இந்த மரபு இன்றும் காக்கப் பட வேண்டுமா என்ற கேள்விக்கு என் விடை இல்லை என்பதே. அதனை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.

said...

// You are taking up one single community and portraying them in very bad manner. How many Brahmins do even bother about what is going on in Chidambaram? Very few.
//
தஞ்சாவூர் மன்னிக்கவும், இந்த பதிவிற்கு முன் நடந்த விவாதங்கள் சுட்டவில்லை என்பதால் தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளது என கருதுகிறேன், பதிவு தனிப்பட்ட ஒரு சாதியை குறித்து இல்லை, பிராமனர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் என பல பிரிவுகளில் பேசியுள்ளது,

சிதம்பரம் கோவிலுக்கு என ஒரு விதி, ஒரு மரபு உள்ளது அதை யாரும் கேள்விக்குள்ளாக்க கூடாது அதை நாம் கடைபிடிக்க வேண்டுமென்பது இங்கே வலைப்பதிவில் சிலரால் வைக்கப்பட்டது இது சரியென்றால் பதிவில் சொன்னவைகளும் சில மரபுகள் தான்.

சிதம்பரம் கோவிலின் மரபுகள் காக்கபடவேண்டும், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி?

மரபு விதியென்றால் அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், சிலரை உயர்த்தியும் சிலரை தாழ்த்தியும் இருப்பது தான் மரபென்றால் அது உடைக்கப்பட வேண்டும்.

said...

//சிதம்பரம் திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடக்கூடாது என்ற நியதி/மரபு இருப்பதாகத் தெரியவில்லை. தீட்சிதர்கள் திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடுவதாகத் தான் அறிகிறேன். ஆனால் அது தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் திருச்சிற்றம்பலத்தில் போய் பாடக்கூடாது (அது தமிழா, வடமொழியா என்பதில் கருத்தில்லை) என்பது தான் நியதியாக இருக்கிறது.//
http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm

In his petition to the police, he urged that he be allowed to enter the "Thiruchitrambalam", an elevated structure "close to the sanctum sanctorum," to recite the hymns.

Generally, "special permission has to be obtained from the Deekshithars," who administer the temple, to offer worship to the Lord from Thiruchitrambalam.

Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in any other language would be entertained.
(முகமூடி தவிர)வேறு யாருமே சிற்றம்பலத்தில் தமிழில் பாட அனுமதி உண்டு என்று சொல்லவில்லை(கோவிலில் தமிழில் பாடுவதை நானும் அங்கே கேட்டுள்ளேன், ஆனால் அப்படி பாடியவர்கள் தீட்சிதர்கள் அல்ல, மேலும் அது சிற்றம்பலத்தில் அல்ல, அவைகள் வெளியே மட்டுமே, அப்போது சிற்றம்பலத்தை அத்தனை உன்னிப்பாக நான் கவனிக்கவில்லை) அதனாலேயே சிதம்பரத்து ஆட்களை தகவலுக்காக அணுகியுள்ளேன்.

said...

//அதனாலேயே சிதம்பரத்து ஆட்களை தகவலுக்காக அணுகியுள்ளேன்.
//

விரைவில் உங்களுக்குத் தகவல்கள் கிடைக்கட்டும். நான் இதுவரை சிதம்பரம் போனதில்லை. ஆனால் மூகமூடி எழுதியதைத் தவிர வேறு இடங்களிலும் தமிழுக்குத் தடையில்லை; இது அர்ச்சகர் தவிர மற்றவர் கருவறைக்குள் நுழையக்கூடாது என்று எல்லா ஆலயங்களிலும் இருக்கும் நியதியைப் போன்றதே என்று படித்ததாக நினைவு. எங்கு படித்தேன் என்று சுட்டியைக் கொடுக்க இயலவில்லை.

தில்லைக்காரர்கள் அதுவும் கோயில் நியதிகளை நன்கு அறிந்தவர்கள் (மற்றவர் சொன்னதைத் திரும்பச் சொல்பவர்களின் கருத்தினை எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறேன்) சொன்னால் நன்கு விளங்கும்.

said...

Kuzhali, you miss a basic fact:
that temple is not under PMK's
control.Why dont you ask your
beloved leader to launch an
agitation for handing over the
temple to PMK and Vanniyar Trust.

said...

அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி,எதை காப்பதற்கு இந்த விதி?

மரபு விதியென்றால் அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், சிலரை உயர்த்தியும் சிலரை தாழ்த்தியும் இருப்பது தான் மரபென்றால் அது உடைக்கப்பட வேண்டும்.

இந்த வரிகள் பதிவில் சேர்க்க பட வேன்டிய வரிகள்.

said...

'ஏண்டி இங்க வாடி.'
'என்னாங்க'
'அந்த தாலிய கழர்றி வை'
'ஐயோ ஏங்க? போனவாரம்தானே கட்டுனீங்க'
'அது போன...'

கேட்பதற்கே நாராசமாயிருக்குல்ல...

குழலி, மரபுகள் இல்லைன்னா எப்படி, எல்லாத்தையுமே புதுசு புதுசா செய்வீங்களா? சாதியை விலக்கிவிட்டு வம்சாவழி வரும் உரிமையய்ப் பாருங்கள் இதை விட்டுக்கொடுக்க முடியுமா? இது தீண்டாமை போல ஒரு விஷயமல்ல. தீட்டு என அவர்கள் சொன்னால் அது கண்டிக்கப்படவேண்டியதே.

என் வீட்டுக்கு நீங்க வரலாம் போலாம் ஆனா என் அடுப்படிக்கு வந்து சமைப்பதற்கு நாந்தான் அனுமதிக்கணும். இது மரபா?

said...

குவாட்டர் குடிக்காமல் கோவிந்தன் அசந்த நேரம் இதுபோல் ஒரு பதிவெழுதி அவரை முதன் முதலாய் போதையில் தள்ளிய குழலி மீது மானம் காத்த வழக்கு பதிய கோவிந்தன் திட்டமிட்டுருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் (வேர யாரு நான் தான்) தெரிவிக்கின்றன

said...

முகமூடியின் பதிவில் "The New Indian Express" ல் வந்த செய்தியை ஆதாரமாக வைத்து "சித் சபை" என்று சொல்லி, வரைபடம் கொடுத்து அது இதுன்னு எழுதி புரட்டி எடுத்திட்டாரு. ஆனா பாருங்க அதன் தமிழான தினமணி, விகடன் & The Hindu எல்லாம் சிற்றம்பலம் என்றே சொல்கின்றன. அதை பற்றி மூச்சே காணோம். அற்புதமா விவாதத்தை வேறு திசையில் திருப்பி அதையே எல்லோரும் விவாதிக்கும் படியா செய்திருக்கார், சும்மா சொல்லக்கூடாது பாராட்ட வேண்டியது தான்.

அதாவது சிதம்பரத்தில் ஆறுமுக சாமி சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவது தான் பிரச்சனை.

ஏன்?
1. அவர் தீட்சிதர் குடும்பத்தில் பிறக்கவில்லை.
2. அவர் தமிழில் பாட முனைந்தது.
3. சிவனோடு கைலாயத்தில் இருந்து வந்த தீட்சிதர்களுக்கு மட்டுமே சிற்றம்பலத்தில் சிவனை பாட உரிமை. அதுவே "மரபு" என்று புரட்டு வாதம் பாசி ஏய்க்க நினைக்கும் கூட்டம் அதை ஏமாந்து ஒத்துக்கொள்ளும் பெருங்கூட்டம்.


பார்ப்போம் ஆறுமுக சாமியால் இதற்கு விடிவு வருகிறதா என்று.

said...

இதையும் பாருங்கள்.
http://www.tamilnation.org/heritage/cholarule.htm

http://ullal.blogspot.com/2006/07/blog-post_24.html

said...

One more

போராட்டம் நடத்தக்கூடாது. அரசு நடவடிக்கை சரியே.

போராட்டத்தை விலக்கிகொள்ளுங்கள். வேலைக்கு திரும்ப 3 நாள் அவகாசம் தருகிறோம்.

என்னங்க இப்படி சொல்றீங்களே. அப்ப முதலில் சொன்னது.

அடேய் அது போன வாரம்.

said...

//Kuzhali, you miss a basic fact:
that temple is not under PMK's
control.Why dont you ask your
beloved leader to launch an
agitation for handing over the
temple to PMK and Vanniyar Trust.//

Basic Fact is PMK is not like BJP or RSS to take over the temple and it is not there business. But now I strongly believe that henceforth the temple should not be under theechithar control.


//'ஏண்டி இங்க வாடி.'
'என்னாங்க'
'அந்த தாலிய கழர்றி வை'
'ஐயோ ஏங்க? போனவாரம்தானே கட்டுனீங்க'
'அது போன...'

கேட்பதற்கே நாராசமாயிருக்குல்ல...
//

இதையெல்லாம் ஈ.வே.ரா 1930களிலேயே சாதிச்சுட்டார். கட்டின தாலியை கழட்டி, பின் ஒப்பந்த வாழ்க்கை வாழச் சொன்னார். தாலியே கட்டாமலும் வாழலாம் என்றும் சொன்னார். அதுவும் ஏற்றுகொள்ளப்பட்டது. சுயமரியாதை திருமணம் என்று அதற்கு பெயர்.


//என் வீட்டுக்கு நீங்க வரலாம் போலாம் ஆனா என் அடுப்படிக்கு வந்து சமைப்பதற்கு நாந்தான் அனுமதிக்கணும். இது மரபா?
//

உங்க அடுப்படி உங்க தனிசொத்து. சிதம்பரம் கொவில் சிற்றம்பலச்சபை சைவ மக்களின் பொது சொத்துத்தான். நான் உள்ளே செல்ல கூடாது என்றால் தீட்சிதனும் உள்ளே செல்ல கூடாதுதான். கால வெள்ளம் மாற்றும் போது மரபுகள் மாறித்தானாக வேண்டும். குழலியும் இப்பதிவில் இதைத்தான் வலியுறுத்துகிறார் என கருதுகிறேன்.

-வேல்-

said...

சாரி குழலி இந்தமாதிரி பதிவை உங்களிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை.

பரட்டை இது நல்லாவே இல்லை பரட்டை!!!

said...

//சாரி குழலி இந்தமாதிரி பதிவை உங்களிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை. //
ஜெய் எனக்கு புரியவில்லை,

சிதம்பரம் கோவிலில் மீறப்படக்கூடாத மரபுகள் என்று ஒரு சாரருக்கு சாதகமானதை ஆதரிப்பார்களென்றால் இவைகளும் அப்படித்தானே, இவைகளும் மரபுகள் தானே, இதை மட்டுமேன் மீற வேண்டும், இவைகளை ஏன் சமூக கொடுமைகளாக பார்க்க வேண்டும்? இவைகளுக்கு மட்டுமேன் கண்டனம் எழுப்ப வேண்டும்...

மரபுகள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உடைத்தெறியப்பட வேண்டும்.

said...

பேஷ்.... பேஷ்.... கலக்கிட்டிங்க....
அசத்திட்டீங்க... பின்னீட்டீங்க.... கொன்னுட்டிங்க....
ரொம்ப நன்னா இருக்கு.....

said...

மரபுகள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் உடைத்தெறியப்பட வேண்டும்.

try to argue this in your company first.why only some persons are authorised to some things.why not all.

said...

எங்க நாட்டுக்கும், எத்தனையோ பிரச்சனை, அன்றாட சாப்பாடுக்கு சாதாரண மக்கள் படும்பாடு, விலைவாசி உயர்வு, வேலையிண்மை, மனுசன் கடுப்பயிகிட்டு இருக்கான் அதையெல்லாம் விட்டுவிட்டு சிதம்பரம் கோவிலின் சிற்றம்பலதுக்குள் யார் போவது யார் போக கூடாதுன்னு, தேவையா இந்த பிரச்சனை??? நாலு லூசுங்க இரண்டு உள்ள போக கூடாதுன்னு, பாட கூடாதுன்னு, இரண்டு உள்ள போகனும் என்று பாட வேண்டும் என்று, ரொம்ப முக்கியம்?? அவனுங்க தான் லூசுன்ன அதுக்கு நீங்க வேற ஒரு பதிவு போடறீங்க! அங்க நடக்கறது அரசியல் யார் பெரியவன் என்ற அரசியல்! இதுக்கு எல்லாம் சாதி பெயின்ட் அடிக்க ஆரம்பிச்சு அவனுக பின்னாடி போனா நாம வளராம அங்கேயே இருக்கவேண்டியது தான்! நாட்டுக்கு எது தேவைன்னு யோசிங்க தலைவா??!! Please dont give priority to these kind of stuffs!

ஹிந்தி தினிப்புன்னு ஒரு சண்டை போட்டங்க! போராட்டம் பண்ணாங்க! அவங்க பின்னாடி ஒரு இளைஞர் கூட்டம் போச்சு! பலர் உயிர் மாய்த்தார்கள்!! இன்று அந்த போராட்டதுக்கு தலைமை தாங்கியவர்களின் பேரம் ஹிந்தி புலமை பெற்று மந்திரி ஆயிட்டாரு! தலைவர் பின்னாடி வால் பிடித்து போயி கல்லரைகள் ஆனது தான் மிச்சம்!!!

ஆதலால் தலைவா சாதி, மதம், அரசியவாதிகள் போன்ற பிரிவினைவாத சக்திகள் பின் செல்வதை விட்டுவிட்டு நம்முடைய உண்மை வளர்ச்சிக்கு உன் பங்கு என்ன என்பதை யோசிக்கவும்.

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா போதும்பா போதும், பாமக பற்றியும் அன்புமணிபற்றியும் பின்ன்னூட்டம் போடும் அனானிமஸ்களே உங்கள் பின்னூட்டங்களை அது தொடர்பான பதிவில் போடுங்கள்.... வெளியிடுகிறேன்... இங்கே வேண்டாம்... அப்புறம் செலக்டிவ் மரபு கடைபிடித்தல் திரிஞ்சி போயிடும் அதுதான் உங்கள் நோக்கமென்பதால் ஸாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-)

said...

டைம் என்ன ஆச்சுங்க ?

said...

//டைம் என்ன ஆச்சுங்க ? //
இரவு 10.30

said...

//அங்க நடக்கறது அரசியல் யார் பெரியவன் என்ற அரசியல்! இதுக்கு எல்லாம் சாதி பெயின்ட் அடிக்க ஆரம்பிச்சு அவனுக பின்னாடி போனா நாம வளராம அங்கேயே இருக்கவேண்டியது தான்! //
ஜெய் எதில் தான் அரசியல் இல்லை, அலுவலகத்தில் இல்லையா? நண்பர்களுக்குள் இல்லையா? உறவினுள் இல்லையா? அல்லது கணவன் மனைவிக்குள் தான் அரசியல் இல்லையா? எல்லாவற்றிலும் அரசியல் இருக்கின்றது, நன்றாக கவனியுங்கள் ஒவ்வொன்றின் பின்னுள்ளும் அரசியைலை, ஒவ்வொரு அரசியலுக்கு பின்னும் யார் இருக்கிறார்கள்? யாருக்காக இந்த அரசியல் என்று கவனியுங்கள், யாரை வாழவைக்கவும், யாரை அழிக்கவும் இந்த அரசியல் என கவனியுங்கள்.... சிலது புரியும்....

said...

முதல்வர் சட்டபூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம் என்கிறார். அதையே நானும் சொல்கிறேன். சட்டத்தை தீட்சிதர்கள் மீறியிருந்தால் அதை சட்ட நடவடிக்கையெடுத்து தீர்வு கொள்ளலாம். இல்லைன்னா நாமே அமக்காக ஏர்படுத்திய சட்டங்கள் எதுக்கு, சட்டங்கள் கூட ஒருவகையில் மரபுதான் என்று அதையும் ஒதுக்கித்தள்ளத்தான் வேண்டுமா?

பல மரபுகளே சட்டங்களாக்கப்பட்டுள்ளன.

ஒருவரின் அவநம்பிக்கை மற்றவரின் நம்பிக்கை இதில் நான் சொல்வதுதான் சரி என எப்படி சொல்கிறீர்கள். பெரியார் கடவுளே இல்லை எனச் சொன்னால் கடவுளே இல்லை என உலகமே நம்பிவிடவேண்டுமா? எப்படி அது, எல்லோருமே என் கொள்கைகளைத்தான் பின்பர்றவேண்டுமென்பது சம நீதியா?

said...

சிறில், நீங்கள் ஏற்கனவே இந்த விவாதத்தில் பதிவு போட்டவர், ஏற்கனவே இதில் கருத்துள்ளவர் என்பதை விலக்கிவிட்டு ஒரு பார்வையாளனாக பாருங்கள், ஏதேனும் புரியலாம்...

said...

http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_115376353810586725.html
குழலி உங்க மேல குவாட்டர் கோவிந்தன் வழக்கு போட போறார் நீங்க இன்னும் அவர் அனுப்புன வக்கீல் நோட்டீஸ பாக்கலியா? (இடையில் புகுந்து குழப்புவதற்கு குழலி மன்னிக்கவும் இல்லாவிட்டால் மன்னிப்பை ஏற்க்க மறுத்த குற்றத்துக்கு இன்னொரு வழக்கு வரும் :)

said...

குழலி.. சிறிலுக்கு சொன்ன அதே 'பார்வையாளர்' அறிவுரையோடு தான் நீங்கள் இந்தப் பதிவு போட்டீர்களா?! இல்லையென்றால் (வழக்கம் போல) ஊருக்கு தான் உபதேசமா?!

said...

குவார்ட்டர் கோவிந்தனுக்கு ஆயா செஞ்ச பாயா புகழ் கவிஞன் கோந்துவாயன் விரைவில் பதிலளிப்பார்

said...

///At 10:18 PM, செந்தழல் ரவி said…

டைம் என்ன ஆச்சுங்க ?


At 10:35 PM, குழலி / Kuzhali said…

//டைம் என்ன ஆச்சுங்க ? //
இரவு 10.30//////

என்ன எழவுப்பா இது. Time கேக்க ஒரு பிண்ணூட்டமா? இதுக்கு ஒரு பதில் வேற...
(ஹி ஹி..ஓ.. ஒருவேளை தமிழர் மரபுப்படி வந்த விருந்தினருக்கு பதில் சொல்லீட்டீங்களா குழலி)

said...

http://theyn.blogspot.com/2006/07/blog-post_24.html

//தமிழ் ஒரு ஒப்பற்ற மொழி என்பதி சந்தேகமேயில்லை. அடுத்த மொழியை அழித்துத்தான் இதைக் காப்பார்றவேண்டுமென்கிற கட்டாயம் இதற்கு வந்திருப்பதை எண்ணி கலங்குகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் முக்கால்வாசிபேர் தமிழர்களே. இதில் எத்தனை தமிழ்த்தலைவர்கள் அடக்கம் என்பது ஊருக்கே வெளிச்சம்.
//
சிறில், சிற்றம்பலத்தில் தமிழுக்கு அனுமதி தராமல்(அழித்து) சம்ஸ்கிரத்திற்கு அனுமதி தந்து(காப்பாற்றி) இருப்பது ஒரு பிரச்சினை, தமிழ் தலைவர்களின் தவறுகள் தமிழ் சமுதாயத்தின், தமிழ் மொழியின் தவறுகள் அல்ல.


//மரபுகள் பலவும் சட்டங்களாக்கப்பட்டுள்ளன அவற்றையும் உடைத்தெறியலாமா?//
சட்டமாக்கப்பட்ட மரபுகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும், பொதுவாக இல்லாத மரபுகள் சட்டமானால் அதையும் உடைத்தலே சரியாகும். மனுநீதிப்படி யான மரபுகள் இன்று சட்டமாக இல்லை, சட்டம் சம உரிமை தருகின்றது/தரவேண்டும்.


//பெரியார் கோவிலுக்குள் நுழைந்து போராடியது சட்டப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமையை ஒழிக்கும் பெரும் முயற்சி. அதற்கும் ஒருவருக்கு ஒரு நிறுவனத்தின்மேலுள்ள பொறுப்பை/உரிமையை அபகரிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கின்றது.
//
சிதம்பரம் கோவிலும் தனியார் நிறுவனமும் ஒன்றா?

டீக்ககடை தனியார் ஒருவருக்கு உரிமையானது, அதில் தலித்களுக்கு தனி டம்ளரில் வழங்குவது அந்த தனியாருடைய மரபு என்று அதை அனுமதிக்கலாமா?

இந்திய சமூகத்தில் தீண்டாமை ஒரு மரபுதான், அவைகள் உடைக்கப்பட பிறகு தான் சட்டமானது, சட்டமான பின் உடைக்கப்படவில்லை, உடன்கட்டை ஏறும் வழக்கம் உடைக்கப்பட்ட பின் தான் சட்டமானது, மரபுகள் பொதுவாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அவை உடைக்கப்படவேண்டும், இப்போதே சொல்கிறேன் சமூகம் அதன் தவறுகளை அவ்வப்போது திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் திருத்தப்படாத இந்த தவறுகள் மிகப்பெரிய அழிவிற்கு வழி வகுக்கும்.

said...

http://www.dinamalar.com/2006july26/political_tn2.asp

said...

குழலி,

உங்கள் பதிவு சில மனநோயாளிகளை உசுப்பிடுத்து. அடிமடியிலேயே இந்த பாவிகள் கை வைக்கிறாங்களே என்று புலம்பி இந்த நெலமைக்கு போய்விட்டனர்.

said...

//உங்கள் பதிவு சில மனநோயாளிகளை உசுப்பிடுத்து. //

மனநோயாளிகள் என்று சொல்லுதல் தவறு, கண்டிக்கின்றேன்,அவர்கள் வெளிப்படட்டும், அவர்கள் எழுத்துகள் சொல்லும் அவர்களின் அரசியலையும் கோமாளித்தனத்தையும்.

said...

ஏன் தரன் எரிந்து விழுகிறார்...நான் டைம் கேட்பேன்...சாப்டீங்களான்னு கூட கேட்பேன்...:))

ஹி ஹி...

கீழே வருவதை ரஜினி ஸ்டைலில் படிக்கவும்...

கண்ணா நீ சின்னப்பைய்யன்...டைம் என்னான்னு நான் கேட்டதுல என்ன உள்குத்து இருக்குன்னு உனக்கு புரியல..

டைம் என்ன ? : அதாவது யாருக்கோ டைம் சரியில்லை என்று அர்த்தம்..

குழலி:டைம் 10:30 - அதாவது என்னோட டைம் நல்லாத்தான் இருக்கு என்கிறார்

இப்போ புரிந்ததா ராசா ??

said...

Hi Mr Kuzhali,
You said
"
சமூகம் அதன் தவறுகளை அவ்வப்போது திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் என்றாவது ஒரு நாள் திருத்தப்படாத இந்த தவறுகள் மிகப்பெரிய அழிவிற்கு வழி வகுக்கும்."
I say,
You are 100% Correct.

said...

குழலி,

அருமை. கலக்கல் பதிவு.

பார்ப்போம் அரசாங்கம் என்ன செய்கிறதென்று.

said...

Yes, reservation as of now is a
big mistake.It should be corrected
as early as possible.

said...

ஹாய் குழலி,

வெகுநாட்களுக்குப் பிறகு தங்கள் வலைப்பூவைத் தரிசிக்கிறேன்.. (நன்றி: அருள்குமார் - அவரின் வலைப்பூவில் தங்களுடைய வலைப்பூவின் சுட்டி கண்டேன்).

நல்லதொரு காரசாரமான தலைப்பு ... ஏற்கெனவே நிறையப்பேர் உரையாடி விட்டனர்.....

மரபு என்னும் பெயரில் சில மூடப்பழக்கங்கள் முட்டாள்தனமாகக் கடைப்பிடிக்கப்பட்டால், வன்மையாகக் கண்டிப்பதில் தவறொன்றுமில்லை என் தாழ்மையான கருத்து!

தொடரட்டும் உங்கள் பணி..
வாழ்த்துக்கள்..

said...

Dear Kuzhali,

This is the first time I have visited your blog. Looking at this blog of yours I have to think you are also one of the so-called pseudo secularist. Why don't you then preach the same theme to Christians? (making protestants a bishop in Catholic Churches, vice versa etc.,) and to Muslims (You know one sect of Muslims cannot go and offer prayer in the mosque of the other sect. There are more than 40 sub-sects in Islam). So ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. Please come out of this and write something which is useful for the development and real upliftment. These are trivial things. For your information, even after your beloved leader MK has announced that 'Everybody can become an archakar' there are no takers.

said...

சோமபான சோம'சுந்தரம்'
நான் கோவிந்தனுக்கு குவாட்டர் கொடுப்பதை கடுமையாக கண்டிகிறேன், மரபுபடி அவருக்கு நாங்க்ள் அருந்தும் சோம பானம் அளியுங்கள்.

இப்படிக்கு,
சோமபான சோம'சுந்தரம்'

said...

//மனநோயாளிகள் என்று சொல்லுதல் தவறு, கண்டிக்கின்றேன்,அவர்கள் வெளிப்படட்டும், அவர்கள் எழுத்துகள் சொல்லும் அவர்களின் அரசியலையும் கோமாளித்தனத்தையும்.//
சரியாகச் சொன்னீர்கள்.

said...

மரபுகளை மாற்ற நினைக்கும் மடையர்களே,

முதலில் இந்தியாவில் ஒரு பொது சிவில் சட்டம், கொண்டு வர முடியுமா என்று யோசிங்கள்.

பின் மாற்றங்கள் தானாக நிகழும்.. எல்லாவற்றிலும்..

said...

//மரபுகளை மாற்ற நினைக்கும் மடையர்களே,

முதலில் இந்தியாவில் ஒரு பொது சிவில் சட்டம், கொண்டு வர முடியுமா என்று யோசிங்கள்.
//

மடையர்கள் மேல் சாதியின் மரபை சாடினால் (அனானி) மகான்கள் பிற மதத்தை சாடுகிறார்கள். வித்தியாசம் ஒன்னும் இல்லையே.


-வேல்-

said...

விவாதத்தை அருமையான முறையில் கொண்டு செல்லும் குழலிக்கு ஒரு நன்றி சொல்ல இந்தப் பின்னூட்டம்..

பிகு: இது 50-வது பின்னூட்டம்...