சிலையரசியலில் எழுத்தாளர் ஞானியும் கலைஞர் கருணாநிதியும்

சிலை என்பது சிலரின் நம்பிக்கை, சிலரின் பெருமிதம், சிலரின் வெற்றி, சிலரின் குதூகலம், சிலரின் துயரம், சிலரின் வெட்கம், சிலரின் தோல்வி ஆதலால்தான் சிலைகள் கூட பெரும் கலவரத்தை உண்டு செய்கின்றன ஆதலால் சிலை என்பது வெறும் சிலையல்ல, கடவுள் பற்றிய எந்த சந்தேகமும், எந்த விமர்சனமும் அற்ற காலம் அது, கடவுள் பற்றிய சந்தேகம் வந்தாலும் கூட கடவுள் கண்ணை குத்தி விடுவாரோ என்ற அளவிற்கு நம்பிக்கை இருந்த காலத்தில் பெரியார் கடவுள் சிலையை உடைத்தார், அந்த சிலை உடைப்பு வெறும் சிலை உடைப்பு அல்ல, அந்த சிலை உருவாக்கியிருந்த நம்பிக்கையை உடைப்பது, இங்கே பார் உன் புனிதம் இங்கே உடைக்கப்படுகிறது, உடைக்கப்பட முடியாத உடைக்க கூடாத புனிதமல்ல கடவுள், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல கடவுளும் மதமும் என்ற அதிர்ச்சியை உருவாக்கியது பெரியாரின் சிலைஉடைப்பு.

அம்பேத்கார் சிலையை அவமதிப்பவர்கள் வெறும் சிலையென்று அவமதிப்பதில்லை, அதன் மூலம் தலித் இனத்தையே அவமதித்து விட்டதாக கருதுகின்றனர், அம்பேத்கார் சிலையை பார்க்கும் போதெல்லாம் அம்பேத்காரோடு சேர்ந்து தலித்கள் நினைவுக்கு வருவர், தலித்கள் நினைவுக்கு வரும்போது அவர்களின் அடிமைக்காலம் நினைவுக்கு வரும், கூடவே சேர்ந்து அவர்களின் அடிமைத்தனத்திற்கான இன்றைய எதிர்ப்பும் நினைவுக்கு வரும் அந்த நினைப்பு சிலருக்கு மகிழ்ச்சியாகவும் சிலருக்கு வருத்தமாகவும் இருக்கும்.கண்ணகி சிலையும் இது போன்றதே, கண்ணகியை பிரிந்து மாதவியுடன் இருக்கும் கோவலன் திரும்பி வர வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் கண்ணகி அல்ல சிலையாக, முற்றத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் கோழியை விரட்ட தங்கத்தாலான தம் காதணியை கழற்றி வீசும் பணக்கார வணிக குலப்பிறப்பான கண்ணகி அல்ல சிலையாக, பின் யாரங்கே சிலையாக தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து விரிந்த தலையுடன், கையில் சிலம்புடன், மாபெரும் வல்லமை கொண்ட பாண்டிய பேரரசனை எதிர்த்து "தேரா மன்னா! செப்புவது உடையேன்!" என குரல் கொடுத்தாளே அந்த கண்ணகி தான் இருக்கிறாள் சிலையாக, எத்தனை வலிமை கொண்ட அரசானாலும் அரசனானாலும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் வல்லமையை ஒவ்வொருவரும் பெற தோன்றும் அந்த சிலையை பார்க்கும் போது, பெரும் சிந்தனையாளராக கருதப்படும் ஞானிக்கு இந்த தலைவிரி கோல கண்ணகி நினைவு படுத்தும் செய்தி புரியாமல் போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

எத்தனையோ இலட்சம் மக்கள் முகமூடியில்லாமல் இருக்கும் பெங்களூரிலே திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் சாக்கும் முகமூடி ஏன்? திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டால் அங்கே தமிழர்களின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டதாகிவிடும், கன்னட தலைநகரிலே தமிழனின் சிலையென்றால் அது தமிழர்களின் வெற்றியாகவும் கன்னடர்களின் தோல்வியென்றும் சி(ப)லர் கருதுகின்றனர், அதனாலேயே பல கன்னட அமைப்புகளின் எதிர்ப்பால் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க இயலவில்லை.

கோபத்துடன் அரசிடம் நீதி கேட்கும் கண்ணகி சிலை சோதிடப்படி ஆபத்து என்று எடுக்கப்பட்டிருந்தாலும், வேறு எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்டிருந்தாலும் அதே இடத்தில் அந்த சிலை மீண்டும் நிறுவப்படுவதன் மூலம், சோசியப்படி சிலை எடுக்கப்பட்டிருந்தால் சிலையினால் அரசுக்கு ஆபத்து என்ற கருத்திற்கு அடி கொடுப்பதும், மீண்டும் சிலையை நிறுவுவதன் மூலம் தமிழ் உணர்வுக்கு சற்று உயிர் கொடுப்பதாகவும் அமையும், இது தவிர ஜெயலலிதா எடுத்த சிலையை கருணாநிதி மீண்டும் நிறுவுவதன் மூலம் தன் அதிகாரத்தை காண்பிக்க முதல்வர் கருணாநிதி விரும்பியிருக்கலாம்.


'சில குழந்தைகள், பெரியவர்களான பிறகும்கூட தூங்கும்போது ஒரு பழைய 'டெடி பேர்' கரடி பொம்மையைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்குக் கண்ணகி அப்படித்தான்' என்பதுதான் நான் விகடனில் எழுதிய வாக்கியம். இதற்கு அர்த்தம் என்ன? பொம்மைக்கான வயது கடந்தபிறகும் அதைக் கொஞ்சுகிறவரின் முதிர்ச்சியற்ற (அப்செஷன்) மனநிலையையும் ஆட்சியாளரின் மனநிலையையும்தான் அது ஒப்பிடுகிறதே தவிர பொம்மையையும் சிலையையும் அல்ல என்று கூறிய ஞானி இரண்டு வரிகளில் திமுகவின் வளர்ச்சியையும் அதன் வரலாற்றையும் கருணாநிதியையும் கொச்சை படுத்தி பார்க்கிறார் எனலாம், கண்ணகி சிலை என்பது வெறும் சிலையல்ல, அதன் பின் உள்ளது தமிழ் உணர்வு, இந்த உணர்வின் வெளிப்பாடே இந்தி மேலாதிக்க எதிர்ப்பின் காரணம், இந்த தமிழ் உணர்வை திமுக தன்னை வளர்த்து கொள்ள கரடி பொம்மை மாதிரி பயன் படுத்தியுள்ளது அதான் இப்போது வளர்ந்துவிட்டதல்லாவா இன்னமும் எதற்கு அந்த தமிழ் உணர்வை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறாய் என்பது ஞாநியின் வரிகளின் சாராம்சம், ஞானி கரடி பொம்மை என்றது கண்ணகி சிலையை அல்ல, கண்ணகி சிலையின் பின் உள்ள தமிழ் உணர்வை, கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்படுவதன் மூலம் வெளிக்காட்டும் அதிகார நிறுவலை.


"தொல்காப்பியம் முதல் பாசக்கிளிகள் வரை பலதரப்பட்ட இலக்கிய அறிவுடைய கலைஞருக்கு இந்த உவமையின் பொருள் புரியாதா என்ன?" என்று கேட்டுள்ளார் 'ஓ' போடு ஞானி, ஆனால் அந்த வரிகளின் பின்னுள்ள விசமத்தையும் புரிந்துதான் பாய்ந்துள்ளார் கருணாநிதி.

உண்மையில் சமமில்லாத திமுகவையும் அதிமுகவையும் (அல்லது அரசியல் கட்சிகளையும்) இரண்டும் ஒன்றுதான்,எல்லா கட்சியும் மோசம்தான் என்பது, மிக மோசமான கட்சிக்கு சாதகமாக அமையும், ஞானி தேர்தல் சமயத்தில் 'ஓ' போடுங்க 'ஓ' போடுங்க என்றதன் மூலம் திமுகவை அதிமுகவிற்கு நிகரான மோசமான கட்சி என்று உருவகப்படுத்தினார், நிச்சயம் இது மிக மோசமான கட்சிக்கே சாதகம் 'ஓ' போடுவதில் உள்ள நடைமுறை சிக்கலால் திமுகவா? அதிமுகவா? என்ற ஒப்பீட்டில் திமுகவிற்கு சாதகமான வாக்குகள் மூன்றாவதாக ஒரு கட்சிக்கு சேர்ந்திருக்கும், ஞானி போட்ட 'ஓ' வும் சேர்ந்து கருணாநிதியை சீற வைத்திருக்கலாம்.

ஞானியின் இந்த அரசியல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி எதிர்க்காமல் கண்ணகிசிலையும் கரடி பொம்மையும் ஒப்பீடு என்ற அளவில் சீறிய கருணாநிதி மற்றும் அதை தொடர்ந்து நடந்த விகடன் பத்திரிக்கை எதிர்ப்பு போராட்டம் என்பதெல்லாம் ஞானியின் அரசியல் வெளித்தெரியாமல் போய்விடும் என்பதோடு கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் விமர்சனங்களை எதிர்கொள்வதில் உள்ள வித்தியாசம் குறைந்து வருவதையும் காண்பிக்கின்றது.

39 பின்னூட்டங்கள்:

said...

அருமையான அலசல்.

பதிவுக்கு மிக்க நன்றி!!

said...

யோசிக்க வைத்த பதிவு.
சிலைகள் என்பது இளைய தலைமுறைக்கு அவை குறித்த சிறப்புகள் அறிந்து கொள்ளவும் அவற்றை மறக்காமலீருக்கவும்தான்.
சி(ப)லர் அவற்றை வைத்து அரசியல் விளையாடுவதுதான் வேதனை அளிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தென் மாவட்டங்களில் கலவரங்கள் சிலைகளில் இருந்து தொடங்கியதால் சிலைகளுக்கு சிறை (கம்பி வேலி) வைத்தார் ஒரு உயரதிகாரி.

இன்றும் எங்கள் ஊர்களில் சிலைகளை சேதப்படுத்தும் கேவலமான வேலைகள் அரங்கேறிகொண்டுதான் இருக்கிறது.

இதையெல்லாம் தடுக்க வேண்டிய தலைவர்களைதான் குறை சொல்ல வேண்டும்

அன்புடன்
தம்பி

said...

//திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டால் அங்கே தமிழர்களின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டதாகிவிடும், கன்னட தலைநகரிலே தமிழனின் சிலையென்றால் அது தமிழர்களின் வெற்றியாகவும் கன்னடர்களின் தோல்வியென்றும் சி(ப)லர் கருதுகின்றனர், அதனாலேயே பல கன்னட அமைப்புகளின் எதிர்ப்பால் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க இயலவில்லை.
//

ஆமாம்.. பெங்களூரில் எதற்கு திருவள்ளுவர் சிலை.. ? உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. இது தமிழ் மக்களுக்கு ஒரு வீம்பாகவே போய்விட்டது...


தமிழ் மக்களின் இருப்பை அங்கீகரித்துக் கொள்ள வேண்டுமானால்.. அந்த ஊருக்கும் நாட்டுக்கும் நல்லது ஏதாவது செய்யவேண்டியது தானே.. ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம்..இலவச மருத்துவமனை கட்டலாம்.. இன்னும் எவ்வளவோ நல்லது செய்து உங்கள் இருப்பை அங்கீகரித்துக் கொள்ளலாமே.. போயும் போயும் ஒரு சிலை வைத்துத்தானா உங்களுக்கான அங்கீகரிப்பைத்த் தேடிக்கொள்ள வேண்டும்..?

தாஜ்மகாலில் போய் மாயவரம் கறார் ஜவுளிக்கடை காலண்டர் மாட்டுவது போல தான் இருக்கிறது.. இந்த சிலை விவகாரம்..

யாராவது அதை முதலில் அப்புறப்படுத்தி இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வள்ளுவரே கூட இந்தப் ப்ரச்சினையை விரும்பமாட்டார்.
சீமாச்சு...

said...

நடுநிலையாய் சில விடயங்களை உள்ளடக்கி, கருத்துக்களை வெளியிட்டு விட்டு, தேவைப்படும் பொழுது, அதற்கு புறம்பாக சில கருத்துக்களை வெளியிட்டு, அந்த கருத்துக்களை நடுநிலை பார்வையில் அடக்கி விட முயலுவது சிறப்பான நரித்தனம். அந்த நரித்தனத்தை தான் தற்பொழுது சங்கரன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

முதலில் கடந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் மோசமான கட்சிகள் என்று இருந்த நிலையை சங்கரன் பயன்படுத்திக் கொண்டார். இதனால் ஆளுங்கட்சி சரியில்லை என்றால் எதிர்க்கட்சிக்கு ஓட்டளிக்கும் மனப்பான்மையை தன்னுடைய முயற்சியால் மாற்றி, மூன்றாம் கட்சிக்கு திருப்பி விட்டார். இங்கு அவருக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கருணாநிதியையும் வீழ்த்தியாகி விட்டது. நடுநிலையையும் முன்நிறுத்தியாகி விட்டாது.

இப்பொழுது விகடனில் ஜெயலலிதாவை சாடுகிறார். இறுதியில் கண்ணகியை டெடிபேர் பொம்மையுடன் ஒப்பிடுகிறார். இதன் நோக்கம் கண்ணகி என்ற தமிழ்ப் பெண் குறித்த உணர்வுகள் கேலிப்பொருளாகி விடுகின்றன.

கண்ணகி என்ற கதாபத்திரத்தில் இருக்கும் சில முரண்பாடுகளான கணவனைச் சார்ந்த வழிபாடுகளைப் பயன்படுத்தி, தமிழின் சின்னமாக இருக்கும் கண்ணகி குறித்த மாற்று கருத்துக்களை முன்நிறுத்தி, கண்ணகியை டெடிபேர் மொம்மையாக ஒப்பிடுவது. இதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது சங்கரனின் நோக்கம்.

அடுத்து கலைஞரின் மஞ்சள் சால்வை. கலைஞர் மஞ்சள் சால்வை அணிந்திருப்பதால் ஜெயலலிதா கண்ணகி சிலையை அகற்றியது சரியாகி விடுகிறது. கலைஞரின் மஞ்சள் சால்வை மூடநம்பிக்கையை முன்நிறுத்தி ஜெயலலிதாவின் மூடநம்பிக்கையை நியாயப்படுத்தியாகி விடும் நல்ல காரியம் நடந்தேறி விடுகிறது.

அரசியல்வாதிகளின் முரண்பாடுகளைப் பயன்படுத்தி "தமிழ் உணர்வுகள்" குறித்து கேள்வியை எழுப்பி, அதன் நியாயங்கள் மறைப்பது சங்கரன் அவர்களின் அரசியல் நடுநிலைமையாய் உள்ளது

சங்கரன் என்றா சொன்னேன், மன்னிக்கவும், அவர் அரசியல் செய்யத் தெரிந்த "ஞாநி". சங்கரன் என்ற அவரது இயற்பெயரில் இருக்கும் மயிலாப்பூர் வாசத்தை மறைக்க சங்கரன் மாமா "ஞாநி" என்றானது ஏன் என்று இப்பொழுது தெரிகிறதா ?

இது போலத் தான் நடுநிலையாய் படம் காட்டும் சிலரின் போலித்தனம் இருக்கிறது. அதனை சமயம் வாய்க்கும் பொழுது வெளிப்படுத்துவேன்

நல்ல பதிவு குழலி, நன்றி

said...

// ஞானி கரடி பொம்மை என்றது கண்ணகி சிலையை அல்ல, கண்ணகி சிலையின் பின் உள்ள தமிழ் உணர்வை
//
எப்படிய்யா.. உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?
ஞாநி (இது தான் அவரின் சரியான பெயர்) உடைக்க நினனத்த இன்னொரு நம்பிக்கை "கண்ணகி சிலை **தான்** தமிழ் உணர்வு என்று நிறுவி.. அது எடுக்கப் பட்டதன் மூலம் தமிழர்களின் உணர்ச்சியைத் குலைத்து விட்டார்கள் என்ற" நிறுவுதலைத்தான்..

கண்ணகி சிலை தமிழ் உணர்வின் அடையாளம் என்பதையே இன்னும் பலர் ஒத்துக்கொள்ளவில்லை.. அப்படியிருக்க.. கண்ணகிசிலையின் பின்னே தமிழ் உணர்வை ஒளித்து வைத்த உங்கள் வாதங்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

சீமாச்சு..

said...

"ஞானியின் இந்த அரசியல்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி எதிர்க்காமல் கண்ணகிசிலையும் கரடி பொம்மையும் ஒப்பீடு என்ற அளவில் சீறிய கருணாநிதி மற்றும் அதை தொடர்ந்து நடந்த விகடன் பத்திரிக்கை எதிர்ப்பு போராட்டம் என்பதெல்லாம் ஞானியின் அரசியல் வெளித்தெரியாமல் போய்விடும் என்பதோடு கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் விமர்சனங்களை எதிர்கொள்வதில் உள்ள வித்தியாசம் குறைந்து வருவதையும் காண்பிக்கின்றது."

நான் கருணாநிதியின் அரசியலை எப்போதுமே எதிர்த்து வந்திருக்கும் மன நிலையுடன் உங்கள் பதிவைப் படித்தேன். மேலே குறிப்பிட்டுள்ள கடைசி வரிகளை மட்டும் நான் பிடித்துக் கொண்டேன். கருணாநிதியை எதிர்ப்பவர்கள் கூடப் போற்றும் பல பண்புகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் குடும்பப் பாசத்தால் அவர் இழந்து விட்டால். ஜெயலலிதாவுடன் அரசியல் செய்ய வேண்டிய நிலை வந்து விட்டதே என்று வருத்தப்பட்ட அவர், ஜெயலலிதாவின் செயல்களைச் சுட்டிக் காட்டி தம் புதிய அரசின் கொள்கைகளை நியாயப்படுத்திக் கொள்வது பரிதாபமாக இருக்கிறது.

இந்த ஐந்து ஆண்டுகளோடு தமிழகத்தின் அரசியல் முதிர்ச்சியடையும் காலம் தொடங்கும் என்று நம்புவோம்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

நல்லதொரு அலசல். விருப்பு வெறுப்புகள் தெரியாவண்ணம் மிகவும் நாகரீகமாகவும் நாசூக்காகவும் அதே சமயத்தில் சொல்ல வந்ததைக் குறைக்காமலும் இட்ட பதிவு. இது தொடர விரும்புகிறேன் குழலி.

said...

அழகிய பதிவு. பாராட்டுக்கள்!

சுவனப்பிரியன்.

said...

உங்கள் விளக்கம் ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும்
இன்னும் பல கேள்விகள் எழுகிறது.

பெரியார், அம்பேத்கர் மக்களின் விடுதலைக்காக போராடிய
தலைவர்கள். கண்ணகி கதை அப்படியில்லை. இதை வேண்டுமானால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையைக்் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அந்த காலத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டியவர்கள்
அகால மரணமடைந்த பெண்களுக்கு கோவில் கட்டி ஆடு கோழி பலி
கொடுத்தது போல ஒரு பய உணர்வினால் செய்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்தை தமிழர்கள் எதிர்த்தது போலதானே
பெங்களூர் கன்னடியர்களுக்கு தமிழும் இருக்கும்!்!!


இன்று ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை தைரியமாக எதிர்த்து
கேட்க முடியுமா? தினமும் ஏகப்பட்ட பழிவாங்கல் கைதுகள் பத்திரிகையில்
வருகிறது. மீண்டும் கண்ணாகியே வந்து தேரா மன்னா செப்பு
மக்கள் பணம் நேராக மாறன் பாக்கெட்டுக்கு செல்கிறதே என்றூ
கேட்டால் தெரியும் சேதி.

ஓ போடு ஞானி் ஓட்டை விழுந்த அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு
சில சோசனைகள் கீற்றுவில் எழுதியிருந்தார். இதை இன்னொரு சமயம் வி்வாதிக்கலாம்.
மேலோட்டமாக ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவளிப்பதற்காக ஓ
போட சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? நிறைய
மக்களும் உணமையிலேயே இந்த கட்சிகளால் நொந்து போய்தான்
் இருக்கின்றனர்.

இப்பொழுது வெளியூர் செல்வதால் மீண்டும் வந்து பேசுகிறேன்.

said...

சங்கரன் என்றா சொன்னேன், மன்னிக்கவும், அவர் அரசியல் செய்யத் தெரிந்த "ஞாநி". சங்கரன் என்ற அவரது இயற்பெயரில் இருக்கும் மயிலாப்பூர் வாசத்தை மறைக்க சங்கரன் மாமா "ஞாநி" என்றானது ஏன் என்று இப்பொழுது தெரிகிறதா ?

His name is N.V.Sankaran.He has
never lived in Mylapore.He has been writing in the name,Jnani for many years.His father N.Vembusamy was a journalist with Express group
for many years.

said...

Excellent subject..i will come with detailed comment tomorrow

said...

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் விமர்சனங்களை எதிர்கொள்வதில் உள்ள வித்தியாசம் குறைந்து வருவதையும் காண்பிக்கின்றது.

--நல்ல ஜோக், கருணாநிதி ஏதோ விமர்சனங்களை தாங்கிகொள்பவர் போலவும், இப்பொழுது கொஞ்சம் இறங்கி வந்துவிட்டது போலவும் நீங்கள் நினைத்துக்கொள்வது. "சோ"வை மு.க. ஆரம்பகாலத்தில் எப்படி எதிர்கொண்டாரோ அப்படியே தான் இருக்கிறார் என்பதே என் கருத்து.

said...

http://www.dinakaran.com/epaper/2006/july/03/7_4.jpg

said...

நல்ல பதிவு குழலி, ஆழ அலசியுள்ளீர்கள்!

said...

//பெரியார், அம்பேத்கர் மக்களின் விடுதலைக்காக போராடிய
தலைவர்கள். கண்ணகி கதை அப்படியில்லை. இதை வேண்டுமானால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையைக்் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்//

கண்ணகி புரட்சி பெண். அவளுக்கு சிலை அவசியம் தேவைதான்!

புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை கிடையாது.
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியே சிலையேது

(சிலையை நீக்குவதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பே வைரமுத்து பாடியது)


//அந்த காலத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டியவர்கள்
அகால மரணமடைந்த பெண்களுக்கு கோவில் கட்டி ஆடு கோழி பலி
கொடுத்தது போல ஒரு பய உணர்வினால் செய்திருக்கலாம்.//

சேரன் செங்குட்டுவன் வடக்கே படையெடுத்து கனக விஜயரை தோற்க்கடித்து, அவன் தலை மேல் கல்லை சுமத்தி தமிழகம் கொணர்ந்து அக்கல்லால் கண்ணகிக்கு சிலை வடித்தான்.

சேரன் இவ்வாறு செய்தது பய உணர்வினாலா மொழியுணர்வினாலா?

//நல்ல ஜோக், கருணாநிதி ஏதோ விமர்சனங்களை தாங்கிகொள்பவர் போலவும், இப்பொழுது கொஞ்சம் இறங்கி வந்துவிட்டது போலவும் நீங்கள் நினைத்துக்கொள்வது. "சோ"வை மு.க. ஆரம்பகாலத்தில் எப்படி எதிர்கொண்டாரோ அப்படியே தான் இருக்கிறார் என்பதே என் கருத்து.//

தன்னை விமர்சனம் செய்த நக்கீரன் கோபாலை பொடா-சிறையில் அடைத்தார் ஜெயா. எனக்கு தெரிந்த வரையில் "சோ"விடம் கலைஞர் அப்படி நடந்து கொள்ளவில்லை.

இதனை ஒரு அளவுகோலாய் வைத்து பார்த்தால், ஜெ தனக்கு எதிரான விமர்சனங்களை ஒருவித sadist மனப்பாண்மையுடன் எதிர்கொள்வது தெரியவரும்.


-வேல்-

said...

//பெரியார், அம்பேத்கர் மக்களின் விடுதலைக்காக போராடிய
தலைவர்கள். கண்ணகி கதை அப்படியில்லை. இதை வேண்டுமானால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையைக்் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்//

கண்ணகி புரட்சி பெண். அவளுக்கு சிலை அவசியம் தேவைதான்!

புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை கிடையாது.
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியே சிலையேது

(சிலையை நீக்குவதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பே வைரமுத்து பாடியது)


//அந்த காலத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டியவர்கள்
அகால மரணமடைந்த பெண்களுக்கு கோவில் கட்டி ஆடு கோழி பலி
கொடுத்தது போல ஒரு பய உணர்வினால் செய்திருக்கலாம்.//

சேரன் செங்குட்டுவன் வடக்கே படையெடுத்து கனக விஜயரை தோற்க்கடித்து, அவன் தலை மேல் கல்லை சுமத்தி தமிழகம் கொணர்ந்து அக்கல்லால் கண்ணகிக்கு சிலை வடித்தான்.

சேரன் இவ்வாறு செய்தது பய உணர்வினாலா மொழியுணர்வினாலா?

//நல்ல ஜோக், கருணாநிதி ஏதோ விமர்சனங்களை தாங்கிகொள்பவர் போலவும், இப்பொழுது கொஞ்சம் இறங்கி வந்துவிட்டது போலவும் நீங்கள் நினைத்துக்கொள்வது. "சோ"வை மு.க. ஆரம்பகாலத்தில் எப்படி எதிர்கொண்டாரோ அப்படியே தான் இருக்கிறார் என்பதே என் கருத்து.//

தன்னை விமர்சனம் செய்த நக்கீரன் கோபாலை பொடா-சிறையில் அடைத்தார் ஜெயா. எனக்கு தெரிந்த வரையில் "சோ"விடம் கலைஞர் அப்படி நடந்து கொள்ளவில்லை.

இதனை ஒரு அளவுகோலாய் வைத்து பார்த்தால், ஜெ தனக்கு எதிரான விமர்சனங்களை ஒருவித sadist மனப்பாண்மையுடன் எதிர்கொள்வது தெரியவரும்.

--வேல்--

said...

//எத்தனையோ இலட்சம் மக்கள் முகமூடியில்லாமல் இருக்கும் பெங்களூரிலே திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் சாக்கும் முகமூடி ஏன்? பல கன்னட அமைப்புகளின் எதிர்ப்பால் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்க இயலவில்லை.//


//ஆமாம்.. பெங்களூரில் எதற்கு திருவள்ளுவர் சிலை.. ? உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. இது தமிழ் மக்களுக்கு ஒரு வீம்பாகவே போய்விட்டது...//

//தாஜ்மகாலில் போய் மாயவரம் கறார் ஜவுளிக்கடை காலண்டர் மாட்டுவது போல தான் இருக்கிறது.. இந்த சிலை விவகாரம்..
//


குழலி,

பெங்களூரிலே சாக்கால் மூடப்பட்டது திருவள்ளுவர் சிலையையா? இந்திய தேசிய ஒருமைப்பாட்டையா?

இந்தியர்கள் அமேரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் கோயில் கட்டி கோபுரம் வைத்து இந்துத்துவத்தை நிறுவ முற்படுகிறார்கள்.

நாம் அப்படி செய்யவில்லை. திருவள்ளுவர் அரசியல்வாதியோ, இந்து கடவுளோ இல்லை. மக்களுக்கு பொதுவான நல்ல கருத்துக்களை சொன்னவர்.

திருவள்ளுவர் சிலையை நிறுவுவதால் யாரிடமும் எதையும் திணிப்பதோ அல்லது பறிப்பதோ தமிழர்களின் நோக்கம் இல்லை.

//தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்தை தமிழர்கள் எதிர்த்தது போலதானே
பெங்களூர் கன்னடியர்களுக்கு தமிழும் இருக்கும்!//

தமிழ்நாட்டில் மைல் கல் வரை ஊடுறுவும் இந்தி திணிப்புடன் கர்நாடகத்தில் தமிழை ஒப்பிடுகிறீர்களா?

வாடகைக்கு ஒரு வீட்டில் குடி இருந்தாலும் நம் தாய் தந்தையர் படங்களை சுவற்றில் மாட்டுகிறோமே அது போலத்தான் வாழும் இடத்தில் வள்ளுவனுக்கு சிலை வைக்க எண்ணுவதும்.

-வேல்-

said...

ஜனநாயக நாட்டில் ஒருவருக்கு ஓட்டு போடு, ஒருவருக்கு ஓட்டு போடவேண்டாம் என்றெல்லாம் சொல்ல ஞானிக்கு உரிமை உண்டு.... எனவே அதை கலைஞரால் எதிர்க்க முடியாது....

ஆனால் தமிழரின் பண்பாட்டுச் சின்னமான கண்ணகிச் சிலையை கரடிப் பொம்மையோடு ஒப்பிட்டதை கலைஞரால் மூத்த எழுத்தாளர், தமிழ் பண்பாட்டு ஆர்வலர் என்ற முறையில் கண்டிக்க முடியும்....

அதைத்தான் கலைஞர் செய்திருப்பதாக கருதுகிறேன்....

மற்றபடி ஞானியோடெல்லாம் அரசியல் செய்யுமளவுக்கு கலைஞரின் தரம் ஒன்றும் தாழ்ந்துப் போய் விடவில்லை.....

said...

அனானியின் காமெடி,

//He has never lived in Mylapore.He has been writing in the name,Jnani for many years.//

அய்யா ஆங்கில தொரை,

மயிலாப்பூர் வாசம் என்றார். மயிலாப்பூர்காரர் என்றா சொன்னார்? ஏஞ்சாமி அவசரப்பட்டு பினாத்தறீங்க? வளருங்க

said...

சீமாச்சு,

கண்ணகி தமிழ் உணர்வின் அடையாளம் என்பதை பலர் ஒத்துக்கொள்ளவில்லையா? நல்ல ஆராய்ச்சி முடிவு சீமாச்சு.அவ்விதம் ஒத்துக்கொள்ளாத பலருக்கும் பொதுத்தன்மை ஏதாவது இருக்குமே?

நான் எழுதலாம் என்று நினைத்ததை எல்லாம் ஏற்கனவே எழுதிச்சென்ற வேல்பாண்டிக்கும் சாம்பார் அவர்களுக்கும் என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்:)

said...

//பெங்களூரிலே சாக்கால் மூடப்பட்டது திருவள்ளுவர் சிலையையா? இந்திய தேசிய ஒருமைப்பாட்டையா?
//

பெங்களூரில் சாக்கால் மூடப்பட்டது இந்திய தேசிய ஒருமைப்பாடு அல்ல.. தான் நினைப்பதுதான் உலகத்திலேயே பெரியதென்று நினைத்துக் கொண்டிருக்கும்...யாரோ ஒருவரின் மடத்தனமான ஈகோ..

திருவள்ளுவரின் படைப்புக்களின் கீர்த்தி உணரப்படாத ஒரு இடத்திலே.. அந்தப் படைப்புக்களைப் பேசவேண்டிய முக்கியத்துவத்தை மறைத்து அவரின் சிலைவைத்து அதன் ப்ரச்சினையில் குளிர் காய முற்படும் ஒருவரின் ஈகோ..

தமிழ் சினிமாவெல்லாம் ஒரு காமெடியன் வில்லனின் தற்பெருமையை ஊதி விடுவான்.."அண்ணே.. உங்களைப் போயீ இப்படி சொல்லிட்டாண்ணே..." என்று.. அப்படித்தான் திருவள்ளூவர் சிலை தேசிய ஒருமைப்பாட்டுச்சின்னமானது..

// வாடகைக்கு ஒரு வீட்டில் குடி இருந்தாலும் நம் தாய் தந்தையர் படங்களை சுவற்றில் மாட்டுகிறோமே அது போலத்தான் வாழும் இடத்தில் வள்ளுவனுக்கு சிலை வைக்க எண்ணுவதும்.
//

வாடகை வீட்டுக்குள்ளே படம் மாட்டுவது தவறில்லை.. ஆணியடித்தால் சமயத்தில் வீட்டுக்காரர் வந்து சத்தம் போடுவார்..

அன்பின் வேல்பாண்டி,

ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன்.. உங்க வீட்டுல திருவள்ளுவர் படம் மாட்டியிருக்கீங்களா? உங்களுக்கு எத்தனை குறள் தெரியும்.. உங்கள் மனைவிக்கு? உங்கள் குழந்தைகளுக்கு எத்தனை குறள் தெரியும்.. திருவள்ளுவரின் சக்தியே அவர் எழுதிய குறளில் கூறப்பட்டுள்ள செய்திகளை வாழ்க்கை முறையில் பின்பற்றுவது தான்.. அவருக்கு எல்லா இடத்திலும் சிலை வைப்பது இல்லை..இல்லை.. இது தான் முதலில் நான் சொல்ல வந்தது..

முடிந்ததா... திருக்குறள் கன்னட மொழிபெயர்ப்பை இலவச பதிப்பாக வெளியிடுங்கள்.. அதன் சிறப்பை கன்னட மக்களிடம் சென்று பேசுங்கள்.. அவர்களிடத்தில் அந்த நூலுக்கு அதன் கருத்துக்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்துங்கள்.. மொழிதாண்டிய ஒரு புரிந்துணர்வை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்.. சிலை யெல்லாம்ம் தேவையே யிருக்காது..

சீமாச்சு...

said...

அன்பின் தமிழினி முத்து,

ஒரு கதை நினைவுக்கு வருகிறது...

ஒரு யானை பொம்மையைக் காட்டி இது என்ன என்று ஒருவரை க்கேட்டார்கள்.. "யானை" என்றார்.. அடுத்தவரிடம் கேட்டபொழுது அவரும் "யானை" என்றார்.. இதுபோல ஒரு பத்து பேரிடம் கேட்டபொழுது எல்லோரும் "யானை" என்றே கூறினார்கள். அங்கு ஒரு குழந்தை வந்தது. அதனிடம் இது என்ன என்று கேட்டார்.. அது தெளிவாக சொன்னது.. "இது யானை **பொம்மை***.." என்று..

இந்தக் கதையின் கருத்து புரிகிறதா.. எங்கேயா. யானைக்கும் பொம்மைக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் மறைக்கப்படுகிறது அல்லது மறக்கப்படுகிறது...

இது தான் நான் சொன்னது..
"கண்ணகி சிலை தமிழ் உணர்வின் அடையாளம் என்பதையே இன்னும் பலர் ஒத்துக்கொள்ளவில்லை"

இப்ப நீங்கள் சொன்ன விஷயம்
//
கண்ணகி தமிழ் உணர்வின் அடையாளம் என்பதை பலர் ஒத்துக்கொள்ளவில்லையா? நல்ல ஆராய்ச்சி முடிவு சீமாச்சு.அவ்விதம் ஒத்துக்கொள்ளாத பலருக்கும் பொதுத்தன்மை ஏதாவது இருக்குமே?
//

கண்ணகி என்ற பாத்திரப்படைப்பு உன்னதமானது.. "உண்மையான" தமிழுணர்வும் உன்னதமானது..

இதில் தான் அது இருக்கிறது என்ற நிரூபணம் தான் இங்கு கேள்விக்குரியதாக்கப் படுகின்றது. அதற்கு மட்டும் பதில் கூறுங்கள் போதும்.. கேள்வி கேட்பவரின் பொதுத் தன்மையை ஆராய்வது பிறகு வரட்டும்.

சீமாச்சு...

said...

//.."அண்ணே.. உங்களைப் போயீ இப்படி சொல்லிட்டாண்ணே..." என்று.. அப்படித்தான் திருவள்ளூவர் சிலை தேசிய ஒருமைப்பாட்டுச்சின்னமானது..
//
அது சரி....

திருவள்ளுவரின் முகத்தை மூடியிருக்கும் சாக்கு முகமூடி எது தெரியுமா? அது தான் போலி இந்திய தேசியத்தின் கிழிந்து போன முகமூடி... முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன் என்பது தமிழ்நாட்டில் ஆனால் பெங்களூரில் முதலில் கன்னடன், பிறகு தான் இந்தியன், பம்பாயில் முதலில் மராட்டியன் பிறகு தான் இந்தியன்....

வாழ்க (போலி)இந்திய தேசியம்

said...

சீமாச்சு,

உங்க "கதை" நன்றாக இருந்தது. ஆனால் இந்த மாதிரி பல "கதைகளை"
கேட்டாயிற்று.

தூங்குபவனை எழுப்புவது தான் என் ஆசை.நடிப்பவனை அல்ல. படிப்பவர்களுக்கு புரிந்தால் போதும்.உங்களுடன் வார்த்தை விளையாட்டு விளையாடுவது என் ஆசை இல்லை:)

said...

ஐயா, இந்த கனக-விசயர் ராஜாக்கள் இருந்தது உண்மையா.ஏதாவது சரித்திர பூர்வமான ஆதாரம் இருக்குதா.அப்புறம் சிலப்பதிகாரம் எந்த அளவு சரித்திர பூர்வமான உண்மை, எந்த அளவு இலக்கியம்.கனக விஜயர் இருந்தாங்கன்னே வைச்சுக்கலாம்.அவங்க தலையிலே கல்லை
ஏத்தி கொண்டுவருவது வீரமான செயலா இல்லை வக்கிரமான செயலா.தோத்தவனை இப்படி
நடத்துவதுதான் தமிழர் பண்பாடா.கண்ணகிக்கும் பாண்டிய ராசாவுக்கும் பிரச்சினை, அதுக்கு
ஏன் மதுரையை எரிக்கணும். அந்த ராசா மண்டையப் போட்டான், அத்தோடு விட வேண்டியதானே,
ஊரை எதுக்காக எரிக்கணும். எந்த ஊர் நியாயமய்யா அது.பேரரசு டைரக்ட் செய்த படங்களை விட மோசமாக இருக்கு ஒங்க லாஜிக்.

said...

http://www.viduthalai.com/20060703/sira.html

said...

http://kanchifilms.blogspot.com/2006/06/blog-post_25.html

said...

//ஆமாம் தெரியாமத்தான் கேக்குறேன்.. உங்க வீட்டுல திருவள்ளுவர்

படம் மாட்டியிருக்கீங்களா?//

என் வீட்டில் எனக்கு வழிகாட்டிய என் பெற்றோரின் படத்தை

மாட்டியுள்ளேன். அது போல தங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டியாக

இருக்கும் திருவள்ளுவருக்கு தமிழர்கள் அவர்கள் வாழும் இடத்தில் சிலை

வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

//உங்களுக்கு எத்தனை குறள் தெரியும்.. உங்கள் மனைவிக்கு?//

வாழ்க்கையில் பின்பற்ற தேவையான அளவுக்கு தெரியும். என் வீட்டில்

ஒரு சின்ன நூலகம் உண்டு. என் அலுவலக மேஜையில் எப்போதும்

திருக்குறள் புத்தகம் இருக்கும்.

//வாடகை வீட்டுக்குள்ளே படம் மாட்டுவது தவறில்லை..

ஆணியடித்தால் சமயத்தில் வீட்டுக்காரர் வந்து சத்தம் போடுவார்.. //

நீங்கள் தவறில்லை என்று ஒப்பு கொண்டதற்கு நன்றி. வீட்டில்

ஆணியடிக்காமல் (கன்னடர்கள் நெஞ்சை காயப்படுத்தாமல்) படத்தை

மாட்ட வழி சொல்லுங்கள் ஹி.. ஹி..

said...

//தமிழின் சின்னமாக இருக்கும் கண்ணகி//

சாம்பார் ஐயா!

தயவு செய்து தமிழுக்கு சின்னம் ஒதுக்காதீர்கள். அடையாளங்கள் நினைவுகளை மட்டுமே தரும் என்பது என் கருத்து

said...

அன்பின் அனானி,

//கனக விஜயர் இருந்தாங்கன்னே வைச்சுக்கலாம்.அவங்க தலையிலே கல்லை
ஏத்தி கொண்டுவருவது வீரமான செயலா இல்லை வக்கிரமான செயலா.தோத்தவனை இப்படி
நடத்துவதுதான் தமிழர் பண்பாடா.//

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?

இப்பாடலை எழுதிய அரசனும் சேரன்தான். போரில் தோற்றபின் எதிரியால் மரியாதையாக நடத்தப்படாததை அவமானமாய் கருதி இப்பாடலையும் எழுதி உயிர் விட்டான்.
நீங்கள் வக்காலத்து வாங்கும் கனக-விஜயர்கள் அப்படி செய்யவில்லையே ஏன்? இதுதான் அவர்கள் பண்பாடு!

-வேல்-

said...

காஞ்சி பிலிம்ஸின்(துக்ளக்) கேள்வியும், சிலர் இது வரலாறா, இலக்கியமா
என்று கேடடிருப்பதை முன்வாத்து,

வழிவழியாக கிராமத்தில் சொல்லப்பட்ட வந்த கதைகளை கோர்த்து
இலக்கியமாக படைத்த மரபு இந்தியாவிலும் கிரேக்கத்திலும் உண்டு
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இராமாயணமும் இந்த வகைதான்.

இராமர் இதோ இந்த அறையில்தான் பிறந்தார் என்று கரசேசை சொய்தவர்கள்
் இந்த கேள்வியை கண்ணகி குறித்து எழுப்புவதை ஒதுக்கிவிட்டு
பார்த்தாலும் சிலப்பதிகாரம் என்பது இளங்கோவடிகள் சொன்ன
கண்ணகி கதை. அவ்வளவுதான். ஒரே கதையை வெவ்வேறு ஆட்கள்
சொல்லும்போது தங்கள் சொந்த சரக்கை சேர்த்து சொல்வதும்
மரபுதான். அசல் கண்ணகிக்கும்(இப்படி ஒருவர் இருந்திருந்தால்),
இந்த இலக்கிய கண்ணாகிக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கலாம்.
கம்பரின் இராமாயணமும், வால்மீகி இராமாயணமும் ஒரே மாதிரியா
இருக்கிறது? இதே கண்ணகி கதையை ஒரு கிராமத்தானிடம் கேட்டால்
கொஞ்சம் வேறு மாதிரி விவரிப்பார்கள். எழுத படிக்கத் தெரியாத
பாட்டிகள் எல்லாம் சிலப்பதிகாரததின் உரையைப் படித்தா கதை சொன்னார்கள்?
கடற்கரையில் இருப்பது இளங்கோவடிகளின் கண்ணகியா அல்லது
கருணாநிதி கதை வசனம் எழுதிய பூம்புகார் சினிமா கண்ணகியா
அல்லது உங்கள் பாட்டி வழிவழியாக சொன்ன கண்ணகியா?
இளங்கோவடிகளின் விவரணைகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம்
தர வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழ் உணர்வின் மீது காட்டும் அக்கறையைவிட
தமிழர்களின் வாழ்க்கை நிலையை மாற்ற முயற்சி எடுப்பதையே
வரவேற்பேன்.

http://ullal.blogspot.com/2006/06/blog-post_115160978067784610.html
இதிலும் கூட ஒரு 'மட' அரசியல் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

said...
This comment has been removed by a blog administrator.
said...

குண்டக்க மண்டக்க உங்கள் பின்னூட்டத்தை யுனிகோடில் போடவும், கட்டம் கட்டமாக தெரிகின்றது....

நன்றி

said...

குசும்பன் வேறு
யாருமல்ல. வந்திய
தேவன் தான். வந்திய
தேவன் மறந்து போய்
குசும்பன் ஐடியில்
ஸ்ரீகாந்திற்கு
பதில்
சொல்லியிருந்தார்.
தான் குசும்பன்
என்பதை காட்டி
கொண்டு விட்டார்.
யாரோ தகவல் சொல்லி
இரண்டு நாள் கழித்து
அந்த பின்னூட்டத்தை
நீக்கியும்
விட்டார். இப்படி
வசமாய் மாட்டி
கொண்டு குசும்பன்
பதிவில் 'கடைசி
வார்த்தை' என்று
எழுதி அப்பன்
குதிருக்குள் இல்லை
என்று சொன்னார்.
யாருமே இதை
கவனித்ததாக
தெரியவில்லை.

said...

சிலையரசிலுக்கும் குண்டக்க மண்டக்கவின் comments கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. After all what he said is an open secret. He should not have used this feedback column to distract the people. Anyway he can see at this link what kusumban posted earlier in vandhiyadevan's blog.

said...

Aathirai:
ellor kathailaium main theme of kannagi accepting kovalan, madhavi story, madurai eritha padalam iruka than seium..pathni pennuku irukira sakthi than theme..ithu ellam periyar & co oppose pannanga..DMK ADMK aalunga developemnt schemes ethuvum pannama savadal arasiyal nadatharthuku intha stunts..nattuku paisa priyojanam kidayathu..kuzhali mathiri aalunga ellathilaium jaathi unarchiyoda pakkuranga..basicakave namma aalunga unarchi vasa padaravanga..athai puthisali thanama use pannikiranga..koila archagara poganumnu evan azharan..99% koil poojari pichai thaan edukaran..padika school kattu, hospital kattu elloraium munnethu..athai vittu dvesham, verupu valakarthu thaan MK velai...nattuku urupadiya onnum seiya maatru..enna panna avaru thane thamizh ina thalaivar..avar illana ramadoss than namaku..

said...

இதைத் தோண்டினால் நிறைய பூதம் வரும் போல தெரிகிறது.
கண்ணாகி அம்மனுக்கு கம்மாள இனத்து ஆளை பலி கொடுப்பார்களாம்!
http://webtime.blogspot.com/2004_02_16_webtime_archive.html

said...

ஜெயலலிதாவை விமர்சித்தால் கலைஞரும் , கலைஞரை விமர்சித்தால் ஜெயலலிதாவும் நன்றாகத்தான் எடுத்து கொள்வார்கள். இருவருக்குமே விமர்சனத்தை பக்குவமாக எடுத்து கொள்ளும் மனநிலை இல்லை. எவ்வாறு ரியாக்ட் செய்கிறார்கள் என்று பார்த்தால், ஜெயலலிதா ரொம்ப ஒவர். சகிப்பு தன்மை என்பதும் இரண்டு பேருக்கும் கிடையாது. ஞாநி, பல அரசியல் கட்டுரைகளில் கலைஞரை விமர்சித்திருக்கிறார் தயாநிதி மாறனை புகுத்தியது பற்றி கூட திண்ணையில் அவர் எழுதி உள்ளார். கலைஞர் மிக சாதுரியமாக அந்த கட்டுரைகளை, அதில் உள்ள கேள்விகளை புறக்கணித்து விட்டு, தனக்கு தோதாக இருக்கின்ற இந்த விஷயத்தை மட்டும் கண்டனம் செய்துள்ளார்.

கண்ணகி சிலை காணமல் போனது, அது பற்றி அரசு தெளிவாக விளக்கம் கொடுக்காமல் போனது போன்றவையும் மோசமான சம்பவங்களே. விமர்சனம் செய்பவர்களை கலைஞர் பதில் விமர்சனம் (அதற்கு அவருக்கு உரிமை உண்டு) என்ற பெயரில் விளாசித்தள்ளுகிறார். ஜெயலலிதாவோ எந்த அளவுக்கு சிவியராக ரியாக்ட் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு ரியாக்ட் பண்ணுகிறார். ராமதாசுக்கும் இதே போன்ற சுபாவம் உள்ளது.தமிழகத்தில் விமர்சனத்திற்கு கண்ணியமான வார்த்தைகளில் பதில் சொல்லும் நேர்த்தி சிதம்பரத்திடம் உள்ளது.

said...

ங்யானி ஒரு அறிவு கெட்ட சி<>தனையாளர், கலை<>ர் ஒரு வாழ்கின்ற தமிழ் அகராதி.
ஓ போடும் முட்டாள்களுக்கு விளம்பரம் தேவை எனில் அரை ஆடை போஸ் கொடுக்கலாம்.
கண்ணகி என்பவள் ஒரு காவிய தலைவி அவ்வளவே, அதை போலவே திரு வள்ளுவர் சிலை bangaloril எதற்கு சட்றே யோசிக்க வேண்டிய விஷயம்.
very good article, thank you very much keep writting more. i am sorry i am new to the tamil typing.