அரசியலில் சாதி பாகம்-2

அரசியலில் சாதி தொடர்பான எனது முந்தைய பதிவில் பகிர்ந்து கொண்டதின் தொடர்ச்சி இந்த பதிவில்

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்த முடிந்த சனநாயக நாட்டில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், என்ற மூன்று ஊர்களில் தேர்தல் நடத்த முடியவில்லை, மேலவளவு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரானதற்கு முருகேசன் கொடுத்தது தன் தலையோடு சேர்த்து மேலும் ஐந்து உயிர்கள், கண்டதேவியையும் அங்குள்ள தேரும் தாழ்த்தப்பட்ட மக்களால் இழுக்க முடியவில்லை இதற்கெல்லாம் ஆணி வேர் என்ன? காரணம் என்ன என்றால் சட்டென்று சொல்வோம் சாதியென்று ஆனால் இந்த ஊர்களை நம்மில் பலர் முன் பின் பார்த்தில்லை, முன் பின் பார்த்திராத நேரடியாக நம் தொடர்பில்லாத ஊர்களில் நடக்கும் கொடுமைகளையும் சாதியின் தாக்கத்தையும் உணர்ந்த நம்மால், நம்மிடத்தில் நம் பெயரில் ஆரம்பித்து,

சாப்பிடும் உணவு முறை, பண்டிகைகள், கடவுள் வழிபாடு, தொழில், உறவுகள், திருமணம், உடை உடுத்தும் முறை, சாவுக்கு சாங்கியம் செய்வது என பிறப்பிலிருந்து இறப்புவரை அத்தனையிலும் நம்மிடம் இருக்கும் சாதியின் தாக்கத்தை நாம் அறியாமல் சாதியின் இருப்பிற்கு அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் கை காண்பிப்பது, நம் ஒவ்வொருவரிடமும் உள்ள ஆணாதிக்கத்தை அறியாமல் ஆணாதிக்கத்தை யாருடைய சட்டைப்பையிலோ தேடுவது போலத்தான், சாதியின் இருப்பிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் ஒவ்வொருவரும் காரணம் ஒரே வித்தியாசம் சிலரின் பங்களிப்பு அதிகம், சிலர் பங்களிப்பு குறைவு சிலரின் பங்களிப்பு மிக மிக குறைவுஅவ்வளவே.

(சென்ற பதிவில் நான் எழுதியிருந்த பெயர் மற்றும் உணவுப் பழக்கங்கள் சாதி வழியாக தீர்மாணிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து பல பின்னூட்டங்கள் வந்தன, ஆனால் இன்று சிதம்பரம் நடராசர் கோவில் பிரச்சினை கூட தயிர்சாதம் VS கறிசோறு என்று விவாதிக்கப்படுகின்றது.)

காஷ்மீரிலிருந்து கர்நாடகம் வரை பல இடங்களில் வலுவாக இருக்கும் ஆயுத போராட்ட குழுக்கள் தமிழகத்தில் மட்டும் தற்போது வலுவாக இல்லாமைக்கு காரணம் என்ன என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் கிடைக்கும், மிக மிக முக்கிய காரணம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஓரளவிற்காவது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்த பட்ட மக்களின் பங்களிப்பு அரசியலில் இருப்பது, இரண்டாவது காரணம் பல இளைஞர் சக்திகள் திரைப்படங்களிலும் அரிதாரம் பூசிய திரைப்பட நடிகர்கள் பின்னாலும் விழுந்து கிடப்பது, இது உடல் வலியை மறக்க கஞ்சா குடித்து மயக்கத்தில் கிடப்பது போன்றது.

மாலன் அவர்களின் எழுத்திலிருந்து

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று

2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.

திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம், தனித்தமிழ் நாடு போராட்டத்தில் இறங்கி பின் ஆட்சியையும் கைப்பற்றியது இந்தி மேலாதிக்கத்தை தமிழகத்திலிருந்து திமுக விரட்டியடித்தது, ஆனாலும் 70களின் மத்தியில் புலவர் கலியபெருமாள் தலைமையில் வர்கப்போராட்ட சித்தாந்தத்தில் ஆயுத போராட்டம் (CPI-ML இந்திய கம்யூனிஸ்ட்-மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) உருவானது, கம்யூனிஸ்ட்களின் தேசிய சித்தாந்தம் தமிழக நலன்களை பலி கொடுப்பதாக கருதினார், பின்னர் தமிழக நலன்களின் புறக்கணிப்பை முன்னிறுத்திய புலவர் கலியபெருமாளுக்கும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இந்திய தலைமைக்கும் ஏற்பட்ட பிணக்கினால் இந்த இயக்கத்திலிருந்து தனி தமிழ்நாடு கோரிக்கையுடன் புலவர் கலியபெருமாள் வெளியேறினார், தமிழரசன் தீவிரவாத குழு என அரசால் தடை செய்யப்பட்டுள்ள தமிழர் விடுதலைப்படையை ஆரம்பித்து தனி தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தார், தனி தமிழ்நாடு கோரிக்கை தான் என்றாலும் தமிழரசன் உருவாக்க நினைத்ததாக அறியப்பட்டது சோசலிச தமிழகம், தமிழீழப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான போது புளோட்,ஈரோஸ் இயக்கங்களும் ஏன் விடுதலைப்புலிகளின் இயக்கமும் கூட சாதி வேறுபாடுகளற்ற சோசலிச தனித்தமிழீழம் தான் கொள்கையாக இருந்தது என்பதை சில பத்திரிக்கைகளின் மூலம் அறிந்துள்ளோம்.

தமிழர் விடுதலைப்படையில் இருந்தவர்களை நோக்கினால் அவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருந்தனர், இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் அவர்களில் பெரும்பான்மையினராக இருந்தது வன்னியர்களும், தலித்களும், இவர்கள் தான் மத்திய அரசை எதிர்த்தும் காவல்நிலையங்களை தாக்கிய போதும் பெரும் நிலக்கிழார்களையும், சாதிவெறி காரணிகளையும் எதிர்த்து ஆயுதப்போராட்டங்கள் நடத்தினர் அந்த நேரத்தில் திராவிட இயக்கங்களிலும், காங்கிரஸ் இயக்கத்திலும் அந்த வட்டாரங்களில் பெரும்பான்மையாக இருக்கும் இவ்விரு இன மக்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பது என்ற அளவில் மட்டுமே இருந்தது, மற்றபடி அரசியல், அதிகாரங்கள் சில பணக்கார உயர் சாதியினரிடமும் சில பணக்கார வன்னிய பண்ணையார்களிடமும் மட்டுமே இருந்தது, ஒரு சாதாரண விடயத்திற்கு, சான்றிதழுக்கு கையெழுத்து வாங்க இவர்களை பார்க்க வேண்டுமென்றாலும் கூட கிட்டத்தட்ட அடிமை மாதிரி கைகட்டி வாய்பொத்தி தான் கேட்க வேண்டிய சூழல், இது ஏற்படுத்திய கோபம், இந்த மக்களுக்கான அரசியல் வெற்றிடம் இவர்களை தமிழர் விடுதலைப்படையை நோக்கி ஈர்த்தது.

1964ம் ஆண்டு அமெரிக்கன் பீஸ் கேர் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் ஜான்.எஃப்.கென்னடி கூறியது

pockets of poverty any where thretens proesperty everywhere

எந்த ஒரு சமூகம் வறுமையிலும் ஏழ்மையிலும் கிடந்தாலும் அந்த சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.

இந்த காரணி தான் அந்த அடித்தட்டு மக்களை ஆயுதப்போராட்டத்திற்கு இழுத்து சென்றது. அன்று தமிழர் விடுதலைப்படை தனித்தமிழ்நாடு கேட்டதற்கும் அதன் ஆயுத போராட்டத்திற்கு கூறிய காரணங்கள் ஒரு சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் இன்றும் அப்படியே இருந்தாலும் இன்று அந்த ஆயுதகுழுக்கள் வலுவிழந்ததற்கு காரணத்தை யோசித்தால் சில விடயங்கள் புரியும்.

தமிழர் விடுதலைப்படை அரசின் இரும்பு நடவடிக்கைகளினால் வலுவிழந்தது என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர் விடுதலைப்படையின் தலைவர் தமிழரசன் கொல்லப்பட்டாலும் அதன் பிறகு தொடர்ந்து தெய்வசிகாமனி என்ற லெனின் தலைமையில் தமிழரசனையும் விட வீரியமாக செயல்பட்டது, அவரும் வெடிகுண்டு வெடித்து இறந்தபின் சில ஆண்டுகளில் அந்த இயக்கம் பிளவுண்டாலும் அதன் மொத்த செயல்பாடுகளும் வீரியம் இழந்ததற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தை இயக்கமும்.

அடித்தட்டு மக்களுக்கான சமூக, அரசியல் வெற்றிடத்தினால் தமிழர் விடுதலைப்படையால் ஈர்க்கப்பட்டவர்களை பாட்டளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் ஈர்த்தது, ஆயுதப்போராட்டமே அடித்தட்டு மக்களின் அரசியலுக்காக என்று தமிழர் விடுதலலப்படையினால் கூறப்பட்டது, ஆனால் அதற்கான அந்த ஆயுதப்போராட்டம் ஆபத்தானது, தற்போதுள்ள நிலையில் ஆயுதப்போராட்டம் வெற்றி பெறாது, நிச்சயம் பலி வாங்கிவிடும், இந்திய சமூகத்தில் வர்க்கப்போராட்டமும் கூட சாதியால் ஆனது எனவே வன்னிய சாதி மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் அவர்களின் அரசியல், சமூக வெற்றிடத்தை நிரப்ப முனைந்தது, மேலும் வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீடு போராட்டம் பெற்ற வெற்றியும் அதே சமயத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களும், அதில் அரசாங்கத்தின் பங்கும்(இதைப் பற்றி பிறகு விரிவாக பேசலாம்) இந்த மக்களை மேலும் கட்சிகளுடனான பிணைப்பை இறுக்கியது.

பாமக, விடுதலை சிறுத்தைகள் இயக்கங்களில் இணைத்து கொள்வது ஆயுத போராட்ட குழுக்களில் இணைத்துகொள்வதை விட பாதுகாப்பானது அதே சமயம் இந்த கட்சிகளினால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன் ஆயுத குழுவினால் அடையும் பயனைவிட மிக அதிகம், வாக்கு அரசியலுக்காக திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்ற அனைத்து கட்சிகளும் தொடத்தயங்கிய பல இடங்களில் பல தேவைகளில் இந்த கட்சிகள் அதிரடியாக போராடியது, அதாவது ஆயுத போராட்ட குழுக்களிடம் இருக்கும் ஆக்ரோசத்தோடும் ஆனால் அதே சமயம் ஆயுதகுழுக்களினால் ஏற்படும் பாதிப்புகள் இல்லாமல் பல இடங்களில் பல தேவைகளுக்காக போராடியது, ஆனால் இந்த ஆக்ரோசமே இந்த இயக்கங்களை வன்முறை இயக்கங்களை போல பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொது மக்களிடம் சென்று சேர்க்கும் காரியத்தை செவ்வென செய்தன.

வட மாவட்டங்களில் பெரும் நில உடமையாளர்களாக இருந்த முதலியார்(உடையார்), ரெட்டியார் மற்றும் சில பணக்கார படையாட்சிகளிடம்(வன்னியர்) இருந்த பண்ணையார் அரசியல் சட்டென்று அடித்தட்டு மக்களிடம் வந்தது, அம்பாசிடர் காரிலிருந்து இறங்காமலே ஓரிரு குடும்பங்களிடம் பேசி மொத்த ஊரையும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்து கொண்டிருந்த பண்ணையார் அரசியல் பாட்டாளி மக்கள் கட்சியாலும், விடுதலை சிறுத்தைகளினாலும் முடிவுக்கு வந்தது, காரிலே வந்து காரிலே சென்றவர்களை மட்டும் கொண்டிருந்த அரசியல் அடித்தட்டு ஆட்களுக்கும் வந்து சேர்ந்தது.

வன்னிய, தலித் மக்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன, ஆனால் இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள் என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது, இது மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தினல் நடந்தது, இதற்கு காரணம் பாமக, விடுதலை சிறுத்தைகள் இவர்களின் இந்த சாதி அரசியலினால் திமுக,அதிமுக, காங்கிரஸ் என ஆரம்பித்து அத்தனை கட்சிகளும் இதே அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என்ன கொடுமை இது வன்னிய தொகுதி, தலித் தொகுதி என அடையாளப்படுத்த படுதல் ஒரு வளர்ச்சியா என்பவர்கள் ஒரு நிமிடம் பொறுமை காக்கவும், வன்னியசாதி என்ற இடத்திற்கு பதில் அறியாமை, கல்வியறிவு பெரும்பாலும் சென்றடையாத, வெட்டி சாதிப் பெருமை பேசும் ஒரு வளர்ச்சியடையா சமூகம் என்றும் தலித் என்ற இடத்திற்கு பதில் அறியாமை, கல்வியறிவு இல்லாமல், மனிதனை மனிதாக மதிக்கப்படும் ஒரு மரியாதைக்கூட பெற முடியாத சமூகம் என்று பாருங்கள் அப்பொழுது தெரியும் இந்த அடையாளம் முற்போக்குத்தனமானதா? அல்லது பிற்போக்குத்தனமானதா என்று.

ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை, வளர்ச்சியடையா சமூகங்களை அவர்களின் அரசியலை முன்னிறுத்தும் கட்சிகள் தோல்வியடைந்தால், அவர்களுக்கு அரசிலும் அரசாங்கத்திலும் இடமில்லையென்றால் அந்த மக்களும் சேர்ந்தே தோல்வியடைகின்றனர், ஜான்.எஃப்.கென்னடி சொன்னது போல அந்த சமூகம் வளமையிலும் செல்வத்திலும் இருக்கும் ஒரு சமூகத்திற்கு இன்றோ நாளையோ ஒரு ஆபத்தாகத்தான் முடியும்.

இது தொடர்பாக மேலும் பேசுவேன்...

குறிப்பு
(மீள்வாசிப்பில் கட்டுரையின் பேசு பொருளில் மாற்றம் செய்யாமல் நில இடங்களில் நடையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

15 பின்னூட்டங்கள்:

said...

// வட மாவட்டங்களில் பல தொகுதிகள் முன்பு முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் என அடையாளப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால் இன்று அவைகள் எல்லாம் வன்னியர் தொகுதிகள், தலித் தொகுதிகள் என்று வகைபடுத்தப்படும் நிலையை எட்டியுள்ளது,//

(மேல் உள்ள வரிகள் நூறு சத உண்மையென்னும் பட்சத்தில் )முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நம் சமூகமும், ஊடகமும் வன்னிய தலித் தொகுதிகளாகும்போது சாதீய ஆபத்து என அலட்டிக்கொள்கிறதோ என எண்ணத்டோன்றுகிறது .

ஆனாலும் இந்த மாற்றம் சில வன்னியர்களை படையாச்சிகளாக்குவதில் திருப்தியடையும் என்றுதான் நினைக்கிறேன். தனிமனித துதிபாடல்களே இதன் ஆரம்பம் ..

said...

//மேல் உள்ள வரிகள் நூறு சத உண்மையென்னும் பட்சத்தில் )முதலியார் தொகுதிகள், ரெட்டியார் தொகுதிகள் பற்றி அலட்டிக்கொள்ளாத நம் சமூகமும், ஊடகமும் வன்னிய தலித் தொகுதிகளாகும்போது சாதீய ஆபத்து என அலட்டிக்கொள்கிறதோ என எண்ணத்டோன்றுகிறது .//

இது நூற்றுக்கு இருநூறு சதவீதம், நூற்றுக்கு ஐநூறு சதவீதம் உண்மை, குமுதத்திலோ விகடனிலோ தேர்தல் 2006 அலசலில் இந்த காரணியை அலசியிருந்தனர்.

//ஆனாலும் இந்த மாற்றம் சில வன்னியர்களை படையாச்சிகளாக்குவதில் திருப்தியடையும் என்றுதான் நினைக்கிறேன். தனிமனித துதிபாடல்களே இதன் ஆரம்பம் ..
//
திராவிட இயக்கங்களின், காங்கிரசின், ஏன் பா.ஜ.க.வில் ஏற்பட்ட மாதிரி நீர்ப்புகள் இங்கேயும் எதிர் காலத்தில் இருக்கும். இந்த நீர்ப்பு மிக அதிக அளவில் ஆகும்போது அந்த நேரத்தில் இந்த கட்சிகள் அம்மக்களாலேயே தூக்கி எறியப்படும், அதுவரை நிச்சயம் இந்த கட்சிகள் அம்மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்தி செய்யும்...

said...

If poverty is the problem then solution is not caste based
politics.The solution lies in
measures to eradicate poverty,
social development (access to education,health etc)and in
ending discriminations based
on birth/caste.Caste based
politics will intensify some
conflicts even as it empowers
caste groups.The result in
more conflicts and intensification
of caste feelings.Is that the
right solution.
The TN govt repressed the naxalite
movements.The repression was so
severe that they could not function
openly and had to go underground.
Has PMK ever condemned the state's
repression and human rights violations against naxals and
ML groups.

said...

Dear Sir,

I fully support the rise of PMK and other parties such as Dalit Panthers,Puthiya Tamizhakam by Dr K.

Let everybody express themselves.

The core of your thought regarding "Power to the common man/people in lower strata of society" is very much correct. By lower strata, I mean people who have neither the power of education nor power of wealth.

Power sharing is what will make everyone feel the ownership of the state/country.

Classic case is that of PMK. It might have started as a caste based party, but now they are talking/working in terms of state/country. Some of the points in their manifesto is just fantastic. Somewhere there must be a start. PMK started as vanniyar based party. That is all. Now they have grown.

As an example I wanted to give you alink.
http://www.chennaionline.com/chennaicitizen/2004/03akmoorthy.asp

This is an interview by PMK minister Mr Murthy. He talks about schools and development. This is progress. People will converge when they see development. Development alone can ease out the caste related pressures.

Our huge population having big gap in terms of all aspects of life, requires such parties. This is the only way each section of common man will be represented in power.

said...

//If poverty is the problem then solution is not caste based
politics.//
முதல்பாகம் முழுக்க பேசியதும் இந்த பதிவின் தொடக்கத்தில் பேசியதும் சாதிக்கட்டமைப்பு எப்படி இந்திய சமூகத்தில் ஒவ்வொன்றையும் நிர்ணயிக்கின்றது என்பதையே, அது போல் மிகப்பெரும்பாலான இடங்களில் நேரங்களில் ஏழ்மைக்கும் அறியாமைக்கும் காரணம் சாதிதான், அதை விளக்கத்தான் ஒரு முழு பாகமும் அதற்கு ஒதுக்கினேன் அதை புரிந்து கொள்ளாமல் இங்கே அதே கேள்வியை கேட்டால் நான் என்ன செய்ய...

//The TN govt repressed the naxalite movements.//
ஆந்திர அரசாங்கம் செய்யாமலா இருக்கிறது, பீகாரில் செய்யாமலிருக்கின்றார்களா? ஆனாலும் அங்கே இன்னமும் ஆயுத குழுக்கள் வீரியத்துடன் இருக்கின்றதே...

//Has PMK ever condemned the state's
repression and human rights violations against naxals and
ML groups//
இன்றைக்கும் ஆண்டிமடம் பகுதிகளில் ஆயுத குழுக்களின் சிம்ம சொப்பனமாக விளங்குவது பாமக தான், மேலும் தர்மபுரி அருகில் ஊத்தங்கரை மாந்தோப்பில் பயிற்சி எடுத்த நக்சல்களை காட்டிக்கொடுத்ததே பாமகவினர் தான்....

இது மாதிரியான நடவடிக்கைகள், பெரியாரில் ஆரம்பித்து இன்று இராமதாசு, திருமா வரையிலானவர்களின் போராட்டங்கள், இடஒதுக்கீட்டின் பலன் மற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொஞ்சமே கொஞ்சமாகவாவது கிடைக்கும் அரசியல் பலம் இவைகள் தான் இன்னமும் இங்கே ஆயுத குழுக்கள் முழு பலம் பெறாததற்கு காரணம், இல்லையென்றால் அரசாங்கம் எத்தனை அடக்குமுறைகள் பிரயோகித்தாலும் ஆயுத குழுக்களின் வளர்ச்சியை ஒன்றும் செய்ய இயலாது.

என்னை மடக்க வேண்டும் என்பதை விட நான் சொல்ல வந்ததில் உள்ள நியாயங்கள், கருத்துகள் போய் சேர்ந்து அது யோசிக்க வைத்தாலே போதுமானது

said...

Hello Mr Kuzhali,

We the TAMILIANS are very fortunate in NOT HAVING naxal type problem. But there is a group of educated intellects who does not understand this fortune.

The only reason for this fortune is the decent progress of the people from lower strata of the society. This progress includes every sphere of life and the most important being the power structure.

Again, I must say you have written a very meaningful article representing the REAL issues of the society.

said...

தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில தெளிவுகள் கிடைக்கின்றன.
நன்றி

said...

//The only reason for this fortune is the decent progress of the people from lower strata of the society. This progress includes every sphere of life and the most important being the power structure.
//
இது தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்...

//We the TAMILIANS are very fortunate in NOT HAVING naxal type problem. But there is a group of educated intellects who does not understand this fortune.
//
வெகுசன ஊடகங்கள் வெளிப்படுத்தாதை நாம் வெளிப்படுத்துவோம், இன்று இதை படிக்கும் சில நூறு பேர்கள் இதை யோசித்தால் அது அப்படியே பலரிடம் செல்லும் ஒரு நாள் எல்லா மக்களும் அறியும் நேரம் வரலாம்.... அது வரை காத்திருப்போம்....

//தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில தெளிவுகள் கிடைக்கின்றன.
//
நன்றி தருமி,உங்களுக்கே என்றால் எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை...

said...

நல்ல அலசல். நிறைய வேலை செய்கிறீர்க்ள். வாழ்த்துக்கள்.

வெங்கி

said...

While no one would dispute the fact that people from lower strata of the society needed to be upgraded in their education, social status, wealth, etc., it is questionable whether their success in vote bank politics would be an indicator of the same or would result in their development.

I have lived in south tamil nadu where similar change happened to Mukkulathors in MGR period; They were solidly behind MGR. Today, afer 35 years since MGR started AIADMK, only a fool would assume that their political empowerment has helped the area and its people. One might be seeing lesser number of Vellala Pillai MLAs and MPs today; thats just because a large number of the upper strata among them have migrated from villages and most of the constituencies are around villages today. A realignment of constituencies in TN according to population would show the difference soon. Chennai has approximately 10% percent of TN population but has only 14 assembly constituencies.

A simple comparison of status of south TN and West TN in the last 40 years would show that political empowerment of lower castes need not be a pre-requisite to their upliftment. Today, Western TN has two MPs belonging to DMK from Telegu 24 Manai Chettiar community; Has this in anyway show the diminishing clout of other powerful castes there? Everyone knows this has little relevance as long as MK or Jeya is going to be the real power; they can make or break any person, irrespective of caste and standing. What vanniars and Dalits and everyone else are fighting are for crumps; Marans and Mannarkudis walk away with thousands of crores. It has become obvious today that Ramadass and Thirumavalavan need MK and Jeya or some like them (remember Thirumavalavan's alliance with Moopanar) for their survival. Were Durai Murugan and MRK not Vanniars? Or is Parithi Ilam Vazhuthi and Raja not Parayars?

In any case, for upliftment of people, you need leaders with committment, intellect and vision; not necessary that he comes from the numerically large communities and definetely he need not pander to the lowest denomination. It might be difficult for people getting 'newly empowered' to accept; but this is the reality.

said...

கடைசியாக பின்னூட்டம் அளித்த அனானியின் வாதங்களில் நிறைய உண்மைகள் உள்ளன, இந்த விடயம் தான் அடுத்த பாகத்தில் பேசுவதாக உள்ளேன்.

//Were Durai Murugan and MRK not Vanniars? Or is Parithi Ilam Vazhuthi and Raja not Parayars?
//
ஆமாம் வன்னியர்களும், தலித்களும் தான், ஆனால் அவர்கள் சார்ந்துள்ள கட்சியை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலாது, உதாரணமாக திமுக ஆட்சியில் பேரணி கலவரத்தில் காவல்துறையினரினால் தாமிரபரணி ஆற்றில் 17 தலித்கள் குதித்து இறந்ததை பற்றி இளம்வழுதியினாலும், அமைச்சர் ராசாவினாலும் ஒன்றும் பேச இயலவில்லை, வாச்சாத்தி கற்பழிப்புக்கெதிராக இவர்கள் வாய்திறக்க இயலவில்லை ஆனால் அங்கே போராடியது புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, கண்டதேவி தேரோட்ட பிரச்சினையில் கிருஷ்ணசாமியும், திருமாவும் தான் குரல் கொடுக்க இயன்றதே தவிர அமைச்சர் ராஜாவினாலும் பரிதி இளம்வழுதியினால் முடியவில்லையே....

1987 வன்னியர் சங்க போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய அத்து மீறல்களை அப்போது பவர்புல் அமைச்சராக இருந்த வன்னியர், பண்ருட்டி ராமச்சந்திரனால் ஒன்றுமே செய்ய இயலவில்லை, அந்த நேரத்தில் அவர் மனஉளைச்சல் அடைந்தாரே தவிர அதைத் தாண்டி அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை... இது தான் பிற கட்சிகளில் உள்ள தலித் வன்னிய தலைவர்களுக்கு உள்ள பிரச்சினை....

//from lower strata of the society needed to be upgraded in their education, social status, wealth, etc.,
//
நிச்சயமாக...

//it is questionable whether their success in vote bank politics would be an indicator of the same or would result in their development.
//
வோட்டு வங்கி அரசியல் தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பை தருகின்றது, அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கு இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு ஓட்டு வங்கி அரசியல் மட்டுமே, இதைப்பற்றியும் அடுத்த பாகத்தில் விளக்கமாக பேசுகிறேன்...

அனானி பின்னூட்டத்தில் மடக்க வேண்டுமென்று நினைத்ததை விட கருத்து பகிர்தலை முன்னிலை படுத்திய கடைசி அனானிக்கு மிக்க நன்றி, நீங்கள் பெயர் சொல்லியே பேசலாமே... அப்படித்தான் பேச வேண்டுமென்ற கட்டாயமேதுமில்லை...

நன்றி

said...

Thanks to you, Mr.Kuzhali, for taking my point of view in the right spirit. I prefer writing anonymous so that my views are debated and not my background. This may not be the right way of doing it; but seems to be the best for me considering that i have strong, but not necessarily similar, views on everything. Discussions on Tamil Internet tend to "stereotype" people and i am afraid i will get lost in explaining my 'apparent contradictions'.

said...

குழலி அவர்களே,

முதல் பாகத்தில் 'காமெடி'யாக ஆரம்பித்து, இரண்டாம் பாகத்தில் நகைச்சுவையாக எழுதி, பின்னூட்டங்களில் சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களை விதைத்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் + நன்றி.

ஓர் வேண்டுகோள்!

தயவு செய்து பொதுமைபடுத்துவதை கைவிடுங்கள். வடக்கு தலித்துகளும் தெற்கு தலித்த்துகளும் ஒன்று என்பதாக எழுதுவதற்கு முன் தெற்கே சென்று அவர்களை அறிய முயலுங்கள். அல்லது அவர்களை குறித்த அபத்த கருத்துகளை எழுதுவதையாவது நிறுத்துங்கள்.

1. அங்கெ போய் தேவேந்திர குல வேலாளர்களிடம், நீங்கள் தலித் என்று சொல்லி பாருங்கள்!

2. தாமிரபரணி (கருணாநிதி அரசால் செய்யப்பட்ட) படுகொலை, தலித் பேரணியிலல்ல, மாறாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட பேரணியின் போது. புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமியில் நடந்த அப்பேரணியில் தலித்துகள் மட்டுமல்ல, பிற சாதியினர், மதத்தினரும் மரணித்தனர்.

நேரம் அனுமதிக்கும் போது மேலும் எழுத எத்தனிக்கிறேன்.

நன்றி.

said...

What is the full name of 'Raja' referred to in the comment posted by Anonymous?

said...

i am aasath

If you want to destroy this Caste-system, you should change this system as which can have the Dalit land owners.

For this social changes Pulavai. Kaliamoorthi or Tamil nationalist haven't can do it.

MPs/MLAs can discuss it in their assemblies only. If anyone from their to try for it, the state should prevent it to retain the system

Intellectuals can debat with them/ML movements. Somebodies may have go for the Human rights of suffered to justification of the existing society.

Naxalbhari or ML movements would self-criticise themselves. They wear the sword of ideology rather than ideologist. So they can win their aim of liberation of all suffered classes.