எங்கே போகிறது என் சமூகம்

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது....

தமிழ்புத்தாண்டு முடிந்து இன்று தினசரியை படிக்கும் போதும் தமிழ்மனம் இணையதளத்தை பார்க்கும் போதும் புத்தாண்டிலே வெளியான திரைப்படங்களுக்கு தரப்பட்ட முக்கியதுவம் வேதனை கொள்ளச்செய்தது....

சந்திரமுகியும்,மும்பை எக்ச்பிரசையும் தவிர வேறு செய்தியே தினசரிகளில் இல்லை.....

தமிழ்மனம் இணையதளத்திலும் எத்தனை எத்தனை பதிவுகள்....

இதற்கு இந்தியா, வெளிநாடு என்கிற பேதமேயில்லை....

ஒரு ஒரு பதிவிலும் அவர்கள் இந்த திரைப்படங்கள் பார்க்க எவ்வளவு கடினப்பட்டு அனுமதி சீட்டு வாங்கினர்,
எவ்வளவு கடினப்பட்டு இந்த படங்களை பார்த்தனர் என்று எவ்வளவு புளங்காகிதத்துடன் பதிவுகளில் விவரித்துள்ளனர்....

என்னே ஒரு சாதனை! என்னே ஒரு சாதனை!


திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனம்.... அவ்வளவே....

தமிழன் இந்த திரைப்படத்துக்கு தரும் முக்கியதுவத்தை பார்க்கும் போது நிச்சயமாக திருமா வும், இராமதாசு வும் இந்த திரைப்படக்கூத்தை தட்டிகேட்பதில் தவறில்லை எனவே தோன்றுகிறது....

இன்று மதுரையிலே ரசிகர்கள் கூடி சந்திரமுகி திரைப்படம் பார்க்கும்போது திரைப்பட கொட்டகை அடித்து நொறுக்கப்பட்டதாம்....
இது எப்போதுமே பெரும்பாலான ஊர்களில் நடக்கும் விடயம்தான்... சில நூறு ரசிகர்கள் சேரும்போதே வன்முறை நடக்கிறதே....

வன்முறைகட்சிகள் என்று பெயரெடுத்த பாமக வும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் எத்தனையோ கூட்டங்கள், மாநாடுகள் நடத்தியுள்ளன...
சில பல ஆயிரம் தொண்டர்கள் கூடுகின்றனர், எமக்கு தெரிந்து எல்லா கூட்டங்களிலும் வன்முறை நடந்ததில்லை....

போதும் இந்த திரைப்பட மோகம்.....

5 பின்னூட்டங்கள்:

said...

இன்றைய சினிமா ஒரு பலவீனமான தமிழ் சமுதாயத்தை உருவாக்கிகொண்டிருக்கின்றது!

said...

மிக நீண்ட நாட்களாக பின்னூட்டமிடப்படாத ஒரு பதிவு இது, பின்னூட்டமிட்டதற்கு நன்றி. நிச்சயமாக நான் திரைப்பட எதிர்ப்பாளன் அல்ல(நான் கூட கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் பற்றி எழுதி வைத்துள்ளேன்), ஆனால் அதற்கு தரப்படும் முக்கியத்துவம் தான் வேதனை கொள்ள செய்கிறது, அதுவும் தமிழ்மனம் இணையத்தில் திரைப்படங்களை பற்றி இத்தனை பதிவுகளை அதுவும் சந்திரமுகி,மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பொழுது போக்கு படங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் தரப்பட்டதை நான் எதிர்பார்க்கவில்லை.

said...

நல்ல வேளையாக அப்போது நான் வலைப்பக்கம் வராமலிருந்தேன். நம் அறிவியற் சாதனங்களின் பெரும்பயன்பாடு பொழுது வீணடிப்பிற்கே என்பதாக உணர்கிறேன்!

said...

//திருமா வும், இராமதாசு வும் இந்த திரைப்படக்கூத்தை தட்டிகேட்பதில் தவறில்லை எனவே தோன்றுகிறது....//
சூப்பர் ஜோக்குங்கண்ணா... அது எப்படி... இங்கிலீஷ் டைட்டில் வெச்ச படங்கள் மட்டும்தான் சமுதாயத்தை கெடுக்குதோ?! 'தமிழ்குடிதாங்கி'யை புகழணும்னு முடிவு பண்ணிட்ட பிறகு எப்படியெல்லாம் அவரை இழுக்கணும்னு வெவஸ்தையே இல்லாம போயிடிச்சி!

said...

வாங்க மாயவரத்தான், உங்க பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, நான் உங்கள் பின்னூட்டத்தையும்,இன்னும் சிலரின் பின்னூட்டத்தையும் வேறொரு பதிவில் எதிர்பார்த்தேன்.ஆனால் இங்கே தந்துள்ளீர்,மருத்துவர் இராமதாசு பற்றி ஒரு பதிவு எழுதிக்கொண்டுள்ளேன் அங்கே இதற்கு விளக்கமளிக்கப்படும்.