இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பகுதி - 3

சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பகுதி - 1
சிறந்த இளிச்சவாயர்கள் ரசிகர்களா? தொண்டர்களா? பகுதி - 2

யாவ தேனி. :
.........................
சா.பா. :
பேசுங்க மா, ஏன் அப்படியே நிக்கிறிங்க
யா.தே. :
சாரி சார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வரல
சா.பா. :
அஃக, சாரா? என்னியலாம் சார்னு கூப்பிட்ட மொத ஆளே நீங்க தாம்மா
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வரலனா என்ன அதான் காயிதத்தில எழுதியிர்க்கே அத படிங்க
யா.தே. :
ம்..........

சா.பா. :
உங்களை எப்படி பேச வக்கினும் னு தெரியும்
ஷாட் ரெடி டேக் ஒன்
யா.தே. :
ம்... எல்லாருக்கும் வணக்கம்,
ஓ அயாம் சாரி...(கொஞ்சலாக)
பாட்டி மன்ற நடுவ்வர் அவ்வர்கலெ

சா.பா. :
(அதிர்ச்சியாக) என்னது பாட்டி மன்றமா?!, சரி விடுப்பா இதெல்லாம் சகஜம்

யா.தே.:
பொலிட்டிக்கல் லீடர்ஸ்லாம் ரத்தத்தின் ரத்தமே,உடன்பிறப்பே,பாட்டாளி ச்சொந்தங்களேனா மெல்ட் ஆயிடறாங்கனா
ஸ்டார்ஸ்ங்க என் ரசிகனே என் இதயமேனா ஃபேன்ஸ் லாம் மெல்டாயிடறாங்க
சா.பா. :
அம்மா ஒரு நிமிஷம் நிறுத்துங்க,
நீங்க இளிச்சவாயர்கள் தொண்டர்களேனு பேசனும்,
நீங்க என்னடானா இளிச்சவாயர்கள் ரசிகர்களேனு பேசுறிங்க போல இருக்கு

யா.தே.:
சாரி சார் ஸ்கிரிப்ட்லாம் மிக்ஸ் ஆயிடிச்சி, நேத்து ரிகர்சல்ல கூட நல்லாதானே பேசினேன்
சா.பா. :
சரி நீங்க படிங்க


யா.தே.:
ஆர்ட்டிஸ்ட் நாங்களாம் ஸ்டிரைக் பண்ண நெய்வேலி போனோம்,
பட் ஒரு லீடர் அரெஸ்ட் பண்ணிட்டாங்கனு, நெய்வேலிலருந்து மெட்ராஸ் வந்து பீச் ரோட்ல பொலீஸ் கிட்டயும்,
ரவுடீஸ் கிட்டயும் அடி வாங்குனாங்க, நான் டீ.வி ல அத பாத்து ரொம்ப சேட்(sad) ஆயிட்டேன்,
ரொம்ப அளுதுட்டேன்.
யா.தே.:
ம்கும் ம்கும் (கண்ணீர் விட்டு அழுகிறார்)

சா.பா.:
ஏம்மா கொஞ்சம் நிறுத்துங்க இது மெகா சீரியல் இல்ல, நீங்களும் அழுது எங்களையும் அழ வைக்க
யா.தே.:
இந்த எலக்ஷன்க்கு ஒரு பார்ட்டியோட அலயன்ஸ், நெக்ஸ்ட் எலக்க்ஷன்க்கு வேற பார்ட்டியோட அலயன்ஸ்
இந்த எலக்ஷன்ல யார ஆப்போனன்ட் பண்ணாங்களோ அவங்களை நெக்ஸ்ட் எலக்ஷன்ல சப்போர்ட் பண்ணனும்
இட் ஈஸ் ரியலி டிஃபிகல்ட் ஃபார் தெம்... தே மைட் ஹேட் ஃபைட் இன் த பிரீவியஸ் எலக்ஷன்,
பட் திஸ் இஸ் நாட் அ ப்ரோபளம் ஃபார் த ஃபேன்ஸ், தே சப்போர்ட் ஆல்வேஸ் தேயர் ஆக்டர்,
சோ த பெஸ்ட் இளிச்சவாயன் இஸ் தொண்டர்களே,

தேங்க் யூ ஆல், சீ யூ நெக்ஸ்ட் வீக், அன்டில் தென் பை ஃபர் யா.தே

சா.பா.
இந்தம்மா நல்லாத்தான் பேசினாங்க, சரியாத்தான் சொன்னாங்க,
கூட்டணி மாறுறது தொண்டர்களுக்கு மட்டும் பிரச்சினையில்லை
ரசிகர்களுக்கும் தான், அப்போ ஆண்டவனாலயும் காப்பாத்தமுடியாதுனு சொல்லி சொல்லுவாரு
அடுத்த தடவை அவங்களுக்கே ஓட்டுபோடுவாரு, இதுல நம்ம ரசிகர்களும் குழம்பிடுவாங்க

அப்புறம் பீச்சில கூட்டத்துக்கு போயி அடிவாங்குனாங்கனு தொண்டர்கள்னு சொன்னாங்க இந்தம்மா,
நம்ம பக்கத்து ஆளு ஒருத்தரு சென்னையில மாயாஜாலுக்கு வந்தாரு
என்னப்பா இந்த பக்கம்னேன், பீச்சில கட்சி மாநாட்டுக்கு வந்தேன்னாரு,
அடப்பாவி வேல வெட்டிய விட்டுட்டு கட்சி மாநாட்டுக்கு வந்திருக்கியேன்னேன்
அய்யா நான் என்ன இளிச்சவாயனா? ஒரு நாளைக்கு இருநூறு ரூபா பேட்டா,
தெனம் ஒரு குவார்ட்டரு, பிரியாணி அதுமட்டுமில்லாம மதுரையிலருந்து இங்கன வந்து போவ வேன்
ஆனா ஒரு நா கூலி வேலைக்கு போனா 150ரூபாதான் கெடைக்கும்னாரு
எல்லாம் வெவரமாதனப்பு இருக்காக.

நம்ம ஊர்ய் ரசிகர் மன்றத்து ஆளை சென்னையில பார்த்தேன்,
எங்க அப்பு இங்கன வந்திருக்கீகனேன்
தலைவர் பொறந்தநாளு அதான் வந்தேன்
உங்க தலைவர்தான் பொறந்தநாளைக்கு ஊருலயே இருக்க மாட்டாரே
என்னப்பு இளிச்சவாய்த்தனமா இங்க வந்திருக்கீகன்னேன்
இல்லீங்கய்யா நம்ம தலைவர் ஊருல இருக்கமாட்டாருனு தெரியும்,
ஆனா மேடம் இருப்பாங்கலே, அப்புறம் மன்றத்த்லைவரும் இருப்பாரே,
அப்புறம் தலைவர் வீட்டுமுன்னாடி சரவெடி போட்டாதானே
நாளைக்கு தலைவர் பாலிட்டிக்ஸ்ல குதிச்சா நம்மளை ஞாபகம் இருக்குமே,
அப்புறம் மதுரையிலருந்து மன்றத்தாளு வந்துகினு இருந்தாகனதானே மன்றத்துக்கு கரெக்டா பணம் வரும்னாரு
ஆகா...இந்த ரசிகர்களும் லேசுப்பட்டவங்க இல்ல.

ஆனா இதெல்லாம் தெரியாம இந்த ரசிகர்களையும்,தொண்டர்களையும்
இளிச்சவாயர்களா நினைத்துக்கொண்டிருக்கின்றதே பொது மக்கள்
நம்ம அல்வாசிட்டி விஜய் சொன்ன மாதிரி அந்த பொது மக்கள்தான் மிகச்சிறந்த இளிச்சவாயர்கள்,
இதெல்லாம் பொது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாம இருக்கலாம்,
மன்றத்து ஆளுகளையும், அரசியல் தொண்டர்களையும் ஆதரிக்கின்ற
மிகச்சிறந்த அறிவாளிகள்,படிப்பாளிகள்,எழுத்தாளிகளான தமிழ்மண நாயகர்களுக்கெல்லாம்
இது எதுவுமே தெரியாத மாதிரி பெரிய கருத்து கந்தசாமி மாதிரி இதைப்பற்றி மூன்று பதிவு போட்ட
குழலிதான் மிகப்பெரிய இளிச்சவாய் இளிச்சவாய் இளிச்சவாய் என தீர்ப்பளிக்கின்றேன்

சா.பா.
தம்பி லிண்டுக்கல் தியோனி அடுத்த பட்டிமன்றம் உங்களதாமே தயாரா?

லிண்டுக்கல் தியோனி:
(அடித்தொண்டையிலிருந்து)ஹி ஹி அதெல்லாம் வுட்டுறுவுமா, கலக்கிபுடுவோமில்ல

9 பின்னூட்டங்கள்:

said...

///குழலிதான் மிகப்பெரிய இளிச்சவாய் இளிச்சவாய் இளிச்சவாய் என தீர்ப்பளிக்கின்றேன் //

சால . பாப்பையா நா பாப்பையா தான்.. என்னமா உன்மைய படார் னு போட்டு ஒடச்சிட்டார் பாருங்க.. !!

said...

நாட்டாம,

தீர்ப்ப மாத்திச் சொல்லு..

said...

குழலி ஆரம்பம் முதல் படித்து வருகிறேன்......
இந்த தீர்ப்பு கொஞ்சம் கூட எதிர்பாராதது.
ரெண்டு பதிவுல கொடுத்த அந்த சஸ்பன்ஸ் இந்த பதிவுல உடைபட்டதுனாலும் இந்த முடிவ ஏத்துக்க முடியல.......
அதுக்காக நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு குரலெல்லாம் கொடுக்க மாட்டேன்....மரியாதையா நீங்களே மாத்திருங்க

said...

//சாரி சார் ஸ்கிரிப்ட்லாம் மிக்ஸ் ஆயிடிச்சி, நேத்து ரிகர்சல்ல கூட நல்லாதானே பேசினேன்//

பட்டிமன்றங்களில் யார் யார் என்னென்ன பேச வேண்டுமென்று ப்ராக்டிஸ் செய்து ரிகர்சல் செய்து பேசுவார்கள் என கேள்விப்பட்டது உண்மையா

said...

ஆகா! ஒரு வழியா முடிச்சிட்டீங்க போலிருக்கு :-))))))))))))

said...

பின்னூட்டமளித்த வீ.எம்,நாடோடி,அனானிமஸ்,கோ.கணேஷ் மற்றும் அல்வாசிட்டி விஜய்க்கு நன்றி

//ஆகா! ஒரு வழியா முடிச்சிட்டீங்க போலிருக்கு :-))))))))))))//

என்னங்க அல்வாசிட்டி விஜய் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிங்க போல இந்த பட்டிமன்றத்தை முடித்ததில்.

//தீர்ப்ப மாத்திச் சொல்லு.. //
//இந்த முடிவ ஏத்துக்க முடியல.......//

பொதுமக்கள் தான் சிறந்த இளிச்சவாயர்கள் என யோசித்து வைத்திருந்தேன் , ஆனால் நம்ம அல்வாசிட்டி விஜய்
போன பதிவின் பின்னூட்டத்தில் அதை உடைத்துவிட்டதால்(அறிவாளிகள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள்?!) வேறு வழியின்றி முடிவை மாற்றி விட்டேன், இருந்தாலும் அய்யா வழங்கிய தீர்ப்பு சரியென கருதுகின்றேன்.

said...

//பட்டிமன்றங்களில் யார் யார் என்னென்ன பேச வேண்டுமென்று ப்ராக்டிஸ் செய்து ரிகர்சல் செய்து பேசுவார்கள் என கேள்விப்பட்டது உண்மையா//

அனானிமஸ் அது உண்மைதான், இது அரட்டை அரங்கங்களுக்கும் பொறுந்தும்

said...

கலக்கிபுட்டீங்க குழலி... பிரமாதம்... நல்ல நகைச்சுவை + கற்பனை உங்களுக்கு... அப்படியே "சிறந்த வெட்டி" பட்டத்துக்கு தகுந்தவர் ராமதாஸா வீரப்பனான்னு ஒரு பட்டிமன்றம் போடுங்கப்பு (உங்கள சீண்டுனா கிடைக்கிற நிம்மதி ப்ரூ காபில கூட கிடைக்காது)

said...

பின்னூட்டமிட்ட முகமூடிக்கு நன்றி
// நல்ல நகைச்சுவை + கற்பனை உங்களுக்கு... //
இந்த பட்டிமன்றத்தில் நகைச்சுவை இருக்கலாம் தலைவா, ஆனால் ஒரு ஒரு நிகழ்ச்சியும் உண்மையோ உண்மை


//(உங்கள சீண்டுனா கிடைக்கிற நிம்மதி ப்ரூ காபில கூட கிடைக்காது)
//
அடங்கொக்காமக்க என்னது இது சின்னப்புள்ளத்தனமா, எத்தனை பேரு கெளம்பியிருக்கிங்க ஹி ஹி