சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

எப்பொழுதும் யாரையாவது விமர்சனம் செய்து எழுதியது சற்று அலுப்படைந்து விட்டதால்,
சிலரின் நல்ல பக்கங்களை எழுதலாம் என ஆரம்பித்துள்ளேன்

இந்த வரிசையில் மூன்றாவதாக நான் எழுதுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு ஆனால் அதையெல்லாம் விலக்கிவிட்டு
அவரிடத்தில் எனக்கு பிடித்த சில அம்சங்களை எழுதுகின்றேன்.

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடிப்பதற்கும் சில அழகுக்குறியீடுகள் இருந்தது
சிவப்பாக இருப்பது என்பதும் கதாநாயகன் எப்போதும் நல்லவனாகவே தோன்றுவது என்பதும்,
நடனத்திறமை, சிறந்த நடிப்புத்திறமை இருக்க வேண்டும் என்பதும் இருந்து வந்தது.
அதையெல்லாம் முறியடித்து தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு
வெற்றிகரமான கதாநாயகனாக திகழ்கின்றார் ரஜினி.

சிவப்பு என்கின்ற அழகுக்குறியீட்டை உடைத்து அவர் போட்ட பாதையில்தான்
விஜயகாந்திலிருந்து இன்றைய தனுஷ் வரை வெற்றிகரமாக நடைபயில முடிந்தது.அப்போது இப்படி ஆரம்பித்து
தற்போது இப்படியுள்ளார்திரையுலகம் என்பது ஒரு மாய உலகம் இங்கு தொடர்ந்து தனது படங்களை கொடுத்து
தனது இருப்பை தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால்
மக்கள் மட்டுமல்ல ரசிகர்களும் சேர்ந்தே மறந்து விடுவர்,
அப்படி மறக்கப்பட்டவர்களில் முதன்மையானவர் ராமராஜன்.

ஆனால் மூன்றாடுகளுக்கு பிறகு படம் கொடுத்தாலும் மறக்கப்படாமல் இருக்கின்றார் ரஜினி.

பழைய திரைப்படங்களில் கதாநாயகி டூயட் பாடுவதும், நடிப்பதும் மட்டுமே செய்தனர்,
கவர்ச்சியாட்டத்தை அதற்கென ஒரு பாடல்களில் ஆடும் நடிகைகள் இருந்தனர்,
ஆனால் தற்போது கதாநாயகிகளே கவர்ச்சிப்பாடல்களிலும் ஆடுகின்றனர்
இதேப்போல் பழைய கதாநாயகர்கள் படத்தில் நகைச்சுவை செய்ததில்லை(முழு நீள நகைச்சுவை படங்கள் தவிர),
இதை உடைத்து திரைப்படங்களில் கதாநாயகன் சில காட்சிகளில் நகைச்சுவை செய்வது என்பதை அறிமுகப்படுத்தியவர்
ரஜினி. இன்று இந்தப்பாதையில் விஜய்,கார்த்திக் மற்றும் பலர் நடைபோடுகின்றனர்.

கர்னாடகாவிலிருந்து வந்து தமிழ் திரையுலகில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமாகி
இன்று மிகப்பெரிய கதாநாயகனாக வளர்ந்திருப்பது மிகவும் பாராட்டவேண்டியது,
புது ஊரில் வேலைத்தேடி செல்வதே பல சிரமங்களைத்தரும் நிலையில்
தமிழ்த்திரையில் கால்பதித்தது மிகப்பெரிய செயல்தான்.

பல ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் சக்திவாய்ந்த ஒரு தலைவரிடம் மோதி
அதனால் பாதிப்படைந்து பின் அதிலிருந்து மீண்டு,
மீண்டும் தமிழ் கலையுலகில் இடம்பிடித்தது நிச்சயமாக
அவரது மனோதிடத்தினால்தான், அந்த மனோதிடம் எனக்கு மிகப்பிடித்தது.

பெரும்பாலான நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் தோல்வியடைந்ததை கண்டுள்ளோம்,
ஆனால் சொந்த வாழ்க்கையையும் திறம்பட நடத்தி வருபவர் ரஜினி.

ஒரு நடிகரை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில பிரிவினருக்கு பிடிக்கும்
ஆனால் ஒரு சிலர் மட்டுமே குழந்தைகள், நடுத்தரவயதினர், இளைஞர்கள், பெண்கள்
என பல பிரிவினருக்கும் பிடிக்கும், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிடித்தமான
நடிகராக இருப்பது சற்று கடிணம், இந்த விடயத்தில் ரஜினி வெற்றிபெற்றுள்ளார்.

பெண்களுக்கு பிடித்தமான நடிகர்களிடம் ஒரு சிறப்பம்சத்தை நான் கவணித்துள்ளேன்
அந்த நடிகர்களின் நடிப்பில்,அசைவில்,மேனரிசத்தில் பெண்மையின் சாயல்,நளினம் சற்று வெளிப்படும்,
கன்னட நடிகர் திரு.ராஜ்குமாரின் நடனம் மற்றும் பேச்சிலும்,எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் நடையிலும் சில அசைவுகளிலும்
இதைக்கண்டுள்ளேன், இதேப்போல் நடிகர் பிரசாந்த் அவர்களின் பேச்சு,நடனம்,சண்டை மற்றும் அசைவுகளில்
ஒருவிதமான பெண்மையின் நளினம் நன்றாகவேத்தெரியும், இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள்தான் அதிகம்.

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்தாரே, அது சொந்த ஈகோவிற்கு கொடுத்தாரா
அல்லது வேறு எதற்கு கொடுத்தாரோ அது வேறு விடயம், அதுவும் ஜெயலலிதாவைப்போன்றே
சக்திவாய்ந்த ஒரு மனிதரை எதிர்த்து பல ஆண்டுகளுக்குமுன் பாதிப்படைந்திருந்தாலும்
அதைப்பற்றி கவலைப்படாமல் எதிர்த்தாரே அந்த தைரியம் பிடித்திருந்தது.

எனக்கு பிடித்த ரஜினிப்படங்கள் ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும், தில்லுமுல்லு
தற்போதைய அவரின் படங்களைப்பற்றி சுத்தமாக தெரியாது.

ரஜினி ஒரு புரியாத புதிர்
அவர் கோமாளி வேடம் போடும் புத்திசாலியா?
இல்லை புத்திசாலி வேடம் போடும் கோமாளியா?
என்பது இதுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது

19 பின்னூட்டங்கள்:

said...

அன்புள்ள ரஜினி ராம்கி

ஓடி வா ஒடி வா, வந்து ஏதெனும் எழுது

said...

good post kuzhili
Rajinikanth aka Shivaji Rao Gaekwad is actually Maharashtrian born/brought up in Karnataka.
Anway he is the first guy to have brought coolness to villain characthers unlike the old generation.
Who can forget parattai,mundru mudichu or netrikann(vakra mamanar) he is just awesome in those charachters. One of the best cine villains.

said...

//ரஜினி ஒரு புரியாத புதிர்
அவர் கோமாளி வேடம் போடும் புத்திசாலியா?
இல்லை புத்திசாலி வேடம் போடும் கோமாளியா?
என்பது இதுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது //

உங்களுக்கு மட்டுமா?

said...

அவர் கோமாளி வேடம் போடும் புத்திசாலியா?
இல்லை புத்திசாலி வேடம் போடும் கோமாளியா?
என்பது இதுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது

இவ்ளோ பெரிய பில்ட் அப், ஆராய்ச்சி எல்லாம் தேவையா??? வேஷம் போடும் ஒரு கூத்தாடி ன்னு மட்டும் எப்பய்யா பாக்க போறீங்க... என்னுடைய நல்ல பக்கங்கள் உங்கள் வரிசையில் நாலாவதா?? ஹி.ஹி..

said...

நீங்க ரஜினியை பாராட்டுவது , ஐயா புத்திரரின் அன்பு தோழர் என்றுதானே..

said...

குழலி நன்கு ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, லார்டு லபக்கு தாஸீ வழக்கம் போல அவரது குசும்பை காண்பிக்கின்றார். அடுத்ததாக யாரைப்பற்றி நல்லதாக 4 வார்த்தை எழுதுவது என்று யோசிக்கின்றேன்,யோசித்துக்கொண்டே இருக்கின்றேன், விமர்சிப்பது என்றால் வரிசையாக பதிவு போட முடிகின்றது, நல்லப்பக்கங்கள் என்றால் ?!

said...

அது சரி... - ஆகவோ + ஆகவோ ஒரு வாக்கு கூட விழவில்லை, ஜெயலைதாவின் பதிவுக்கு சுற்றி சுற்றி - ஆக வாக்களித்த மக்களே எங்கே நீங்கள்

said...

//அடுத்ததாக யாரைப்பற்றி நல்லதாக 4 வார்த்தை எழுதுவது//

என்னை பத்தி நாலு விஷயம் நல்லதா எழுதுங்க.. ஏதாவது பட்டம் கொடுங்க..நானும் உங்களுக்கு ஒரு பட்டத்தை கொடுத்து , உங்களை பத்தி எழுதுரேன்.. நம்மோட அரசியல் கலாச்சாரத்தை நாம இரண்டு பேரும் சேர்ந்து காப்பாத்துவோம்.

said...

Hi Kuzhali,
Good analysis on Rajni kanth.
Then.. I want to note 2 points here

1. Even before Rajni, Thiru Kamal Hasan has introduced the comedy in his Hero characters.
2. There is no confusion at all.. Rajni is a " komaali veesham poodum puthisaali "

And as Mugamoodi said " Vesham poodum oru koothaadi" mattumee. I am agreeing with his words that " Why so much build up, research on him.. is it necessary?

said...

///தற்போதைய அவரின் படங்களைப்பற்றி சுத்தமாக தெரியாது.//

நம்பிட்டோம் குழலி அன்னாச்சி !

//அதைப்பற்றி கவலைப்படாமல் எதிர்த்தாரே அந்த தைரியம் பிடித்திருந்தது/
உங்களுக்கு சூப்பர் ஸ்டார் தைரியமும் பிடிச்சிருக்கு... அம்மாவில் தைரியமும் பிடிச்சிருக்கு.. யாருது ரொம்ப பிடிச்சிருக்கு???

//அவர் கோமாளி வேடம் போடும் புத்திசாலியா?
இல்லை புத்திசாலி வேடம் போடும் கோமாளியா?//

மொத்ததுல அவர் கோமாளியா இருந்தாலும் வேசம், புத்திசாலியா இருந்தாலும் வேசம் னு சொல்றீங்க!!

அடுத்ததா நம்ம மருத்துவர் ஐயா பற்றி எழுதுங்களேன் !!

said...

வி.எம். என்ன வெளயாடுறீங்களா? சிலரின் 'நல்ல' பக்கங்களை எழுதப்போறேன்னு அவரே சொல்லியிருக்காரு. அப்புறம் அவருகிட்ட போய் தமிழ்குடிதாங்கி பத்தி எழுத சொல்றீங்க?!

said...

///ரஜினி ஒரு புரியாத புதிர்
அவர் கோமாளி வேடம் போடும் புத்திசாலியா?
இல்லை புத்திசாலி வேடம் போடும் கோமாளியா?
என்பது இதுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது///

:-) :-) சிந்திக்க வைக்கும் நகைச்சுவை.

said...

///அடுத்ததா நம்ம மருத்துவர் ஐயா பற்றி எழுதுங்களேன் !!///
வீஎம்,
மருத்துவர் கோமாளி என்று எழுத பலர் இருக்கிறார்கள். அவர் அறிவாளி என்று எழுத குழலிபோல் சிலர்தான் இருக்கிறார்கள். குழலியின் பழைய பதிவுகளைப் பாருங்களேன்.

said...

நல்ல முயற்சி. அதாவது எல்லாரையும் எல்லா நேரமும் குறையுள்ள பார்வை பார்க்கும் போது இந்த நிறைகளை மட்டுமே பார்க்கும் உங்கள் பதிவு அருமை.

மருத்துவர் மற்றும் அவரது மகன் பற்றி குழலி ஏற்கனவே எழுதிவிட்டார். அடுத்து அம்மா, கலைஞர், அத்(து)வானி, பின்லாடன், புஸ் (ஜார்ஜ்), ஜெயேந்திரர், ஜெயலெச்சுமி (போலீஸ்), சசிகலா, இப்படி நெறைய ஆளுகள பத்தி எழுதுங்க அன்ணாச்சி (ரொம்ப யோசிக்காதீங்க நம்ம கிட்ட கேளுங்க) ;-)

said...

முத்து பதிவுக்கு மீண்டும் வந்தாச்சி போலிருக்கு... ரொம்ப டேங்க்ஸ்பா

//யாருது ரொம்ப பிடிச்சிருக்கு???//
அதிகம் பிடித்ததென்றால் அம்மா தான்... ஆனா இதைவிட அதிகம் பிடித்த தைரியம் யாருடையது தெரியுமா.. சிலரின் நல்லப்பக்கங்களில் அடுத்து வருபவர் தான் அவர்...

//அடுத்து அம்மா, கலைஞர், அத்(து)வானி, பின்லாடன், புஸ் (ஜார்ஜ்), ஜெயேந்திரர், ஜெயலெச்சுமி (போலீஸ்), சசிகலா, இப்படி நெறைய ஆளுகள பத்தி எழுதுங்க அன்ணாச்சி (ரொம்ப யோசிக்காதீங்க நம்ம //
அம்மா பற்றிதான் ஏற்கனவே எழுதிவிட்டேனே... நீங்கள் கொடுத்த பட்டியல் நன்றாகத்தான் உள்ளது... முயற்சி செய்கின்றேன்...ஆனாலும் ஜெயேந்திரர், ஜெயலெச்சுமி (போலீஸ்) லாம் கொஞ்சன் அதிகம் தாங்க...

said...

///சிலரின் நல்லப்பக்கங்களில் அடுத்து வருபவர் தான் அவர்.../////
குழலி அண்ணே !!
ஓ !! என்னை பற்றி தான் அடுத்த பதிவா... ஹஹஹா ஒகே ஒகே !!
அப்புறம் என் ஒரு கேள்விக்கு பதில் இல்லையே !
இது தான் கேள்வி
அடுத்ததா நம்ம மருத்துவர் ஐயா பற்றி எழுதுங்களேன் !!

said...

//அப்புறம் என் ஒரு கேள்விக்கு பதில் இல்லையே !
//

4-ஆம் பகுதி பாதி எழுதியிருக்கின்றேன்... அதில் உள்ளது பதில்... முழுவதும் எழுதிவிட்டு பதிவு செய்கிறேன்... விரைவில் எதிர்பாருங்கள்...

said...

If you see Rajini as actor only really he entertains us, other part of Rajini is nothing to do with us.