விச்சுவின் கேள்விகளுக்கு பதில்

விச்சு அவருடைய பதிவில் நேர்காணல் - என் கேள்விக்கென்ன பதில் நேர்காணலுக்கான என்னுடைய பதில்கள் இங்கே

1. நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?

நிச்சயம் தேவை என்பது என் கருத்து, பதவியிலிருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் தரவேண்டும், அதே சமயம் தேர்தல் செலவுகள் மொத்தமும் குறைக்கப்பட வேண்டும், பணம் தேர்தலில் விளையாடக்கூடாது, தேர்தல் விளம்பரங்கள் கட்டுப்படுத்த வேண்டும்,எல்லோருக்கும் ஒரே மாதிரியான செலவில் தேர்தல் விளம்பரங்களை அரசாங்கமே அச்சடித்து தரவேண்டும் , ஊழல் செய்தால் மிகக்கடுமையான தண்டனை தரப்படவேண்டும், ஊழல்வாதிகளின் எல்லா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

2. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்

நன்றாகத்தானிருக்கும், வரலாற்றில் இதுவரை தமிழர்கள் ஒரு ஆளுமையின் கீழ் வந்ததில்லை, ஆனால் தற்போது தமிழையும் தமிழர்களின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றி வருவது அவர்கள் தான் ஈழமும் இங்கே இருந்தால் நிச்சயம் தமிழகத்தின் ஆதாரமான அதே சமயம் அவசியமற்ற பிரச்சினைகள் அங்கேயும் இருக்கும், தமிழகத்தின் மற்றொரு பகுதி என்பதை விட வேறெந்த சிறப்பம்சமும் இருக்காது என நினைக்கின்றேன்.

3. ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்? (வேண்டாமென்றால் அமெரிக்காவின் அதிபராக என்று வைத்துக்கொள்ளுங்கள்)

முதலில் வாழ்நாள் முழுவதும் நான் மட்டுமே பிரதமர் என்று சட்டத்திருத்தம் செய்து நிரந்தர பிரதமராவேன்.(நான் என்ன சோனியா காந்தியா, இல்லை மகாத்மா காந்தியா பிரதமர் பதவியை மற்றவர்களுக்குத்தர),

இப்போ நான் ஒரு நாள் பிரதமரல்ல, நிரந்தர பிரதமர் சரியா!

சற்று கடினம் தான் என்றாலும் ஓஷோ அவர்களின் கருத்தின்படி எல்லா குழந்தைகளையும் பிறந்த உடன் பொது காப்பகத்தில் விடவேண்டும், அங்கே யாருடைய குழந்தைகள் என பெற்றோருக்கும் யார் பெற்றோர்கள் என குழந்தைக்கும் தெரியாமல் வளர்க்கவேண்டும் என்பதற்கு ஏற்பாடு செய்வேன்,

அனைவருக்கும் உணவு உடை இருப்பிடத்திற்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படவேண்டும்

மக்களுக்கும் ஊடகங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகப்படியான சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

தேவையின்றி வீம்புக்காக பணத்தை வாரியிறைத்து இராணுவத்தை நிறுத்தியிருக்கும் இடங்களிளெல்லாம் இப்போதிருக்கும் நாட்டுடன் இருக்க வேண்டுமா தனியாக பிரிந்து போக வேண்டுமா என்று நியாயமான கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு எப்படியிருந்தாலும் அதை செயல்படுத்துவேன், சில புற்றுநோய்களை குணப்படுத்த முடியாத போது வெட்டிவிடுவதுதான் மற்றைய இடங்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் நன்று.


4. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?

தற்போதைக்கு யாரும் அப்படியல்ல.

5. உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.

வரம்-1. சேகுவேரா மீண்டும் பிறந்து வரக்கேட்பேன்

வரம்-2. திரைப்படம் மற்றும் கிரிக்கெட் மாயையிலிருந்து மக்கள் மீளக்கேட்பேன்

வரம்-3. எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து இன்று புதிதாய் உலகம் பிறக்கக்கேட்பேன்

9 பின்னூட்டங்கள்:

said...

நன்றாக இருக்காது.

"ஆனால் தற்போது தமிழையும் தமிழர்களின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றி வருவது ஈழத்தமிழர்கள்தான்"

கேடயமாக பாவித்து உள்ளீர்கள்.

நன்றி.

said...

குழலி, பதில்களுக்கு நன்றி..

இராவணமா, இராணுவமா.. எழுதுப் பிழையா இல்ல எதும் சொல்ல வரீங்களா.. நிறைய திட்டங்கள் வச்சிருக்கீங்க.. ஒரு நாள் பிரதமராக வாழ்த்துக்கள். நிசசயமா நல்லது நடக்கும்னு நம்பலாம்.

நீங்கள் சொன்ன தேர்தல் செலவு கட்டுப்பாடு சேஷன் நடத்திய ஒரு தேர்தலில் காணக் கிடைத்தது.. அப்புறம் அவரையே அனுப்பிட்டாங்க..

அன்புடன் விச்சு

said...

எனக்கு பதில் கிடைக்காது என்பதாலும் முத்திரை தவிர்க்கவும் நான் தவிர்த்த விடயத்தை கருத்தாக்கிய குமரேஸ் & ஞானபீடத்திற்கு நன்றி...

said...

//"ஆனால் தற்போது தமிழையும் தமிழர்களின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றி வருவது ஈழத்தமிழர்கள்தான்"//

உண்மை என என்னளவில் கருதுகின்றேன், திரைப்பட மாயையில் சிக்கி சிங்கப்பூரிலும் மற்ற அயல்நாடுகளிலும் நடக்கும் நட்சத்திர இரவுக்கும்,எஸ்.வி.சேகர் நாடகங்களுக்கும் 30,50,100...$ களை செலவழிப்பதும், கிரிக்கெட் போட்டிகளுக்காக விடுமுறை எடுத்து தொ.கா. பார்ப்பதிலும் தமிழக தமிழர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், ஈழத்து இலக்கியங்கள் எனக்கு தெரிந்தவரை உண்மை பேசுகின்றன, தற்காலத்து தமிழகத்து இலக்கியங்கள் எனக்கு தெரிந்து பல இடங்களில் பொய் பேசுகின்றன, மேலும் பல பல விடயங்கள் உள்ளன அதனால் தான் அப்படி கூறினேன்.

//இராவணமா, இராணுவமா.. எழுதுப் பிழையா இல்ல எதும் சொல்ல வரீங்களா.. //
எழுத்துப்பிழைதான், படித்துப்பார்த்தபோது தெரிந்தது மாற்றலாமா என யோசித்தேன் ஆனால் இராவணன் மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதால் இராணுவம் என மாற்றிவிட்டேன்

//எனக்கு பதில் கிடைக்காது என்பதாலும் முத்திரை தவிர்க்கவும் நான் தவிர்த்த விடயத்தை கருத்தாக்கிய குமரேஸ் & ஞானபீடத்திற்கு நன்றி... //

தலைவரே முகமூடி உங்களுக்கு என்ன பதில்சொல்லவில்லை நான்? எதுனா தவறியிருந்தா kuzhali140277@yahoo.com தனிமடல் போடுங்க முடிந்த அளவு சொல்கின்றேன்,அது என்ன முத்திரை தவிர்க்கிறிங்க, அதெல்லாம் ஏற்கனவே குத்தியாச்சி எனக்கும் சேர்த்துதான்.

said...

நமது கருத்துகளை வலியுறுத்தும் நேரத்தில் முழுக்க நடுநிலைமையாக எழுத முடியாவிட்டாலும் ஓரளவு நடுநிலைமயோடாவது எழுதலாம் ஒரேயடியாக ஒரு பக்கமாக சாய்ந்து எழுதும்போது முத்திரை விழுவது தவிர்க்க முடியாததாகிவிடும் இதுவும் என் கருத்து மட்டுமே

said...

ஞானபீடம் said...
//தற்போது தமிழையும் தமிழர்களின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றி வருவது ஈழத்தமிழர்கள்தான்"//

???????????????????

ஞானபீடத்தின் அதீதமான கேள்விக்குறிகள் என் பதிவின் வடிவமைப்பை(லே அவுட்) காலி செய்வதால் அவரின் கேள்விக்குறிகளை குறைத்து அவர் பின்னூட்டத்தை நீக்கி மறுபதிப்பிடுகின்றேன்

said...

//ஆனால் தற்போது தமிழையும் தமிழர்களின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றி வருவது ஈழத்தமிழர்கள்தான்"

திரைப்பட மாயையில் சிக்கி .......
விடுமுறை எடுத்து தொ.கா. பார்ப்பதிலும் தமிழக தமிழர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்,

ஈழத்து இலக்கியங்கள் எனக்கு தெரிந்தவரை உண்மை பேசுகின்றன, தற்காலத்து தமிழகத்து இலக்கியங்கள் எனக்கு தெரிந்து பல இடங்களில் பொய் பேசுகின்றன,

மேலும் பல பல விடயங்கள் உள்ளன ...//- kuzhali


வேண்டாம்.... விட்டுருங்க... அவ்ளோதான்.

ஞானபீடம்.

said...

//தற்போது தமிழையும் தமிழர்களின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றி வருவது ஈழத்தமிழர்கள்தான்"//

Thanks for your comments bro,

ThamizhEelathan

said...

//எல்லா குழந்தைகளையும் பிறந்த உடன் பொது காப்பகத்தில் விடவேண்டும், அங்கே யாருடைய குழந்தைகள் என பெற்றோருக்கும் யார் பெற்றோர்கள் என குழந்தைக்கும் தெரியாமல் வளர்க்கவேண்டும் என்பதற்கு ஏற்பாடு செய்வேன்//

தவறான வழி..
உலகில் அன்பு, பாசம், பற்றுதல் எல்லா இன்னும் இருப்பதற்கு குழந்தைகள்தான் பெரும்காரணம்.