அன்னை சோனியா

எப்பொழுதும் யாரையாவது விமர்சனம் செய்து எழுதியது சற்று அலுப்படைந்து விட்டதால்,
சிலரின் நல்ல பக்கங்களை எழுதலாம் என ஆரம்பித்துள்ளேன்







முதலில் நான் எழுத நினைத்தது காங்கிரஸ் இயக்கத்தின் தலைவி திருமதி.சோனியாவைப்பற்றி

நேற்று சரியென்று நாம் நினைத்தது இன்று தவறாகத்தோன்றலாம்,
நேற்று தவறென்று நாம் நினைத்தது இன்று சரியாகத்தோன்றலாம்,

இதெல்லாம் மனமுதிர்ச்சியாலும் நமது பார்வை விசாலமாவதாலும் என எண்ணுகின்றேன்

அப்படி தவறு என சில காலங்களுக்கு முன் நினைத்து இன்று சரியாகத்தோன்றுவது திருமதி.சோனியாவைப்பற்றிய
எனது எண்ணங்கள்

முதன்முதலில் சோனியா அரசியலுக்கு வந்தபோது இவருக்கு என்ன தகுதியிருக்கு
எதற்காக இவர் அரசியலுக்கு வந்தார்,
இந்தியாவில் பிரதமராக இந்தியாவில் பிறந்த ஒரு இந்தியருக்குகூட தகுதியில்லையா என எண்ணிணேன்

இவர் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் நின்றபோது
எப்படியாவது இவர் இரண்டு தொகுதிகளிலும் தோற்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
அப்போது நான் தீவிர பா.ஜ.க. ஆதரவாளனும் கூட

சோனியா அவர்கள் காங்கிரஸ் தலைமை ஏற்றது சற்று அதிரடியாக இருந்தது என்றாலும்
அது தேவையான ஒரு பிரவேசம் என்பதை தற்போது உணர்கின்றேன்.

திரு.நரசிம்மராவிற்கு பிறகு திரு.சீத்தாராம் கேசரியின் தலைமையில் காங்கிரஸ் கிட்டத்தட்ட
மூர்ச்சையான நிலையிலிருந்தபோது அவரிடமிருந்து காங்கிரசின் தலைமைப்பதவியை கைப்பற்றினார்,

அப்போது கூட அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட நரசிம்மராவ் மற்றும் சீத்தாரம் கேசரி
போன்றவர்களாலேயே காப்பாற்றமுடியாத காங்கிரசை இவர் எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார்?
அதுவும் வெளிநாட்டுக்காரர் என்ற கடுமையான விமர்சனத்தை எதிர்த்து எப்படி அரசியல்
செய்து முன்னேறப்போகின்றார் என்றொரு எண்ணமும் இருந்தது,
அதுமட்டுமின்றி அந்த காலக்கட்டத்தில் திரு.வாஜ்பாயி அவர்களுக்கு ஜென்டில்மேன் என்கின்ற
இமேஜ் வேறு பலமாக இருந்தது,இதையெல்லாம் மீறி என்ன செய்யப்போகின்றார் என்கிற ஆர்வமும் இருந்தது.

முதலில் காங்கிரசிலிருந்து வெளியேறிய தலைகளை காங்கிரசிற்குள் மீண்டும் கொண்டுவரச்செய்தார்,
காங்கிரசிலிரிந்து வெளியேறியிருந்த திரு.அர்ஜீன்சிங்,திரு.மூப்பனார் இன்னும் பலர் மீண்டும் காங்கிரசிற்கு வந்து பலம் சேர்த்தனர்,
ஆகா என்ன இது என்னமோ நடக்கின்றது என சற்று வியந்தேன்,
காங்கிரசின் மிகப்பெரிய பலவீனம் குழு அரசியல்,
மாவட்டத்திலிருந்து மாநிலத்திலிருந்து இந்திய அளவில் கட்சியினுள்ளேயே குழு அரசியல் நடந்து கொண்டிருந்தது,
நரசிம்மராவ் தலைவரெனில் அவருக்கு எதிராக பல குழுக்கள், சீத்தாராம் கேசரியிருந்தால் அவருக்கு எதிராக குழு அரசியல்,
ஆனால் திருமதி.சோனியா தலைமை ஏற்றப்பின் குறைந்த பட்சம் தலைமைக்கு எதிராக இருந்த குழு அரசியல் முடிவுக்கு வந்தது.


அதன்பின் தொடர்ந்து பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்,
முதலில் நேரடியாக மத்திய ஆட்சிக்கு குறி வைக்காமல், மீண்டும் பல மாநிலங்களில் காங்கிரசை அரியனையேறச்செய்ய முயற்சிகள் மேற்கொண்டார், எப்போதுமே கூட்டணி விடயத்தில் காங்கிரஸ் பெரியண்ணன் மனப்பாங்கோடுதான் செயல்படும்,
அந்த நிலையை மாற்றி மாநிலங்களில் விட்டுக்கொடுத்தல் மனப்பாண்மையோடு கூட்டணி சேர்ந்து
பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்,
இதற்கு சோனியாவின் அரசியல் தந்திரம் மட்டுமே காரணம் என்றால் அது மிகையாகாது.


ஆளும் கட்சியாக இருந்து நரசிம்மராவின் காலத்திற்குப்பின் கிட்டத்தட்ட தொன்னூறு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே
கொண்டு நொண்டியடித்துக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி, அதன் பின் சோனியாவின் தலைமையிலே காங்கிரஸ் கட்சி 1998ல் தேர்தலை சந்தித்தது, அப்போது நூற்றிருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு நொண்டியடித்தது,
எதிர்கட்சித்தலைவராக சோனியா என்ன செய்யப்போகின்றார்? அதுவும் அரசியலிலே நீண்ட நெடும் காலமாக இருக்கும்
திரு.வாஜ்பேயி, திரு.அத்வானி, திரு.அத்வானி என்ற இரு பெரும் தலைவர்கள் இருந்த அவையிலே எப்படி இவர் தனக்கென ஒரு இடம் பிடிக்கப்போகின்றார் என எண்ணியிருந்தேன், எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக அவையிலே சிலம்பம் ஆடிவிட்டார், ஒவ்வொரு பிரச்சினையையும் அவர் முன்வைத்து வாதம் புரிந்தது மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அவை சோனியாவின் கட்டுக்குள்தான் இருந்தது. எனக்கு தெரிந்தவரை அவரின் பாராளுமன்ற பேச்சுகளிலே சிறந்தது வாஜ்பேயி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தின் மீதான பேச்சுதான்.

அதன் பிறகு மீண்டும் 2004ல் தேர்தல், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்பு ஒவ்வொரு கட்ட தேர்தலிம் குறைந்து கடைசியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மட்டுமே வரும், கூட்டணியோடு கூட அதற்கு பெரும்பான்மை கிடைக்காது என்றனர், தேர்தல் முடிவுகள் வழக்கம் போல கருத்துக்கணிப்புக்கெதிராக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது மட்டுமின்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது, இதற்கு முழு முதற்காரணம் சோனியாவின் அரசியல் தந்திரமும் உழைப்பும் மட்டுமே.

சோனியாவின் கூட்டணி வியூகம், இந்தியா ஒளிர்கின்றது என்கிற சக்தி வாய்ந்த விளம்பர ஆயுதத்தை அவர்களுக்கு எதிராகவே பயண்படுத்தியது இதெல்லாம்தான் நொண்டியடித்துக்கொண்டிருந்த காங்கிரசை மீண்டும் அரியணையேற வைத்தது.







அடுத்ததாக பிரதமர் பதவியேற்பு, அனைவரும் சோனியாதான் பிரதமராக பதவியேற்கப்போகின்றார் என்ற எண்ணத்திலிருந்தனர்,
அப்போது தான் பதவியேற்கப்போவதில்லை, திரு.மன்மோகன்சிங் அவர்களை பிரதமராக்க முன் மொழியப்போகின்றேன் என்ற போதும் அதைத்தொடர்ந்து காங்கிரஸ் பாராளுமன்ற கூட்டத்தில் சோனியாதான் பிரதமராகவேண்டும் என அரங்கேறிய விடயங்களும்
அவர்து வீட்டின் முன் காங்கிரஸ் தொண்டர்களின் போராட்டமும் மிகப்பெரிய நாடகமாகத்தான் தோன்றியது.

ஆனால் எனது எதிர்பார்ப்பை(மட்டுமா?!) முழுமையாக முறியடித்து(?!) திரு.மன்மோகன்சிங்கை பிரதமராக முன் மொழிந்து குடுயரசுத்தலைவரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்தபோது செய்தியாளர்கள் சூழ்ந்தனர், அப்போது மன்மோகன்சிங்கை முன்னிருத்தி தான் ஒரு இரண்டாம் கட்டத்தலைவர் போல் ஒதுங்கி நின்றாரே அந்த கணம் அவர்மீதிருந்த அத்தனை விமர்சனங்கள் அத்தனையும் விலகி என்னளவில் அவர் தற்போதிருக்கும் எந்த தலைவர்களுடனும் ஒப்பிட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்.

சட்டப்படியாக அவர் இந்தியாவின் பிரதமர் பதவியேற்கத்தடையில்லை, தார்மீகப்படியாக பார்த்தாலும் அவர் தலைமை ஏற்றுள்ள கூட்டணிதான் வெற்றிபெற்றுள்ளது, கூட்டணித்தலைவர்களும் அவர் பிரதமராவதை எதிர்க்கவில்லை, உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் வருங்கால வல்லரசின் அதிகாரம்மிக்க பிரதமர் பதவிகிடைத்த போது வேண்டாமென்றாரே இந்த மனப்பாங்கை தேசப்பிதா காந்திக்குப்பிறகு சோனியாவிடம் மட்டுமே கண்டேன்.








என்னையெல்லாம் உகாண்டா அல்லது ஏதேனும் ஒரு நாட்டில் அது எந்த நாடாக இருந்தாலும் சரி பிரதமர் பதவி கிடைத்தால் அதுவும் ஒரே ஒரு நாள் கிடைத்தால் கூட ஏற்றுக்கொள்வேன்.

வெற்றிபெற்ற கட்சியின் அரசியல்தலைவர்தான் பிரதமராக இருக்கவேண்டும் என்கிற ஒரு எழுதப்படாத மரபை உடைத்தவர் சோனியா, அரசியலையும் பிரதமர் பதவியையும் பிரித்து ஒரு சிறந்த முன்மாதிரியை உருவாக்கினார் திருமதி.சோனியா காந்தி.









இன்னும் எத்தனை எத்தனை ஆச்சரியங்களை தரப்போகிறார் சோனியா என பார்ப்போம்

14 பின்னூட்டங்கள்:

said...

சென்ற வாரமோ அதற்கு முந்தின வாரமோ இந்தியா டுடே வில் சோனியாவின் பத்து இலக்குகள் என்று அவர் யாரையெல்லாம் விரோதியாக நினைக்கிறார் என்று பட்டியலிட்டிருந்தனர்.

அதில் மன்மோகன் சிங் அவர்களும், ஷீலா தீக்ஷித்தும் இருக்கிறார்கள். இது வெட்ட வெளிச்சமாக தெரிகிற உண்மை.
// அலுப்படைந்து விட்டதால், சிலரின் நல்ல பக்கங்களை எழுதலாம் என ஆரம்பித்துள்ளேன்//
நீங்களே அலுப்படைந்து விட்டீர்கள். நானும் எதற்கு அந்த குப்பைகளை கிளற வேண்டும்.

இன்னும் எத்தனை எத்தனை ஆச்சரியங்களை தரப்போகிறார் சோனியா என பார்ப்போம் :--(

said...

உங்கமேலே ஒருத்தரும் கேஸ் போடாம இருக்க வேண்டின முன் ஆயத்தங்கள் எல்லாம் பண்றாப்பல இருக்கே.

said...

//சென்ற வாரமோ அதற்கு முந்தின வாரமோ இந்தியா டுடே வில் சோனியாவின் பத்து இலக்குகள் என்று அவர் யாரையெல்லாம் விரோதியாக நினைக்கிறார் என்று பட்டியலிட்டிருந்தனர்//

இந்தியா டுடே top 10 எவ்வளவு தூரம் உன்மையானது என்பது தெரியவில்லை... !!

//தேசப்பிதா காந்திக்குப்பிறகு சோனியாவிடம் மட்டுமே கண்டேன்//

குழலி சார்.. மற்ற கருத்தெல்லாம் கொஞ்சம் ஓகே.... ஆனா இது கொஞ்சம் ஓவர்.. :)

வீ .எம்

said...

//சென்ற வாரமோ அதற்கு முந்தின வாரமோ இந்தியா டுடே வில் சோனியாவின் பத்து இலக்குகள் என்று அவர் யாரையெல்லாம் விரோதியாக நினைக்கிறார் என்று பட்டியலிட்டிருந்தனர்.

அதில் மன்மோகன் சிங் அவர்களும், ஷீலா தீக்ஷித்தும் இருக்கிறார்கள். இது வெட்ட வெளிச்சமாக தெரிகிற உண்மை.//
நான் இன்னும் அதைப்படிக்கவில்லை கோ.கணேஷ்

//உங்கமேலே ஒருத்தரும் கேஸ் போடாம இருக்க வேண்டின முன் ஆயத்தங்கள் எல்லாம் பண்றாப்பல இருக்கே. //
ஆகா இப்போதுதான் அதற்கு ஒரு பதிவு போட்டிருக்கின்றேன் அதற்குள்ளாக குசும்பா, சுட்டி இதோ
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க

//எதோ "அப்துல் கலாம்" -ன் ஆலோசனை/அறிவுரைக்குப் பிறகே சோனியா விலகிக்கொண்டதாக ஒரு செய்தி. மேலும் சிலர் சனாதிபதி முடியாது என்று சொன்ன பிறகே இவர் மன்மோகனை பரிந்த்துரை செய்ததாகவும் ஒரு செய்தி ....

உண்மையா ?
//
இருக்கலாம் கணேசன், இருந்தாலும் நமது நாட்டில் குடியரசுத்தலைவருக்கு அறிவுரை தருவதற்கு மேல் தடுப்பதற்கு வேறெந்த அதிகாரமும் இல்லை, சோனியா பிரதமராக சட்டப்பிரச்சினையுமில்லை, அவரது தலைமையில்தான் கூட்டணி வெற்றிபெற்றிருந்தது எனவே தார்மீகப்பிரச்சினையுமில்லை இத்தனை இல்லைகள் இருந்தும் பிரதமர் பதவியேற்காதது நிச்சயம் போற்றத்தக்கது என நான் கருதுகின்றேன், இதே போன்று தமிழகத்தில் 2001ல் நடந்த கூத்தைதான் நாம் பார்த்தோமே,

said...

////தேசப்பிதா காந்திக்குப்பிறகு சோனியாவிடம் மட்டுமே கண்டேன்//

குழலி சார்.. மற்ற கருத்தெல்லாம் கொஞ்சம் ஓகே.... ஆனா இது கொஞ்சம் ஓவர்.. :)
//

உலகின் எந்த நாட்டின் விடுதலைப்போராக இருந்தாலும் அந்த போராட்டத்தின் வெற்றிக்குபிறகு அந்த நாட்டின் அதிபராக இருந்தவர்கள் அந்த விடுதலைப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி முன்னெடுத்துச்சென்றவர்கள்தான் ஜார்ஜ் வாஷிங்டன்னிலிருது, முஜிபுர் ரஹ்மானிலிருந்து சமீபத்தில் பிரிந்த கிழக்குத்தைமூர் வரை இது பொறுந்தும், நாளை ஒரு வேளை தமீழழம் உருவானால் யார் அதிபராவார் என்பது உலகறிந்த ஒன்று, தேசப்பிதா காந்தி மட்டுமே இந்திய விடுதலைப்போராட்டத்திற்குப்பிறகு ஆட்சிப்பொறுப்பிற்கு வராத ஒரே சுதந்திரப்போராட்டத்தலைவர், கிட்டத்தட்ட இதே போன்றுதான் நொண்டியடித்துக்கொண்டிருந்த காங்கிரசை ஆட்சிக்கட்டிலில் ஏறும் வரை கொண்டு சென்று பின் பிரதமராக அமராதவர் சோனியா, அதனால் தான் இப்படி கூறினேன்

said...

/நாளை ஒரு வேளை தமீழழம் உருவானால் யார் அதிபராவார் என்பது உலகறிந்த ஒன்று, /
மெய்யாலுமா? ;-) சோனி காங்கிரஸ் வெத்தமின்னாடி, சோனியாகூடத்தான் நெக்ஸுடு பெஸ்டு பிஎம்முன்னு சொல்லிட்டிருந்தாங்க.

said...

//நாடோடியின் கருத்துதான் என் கருத்தும், அது சரி அடுத்து யாரைப்பற்றி எழுதறீங்க, ரஜினியா//

எழுதிடலாம், குழலிப்பதிவில் ரஜினியா என யாரும் மட்டையடி போடாமல் இருந்தால் சரி

said...

அய்யா நீங்க சோனியா ஆதரவாளரானதும், தீவிர பா.ஜ.க. ஆதரவாளராக இருந்ததும் அக்கட்சிகளுடன் பா.ம.க. கூட்டின் போதுதானே.

said...

//குழலி, இக்கட்டுரை எல் எல் தாசுவின் பன்னீர்செல்வம் மீதான கட்டுரைக்கு கடும் போட்டியாக உருவெடுத்திருக்கிறது.//

அடப்பாவி புலிக்குட்டி, எவ்வளவு கடினப்பட்டு(?!), அலசி ஆராய்ந்து(!!!) எழுதியிருக்கின்றேன் இதைப்பற்றி இப்படி ஒரே பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் காலி செய்துவிட்டீர்களே, ம் நல்லதுக்கு காலமில்லை, வேற என்னத்த நாஞ்சொல்றது...

said...

//அய்யா நீங்க சோனியா ஆதரவாளரானதும், தீவிர பா.ஜ.க. ஆதரவாளராக இருந்ததும் அக்கட்சிகளுடன் பா.ம.க. கூட்டின் போதுதானே. //

தற்போது நான் சோனியா ஆதரவாளர், சில காலங்களுக்குமுன் பா.ஜ.க. ஆதரவாளர், ஆனால் எப்போதும் பா.ம.க. ஆதரவாளர்..... காலங்கள் மாறும் போது பார்வைகளும் மாறுமைய்யா

said...

//அடப்பாவி புலிக்குட்டி, எவ்வளவு கடினப்பட்டு(?!), அலசி ஆராய்ந்து(!!!) எழுதியிருக்கின்றேன் இதைப்பற்றி இப்படி ஒரே பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் காலி செய்துவிட்டீர்களே,//

லிட்டில் இந்தியா பக்கம் வருவீர்கள்தானே??

said...

//அடப்பாவி புலிக்குட்டி, எவ்வளவு கடினப்பட்டு(?!), அலசி ஆராய்ந்து(!!!) எழுதியிருக்கின்றேன் இதைப்பற்றி இப்படி ஒரே பின்னூட்டத்தில் எல்லாவற்றையும் காலி செய்துவிட்டீர்களே,//

லிட்டில் இந்தியா பக்கம் வருவீர்கள்தானே??

said...

//லிட்டில் இந்தியா பக்கம் வருவீர்கள்தானே??//
நீங்களும் சிங்கையில்தானிருக்கின்றீரா?
நாளை அங்கேதான் இரவு உணவிற்கு வருவேன், நீங்களும் வருவதென்றால் kuzhali140277 (at) yahoo (dot) com க்கு மின்னஞ்சல் தரவும், நாம் சந்திக்கலாமே

said...

தனிமடல் அனுப்பியுள்ளேன் ... குழலி