சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க

தற்பொழுது தமிழ்மணத்தில் எங்கெங்கு நோக்கினும் சட்டப்பிரச்சினைகள், இதிலிருந்து தப்பிக்க என்னிடம் சில யோசனைகள் (அய்யா மக்களே தமிழ்மணம் என ஒரு அடையாளத்திற்குத்தான் கூறினேன்,வேண்டுமென்றால் வலைப்பதிவர்களின்குழுவில் என மாற்றிக்கொள்ளலாம் உடனே டின் கட்டிவிடாதீர்கள்)

யாரைப்பற்றியாவது எழுத வேண்டுமென்றால் பின் வருமாறு குறிப்பிடலாம்.

போட்டுத்தாக்குன மேரியுமாச்சி, சட்ட பெரச்சினையும் இல்லாத மேரியாச்சி

குழலி - குழலி (கொயலி) (நம்ம பேரை கூட போட்டு கலாசுப்பா ஒன்னும் பெரச்சினையில்ல)

மாய 'வர' த்தான் - மாய 'போவ' த்தான்

'ர'ஜினி 'ராம்' கி - 'க'ஜினி 'சீதா' கி

'அல்வா' சிட்டி 'விஜய்' - 'ஜாங்கிரி' சிட்டி 'அஜீத்'

'அல்வா' சிட்டி 'சம்' மி - 'ஜாங்கிரி' சிட்டி 'கூட்டல்' மி

விசி 'தா' - விசி 'தராதே'

வீ.எம் - VM ( நீங்க தமில் வீ.எம் நாஞ் சொன்னது இங்கிலிபிசு VM)

என்றென்றும் அன்புடன் பாலா - என்றென்றும் அன்புடன் 'மில்க்'லா

முகமூடி - முகமூடி (ஆமா அவுரே மொகமூடிதானே போட்டுக்குனு கீராரு)

பி.கே.எஸ் - அய்யோ நான் பம்மல் கே சம்மந்தத்தை சொன்னேன்பா

எம்.கே.குமார் - எம்.கே.கொமாரு

எல்லாம் டெய்லிமலர் - வீக்லி மலர்ல துணுக்குமூட்டை படிச்ச எபெக்ட் தலீவா.

சும்மா ஒரு தமாசுக்குத்தான் டின் கட்டிடாதிங்க ஹி ஹி

காப்பிரைட் இல்ல தலீவா இது ஓப்பன் ஸோர்சாக்கும்

14 பின்னூட்டங்கள்:

said...

ஏதோ .. நமக்கு தோனினது

go. ganesh = "come" pillayar
ராசா = கிங்

enRenRum-anbudan.BALA = அன்பு மில்க்

தேன் துளி : "Lion" Honey

siragugal = ரெக்கை

துளசி கோபால் = சாமி செடி

ஞானபீடம் = நாலேஜ் ஸ்டேஜ்

muthu = சிப்பிக்குள்ளே

துடிப்புகள் = ஹார்ட் பீட்
கலையரசி =ஆர்ட் குயீன்
குழலி = குயிலி

said...

:-))))))))

நக்கல் ம்..ம்..ம்

அன்புடன்,
கணேசன்.

said...

வீ.எம். உங்களுடையதும் நன்றாக உள்ளது அதுவும் ஞானபீடமமும் துளசியக்காவுக்குமான பட்டப்பெயர்கள் மிக நன்றாக இருந்ததுஉங்களுக்கு ரொம்பத்தான் இது...

நான் இந்த பதிவில் குறிப்பிட்டவர்கள் (குறிப்பிடப்படாத பலரும்தான்) எல்லாம் எனக்கு வேண்டப்படவர்கள் என்ற எண்ணத்தில்தான் தமாசுக்காக இப்படி ஒரு பதிவை செய்தேன், சொம்மா சீரியசாவே இருந்தா எப்புடி, அதான் என்னிய மாதிரி ஒன்னு(கொயலி,குயிலி) ரெண்டு(VM, இங்கிலிபிசு VM ங்கோ) கோமாளிங்க இப்புடி எதுனா செஞ்சாதானே...

said...

என்னப்பா என் வலைப்பக்கம் வருவதில்லையா??
" எப்ப வருவேன் ..எப்படி வருவேன் ... " பதிவுல உங்க கருத்து இல்லாம .. ஏதோ கொறை யா இருக்கு.. :)

வீ எம்

said...

//என்னப்பா என் வலைப்பக்கம் வருவதில்லையா??
" எப்ப வருவேன் ..எப்படி வருவேன் ... " பதிவுல உங்க கருத்து இல்லாம .. ஏதோ கொறை யா இருக்கு.. :)

வீ எம்//

தல நேத்தே வந்தேன் தொழில்நுட்பப்பிரச்சினையில் பின்னூட்டமிட முடியவில்லை, இப்போதான் பின்னூட்டம் போட்டுட்டு வரேன் பாத்தா உங்க பின்னூட்டம் இங்கே,

said...

//ஞானபீடம் = நாலேஜ் ஸ்டேஜ்// - வீ.எம்.

//ஞானபீடமமும் ...... பட்டப்பெயர்கள் மிக நன்றாக இருந்தது// - குழலிவெளயா...ட்டு புள்ளங்கப்பா.

வீ.எம். = ஈயம் !
குழலி = ஊதுவார் !

இது எப்டி இருக்கு? ச்சும்மா... ச்சும்மா... !

said...

என் பெயரை கெடுத்த காரணத்துக்காக உங்கள் மீது வழக்கு போட வேண்டியது வரும்.
என் பெயர் போனால் பரவாயில்லை எங்கூரு பெயரையும் சேர்த்து கெடுத்துள்ளீர்கள்.

வழக்கை சந்திக்க தயாராய் இருங்கள்.

:-)))

said...

முன்னாடி கார்த்திக் அண்ணாச்சி எழுதுன மேட்டரையும் பாருப்பா...

http://karthikramas.blogspot.com/2005/01/blog-post_07.html

http://karthikramas.blogspot.com/2005/01/6.html

said...

என் பெயரை மாத்தியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது எனக்கு வேண்டாதவர்களின் தூண்டுதலால் குழலி எழுதிய பதிவு என எனக்கு படுகிறது. எனவே இது போலவே பாதிக்கப்பட்ட என் அன்பு உள்ளங்கள் பாலா, கணேசு, தேன் துளி, துளசியக்கா கலந்தாலோசித்துவிட்டு எந்த மாதிரி சட்டப்போர் (அறவழியில்) தொடுக்கலாம் என என் (எங்கள்?) வழக்கறிஞ்ரை (?) கேட்க வேண்டும்.

அல்வாசிட்டி = ஜாங்கிரி-க்கு பதிலா அருவாஊரு = அருவாசிட்டி-னு மாத்தியிருக்கலாம், அப்படி எழுதியிருந்தால் எங்கள் ஊரின் மானம் காக்கப்பட்டிருக்கும்.

அன்று கண்ணகி சிலம்பு மாறி, தன் புருசனை பாண்டியன் தண்டித்ததற்காக மதுரையை எறித்தாள் (கலைஞர் மாதிரி எ.கா), அதுபோல சிக்கிரெட்-டின் (குழலி = வெண்குழல்?) பக்கங்களை நாங்கள் அறவழியில் எறிப்போம்.

சிவாஜிராவ் என்ற தன் பெயரை ரஜினி என்று மாற்றியதால் வெற்றி பெற்ற சூப்பர் ஸ்டாரைப்போல நாங்களும் வெற்றி பெறுவோம்? (ஏதாவது சம்பந்தம் இருக்கா?)

said...

//முன்னாடி கார்த்திக் அண்ணாச்சி எழுதுன மேட்டரையும் பாருப்பா...
//

அடா அடா எல்லா சரக்கையும் முன்னமேயே வச்சி வெளாண்டிருக்காங்கப்பா, எதையும் எளுத முடியலை, நம்ம ரோசனை யெல்லாம் ஓல்டாகீது, கார்த்திக் நன்றாக எழுதியிருந்தார்

said...

//இது எனக்கு வேண்டாதவர்களின் தூண்டுதலால் //

அல்வாசிட்டி சம்மி இது எப்படி உங்களுக்குத்தெரிந்தது அல்வாசிட்டி விஜய் தான் உங்களை பற்றி இப்படி எழுத சொன்னார் (ஹி ஹி ஏதோ நம்மால முடிந்தது)

said...

'ஜாங்கிரி' சிட்டி 'அஜீத்' என்று சொல்லாமல் அல்வாசிட்டி விஜய் என சொன்ன "குயிலி" யை வன்மையாக கண்டிக்கிறேன் !!
வீ எம்

said...

வீ.எம், குழலி,
என்னாங்காப்பா, "அன்புப் பால் வெள்ளத்திலே" ஆழ்த்தி விட்டீர்கள் :)
என்றென்றும் அன்புடன் பாலா --- "Always Love Milka ?" ---- நல்லாருக்கு போல தோணுது !!!!

said...

// முகமூடி - முகமூடி // எனக்கு மட்டும் பட்ட பெயர் தராத குயிலியை வன்மையாக கண்டிக்கிறேன். இதுல உள்குத்து ஏதோ இருக்கு... இது சம்பந்தமா என் வக்கீல கலந்து ஆலோசிக்க பேப்பர் எல்லாம் எடுத்துகிட்டு (அதாவது பாஸ்போர்ட், விசா எல்லாம் பேப்பர்லதான் இருக்கு) ஐரோப்பா போலாம்னு இருக்கேன் (வக்கீல் யூரோப்ல எங்கன இருக்காருன்னு கேக்க கூடாது, நான் இன்னும் யூரோப் பாக்கல). அதுக்கு ஒரு 53 ஆயிரம் ரூவா தேவப்படுது // எனவே இது போலவே பாதிக்கப்பட்ட என் அன்பு உள்ளங்கள் பாலா, கணேசு, தேன் துளி, துளசியக்கா // எல்லாம் ஏதோ பாத்து போட்டு செஞ்சீங்கன்னா, அப்படியே உங்க சார்பாவும் வழக்கு போட ஏற்பாடு செய்யிறேன்.