ஆவிகளின் புரிதல் (எ) ஷியங் - தொடர் -1

"உயிர் பிரிந்து வானலுகமேறின் இனம்,மதம்,மொழியில்லை ஆவிகளுக்கு"
- சூ வெங் டாங் (ஆவியுலக ஆராய்ச்சியாளர்)

இன்னும் பட படப்பு அடங்கவில்லை,
பேருந்தின் சன்னலோரமாக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்து
ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்த போது குழப்பம் தீர
வைத்தீஸ்வரன் கோவில் வந்ததில் அதிர்ச்சிதான் கூடியது

அப்படியே காலையிலிருந்து நடந்ததையெல்லாம் யோசிக்க யோசிக்க

"சார் வாங்க சார் வாங்க, நாடி பாக்கனுமா வாங்க"

"இருப்பா கோவிலுக்கு போகனும் முதல்ல"

சின்ன வயசுல குமார் அண்ணன் கல்யாணத்துக்கு வந்தது இங்க
அதுக்கப்புறமா இப்போதான் வரேன்,
வர்ற வழியிலேயே வீட்டுக்கு வீடு அகத்தியர் நாடி,
சுகர் நாடி, அந்த நாடி இந்த நாடினு போர்டு பாக்கும்போதே
வைத்தீஸ்வரன் கோவில் வந்துட்டோம்னு புரிந்தது.

"சார் நீங்களா எப்போ சார் வந்தீங்க,
டேய் சார் நம்ம ரெகுலர் கஸ்டமர் டா"

அள்ளித்தெளித்துக்கொண்டிருந்தார் ஒருவர்

இந்த புரோக்கருங்க திருபுவனத்துக்கு போன ஒரிஜினல் சொசைட்டி
பட்டு இங்கதான் கிடைக்கும்னு கைய புடிச்சி இழுப்பாங்க
இங்க வைதீஸ்வரன் கோவில்ல ஒரிஜினல்
அகத்தியர் நாடி பார்க்க இழுக்கறாங்க

பூசை தட்டு வாங்கிக்கொண்டு கோவிலுக்கு போனேன்,

சாமி தரிசனம் முடித்து மண்டபத்துல உட்கார்ந்திருந்த

ஒரு பெரியவரிடம்

"சார் இங்க நாடி ஜோசியம் சொல்றாங்களே அது..."

"நீங்க பாக்க போறிங்களா?"

"ம்... இல்ல, சார் அது உண்மையா சார்"

"நம்பிக்கை இருக்குறவங்க நம்புறாங்க,
இந்த ஈஸ்வரனுக்கு மேல வேற யார நம்புறது? "

"சரி, இங்க நாடி யாரு நல்லா பார்ப்பாங்க"

"ம்... மெயின்ரோட்டுல ஒரு டர்ன் வரும்
அங்க சாமிநாதன்னு ஒருத்தரு பார்க்கிறாரு, அங்கே பாருங்க"

"ரொம்ப நன்றி சார்"

பிரகாரத்தை விட்டு வெளியில் வந்த போது மீண்டும் புரோக்கர்கள்
தொல்லை,

மெல்ல நடந்து அந்த பெரியவர் சொன்ன சாலை வலைவில்
'நாடி ஜோதிட கண்மனி சாமிநாதன், எம்.ஏ,
ஒரிஜினல் அகத்தியர் நாடி பார்க்கப்படும்'

ஆகா ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணெய் போல
ஒரிஜினல் அகத்தியர் நாடியா? என நினைத்துக்கொண்டே
எனக்கு விடை கிடைக்குமா என்ற ஆர்வத்தில் உள்ளே
போனேன்

சந்தன நிற ஜிப்பா, பட்டு கரை போட்ட சந்தன நிற வேட்டி
எண்ணெய் விட்டு நடு வகிடெடுத்து வழித்து சீவிய தலையுடன்
நெற்றி நிறைய விபூதியும் நடுவில் குங்குமமும் வைத்த
ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒருவர் இருந்தார்

"சார் இங்க சாமிநாதன்னு?"

"நான் தான் சொல்லுங்க"

"நாடி பார்க்கனும், கோவில்ல பெரியவர் சொல்லி அனுப்பினாரு"

"யாருக்கு பார்க்கனும்?"

"எனக்கு தான், பீஸ் எவ்வளவுங்க?"

"ஒரு காண்டத்துக்கு 150 ரூபாய்"

"காண்டம்னா?"

"உங்க வாழ்க்கை பல காண்டமாக இருக்கும்,
முதல்ல பொது காண்டம் படிப்போம்,
பிறகு தொழில்,திருமணம்,உடல்நலம் அப்படினு மொத்தம்
ஏழு காண்டமிருக்கு "

"150 ரூபாய் அதிகமா இருக்கே"

"இல்ல சார், ஒரு காண்டத்துக்கு 150 ரூபாய்தான் ரேட்டு,
வேணும்னா பொது காண்டத்துக்கு 150ரூபாய்,
மத்த காண்டத்துக்கு 100 ரூபாய் போட்டுக்கலாம்"

"சரி..."

"முருகேசா, இங்க வந்து சார் ரேகை எடு"

நீள மூக்கும், மா நிறத்துடன் நெற்றியில் பட்டையோடு
ஒரு முப்பது வயது ஒடிசலான தேகம் கொண்ட இளைஞன்
நக்கலா, புன்சிரிப்பா என இனம் பிரித்தறிய முடியாத முக பாவத்தோடு
ஒரு வெள்ளைத்தாளில் இடது கை பெரு விரல் ரேகையை
எடுத்துச்சென்றான்

"சார் ஒரு பத்து நிமிஷம் உட்காருங்க,
உங்க ரேகைக்கான கட்டு எடுத்துக்கிட்டு வரோம்"

தினத்தந்தியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்,
ஜோசியரின் பேச்சைக்கேட்டு 9 மாதக்குழந்தையை
தரையில் அடித்துக்கொன்ற கணவன் கைது
என்ற செய்தியை படித்த போது
என்ன மூடத்தனமா இருக்கான்,
ஜோசியக்காரன் சொன்னா நம்பிடறதா என திட்டினேன்

அரை மணி கழித்து சாமிநாதன் குரல்

"சார் உங்க ரேகைக்கு எங்க கிட்ட கட்டு கிடைக்கல"

"அய்யய்யோ, சார் நல்லா பார்த்திங்களா,
சார் எனக்கு எப்படியாவது பார்க்கனுமே இன்னைக்கே"

"ஒன்னு செய்யுங்க, உங்க பிறந்ததேதி நட்சத்திரம், நாள்,கிழமை,நேரம் குறிச்சி
குடுங்க, கிடைக்குதான்னு பார்க்கிறேன்"

எல்லாவற்றையும் குறித்து கொடுத்தேன்,

இருபது நிமிடம் கழித்து, அறையினுள் கூப்பிட்டார் சாமிநாதன்

"உள்ள வாங்க சார், முருகேஸ் அந்த ஃபேனை சார்பக்கம் திருப்பிட்டு,
கேசட்டை எடுத்துக்கிட்டு வா, ரெக்கார்டு பண்ணனும்"

"சார் கேசட்டுக்கும் 30 ரூபாய் எக்ஸ்ட்ரா குடுத்துடுங்க"

"சரி தரேன்"

கையிலிருந்த ஓலைக் கட்டை எடுத்து

"தென்னடுடைய சிவனேப் போற்றி"

"முதலெழுத்தாம் முவண்ணாவில் தொடங்கி,
சார் உங்க பேரு முவண்ணா வில ஆரம்பிக்குதா"

"இல்ல..."

அந்த ஓலையை தள்ளி அடுத்த ஓலையை படிக்க ஆரம்பிக்கின்றார்

இப்படியே ஆவண்ணாவா? ஏவண்ணாவா வென சில ஓலைகளை
தள்ளிய பின்

"மொழிக்கரசன் அவனும் தானே..." என ராகம் போட்டு பாடினார்
"உங்க பேரு தமிழரசனா?"

"ஆமாம் சார்"

இப்படியே என் தாய்,தந்தை பெயர் பிறந்த தேதி எல்லாம் கூறிவிட்டார்
சாமிநாதன்

என் தாய் பெயர் சொன்னது தான் ஆச்சரியம், எளிதில் யூகிக்க முடியாத
பெயரை சொன்னது பெரிய ஆச்சரியம்

"சரி சார் இது தான் உங்க ஓலை, பொது காண்டம் படிக்கிறேன் கேளுங்க"

"ஆனைமுகத்தான் சிரம் தன்னில் வீங்கிய இடம் தன்னில ஜனித்த"

"திருச்சியில பிறந்திங்களா?"

"ஆமாம் சார்"

அது எப்படி நம்ம பேரையும், நம்ம அப்பா பேரையும் நம்ம வாயிலிருந்தே
புடுங்கினாரு, அம்மா பேரையும் பிறந்த இடத்தையும் சொல்றாரே!
ஒரு சிறிய நம்பிக்கை பிறந்தது.

"இரும்பையும் ஈயத்திலும் எந்திரம் செய்தே"

"நீங்க படிச்சது இரும்பு சம்மந்தப்பட்டதா?"

"அப்படினா என்னங்க? புரியலையே"

"இந்த ஐடிஐ, பாலிடெக்னிக், எஞ்சினியர், மெக்கானிக்கு
அப்படி படிச்சிங்களா?"

"ஆமாம்"

அடடா நாம மெக்கானிக்கல் எஞ்சினியரிங்க படிச்சது ஓலையில இருக்கா?

ஆர்வம் அதிகரித்தது,

"உங்க கூட பிறந்தது ஒரு ஆணு, ஒரு பொண்ணு,நீங்க நடுலவரு, சரியா?"

"ஆமாம் சரிதான்"

"அவங்க ரெண்டு பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது"

"ஆமாம்"

மேலே ஏதோ முனகிக்கொண்டே படித்தவர்,

திடீரென

"சாரி சார், இது உங்க கட்டு இல்ல"

"எப்படி சொல்றீங்க, நீங்க இதுவரை சொன்னதெல்லாம்
சரியாத்தானே இருக்கு"

கட்டை மூடி அதை நூலால் கட்டியபடியே

"இல்ல சார் இது உங்க கட்டு இல்ல"

"அதான் எப்படி சொல்றீங்க"

"இந்த ஏட்டுக்குறியவர் இறந்து எட்டு வருஷமாச்சினு நாடில வருது"

"என்ன சார் சொல்றீங்க?" அதிர்ச்சியுடன் ஏறிட்டேன்

"சார் நீங்க குறிச்சி குடுத்த பிறந்த நேரம் தப்பா இருக்கனும்,
அந்த நேரக்கணக்குப்படி எடுத்த நாடியில ஏட்டுக்குறியவர் இறந்து
எட்டு வருஷமாச்சினு வருது"

"அப்போ என்ன சார் செய்யிறது..."

"உங்க போன் நம்பர் குடுங்க, உங்க ரேகை இருக்குதில்லையா
அதை வச்சி நாங்க உங்க கட்டு தேடி பார்க்கிறோம்,
இருந்தா உங்களுக்கு போன் செய்து சொல்றோம்"

"எனக்கு இனி இங்க வர டைம் இல்லையே"

"பரவாயில்ல, நாங்க கேசட்ல பதிவு செஞ்சி போஸ்டல்ல
அணுப்புறோம்"

150 ரூபாய் கொடுத்துவிட்டு எல்லாம் கரெக்டா வந்துச்சி
நாடியில, அப்புறம் எப்படி ரத்தமும் சதையுமா
இருக்கும்போது எட்டு வருசம் முன்னாடி செத்துப்போனதா
வருது....

நம்ம சுத்தி நடக்கிற பல புரியாத விசயங்களைப்பத்தி
தெரிஞ்சிக்க வந்தா இங்க இப்படி ஒரு குண்டு

எப்போ தெரிய வந்துச்சி இந்த பிரச்சினை
எல்லாம் அந்த 'ஷியாங்' அப்படின்ற
அந்த ஒரு வார்த்தையில ஆரம்பிச்சிது...

அன்னையிலிருந்து இன்னிக்கு வரை ஒரே குழப்பம் தான்

நினைவலைகள் இன்னும் பின்னோக்கி செல்ல

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு திங்கட்கிழமை காலை வேலையில்

மருது பாண்டியர் பேருந்தில் ஏறி காரைக்குடிக்கு ஒரு

சீட்டு வாங்கிக்கொண்டு ஜீனியர் விகடனை கீரனூர் வரும் முன்பே
படித்தாகிவிட்டது, புதுக்கோட்டை யில் 10 நிமிடம் வண்டி நிற்க,
PLAல வந்தாலாவது பாட்டு போடுவாங்க, நம்ம காலேஜ் பிகருங்க
கூட கடலை போட்டுக்கொண்டே வந்தா ரெண்டு மணி நேரம்
போறதே தெரியாது, சே... ஒரு 5 நிமிசம் லேட்டா வந்ததுல
மிஸ் பண்ணிட்டேன், இன்னும் ஒரு மணி நேரம் காரைக்குடி போக
என்ன செய்வது என தம்மடித்துக்கொண்டே அந்த டீ கடையில்
தொங்க விட்டிருந்த புத்தகங்களை பார்த்தபோது ஒரு புத்தகம்
கவர்ந்தது "ஆவி உலகம்" ஆசிரியர் விக்கிரவாண்டி இரவிச்சந்திரன்...

- தொடரும்

10 பின்னூட்டங்கள்:

said...

பதிவைப்போட்ட ஐந்தாவது நிமிடத்தில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளி விட்டீர்களே? நியாயமா?

said...

kuzhali,
quite interesting. Seekirama adutha paguti ezuthunga

said...

ரொம்பத்தாய்யா ஒமக்கு அவசரம்!
அதான் பொண்ணு பாத்தாச்சுல்ல... அப்புறம் கல்யாணம் ஆகி அவுங்க வந்தோன்ன, குடுத்தனம் பண்ணி, அனுபவசாலியா ஆனப்புறம் எழுத வேண்டியது தானேய்யா.. பேய், பிசாசு அப்டீன்னு!

அத உட்டுப்போட்டு, இப்பவே முன்னோட்டம்/வெள்ளோட்டம் பாக்கீரு!

said...

ஆகா.. குழலி வாங்க வாங்க. சுழலில் இருந்து மீண்டு வந்துட்டீங்களா..? வெல்கம் டூ த ப்ளாக்கர் வெல்டு.. இல்ல இல்ல வேல்டு.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
//Anonymous said...
kuzhali,
quite interesting. Seekirama adutha paguti ezuthunga
//
நேற்று ஒரு புத்தக கண்காட்சிக்கு சென்றேன், அங்கே ஏகப்பட்ட ஆவி பற்றிய புத்தகங்கள் அதை பார்த்த உடனே எழுதிட்டேன், தொலைக்காட்சிகளின் நீண்ண்ண்ண்ட தொடர்களில் ஏதோ ஒரு கதையை வைத்து ஆரம்பித்து போக போக கதையை எழுதுவது போல எழுதிடலாம்னு ஒரு நம்பிக்கைதான்....

அண்ணாச்சி ஞானபீடம் உங்க வீட்டம்மா இதெல்லாம் படிக்க மாட்டாங்க அப்படிங்கற தெகிரியமா?
என்னைக்காவது உங்க முகமூடிய கழட்டாமயா இருப்பீங்க அன்னைக்கு இருக்கு உங்களுக்கு கச்சேரி வீட்டில

//ஆகா.. குழலி வாங்க வாங்க. சுழலில் இருந்து மீண்டு வந்துட்டீங்களா..? வெல்கம் டூ த ப்ளாக்கர் வெல்டு.. இல்ல இல்ல வேல்டு. //
நன்றி மூர்த்தி...

said...

Muthalla ungalloda nadi josiyam enna solluthunu parunga.........

said...

//Muthalla ungalloda nadi josiyam enna solluthunu parunga.........//
பார்த்துட்டேன் பார்த்துட்டேன் ஆனால் அதை இங்கே சொல்ல முடியாதே...

said...

குழலி,
கற்பனைக் கதையா அல்லது நிஜச் சம்பவமா?. பயங்கர சஸ்பென்ஸாய் இருக்கிறது.

said...

kuzhali...unga adutha part thedinom....kedaikavillai....link sollungalen pls....inga neraiya per padika kathirukom.....

said...

கலை மன்னிக்கவும் அடுத்த பார்ட் எழுதவேயில்லை...

நிஜமா நீங்கள் விரும்பினால் இந்த தொடரை எழுத தயாராக உள்ளேன்...

நன்றி