பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்கான பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்.

Image hosted by Photobucket.com

தமிழகத்தின் இருண்ட காலமாக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் தமிழும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர், மத சுதந்திரமில்லாத நிலை. இந்த இருண்ட ஆட்சியை விரட்டி பலம்மிக்க அரசமைத்தனர் பல்லவர்களும் பாண்டியர்களும்.

ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்தனர் ஆனால் இவர்கள் பெயர் தமிழக பேரரசர்களின் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு மூவேந்தர் என சேர சோழ பாண்டியர்களின் பெயர்கள் மட்டுமே எப்போதும் கூறப்படுகின்றது.

சேர(ல)ர்கள் கேரளர்கள் ஆகி பின் மலையாளிகள் ஆன பின்பும் இன்னமும் விடாமல் தமிழகத்தின் மூவேந்தர்களின் பட்டியலில் முதல் வேந்தர்களாக கூறுகின்றோம்.

சோழ,பாண்டிய மன்னர்களின் காலங்களில் இருந்த கலைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் பல்லவர்களின் காலத்தில் கலை மிகவும் சிறந்தது விளங்கியது, யுவான் சுவாங் என்ற சீனப் பயணி பல்லவ ஆட்சிப் பற்றியும் கலைப் பற்றியும் மிகப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார், கம்போடியா,ஜாவா நாடுகளின் பல புகழ்பெற்ற கோவில்கள் பல்லவர்களின் கட்டிட கலையை சார்ந்தவைகள், உலக அதிசயமான ஆங்கர்-வாட்டை(கம்போடியா) உருவாக்கிய சூரியவர்மன் II மற்றும் ஜெயவர்மன் என்ற அரசர்கள் பல்லவர் வழி வந்தவர்கள் என சில குறிப்புகள் வரலாற்றாசிரியர்கள் சிலரால் தரப்படுகின்றன, வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.

மாமல்லபுரம், காஞ்சி கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள்,
மாமல்லபுர குகைக் கோயில்கள் சிற்பங்கள் உலகின் தலை சிறந்த கட்டிட கலைக்கான சான்றுகள்.

மாமல்லபுரம்கம்போடியா
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com


வீரத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை, மொத்த தமிழினமும் களப்பிரர்களிடம் அடிமைபட்டிருந்த போது அதிலிருந்து மீட்டதில் பெரும் பங்கு பல்லவர்களுக்கு.
ஆறாம் நூற்றாண்டில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசன் இலங்கையையும் மற்ற பிற தென் மாநில அரசுகளையும்( சோழர்களையும் சேர்த்து) வெற்றி கொண்டு பல்லவ பேரரசின் கீழ் கொண்டு வந்தார்,எல்லையிலிருந்த சாளுக்கியர்களுடன் நடந்த போர்களும் பாண்டியர்களுடன் நடந்த போர்களில் பெற்ற வெற்றியும் பல்லவர்களின் வீரத்தை பறைசாற்றுகின்றன, யாராலும் முறியடிக்கப்படமுடியாமலிருந்த இரண்டாம் புலிகேசி (ஹர்ஷவர்த்தனர் என்ற வட நாட்டு பேரரசரே இவரிடம் தோல்வியுற்றார்) நரசிம்ம வர்மருடனான வாதாபி போரில் உயிரையும் இழந்து வாதாபி நகரே தீக்கிரையானது.

கலைகளில் சிறந்து விளங்கினர், வீரத்தில் சிறந்து விளங்கினர், பின் ஏன் சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்பட்டுள்ள இடம் இவர்களுக்கில்லை?

சோழ பாண்டியர்களின் ஆட்சியில் சைவ மதத்தின் ஆதிக்கம் அதிகம், இந்த ஆட்சிகள் சைவ மதத்தின் ஆட்சியாகவே நடந்தது, ஆனால் உண்மையான மத சார்பற்ற ஆட்சி பல்லவர்களின் காலத்தில் தான், சைவம்,வைணவம் மட்டுமின்றி பௌத்த மதமும், ஜைன மதமும் சமமாக மதிக்கப்பட்டு நடத்தப்பட்டது, எல்லா மத்தினரின் வளர்ச்சிக்கும் அரசின் ஆதரவு கிடைத்தது, பல பௌத்த மடங்கள் காஞ்சியிலிருந்தன.

சமய சார்பற்ற கொள்கை கடைபிடித்த பல்லவர்களுக்கு ஏன் சேர சோழ பாண்டியர்களுக்கு தமிழக வரலாற்றில் தரப்பட்ட முக்கியதுவம் தரப்படவில்லை.

சேர சோழ பாண்டியர்களை மூவேந்தர்கள் என்று குறிப்பிடும் சொல்லாட்சி சென்ற நூற்றாண்டில்தான் அதிகளவில் புழக்கத்தில் வந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சென்ற நூற்றாண்டுவரையிலான தமிழ் நூல்களில் எந்த இடத்திலும் சேர சோழ பாண்டியர்களை மூவேந்தர்களாக குறிப்பிட்ட நூல்கள் எதுவுமில்லை. பின் எப்படி திடீரென சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்பட்ட உயரிய இடம் பல்லவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, இதற்கான காரணமென்ன?

சமகாலத்திலும் இதற்கு முந்தைய அரை நூற்றாண்டிலும் தமிழ் வேந்தர்களெனில் சேர சோழ பாண்டியர்கள் என்ற புகழ் பிரச்சாரம் நடத்தப்பட்டது, மக்களுக்கும் தமிழ் வேந்தர்களெனில் சேர சோழ பாண்டியர்கள் தான் முதலில் நினைவுக்க வருவர்,

இதற்கென்ன காரணம்,

நான் அந்த கால கட்டத்தை சேர்ந்தவனில்லை என்பதால் என் சிற்றறிவுக்கு இன்னமும் சரியான காரணம் புலப்படவில்லை, பல முறை வரலாற்று புத்தகங்களில் முயற்சித்து பார்த்தும் சரியான பதில் கிடைக்கப்படவில்லை.

ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் வழியாக கிடைத்த ஒரே ஒரு கருத்து, பல்லவர்கள் தமிழர்கள் அல்ல,

இவர்களுடைய பூர்வீகம் எது என்று பல விவாதங்கள் நடந்தன. ஆனால் இவர்கள் தமிழர்கள் என்ற முடிவுதான் பல ஆராய்ச்சியாளர்களால் பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆங்காங்கே சில வரலாற்று ஆசிரியர்கள் இந்த கருத்தை எதிர்த்தாலும். இவர்கள் தமிழர்களல்ல என்றும் வட நாட்டு பிராமணர்கள் என கூறும் சில வரலாற்று ஆசிரியர்களின் முக்கிய வாதம் பல்லவர்கள் அசுவமேதயாகம் செய்தனர் என்பதும் இவர்களின் சில செப்பேடுகள்,கல்வெட்டுகள் வட மொழியிலுள்ளன என்பது, இதை மற்ற சில வரலாற்று ஆசிரியர்கள் அசுவமேத யாகம் பிராமணர்கள் மட்டும் செய்வதல்ல பல சத்திரிய அரசர்களும் செய்தனர், இரண்டாவதாக பல்லவர்கள் தெலுங்கர் என்ற கருத்திற்கு ஆதாரமாக தெலுங்கிலும் வட மொழியிலும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் வெளியிட்டுள்ளது, இதற்கான காரணம் பல்லவர்கள் தெலுங்கு அரசின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள் அந்த கால கட்டத்தில் வட மொழியின் ஆதிக்கம் அரசுகளில் இருந்தது (ஆதாரமாக சேர சோழ பாண்டியர்களின் சில கல்வெட்டுகள் வட மொழி, தெலுங்கில் இருந்ததை காண்பிக்கின்றனர்) எனவே தான் தெலுங்கும் வட மொழியில் ஆட்சி மொழியில் கலந்திருந்தது அதுவும் கூட தொடக்கத்தில் மட்டுமே பிற்காலத்தில் முழுக்க முழுக்க தமிழே ஆட்சி மொழியாக இருந்தது, தற்போது ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டாலும் இன்னமும் ஆங்கிலேயர்களின் சட்டத்தையும் மொழியையும் கடைபிடிக்கின்றோமே என்ற உதாரணத்துடன் பல்லவர்கள் தெலுங்கர்களோ, வட நாட்டு பிராமணர்களோ அல்ல என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், மேலும் பல்லவ பேரரசு வீழ்ந்த பின் அரையர்(சம்புவரையர்),வென்று மண் கொண்ட உடையார், காஞ்சிவரத்தான் என்ற பட்ட பெயர்களுடன் ஆங்காங்கே குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர்

12ம் நூற்றாண்டில் பல்லவர்களின் வழிவந்த செங்கண்ணன் என்ற அரைய அரசன் படைவீடு (தற்போது படவேடு என்றழைக்கப்படும் ஊர்) என்ற ஊரை தலைநகராகக் கொண்டு சுயாட்சி புரிந்தார், சாளுக்கிய நாட்டிற்கு தப்ப முயன்ற சோழ மன்னனை போரிட்டு சிறைபிடித்தார், அவரைப்பற்றிய பல பாடல்கள் அவர் பல்லவ வழி வந்ததாக கூறுகின்றது. இவரைப்பற்றி வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஆக சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பிய போதும் பல்லவர்கள் தமிழர்கள் என்பதை நம்புகின்றனர்.

காரணம்-1*
கடந்த அரை நூற்றாண்டு காலமாக வரலாறு, கதைகள் வழியாகத்தான் சமூகத்திற்கு சென்றடைந்தது, சில வரலாற்று புனைக்கதை எழுத்தாளர்கள் மிக அழகாக எழுதினர், அதில் முதன்மையானவர் கல்கி, பொன்னியின் செல்வன் நாவல் வழியாகத்தான் பலருக்கும் சோழர்கள் பற்றி ஒரு பெரிய தாக்கம் வந்தது. சிவகாமியின் சபதம் படித்துதான் நரசிம்ம வர்ம பல்லரும் நாகநந்தியும் புலிகேசியும் பெரிய தாக்கமமேற்படுத்தியது மக்களின் மனதில்.

பொன்னியின் செல்வனில் முக்கிய கதை மாந்தர்களாக அருள்மொழிவர்மன்(ராஜ ராஜ சோழன்), வந்தியத் தேவன்,குந்தவை, ஆதித்த கரிகாலன் மற்றும் பலர், இதில் குறிப்பிட்டவர்கள் வரலாற்றில் வாழ்ந்தவர்கள், கதை படிக்கும் போது அதை கதையாக படிக்காமல் வரலாற்று நிகழ்ச்சியாக படித்தனர் மக்கள், அதனால் சோழ அரசர்களின் மீது ஒரு பிடிப்பு வந்தது.


சிவகாமியின் சபதத்தில் முக்கிய கதை மாந்தர்களாக நரசிம்ம வர்மர், சிவகாமி(முழுக்க கற்பனை பாத்திரம்), நாக நந்தி மற்றும் பலர், பொன்னியின் செல்வன் படிக்கும்போது சோழ அரசர்கள் மீது படியும் ஒரு பிரமிப்பு சிவகாமியின் சபதத்தில் பல்லவர்களின் மேல் வருவதில்லை மேலும்
விஜயாலய சோழன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன், மதுராந்த்தக சோழன் (இந்த பாத்திரம் முழுக்க முழுக்க கற்பனை, பெயரைத்தவிர, இதை கல்கி அவர்களே குறிப்பிட்டுள்ளார்) இவர்களின் வீரத்தை,புகழை புகழ்ந்து கூறப்பட்டதை போல சிம்ம வர்மன்,விஷ்ணு வர்மன், ஸ்கந்ட்த வர்மன், நந்தி வர்மன், புத்த வர்மன் பற்றியும், மகேந்திர வர்மர் மற்றும் முந்தைய பல்லவ வேந்தர்களின் புகழ் பாடப்படவில்லை, மேலும் கதையே பல்லவர்கள் அடைந்த தோல்விக்கு பழிவாங்குவதற்காக ஒன்பதாண்டுகள்** கடினப்பட்டு படை சேர்த்து சாளுக்கியர்களை வென்றது, இங்கே வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனு காட்டிய அளவிற்கான ஹீரோயிசம் இந்த கதையில் இல்லை, எனவே ஒரு விதமான ஆச்சரிய மனப்பான்மையோடு படிக்கவில்லை, விளைவு இதன் எண்ணம் பல்லவர்களைப் பற்றிய உண்மையான கருத்துகளின் மீதும் இதே நிழல் படிந்தது.

காரணம்-2 ***
சோழர்களும் பாண்டியர்களும் பல இடங்களில் தேவர் என்ற பெயரில் விளிக்கப்படுகின்றனர், இதன் விளைவாக தமிழ் நாட்டில் தேவர்கள் என்ற பெரும் எண்ணிக்கையிலுள்ள சாதியினர் இவர்களை தன் மூதாதையர்கள் என்றெண்ணி பெருமை அடைந்தனர், அதன் பிறகு புகழ் பரப்பப்பட்டது.

வரலாற்று குறிப்புகள் சென்னை பல்கலை கழகத்தின் இளங்கலை, முதுகலை பட்டத்திற்கான தமிழக வரலாறு பாடத்திட்டத்திற்கான புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு என் நினைவிலிருந்ததை கொண்டு எழுதப்பட்டது, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பகம், பக்க குறிப்புகள் நினைவிலில்லை, பிறகு அந்த புத்தகங்களை பார்த்து குறிப்பு தருகின்றேன்.

* - கல்கியின் மீதான விமர்சனமாக வைக்கவில்லை, என் பார்வை, புரிதலாகத்தான் இதை வைக்கின்றேன்.

** - சரியான வருட கணக்கு தெரியவில்லை

*** - எந்த சாதியையும் விமர்சித்து எழுதவில்லை, என் சந்தேகமே இது, இல்லை என்பதற்கான சரியான விளக்கமோ ஆதாரங்களோ தரப்பட்டால் என் புரிதலை மாற்றிக் கொள்கின்றேன்.

41 பின்னூட்டங்கள்:

said...

ஒரு குறிப்பு பதிவில் விடுபட்டுவிட்டது, அது இங்கே, தேவர்கள் என சோழ பாண்டிய மன்னர்கள் அழைக்கப்படது சாதியை அடிப்படையாக வைத்து அல்ல, அது ஒரு பட்டமாகத் தான் குறிப்பிடப்பட்டது என குறிப்புகள் கூறுகின்றன.

said...

அருமையான பதிவு. Where are the others who give comments when written about PMK or Rajini ?

said...

யாரிந்த வசுதேவி? வழக்கமாக தினமலர் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் வருவதை கிண்டலடிக்கும் குழலிக்கு தெரியுமா?

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி, நன்றாக ஆய்ந்து எழுதிருக்கீங்க, சுவாரஸ்யமாக இருக்கு, பதில்தான் தெரியல.
சம்பந்தமில்லாதது, சேர சோழ பாண்டியன் (பஸ்) எல்லாம் தமிழ் நாடு பொக்குவரத்து கழகமான பின்னும், பல்லவன் (பஸ்) மட்டும் தான் இன்னைக்கு வரைக்கும் கிங் மாதிரி நிக்குது.
-டண்டணக்கா.

said...

நல்ல பதிவு குழலி..படங்களோடு நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. இவர்களைப் பற்றி ஏதாவது விவரணப் படங்கள் உண்டா? என்னைப் போன்ற சரித்திரத்தை படிக்க சோம்பல் படுபவர்கள் 'டக்' கென்று பார்த்து புரிந்து கொள்ளலாம்.

said...

// தேவர்கள் என சோழ பாண்டிய மன்னர்கள் அழைக்கப்படது சாதியை அடிப்படையாக வைத்து அல்ல//

நல்ல அவல்...

நீங்க கேட்டது பதில் தெரியாத நல்ல கேள்வி ...

இந்த வரலாற்றை எங்கு தெரிந்துகொண்டீர்கள் ? நான் முன்பு சேர சோழருக்கு இணையாக (பஸ் செர்வீஸ்தான்)தெலுங்கு பல்லவரையும் வைத்துள்ளரே.. அதுவும் தலைநகரில் ..என்று நினைத்ததுண்டு ..

said...

//யாரிந்த வசுதேவி? வழக்கமாக தினமலர் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் வருவதை கிண்டலடிக்கும் குழலிக்கு தெரியுமா? //

நேரடியாக கேட்க வேண்டியது தானே, நீங்களே வசுதேவி என்ற பெயரில் இந்த பின்னூட்டமிட்டுக் கொண்டீர்களா என்று இதில் என்ன சுற்றி வளைத்தல் வசு'தேவன்' அவர்களே, இங்கே Anonymous பின்னூட்டம் திறந்திருக்க காரணம் சில சமயம் முகம் தெரிந்த , தெரியாத நட்பு வட்டம் சில சமயம் நேரடியாக விமர்சிக்கத் தயங்கும் அதனால் தான், கருத்து தான் முக்கியம் கேட்பவரை விட என்பதில் ஓரளவு நம்பிக்கை உண்டு.

தேநீர் கோப்பை என்று ஒரு சென் கதை இருக்கின்றது, ஏற்கனவே நிரம்பி இருக்கும் தேநீர் கோப்பையில் எவ்வளவு தேநீர் ஊற்றினாலும் வெளியில் வழியும்

இது மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது நேர விரயம் என நம்புகின்றேன் எனவே இது மாதிரியான நேர விரய கேள்விகளுக்கு பதிலளிப்பது இதுவே கடைசி முறை.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி ஹி ஹி பொறுமையாக பதிவை படித்ததற்கும்,

டண்டணக்கா அவர்களே எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் என்று முதல் மரியாதை வசனம் போல கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன் எனக்கு தெரிந்த இடங்களிலெல்லாம் ஆனால் பதில்தான் தெரியவில்லை.

//இவர்களைப் பற்றி ஏதாவது விவரணப் படங்கள் உண்டா? //

எனக்கு தெரிந்த வரை இல்லைங்க, பொதுவாக விவரணப் படங்கள் தமிழக வரலாற்றைப் பற்றி அதிக அளவில்(ஏன் ஒன்றிரண்டு கூட) இருப்பதாக தெரியவில்லை.

// தேவர்கள் என சோழ பாண்டிய மன்னர்கள் அழைக்கப்படது சாதியை அடிப்படையாக வைத்து அல்ல//

//நல்ல அவல்...//

இப்படி சில தவறான கருத்துகள் பல இருக்கின்றன, எனக்கு தெரிந்த வரை அவ்வப்போது தருகின்றேன், நல்லா மெல்லுங்கோ அண்ணாத்தே

//இந்த வரலாற்றை எங்கு தெரிந்துகொண்டீர்கள் ? //
என் தங்கை வரலாறு முதுகலை பட்டம் பெற்றவர், அவருடைய பாட புத்தகங்களில் இருந்து தான். கதை புத்தகங்கள் படிப்பதற்கு இணையான சுவை வரலாறு படிப்பதிலும் இருக்கும்.

//நான் முன்பு சேர சோழருக்கு இணையாக (பஸ் செர்வீஸ்தான்)தெலுங்கு பல்லவரையும் வைத்துள்ளரே.. அதுவும் தலைநகரில் ..என்று நினைத்ததுண்டு ..
//
பொதுமக்கள் பலருக்கும் பல தலைவர்களும் மன்னர்களும் அரசு பேருந்து போக்குவரத்து கழகங்களின் பெயரையும், மாவட்டத்தின் பெயரையும், திரைப்படத்தை பார்த்து தான் தெரியும், நல்ல ஒரு விடயம் சாதி அரசியல் புகுந்ததால் வீணானது.

said...

மூவேந்தர் என அழைக்கும் வழக்கம் ஏதோ போன நூற்றாண்டில் தோன்றியதாகச் சொல்வது முறையன்று. சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு முற்பட்ட காலத்திலேயே மூவேந்தர் என்ற சொல்வழக்கும், மூன்று நாடுகள் என்ற வழக்கும் புழக்கத்தில் உண்டு. அப்பொழுது பல்லவர்கள் இல்லை என்று நினைவிற் கொள்க.

அதற்காகப் பல்லவர்கள் குறைந்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. மூவேந்தர் என்ற வழக்கிற்கு அவர்கள் உட்பட்டவர்கள் இல்லை என்று சொல்வதற்காகச் சொன்னேன். சிலப்பதிகாரத்தைப் படியுங்கள். நான் சொல்வது விளங்கும்.

சிவகாமியின் சபதமும் பார்த்திபன் கனவும் சிறந்த கதைகளே. பல்லவர்தம் பெருமை சொல்கின்றவைகளே. மேலும் பல புதினங்கள் உள்ளன. யாரும் படிப்பதில்லை அவ்வளவே.

said...

ராகவன் தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி,

//கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சென்ற நூற்றாண்டுவரையிலான தமிழ் நூல்களில் எந்த இடத்திலும் சேர சோழ பாண்டியர்களை மூவேந்தர்களாக குறிப்பிட்ட நூல்கள் எதுவுமில்லை//

சிலப்பதிகாரத்தை நினைவில் வைத்து தான் நான் மேற்கண்ட வரிகளை எழுதியது, எனது ஆதங்கம் மூவேந்தர் என்ற சொல்வழக்கை பற்றி மட்டுமல்ல, சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் பல்லவர்களுக்கும் தரப்படவில்லையென்றதே.

//சேர(ல)ர்கள் கேரளர்கள் ஆகி பின் மலையாளிகள் ஆன பின்பும் இன்னமும் விடாமல் தமிழகத்தின் மூவேந்தர்களின் பட்டியலில் முதல் வேந்தர்களாக கூறுகின்றோம்.//

மற்ற அரசுகளின் பெருமைகளுக்கு சற்றும் குறைவில்லாத சில விடயங்களில் அந்த அரசுகளை விட அதிக பெருமை வாய்ந்த பல்லவர்களின் பெருமையும் புகழும் இரண்டாமிடத்தில் தானே இருக்கின்றது.

ஊடக பலத்தை பாருங்கள், ஊடகம் வரலாற்றின் நிகழ்வுகளைப் பற்றிய மக்களின் பார்வையில் கூட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

said...

பாமகவின் இணைய கொள்கை பரப்பு செயலாளராக நான் மாறியது போல இப்படி ஒரு பதிவெழுதியதால் பல்லவர்களின் அத்தனை செயல்களுக்கும் நான் விளக்கம் சொல்ல வேண்டுமென்று பல்லவர்களின் கொள்கை பரப்பு செயலாளராக என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.

ஹி ஹி

said...

மிக மிக அருமையான பதிவு.

இது போன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகளை படிப்பது இனிமையான அனுபவம்.

பாராட்டுகள்.

said...

Hi kuzhali,

Sorry to say that i cant read this " pallavarkaLukku izhaikkappadum aniithi" becoz of font problem. I cant read your blog, and i cant read even your feedback given for my Nila.. pls guide that where can i down load the related fonts to read your blog.
M. padmapriya

said...

பல செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது. பல்லவர்கள் கட்டிட மற்றும் சிற்ப கலைகளில் தேர்ந்திருந்தனர் என அறிந்்திருக்கிறேன். மாமல்லபுர சிற்பங்கள் எடுத்துக்காட்டு.

said...

கல்கி-யின் கதையில் (சி.ச) பல்லவ குல தோற்றத்தைப் பற்றி ஒரு மித்திகல் கதை கூறி இருப்பார் - கடல் கொடுத்த குலம் பல்லவ குலம் என்று.

என் எண்ணம் : பொன்னியின் செல்வன் சோழர்களும், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியர்களும், நரசிம்ம பல்லவர்களுக்கு ஏறத்தாழ 500 ஆண்டுகள் பிற்பட்டவர்கள், இது பல்லவர்களை மறக்க ஒரு காரணமாக இருக்கலாம்.

said...

குழலி,
நல்ல பதிவு.
எனக்குச் சரியான காரணங்கள் தெரியவில்லை.
யாராவது வரலாற்று ஆசிரியகள் பதில் கூறவேண்டும்.

கொறிக்க:
தற்போது மூவேந்தர் என்பது சேர,சோழ மற்றும் பாண்டியர்கள் அல்ல.
கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையர். இனி வரும் தமிழ் இனம் எதை ஞாபகம் வைக்கும்?

அன்புடன்,
கணேசன்.

said...

எனது ஆதங்கம் மூவேந்தர் என்ற சொல்வழக்கை பற்றி மட்டுமல்ல, சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் பல்லவர்களுக்கும் தரப்படவில்லையென்றதே

உங்கள் பதிவின் சாரம் இதுதான் என்றால், நீங்கள் நினைப்பது சரியல்ல. சேர, சோழ பாண்டியர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்? அல்லது எங்கு அவ்வாறு முக்கியத்துவம் தரப்படுகிறதாக நினைக்கிறீர்கள்?

"மூவேந்தர்" பற்றி குறிப்பிடப்படுவது எல்லாமே "சிறந்த அரசர்கள்" என்பதைக் குறிப்பது அல்ல, சங்க காலத்துடன் தொடர்புடைய, சங்கம் வளர்த்த அரசர்கள் பற்றியது.

மற்றபடி சரித்திரம் பற்றி எழுதுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

said...

//கல்கி-யின் கதையில் (சி.ச) பல்லவ குல தோற்றத்தைப் பற்றி ஒரு மித்திகல் கதை கூறி இருப்பார் - கடல் கொடுத்த குலம் பல்லவ குலம் என்று.
//
இதுவும் வரலாற்று ஆசிரியர்களால் ஆதாரங்களுடன் மறுக்கப்பட்டதுதான்,

"திருவயிற்றுதித்த மதுராந்தகத்தார்" என்று கல்வெட்டின் ஒரு வரியை வைத்து மதுராந்தக சோழரின் பாத்திர படைப்பில் கதை முழுதும் வரும் மதுராந்த்தக சோழன் பாண்டிய வம்சத்தினர் என எழுதியதாக குறிப்பிட்டுள்ளார் கல்கி.

//என் எண்ணம் : பொன்னியின் செல்வன் சோழர்களும், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியர்களும், நரசிம்ம பல்லவர்களுக்கு ஏறத்தாழ 500 ஆண்டுகள் பிற்பட்டவர்கள், இது பல்லவர்களை மறக்க ஒரு காரணமாக இருக்கலாம்.
//
இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் பல்லவர்களுக்கும் முந்தைய சேரர்களை நினைக்கும் போது இந்த காரணம் சரியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

//கொறிக்க:
தற்போது மூவேந்தர் என்பது சேர,சோழ மற்றும் பாண்டியர்கள் அல்ல.
கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையர். இனி வரும் தமிழ் இனம் எதை ஞாபகம் வைக்கும்? //
கணேசன் அய்யா வாழ்க நீவிர் இந்த பதிவில் தான் சாதி சண்டையில்லை, ஆரம்பிக்கின்றீரா? வாழ்க நீவிர்.

//சேர, சோழ பாண்டியர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்? அல்லது எங்கு அவ்வாறு முக்கியத்துவம் தரப்படுகிறதாக நினைக்கிறீர்கள்?
//
தமிழ்நாட்டு வேந்தர்கள் என்றால் யாருடைய பெயர்கள் உடணடியாக நினைவுக்கு வரும்?? சேர சோழ பாண்டியர்கள் தானே? இது எப்படி சாத்தியமானது ஏன் பல்லவர்களின் பெயர் நினைவுக்கு வரவில்லை பெரும்பாலானோருக்கு? சென்னையிலும் (எனக்கு தெரிந்தது ஒன்று தான் )காஞ்சிப்புரத்தையும் தவிர வேறு எங்கேயாயினும் பல்லவர்கள் பெயரில் கடைகளோ, உணவகங்களோ அல்லது வேறு பெயர்பலகைகளோ பார்த்திருக்கின்றீரா?? ஆனால் சோழர்கள் பெயரிலும் பாண்டியர்கள் பெயரிலும் மதுரையிலும் தஞ்சாவூரிலும் மட்டுமல்ல தமிழகம் முழுக்க உள்ளது.

இது வெறுமனே பெயர் பலகையென்றோ, இதெல்லாம் ஒரு பிரச்சினை என்றோ கூறவில்லை ஆனால் எப்படி பல்லவர்களின் புகழ் சேர,சோழ, பாண்டிய மன்னர்களின் புகழின் முன் சற்று மங்கியுள்ளது?? இத்தனைக்கும் பல்லவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததாகவும் இல்லை, மேலும் எல்லா விதத்திலும் சிறந்து விளங்கினர், இது நீண்ட நாட்களாக என்னுள் கேட்கப்பட்ட கேள்வி, ஏதேனும் விடை கிடைக்குமா என்றுதான் இங்கு பதிந்தேன், நான் இது காரணமாக இருக்கலாம் என நினைத்ததை என் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்.

நான் சொன்ன காரணங்கள் மட்டுமே சரியென நான் கூறவில்லை, வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்

said...

அய்யோ குழலி நான் சண்டையை ஆரம்பிக்கவில்லை. நம்புங்கள்.
மேலும் சாதி,மத,சமயச் சச்சரவுகளில் இருந்து ஒதுங்கி இருக்கவே ஆசைப்படுகிறேன்.நீங்கள் தான் தேவர் இனம் பற்றிய குறிப்பைக் கொடுத்து இருந்தீர்கள்.

//காரணம்-2 ***
சோழர்களும் பாண்டியர்களும் பல இடங்களில் தேவர் என்ற பெயரில் விளிக்கப்படுகின்றனர்,
இதன் விளைவாக தமிழ் நாட்டில் தேவர்கள் என்ற பெரும் எண்ணிக்கையிலுள்ள சாதியினர் இவர்களை தன் மூதாதையர்கள் என்றெண்ணி பெருமை அடைந்தனர்,
அதன் பிறகு புகழ் பரப்பப்பட்டது.//

இதன் தொடர்ச்சியாகத்தான் நான் தற்கால மூவேந்தர்களைப் பற்றிக் கூறினேன்.

மூவந்தர்கள் list-ல் பல்லவர் இல்லை என்பதைப் பற்றிய கட்டுரையில், அந்த மூவேந்தர்களே தற்போது அடையாளம் இழக்கின்றனர் என்பதையே சொன்னேன்.

மற்றபடி சண்டை நோக்கமெல்லாம் கிடையாது. நம்புங்கள்

!!!!! P L E A S E !!!!!!
அன்புடன்,
கணேசன்.

said...

//மற்றபடி சண்டை நோக்கமெல்லாம் கிடையாது. நம்புங்கள்
//
சரிங்க தலைவா சும்மா கிண்டலுக்கு கூறினேன், ஹி ஹி :-) அப்படி போட்டிருந்தால் பிரச்சினையிருந்திருக்காது... ஹி ஹி :-)

said...

/////////////////////////////////////////////////////
//சேர, சோழ பாண்டியர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்? அல்லது எங்கு அவ்வாறு முக்கியத்துவம் தரப்படுகிறதாக நினைக்கிறீர்கள்?
//
தமிழ்நாட்டு வேந்தர்கள் என்றால் யாருடைய பெயர்கள் உடணடியாக நினைவுக்கு வரும்?? சேர சோழ பாண்டியர்கள் தானே? இது எப்படி சாத்தியமானது ஏன் பல்லவர்களின் பெயர் நினைவுக்கு வரவில்லை பெரும்பாலானோருக்கு? சென்னையிலும் (எனக்கு தெரிந்தது ஒன்று தான் )காஞ்சிப்புரத்தையும் தவிர வேறு எங்கேயாயினும் பல்லவர்கள் பெயரில் கடைகளோ, உணவகங்களோ அல்லது வேறு பெயர்பலகைகளோ பார்த்திருக்கின்றீரா?? ஆனால் சோழர்கள் பெயரிலும் பாண்டியர்கள் பெயரிலும் மதுரையிலும் தஞ்சாவூரிலும் மட்டுமல்ல தமிழகம் முழுக்க உள்ளது.
/////////////////////////////////////////////////////

ஓ, அதை சொல்கிறீர்களா? சட்டென சோழ, சேர பாண்டியர்களின் பெயர் நினைவுக்கு வரக்காரணம் நம் தமிழ் இலக்கியங்கள்தான். பல்லவர்களைப் பற்றிய குறிப்பு எந்த அளவுக்கு தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது, மூவேந்தர்களுடன் ஒப்பிட்டால்?

பல்லவர்கள் பற்றிய செய்தி நமக்கு அறியக்கிடைப்பது கல்வெட்டு மற்றும் குடைவரை/சிற்ப இயல் மூலமாக மட்டும்தான். இத்துறைகள் எல்லாமே சமிப காலத்திய (நூறு ஆண்டுகளுக்குள்) அடைந்த வளர்ச்சி என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே.

/////////////////////////////////////////////////////
இது வெறுமனே பெயர் பலகையென்றோ, இதெல்லாம் ஒரு பிரச்சினை என்றோ கூறவில்லை ஆனால் எப்படி பல்லவர்களின் புகழ் சேர,சோழ, பாண்டிய மன்னர்களின் புகழின் முன் சற்று மங்கியுள்ளது?? இத்தனைக்கும் பல்லவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததாகவும் இல்லை, மேலும் எல்லா விதத்திலும் சிறந்து விளங்கினர், இது நீண்ட நாட்களாக என்னுள் கேட்கப்பட்ட கேள்வி, ஏதேனும் விடை கிடைக்குமா என்றுதான் இங்கு பதிந்தேன், நான் இது காரணமாக இருக்கலாம் என நினைத்ததை என் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்.

நான் சொன்ன காரணங்கள் மட்டுமே சரியென நான் கூறவில்லை, வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்
/////////////////////////////////////////////////////

எனவே, ஆராய்ச்சியின் அடிப்படியில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் தகவல்கள் மற்றும் வரலாற்று உண்மைகள் பற்றி எல்லோரும் அறிந்துவிட அவ்வளவு வாய்ப்பில்லை. தெரிந்தவர்கள்தான் அதைப்பற்றி எடுத்துக்கூற வேண்டும். இதில் புகழ் மங்கியுள்ளது என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாகாது. புகழ் வெளிவரவில்லை என்று சொல்வதே சரி.

ஆனால் ஆவணவாக்கத்திலும், நிர்வாகவியலிலும் சோழர்கள் அளவுக்கு பல்லவர்கள் அவ்வளவு சமர்த்தர்கள் அல்லர். :-)

சரி, சரி. மகேந்திர வர்மர் எழுதிய நகைச்சுவை நாடகங்கள் படிக்க வேண்டுமா? இதோ, இந்த சுட்டியைத் தொடரவும்:
மத்தவிலாச அங்கதம்: http://www.varalaaru.com/Default.asp?articleid=39
பகவதஜ்ஜுகம்: http://www.varalaaru.com/Default.asp?articleid=147

said...

சரி, சரி. நாளைக்கு ஆடிப்பெருக்கு. பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் பயணத்திலிருந்து கதை ஆரம்பிக்கும் நாள்.ஒரு மடக்கு பொ.செ. படிச்சுட்டு தூங்கப்போறேன், bye!

said...

நன்றி க்ருபா.... மத்தவிலாச அங்கதம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் படித்ததில்லை, சுட்டிக்கு நன்றி

said...

நல்ல பதிவு, நலல கேள்விகள். எனக்குத் தெரிந்ததை கூறூகிறேன் ப்ழையிருந்தால் பொறுத்தருள்க.

"சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை மூவேந்தரைப் ப்ற்றி எந்த குறிப்பும் இல்லை"

கல்கி பொ.செ. வில் "வாணன் பறித்து நட்டான் மூவேந்தர் தங்கள் முடி" என்று ஒரு பாடலைக் குறிபிடுவார். இது பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது.

said...

Dear Kuzhali,

Chera, Chozha and Pandyas were the original three tamil kingdoms. They seemed to have had common ancestors. Sangam poetry and later ones talks mostly about these. Pallavas came later. Unfortunately, Pallava kings had promoted Sanskrit. (Mahendra Pallavan writings were in Sanskrit. They seem to have had Gotras, etc.,) While Chera, Chozhas and Pandyas mostly intermarried among themselves and other feudals, Pallavas had married with Rashtrakudas an Chalukays, indicating that their focus was still northwards. Hence when Pandyas and Chozhas came back to power in Tamil country, Pallavas lost their relevance. The Cheras were still Tamils around 1000 A.D. Pallavas were, pardon me for writing this, were an aberration in Tamil history like Vijayanagara Nayakkars and Maratha Kings. Whatever might be the contribution of Thirumalai Nayakkar and rani Mangammal to Madurai, Madurai continues to be associated with Pandyans in Tamil consciousness.

said...

நல்ல தகவல்கள். நன்றி. பல்லவர்களின் கலைப் பித்திற்காகவே (அதனால், பல பிரச்சினைகள் எழுந்தாலும், மகேந்திரர் சாமர்த்தியமாக முறுயடித்துவிட்டார் அல்லவா?) அவர்களை போற்றலாம்...

said...

குழலி.. இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்.. படித்ததும் நீங்கள் கெட்ட கேள்வி எனக்குள்ளும் எழுகிறது..விடை தெரியவில்லை...

//பொன்னியின் செல்வன் நாவல் வழியாகத்தான் பலருக்கும் சோழர்கள் பற்றி ஒரு பெரிய தாக்கம் வந்தது. சிவகாமியின் சபதம் படித்துதான் நரசிம்ம வர்ம பல்லரும் நாகநந்தியும் புலிகேசியும் பெரிய தாக்கமமேற்படுத்தியது மக்களின் மனதில்.//
என்னை பொறுத்தவரை முற்றிலிம் உண்மை.
சிவகாமியின் செல்வன் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய கதை.
பொன்னியின் செல்வன் அரசியல் சதுரங்கத்தை மையப்படுத்திய கதை.

//சரி, சரி. மகேந்திர வர்மர் எழுதிய நகைச்சுவை நாடகங்கள் படிக்க வேண்டுமா? இதோ, இந்த சுட்டியைத் தொடரவும்:
மத்தவிலாச அங்கதம்: http://www.varalaaru.com/Default.asp?articleid=39
பகவதஜ்ஜுகம்: http://www.varalaaru.com/Default.asp?articleid=147 //
சுட்டிக்கு மிக்க நன்றி கிருபா.

said...

குழலி,
நல்ல பதிவு.

க்ருபா கொடுத்திருக்கும் சுட்டிகள் தவிரவும், பல்லவ அரசர்கள் கவிதைகள், நாடகங்கள் போன்ற ஆக்கங்களை வடமொழியில் எழுதி இருப்பதாகத் தான் படித்திருக்கிறேன். அந்தவிதத்தில் அவர்களைத் தமிழ் அரசர்கள் என்பதை விட வடமொழி அரசர்களாக இருந்திருப்பார்களோ என்ற ஐயமே அதிகம் வருகிறது.

அப்புறம், பல்லவ ஆட்சி தென் தமிழகத்திற்கு எல்லை மாதிரியாக இருந்த, காஞ்சிபுரம் வரையில் தானே? சோழ, பாண்டியர்கள் இன்னும் தெற்கே இருக்கும் பகுதியை ஆண்டதால் அவர்கள் மட்டுமே "தமிழ் மன்னர்கள்" என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். சேரர்களை ஏன் சேர்த்தோம் என்று தெரியவில்லை.

//தமிழ் நாட்டில் தேவர்கள் என்ற பெரும் எண்ணிக்கையிலுள்ள சாதியினர் இவர்களை தன் மூதாதையர்கள் என்றெண்ணி பெருமை அடைந்தனர், //
அச்சிச்சோ, அது உண்மை இல்லையா.. நிஜம்னு இல்ல நான் நினைச்சேன்! :)


பிகு: உங்கள் பதிவுகளில் தேதியை முழுவதுமாகக் காட்டுங்களேன். வெறும் நேரம் மட்டும் காட்டினால், இது எந்தக் காலத்தில் எழுதிய பதிவு என்று தெரியாமல் போய்விடுமே!

said...

Excellent Post!

said...

பல்லவர்கள் மத சார்பற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ... அனால் என்று மஹேந்திர வர்மா பல்லவன் சமண சமயத்தை விட்டு சைவ மதத்திற்கு மாறினாரோ அன்றே பல்லவர்களின் சமய சார்பற்ற தன்மை போய்விட்டது .... ஆம் 8000 சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றான் மஹேந்திரன் ... இது போன்ற (MAAS KILLING) செயல் தமிழகம் அறியாத ஒன்று .. மற்றபடி தமிழகத்தை ஆண்ட ஒரு மிகச்சிறந்த அரசு ... தமிழை பக்தி மார்கத்தில் செலுத்தி வெகுஜனங்கள் பாடல்கள் மூலம் தமிழை வளர்க்க உதவியவர்கள் பல்லவர்களே ..

said...

Vanakkam.

Neengal Kooria karuthukkal aazhnthu enni, pala natkalin kelviagavae enajju padugirathu.
Thankal padithha varalatru puthagangali adikuruppaaga inaithu erukkalam,

Adhithan

said...

அன்புள்ள குழலிக்கு,

நல்ல பதிவு.

பொன்னியின் செல்வரில் வரும் பார்த்திபேந்திர பல்லவனை விட்டு விட்டீர்கள், பொன்னியின் செல்வன் நாவலில் கடைசியில் பார்த்திபேந்திர பல்லவன் ஒரு பல்லவ அரசை தோற்றுவிக்க முயற்சித்து அதில் தோல்வியை சந்தித்தான் என்று வரும்.

மேலும் பல்லவர் தமிழகத்தின் வட பகுதியை ஆண்டவர்கள் . வட மாவட்டங்களை பொறுத்தவரை அவர்கள் தங்கள் மண் மீதோ அல்லது வரலாறு மீதோ எந்த ஒரு பிடிப்பும் கொண்டுள்ளவர்கள் அல்லர்.

எனது கீழ்காணும் பாதிப்பை நீங்கள் படிக்க வேண்டும்
http://kulambiyagam.blogspot.com/2008/03/1.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/2.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/3.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/4.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/5.html
g


இதை படித்த பின்பு இந்த பின்புலத்தில் " மூவேந்தர் என்னும் சொல்லை அணுகலாம்.
மேலும் வட தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் மகாபாரதம் படிப்பதும் பல்லவர் காலத்தில் தொடங்கிய வழக்கம்தான்.

said...

நல்ல கேள்வி,பலரது சிந்தனையையும் தூண்டி விட்டீர்கள்

said...

hi
the article has good information and i totally agree that Pallavan dynasty has been sidelined in Tamil history.Lets not forget that the great Tamil Scholars Appar,Thirunyanasamandar and others lived during the Pallavan period.
NARASIMHA VARMAN is one of the 6 kings OF India who was never defeated in a battle.They excelled in governance,literature and were the first in India to strt builiding the Rock cut temples ,the Cholas just followed them.

I couldnt undesrtand how we can sideline the Pallavan dynasty which was best in all of forms and who formed the base for the Tamil culture and literature.

I doesnt matter if they r recognised for the Pallavan History will always prevail.

V.MAHENDRA VARMA

said...

குழலி,

நான அறிந்த வரையில் சேர, சோழ, பாண்டியர் மூவரும் தமிழகத்திலே தோன்றி, தமிழகத்திலே ஆட்சி செய்து மறைந்தவர்கள். 8ஆம் நூற்றாண்டில் மலையாளம் வடமொழிச்சொற்கள் கலந்து ஒரு தனிமொழியானது; மேலும் கேரளமும் ஒரு தனிப் பிரதேசமாகியது. அது வரை எல்லாமே தமிழகம்தான். மூவருமே தமிழ் மன்னர்கள்தான்.

சங்கத்தமிழ் வரையறுத்தலின்படி பாண்டிய நாடு என்றால், பழைய நாடு என்றும், சோழநாடு என்றால் புதிய நாடு என்றும், சேரநாடு என்றால் மலை நாடு என்றும் பொருளாம். ஆனால் பல்லவா என்பது ஒரு வடமொழிச் சொல்லாகும். (கிளை என்பது அதன் பொருள்). மேலும் பல்லவர்கள் சதவாஹன அரசர்கள் வழி வந்தவர்கள். தமிழகத்திலே தோன்றியவர்கள் அல்ல. தமிழைத் தவிர வடமொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள். என்னதான் நல்லாட்சி புரிந்தபோதும், வீரத்திலே சிறந்து விளங்கிய போதும், கலைகளை வளர்த்த போதும், "வந்தேறிகள்" என்ற அடையாளத்தை மறைக்க முடியாத காரணத்தினால்தான் என்னவோ, வரலாற்றில் அவர்களுக்குரிய இடம் கொடுக்கப்படவில்லையோ என்று் எண்ணுகின்றேன்.

- சிமுலேஷன்

said...

my dear friendz ,, plz keep in mind that pandyas are never called thevars, and they do not belong to that particular caste,,
in particular pandyas are nadars,, and beetre keep it in mind that sanars are different from nadars,, there were seven groups in nadars and they were commonly called as nadars ,,and never in those seven was a name called sanar,
mostly pandyas history predates the birth of christ,, cause plz do not refer to any indian scholar's writings and do refer to the writings of ptolemy of egypt who was born during the time of christ,and sinhala history which is of more than 2400 years old which talks about pandyas,,
and the total community in india doesnt want to talk about the pandyan history and do not want to research about their legitimate orgin,, not many people in madurai who call themselves as the descendants of pandyas know about the shape of the pandyan sword,, but try to go and see or ask ur friendz if they r nadars and they come from the typical south region of tamilnadu they all will show u the same shape of sword which would look like a fish tail at the top end of the sword,,
and most definately pandyas were the only kings to develop and research on tamil literature for 3 times which no other kings dared to do ,, and try to read those literatures which will never bost the pandyan kings and it will generally tell the lifestyle of the people and heir culture at that time,, and keep to ur mind that no pallava fought the kalabhras away after they have ruled the south india for over 70 years the pandyan king named maravarman sundarapandyan fought and brought it back to the tamils,,,,


PANDYAs have the highest priority in the names of the kings who ruled the tamils in ancient period,, and no other kings had done it ,, they were the pioneers in shipping industry cause they traded with their ships to persia which is todays iran ,, anyone in this net could refer that in the google ,,right now ,, which is all mentioned in the roman and greeks history, only for this reason,, pandyas were called marakalrayars,

plz do feel free to send me some queries or debates to my mail id sukumar.parthasarathy@gmail.com

said...

காஞ்சி கதிரவன் என்ற ஒரு வரலாற்று புதினம் - மகேந்திர வர்மரின் இளமை காலம் பற்றி கூறி இருக்கும்.

said...

pandiyans are kallar kings, here is evidence" kallar perumgan thennavan", and about naadars ,there is nothing mentioned about them in sangam literatue, most of the evidence shows them as a slaves from srilanka during pallava and chola empire period, more than that naadar is not cast name it is a pattam..but shanar is cast name//

said...

naadar is from word nadavi, actually they are slaves from srilanka brougt to TN during pallava and chola period. we have to appreciate them, because they trying make something from nothing. There is no evidence in tamil history about nadars as atleast "kurunila mannan". and regarding Thever title , especially in warrior clans like Kalalr Maravar, vanniyar clearly indicates kings. You cannot find thever titled vanniyar in low standard.

said...

actually nadars are slaves from srilanka during pallava and chola period. nadar is from word nadavi. they are trying make imaginative history from none.pandiyan been called by poets as "kallar perumgan Thenavan"