பாபரும் ரகுபதியும்

பாபரென்றாலே வழக்கமாக நினைவுக்கு வருபவை/வர்கள் மசூதியும்,இராமரும் அத்வானியும் தான் கி.பி.1483 லே துருக்கியில் பிறந்து வாழ்நாள் முழுவதும் போர் போரென வாழ்ந்தவர், கி.பி 1526 லே பானிப்பட்டில் இப்ராஹிம் லோடியுடனான போரில் அரை நாளிலே இப்ராஹிம் லோடியையும் அவரின் படைவீரர்கள் 15,000 பேர்களையும் கொன்று கனுக்காலளவு ஓடிய குருதி வெள்ளத்திலே நடந்து தில்லி சிம்மாசனம் ஏறினார்.

கோவை உடையாம்பாளையம் எம்.ஜி.ஆர் வீதியில் வசிக்கும் ரகுபதிக்கு சொந்தமான சாப்பாட்டுக்கடை உள்ளது, கி.பி.2003 ல் சந்திரகலா என்ற பெண்மனியுடன் திருமணம் நடந்தது

பாபருக்கு ஹிமாயூன் என்கிற புத்திரன், சரியாக சொல்ல வேண்டுமென்றால் நோஞ்சான் பிள்ளை அவர், பிறந்ததிலிருந்து பலமுறை நோய்வாய்பட்டு சாவின் விளிம்பை தொட்டு வந்தவர்.
காந்தகாரில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன் உயிரை பணயம் வைத்து ஹிமாயூனை காப்பற்றி வந்தார் பாபர்

ரகுபதிக்கு விக்னேஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது,சாப்பாட்டுக்கடையில் வியாபாரம் சரியில்லை, குடிப்பதற்கு பணம் இல்லை, இதெல்லாம் பிள்ளையினால் தான் என சோதிடர்கள் சொல்ல பிள்ளையை மாமியார் வீட்டில் விட்டு வரவேண்டுமென மனைவியை கொடுமை படுத்தினான்

ஹிமாயூனை கடுமையான நோய் பீடித்து படுக்கையில் வீழ்த்தியது, இந்த முறை அத்தனை மருத்துவர்களும் கை விட்டுவிட்டனர், இளவரசரின் உயிர் பிரியும் நொடியை எதிர்பார்த்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்ய காத்திருந்தனர்

தாய்பாசம் இழுக்க சந்திரகலா தன் ஒன்பது மாத பச்சைக் குழந்தையை மீண்டும் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வந்தாள்

பாபர் உள்ளம் கலங்கினார், இறைவனிடம் வேண்டினார், இறைவா என் உயிரை எடுத்துக் கொள் என் மகன் ஹிமாயூனை பிழைக்க வை என மனமுருகி வேண்டினார், அன்ன ஆகாரமின்றி நாட் கணக்கில் தொழுதார்

குழந்தையை மீண்டும் பார்த்தவுடன் கொதித்தான் ரகுபதி, என்னை கொல்ல வந்த எமனே என்று குழந்தையை பிடுங்கிக் கொண்டு அறையினுள் ஓடி தாழிட்டுக்கொண்டான்

பாபரின் குரலுக்கு இறைவன் செவி சாய்த்தார், படுக்கையிலிருந்த ஹிமாயூன் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேற பாபர் நோயுற்று படுக்கையில் விழுந்தார்

ஒன்பது மாத பச்சை குழந்தையை தன் மகனை அடித்த அடியில், சந்திரகலாவின் அலறலை கேட்டும் எம்.ஜி.ஆர் நகர் மக்கள் திரண்டு அந்த குடிகார கொடுமைக்கார தந்தையிடமிருந்து குழந்தையை பிடுங்கினர்.

ஹிமாயூன் முழுவதும் குணமடைந்த போது பாபர் இறந்திருந்தார், தன் மகனை காப்பாற்றி விட்டோம் என்ற முழு மகிழ்ச்சியோடுதான் அவர் மரணத்தை வரவேற்றிருப்பார்

ஆனால் மருத்துவனை போவதற்குள் குழந்தை விக்னேஷ் இறந்து விட்டான், அப்பன் ரகுபதியோ அடிச்சே செத்துபோச்சி, என் உயிரை எடுக்க வந்தான் அதான் நான் அவன் உயிரை எடுத்துட்டேன் என கொஞ்சம் கூட குற்ற உணர்வின்றி காவலர்களிடம் வாக்குமூலம் கொடுத்தான்

போர்,ரத்தம், அரைநாளில் 15,000 உயிர்களை குடித்த சாவுக்கு அஞ்சாத ஒரு அரசர், தன் மகனுக்காக தன் உயிரை கொடுத்தார், குடிக்க பணமில்லை, வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்று தன் மகன் உயிரை குடித்தான் ரகுபதி

தன் பிள்ளைகளுக்காக, தன் உடல், பொருள், ஆவியனைத்தையும் அவர்களுக்கே செலவிட்டு பிள்ளைகள் சிரித்தால் சிரிப்பது அழுதால் அழுவதுமாகவும் கடவுள் நம்பிக்கையே இல்லாத தந்தைகள் தன் மகன்/மகள் உடல் நிலை சரியாக வேண்டுமென திருப்பதியிலே மொட்டை போட வரிசையில் நிற்கும் நவீன பாபர்கள் வாழும் இந்த பூமியில் ரகுபதியும் வாழ்கின்றான்...

10 பின்னூட்டங்கள்:

said...

ஒரு நல்ல விழிப்புணர்வு தரும் கட்டுரை!
வரலாற்றுக் குறிப்புகளையும் தந்திருக்கலாமே!
(அப்புறம், அரசியல விட்டுட்டு இது மாதிரி நிறைய எழுதுங்கங்கிறேன்).

said...

பின்னூட்டத்திற்கு நன்றி இப்னு,

//வரலாற்றுக் குறிப்புகளையும் தந்திருக்கலாமே!//
முயற்சிக்கின்றேன், தற்போது புத்தகங்கள் இல்லாததால் நினைவிலிருந்து எழுதுகின்றேன், கூகிள் ஆண்டவரே துணை

//அப்புறம், அரசியல விட்டுட்டு இது மாதிரி நிறைய எழுதுங்கங்கிறேன்//

நிச்சயம் செய்கின்றேங்க...

said...

touching article thaks
Rajkumar

said...

பின்னூட்டமிட்ட தெருப்பாடகன்,ராச்குமாருக்கு நன்றி

said...

நன்றி Aarokkiyam உள்ளவரே ஆனா பிரச்சினையை ஆரம்பிக்காதிங்க... வேற எங்கயாவது வச்சிக்கிங்க உங்க பிரச்சினையை

said...

நல்ல பதிவு, குழலி, பிரச்சினை எதுவும் இல்லாம :)

said...

பின்னூட்டத்திற்கு நன்றி பாலா
//பிரச்சினை எதுவும் இல்லாம :) //
ஹி ஹி

said...

nalla pathivu.. kuzhali..

en valaippathivil ungaL pathivukku thodarbu tharappattirukkirathu

anbudan vichchu
neyvelivichu.blogspot.com

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி,
நல்ல பதிவு..இது போல நிறைய எழுதுங்கள்.