குழலி பக்கங்கள் - சிறிய விடுமுறை

அன்புள்ள இணைய நண்பர்களுக்கு,

குழலி பக்கங்களின் புதுப்பதிவுகள் பதிப்பிப்பதை சிறிது காலம் நிறுத்தி வைத்துள்ளேன்

வலைப்பக்கங்களில் ஒரு நல்ல சூழ்நிலை வரும் வரையிலும்

மேலும் கடந்த மூன்று மாதங்களாக போதைக்கு அடிமையானது போன்று

வலைப்பூக்களில் நேரங்காலமின்றி சுற்றி திரிந்ததால் சொந்த வேலைகளில்

ஏற்பட்ட சில சுணக்கங்களாலும் என்னை மீட்டுக்கொள்ளும் முயற்சியாகவும்

தற்காலிகமாக வலைப்பூக்களில் பின்னூட்டமிடுவதையும் பதிவிடுவதையும் நிறுத்தியுள்ளேன்...

எதிர்மறைக்கருத்தானாலும் நாகரீகமாகவும் நயமாகவும் பதிவுகளிலும் பின்னூட்டங்களையும்

தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறக்கு

நல்ல ஒரு சூழலில் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் செல்கின்றேன்....

தொடர்ந்து வலைப்பூக்களை படித்துக்கொண்டு ஒரு பார்வையாளனாக இருப்பேன்...

15 பின்னூட்டங்கள்:

said...

நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள்

said...

உங்களைப்போன்ற நண்பர்களை தந்த தமிழ்மணத்திற்கு நன்றி .. போய்வாருங்கள்.. உங்கள் முன்னேற்றத்திற்காக இந்த நேரத்தை பயன்படுத்துங்கள்.. நானும் உங்களை போன்றே முடிவெடுத்துள்ளேன் ..

All the best

said...

வாழ்த்துக்கள். நான் பதிவுகள் இடவில்லையென்றாலும், பின்னூட்டம் இட்டுக்கொண்டு இருந்தேன். இதுவே என் கடைசி பின்னூட்டம். அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

said...

இதென்ன கலாட்டா? குழலி இல்லாமால் மாயவரத்தான் யாரை வம்புக்கு இழுப்பதாம்?! ;)

said...

குழலி,

உங்களின் முடிவு வருத்தம் கொள்ள வைத்தது என்னை. நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன். உங்களின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். நேரம் கிடைக்கும்போது தனிமடலிடவும்.

said...

காஞ்சி பிலிம்ஸ் கடையை மூடிட்டார். இப்போ நீங்க. அதுவும் என் வலைப்பதிவுக்கு வந்து போகும் ரெண்டு மூணு பேர்ல நீங்க ஒரு ஆளு; இப்ப அதுவும் போச்சா?

தமிழ் மணத்துக்கு என்ன ஆச்சு? எத்தனை பேர் எவ்வளவு மெனக்கெட்டு, கஷ்டப்பட்டு ஆரம்பிச்சது; இப்படியே போனா...?உண்மையிலேயே ரொம்ப கஷ்டமாயிருக்கு. மாலன் சொன்னது மாதிரி இது இன்னொரு சிறு பத்திரிகை மாதிரி ஆயிடுமோ?

said...

அட என்னங்க குழலி இது... திடீர்னு இப்படி ஒரு குண்ட தூக்கி போட்டுடீங்க.
சரி இப்போ உன்மையான காரணம் என்னனு சொல்லுங்க.. கல்யாணம் fix ஆகி இருக்கா??
வருங்கால மனைவிகூட பேச டைம் வேனுமா?
/////// வலைப்பக்கங்களில் ஒரு நல்ல சூழ்நிலை வரும் வரையிலும் //////
இது என்னது...? புரியலயே !

அப்புறம் : என் கடைசி பதிவுல உங்க கருத்து இல்ல கொஞ்சம் கொறையா இருக்கு.. வந்து போட்டுட்டு போங்களேன்!

வீ எம்

said...

குழலி,
உங்கள் தனி மின்-அஞ்சல் தேவை.
முடிந்தால், njanapidam AT gmail DOT comக்கு அனுப்பவும்.
நன்றி.

ஞானபீடம். [நீ வருவாய் என...]

said...
This comment has been removed by a blog administrator.
said...

எனது மின்னஞ்சல் முகவரி kuzhali140277(AT)yahoo(DOT)com

ஞானபீடம் உங்களக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன்....

// என் கடைசி பதிவுல உங்க கருத்து இல்ல கொஞ்சம் கொறையா இருக்கு.. வந்து போட்டுட்டு போங்களேன்!//

போட்டுட்டேன் தல

நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி... வருகிறேன்.

said...

படையாச்சி பயலே நீ எழுதலேன்னு எவன் இங்க அழுவுறான்.

said...

போய் வாருங்கள் குழலி!
அன்புடன்,
கணேசன்.

said...

wat's happening guys?? apadiapodu is also saying bye to thamizmanam...
அன்னம் மாதிரி பாலை மட்டும் குடிச்சிட்டு தண்ணியை விட்டிடணும்.
looking fwd to see ur posts n comments again.

said...

குழலி., தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் எல்லாம் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்லாமல் ஒதுங்கி நிற்கிறேன் அவ்வளவே. மாலன் அவர்கள் விலகிய அதிர்ச்சியே என்னை அமைதிப் படுத்திவிட்டது.

said...
This comment has been removed by a blog administrator.