லகலகலக - Original Risk Analysisபிளஸ் பாயிண்ட்

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு (சொந்த தயாரிப்புனா பல பிரச்சினைகள் வருமே)

ஏற்கனவே இரண்டு மொழிகளில் மெகா ஹிட்டான மகா பாதுகாப்பான கதை

அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது

சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது

சமரசத்திற்காக அரசியலை தாக்கும் வசனங்களை வைக்காமல் பாதுகாப்பான வசனங்கள் வைத்தது

சமரசத்திற்காக ஸ்டைலாக புகை பிடிக்கும், தண்ணியடிக்கும் காட்சிகள் வைக்காதது

20 வயது கதாநாயகி

ஜோதிகாவின் முட்டை கண் மற்றும் நடிப்பு

நகைச்சுவை புயல்

நாயகனுக்காக கதை என்பதை கதைக்காக நாயகன் என்ற வியூகம்

திரைவெளிச்சத்திலே தலைவனைத் தேடும் தமிழர்கள்

நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள்

மற்றும்

ரஜினிகாந்த்மைனஸ் பாயிண்ட்

படத்தை ஹிட் ஆக்கியே தீரவெண்டுமென புகுத்தப்பட்ட இரட்டை அர்த்த நகைச்சுவைகள்

மற்றவைகள் பல பதிவுகளில் விமர்சிக்கப்பட்டு விட்டது

பின்குறிப்பு

சை... கடைசியில் என்னையும் சந்திரமுகி பற்றி எழுத வைத்து விட்டனரே

16 பின்னூட்டங்கள்:

said...

குழலி உங்க ரவுசு தாங்க முடியலை, ரசிக கண்மணிங்க கொதிச்சி போயிருக்காங்க

said...

//குழலி உங்க ரவுசு தாங்க முடியலை, ரசிக கண்மணிங்க கொதிச்சி போயிருக்காங்க//

நட்சத்திரத்தில் - குத்தாக விழும்போதே தெரிகின்றதே, சீக்கிரம் எதிர்வினையா ஒரு பதிவை எதிர்பார்க்கின்றேன்... நாளைக்குள்ள வந்து விடும் என்று நினைக்கின்றேன்

said...

Hi from canada
your blog is very interesting!

Get Firefox!
Reclaim Your Inbox!

said...

முந்தைய பின்னூட்டம் எரிதமா?

said...

அது அந்த கடைசின்னா... இது இந்த கடைசி.....
நான் தான் நடுநெலமயா ஒரு பதிவு போடணும் போல...

அது சரி தலைப்பு இன்னா வெக்கறது....
லகலக - The Original (Very very)Risk Analysis
[போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்... எங்களுக்கு வேறு எங்கும் பதிப்பு இல்லை] ஓ.கேவா...

said...

குழலி அவர்களே

நீங்கள் இதனை Risky Analysis என்று எழுதி இருக்க வேண்டும்.. நன்றி..

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

வளவன் அது என்ன வலைப்பூக்களில் வந்து போலிகள் இல்லையென விளம்பரம், இங்கே தானே பிளவாளுமை,பலவாளும(மல்டிப்பிள் பெர்சனாலிட்டி) எல்லாம் இருக்கின்றது

said...

படம் ஒன்னும் இல்லையா... அட்லீஸ்ட் உங்க படமாவது போடுங்க.. அதான் பி.குல உங்கள பத்தி எழுதிட்டீங்களே

said...

என்ன இப்ப எல்லோரும் Risk Analysis எழுத வெளிக்கிட்டீர்கள்.... ம்....!!!

said...

அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது

சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது

I like this comedy more than the comedy track of this film

said...

Risk Analysis படிச்சு அலுத்துக் களைத்துப் போனவர்கள் புத்துணர்வு பெற,படியுங்கள் ஒரு நடுநிலைமையான statistical analysis.
இங்கே...
http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_26.html

சுதர்சன்.கோபால்

said...

//திரைவெளிச்சத்திலே தலைவனைத் தேடும் தமிழர்கள்//

மத்த எல்லா வெளிச்சத்திலும் நல்ல தலைவர்கள் இல்லாததாலே தான் தமிழன் அங்க போய் தேடுறான்.

said...

திரைவெளிச்சத்தில வர்ற தலைவர்களின் யோக்யதை தான் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே அப்புறம் என்ன அங்க சந்தன வாசனையா வீசுது?

ஏதோ என்னால முடிந்த அளவிற்கு சுட்டி தருகின்றேன், இதை படித்து விட்டு சந்தன வாசனை வீசுதா சாக்கடை வாசனை வீசுதானு சொல்லுங்க

இரண்டு காந்த்துகளும் இரண்டு மண்டபங்களும்


நிழல் யுத்தமும் நிஜ யுத்தமும்


விஜயகாந்த்தின் விஜயம் ஜெயமாகுமா?

கிரியாயோகமும் 20 கோடியும்

சூப்பு நட்சத்திரம் வளர்ந்த கதை - 2

இன்னும் நிறைய இருக்குது

said...

அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது

சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது

சமரசத்திற்காக அரசியலை தாக்கும் வசனங்களை வைக்காமல் பாதுகாப்பான வசனங்கள் வைத்தது

சமரசத்திற்காக ஸ்டைலாக புகை பிடிக்கும், தண்ணியடிக்கும் காட்சிகள் வைக்காதது


enna ithu... sema jokka?

Senthilkumar

said...

செந்தில்குமார் பின்ன எதுக்காக இதெல்லாம் வைக்கவில்லை? கதைக்கு தேவையே இல்லாமல் பஞ்சர் வசனங்கள் பேசி பேசி பஞ்சர் ஆனதால் வந்த ஞானம் தானே...

said...

வலைப்பதிவில இப்படி எழுதி எழுதியே
கொல்றவங்களுக்கு கருடபுராணத்தில் ஏதும் தண்டனை கிடையாதா???