நட்சத்திரம் - இது கதையல்ல நிஜம்

அந்த ஊருக்கு தற்போதுதான் மினி பஸ் புண்ணியத்தில் நேரடியாக பேருந்து போக்குவரத்து உள்ளது, அதற்கு முன் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் இறங்கி 4கி.மீ., நடந்துதான் போக வேண்டும் அந்த கிராமத்திற்கு, கிராமம் என்றவுடன் பாரதிராஜா திரைப்படங்களில் வரும் கிராமங்களைப்போல பசுமையான கிராமம் அல்ல, மழையை எதிர்பார்க்கும் புஞ்செய் நிலங்கள் தான், ஏரிக்கருகில் இருக்கும் சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே நஞ்செய் நிலங்கள், ஊரின் பெரும்பாண்மையானோர்கள் ஒரே சாதிதான், எல்லோருமே ஒரு வகையில் பங்காளிகளாகவோ மாமன் மச்சான்களாகவோ இருப்பார்கள்.

வெளியூரில் இருக்கும் சொந்தக்காரர்கள் வருவதென்றால் சாலையில் மாட்டுவண்டியுடன் காத்திருப்பார்கள் ஊர்க்காரர்கள், வழிப்பயணம் அத்தனை சுலபமானது அல்ல, மண் சாலை, அதிலும் ஆங்காங்கே பெரிய பெரிய பாறைகள் தலை நீட்டிக்கொண்டிருக்கும் அதில் வண்டி ஏறி இறங்கும்போது எங்கே வண்டி சாய்ந்துவிடுமோ என்று வண்டியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும், வழியில் உள்ள நிலங்களில் பல நேரங்கள் கரம்பாக (பயிர் ஏதுமில்லாமல்) கிடக்கும், மழைபெய்திருந்தால் கம்பும் கேழ்வரகும் விளைவிக்கப்படிருக்கும், ஏரி ஓரங்களில் விளைந்துகிடக்கும் கறிவேப்பிலைகளை மூட்டை மூட்டையாக எடுத்து கடலூருக்கும் இன்ன பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பார்கள் ஆனாலும் இதில் பெரிய வருமானம் ஏதுமில்லை, நகரத்து சொந்த காரர்கள் அந்த ஊருக்கு சென்றால் அந்த பிள்ளைகள் மிகவும் ஆனந்தபடுவார்கள் தினமும் கம்பங் கூழும், கேழ்வரகு கூழும் சாப்பிட்டவர்கள் அந்த சில நாட்களில் மட்டும் அரிசிசோறும், இட்லியும் சாப்பிடுவார்கள்.

அந்த ஊரில் ஆண்களை "டி" என்றும் பெண்களை "எலே" என்றும் கூப்பிடுவார்கள்

நிஜம்-1

பஞ்சாயத்து தலைவரின் வீடுதான் ஊரின் முதல்வீடு, அங்கேஅன்று இரவு ஊரே கூடியிருந்தது, மாமன் மச்சான்களுக்கிடையேயான நிலப்பிரச்சினை தொடர்பான பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது, வாதியின் தங்கையை பிரதிவாதியும், பிரதிவாதியின் தங்கையை வாதியும் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள்.

பஞ்சாயத்தில் நிலப்பிரச்சினையோடு சேர்ந்து இவர் வீட்டு ஆடு அவர் நிலத்தில் மேய்ந்ததும் அவர் வீட்டு குழந்தை இவர் வீட்டு முற்றத்தில் ஆய் போனதுமான குற்றசாட்டுகள் மாறி மாறி பேசப்பட்டு வந்தன, நடு நிசி தாண்டியும் பஞ்சாயத்து முடிவுக்கே வரவில்லை இதில் ஊரே இரண்டுபட்டு கிடந்தது, ஊரில் அத்தனை பேருக்கும் இவர்கள் மாமனாகவும், பெரியப்பனாகவும் இருந்தனர், ஒரே வீட்டில் அண்ணன் மாமனையும் தம்பி பெரியப்பனையும் ஆதரித்து பிரிந்து நின்ற கதையும் நடந்தது.

ஏற்கனவே இரு தரப்பும் கத்தி,வேல்கம்பு ஆயுதங்களை சேகரித்து வைத்திருந்தனர், வீட்டுமாடியில் கருங்கற்கள் கிரஷரில் இருந்து ஏற்றிக்கொண்டு வந்து கொட்டப்பட்டிருந்தன, இவர்கள் மோதிக்கொள்ளாமல் இருப்பதற்கான கடைசி முயற்சியாக நடந்த பஞ்சாயத்தும் தோல்வியடைந்தது,

"ஏ நாளைக்கு பாத்துகலாம் டி, யாரு உசுர யாரு எடுக்குறாங்க " என்று கூறி பஞ்சாயத்தை விட்டு எழுந்த து மாமன் கோஷ்டி, மாமன் கோஷ்டி கொஞ்சம் வலுவானதும் கூட, மறு நாள் மோதல் நடந்தால் நிச்சயம் பெரியப்பன் கோஷ்டியில் பல தலைகள் உருளும், அரிவாள்கள் தீட்டப்பட்டன, பஞ்சாயத்து தலைவர் வீட்டிலேயே (பெரியப்பனுக்கு ஒரு வகையில் இவர் ஆதரவும் கூட) பெரியப்பன் கோஷ்டி படுத்துக் கொண்டது, அதிகாலை நாலரை மணிக்கு வெளியில் மூத்திரம் விட வீட்டை வெட்டி வெளியே வந்தான் பெரியப்பன் கோஷ்டியிலிருந்து ஒருவன், அந்த நேரத்தில் யாரோ சர சர வென இருட்டில் ஓடும் சத்தம் கேட்க, "யாருடி அது, யாருடி" என்று கத்தியபடி குரல் கொடுக்க, பெரியப்பன் கோஷ்டி சர சர வென வெளியே வர அங்கே ஓடிக்கொண்டிருந்தது பெரியமாமன், என்ன செய்கிறார்கள் என அதிகாலையில் உளவு பார்க்க வந்திருந்தார், நிமிட நேரத்தில் எல்லாம் முடிந்தது, அரிவாள்களால் குதறப்பட்ட மாமன் மண்ணில் வீழ்ந்தார், சில மீட்டர் தூரத்தில் இருந்த மாமன் வீட்டிற்கு மாமனின் அலறல் எட்டியது, என்ன ஏதென்று சற்றும் நிதானிக்காமல் அடுத்தடுத்து மாமனின் இரு தம்பிகளும் வேகமாக ஓடிவர இருவரையும் வெட்டி எறிந்தது பெரியப்பன் கோஷ்டி, அதில் ஒருவர் இறக்க, ஒருவர் பிழைத்துக் கொண்டார்.

இரண்டு கொலைகளை சில நிமிடங்களில் செய்த பெரியப்பன் கோஷ்டி உடனடியாக கள்ளகுறிச்சி சங்கராபுரம் சாலையை நோக்கி ஓடினார்கள், அனைவரும் பேருந்தில் ஏறும் முன் பெரியப்பன் தன் கோஷ்டியை பார்த்து சொன்னது "நல்லா கேட்டுக்குங்க டி, நம்ம மச்சானுங்க செத்துட்டானுங்க, சொந்தத்தில எழவு வுழுந்துடிச்சி, எவனும் பதினாறு நாளைக்கு தலைக்கு எண்ணெய் வக்காதிங்க, கசப்பு சாப்பிடாதிங்க, எல்லாம் எங்கனயாவது தலமறவாயிருங்கு பொறவு பாக்கலாம்" (கசப்பு என்று குறிப்பிடப்படுவது கசாப்பு அதாவது அசைவம்) என்று கூறியபடி தப்பியோடினர்.

ஊரில் உள்ள ஆண்,பெண் என அத்தனை பேரும் ஏரிகளிலும் கருவ காட்டுக்குள்ளம் பதுங்கி கொள்ள ஊரின் உள்ளே புகுந்த காவல்துறை நடக்கவே சிரமப்பட்ட எழுபதுக்கும் மேல் வயதுள்ள கிழடுகளையெல்லாம் சிறைபிடித்து உள்ளே வைத்து நடத்திய வன்முறையில் வெளியில் வந்த சில நாட்களிலேயே அவர்களில் சிலர் இறந்த கதையும் உண்டு.

தன் கணவனை கொன்ற அண்ணனை பழிவாங்க சபதமேற்றார் தங்கை, ஆனால் நல்ல வேளையாக அதன் பிறகு இரு குடும்பங்களுக்கிடையில் நடந்த திருமண உறவினால் தொடர் கொலைகள் விழாமல் தடுக்கப்பட்டன.

நிஜம் - 2

அந்த சாலையில் நின்றது தனியார் பேருந்து, பின் படிகட்டி வழியாக இறங்கிக்கொண்டிருந்தார் அந்த பாட்டி, அந்த பாட்டி இறங்கும் முன்பே வண்டி எடுக்கப்பட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்து இலேசான காயமடைந்து விட்டார், இதைப்போய் ஊரில் சொல்ல, அந்த தனியார் பேருந்து திரும்பிவருவதற்காக ஒரு கோஷ்டி காத்திருந்தது. அதே பேருந்து திரும்பி வந்தவுடன் அதில் ஏறினார்கள் இந்த கோஷ்டியினர், வண்டி வேகமெடுத்து செல்ல ஓட்டுனரை நெருங்கிய சிலர் பேருந்தை ஓட்டுக்கொண்டிருந்த ஓட்டுனரின் கைகளை சட்டென்று பிடித்து பின்னால் கட்டிவிட்டனர், அவர்கள் கைகளை கட்டிய சமயம் வண்டி நின்று கொண்டிருக்கவில்லை ஓடிக்கொண்டிருந்தது, வண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது, ஓட்டுனரின் கைகளை கட்டிய கோஷ்டிக்கும் பலமான அடி, வண்டி கவிழ்ந்ததில் ஒரு உயிரிழப்பு, அதே பேருந்தில் காலையில் தான் திருமணம் முடிந்து ஊருக்கு சென்று கொண்டிருந்த திருமண கோஷ்டியிலிருந்த மாப்பிள்ளை உயிரிழந்துவிட்டார்.

தங்கையின் கணவனை மச்சான் என்றும் பார்க்காமல் வெட்டி கொன்றுவிட்டு எழவு விழுந்துவிட்டது அதனால் தலைக்கு எண்ணெய் வைக்காதீர்கள் என்பவர்களை என்ன சொல்வது?

ஓடும் வண்டியின் ஓட்டுனரின் கைகளை கட்டினால் தானும் சேர்ந்து விபத்து அடைவோம் என்பது கூட தெரியாமல் ஓட்டுனரின் கைகளை கட்டியவர்களை என்ன சொல்வது?

அறிவுகெட்ட மடையன்கள் என்று கூறுவதா? முரட்டு பசங்க என்று கூறுவதா? எப்படி இவர்களுக்கு இத்தனை விழிப்புணர்ச்சியில்லாமல் போனது? எப்படி இவர்களுக்கு இத்தனை அறியாமை?

இவர்களை அறிவுகெட்ட மடையன்கள் , காட்டான்கள் என்று கூறினால் இப்படி அவர்கள் இருந்ததற்கு இருப்பதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா? சமுதாயத்தின் பங்கு இதில் எத்தனை? அவர்கள் இப்படி அறியாமையாக இருக்க யார் காரணம்? ஏன் காலம் காலமாக இந்த அறியாமை? விழிப்புணர்ச்சியின்மை? கல்வியின்மை?

இத்தனை அறியாமையுடன் இருக்கும் மக்களை எத்தனை எளிதில் பிரித்தாள முடியும், எத்தனை எளிதில் சுரண்டமுடியும், இது தான் காலம் காலமாக நடந்து வருகின்றது, இவர்களின் அறியாமையை பயன்படுத்தி சுரண்டலும் , சுரண்டுவதற்காகவே இவர்களை விழிப்புணர்சியில்லாமலும் வைத்திருக்கின்றனர், இதில் அரசியல்வாதிகள், உள் சாதி பணக்காரர்கள், வேற்று சாதி பணக்காரர்கள் என அத்தனை பேரும் அடக்கம்.

அந்த கிராமத்திலிருந்து படித்து வெளிவருபவர்களும் ஊரை மொத்தமாக தலைமுழுகிவிடுகின்றனர், இருப்பது ஒரு பள்ளிக்கூடம் அதுவும் ஐந்தாவது வரை மட்டுமே, மதிய உணர்விற்காகத் தான் அந்த பள்ளியே நடக்கின்றது, சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் அந்த ஊர் மாணவர்கள், அந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஏழெட்டு ரசிகர்மன்றங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை, தற்போது விஜயகாந்த் மாநாட்டிற்கு கைக்காசை செலவழித்து சென்று வந்துள்ளனர் சிலர்.

அவன் அப்படித்தாம்லே, அவன் காட்டானாத்தான் இருந்தான், அப்புடித்தான் வச்சிருந்தாங்க, இப்போதான் முக்கி முனகி வரான் அதுக்குள்ள காட்டானுங்க, முரடனுங்க, முட்டாபயலுங்கனு சொல்லி அவனுங்களை அப்படியே இருக்க வச்சிட கூடாது. இந்த பயபுள்ளைகளும் அந்த பயபுள்ளைகளும் இப்போதான் அடிச்சிக்காம இருக்கனும்னு நெனக்கிறான்க, அதுக்குள்ள நேத்து நீ அடிச்சிக்கிட்டியே, முந்தா நாள் வெட்டிக்கிட்டயே இன்னைக்கு என்ன பச்சோந்தி, செவப்போந்தினு சொன்னா அவனுங்க என்ன செய்வாங்க, வேணாம்யா எது சரி, எது தப்புனு அலசி ஆராய்ஞ்சி பாக்குற அளவுக்கு அவனுங்களுக்கு புத்தியில்லதான், அந்த அளவுக்கு நாகரீகமில்லாதவங்க தேன், டை கட்டிக்கிட்டு "வாட் நான்சன்ஸ்" அப்படினு மத்தவங்க பேச வரதுக்கு எத்தனை வருசம் ஆச்சி, அதுல கொஞ்சமாவது நேரம் தர்றது இல்லையா, அதுக்குள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு போயி புடுங்கினா என்ன செய்வான் அவன்.

ஏதோ ஒரு படத்துல விவேக் காமெடி அது,

"எலேய் நம்ம சங்கு சாமிய பத்தி தப்பா பேசுறான், நீ என்னலே சிரிக்கிறனு" கத்தியால குத்திட்டு
"அடேய் பங்காளி அவசரப்பட்டு செத்துட்டியேடா" அப்படினு அழும்போது எல்லாம் சிரிச்சாங்க, ஆனால் நான் மட்டும் சிரிக்கல ஏன்னா எனக்கு அதன் வலி தெரியும்.

தேவர் மகனில் கமல், சிவாஜி பேசிய வசனத்தை கொஞ்சம் நெனச்சி பாக்கலாம்


சிவாஜி : "வெட்டருவா வேல்கம்ப தூக்கிட்டு வெற்றிவேல் வீர வேலுன்ணு அலஞச பயலுக திடீர்ன்னு அவன கூப்பிட்டு விஞ்ஞானம் கத்துக்க வான்னா அவன் எப்படி வருவான் மெதுவாத் தான் வருவான்"

கமல்: "மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போலயிருக்கே?"

சிவாஜி :" போ..செத்து போ..யாரு வேணாங்குறது .எல்லா பய புள்ளையும் ஒரு நாள் செத்து போக வேண்டியது தான் .ஆனா சாகுறதுக்குள்ள நாம என்ன சாதிச்சோம்கிறது தான் முக்கியம் இன்னிக்கு நீ வெதை போடுற வெத வெதச்சவுடன பழம் சாப்பிட முடியுமோ ? நாளைக்கு உன் மகன் சாப்புடுவான் .அப்புறம் அவன் மகன் சாப்புடுவான் .அத பாக்குறதுக்கு நீ இருக்க மாட்ட .ஆனா வெத..நீ போட்டது .இது என்ன ஒவ்வொருத்தனுக்கும் பெருமையா .இல்ல..கடம"

63 பின்னூட்டங்கள்:

said...

உண்மை குழலி.

இது போல் பல சம்பவங்கள் எங்கள் ஊரிலும் நிகழ்ந்திருப்பதை உன்னுடன் நேரில் விவாதித்ததாக நினைவு.

//அந்த கிராமத்திலிருந்து படித்து வெளிவருபவர்களும் ஊரை மொத்தமாக தலைமுழுகிவிடுகின்றனர்.//

இந்த வரிகள் படிக்கையில் என்னையும் குற்ற உணர்வு ஆட்படுத்தியது. ஆனால் அவர்களை திருத்துகிறேன் என்று களத்தில் இறங்கினால் உண்டாகும் பிரச்சனைகளை(அவற்றை ஒரு பதிவாகவே போடலாம்) நினைத்தால், நமக்கேன் இந்த வீண்வம்பு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

said...

குழலி.. ரொம்பநாள் உங்க பதிவையெல்லாம் படிச்சிகிட்டு இருக்கும்போது உறுத்திக்கொண்டு இருந்த கேள்வி..

//அந்த கிராமத்திலிருந்து படித்து வெளிவருபவர்களும் ஊரை மொத்தமாக தலைமுழுகிவிடுகின்றனர்.//

இதை நான் உங்களை குறை சொல்வதற்கென சொல்லவில்லை...

நான் பிறந்தது நகரத்தில், வளர்ந்த சூழ்நிலையில் ஜாதிய கொடுமைகள் காண கிடைக்காதது (இருக்குதானு முதல்ல தெரியாம இருந்தது..), அப்புறம் கல்லூரி வாழ்வும் அதே பிறந்த ஊரிலேயே, நண்பர்கள் யாரும் இப்படிபட்ட சூழ்நிலையில் வளர்ந்தவர்களே..

முதன் முறையா.. வீட்டை விட்டு வெளியே வந்து, கொஞ்சம் கொஞ்சமா வெளி உலகம் தெரிய வரும்போதுதான் அதிர்ச்சியா இருந்தது... அப்போதான் இந்த கேள்வி வரும்.. (முக்கியமா.. தமிழ்மணத்துல.. பலருடைய பதிவுகள் பார்த்த அப்புறம்தான்..)

இவுங்க இவ்ளோ குறை சொல்றாங்களே.. இவுங்க இதை சரிபடுத்த என்ன பண்ணிருப்பாங்க..

இவுங்க இவ்ளோ நியாயப்படுத்துறாங்களே.. அவுங்க எவ்ளோ செஞ்சிருப்பாங்க முன்னேற்றத்துக்குனு..

அந்த பதிவுல அத பின்னூட்டமிடலாமுனு நெனைப்பேன்.. ஆனா அடுத்த நொடியே.. வந்துட்டான் குறை சொல்லனு பின்னாடியே வசவு பாட நாலு பேர் வருவாங்க.. அப்புறம் நான் கேட்க வந்த நோக்கமே மாறிடும்..

அந்த தயக்கம் இந்த பதிவு படிச்சதும் காணம போயிடுச்சு..

அந்த அந்த சூழ்நிலையில் இல்லாத வரை.. எல்லோரும் வாய்கிழிய.. குறை சொல்லலாம்.. அந்த சூழ்நிலையில் உள்ளவுங்களுக்குதான் அதோட வலிதெரியும்னு.. முக்கியம.. உங்க சில பதிவுகள் வெளிக்காட்டியது..( ஒரு நண்பனோட மரணத்துக்கு அவன் உடலுடன் அவன் ஊருக்கு போனது, இராமதாஸ், திருமா இணைப்பு பற்றிய உங்கள் பதிவு மற்றும், இராமசந்திரன் உஷா அவர்களுக்கு இட்ட பதில் பின்னூட்டம்..)...

அருள்குமார் சொன்னது முகத்திலறையும் நிஜம்தான்...

உண்மையான ஆதங்கத்துடன்தான் கேக்குறேன்..ஏதேனும் உண்மையான முயற்சிகள் மேற்கொள்றாங்களா யாராவது ?!

-
செந்தில்/Senthil

said...

பீகாரில் நடந்த சிறைஉடைப்பு பற்றி, பீகார் தேர்தல் முடிவுகள் பற்றிய உங்கள் பதிவுகளும்.. மிக முக்கியமான, நிறையபேர் காணத்தவறிய கண்ணோட்டம்.. அவைகளில் பின்னூட்டமிடாவிடிலும், அவை என் கருத்தையொற்றி இருந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.. காரணம் அதைப்பற்றி பதிவுசெய்ய நேரமில்லை எனக்கு, இன்னொருவர் அனைவருக்கும் எடுத்துச்செல்கையில் சந்தோஷமே..


அந்த தேவர்மகன் படத்துல வர்ற வசனத்தோட நிஜம், ஆழம், வலி இன்னைக்கு புரியுது..-
செந்தில்/Senthil

said...

//இந்த பயபுள்ளைகளும் அந்த பயபுள்ளைகளும் இப்போதான் அடிச்சிக்காம இருக்கனும்னு நெனக்கிறான்க, அதுக்குள்ள நேத்து நீ அடிச்சிக்கிட்டியே, முந்தா நாள் வெட்டிக்கிட்டயே இன்னைக்கு என்ன பச்சோந்தி, செவப்போந்தினு சொன்னா அவனுங்க என்ன செய்வாங்க, வேணாம்யா எது சரி, எது தப்புனு அலசி ஆராய்ஞ்சி பாக்குற அளவுக்கு அவனுங்களுக்கு புத்தியில்லதான், அந்த அளவுக்கு நாகரீகமில்லாதவங்க தேன், டை கட்டிக்கிட்டு "வாட் நான்சன்ஸ்" அப்படினு மத்தவங்க பேச வரதுக்கு எத்தனை வருசம் ஆச்சி, அதுல கொஞ்சமாவது நேரம் தர்றது இல்லையா//

இது தாங்க பலபேருக்கு புரியவேண்டியது .அதுக்கு கீழ கொடுத்திருக்க நம்ம பெருசு டயலாக் ரொம்ப பொருத்தம்.

//பெண்களை "எலே" என்றும் கூப்பிடுவார்கள்//
இது என்னது ஓய்? எங்கூருல ஆம்பிள்ளய தான 'ஏல-ம்பாவ!

said...

//இவுங்க இவ்ளோ குறை சொல்றாங்களே.. இவுங்க இதை சரிபடுத்த என்ன பண்ணிருப்பாங்க..

இவுங்க இவ்ளோ நியாயப்படுத்துறாங்களே.. அவுங்க எவ்ளோ செஞ்சிருப்பாங்க முன்னேற்றத்துக்குனு..
//
ப்ளாக் எழுதுபவர்களை பற்றி என் நண்பன் சமீபத்தில் வைத்த கடுமையான விமர்சனம் இது....

இப்போது நீங்களும், சரியான கேள்விதான்.

தனி மனிதர்களாக கிராமங்களுக்கு நேரடியாக சென்று தொண்டூழியம் செய்ய வேண்டும் என்று கூட தேவையில்லை, நமக்கு தெரிந்த நாலு பேருக்கு இதை படிப்பா, இதை செய்யுங்கபா, ஏன்யா இப்படி இருக்கிங்க, முடிந்தால் சில உதவிகள் என்று செய்தாலும் கூட நல்லது, தற்போதுள்ள சுயநல வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஒவ்வொருவரும் செய்தாலே ஓரளவிற்கு விழிப்புணர்ச்சியை கொண்டுவரலாம்.

மற்றபடி இன்னும் நிறைய விழிப்புணர்ச்சி வரவேண்டும்.

said...

//பெண்களை "எலே" என்றும் கூப்பிடுவார்கள்//
இது என்னது ஓய்? எங்கூருல ஆம்பிள்ளய தான 'ஏல-ம்பாவ!

ஜோ ஆமாம் அந்த ஊரில் பெண்களை எலேய் என்றும் ஆண்களை டி என்றும் கூப்பிடுவார்கள்

said...

நன்றி ஜோ...

said...

மிக அற்புதமான பதிவு. பாராட்டுக்கள்.

said...

தப்பா புரியப்பட்டிருந்தா மன்னிச்சிருங்க.. நான் என் பின்னூட்டதுல குறிப்பிட்டிருந்த விஷயத்தை ஒரு தனிப்பட்ட நபர் மேலயோ, சமுகத்து மேலயோ அதை குற்றச்சாட்டா வைக்கல..

அத்தகைய விஷயங்கள் பத்தி தெரியாததால.. கேட்டு தெரிஞ்சிக்கதான் கேட்டேன்..

ஆமா குழலி.. நிஜம்னு பார்க்கையில் அதுல நிறைய பிரச்சனை இருக்கு என்ன பண்ணனு சொல்லி ஆதங்கப்படுறதோட இல்லாம.. அந்த மக்களோட அடுத்த தலைமுறைக்கு நல்ல படிப்பறிவு மற்றும் உலகறிவு கொடுத்தோம்னா சுயமா இருப்பாங்கல்ல.. இதத்தான் இப்போ நண்பர்கள் நாங்க பேசிகிட்டு இருப்போம்.. செயல்வடிவம் பெற நேரம் ஆகும்னு நினைக்குறேன்..

நண்பர் சிவா மற்றும் அவரோட குழுவினரும் இந்த எண்ணத்தோட சிறப்பான வேலை செஞ்சிகிட்டு இருக்காங்க..

-
செந்தில்/Senthil

said...

ஆனா சாகுறதுக்குள்ள நாம என்ன சாதிச்சோம்கிறது தான் முக்கியம்

ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டிய அற்புதமான வரிகள்!

நல்ல பதிவு. தொடருங்கள்.

அன்புடன் -இறை நேசன்.

said...

குழலி,

நல்ல பதிவு, பாராட்டுக்கள்

said...

குழலி இன்று நீங்கள் நல்ல நிலைமைக்கு வந்துள்ளீர்கள் என்றால் அதற்கு யார் காரணம்? தலைவன் என்று ஒருவனை
பீடத்தில் வைத்து வழிப்பட ஆரம்பித்தால், அவனால் ஒரு குலம் முன்னேறும் என்று நம்புகிறீர்களா? தன்னலம் அற்ற தலைவர்களை, உலகம் முழும் எடுத்துக் கொண்டாலும் இன்றைய தேதியில் சொல்வதைப் போல நடந்துக் கொள்ளும் ஒருவனை கட்டுங்கள் பார்ப்போம். கொஞ்சம் சுயசிந்தனையை வளர்த்துக் கொண்டால் எந்த சமூகமும் முன்னேறும். இது என் எண்ணம்
மட்டுமே, தயவு செய்து இதில் உள்குத்து இருப்பதாய் கற்பனை செய்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சாதி, மதம், இனம் என்று எவ்வளவு நாட்கள் மனிதனில் பிரிவினை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.

said...

"ஊரில் பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஏழெட்டு ரசிகர்மன்றங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை, தற்போது விஜயகாந்த் மாநாட்டிற்கு கைக்காசை செலவழித்து சென்று வந்துள்ளனர் சிலர்.

அவன் அப்படித்தாம்லே, அவன் காட்டானாத்தான் இருந்தான், அப்புடித்தான் வச்சிருந்தாங்க," குழலி! தொலை நோக்கு பார்வையோட தற்போதைய சில பதிவுகள் ரொம்பவும் சந்தோஷமா அமைஞ்சிருக்கு. வாழ்த்துக்கள்!

said...

மனசையும், மூளையையும் ஒரு சேர நெருடற மாதிரி இருக்கு. இன்னும் எத்தனை காலம் நமக்குத் தேவையோ, தெரியலையே!

said...

இந்த வாரம் நீங்களா! கலக்குங்க குழலி..

மொதல்ல பதிவுகளை படிச்சுட்டு வரேன்! :)

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி,

//தனி மனிதர்களாக கிராமங்களுக்கு நேரடியாக சென்று தொண்டூழியம் செய்ய வேண்டும் என்று கூட தேவையில்லை, நமக்கு தெரிந்த நாலு பேருக்கு இதை படிப்பா, இதை செய்யுங்கபா, ஏன்யா இப்படி இருக்கிங்க, முடிந்தால் சில உதவிகள் என்று செய்தாலும் கூட நல்லது, தற்போதுள்ள சுயநல வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஒவ்வொருவரும் செய்தாலே ஓரளவிற்கு விழிப்புணர்ச்சியை கொண்டுவரலாம்.//

உண்மையான சமுதாயச் சிந்தனை உள்ள அரசியல் தலைவர்கள் இப்போது இல்லை.நீங்கள் பிறந்த ஊரில் அல்லது உங்கள் பார்வையில் உள்ள மக்களுக்கு சாதி/மத/இன/கட்சி வேறுபாடு இன்றி ஒரு நல்ல வழிகாட்டியாக(Mentor) இருங்கள். அதுவே நல்ல ஆரம்பம்.

உங்களின் பதிவுகள் பெரும்பாலும் ஒரு கட்சியின் சார்பாகவும் ஒரு இனத்தின் சார்பாகவும் மட்டுமே இருப்பதாக எனக்குப் படுகிறது.பல்லவர்கள் பற்றிய உங்களின் பார்வையும் வரலாற்று சார்பாக மட்டும் இல்லாமல் அதை ஒரு இனத்துடன் தொடர்புபடுத்த அல்லது தொடர்பு படுத்திக் காட்டவேண்டும் என்ற ஒரு முயற்சியின் ஆரம்பமாகவே எனக்குத் தெரிகிறது. இந்த எனது கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

//"ஊரில் பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஏழெட்டு ரசிகர்மன்றங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை, தற்போது விஜயகாந்த் மாநாட்டிற்கு கைக்காசை செலவழித்து சென்று வந்துள்ளனர் சிலர்.//

உருப்படாத சினிமா இரசிகர் மன்றங்களைக் கண்டிக்கும் நீங்கள், அதுவே உங்களின் சார்பு கட்சித் தொண்டர்களின் செயல்பாடுகள் என்றால் நழுவிப் போய் விடுவதாகவே எனக்குப்படுகிறது.அதே பகுதி மக்கள் உங்களின் பார்வையில் நல்ல கட்சியாகத் தெரியும் ஒரு அரசியல் கட்சிக்கும் அதே கைக்காசைப் போட்டு போயிருக்கலாம்.

ஒரு இனம்,கட்சி பற்றி உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கலாம் அது தவறல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். அது தான் உண்மை.நடு நிலைமை என்பது கிடையாது. அப்படிச் சொன்னால் அது ஏமாற்று அல்லது வேசம். ஆனால் இனம் ,கட்சி என்பதை மட்டுமே வைத்து அல்லது அதை மட்டும் முன்னிறுத்தி உங்களது எல்லா செயல்களும் அமைந்துவிடக்கூடாது. நீங்கள் போகும் பாதை அவ்வாறே தெரிகிறது.

உங்களால் உங்கள் பகுதி மக்கள் நன்மையடையட்டும். சினிமா இரசிகர் மன்றங்களில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதோடு நிறுத்திவிடாமல் சுயநல அரசியல் கட்சிகளில் இருந்தும் காப்பாற்றுங்கள்.

said...

மனதை நெகிழ வைக்கும் ஒரு சிறப்பான பதிவு.
சாதி, இனம் என்ற தடைகளைக் கடந்து, பொது நல நோக்குடன் நீங்கள் எழுதப் போகும் காலம் விரைவில் வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
அந்தப் பாதையிலேயே செல்ல என் வாழ்த்துக்கள்.
இன்னும், அரசியல் தலைவர்களினால் மட்டுமே ஒரு தெளிவு பிறக்கும் என்ற உங்கள் உட்கருத்து தொனிக்கும் ஏடுகளைத் தவிர்க்க முயலுங்கள்.
நான் முன்னொரு பின்னூட்டத்தில் சொல்லியது போல், 'அன்பு நெறி' ஒன்றினால் மட்டுமே உயர இயலும்.
வளர்க உம் பார்வை!

said...

கிராமப்புற வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்தீர்கள் குழலி. போலீசே புகவேண்டிய அளவுக்குப் பிரச்னைகளைக் கொண்டு செல்லாமல் சுமூகமாய் பஞ்சாயத்து செய்யும் இன்னும் பல நல்ல கிராமங்களை நான் பார்த்திருக்கிறேன். சாதியின் கொடுமையால் ஒரு தனிமனை கட்டிவைத்து அடித்த கிராமங்களும் இருக்கின்றன.

said...

///சிவாஜி : "வெட்டருவா வேல்கம்ப தூக்கிட்டு வெற்றிவேல் வீர வேலுன்ணு அலஞச பயலுக திடீர்ன்னு அவன கூப்பிட்டு விஞ்ஞானம் கத்துக்க வான்னா அவன் எப்படி வருவான் மெதுவாத் தான் வருவான்"

கமல்: "மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போலயிருக்கே?"

சிவாஜி :" போ..செத்து போ..யாரு வேணாங்குறது .எல்லா பய புள்ளையும் ஒரு நாள் செத்து போக வேண்டியது தான் .ஆனா சாகுறதுக்குள்ள நாம என்ன சாதிச்சோம்கிறது தான் முக்கியம் இன்னிக்கு நீ வெதை போடுற வெத வெதச்சவுடன பழம் சாப்பிட முடியுமோ ? நாளைக்கு உன் மகன் சாப்புடுவான் .அப்புறம் அவன் மகன் சாப்புடுவான் .அத பாக்குறதுக்கு நீ இருக்க மாட்ட .ஆனா வெத..நீ போட்டது .இது என்ன ஒவ்வொருத்தனுக்கும் பெருமையா .இல்ல..கடம"///

enakkau Romba pidichcha vasanam! Thanks kuzali. Good Post!

said...

வன்முறை என்பது பண்பாடு,கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. போற்றிப்பாடடி
பெண்ணே, தேவர் காலடி மண்ணே என்பதிலிருந்தே அது துவங்குகிறது. ஒரே ஜாதி அல்லது உறவுக்காரர்களாக இருந்தாலும் ஏன் பிரச்சினைகள் வன்முறை மூலம் தீர்க்கப்படுகின்றன.
கொஞ்சம் யோசித்தால் வன்முறை மூலம்தான் நியாயம் பிறக்கும் அல்லது கிடைக்கும் என்ற
மனோபாவமும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்பது புரியும். பண்பாட்டினை மீறுவோர்
வன்முறையால் தண்டனைக்குள்ளாவதும் இந்த நியாயம் குறித்த புரிதலுடன் தொடர்புடையது.
சில பகுதிகளில் வேற்று ஜாதி பையன்களை காதலிக்கும் பெண்களை நெருங்கிய உறவினர்களே
கொல்வதாக பத்திரிகைகள் எழுதியுள்ளன. இங்கு ஒழுங்கு, முறை என்பதே வன்முறையுடன்,
வன்முறை மூலம் நிலை நாட்டப்படும் உரிமைகளுடன் பிணைந்திருக்கிறது. இதைப் புரிந்து
கொள்ள வேண்டும். ஒரு புறம் நவீனமயமானாலும் மறுபுறம் ஜாதிக்கட்டுப்பாட்டுகள் அப்படியே
தொடரும் போது ஒரு முரண் ஏற்படுகிறது. ஆள் திரட்டல், ஜாதிக்களுக்கு கிளைகள் ஏற்படுத்துதல், அரசியலில் ஜாதிய செல்வாக்கினை பயன்படுத்துதல் என்று பல வழிகளில் ஜாதிய அமைப்பும்,
அதன் ஒழுங்கமைப்பும் தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் போது வன்முறை தொடரத்தான் செய்யும்.
அதன் வடிவங்கள் மாறலாம். கல்வி மட்டும் இதை மாற்றிவிடாது.அப்படி எதிர்பார்ப்பதும் வீண்.
ஏனெனில் ஜாதி ரீதியான அரசியல், ஜாதி அமைப்புகளில் கல்வி பெற்றிருப்போரும் பெரும் பங்கு
வகிக்கிறார்கள்.

said...

//தலைவன் என்று ஒருவனை
பீடத்தில் வைத்து வழிப்பட ஆரம்பித்தால், அவனால் ஒரு குலம் முன்னேறும் என்று நம்புகிறீர்களா?
//
யாரிடமாவது நம்பிக்கை வேண்டியிருக்கிறது அவன்களுக்கு, மற்றபடி பின்னூட்டத்தில் இடும் அளவிற்கு சிறியதாக எழுதினால் சரியாக சொல்லமுடியாது, முடிந்தால் பதிவாக இடுகின்றேன் நேரம் கிடைத்தால்.

//கொஞ்சம் சுயசிந்தனையை வளர்த்துக் கொண்டால் எந்த சமூகமும் முன்னேறும்//
என்னங்கக்கா நான் சொன்னது ஒரு கிராமத்தின் இரண்டு நிஜங்கள் மட்டுமே, எத்தனை ஆயிரம் கிராமங்கள், எத்தனை நிஜங்கள் இருக்கும் இதில் சிந்தனையில் சுயம் எங்கே வரும்? சுயசிந்தனைகூட யாராவது இலேசாகவாவது தூண்டிவிட வேண்டும்

//சாதி, மதம், இனம் என்று எவ்வளவு நாட்கள் மனிதனில் பிரிவினை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.
//
நானும் இப்படி ஆதங்கப்பட்டு ஜென்டில்மேனாக இருக்கலாம் ஆனால் உண்மை அப்படியில்லையே என்ன செய்வது.

said...

//பல்லவர்கள் பற்றிய உங்களின் பார்வையும் வரலாற்று சார்பாக மட்டும் இல்லாமல் அதை ஒரு இனத்துடன் தொடர்புபடுத்த அல்லது தொடர்பு படுத்திக் காட்டவேண்டும் என்ற ஒரு முயற்சியின் ஆரம்பமாகவே எனக்குத் தெரிகிறது.
//
இந்த குற்றச்சாட்டை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை...

எல்லோருக்கும் கபில்தேவ் பிடித்த நேரத்தில் எனக்கு கவாஸ்கரை பிடித்தது.

எல்லோருக்கும் டெண்டுல்கர் பிடித்த நேரத்தில் எனக்கு டிராவிடை பிடித்தது

எல்லோருக்கும் சோழர்கள் மீது பிரமிப்பு இருந்த நேரத்தில் எனக்கு பல்லவர்கள் மீது, அதற்கு காரணமும் சொல்லியிருப்பேன், வெற்று புனைவு கதைகளிலிருந்து நான் வரலாற்றை படிப்பதில்லை, இதை தவிர வேறு எந்த நோக்கமுமில்லை.

பத்திரிக்கை செய்திகளையே நம்பாமல் பிற பத்திரிக்கைகளையும் அதன் பின்புலத்தையும் வைத்து செய்திகளை எடை போடுகின்றேன், எனவே கதைகளை அப்படியே எடுத்துக்கொள்வதில்லை.

நன்றி

said...

மிக அருமையான ஆக்கம். வெகு நாட்கள் கழித்து நட்சத்திரப் பதிவில், சமுதாய விழிப்புணர்வை எதார்த்தமான பார்வையில் காட்டியிருக்கிறீர்கள். இன்றைய தலைமுறையில் பலரும் தன் மக்களுக்கு தன்னால் இயன்றதை செய்ய முயலும் நேரமிது. நம் அரசியல் அமைப்பும், இவர்களின் அறியாமையில் குளிர்காயும் சில ஒட்டுன்னிகளும் முதல், இளைய தலைமுறையை முதல் அடி எடுத்து வைக்க தடுக்கிறது. பொருளாதார நிலையில் முன்னேறிய இளைய தலைமுறை, மனத்தளவிலும் வலிமைப்பெற்று சில கடமைகளையும் அவர்கள் கனவுகளையும் நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

said...

//அந்த கிராமத்திலிருந்து படித்து வெளிவருபவர்களும் ஊரை மொத்தமாக தலைமுழுகிவிடுகின்றனர்.//


//தனி மனிதர்களாக கிராமங்களுக்கு நேரடியாக சென்று தொண்டூழியம் செய்ய வேண்டும் என்று கூட தேவையில்லை, நமக்கு தெரிந்த நாலு பேருக்கு இதை படிப்பா, இதை செய்யுங்கபா, ஏன்யா இப்படி இருக்கிங்க, முடிந்தால் சில உதவிகள் என்று செய்தாலும் கூட நல்லது, தற்போதுள்ள சுயநல வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஒவ்வொருவரும் செய்தாலே ஓரளவிற்கு விழிப்புணர்ச்சியை கொண்டுவரலாம்.//

Chumma nacchunnu sonneenngha

said...

தங்கையின் கணவனை மச்சான் என்றும் பார்க்காமல் வெட்டி கொன்றுவிட்டு எழவு விழுந்துவிட்டது அதனால் தலைக்கு எண்ணெய் வைக்காதீர்கள் என்பவர்களை என்ன சொல்வது?

ஓடும் வண்டியின் ஓட்டுனரின் கைகளை கட்டினால் தானும் சேர்ந்து விபத்து அடைவோம் என்பது கூட தெரியாமல் ஓட்டுனரின் கைகளை கட்டியவர்களை என்ன சொல்வது?//

ஆணியின் தலையில் நச்சுன்னு அடிச்சா மாதிரியிருக்கு உங்க கேள்வி.

நானும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். திருமணத்திற்கு பெண் பார்க்கும்வரை ஊர்பக்கம் சென்றதே இல்லை. நான் அதுவரை வேலை பார்த்த இடங்களும் சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்கள்தான்.

கிராமப்புற வாழ்க்கைமுறையை முதல் முதலாய் பார்த்து அனுபவித்தது திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் கழித்து சென்னை கிளையில் இருந்து மாற்றலாகி தஞ்சை சென்றபோதுதான்.

நீங்கள் கூறிய நிஜங்கள் 1,2.. இதைப்போல பல நிஜங்களை முதன் முதலாய் கண்டபோது கிழக்கே போகும் ரயில் விஜயனின் காரக்டருக்கு வருவதுபோன்ற ஆத்திரமும் ஆதங்கமும்தான் என் மனதிலும் தோன்றியது. ஒரு சமயத்தில் 'யோவ் மானேசரு நீரு வெளியூரு ஆளு. உம்ம சோலிய பாத்துக்கிட்டு ஆடு வளக்கறதுக்கு, கோழி வளக்கறதுக்கு, மாடு,எருமை வாங்குறதுக்கு கடனை குடுத்தமா, வசூலிச்சமான்னு போயிரணும். அத வுட்டுட்டு நாட்டாமை பண்றேன் எறங்கினீரு ஊரு போய் சேரமாட்டீரு. சொல்லிப்புட்டேன்.'என ஊர் தலைவரின் எச்சரிக்கைக்கு ஆளாகி இருக்கிறேன். இதில் ஓரிரண்டை என் 'திரும்பிப் பார்க்கிறேன்' தொடரில் எழுதலாம் என்றிருந்தேன்.

அச்சாய், அதே சாயலில் இருக்கிறது உங்களின் இன்றைய பதிவு. மனத்தை கலக்கிப் போட்டுவிட்டது.

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது? என்று நானும் நினைத்ததுண்டு..

வரும், விடிவு வரும்.. நம் காலம் முடிவதற்குள் வருமா என்பதுதான் கேள்வி!

வாழ்த்துக்கள் குழலி.

said...

வணக்கம் குழலி அண்ணாச்சி.

இந்த வார நட்சத்திரமா அசத்துங்க.

said...

படிப்பால் மட்டும் விழிப்புணர்ச்சி வருவதில்லை, சமூக மாற்றம் என்பது வீட்டு பெண்களால் வரும் என்பது என் கருத்து. இன்று நான் பார்த்த அனைத்து மட்ட பெண்களிடமும் தன் குழந்தைகளை, பெண் உட்பட படித்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது. ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுபவர்களைப் பார்ப்பது அரிதாய் உள்ளது. இவை எல்லாம் மெல்ல மெல்ல வரும் மாற்றங்கள், இதை எந்த குருமார்களோ, தலைவர்களோ சொல்லி நடக்கவில்லை.

said...

நிஜங்களின் வேதனையை ஆழமாக பதிந்து இருக்கிறீர்கள். நகரத்து வாழ்க்கையின் சுகத்தில் எல்லாம் நலமே என்றிருப்போருக்கு ஒரு அதிர்ச்சி பதிவு.
பாராட்டுக்கள்.

said...

அருமையான பதிவு. எங்களூர் உட்பட இன்னும் பல இடங்களில் ஏதாவது ஒருவகையில் இதே நிலைமைதான் இன்றும்...

said...

குழலி, நல்ல பதிவு. படிப்பு மிகவும் தேவை. ஆனால் படிப்பால் மட்டுமே அனைத்தும் வந்து விடுவதில்லை. பாருங்கள். இந்த வலைப்பூக்களில் எல்லாரும் படித்தவர்கள்தான். ஆனாலும் பலபொழுதுகளில் நாகரீகமில்லாமல் பின்னூட்டங்கள் இடுவதும் தனிநபர்/மொழி/மத/இனத் தாக்குதல் நடத்துவதும்.

ஏட்டுக் கல்வியோடு அறிவும் வளர வேண்டும். அதற்குத் தேவை ஓரிடத்திலேயே இல்லாமல் இருப்பது. நாலு இடங்களுக்குச் சென்று பார்ப்பதும் பலன் கொடுக்கும். நால்வருடன் பழகினால்தான் நல்லது கெட்டது இன்னமும் விவரமாகத் தெரியவரும். தெரிய வேண்டும்.

படித்தவர் படிக்காதவர்கள் என்று எங்கும் இருக்கும் பிரச்சனையின் ஒரு பகுதியை மிகவும் உணர்சியோடு சொல்லியிருக்கின்றீர்கள். உங்கள் எழுத்து மெருகேறி வருகின்றது. சந்திப்பிழைகளை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

said...

படித்து முடித்தபின் பெருமூச்சு வருகிறது. நாட்டுப்புறங்களில் அங்கங்கே தென்படும் முரண்பாடுகளை, குமுகாயத்தின் சீரழிவுகளை, ஒரு பதம் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். இதைப் புரிந்து கொள்ளுவதில் நகரத்தாருக்கும் நாட்டுப்புறத்தாருக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கத்தான் செய்யும். நம்முடைய நோயையே இன்னும் விளங்கிக் கொள்ளாதவர்களாய்ப் பலர் இருக்கிறார்கள்.

இதில் முற்போக்கு (progressive), எழுவரல் (liberal), புரட்சியாளர் (revolutionist) என்ற அடையாளங்களின் ஒளிவட்டத்தோடு பலரும் வலம் வருகிறார்கள்.

நம் மாநிலத்தில் இருக்கும் கிழாரியக் குமுகாயத்தின் (feudal society) முரண்பாடுகளைத் தீர்க்க எத்தனிக்காமல், முதலாளியக் குமுகாயத்தின் (capaitalist society) முரண்பாடுகளைக் களைவதையும், ஆண் ஆதிக்க முரண்பாடுகளைக் களைவதையும் முன்பின்னாகப் பேசிக் குழப்பி, பட்டிமன்ற வாதங்களில் வென்றி கொள்ள முயன்று கொண்டிருக்கும் குட்டிமுதலாளியரை (petty bourgeoisie), உங்களுடைய இந்தப் பதிவு சற்றே மெய்நிலைக்குக் கொண்டுவரட்டும்.

நாம் போக வேண்டிய தொலைவு அதிகம் தான்.

மேலே சொன்ன எல்லா முரண்பாடுகளும் தீர்க்கப் படத்தான் வேண்டும் என்பதில் பெரும்பாலோருக்கு வேறுபாடு இல்லை; ஆனால் "எது தடவழி (strategy)? எது அடைவழி (tactics)?" என்பதில் தெளிவு வேண்டும். அது இல்லை என்றால் அப்புறம் வெறும் தேற்று(theoty)களைப் பேசிக்கொண்டு, விவாத மன்றங்களில் பொழுதைக் கழிக்கலாம். குட்டிமுதலாளியர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்புடன்,

இராம.கி.
ஒரு தமிழ்ப் பொதுக்கையன் (Tamil facist) :-)

said...

மதிப்பிற்குரிய இராம.கி ஐயா அவர்களுக்கு,

நீங்கள் மறைமுகமாக என்னை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு மிகவும் நன்றி. என் கருத்தை நேரடியாக எதிர்கொண்டு எழுதப்படும் தர்க்கத்தையோ, விமர்சனத்தையோதான் என்னால் எதிர்கொள்ள முடியும். உங்களின் இந்த பின்னூட்டம் அந்த வரிசையில் சேராதது மட்டுமில்லாது, நான் உங்களிடம் இருபதாக நினைத்துகொண்டிருந்த சில வெளிப்படையான குணங்களுக்கு நேர்மாறாகவும் இருப்பது வருத்தமளிக்கிறது.

ஆனால் நான் ஒரு போதும் உங்களை தமிழ் பாசிஸ்ட் என்று கருதியதில்லை. இப்போதும் கருதவில்லை. 'தமிழ் எனது மூச்சு, ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்' என்ற வரிகளுக்கு உண்மையான உதாராணமாக உங்களை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் இந்த அளவு இறங்கியதில் ஏற்பட்ட வருத்தத்தில் இதை எழுதுகிறேனே ஒழிய, பதில் சொல்லும் அளவிற்கு இதில் எந்த பொருட்படுத்தும்படியான கருத்தும் இல்லை என்பது என் எண்ணம். நன்றி!

said...

நல்ல பதிவு குழலி ..

இப்படிக்கு
பெருமையுடன் ..
விசிலடிச்சான் குஞ்சு

said...

பிழைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ராகவன், நேரக்குறைவினால் பெரும்பாலும் பிழைதிருத்தம் செய்யாமலேயே அப்படியே பதிகின்றேன் மேலும் சில இடங்களில் சந்திப்பிழை குழப்பம் எனக்கு உண்டு.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

said...

இத்தைகைய சூழல் உள்ள ஊரில் வாழ்ந்தவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பச்சாதாபப் பட மட்டுமே முடியும். சினிமாவாகப் பார்க்கும்போது ஒரு பொய்மை தெரியும், காட்சிகள் பிடித்திருந்தாலும்கூட. ஆனால் உண்மை நிகழ்வுகளைச் சொல்லும்போது அதன் நிஜம் உலுக்குகிறது.

உங்கள் பதிவுகளில் சில இனத்தவரின் சாயலும், சிலரை எதிர்க்கும் சாயலும் இருந்தாலும் கூட அது ஆழ்மனதின் காயங்களின் வெளிப்பாடாகவே இருக்கலாம். அது தவறு என்று கொள்ள முடியாது, வெளிப்பாட்டின் கனமாகக் கூட இருக்கலாம். ஆனால் அதை மாற்ற முயல்வது உங்களின் மனமுதிர்ச்சிக்கு வித்திடும். முந்தைய பதிவில் உணர்ந்ததுபோல், புற அலங்காரங்களை மாற்ற வேண்டுமோ என்று சிந்தித்தது போல், ஆழ் மனதின் கோபங்களை மறக்க முயலுங்கள். உங்கள் எழுத்தில் எப்போதும் சிறு கோபம் பின்னணியிசையாக வருவதுபோல் ஒரு தோற்றம் உண்டு. சொல்லியது தவறு எனில் மன்னிக்கவும்.

said...

குழலி,

எனக்காக நீங்கள் சொன்ன பதில்:

எல்லோருக்கும் சோழர்கள் மீது பிரமிப்பு இருந்த நேரத்தில் எனக்கு பல்லவர்கள் மீது, அதற்கு காரணமும் சொல்லியிருப்பேன், வெற்று புனைவு கதைகளிலிருந்து நான் வரலாற்றை படிப்பதில்லை, இதை தவிர வேறு எந்த நோக்கமுமில்லை.

அப்படியே இருக்கட்டும். மகிழ்ச்சி.


தப்பாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இவன் என்னடா நமக்கு சொல்கிறான் என்று.

உஷா சொன்னது:
தலைவன் என்று ஒருவனை பீடத்தில் வைத்து வழிப்பட ஆரம்பித்தால், அவனால் ஒரு குலம் முன்னேறும் என்று நம்புகிறீர்களா?

உங்களின் பதில்:
யாரிடமாவது நம்பிக்கை வேண்டியிருக்கிறது அவன்களுக்கு, மற்றபடி பின்னூட்டத்தில் இடும் அளவிற்கு சிறியதாக எழுதினால் சரியாக சொல்லமுடியாது, முடிந்தால் பதிவாக இடுகின்றேன் நேரம் கிடைத்தால்.

உஷா சொன்னது:
கொஞ்சம் சுயசிந்தனையை வளர்த்துக் கொண்டால் எந்த சமூகமும் முன்னேறும்.

உங்களின் பதில்:
என்னங்கக்கா நான் சொன்னது ஒரு கிராமத்தின் இரண்டு நிஜங்கள் மட்டுமே, எத்தனை ஆயிரம் கிராமங்கள், எத்தனை நிஜங்கள் இருக்கும் இதில் சிந்தனையில் சுயம் எங்கே வரும்? சுயசிந்தனைகூட யாராவது இலேசாகவாவது தூண்டிவிட வேண்டும்

உஷா சொன்னது:
சாதி, மதம், இனம் என்று எவ்வளவு நாட்கள் மனிதனில் பிரிவினை என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இது.

உங்களின் பதில்:
நானும் இப்படி ஆதங்கப்பட்டு ஜென்டில்மேனாக இருக்கலாம் ஆனால் உண்மை அப்படியில்லையே என்ன செய்வது.

மேலே சொன்ன விசயங்களில் எனது பார்வை
==========

சாதாரண மக்களுக்கு யாரிடமாவது நம்பிக்கை வேண்டிய்ருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மை.பிரச்சனையே அதுதான்.

இப்போதுள்ள எந்த அரசியல் தலைவரும் நல்ல வழிகாட்டிகள் அல்ல. அவர்களைப் பின் பற்றினால் என்ன ஒரு வட்ட/மாவட்ட அல்லது ஒரு பெரிய அமைச்சர் பதவி வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் சமுதாய மாற்றம் ஒரு போதும் வராது.

நீங்கள் ஏன் உங்கள் ஊரில் (அட ஊரைவிடுங்கள் ஒரு தெருவை எடுத்துக் கொள்ளுங்கள்) ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கக்கூடாது?

நீங்களே அவர்களுக்கு சுயசிந்தனையை தூண்டிவிடுங்கள்.

நீங்கள் ஆதங்கப்பட வேண்டும். பட்டே ஆக வேண்டும்.அப்படி ஆதங்கப்பட்டு ஜென்டில்மேனாக இருந்தே ஆகவேண்டும்.

நீங்களும் சாதி/மத/கட்சி வண்ணம் பூசிக் கொண்டால் ஒரு தெருவைக்கூட முன்னேற்ற முடியாது.ஒரு தெருவில் பல சாதி/மத மக்கள் இருக்கலாம் மாற்றத்தை அவர்களிடம் முதலில் கொண்டு வாருங்கள்.

இதில் நீங்கள் தோல்வி அடைந்தாலும், முயற்சி செய்தோமே என்ற மன திருப்தியாவது மிஞ்சும்.

இது உங்களுக்கு மட்டும் சொல்வதல்ல. சமுதாயத்தை நினைத்து வருந்துவோர் அனைவருக்கும் பொருந்தும். சும்மா சமுதாயக் கொடுமைகளை,கஷ்டங்களை ஆவணப்படுத்துவோதோடும் விமர்சனம் செய்வதோடும் நின்றுவிடாமல், அதை செயல்படுத்த ஒரு சிறு முயற்சியாவது செய்ய வேண்டும்.

said...

கல்வெட்டு, என்னுடைய கேள்விகளுக்கு குழலி தந்த பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை. தலைவன் வந்து முன்னேற்ற வேண்டும்
என்ற எண்ணமே தவறு. பப்ளிக் சர்வெண்ட் என்ற பெயரில் ஆட்சியளிக்க ஆட்களை தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் தலைவர்கள்
இல்லை.
குழலி சார்ந்த அதே வன்னியர்கள் சமுதாயத்தில் சில ஏழை பெண்கள் எனக்கு தெரியும்.( வேண்டுமானால் முகவரி தருகிறேன்)
அனைவருக்கும் குடிக்கார கணவர்கள். வீட்டு வேலை செய்து, "அய்யிரூவூட்டு" அம்மாக்களின் வழிக்காட்டுதலுடன் பிள்ளைகளை
படிக்க வைப்பதைப் பார்க்கும் பொழுது, அந்த விழிப்புணர்வு, சுயசிந்தனை எப்படி வந்தது? பத்தாவதிலும், பன்னிரண்டாவதிலும்
அவர்கள் வாங்கிய மதிப்பெண்கள், எந்த முன்னேறிய வர்க்கத்துக்கும் குறைந்ததில்லை. குழலி சிங்கப்பூரில் இருந்து போய்
இறங்கினால், சில தாய்மார்களுக்காவது நம் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதற்கு உதவி
செய்தாலே போதும்.
கல்வெட்டு, குழலி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இத்தகைய ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்தைப் படிக்க, படிக்க
சந்தோஷமாய் இருக்கிறது.

said...

நல்ல பதிவு.
நான் பார்த்த கிராமம் எல்லாம் இப்படி இல்லை. ரொம்ப கட்டுக்கோப்பானது.
தமிழ்நாடு இந்தியாவில் ஓரளாவு முன்னேறிய மாநிலமாக கருதப்படுகிறது.
இன்னும் மற்ற வட மாநிலங்கள் எப்படி இருக்கும்?

said...

I agree with Usha. My domestic helper in Delhi was from Thiruvannmali. There were lot of families from her and nearby villages working as domestic helps. We have personally advised/ helped them to educate their daughters( mostly they send their daughters to do housework).

said...

தமிழகத்தில் உள்ள எல்லா வன்னிய இன பெண்பிள்ளைகளும் அய்யர் வீட்டம்மா காசில்தான் படிப்பதுபோலவும் அய்யர் வீட்டம்மா காசில்தான் வயிற்றைக் கழுவுவது போலவும் இருக்கிறது உஷாவின் பேச்சு. ஒரே ஒரு பெண்ணுக்கு உதவி செய்ததுக்கே இந்த பெருமையா? அதுவும் உண்மையா பொய்யா என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?

said...

//என்னுடைய கேள்விகளுக்கு குழலி தந்த பதில் எனக்கு திருப்தியளிக்கவில்லை.
தலைவன் வந்து முன்னேற்ற வேண்டும்
என்ற எண்ணமே தவறு
//
தற்போது திருப்தியாக பதிலளிக்கும் நிலை இல்லை, இதைப்பற்றி விரிவாக பேசினால் பதிவு வேறு திசை நோக்கி பயனிக்கும் ஆதலால் தான் லேசாக பேசிவிட்டு ஒதுங்குகின்றேன்.

தலைவன் வந்துதான் முன்னேற்ற வேண்டுமென்பது இல்லை, ஆனால் சில விடயங்களுக்கு பலம் வேண்டும், தலைவன் வேண்டும்

//அனைவருக்கும் குடிக்கார கணவர்கள்.
//
நீங்கள் சொன்ன இதே குடிகார கணவர்களுக்கு அந்த தலைவன் கிராமம் கிராமமாக சென்று பேசியது / திட்டியது உங்களுக்கு தெரிந்திருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை.

//வீட்டு வேலை செய்து, "அய்யிரூவூட்டு" அம்மாக்களின் வழிக்காட்டுதலுடன் பிள்ளைகளை
படிக்க வைப்பதைப் பார்க்கும் பொழுது, அந்த விழிப்புணர்வு, சுயசிந்தனை எப்படி வந்தது?
//
"அய்யிரூவூட்டு" அம்மாக்கள் வழிக்காட்டினாலும் எந்த வீட்டம்மா வழிகாட்டினாலும் நல்ல படியாக முன்னேறினால் சரிதான், அந்த வீட்டுப்பெண்களுக்கு கிடைத்த மாதிரி அய்யர்வூட்டமாக்கள் எல்லா பெண்களுக்கும் கிடைக்கவில்லையே,

மேலும் சரியான முறையில் பல விடயங்கள் எடுத்து வைக்கப்படவில்லை, அதனால் புரிதலில் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது இந்த இடைவெளியை குறைக்க சரியான முறையில் சொல்லப்படாத கதைகளை சொல்லும் முயற்சியாக ஏற்கனவே நான் வைத்த வேண்டுகோளை ஏற்று பல நண்பர்கள் உதவ முன் வந்துள்ளனர், நானும் செய்துகொண்டுள்ளேன், உங்களுக்காக வேண்டுமானால் அவசரப்பதிவாக சில பதிவுகள் போடலாம் ஆனால் அது தற்போது தேவையில்லை என கருதுவதால் தள்ளிவைக்கின்றேன்.

கல்வெட்டு மற்றும் அனைவருக்கும் எனது வேண்டுகோள், என் பதிவில் பதிவது எனக்கு தெரிந்த நான் பார்த்த கேள்விப்பட்ட வாழ்க்கையை அவ்வளவே இதில் சாதிப்பெயர் குறிப்பிடுவது ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாகவே என்பது மட்டுமே தவிர அதில் கொஞ்சமும் சாதி எண்ணமில்லை.

செந்தில் கூறியது போன்று வாழ்க்கை நாம் இருக்கும் வட்டத்தையும் தாண்டியது, நாம் பார்க்கும் பார்வையையும் தாண்டியது நம் வட்டத்தை தாண்டி பார்க்கும் போது சில நிஜங்கள் முகத்தில் அறையும் அந்த நிஜத்தை பார்க்க சக்தி இருந்தால் பார்க்கலாம் அல்லது மீண்டும் நம் வட்டத்தினுள் சுருங்கிக்கொண்டு இனியெல்லாம் சுகமே என இருக்கலாம்.

said...

//நல்ல பதிவு குழலி ..

இப்படிக்கு
பெருமையுடன் ..
விசிலடிச்சான் குஞ்சு

Mr. LLD, venaam... en peyarai thappa use pann venaam... :-)

said...

அன்புள்ள டுபுக்கு,
செய்த தருமத்தை சொல்லிக்காட்டுவது வாந்தி எடுத்ததை தின்றதற்கு சமம் என்று சொல்ல கேட்டுயிருக்கிறேன். ஆனால் இங்கு
ஒரு பெண்ணுக்கு செய்ததை சொன்னதற்கு காரணம், மேற்கொண்டு யாராவது தன்னால் உதவ வருவார்களா என்ற நப்பாசையில்
நான் அந்த பெண்ணுக்கு உதவுமாறு யாரையும் கேட்க முடியாது. காரணம், நான் சென்னையில் இல்லை. கொடுக்கும் பணம் வேறு நோக்கத்துக்கு போகும் அபாயம் இருப்பதால், என்னால் அந்த பெண்ணுக்கு உதவி செய்ய கோரி யாரையும் அணுக இயலாது. அதனால்தான் அந்த பெண்களின் முகவரியை தருகிறேன் என்று குறிப்பிட்டேன்.

ரம்யா செய்வதைப் போல தொண்டுகளை, அதாவது பலர் சேர்ந்து செய்யும் செயல்களை வெளியே சொல்லாமே தவிர, தனி மனிதராய் நான் யாருக்கு என்ன உதவி செய்கிறேன், செய்துக் கொண்டு இருக்கிறேன் என்பதையெல்லாம் வெளியே சொல்லும் எண்ணமில்லை. ஆக ஒற்றை பெண்ணும் கொடுத்ததை பீற்றிக் கொண்டதாய் நினைக்க வேண்டாம்.

இந்த "அய்யீருவூட்டும்மா" எழுதும் பொழுதே நினைத்தேன், இது வேறு திசையில் பயணிக்கும் என்று. இங்கு ஒரு சின்ன விஷயம்-
அந்த அய்யீருவூட்டும்மா லிஸ்டில் என்னை சேர்க்காதீர்கள். அவர்களைப் போல நாம் ஏன் முன்னேறவில்லை என்று ஆதங்கப்படும்
சிறுபான்மை, மிகவும் பிற்பட்ட வர்க்கம் என்னுடையது. யாரும் வந்து யாருக்கும் விழிப்புணர்வு வகுப்பு எடுக்கவில்லை. அந்த பெண்கள் படித்து வேலைக்குப் போனதைப் போல, நம் பெண்களும் படித்தால், இப்படி குடிக்கார கணவனிடம் அடி வாங்கி சாக வேண்டாமே என்று அவர்களே அறிந்துக் கொண்டதுதான். அவதிப்படும் பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே தவிர, அவள் எந்த சாதி, சமூகம், இனம், மதம் என்று பார்ப்பதில்லை.

நான் இருந்த சைதாப்பேட்டையில் வன்னியர்கள் சமூகம் அதிகம், அதில் உள்ள பெண்கள் படும் வேதனைகளை வெளி கொண்டு
வர வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினேனே தவிர, மற்றப்படி உங்கள் குற்றசாட்டுகளை மறுக்கிறேன். இங்கு அந்த சமூகத்தின் பிரச்சனைகளை எழுதுவதால். அப்பெண்களுக்கு, அவர்களின் சமூக அமைப்புகள் மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா என்று என்
எதிர்பார்ப்பு.

என்னுடைய எழுத்தில் உள்ள நேர்மையை நீரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. நம்புவதும் நம்பாததும் உங்கள் செளகரியம்.

பாருங்கள், நானும் ஜெண்டில் வுமனாய் சமையல் குறிப்போ அல்லது சாமி பாட்டோ என் பதிவில் போட்டுவிட்டு போய் கொண்டேயிருக்கலாம்.
இந்த மாதிரி விஷயங்களில் ஏன் தலையிட வேண்டும் இல்லையா :-)))

said...

Usha akka. cool.

said...

உஷா அவர்களே,

தவறாக எண்ண வேண்டாம். இந்த 'ஐயர்வூட்டம்மா' என்ற வார்த்தையை தாங்கள் தவிர்த்து இருக்கலாம். மற்றபடி உங்கள் உதவியை நான் குறை கூறவில்லை. ஆனால் இங்கே வலைப்பதிவர்களில் பெரும்பாலானோர் குழலியைக் குற்றம் சொல்வதிலேயே காலம் கழிக்கின்றனர். வன்னிய இனத்தில் பிறந்தாலும் அவர்தன் இண சார்பாக என்றுமே பெருமை பீற்றிக் கொண்டதில்லை. வலைப்பதிவுகளில் இவன் தேவன், இவன் பார்ப்பனர், இவன் முதலியான் என பலரும் மார் தட்டிக் கொண்டிருந்த காலத்தில் எதுவே சொல்லாமல் ராமதாஸ் என்ற அரசியல் தலைவரைப் பற்றிய கட்டுரைகளை அவர் வரைந்திருந்தார்.

அவருக்கு பிடித்த தலைவர் ராமதாஸ். உங்களுக்கு பாஜகவின் தலைவர் அத்வானியைப் பிடித்து இருக்கலாம். அவர் எழுதுவது பிடித்து இருந்தால் ஆமாம் என்றும் இல்லை எனில் ஒதுக்கிவிட்டும் செல்லலாம். அதனைவிடுத்து அவரை ஒரேயடியாக வன்னிய இனம் என ஒதுக்குவது சரியல்ல.

இங்கே வலைப்பதிவில் எத்தனைபேர் பார்ப்பனீயத்தினை முன்னிறுத்தி வலை பதிகிறார்கள் என்பதனைப் பாருங்கள். அவர்களை யாரும் ஒதுக்கியோ அல்லது முத்திரை குத்தியோ வைத்தது இல்லை. ஆனால் தினம்தோறும் ஏதாவது ஒரு பார்ப்பனிய பதிவர் ராமதாசு அல்லது திருமாவை இகழ்ந்து பதிவு போடுவதும் அதற்கு குழலி மறுமொழி அளிப்பதும் வாடிக்கையாகப் போயிற்று. இப்போதுள்ள அரசியல்வாதிகளில் நேர்மையாக யாருமே இல்லை என்பது எனது கணிப்பு. அவ்வாறு இருக்கையில் ராமதாசினை மட்டும் குற்றம் சொல்வது விசிலடிச்சான் குஞ்சுகளின்(நன்றி:-ரோசாவசந்த்) வேலை. அவ்வாறு குற்றம் சாட்டுபவர் முதலில் எந்த தலைவர் யோக்கியம் என்று சொல்லி விட்டு வலை பதிந்தால் மனம் மகிழ்வேன் நான்.

ரம்யா போன்று தொண்டுள்ளத்தோடு நிறைய ஐயர்வூட்டம்மாக்கள் உருவாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். கண்டிப்பாக நீங்கள் உங்களால் முடிந்தவரை பிறருக்கு ஜாதி வித்தியாசம் பாராமல் உதவ வேண்டும் என நான் விரும்புகிறேன். செய்தவற்றை வெளிச் சொல்லா விட்டாலும் உங்களோடு இன்னும் பலரைச் சேர்த்து ஒரு குழுவாக அல்லது நீங்களும் ரம்யா அவர்களோடு இணைந்து தொண்டாற்று வீர்கள் என நம்புகிறேன்.

ஏழைகள் வன்னியரில் மட்டுமில்லை. எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். எனவே குறிப்பிட்டு வன்னிய இன ஏழைகள் என நீங்கள் எழுதியதை தவறாகவே நான் பார்க்கிறேன்.

வலையுலகில் நடுநிலையோடு கருத்து சொல்வது நீங்கள் மற்றும் ஜெயஸ்ரீ. உங்கள் வாயில் இருந்து அவ்வாறு ஒரு மறுமொழி வந்ததும் எனது ஆதங்கத்தினை வெளிப் படுத்தி இருந்தேன். மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

said...

முதலில் குழலி மன்னிக்க, பதிவு திசை மாறி போவதற்கு :-)
இங்கு என் வீட்டில் இரண்டு மாதம் முன்பு வரை பங்களாதேஷ் முஸ்லீம் பெண் வேலை செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வங்க மொழி மட்டும் தெரியும். எனக்கு அரைகுறை ஹிந்தி. பதினெட்டு வயது பெண், பலவித பிரச்சனைகள், விசாவும் முடிந்துப் போனது. சொல்லி அழும் போது வயிற்றை கலக்கும். பணத்தைக் கொடுத்து
நிறுத்திவிடலாம். மனம் கேட்கவில்லை. கொஞ்சம் வயதான இன்னொரு அவர் ஊர் பெண்ணை அழைத்து, டிக்கெட்டுக்கு உதவி, முதல் காரியமாய் ஊர் போய் சேர் என்று அனுப்பி வைத்தோம்.
அவளுடைய பிரச்சனையில் அதிகம் நுழைய என்னால் முடியவில்லை. மொழி, வேறு இனம், நாடு பிரச்சனை. அதை சரி செய்ய அவர்களைப் போன்றவர்களால் தானே முடியும். நமக்கு என்ன என்று சில நூறு பணம் தந்துவிட்டு சுலபமாய் கழண்டு கொள்ளலாம், ஆனால் என்னைப் போன்ற சில அசடுகளால் முடிவதில்லை. உலகின் ஒரு பளபளப்பான குக்கிராமத்தில் எந்த சமூக பணியும் செய்ய முடியாது.

பிறகு இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் மேட்டருக்கு வருவோமா? குழலி தன்னுடைய தானை தலைவர்களின் செயல் திட்டங்களையும்,
சாதனைகளையும் பதிவாய் போட போகிறேன் என்று சொல்லியிருந்தால், இந்த பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டேன். அவர்
சொன்னது இதுதான்.

//வட மாவட்டத்தின், முக்கியமாக இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன், அது கடந்த 30 ஆண்டுகால வட மாவட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தும், அதற்கு முந்தைய 30 ஆண்டுகளைப் பற்றிய நிகழ்வுகளை பதிந்தும் அதற்கும் முந்தைய காலகட்டதை லேசாக தொட்டும் இருக்கலாம், சரி தவறு என தீர்ப்பளிக்காமல் , வடுக்களை கீறாமல் தடவி கொடுத்தும், நேரடி அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள், சில வடமாவட்ட அரசியல் பிரமுகர்களின் பேட்டிகளையும் இணைக்கலாம், //


இதை அரசியலாய் பார்க்காமல், பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் அவலங்காய் எனக்கு தோன்றியது. திருமாவும், ராமதாசும் இணைந்ததை நானும், இளவஞ்சியும் கேட்டது தனக்கு இன்ஸ்பிரேஷனாய் தோன்றியது என்று சொன்னார். அப்படி என்னத்தான் சொல்லப் போகிறார் என்று பார்ப்போமே? அதை வரவேற்கிறேன், உதவுகிறேன் என்று விசிலடிச்சான் குஞ்சுகள் வரிசையில் நானும் கையப்பம் இட்டேன்.
நான் என்றுமே யார் எழுதுகிறார்கள் என்று பார்த்து மறுமொழி இடுவதில்லை. என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதையே பார்க்கிறேன். அதே போல எழுதும் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லையே? ரோசாவின் கோபம் என்னை கவர்ந்தது, ஆனால் குழலியை பற்றி சொன்னது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது அவர் எண்ணம் அவ்வளவுதான்.

said...

உஷா, நீங்கள் தனிப்பட்ட முறையில் செய்த உதவிகளைக் குறித்து மகிழ்ச்சியே. இருந்தும் நீங்கள் 'அய்யீரூட்டு அம்மா'க்களை ஏதோ பின்தங்கியவர்களின் வழிகாட்டிகளாக பொதுமைப்படுத்துவதைத் தவிர்த்திருக்கலாம். இது உண்மைக்குப் புறம்பான ஒரு சித்தரிப்பே என்பது வெளிப்படையான செய்தி. வீட்டுப் பணிப்பெண்கள் உயர்சாதி வீடுகளில் எதிர்கொள்ளும் ஒரு வகையான apartheid (separate tea-glasses, entry allowed only thru' back-door etc.) அனைவருக்கும் தெரிந்ததே. இத்தகைய discriminatory முறைகள் தொடர்வதைப் பற்றி எதுவும் செய்யாமல், வெறுமனே பிரிவினைகளைப் பற்றி ஆதங்கப்பட்டு பிரயோசனமில்லை எனபது எனது தாழ்மையான கருத்து.

said...

வாய்ஸ் ஆப் விங்ஸ், நாம் எழுதுவதற்கும் உள் மனப் போராட்டங்களுக்கும் தொடர்ப்பு உண்டு. நீங்கள் சொல்லும் அத்தனை
சமூக ஒதுக்கலையும் ஒத்துக் கொள்கிறேன்.
தமிழ் பிராமணர்களை பார்த்து ஒரு வகை பொறாமையுண்டு, ஏன் அவர்களைப் போல நாங்கள் முன்னேற முடியவில்லை என்று :-)
எங்கள் சமூகத்தில் 75 % சதவீதம் லோ மிடில் கிளாஸ், சிலர் எங்களைப் போல இப்பொழுது முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.ஐ.டி, மருத்துவம், ஐ.ஏ. எஸ் போன்ற அரசு உயர்பதவிகள் படிப்பவர்களை பூத கண்ணாடி வைத்து தேட வேண்டும் . மெல்ல இப்பொழுதுதான் இஞ்சினீயரிங் கல்லூரியில் நுழைந்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நாங்கள் பிராமண வகுப்பு :-)
எங்கள் குடும்பத்து பெண்களைப் பார்த்தால் இன்னும் பதினெட்டாம் நூற்றாண்டில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த
தலைமுறைதான் பெண்களை வேலைக்கு அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சாஸ்திரங்களும்,
சம்பிரதாயங்களுமே வாழ்க்கை அவர்களுக்கு. இன்னும் நிறைய இருக்கிறது, எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். அந்த வார்த்தை தவறு என்றால் மன்னித்து விடுங்கள்.

said...

"தமிழ் பிராமணர்களை பார்த்து ஒரு வகை பொறாமையுண்டு, ஏன் அவர்களைப் போல நாங்கள் முன்னேற முடியவில்லை என்று :-)
எங்கள் சமூகத்தில் 75 % சதவீதம் லோ மிடில் கிளாஸ், சிலர் எங்களைப் போல இப்பொழுது முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.ஐ.டி, மருத்துவம், ஐ.ஏ. எஸ் போன்ற அரசு உயர்பதவிகள் படிப்பவர்களை பூத கண்ணாடி வைத்து தேட வேண்டும் . மெல்ல இப்பொழுதுதான் இஞ்சினீயரிங் கல்லூரியில் நுழைந்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் நாங்கள் பிராமண வகுப்பு :-)"

மன்னிக்கவும், புரியவில்லையே. விளக்க முடியுமா? முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகப் படுகிறது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

குழலி., என்ன விளையாட்டு இது? நான் எழுத நினைசதையெல்லாம் நீங்க எழுதிட்டிங்க. மெதுவா வரலாம்னு இருக்க நம்ம பயகல பட்டுன்னு இரண்டு பொடனில போட்டு "வாடா., வெரசா...."ன்னு சொல்றதுதான் என் நோக்கம். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

//நானும் ஜெண்டில் வுமனாய் சமையல் குறிப்போ//
உஷா!., நான் சமையல் குறிப்பு போடுகிறேன். ஆனால் ஜெண்டில் வுமன் இல்லிங்கோ!!!.

said...

>>எது தடவழி (strategy)? எது >>அடைவழி (tactics)?" என்பதில் >>தெளிவு வேண்டும். அது இல்லை >>என்றால் அப்புறம் வெறும் தேற்று>>(theory)களைப் பேசிக்கொண்டு, விவாத >>மன்றங்களில் பொழுதைக் கழிக்கலாம்

இதை அறிவதற்க்கும், அவர்களை அறியச்செய்வதற்கும், ஒருவழிப்படுத்துதலுக்கும் (Streamlining) யாராவது தேவை..

நாம இங்க எவ்வளவு பேர் வேணா... பேசிடலாம்.. ஒரு ஊரை எடுத்துக்கொங்க, ஒரு தெருவை எடுத்துக்கொங்க.. ஒரு குடும்பத்தை எடுத்துக்கொங்கநு..

ஜோசப் சார் சொன்ன்னதை கேட்டீங்கள்ல.. சில விஷயங்கள் நடைமுறைப்படுத்தும் போது வேறுமாதிரித்தான் செய்யப்படும்..

இப்போ இருக்குற தலைவர்கள் யாருமே சுயநலமில்லாதவர்கள்னு நினைக்குறது முட்டாள்தனம்..

அட்லீஸ்ட், மாற்றம் கொண்டு வர முடியுரவுங்கள.. அவுங்க தப்பை கொஞ்சம் திருத்தச்சொல்லி, கொட்டி கொட்டி குனிய வைக்கப்பார்ப்பதைவிட.. திருந்த வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்னு ஒரு கோணம்...

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினரின் வன்முறைகள் பத்தி பலரும் லாட்லபக்தாஸ் மாதிரி ஈஸியா கமெண்ட் பண்ணீருவாங்க.. ஆனா சாதாரண ஒரு குடியுரிமை அலுவலகத்துல ஒழுங்கின்மைக்கே கோபப்பட்டு பதிவிடறோமே.. அவுங்க அடிப்படை வாழ்க்கை உரிமைக்கு போராடும்போது அந்த கோபம் தப்பில்லைனு தோணும்..

அதே நேரத்துல.. அந்த கோபம் சரியான விதத்துல Collect பண்ணப்படாதது கண்டு வருத்தம் வரும்..

இங்கே அவர்கள் எளிதில் கேட்பது, அவர்களை அடைவது இந்த தலைவர்களே.. அதான் நிதர்சனமான உண்மை..

-
செந்தில்/Senthil

said...

>>இப்போ இருக்குற தலைவர்கள் >>யாருமே சுயநலமில்லாதவர்கள்னு >>நினைக்குறது முட்டாள்தனம்..

மன்னிக்கவும்.. இந்த வாக்கியம் வேறு அர்த்தத்தில வந்திருச்சு..


இப்போ இருக்குற தலைவர்கள் ஒவ்வொருவரும் நூறு சதவிகிதம் சுயநலமில்லாதவர்கள் என நாம எதிர்பாக்குறது எவ்வளவு தூரம் சாத்தியப்படும்.. அதுக்கான மாற்றம் நம்மல்ல இருந்து வரனும்..

-
செந்தில்/Senthil

said...

யாத்ரீகன் (செந்தில்),

//நாம இங்க எவ்வளவு பேர் வேணா... பேசிடலாம்.. ஒரு ஊரை எடுத்துக்கொங்க, ஒரு தெருவை எடுத்துக்கொங்க.. ஒரு குடும்பத்தை எடுத்துக்கொங்கநு..//

//ஜோசப் சார் சொன்ன்னதை கேட்டீங்கள்ல.. சில விஷயங்கள் நடைமுறைப்படுத்தும் போது வேறுமாதிரித்தான் செய்யப்படும்..//

ஒரு ஊரை எடுத்துக்கங்க தெருவை எடுத்துக்கங்க என்று சொன்னது நான். உங்களுக்கு அது தவறாகப்பட்டால் நேரிடையாக கேட்கலாம்.

குழலி தான் அறிந்த சமூகத்தைப் பற்றி தனக்குள்ள ஆதங்கத்தை பதிவாகப் போட்டதால் , அவர் எவ்வாறு மேலும் நல்லது செய்யலாம் என்ற முறையில் கருத்துக் கூறினேன்.

யாத்ரீகன், எதையுமே நடைமுறைப்படுத்தும் போது பெரிய சாவால்கள் இருக்கும் இது ஜோசப் சொல்லித்தானா உங்களுக்குத் தெரியும்?

நடைமுறைப்படுத்துவது சுலபம் என்று நீங்கள் எண்ணி இருப்பீர்களேயானல் அது உங்களின் பார்வை.

சவால்களைச் சந்திப்பதில்தான் ஒருவனின் திறமை இருக்கிறது.
பலன் எதிர்பாராமல் பொதுத்தொண்டு என்பது சாதரண விசயம் கிடையாது. அதற்கு மன உறுதி வேண்டும்.

நான் ஏற்கனவே இங்கே சொன்னது மறுபடியும்....

.......இது உங்களுக்கு மட்டும் சொல்வதல்ல. சமுதாயத்தை நினைத்து வருந்துவோர் அனைவருக்கும் பொருந்தும். சும்மா சமுதாயக் கொடுமைகளை,கஷ்டங்களை ஆவணப்படுத்துவோதோடும் விமர்சனம் செய்வதோடும் நின்றுவிடாமல், அதை செயல்படுத்த ஒரு சிறு முயற்சியாவது செய்ய வேண்டும். இதில் நீங்கள் தோல்வி அடைந்தாலும், முயற்சி செய்தோமே என்ற மன திருப்தியாவது மிஞ்சும்.

said...

ஆகா.. இதுவும் தப்பாங்க..

கல்வெட்டு..
முதல்ல அந்த வாக்கியம் உங்கள் ஒருத்தரை சுட்டிக்காட்டி மட்டும் எழுதப்பட்டதல்ல.. அதை நான் எப்படி நிருபிப்பதென்றும் தெரியவில்லை.. General-ஆ எல்லோரும் சொல்லும்போது, சொல்லப்படுற உதாரணம் அது என்பதால் தான் அதைக்குறிப்பிட்டிருந்தேன்.. ஆகவே என்மேல் கோபம்/வருத்தம் வேண்டாம்

தவறாப்பட்டிருந்தா மன்னிச்சிருங்க..

கருத்து கூறியதை நான் தவறுனே சொல்லலீங்களே.. அந்த கருத்து பற்றிய என் கருத்துதான் அது..

//ஜோசப் சார் சொன்ன்னதை கேட்டீங்கள்ல..

ஒருவேளை.. இந்த வாக்கியத்தின் கேட்டீங்கள்ல என்ற சொல் தவறான புரிதலுக்கு வழிக்காட்டிருச்சோ.. :-)

சரி.. விஷயத்துக்கு வருவோம்..

கட்டாயம் சவால்களிருக்கும், அது மற்றவர்கள் அதில் உள்ள நிஜத்தை புரிந்து கொள்ளவேண்டுமென்றுதான் ஜோசப் சாரின் அந்த அனுபவத்தை highlight பண்ணேன்..

நான் எங்கேயுமே சுலபம்னு சொல்லலீங்களே.. அதிலுள்ள சிக்கல்களை தானே கூறியிருந்தேன்...

>> கொடுமைகளை,கஷ்டங்களை ஆவணப்படுத்துவோதோடும்

இந்த ஆவணப்படுத்துவதே.. நிறையபேருக்கு இது சென்றடையவேண்டும் அதன் மூலம் மாற்றம் பிறக்கவேண்டும் என்ற ஆதங்கத்தினாலதானே.. அதத்தான் செஞ்சிருக்காரு குழலி.. அதுக்காக.. அவர் வெறும் வாய்ச்சொல் வீரர்னு நாமலே எப்படி முடிவுகட்டுறது.. (இதுல, குழலி நீங்கதான் காப்பாத்தனும் ;-)

என்னோட முந்தின பின்னூட்டங்கள் யாரோட கருத்தையும் புண்படுத்தனும்னு இல்ல.. மாறாக.. சில விஷயங்களில் யதார்த்த நிலையையும், அதில் உள்ள மாற்றுக்கோணங்களிலும் பாருங்கள் என்று சொல்லத்தான்.. அதுக்காக, யதார்த்த நிலையில் உள்ள கஷ்டத்தை சொல்லி பின்வாங்க என்றுமே சொல்லல.. கஷ்டத்தை.. practical-ஆ ஒத்துக்க முடிஞ்சாத்தான் அதை களையுறதுக்கான வழிமுறையும் கிடைக்கும்..

-
செந்தில்/Senthil

said...

யாத்ரீகன் (செந்தில்),

//ஆகா.. இதுவும் தப்பாங்க..//
//தவறாப்பட்டிருந்தா மன்னிச்சிருங்க..//

அட அட மன்னிப்பெல்லாம் எதுக்கு.

பேசுவதுடன் கொஞ்சம் கொஞ்சம் செய்யலாம் அப்படீன்னு சொன்னேன். தான் செய்த உதவிகளை பொதுவாக யாரும் வெளியில் சொல்வது இல்லை. அப்படி இங்கே பலர் உள்ளனர்.குழலி மற்றும் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் சிலருக்கு/பலருக்கு உதவியிருக்கலாம்.

அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்லும் போது "...நாம இங்க எவ்வளவு பேர் வேணா... பேசிடலாம்....நடைமுறைப்படுத்தும் போது வேறுமாதிரித்தான் செய்யப்படும்..." அப்படீன்னு நீங்க சொன்னதும் , என்ன இப்படிச் சொல்றார் செந்தில் அப்படீன்னு கொஞ்சம் வருத்தம் வந்தது உண்மை. மற்றபடி ஒன்றும் இல்லை.

//இந்த ஆவணப்படுத்துவதே.. நிறையபேருக்கு இது சென்றடையவேண்டும் அதன் மூலம் மாற்றம் பிறக்கவேண்டும் என்ற ஆதங்கத்தினாலதானே//

இது சரியே. எல்லாரும் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒரு மாதிரியாக இருக்கும். எந்த மாதிரியான பங்களிப்பும் மற்றதுடன் குறைந்தது அல்ல. இருந்தாலும்.... ஒன்றை ஆவணப்படுத்துபவ்ர்களுக்கு மற்றவர்களைவிட அதில் ஒரு நல்ல புரிதல் இருக்கும். அவர்கள் கொஞ்சம் நேரடி முயற்சிகளைத் தூண்டிவிட்டால் நல்லதே.


//அதத்தான் செஞ்சிருக்காரு குழலி.. அதுக்காக.. அவர் வெறும் வாய்ச்சொல் வீரர்னு நாமலே எப்படி முடிவுகட்டுறது.. (இதுல, குழலி நீங்கதான் காப்பாத்தனும் ;-)//

ஆஹா அப்படிப் போடுங்க.
அது என்ன நாமலே ன்னு என்னையும் (அல்லது எல்லாரையும்) சேர்த்துக்கிட்டீங்க?

நான் அப்படிச் சொல்லவேயில்லை....ஏங்க வம்புல மாட்டி விடுறீங்க?

உங்களைக் காப்பாத்தும் குழலி என்னையும் காப்பாத்தட்டும்

:-)))))))))))

நிறைய ஸ்மைலி போட்டுருக்கேன் அப்பத்தான் நான் கோபமாக/வருத்தமாக இல்லைன்னு உங்களுக்குத் தெரியும்

said...

>>நாம இங்க எவ்வளவு பேர் வேணா... >>பேசிடலாம்....நடைமுறைப்படுத்தும் >>போது வேறுமாதிரித்தான் >>செய்யப்படும்..."

இந்த வாக்கியம் மூலமா நான் சொல்ல வந்தது.. Nothing can be ideally be implemented in practical life
நிஜ வாழ்க்கையில் பலவற்றை (எல்லாவற்றையும்னு சொல்லலீங்க ;-) , ideal-ஆக நடைமுறைப்படுத்த கடினமே..
நிஜத்தில் எதிர்ப்படும் கஷ்டங்களுக்கேற்ப்ப செயல்திட்டங்கள் சிறிது மாற்றம் காணும்னு சொல்ல வந்தேன்..

// ஆஹா அப்படிப் போடுங்க.

அப்டியே சைக்கிள் கேப்புல அடுத்டவுங்கள.. கொஞ்சம் நக்கல் பண்றது காலேஜுல தொத்திக்கிட்டது, ரொம்ப சீரியசா இருக்க வேணாமுன்னுதான் அது.. ;-)

கொஞ்சம் என் பின்னூட்டம் உங்கள தனிப்பட்ட முறையில தாக்கிட்டதா நினைச்சு கோபப்பட்டுடீங்களோனுதான் நெனைச்சேன்.. பரவாயில்லை.. ஸ்மைலி extra ரெண்டு மூணு போனாலும். புரிஞ்சிடிச்சு..

-
செந்தில்/Senthil

said...

"விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினரின் வன்முறைகள் பத்தி பலரும் லாட்லபக்தாஸ் மாதிரி ஈஸியா கமெண்ட் பண்ணீருவாங்க.. ஆனா சாதாரண ஒரு குடியுரிமை அலுவலகத்துல ஒழுங்கின்மைக்கே கோபப்பட்டு பதிவிடறோமே.. அவுங்க அடிப்படை வாழ்க்கை உரிமைக்கு போராடும்போது அந்த கோபம் தப்பில்லைனு தோணும்..
"

வன்முறைக்கு இதென்ன சப்பைக்கட்டு! அவர்களுடைய தலவர்கள் நல்ல
படித்தவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு ஒழுங்காக வழிகாட்டாமல்
வன்முறையை தூண்டிவிட்டால் எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்.
அப்புறம் படித்த தலைவர்களுக்கும் மற்ற தற்குறி தலைவர்களுக்கும்
என்ன வித்தியாசம்?

said...

அனானிமஸ் அவர்களே...
அது சப்பைக்கட்டல்ல.. அது ஏன் நடக்குதுனு நினைக்கயில எனக்கு தோணுனது, அந்த கட்சியின் பத்திய பொது கருத்து அல்ல, மேலும் சில சம்பவங்களை நான் பார்த்திருப்பதாலயே அதை உதாரணமாக சொன்னேன், மத்தபடி அவர்கள்மேல் அப்படி ஒரு முத்திரை கொண்டுவருவதில்லை என் நோக்கம்..

தலைவர்கள் சிலர் வன்முறையை தூண்டியிருக்கலாம், அதைக்கொண்டு அம்மக்கள் எல்லோரும் அப்படித்தான்,எல்லாத்தலைவர்களும் அப்படித்தான் என எல்லோரும் பொத்தாம் பொதுவாக விமர்சனம் செய்யும் போதுதான் கோபம் மேலும் சீண்டப்படுது...அது மனித இயல்பு..

சின்ன உதாரணம்.. இரயில்வே முன்பதிவு அலுவலகத்துல வரிசையில் நிக்கவும்னு போர்டு போட்டிருக்கும்போதே.. அங்க வர்ற மக்கள் வரிசையில இடையில் புகவும்,நிறையபேர் ஏஜெண்ட் மூலம் வாங்க முயற்சி செய்யவும் கூச்சல் குழப்பம் சண்டை வருது.., இதுதான் நிதர்சனம்.., அதை தப்புனு அவுங்களுக்கு புரிய வைக்கனும்ன்றதான் உண்மை.. அதைவிட்டுட்டு, நீ தப்பு பண்ற.. தப்பு பண்றனு கூச்சல் மட்டும் போடக்கூடாது.. அது என் வேலை இல்லைனு நீங்க நெனைச்சீங்கனா.. அப்புறம் அதை விமர்சனம் செய்யாமல் போவதுதான் உங்கள் வேலை..

நீங்க சொல்ற கண்டிக்குற வேலை எவ்வளவு கடினம்னுதான் இந்த பதிவுல சொல்லியிருக்கே..

-
செந்தில்/Senthil

said...

அனானிமஸ்.. உங்க வசதிக்கு.. நீங்க இந்த கீழ்கண்ட வாக்கியத்தை விட்டுட்டீங்க..

>>அதே நேரத்துல.. அந்த கோபம் >>சரியான விதத்துல Collect >>பண்ணப்படாதது கண்டு வருத்தம் வரும்

-
செந்தில்/Senthil

said...

//மன்னிக்கவும், புரியவில்லையே. விளக்க முடியுமா? முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகப் படுகிறது.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html//


கிளம்பிவிட்டது மறை கழண்ட நட்டு!

said...

தொண்டர்கள் செய்வதை கூட நான் குறை கூறவில்லை. வன்முறை
என்று தெரிந்தும் மெத்த படித்த தலைவர்கள் வன்முறையை தூண்டிவிடுவது
தவறுதான். தவறுதான் அய்யா.
நான் ஒடுக்கப்பட்டவன் அதனால் நான்கு பஸ்ஸை எரிக்க சொல்வதும்
மரத்தை வெட்ட சொல்வதையும் என்னால் நியாப்படுத்த முடியாது.

said...

வன்முறை என்றுமே தீர்வாகாதுதான், அதை உலக ஞானம்/அறிவு உள்ள படித்த இளைஞர்கள் அரசியல்/அரசு நிர்வாகத்திற்கு வந்தால் முழுமையாய் களைய முடியுமென்று நம்புகின்றேன்.. ஒருவேளை, மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு பலருடைய கவனத்தை திசைதிருப்புவதென அங்கொன்றும், இங்கொன்றும் நடந்துகொன்டிருக்கலாம்.. (ரோடுமறியல் பண்ணாத்தனுங்களே அதிகாரிகளெல்லாம் பிரச்சனை என்னனு கேட்குறாங்க.)

-
செந்தில்/Senthil