நட்சத்திரம் - லீ சியாங் லுங் வந்து வரவேற்பாரா?

இது சில விதி விலக்குகளின் கதை (அல்ல நிஜம்) எனவே இதை பொதுவில் வைத்து பார்க்க வேண்டாம்.

சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரி தான், அழகான நாடு, அவசரமான நாடு, பாதுகாப்பான நாடு, சுதந்திரமான (கட்டுப்பாட்டுடன் கூடிய) நாடு, சிறிய நாடு.

இந்த 'சிறிய' நாடு எல்லோருக்கும் தெரிந்தது தான், இந்த 'சிறிய' நாடு என்பதில் எத்தனை சிறிய நாடு என்னும் போது அவரவர்கள் கற்பனை குதிரையை தட்டிவிடுவார்கள், இந்தியா போன்ற பரந்த நிலப்பரப்பை உடைய நாட்டிலிருந்து வந்த நான் முதன் முதலில் சிங்கப்பூர் வந்து இறங்கும் வரை இந்த 'சிறிய' என்பது தமிழ்நாட்டின் பரப்பளவு அல்லது குறைந்தது இலங்கையின் பரப்பளவாகவாவது இருக்கும் என நினைத்தேன், ஆனால் சிங்கையின் பரப்பளவு வெறும் 683.ச.கி.மீ. மட்டுமே, அறுநூத்த்த்தி எண்பத்து மூன்றா என யோசிக்கும் முன் சென்னை புறநகர் பகுதியையும் சேர்த்து அதன் பரப்பளவு 1,025ச.கி.மீ. என்பது தெரிந்தால் சிங்கப்பூர் சென்னையின் அளவில் பாதிக்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவே.

IT படித்திருந்தாலும் அவன் (உரிமையில சொல்லிக்கிறேன்) மிகுந்த முயற்சிகளுக்கிடையில் தான் 5 ஆண்டுகளுக்கு முன் குறைந்த சம்பளத்திற்கு சிங்கப்பூர் வந்தான், இதற்கிடையில் நிறுவனங்கள் மாறியதில் ஓரளவிற்கு நல்ல சம்பளமும் கிடைத்தது, தன் வீட்டு கடன்களையும், கடமைகளையும் முடித்து விட்டு திருமணத்திற்கு தயாரானான்.

ஊருக்கு சென்று பெண்பார்த்து நிச்சயம் செய்த பின் திருமணத்திற்கு முன் இருந்த இடைவெளியில் நிறைய பேசி சிங்டெல் நிறுவனத்தை வாழவைத்தார்கள்.

திருமணமும் இனிதே முடிந்து சில வாரங்களுக்குப் பின் சிங்கை சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கி அதன் அழகை ரசித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து வாடகை காரை அழைத்தபோது அவரின் மனைவி கேட்டார் "ஏன் டாக்சி எடுக்குறிங்க, உங்க கார் எங்கங்க?, வீட்டில இருக்கா?"

ஒரு நிமிடம் குழம்பியவன் "காரா? இல்லையே என்னிடம் காரெல்லாம் இல்லை" என்ற போது மனைவியின் முகம் சுருங்கியதை கவனித்தான், வாடகை கார் அவன் தங்கியிருந்த வீட்டை அடைந்தது, கழகவீடுகள் எனப்படும் Housing Development Board வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தான், இந்த வகை வீடுகள் பல அடுக்குமாடியில்(குறைந்தது 12 மாடிகளாவது இருக்கும்) இருக்கும் வீடுகள்.

வீட்டினுள் வந்தவுடன் அடுத்த கேள்வி அவன் மனைவியிடமிருந்து "இந்த வீட்டிலா தங்கப்போகின்றோம்" என்றார் சந்தேகத்தோடு

மொத்தமாக குழம்பினான், அந்த வீடு இரண்டு படுக்கையறைகள் ஒரு சமையலறை, ஒரு புழங்கும் அறை மற்றும் AC வசதி கொண்ட வீடு தான், ஆனாலும் இந்த கேள்வி அவனை மிகவும் குழப்பியது.

எங்கே செல்வதென்றாலும் பேருந்து, ரயில்(MRT) அல்லது வாடகைக் கார்தான், செலவுகளையும் சற்று நிதானித்துதான் செய்யமுடியும், பணத்தை அள்ளிவிட்டால் பத்து நாட்களில் வாங்கும் சம்பளம் தீர்ந்துவிடும்.

ஏனோ தெளிவில்லாமலும் உற்சாகமில்லாமலும் இருந்தார் அவன் மனைவி.

சிறிது நாள் கழித்துதான் தெரியவந்தது அவன் மனைவியின் வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றிய வேறு கற்பனையிலிருந்தது.

திரைப்படங்களிலும், ஏற்கனவே வேறு நாடுகளில் செட்டில் ஆன தோழிகள் கதை கதையா அளந்து விட்டு ,அந்த பெண்ணை ஒரு கனவுலகில் மிதக்க விட்டதும் அவர்கள் கொடுத்த பில்ட்-அப் பில் வெளி நாடு வந்தால் நீச்சள் குளத்துடன் கூடிய பெரிய வீடு, அழகான தோட்டம், சொந்த கார் எப்போதும் கணவனோடு எங்கேயாவது வெளியில் சென்று வந்து சுற்றி கொண்டிருக்கலாம் என்ற கற்பனை உடைந்ததில் கடுமையான ஏமாற்றத்திற்குள்ளானார். (நானும் முதல் முறை சிங்கப்பூர் வந்தபோது வீடு,கார் பற்றி அப்படித்தான் நினைத்திருந்தேன்)

விளைவு ஏமாத்திட்டிங்க என்ற வசவும், அதைத் தொடர்ந்து கணவனை அலட்சியமாக பேசுதலும் கணவன் குடும்பத்தினரிடம் எரிந்து விழுதலும் அரங்கேறியது, இத்தனைக்கும் அவன் மனைவி மத்திய தர குடும்பத்திலிருந்து வந்தவர் தான்.

அவனுக்கு சரியாக சமைத்து கூட கொடுக்காமலும் அவன் வீட்டிற்கு தொலைபேசியில் பேசக்கூட அனுமதிக்காமலும், கிட்டத்தட்ட ஒரு ஹிஸ்டீரியா நோயாளி போல் நடக்க ஆரம்பித்தார், இத்தனைக்கும் மேலே தற்கொலை மிரட்டல்கள் வேறு, முதல் நாள் என்னை மன்னிச்சிடுங்க, உங்களை மிகவும் கஷ்டப்படுத்திட்டேன் என்று அன்பாக பேசுபவர் மறு நாளே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தார், இந்த நிலையில் கர்ப்பமடைந்து அந்த கர்ப்பம் சில மாதங்களில் கலைந்தும் போனது. கணவனின் குடும்பத்தை கேவலமாக பேசுவது, இத்தனை வருஷம் சிங்கப்பூர்ல சம்பாதிச்ச பணத்தில் என்ன சேர்த்து வச்சிருக்கீங்க, ஏன் உங்க வீட்டுக்கு கொடுத்தீர்கள் என குடைச்சல் வேறு.

இதே மாதிரி சில நிகழ்ச்சிகளை ஊரிலும் பார்த்துள்ளேன், கிராமத்தில் பெரிய குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு போனால் வேலையாட்கள் அது இது என ராணி மாதிரி இருக்கலாம் என்று கற்பனையில் மிதந்து ஆனால் பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு எதிர்பார்த்த மகாராணி வாழ்க்கை இல்லாததால் செய்யும் அராஜகமும், நகரத்தில் வாழ்க்கைப் பட்டால் அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என கனவு கண்டு அது நிறைவேறாமல் போனதில் தினம் தினம் சண்டை சச்சரவுகளோடு குடும்ப வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டுமுள்ளனர் சிலர்.

சிங்கப்பூர் மற்ற அமெரிக்க, ஐரோப்பிய வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து பல விதத்திலும் மாறுபட்டது, பங்களா மாதிரியான வீடுகளும், சொந்த காரும் IT ஆட்கள் அவர்களின் சம்பளத்தில் வாங்குவது சற்றும் சாத்தியமில்லாதது, கார் விலைக்கு இணையாக Certificate of Entitlementக்கும் அழ வேண்டும், மேலும் சாலை வரி, பார்க்கிங் கட்டணம் என கார் வைத்திருப்பது அதிகபட்ச செலவிழுக்கும் ஒன்று, சிங்கப்பூர் அழகான ஊர்தான் இருந்தாலும் சுவிஸ் மாதிரியான அழகை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.

கண்டமேனிக்கு காசை விட்டெறிந்து செலவு செய்ய முடியாது, சற்று அடக்கித் தான் வாசிக்க வேண்டும், இல்லையென்றால் சேமிப்பு என்பதே இல்லாமல் போய்விடும்.

தன் கணவன் ஒரு சாதரண மாத சம்பளம் வாங்கும் IT வல்லுனன் என்பதை உணராமல், வெளிநாட்டு வாழ்க்கை எப்படியோ இருக்கும், பிரதமர் லீ சியாங் லுங் வந்து தங்களை வரவேற்பார் போல என்று வெளிநாட்டு வாழ்க்கையை கற்பனை செய்தவரின் தவறா? இல்லை சிங்கப்பூர் வாழ்க்கை அப்படித்தான் என தெளிவாக சொல்லி தயார் செய்யாத நண்பனின் தவறா?

அடுத்த பதிவும் சிங்கை ஸ்பெஷல் தான்...

36 பின்னூட்டங்கள்:

said...

தன்னுடைய தகுதிக்கு மீறிப் பெண்ணெடுத்த உங்கள் நண்பரின் தவறே.

said...

//தன்னுடைய தகுதிக்கு மீறிப் பெண்ணெடுத்த உங்கள் நண்பரின் தவறே.
//
தகுதி என்று எதை குறிப்பிடுகின்றீர்? சரி தெளிவாக சொல்கின்றேன் இருவரும் ஒரே மாதிரியான படிப்பு, இருவரும் ஒரே மாதிரியான குடும்ப பிண்ணனி, இருவரும் மத்திய தர வர்க்கம்.

மேலும் வெளிநாடுகளில் வாழ வரும் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளைப் போல கணவன்களும் அனுபவிக்கின்றனர், பெண்களின் அனுபவிக்கும் பிரச்சினைகளின் வீரியம் அதிகம்.

said...

நிச்சயம் இது உங்களின் நண்பரின் தவறே. பொதுவாக திருமணம் உறுதி செய்யும் போதே ஆண்கள் தனது பணி அதன் சூழல், வசிக்கும் நாடு, வாழ்க்கை முறை போன்றவற்றை தெளிவாக சொல்ல வேண்டும். இங்கு தன்னைப்பற்றிய அதிகபட்ச கற்பனைகளை வளர விடுவதை சாதனையாக நினைப்பதுதான் தவறு.
திருமணச் சந்தையில் விலையை உயர்த்துவதற்காக பெரும்பாலானோர் இது போன்று போன்று செய்கிறார்கள் அல்லது அப்படி செய்வதை ஆதரிக்கிறார்கள். எதார்த்தங்களை சந்திக்கும் போது ஏமாற்றப்பட்டு விட்டதாகவே பெண்கள் எடுத்து கொள்கிறார்கள். இந்த புரிதல் பிழையால் அவர்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தி விடுகிறது. திருமணம் ஆன ஓராண்டுக்குள்ளே விவாகரத்து கோரி நிற்கும் சூழல்கள் பெரும்பாலும் இந்த மாதிரியான பிரச்சனைகளினாலே ஆரம்பித்திருக்கிறது( வேறு சில காரணங்களினாலும் நிகழ்கிறது என்ற போதிலும் ) .

மொத்தத்தில் வாழ்க்கையை நம்மோடு பகிர்ந்து கொள்ள இருப்பவளிடம் எதையும் மறைக்கக்கூடாது

said...
This comment has been removed by a blog administrator.
said...

மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
பண்டார வன்னியன்

said...

குழலி,
வெளிநாட்டு வேலை என்பதை அனைவரும் கனவாகவே நினைக்கிறார்கள். அந்தக் கனவில் சில கற்பனைச் சமாச்சாரங்களும் உண்டு.

முதலில் வெளிநாட்டுக்கு வருபவருக்கு வேலையே குறியாக இருப்பதால் இந்த கனவு விசயங்கள் பொய்யென்று தெரிய வரும் போது அதை சுலபமாக உள்வாங்கிக் கொண்டு சராசரி வாழ்வில் கலந்து விடுகிறார்.

ஆனால் அப்படி வந்தவர் , இந்தியாவில் திருமணம் செய்யும் போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

வெளிநாட்டில் வேலை செய்யும் பெண் இந்திய ஆணைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது பெரும்பாலும் அந்த ஆண்களுக்கு ஒரு வித தாழ்வுமனப்பான்மை வருகிறது.அதனால் பல பிரச்சனைகள்.

வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண், இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது நீங்கள் சொல்வது போல் பிரச்சனை வருகிறது.வேறு பிரச்சனைகளும் உண்டு.

வெளிநாட்டு வாழ்க்கை என்பது அந்த நாட்டைப் பொருத்து மாறுபடும்.சினிமாவையும் வாழ்க்கையும் ஒன்றாக நினைக்கும் மனப்பான்மை நம்மூரில் நிறைய இருக்கிறது.

பலமணி நேரம் போனில் பேசினார்கள் என்று சொல்றீங்க, அன்றாட நடைமுறை வாழ்க்கையை உங்கள் நண்பர் அவரின் துணைக்கு எடுத்துச் சொல்லவில்லையா?

இது எதிர்பார்ப்பும்-அது இல்லாதபோது வரும் ஏமாற்றமும் கலந்த பிரச்சனை.
கல்யாணம் என்பது வேலை+கார்+வீடு+வசதி+கடைசியாக ஆள் என்ற வரிசையில் வரும் போது முன்னவற்றை இருதரப்பினரும் பேசிப்புரிந்து கொள்ளுதல் அவசியம்.

கல்யாணம் என்பது ஆள்+அன்பு என்று மட்டும் இருந்தால் மற்றவைகள் எல்லாம் ஒரு தூசிக்குச் சமம்.

said...

அமெரிக்க வாழ்வும் அப்படி ஒன்றும் சுகமான வாழ்வல்ல.. பல நகரங்களில் பொது போக்குவரத்தே இல்லாதபோது, வாங்கும் சம்பளத்தில் 7/8 வருட பழைய கார்தான் வாங்க முடியும் என்பது நிஜம்..

பாச்சிலராய் இருக்கும் வரை அமெரிக்கா சுவர்க்கம்.. நினைத்த நேரத்துக்கு காரில் சுத்துவது, பிடிச்ச உணவகத்துல சாப்புடுறது, Chennai Spenzer மாதிரியான Mall-கள்ள எதுவும் வாங்காம சுத்துறதுனு..

ஆனா கல்யாணம் பண்ண பிறகு நிறைய செலவுகள், அத்தனையும் கொஞ்சம் அதிகமாகவே செலவு வைக்கிற மாதிரி.. அப்பதான் பொறுப்புணர்வு வர்ற மாதிரி காச சேமிக்குற கணவன்.. அமெரிக்க வாழ்வு பத்தின கனவுகளான பெண்ணுக்கு ஏமாத்தம்.. இப்படி சில பேர பாத்துருக்கேன்..

அதான் இப்போ.. எல்லோரும் onsite-ல இருக்கும்போதே லவுசு பண்ணிக்கிறாங்கலே.. ஆக.. இந்த பிரச்சனை காணாம போயிரும் ;-)

-
செந்தில்/Senthil

said...

//"ஊருக்கு சென்று பெண்பார்த்து நிச்சயம் செய்த பின் திருமணத்திற்கு முன் இருந்த இடைவெளியில் நிறைய பேசி சிங்டெல் நிறுவனத்தை வாழவைத்தார்கள்.//

'சிங்ஸ்டெல்' நிறுவனத்தை வாழ வைத்த உங்கள் நண்பருக்கு, தான் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாததுதான் இதற்கு காரணம்!

இல்லையென்றால், தன் நிலைமையை சொல்லாமல் வெட்டிக் காதல் பேச்சுக்கள் பேசியிருப்பாரா?

இன்னும், அந்த அப்பாவிப் பெண்ணின் மனதில் என்னவெல்லாம் ஆசை விதைகளைத் தூவினாரோ?

அந்தப் பெண்ணை நினைத்தால், பரிதாபமாக இருக்கிறது.

"வீண் பெருமை பேசுகிறார்; வீம்பு செய்யும் மானிடரே!
வாழத் தெரியவில்லை; வேதனைகள் தீரவில்லை"

said...

நண்பரின் தவறு சிறிதுதான். புதுப் பெண்ணிடம் எதைச் சொல்லவேண்டுமென்ற தெளிவு இல்லாதிருந்திருக்கும். ஆனால் அந்தப் பெண்மணியின் நடத்தை நிச்சயமாக கண்டனத்துக்குரியது. வாழ்க்கையின் உச்சமே திருமணமும் அதனால் ஏற்படப்போகும் `சிண்ட்ரெல்லா’த்தனமான வாழ்க்கையும் மட்டுமே என்று உறுவேற்றப் பட்டிருக்கும் மத்திய தரப் பெண்களின் சாபக்கேடு இது. இதுவே வேலைக்கு செல்லும் பெண்ணின் மனோபாவம் வேறு மாதிரி இருந்திருக்கும்

said...

இது சற்றே ஏறுக்குமாறான விடயம்தான். இதுவரை நான் எதிர்கொண்ட நண்பர்களின் கதை... இங்கு வந்து புரிந்துகொள்ள முடியாத, அனுசரித்துச்செல்லமுடியாத வாழ்க்கை. இதுபோன்ற எதிர்பார்ப்புகள் திருமணமாகி சிலவருடங்கள் சென்றபின்னர் இதுபோன்ற நிகழ்வுகள், பின்விளைவுகள் உள்ள நண்பர்கள் குடும்பங்களை சந்தித்திருக்கிறேன்.

எது எப்படியோ... ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்லவில்லையென்றால் - தூரதேசத்தில் நடத்தும் தாம்பத்யம் அதோ கதிதான்!

said...

thanu said...

//நண்பரின் தவறு சிறிதுதான். புதுப் பெண்ணிடம் எதைச் சொல்லவேண்டுமென்ற தெளிவு இல்லாதிருந்திருக்கும்.//
...
வாழ்க்கையின் உச்சமே திருமணமும் அதனால் ஏற்படப்போகும் `சிண்ட்ரெல்லா’த்தனமான வாழ்க்கையும் மட்டுமே
...

Nothing describes better than this(that too from a femenine view)

said...

//வாழ்க்கையின் உச்சமே திருமணமும் அதனால் ஏற்படப்போகும் `சிண்ட்ரெல்லா’த்தனமான வாழ்க்கையும் மட்டுமே என்று உறுவேற்றப் பட்டிருக்கும் மத்திய தரப் பெண்களின் சாபக்கேடு இது//

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

பத்துப் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் நமக்கு குதிரை மீதேறி வந்து கொண்டு செல்லப்போகும் ராஜகுமாரன் சொர்க்கவாழ்வு கொடுப்பான் போன்ற எண்ணங்களில் உழலும் படித்தும் அறியாமை நிரம்பியிருக்கும் சில பெண்களால் இம்மாதிரியான மனக்கசப்புகள் தோன்றிவிடுகின்றன. முன்பு குதிரை மீதேறி வரும் ராஜ குமாரன். இப்போது அவனுக்குப் பெயர் NRI.

நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணமென்றால் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் பெண் வீட்டாரிடம் என்னென்ன சொல்லி "உருவேற்றியிருக்கக்" கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் பெண்ணைத் திருமணம் செய்வது நல்ல விஷயம்தான். ஆனால் அவர்களே 'எல்லாவற்றையும்' பார்த்துக்கொள்ளட்டும்; தாலி மட்டும் கட்டினால் போதும்' என்ற எண்ணத்தில் இருக்கும் இளைஞர்கள் இம்மாதிரியான எதிர்பாரா க்ளைமேக்ஸ்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

said...

ஆதலினால் நண்பர்களே!
என்னை
நினைக்கும்
நேசிக்கும்
ஒரு ஜீவன்
இந்த உலகில் உண்டு என்று
அவனும் அவளும்
பெருமிதம் கொள்கிண்றனர்
எங்கள் காதல்
என்றுமே அழுயாதது
என்ற
திடமான நம்பிக்கை
எல்லா காதலருக்கும் உண்டு!


ஆதலினால் நண்பர்களே!!
வளமான வாழ்க்கைக்கும்
வசந்தமான வாழ்க்கைக்கும்
சிறந்த திருமணம்
காதல் திருமணமே!
காதல் திருமணமே!!
காதல் திருமணமே!!!
என்று கூறி
வாய்ப்பளித்த அனைவருக்கும்
நன்றி கூறி விடை பெறுகிறேன்
நன்றி வணக்கம்!

said...

சிங்கப்பூரின் வாழ்க்கைச் சூழலைப்பற்றி திருமணமாவதற்கு முன்னரே, ஏன் பேச்சுவார்த்தையின் போதே கூட சொல்லியிருந்திருக்கவேண்டும் . அது நண்பர் மற்றும் குடும்பத்தினரின் தவறு . எதிர்பார்ப்புகள் நிறைவேறாத தருணத்திலும் , சூழலை அனுசரித்து, தன் எதிர்பார்ப்புகள் நிறைவேற, முன்னேறி செல்வதைப் பற்றி யோசிக்காமல் , குடைச்சல் கொடுத்தது அந்தப் பெண்ணின் தவறு .. தவறு இருபக்கமும் இருந்தாலும், இருவருமே பாவம்தான் .

பெருமையுடன்
விசிலடிச்சான் குஞ்சு

said...

பிழை இரண்டுபக்கமும்தான்!
எது எதுக்கு அதீத கற்பனை பண்றது என்று விவஸ்தையே இல்லால் போய்விட்டது!!!!
நல்ல வேளை நான் கல்யாணமே செய்வது இல்லை எண்று முடிவேடுத்துள்ளேன்!!!

இனியாவது இரண்டும் பேரும் நல்லா கலந்து ஆலோசித்து இனி நடக்கப்போவதை முடிவெடுக்கலாம், இல்லையேல் ஒரு மனநிலை மருத்துவரை பாத்து இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுக்கலாம்!!!

ஒரு முடிவும் எடுக்கா முடியாகட்டத்தில் விவாரத்து செய்யவேண்டியதுதான், இரண்டு பேருடைய வாழ்கையையும் சீரளிப்பதில்காட்டிலும் இரண்டு பேரும் பிரிந்து போவது உத்தமம்!!!

said...

எங்கவூட்டம்மா... இங்க வந்து என் முதல் மாத சம்பளப் பணத்தை எண்ணிப் பாத்ததும் சொன்னார், "என்னாங்க... நீங்க ஏழெட்டாயிரம் வெள்ளி சம்பளம் எடுப்பீங்கன்னுல்ல நெனைச்சேன்!"

said...

குழலி:
இதை தவறு என்று கூறமேட்டேன். Yet another case of simple miscommunication.
ஆர்சர்ட் சாலையிலும், CBD-யிலும் புகைப்படம் எடுத்து அனுப்பும் நமது மாப்பிள்ளை wannabe-கள் சிங்கப்பூரில் தாங்கள் வசிக்கும் வீட்டை (அ) அறையை காட்டுவதில்லை.

said...

//வாழ்க்கையின் உச்சமே திருமணமும் அதனால் ஏற்படப்போகும் `சிண்ட்ரெல்லா’த்தனமான வாழ்க்கையும் மட்டுமே என்று உறுவேற்றப் பட்டிருக்கும் மத்திய தரப் பெண்களின் சாபக்கேடு இது. இதுவே வேலைக்கு செல்லும் பெண்ணின் மனோபாவம் வேறு மாதிரி இருந்திருக்கும்//

தாணு அவர்கள் மிகச்சரியாக சொன்னதாக நான் நினைக்கிறேன்.

said...

திருமணம் என்பது 40, 50 வருடங்கள் கொண்டு செலுத்தப்பட வேண்டிய ஒரு கடமை என்பதுதான் உண்மை நிலை.

இந்த கடமை ஒட்டத்தில் தாய், தகப்பன், மாமனார், மாமியார் என்று ஒட்டத்தை ஆரம்பித்து வைத்த முக்கியஸ்தர்களில் இருந்து யாவுமே ஒரு கால கட்டத்தில் நம்மை விட்டு விழகிவிடும். ஒட்டம் மட்டுமே நிச்சயமானதாக அமையும்.

இப்படி பட்ட ஒட்டத்திற்கு நமக்கு துணையாக வருபவர் எப்படி பட்டவராக இருக்க வேண்டும் ??

படிப்பால், பணத்தால், அந்தஸ்த்தால் ஈடு கொடுப்பவரா ?? இல்லை ஓட்டத்தை இன்பமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கி, நாம் சோர்வுரும் நேரத்தில் ஊக்கம் அளித்து, களைப்புரும் நேரத்தில் நெத்தியில் துளிரும் வியர்வையை தொடைத்து விடுபவரா ??

வரன் தேடும் போதே பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்க்கையிலிருந்து தனக்கு என்ன வேண்டும், எது முக்கியம் என்ற சிந்தனை சீராக இருக்க வேண்டும். அதன்படி முடிவுகளும் எடுக்கபட வேண்டும். இல்லையென்ரால் இப்படிதான் - ஆரம்பமே ஆட்டத்தில் அமைந்து விடும் !!

said...

குழலி, உங்களின் படைப்புக்கள் யாவும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. எதார்த்தமான அனுகுமுறை, சாமான்யத்திலும் ஒரு சுவாரஸ்யத்தை காணும் இயல்பு, படிக்க தூண்டும் நடை. வாழ்த்துக்கள் நண்பரே !!

said...

//வாழ்க்கையின் உச்சமே திருமணமும் அதனால் ஏற்படப்போகும் `சிண்ட்ரெல்லா’த்தனமான வாழ்க்கையும் மட்டுமே என்று உறுவேற்றப் பட்டிருக்கும் மத்திய தரப் பெண்களின் சாபக்கேடு இது. இதுவே வேலைக்கு செல்லும் பெண்ணின் மனோபாவம் வேறு மாதிரி இருந்திருக்கும்//

நானும் தாணு அவர்கள் சரியாக சொன்னதாக நான் நினைக்கிறேன். மேலும் நண்பர் தன் வேலை IT யில் என்பதையும் சொல்லியுள்ளார், அவர் ஒன்றும் மறைக்கவில்லை, ஆனால் வாழ்க்கையில் நம்மை பொறுத்தவரை முக்கியமில்லாத, இது கூடவா தெரியாது என சில தகவல்களை பிறருக்கு சொல்லாமல் நாம் அலட்சியப் படுத்துவது பிரச்சினைகளில் கொண்டு போய் நிறுத்தும்.

said...

குழலி,

//தகுதி என்று எதை குறிப்பிடுகின்றீர்? சரி
தெளிவாக சொல்கின்றேன் இருவரும் ஒரே மாதிரியான படிப்பு,
இருவரும் ஒரே மாதிரியான குடும்ப பிண்ணனி, இருவரும் மத்திய தர வர்க்கம்.//

பேசாம அந்தப் பெண்ணையும் ஒரு வேலையில் சேர்த்துவிடலாம்தானே. அதான் சமமான
படிப்பு இருக்கிறதே. ரெண்டு வருமானம் வந்தால் வாழ்க்கைத்தரம் கொஞ்சம் உயருமே.

said...

குழலி மிகவும் சிக்கலான பிரச்சனை இது. தவறு இருபக்கமும் இருக்கின்றது என்றாலும் அளவுக்கு மீறிய கனவுகளை வளர்த்துக் கொண்ட அந்தப் பெண்ணிடத்தில்தான் தவறு.

இந்த நண்பரும் காரிருக்கிறது. பங்களா இருக்கின்றது என்றெல்லாமா சொல்லியிருக்கின்றார். இல்லையே. நல்ல வேலை. நல்ல சம்பளம். என்றுதான் சொல்லியிருப்பார்கள்.

ஒரு இடத்திற்கு வாக்கப்பட்டு போகின்றோம் என்றால் அந்த இடத்தைப் பற்றி முடிந்த வரையில் விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

சிறுது நாட்களுக்கு முன்பு தனது வருமானத்திற்கு மீறி வாழ விரும்பிய என்னுடைய நண்பனுக்கு இன்னொரு நண்பன் சொன்ன அறிவுரை இது. "If you cant live with earnings, you will end up in trouble."

இது அனைவருக்கும் பொருந்தும். கண்ணதாசன் சொல்லியிருக்காரே. "ஆனையப் போலே பூனையும் தின்னா ஜீரணம் ஆகாது ஐயா ஜீரணம் ஆகாது."

said...

இதன் அடிப்படையே யளனகபக கண்ணன் பதிந்ததைபோல பிம்பச்சிறையில் சிக்குவதுதான். சிங்கப்பூர் மாப்பிள்ளை என்றால் இப்படி, கிராமத்துப் பெண்ணென்றால் இப்படி என்ற வகைப்படுத்துதலும்,
நல்வாழ்க்கை யென்பது பொருள் துய்ப்பது என்று கொள்வதும் காரணிகளாகும்.
//படிப்பால், பணத்தால், அந்தஸ்த்தால் ஈடு கொடுப்பவரா ?? இல்லை ஓட்டத்தை இன்பமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கி, நாம் சோர்வுரும் நேரத்தில் ஊக்கம் அளித்து, களைப்புரும் நேரத்தில் நெத்தியில் துளிரும் வியர்வையை தொடைத்து விடுபவரா ??// என்று சாமான்யன் கூறுவது போல உள்ளங்கள் பொருத்தம் பார்த்திருந்தால் சிங்கப்பூர் என்ன எங்குமே இத்தகைய பிரச்சினைகள் வாரா.

said...

//பேசாம அந்தப் பெண்ணையும் ஒரு வேலையில் சேர்த்துவிடலாம்தானே.//
நாலஞ்சு வேலைகாரங்க ,தோட்டக்காரன் ,காரு ,பங்களா-ன்னு மகாராணி மாதிரி கால்மேல கால் போட்டு இருக்காலாம்-னு வந்தவுங்கள வேலைக்கு போகச்சொல்லுறதா? துளசியக்கா..ஜோக்கடிக்காதீங்க.

said...

ரொம்பவும் சரியா சொன்னீங்க குழலி!

இந்த மாதிரியான பிரச்சினை என் மகளுக்கும் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்பு வீட்டு வேலை ஒன்றும் பழகாதிருந்தவள் இப்போது KLல் ஒரு வேலைக்காரியைக் கூட வைத்துக்கொள்ளமுடியாமல் (மாசம் 500 ரிங்கிட் சம்பளம். பிலிப்பைன்ஸிலிருந்து வருவதற்கு ஃப்ளைட் கட்டணம். ஆறு மாத சம்பள முன்தொகை,ஏஜண்ட் கமிஷன் என சுமார் ஒரு லட்சம் வேணுமாம் ஒரு வேலைக்காரியை நியமிக்க!) இப்போது வீட்டு வேலைகளையெல்லாம் தானே செய்யவேண்டிய சூழ்நிலை. சென்னையிலேயே வளர்ந்த பெண் என்பதால் சமாளித்துக்கொள்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் சொல்வதுபோல இந்தியாவில் வாழ்வதைப்போல அத்தனை எளிதல்ல. அது மலேசியாவா இருந்தாலும் சிங்கையானாலும்.

said...

USHA akka engkee???.

said...

ஜோச்ஃப் சார் சொல்வது மிகச்சரி. ஊரிலென்றால் ஒரு பத்து பாத்திரம் (அல்ல்லது ஏழெட்டு:) தேய்க்கவோ அல்லது அவசர ஆத்திரத்துக்காகவாவது வீட்டிலுள்ளவர்களோ, யாரோவோ உதவிக்கு வருவார்கள். இங்கு வெளியிடங்களில் எல்லாமே, பெண்களின் தலையில் விடியும்போது - இதுவரை அதையெல்லாம் எதிர்பார்த்திராத பெண்கள் ரொம்பவும்தான் சிரமப்படுகின்றார்காள். அதிலும் கணவன், கூடமாட வேலைசெய்யாவிட்டால்லும் குறைந்தபட்சம் பரவால்லைன்ற மனப்ப்பக்குவமாவது இருக்கணும். அதுவுமில்லாம இவன் பாட்டுக்கு உக்காந்து மாங்குமாங்குன்னு பின்னூட்டம் விட்டிடிருந்தான்... ரொம்ப சிரமம்!
(யோவ் போதும்யா... வாயைப்பிடுங்கறீங்களே:)

said...

//யோவ் போதும்யா... வாயைப்பிடுங்கறீங்களே//
ஹா..ஹா..டிட்டோ

said...

உஷா அக்காவை, நினைவு கூர்ந்த அருமை தம்பிக்கு இந்த பாடலை டெடிகேட் செய்கிறேன்
:-))

"என்ன கத சொல்ல சொன்னா என்ன கத சொல்லுரது?
சொந்த கத சோக கத, நெஞ்சுக்குள்ள நிக்கிறது "

said...

பதிவில் நிறைய விடயங்கள் நாகரீகம் கருதி சொல்லாமல் விடப்பட்டுள்ளது, இருந்தாலும் ஒன்றே ஒன்று அவரின் ATM அட்டை கூட மனைவியால் வாங்கப்பட்டுவிட்டது. நல்ல காலம் பிறக்க வேண்டுவோம்...

நன்றி

said...

என்ன எல்லாரும் அந்த பெண்ணப் போட்டு வாங்குறிங்க?., வெளிநாட்டு வேலையில இருக்கேன்னு என்னா பந்தாப் பண்ணுறிங்க?., நம்மாளுக எங்கைய்யா தரையில நடக்குறாய்ங்க?., மிதப்புலல்ல திரியுறாய்ங்க?. எல்லாம் நீங்க விடுற பந்தாவப் பாத்து பெரிசா நினைச்சுக்கிறதுதான். அமெரிக்கா வர்றதுக்கு முன்ன நியூஜெர்சி இப்படி, நியூயார்க் இப்படின்னு ஒரே அளவதான் நம்ம நண்பர் கூட்டத்துக்கிட்ட இருந்து., ஆனா நான் எப்பவுமே லவுகிக சோற்றுப் பிண்ட அலைச்சல் வாழ்விலிருந்து விடுதலை (அட., பின் நவீனத்துவம் விளையாடுது) அடந்து விட்டதுதானால் எதையும் பெரிசா எடுத்துக்கல ., வந்து பாத்தாதான் தெரியுது நியூஜெர்ஸி அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருக்கிற பூச்சித் தொல்ல உலகத்துல எந்த ஊர்லயும் இருக்காது. எல்லாத்தையும் செகண்ட் ஹேண்ட்ல வாங்கிட்டு இந்தப் பசங்க விடுற பந்தா....(கவனிக்கவும்., இதை நான் குறையாகச் சொல்லவில்லை.)நீங்க உருவாக்கி வைத்திருக்கிற பிம்பம் தவறானது. அதை எதிர் கொள்ளும் பெண்ணின் அதிர்ச்சியை ஏன் குறை சொல்கிறீர்கள்?. வாங்குகிற சம்பளத்த வர்றவக்கிட்ட சொல்ற... ஆனா கிரிடிட் கார்டுல நீ வாங்கியிருக்கிற கடனைச் சொல்லி இருக்கிறியா?., ஒரு புள்ள., அது நல்லா சிக்கப்பூர்ல வேளை பார்த்து நிம்மதியா வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்துது., இங்கேயிருந்து போனாரு நம்ம மைனரு., திருமணம் செய்து கூட்டிட்டு வந்து., (சம்பளம் 60 K ந்னு சொல்லியிருக்கிறார்., டேக்ஸ் பிடிக்கிறத எல்லாம் சொல்லல., பொத்தாம் பொதுவா 60) நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து பொண்ண அசத்தி., மெதுவா சொலியிருக்கிறார்., "இங்க பாரு டார்லிங்.... வீட்டு லோன், (அவரு அவுங்க அம்மா அப்பாவுக்கு கட்டிக் குடுத்தது).நம்ம திருமணத்துக்கு செலவு செஞ்சது (பூராம் பொண்ணு வீட்டுல பண்ணியிருக்காங்க), கார் லோன்., கிரடிட் கார்டு லோன் இப்பிடிக் 'கொஞ்சம்' கமிட்மெண்ட்ஸ் இருக்கு. மாசம் 200$ தான் வீட்டுக்கு செலவுக்கு தர முடியும்னு 'ஆட்டம் பாம' அசால்ட்டா தூக்கி போட., பொண்ணு அழுதுக்கிட்டே நம்ம வீட்டுக்கு வந்தது., அப்புறம் என்ன? இப்ப சமையல தாளிக்கிறது மட்டும்தான் அந்தப் பொண்ணு வேலை., மத்தது எல்லாம் தம்பிதான். அப்பெண் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பெண்ண 'வெப்' கேமிராவில் மட்டும் பார்த்து கரம் பற்றியிருந்தார் ஒருவர். பொண்ணு வந்து இறங்குன அடுத்த நாளு., உன் பல்லு எடுப்பா இருக்கு மாத்திரலாம்னு டெண்டிஸ்டுகிட்ட கூட்டிட்டுப் போயிக்காட்டி., எங்க போனாலும் கஸ்டமர் சர்வீஸ்கிட்ட அந்தப் பொண்ணப் பேச விட்டு., டீஸ் பண்ணின்னு விளையாண்டு இருக்காரு மாப்பிள்ளை. பொண்ணு பார்த்துச்சு., இவன இப்பிடியே விட்டா சரிப்படாதுன்னு டப்புன்னு தலை முடிய வெட்டுச்சு., ஒரு டாலர் ட்ரீல போய் வேலை பார்த்துச்சு., அடுத்த மாதம் ஒரு கம்பெனில HR ல் வேலைக்கு சேர்ந்து., "ஏய்., வீட்டத் திற" ந்னு சாயந்தரம் வந்ததும் அவரிடம் சாவியத் தூக்கிப்போடுது. இப்படியெல்லாம் தன் கோபத்தை ஆக்கப்பூர்வமாக காட்டத் தெரியாத பெண்கள் அடக்குமுறையில் இறங்குகிறார்கள் இதப் பண்ணாத ., அதப் பண்ணாதே என்று. நமது இளைஞர்களின் ஈட்டும்திறன் எவ்வளவு அதிகரித்து வருகிறதோ., அவ்வளவு தன்மானமும்., நல்ல குணங்களும் குறைந்து கொண்டு வருகிறது. வேதனையுடன் இதைச் சொல்கிறேன். பெத்த அப்பன இங்க கூட்டிட்டு வந்து என்னா வேதனைப் படுத்துறாய்ங்க?. (எல்லாரையும் சொல்லல சாமி.)

///ஆர்சர்ட் சாலையிலும், CBD-யிலும் புகைப்படம் எடுத்து அனுப்பும் நமது மாப்பிள்ளை wannabe-கள் சிங்கப்பூரில் தாங்கள் வசிக்கும் வீட்டை (அ) அறையை காட்டுவதில்லை.///
100% சதவீத உண்மை., நியூஜெர்சில கார் மேல சாஞ்சு நின்னு போஸ் குடுத்து படம் அனுப்பும் போது கூடவே., கொஞ்சம் அப்பார்ண்ட்மென்டில் உள்ள கரப்பான்பூச்சியிடனும் ஒரு போட்டோ எடுத்து உங்கள் வருங்கால மனைவி ஆற்ற வேண்டிய கடமைகளைகளை குறிப்பாகவேனும் உணர்த்துக்கள் சகோதரர்களே!!!., அந்தப் பொண்ணு 'பேகான் ஸ்ப்ரேயை' எப்படியாவது கொஞ்சம் மறைத்து எடுத்து வரட்டும். இங்க எதுக்கும் போகாது.

said...

APDIPODU !!!!

said...

Kuzhali:
//ஒன்றே ஒன்று அவரின் ATM அட்டை கூட மனைவியால் வாங்கப்பட்டுவிட்டது//

cant your friend get another ATM from the bank?
In any case, I have read similar accounts in Today. It might simply be due to a disturbed mind. I wish, hope and pray that your friend and his wife would be able to sort out things

http://www.todayonline.com/articles/81301.asp

said...

//cant your friend get another ATM from the bank?
//
ATM அட்டை வாங்குவதா பிரச்சினை, அதுவல்ல, தன் முழு கன்ட்ரோலில் இருக்க வேண்டும் கிட்டத்தட்ட அடிமை மாதிரி,

// I wish, hope and pray that your friend and his wife would be able to sort out things
//
நாங்களும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

said...

அப்படிப்போடு..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்!