நட்சத்திரம் - செல்லம் ஐ லவ் யூ டா

நம்ம அண்ணாத்தே ஒருத்தர் இருக்காருங்க, நம்ம விட ஒரு அஞ்சு ஆறு வயசு பெரியவரு, நிறைய படிச்சவரு, பேருக்கு பின்னாடி MSc,MPhil,BEd,AMIE அப்படினு நிறைய பட்டமுண்டு, நிறைய புத்தக படிப்பும் படிச்சவர், எல்லா வெசயமும் பேசுவாரு, நமக்கு சின்ன வயசில அவருதாங்க குரு மாதிரி, எல்லா விசயமும் பேசுவாரு எல்லா லாஜிக்கும் பேசுவாரு விஜயகாந்த் படத்தில இடிக்கிற லாஜிக்க தவிர, சும்மாவா தாயகம், கஜேந்திரா படம்லாம் 10ரூபாய் கலெக்ஷன் ஆச்சினா அது நம்ம அண்ணாத்தயால தான், அண்ணாத்த கிட்ட எத்தனை சிக்கலான கணக்கு கொடுத்தாலும் போடுவாரு ஆனால் அண்ணாத்த கிட்ட 1+1 என்னனு நேரடியா கேட்ட பதில் சொல்ல தடுமாறுவாரு, அதான் எல்லாத்தையும் குறுக்க யோசிக்கிறவரு அதையும் குறுக்க யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு. அதனால அவருக்கு ஊருல வச்சிருக்கிற பட்ட பேரு "புடுங்கி ஆழ்வார்" , "ஏன்டா உன் வயசென்ன, அவன் வயசென்ன அவனோடு சேந்து நீ சுத்திகினு இருக்க, அவன் பெரிய புடுங்கி ஆழ்வார், நீ சின்ன புடுங்கி ஆழ்வாரா?" என்று இலவச அறிவுரைகள் வேறு எனக்கு அப்போப்போ யாராவது தருவாங்க.

போன வருடம் வந்தாருங்க சிங்கப்பூருக்கு சுத்தி(சுற்றி) பாக்க, அப்போ தான் நம்ம இன்னொரு நண்பருக்கு திருமணம் நிச்சயமாயி இருந்தது, தெனம் தெனம் கடலை தான், அட ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிச்சி மறு நாள் காலையில எட்டரை மணி வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தாருனா பார்த்துக்கோங்க, சும்மாவா சிங்டெல் நிறுவனம் அவ்வளோ லாபம் சம்பாதிக்குதுனா !!!

அன்னிக்கு ராத்திரி புலி நேரத்தில்(Tiger Time) Tiger என்பது ஒரு பியரின் பெயர் நம்ம அண்ணாத்தேயும் நம்ம நண்பரும் பேச ஆரம்பிச்சாங்க, நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம், ஏதேதோ பேசி கடைசியா வந்து நின்ன இடம் காதல்திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? எது சிறந்தது என்று, அட இதைத்தான் 'அட வாங்கய்யா' என்று சாலமன்பாப்பையாவும் 'அப்புடித்தான்' என்று லியோனியும் இன்ன பலரும் பேசி பேசி முடிச்சிட்டாங்களேனு ஒரு அலுப்பு (யெய்யா இளம் காதல் கவிஞர் சிங்.செயக்குமாரரே நல்லா கேட்டுக்குங்க) ஆனாலும் நம்ம அண்ணாத்தே தான் புடுங்கியாழ்வார் ஆச்சே எதுனா வித்தியாசமா சொல்லுவாருனு காதை தீட்டிக்கிட்டேன்.


மொத கேள்வி நம்ம நண்பர பார்த்து அண்ணாத்தே கேட்டது, "ஏன் தம்பி உங்களுக்கு நிச்சயமான பொண்ண எத்தனை நாளா தெரியும்"னு

"அது வந்து ஒரு மாசமா தெரியும்"

"அதுக்கு முன்னால தெரியாதில்ல"

"ஆமாம்"

"சரி இந்த ஒரு பொண்ணுதான் பார்த்திங்களா? இல்ல வேற பொண்ணுங்களும் பார்த்திங்களா?"

"ஒரு 4,5 பொண்ணு பார்த்திருப்பேன்"

"சரி அந்த 4,5 பொண்ணுல ஏதோ ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியிருந்தாலும் இதே மாதிரிதான பேசுவிங்க?"

அண்ணாத்த எங்க வர்றாருனு எனக்கு புரிஞ்சிபோச்சி

"ம்... சொல்லுங்க..."

"ஆமாம்..."

"அந்த பொண்ணுகிட்டயும் நீ இல்லாமல் நான் இல்லை, நீ தான் என் உயிர்னு டயலாக் விடுவிங்க தானே?"

"ஆமாம்...."

"அப்போ உங்களுக்கு அந்த பொண்ணு மேல லவ் இல்ல, உங்க மனைவி அல்லது மணைவியா வரப்போறவங்க மேல தான் லவ்வு"

"என்ன சொல்றிங்க, அந்த பொண்ணுதானே என் மனைவியா வரப்போறவங்க"

அண்ணாத்தே பேச்சு எனக்கு புரியும்.. ஆனா பாவம் நம்ம ஆளுக்கு அடிச்ச பீரெல்லாம் இறங்க ஆரம்பிச்சிடுச்சி

"சரி தம்பி தெளிவாவே சொல்லுறேன், அதாவது நீங்க அந்த பொண்ணை லவ் பண்ணலை, உங்களுடைய மனைவிங்கற ரோலை(Role)த் தான் லவ் பண்ணுறிங்க, இந்த பொண்ணுனு இல்லாம வேற எந்த பொண்ணு உங்க மனைவிங்கற ரோலை ப்ளே(play) பண்ணினாலும் லவ் பண்ணுவிங்க"

"ம்...."

"சரியா சொன்னா அந்த பெண் மீதான ஈர்ப்பைவிட அந்த பெண்ணின் ரோல் மீதான ஈர்ப்புதான், வேற பொண்ணை நிச்சயம் செஞ்சிருந்தாலும் அந்த பொண்ணுகிட்டயும் கண்ணே, மணியேனு கொஞ்சியிருப்பீங்க"

"ம்..."

"அந்த பெண்ணினுடைய சுயம் உங்களை கவரவில்லை, ஆனால் காதல் கல்யாணத்தில அந்த பொண்ணோட சுயம் உங்களை கவரும்"

கடுப்பான நண்பன் அனைத்து விரல்களையும் மடக்கி கை முட்டியை உயர்த்தினான், ஆஹா அண்ணாத்தே சிங்கப்பூர் வந்து அடி படப்போறாருடானு நெனச்சேன்.

டப்பென்று சுண்டு விரலை மட்டும் உயர்த்தி போயிட்டு வந்துடறேன் என மூச்சாக்கு போனான்.

அவன் இல்லாத அந்த நேரத்தில நம்ம அண்ணாத்த கிட்ட ஒரு விடயம் சொன்னேன், அது பதிவு முடிவுல வச்சிக்கலாம்.


முகம் கழுவி தெளிவாக வந்திருந்தான். குடித்த புலி பால் சாரி சாரி புலி பீர் மயக்கம் முகத்தில் இல்லை.

"அண்ணே நீங்க ரொம்ப படிச்சவரு நிறைய தெரிஞ்சவரு, உங்க அளவுக்கு நான் இல்ல"

இப்படி சொன்னவுடன் என்னை ஒரு முறை திரும்பி பார்த்து புன்னகைத்தார், கேட்டுக்கோடா என்னமோ எல்லாம் புடுங்கியாழ்வார்னு சொல்லுறாங்க இங்க பார்த்தியா இந்த தம்பி என்ன சொல்றான்னு என்பது போலிருந்தது.

"நீங்க சொன்ன மாதிரியே எனக்கு என் மனைவி அப்படிங்குற ரோல் மேல தான் பாசம், ஆனா பாத்திங்கனா நான் ஒரு நாலஞ்சு பொண்ணு பார்த்தேன், அந்த பொண்ணும் அப்படித்தான் நாலஞ்சு மாப்பிள்ளை பார்த்தாங்க, மனைவி அப்படிங்கற ரோல் மேல மட்டும் தான் ஈர்ப்புனா இந்த பொண்ணை மட்டும் பார்த்த உடனே எனக்கு எப்படி பிடித்தது? அப்போ அந்த மனைவிங்கற ரோலையும் தாண்டி அந்த பொண்ணை ஏதோ ஒரு விதத்தில எனக்கு பிடித்திருந்ததால் தானே"

ஆஹா அப்படி போடு என நினைத்துக்கொண்டேன், மேலும் பேசினான்

"நிச்சயிக்கப்பட்ட திருமணம் செஞ்சவங்களில் பலரை பார்த்திங்கனா மேட் ஃபர் ஈச் அதர் மாதிரி இருப்பாங்க, நாமளே நினைப்போம் இந்த மாதிரி பொண்ணு இவனுக்கு வரலைனா இவன் காலி, இந்த பொண்ணுக்கு இந்த மாதிரி பையன் தான் கரெக்ட்டுனு நெனக்கிறோமா!!!"

"ஆமாம்..."

"அது எப்படி? கல்யாணம் செய்த அப்புறம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு மேட் ஃபார் ஈச் அதரா மாறிடுறாங்க இல்லையா?"

"அட... ஆமாம்"

"இப்போ நாம இந்த அப்பா அம்மாக்கு தான் பிறக்கனும்னு கேட்டா பிறக்குறோம், இல்லையே ஆனால் எல்லா அப்பா அம்மாவுக்கும் அவங்க பசங்களை பிடிச்சிருக்கு இல்லயா?"

"ம்...."

"இதுவும் அது மாதிரிதான் அண்ணாத்தே"

இன்னும் நிறைய பேசினான் அது இங்கே தேவையில்லை, அண்ணாத்தையை அவர் ஹோட்டல்ல விட்டுட்டு வீட்டுக்கு போகும் போது கேட்டான்

"ஆனாலும் அண்ணாத்த சொன்னதுல உண்மையிருக்கு இல்லயா?"

"இங்க பாரு, நீ பிரகாஷ்ராஜ் ஸ்டைல்ல 'செல்லம் ஐ லவ் யூ டா னு' அந்த பொண்ணுகிட்ட சொல்லும்போது உனக்கு ஷாக் அடிக்குதா உடம்புல"

"ஆமாம்..."

" 'ஐ டூ லவ்யூடா' னு அவங்க சொல்லும் போது ஷாக் அடிக்குதா "

"ஆமாம்..."

"அப்புறமென்ன அவ்ளோதான், இத்தெல்லாம் ஆராயக்கூடாதுடா, அனுபவிக்கனும், ஆராய ஆரம்பிச்ச அனுபவிக்க முடியாது, அனுபவிக்கனும்னா ஆராயக்கூடாது, போ... போ... போய்கிட்டே இரு"

ஆமா... அண்ணாத்த கிட்ட நான் என்ன சொன்னேன்னு கேக்குறிங்களா?

"அண்ணாத்தே உன்னிய மாதிரி தெளிவா ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு முடிவோட இருக்குற பசங்களுக்கு நீ பேசுற பேச்சால ஒரு பெரச்சினையுமில்ல, ஆனால் முக்காவாசி பசங்க ரெண்டுத்துலயும் இல்லாம குழம்பிக்கிட்டு மதில்மேல் பூனை மாதிரி இருப்பானுங்க ஆனா அவனுங்களும் தெரிஞ்சோ தெரியாமலோ சரியா வாழ்க்கையை நடத்திக்கிட்டு போறானுங்க, நீ அவனுங்களுக்கு இத்த சொல்றன், அத்த சொல்றேன்னு மதில் மேல் பூனையா இருக்குற பசங்களை கன்பியூஸ் பண்ணிடாதா"

என்னங்க நாஞ்சொன்னது சரி தான?!


பின்குறிப்பு
--------------
நம்ம அண்ணாத்த ப்ளாக்குலாம் படிக்கிறதில்லை அதான் தில்லா போட்டுட்டேன்.

21 பின்னூட்டங்கள்:

said...

//நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம்//

குழிலி இது ரீல் தானே. :-)

said...

வீட்டுல பார்த்து நிச்சயமான பொண்ணுக்கிட்ட ஐ லவ் யூ டயலாக் எல்லாம் சொல்லுங்களா
என்ன :-)

said...

சரிதாங்கோ, எதுவும் உள்குத்து இல்லாத பட்சத்தல :-)

said...

////நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம்//

குழிலி இது ரீல் தானே. :-)

//
கல்லூரியில் ஓரிருமுறை முயற்சித்ததில் உடம்பும் மனசும் ஒத்துக்கலை, ஆனாலும் பியரை மேலே தெளித்துக்கொண்டு விடுதியில் வந்து பலமுறை சலம்பியது உண்டு, பின்ன நாம இந்த விசயத்தில ஒன்னுமில்லைனு தெரிஞ்சா LHல நம்மள மதிக்க மாட்டாங்களே, அதனால இந்த பில்ட்-அப்பை கடைசி வரை காப்பாத்துனன், ஆனா வச்சாங்க பாருங்க ஆப்பு, நமக்கு ஆட்டோகிராப் எழுதிக்கொடுக்கும் போது குடிக்காதனு அட்வைஸ், நாசமா போச்சி... ஒருத்தொருத்தர் கிட்டயும் போய் நிரூபிச்சிக்கிட்டா இருக்க முடியும்... அதான் அப்படியே விட்டுட்டேன்...

ஆனா நெருக்கமா இருந்த என் வட்டத்து நண்பர்களுக்கு மட்டும் உண்மை தெரியும்...

said...

//இதெல்லாம் ஆராயக் கூடாது. ஆராய ஆரம்பிச்சா அனுபவிக்க முடியாது, அனுபவிக்கணும்னா ஆராயக்கூடாது.// காதலுக்குக் கூட இது பொருந்தும்தானே. போஸ்ட்மார்ட்டம் பண்ணிப் பார்க்க ஆரம்பித்தால் எந்த உறவுமே நிலைக்காது. ``Men are from Mars Women are from Venus” ன்னு ஒரு புக் வாசித்தேன். அதுதான் யதார்த்தம். எந்த சூழலிலும், ஆணும்பெண்ணும் தங்கள் சுயத்தை விட்டுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து வாழ்கிறோம் அவ்வளவுதான். உங்க நண்பர் மாதிரியே கொஞ்சம் குழப்பிட்டேனோ?

said...

உஷா,
வீட்டில் நிச்சயித்த பெண்ணுடன் விடிய விடிய கடலை போட்டு போன் பில்லு அதிகம் வந்து டின்னு கட்டிகிட்ட கோஷ்டிங்க நிறைய இருக்கு. இவங்கதான் அதிகமா `லவ் யூ' சொல்லிப்பாங்க.

said...

திருமணம் = சமுதாயத்தின் தினிப்பு!
காதல் = உடலில்
ஏற்படுகின்ற ரசாயன மாற்றம்!
இதல்லாம் வேண்டங்க முடிந்தால் தனிய இருங்கு!!!! எவ்வளவு சுகந்திரம் தொரியுமா?

said...

Annachikku print eduthu koduthaa padipaaraango....

Ada...arranged marriage is planned murder...
Love marriage is suicide....

Yaaro tamasaahaa sonnathu gyabgam varunthungo...

- Dev

said...

ஆகா! நான் வாயே திறக்கல்லப்பா!

said...

25 வருஷம் வளர்த்த அப்பா அம்மாவ விட்டுட்டு எவனோ கண்னுக்கு தெரியாதவன நம்பி இவன் தான் எனக்கு இனி வாழ்நாள் பூரா. அவன் நல்லவனோ கெட்டவனோ நம்மள எப்பிடி வச்சு காபாத்துவானோ? .எவ்ளோ பயம் இருக்கு !இதெல்லாம் சரி பண்ண வேண்டாமா ? அதான் சிங்டெல் பில் ஏறுது? அதுலேயும் சொந்த கார பொண்ணுன்னா சொல்ல வேண்டாம் . நம்மோட எல்லா வண்டவாலமும் தெரியும்.அப்பவெல்லாம் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தேன் . இப்பவெல்லம் அப்பிடி இல்லம்மா! , நீதான் எல்லாமே எனக்கு .வேற யாரும் என் மனசில இல்ல .இதெல்லாம் புரூவ் பண்ணனுமில்ல.அதுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில் ஆகும் அவ்ளோதான். மத்தபடி ஐ லவ் யூ அந்த சமாச்சாரமெல்லாம் ஆட்டமேட்டிக்கா வரும்!

said...

தாணு,
பாருங்க, இவ்வளவு வயசுக்கு பிறகுதான் சில விஷயங்கள் தெரியுது,
கண்ணை துடைத்துக் கொண்டு,
உஷா

said...

//திருமணம் = சமுதாயத்தின் தினிப்பு!
காதல் = உடலில்
ஏற்படுகின்ற ரசாயன மாற்றம்!
இதல்லாம் வேண்டங்க முடிந்தால் தனிய இருங்கு!!!! எவ்வளவு சுகந்திரம் தொரியுமா?
//
ஆஹா அண்ணாத்தே நீங்களா? வந்துட்டிங்களா இங்க...

//ஆகா! நான் வாயே திறக்கல்லப்பா!
//
ஹி ஹி...

//மத்தபடி ஐ லவ் யூ அந்த சமாச்சாரமெல்லாம் ஆட்டமேட்டிக்கா வரும்!
//
சிங்.செயக்குமார் வாழ்க

மத்தபடி பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

//வீட்டுல பார்த்து நிச்சயமான பொண்ணுக்கிட்ட ஐ லவ் யூ டயலாக் எல்லாம் சொல்லுங்களா
என்ன :-)
//
இப்போ வருடம் 2005 ஆகுதுங்கக்கா

//சரிதாங்கோ, எதுவும் உள்குத்து இல்லாத பட்சத்தல :-)
//
உள்குத்தா?!#$%^

said...

//"அண்ணே நீங்க ரொம்ப படிச்சவரு நிறைய தெரிஞ்சவரு, உங்க அளவுக்கு நான் இல்ல"//
Polaikka therintha aalyaa neer!!

said...

Annachi,
Ennaku ithu oru kulapamana visayam remba naala, ippa naan remba delinguten. nandri
--Mahendran..

said...

சம்சாரம் அது மின்சாரம்!
So, handle with extra care!!

-))

said...

சரி..சரி...சின்னப்பிள்ளைங்களா ஏதோ பேசிக்கிதுக...நானெல்லாம் இங்க மூக்கை நுழைக்கக்கூடாதுப்பா.

நான் இந்த 'ஆட்டை'க்கு வரலைப்பா..!

said...

பாத்த பொண்ணாலும் சரி, காதலிச்ச பொண்ணாலும் சரி, ம்.. பருவ வயசு பண்ற சூழ்ச்சி, மாட்றது, இப்ப தெரியாது எல்லாம், ம்.. எங்க என் பொண்டாட்டி, செல்லம் ஐ லவ் யூ டா...-:)

said...

குழலி,

நீங்க எப்போ 'செல்லம் ஐ லவ் யூ டா' சொல்லப்போறீங்க? இல்லெ சொல்லிட்டீங்களா ?:-)

உஷா,

இது என்ன ச்சின்னப்புள்ளைத்தனமா இதுக்கெல்லாம் கண் கலங்கிக்கிட்டு? ஓஓஓ...
எழுத்தாளர்கள் எல்லாம் எளிதில் உணர்ச்சிவசப்படுவாங்கன்னு எங்கியோ படிச்சேன்.
அதுதானா?

தருமி,

அய்யய்யே... ச்சீ இந்தப் பழம் புளிக்குதா? ஏங்க காதல் என்ற உணர்ர்சிக்கு வயசே கிடையாதுங்க.
அது எப்பவுமே அன்று பூத்த மலர்!

said...

so what do men think about?

Nothing... we just go and check out!!!!

said...

மனைவியைக் காதலி.

said...

பாத்த பொண்ணாலும் சரி, காதலிச்ச பொண்ணாலும் சரி, ம்.. பருவ வயசு பண்ற சூழ்ச்சி, மாட்றது, இப்ப தெரியாது எல்லாம், ம்.. எங்க என் பொண்டாட்டி, செல்லம் ஐ லவ் யூ டா...-:)