நட்சத்திரம் - எது இன்று உன்னுடையதோ

"எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்."


கீதையில் எனக்கு மிகப்பிடித்த வார்த்தைகள், இந்த பூமி, இந்த உலகம் எனக்கு என் முன்னோர்கள் தந்தது, இதை அப்படியே என் சந்ததிகளுக்கு தரவேண்டும், இந்த உலகம் எனக்கு சொந்தமானது அல்ல, இங்கே வாடகைக்குத் தான் தங்கியுள்ளேன், நான் இங்கிருந்து கிளம்பும்போது எப்படி எனக்கு கிடைத்ததோ அது மாதிரி இந்த உலகத்தை தரவேண்டும், ஆனால் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றேன்? நீர், மண், காற்று என அத்தனையையும் மாசுபடுத்திய நான் தற்போது வின்வெளியிலும் குப்பை கொட்டிக்கொண்டுள்ளேன்.

நீண்ட நாட்களாக எனக்கு உரைக்காத ஒன்று நண்பர் கூறிய பிறகு உரைத்தது, சாலைவழிப் பயணத்தின் போது கிட்டத்தட்ட சாலைகள் முழுக்க ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் குப்பைகள், இந்த பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கும் சுற்றுப்புற சூழல் மாசுபாடு மிக அதிகம்.

அதை எரிக்கும் போது வெளிவரும் நச்சு வாயு கடுமையான சுகாதாரப் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.

மேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 இலட்சம் ஆண்டுகள் வரை கூட எடுக்கின்றது, இந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மண்ணில் புதைவதால் மழை நீர் நிலத்தில் இறங்குவதை தடுக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக பல இடங்களில் பயன்படுத்தப்படும் ஃபோம் கோப்பைகளும் ஃபோம்களும் பிளாஸ்டிக்கை விட மோசமானது, அவைகள் எத்தனை இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் மக்காது, நீண்ட நாட்கள் வரை ஃபோம் மக்கவே மக்காது என்ற உண்மை எனக்கு தெரியாது.

Length of Time for Trash to Decompose

aluminum can 350 years
banana peel 2 months
baseball bat (wooden) 20 years
baseball glove (leather) 40 years
car tire do not know - maybe never
cardboard milk carton 5 years
corn on the cob 18 years
cotton diaper 4 months
disposable diaper 500 years
glass bottle do not know - maybe never
newspaper 20 years
notebook paper 3 months
painted wooden stake 13 years
plastic sandwich bag 400 years
plastic six-pack ring 450 years
polystyrene foam cup do not know - maybe never
rope 3-14 months
steel can 100 years
tin can 100 years
toothbrush 400 years
traffic ticket 2-4 weeks
wool mitten 5 years


இந்த முறை பெய்த மழையில் பல இடங்களில் கழிவுநீர் வடிகால்கள் சரியாக வேலை செய்யவில்லை, சாக்கடைகள் எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைத்துக்கொண்டுவிட்டன, எனவே மழை நீர் வெளியேறாமல் சாலைகளுக்கும் வீடுகளுக்கும் வந்தன, மண்ணில் புதைந்துள்ள இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மழைநீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீர்மட்டத்தை உயரவிடாமல் தடுக்கின்றன.

இந்த படம் சாக்கடையின் அருகில் எடுத்த படம், முழுக்க முழுக்க பிளாஸ்டிக் குப்பைகள்.

Image hosted by Photobucket.com

தென்பெண்ணை ஆற்றின் உள்ளும் கரையோரத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் இந்த படத்தில்.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com



இதில் என்ன பிரச்சினையென்றால் எய்ட்ஸ் பயம், அல்லது குறைந்த பட்சம் எய்ட்ஸ் வந்தால் குணப்படுத்த முடியாது என்ற ஒரு விழிப்புணர்ச்சியாவது பலரிடம் உள்ளது, ஆனால் இந்த உலகை பிளாஸ்டிக் குப்பையால் அழித்துக் கொண்டுள்ளோம் என்ற உணர்வு / குற்ற உணர்ச்சி கூட நம்மிடம் இல்லை, இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்ற மனப்பாண்மை உள்ளது, அல்லது இந்த பிரச்சினையை பற்றி ஒரு Seriousness இல்லை என்பதும் உண்மை.

அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்கவே முடியாத சூழல் இப்போது, ஆனால் அதன் பயன்பாடுகளை குறைப்பதும், மீள்சுழற்சி(re-cycling) முறையில் பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்துவதும் இன்றியமையாதது.

மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியே பிரித்து போடும்படி நகராட்சி அறிவுறுத்தியும் குப்பைத் தொட்டியில் போடாமல் அதனருகில் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டிருக்கும் படம் இது.

Image hosted by Photobucket.com


இதைப்பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட வரவில்லை, அதைப்பற்றி ஊடகங்களும், நாமும் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்திற்கு இணையாக பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சியும் தற்போதைய அவசரத்தேவையாக இருக்கின்றது, இல்லையென்றால் நாளை நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் உலகம் என்கிற இந்த வீடு பிளாஸ்டிக் குப்பைகளால் அழிக்கப்பட்டிருக்கும்.

உடனடித்தேவை பிளாஸ்டிக் குப்பை பற்றிய குற்ற உணர்ச்சியும் விழிப்புணர்ச்சியும்

15 பின்னூட்டங்கள்:

said...

குழலி,
நன்றாகச் சொன்னீர்கள்.


//இதில் என்ன பிரச்சினையென்றால் எய்ட்ஸ் பயம், அல்லது குறைந்த பட்சம் எய்ட்ஸ் வந்தால் குணப்படுத்த முடியாது என்ற ஒரு விழிப்புணர்ச்சியாவது பலரிடம் உள்ளது, ஆனால் இந்த உலகை பிளாஸ்டிக் குப்பையால் அழித்துக் கொண்டுள்ளோம் என்ற உணர்வு / குற்ற உணர்ச்சி கூட நம்மிடம் இல்லை, இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்ற மனப்பாண்மை உள்ளது, அல்லது இந்த பிரச்சினையை பற்றி ஒரு Seriousness இல்லை என்பதும் உண்மை.//


குப்பை

இதை யாரும் பார்ப்பதே இல்லை.
அப்படியே பார்த்தாலும் அது எதோ அரசாங்க வேலை அவர்கள் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று போய்விடும் மனப்பான்மை.

குப்பைத் தொட்டியும் வைத்து, அதில் "குப்பையை குப்பைத் தொட்டியில் போடவும் " என்று எழுதி வைக்கும் கொடுமை தமிழ் நாட்டில் மட்டுமே உண்டு. அப்படியே எழுதினாலும் யார் அதில் ஒழுங்கா போடுறாங்க? சென்னையில் தங்கியிருந்த காலத்தில் அந்த தெருவில் ,நானும் எனது நண்பனும் மட்டுமே அந்த குப்பைத் தொட்டியில் ஒழுங்காக குப்பையைப் போடுபவர்கள்.

மாடிவீட்டு நாகரீக குடும்பங்கள் மாடியில் இருந்து கொண்டே ரோட்டில் இருக்கும் குப்பைத்தொட்டிக்கு குப்பையை shoot செய்துவிட்டு ,அது தெருவையே சேதமாக்கப்போகிறது என்ற சொரணை கொஞ்சமும் இல்லாமல், தனது வீட்டை மட்டும் கூட்டிப் பெருக்கி கோலம் போட்டு வியாக்யானம் பேசிக் கொண்டு இருப்பதை பல காலம் சென்னையில் அனுபவித்தவன்.

எது எதுக்கோ உணர்ச்சிவசப்படும் தமிழன் அவன் வாழும் இடம் குப்பையாக இருக்கிறதே என்று கவலைப்படுவதே இல்லை. அவனுக்கு வேறு பல வேலைகள் உள்ளது.

பிளாஸ்டிக் குப்பை

ம்..ம்.. குப்பை பற்றிய ஞானமே வரவில்லை....ஏதாவது புரிந்தால் தானே குற்ற உணர்வு வரும்.
அப்படி வந்தால்தானே பிரச்சினையை பற்றி ஒரு Seriousness வரும்.

தமிழக பொதுஜனம் கல்வி, அறிவு, அந்தஸ்து ,சாதி,மதம்,அரசியல் எல்லாம் கடந்து ஒற்றுமையாய் இருப்பது குப்பை விசயத்தில் மட்டுமே.
யாருக்கும் சொரணை இல்லை.

அய்யா யாரும் தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்ட எனக்குள்ள உரிமையைப் பற்றிக் கேள்வி கேட்கவேண்டாம். வழக்குத் தொல்லையெல்லாம் தாங்க முடியாது.
சிலுக்குவார்பட்டியில் இருந்து கோடம்பாக்கம் வரை ஒரே மாதிரிதான் நம் சுகாதாரம் ஆடுகிறது.

said...

குழலி உங்கள் பதிவுகளிலேயே நான் மிகவும் ரசித்தது இந்தப் பதிவைத்தான். இரண்டு + ஓட்டு போட முடியுமா? அதற்கு வழி இருக்கின்றதா?

நல்ல செய்தியைச் சொல்லியிருக்கின்றீர்கள். சமீபத்தில் மிகப் பிரபலமான ஒரு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு குப்பைகளைப் பிரிப்பதற்கு மூன்று நிறங்களில் தொட்டி வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைக்கு. அதைப் புரிய வைக்க ஒரு பெரிய படமும் விளக்கமும் போட்டிருந்தார்கள்.

இருந்தாலும் பல படித்த மடையர்கள் அதைச் சட்டை செய்யாமல் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து வருத்தம் வந்தது. கொஞ்சம் விழிப்புணர்வோடு இவர்கள் இருக்கக் கூடாதா!

said...

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருப்பது குறித்து நானும் என் நண்பரும் இதுபோலவே விவாதித்தோம்.

ப்ளாஸ்டிக் தவிர மற்ற விஷயங்களின் மக்கும் தன்மை குறித்தும் விளங்க எழுதியதற்கு நன்றி. என் மகளிடம் காட்டப் போகிறேன்.

said...

ராகவன்,
"இருந்தாலும் பல படித்த மடையர்கள் அதைச் சட்டை செய்யாமல் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தார்கள். "// -இதுக்கே இப்படி கோபப்படுகிறீர்கள். இந்த ATM cubicle-களில் இருக்கும் குப்பைத்தொட்டியையே நம் மக்கள் (படித்தவர்கள்;மேதாவிகள்!)பயன்படுத்தாமல் வெளியே 'கடாசி'விட்டுப் போகிறார்கள். அவ்வளவு பொறுப்பு. இப்படி இருப்பவர்கள் வீதியில் எப்படி இருப்பார்கள்??

said...

is this real kuzali?

said...

கல்கத்தாவில் தங்கியிருக்கும்போது உடன்தங்கியிருந்த தோழியிடம் கற்றுக்கொண்ட ஒரு பழக்கம்..

வெளியில் நாங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சுத்திக்கொண்டிருப்போம், அப்பொழுது வாங்கிச்சாப்பிடும்போது மிஞ்சும் பேப்பர், பிளாஸ்டிக் பேப்பர் ஆகியவற்றை வழியில் குப்பைத்தொட்டி இல்லாவிடில், தன் கைப்பையில் சேகரித்துவிட்டு.. வீட்டுக்கு வந்ததும் குப்பைத்தொட்டியில போடுவாங்க..

சின்ன பழக்கம்னாலும், ரொம்ப நல்ல பழக்கம்னு அப்போ செய்ய ஆரம்பித்தது..

நீங்கள் கொடுத்திருக்கும் லிஸ்ட், informative-ஆக இருக்குது..

-
செந்தில்/Senthil

said...

வெளி நாடுகள்ல Waste management (WM)ங்க முறையில அதிக கவனம் செலுத்தி,இந்த பிளாஸ்டிக் உபயோகத்தையே குறைச்சிட்டாங்க. தனி தனி தொட்டிங்க வச்சு, பாட்டில், கேன்னுக்கு, பிளாஸ்டிக்குன்னு முறையா அதை எடுத்து WM வண்டிங்க எடுத்து போகுதுங்க. மக்களுக்கு அதனால உண்டாகிற பிரச்சினை தெரிஞ்சிருக்கு. பொருள் வாங்க பிளாஸ்டிக் பைல வேணும்னா காசு கொடுத்தாகனும்

said...

குப்பையும், அதனைச் சரியாகக் கையாளாததால் உண்டாகும் சுகாதாரச் சீர்கேடுகளைக் குறித்த எண்ணமே பெரும்பாலானோருக்கு எழுவதில்லை. அதிலேயே வாழ்ந்து பழகிப்போய்விட்டதால் அதைக் கேவலமாகக் கருதுவாருமில்லை.

ரயிலில் பயணம் செய்யும் போது பார்த்தால், இருபக்கங்களிலும் குறிப்பிட்ட தூரத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத இடத்தைச் சுட்டுவது கடினம்.

ஒரு பக்கம் கரியமில வாயுக்களால் வான் வெளி அழிந்து கொண்டிருக்கிறதென்றால் மற்றொரு பக்கம் இவ்வாறாக பூமியும் சிதைந்து கொண்டுள்ளது.

said...

குழலி,

'அருமையான பதிவு'ன்னு சொல்றதே பழக்கமுன்னாலும் இது சூப்பர் பதிவுங்க.

இந்தக் குப்பை விஷயத்தைப் பத்தி எவ்வளோவேணாலும் எழுதலாம். நம்ம ஜனங்கள் கவனமா இருக்கறதில்லையே(-:

அவுங்களுக்கோ ஆயிரம்வேலை தலைக்குமேலே. இதெல்லாம் வெறும் குப்பை விஷயம்தானே?

மக்கள் முழிச்சாத்தான் இதுக்கு விடிவு.

said...

குழலி: குப்பைகளால் இயற்கை சூழலுக்கு மட்டும் இல்லை, கோக் போன்ற பானங்களில் இணைத்துவரும் பிளாஸ்டிக் வளையங்களில் சிக்குண்டு இறந்து போன பறவைகள் அதிகம். நியுயார்க்கில் இவற்றை ஆறுகளில் விட்டெறிந்தால் அபராதம் உண்டு.

said...

சிங்கையில் மூன்று விதமான குப்பைத் தொட்டிகள் அனைத்து புகைவண்டி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் வைக்கப் பட்டுள்ளன.

said...

வெளி நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் நம்ம நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு ரீ சைக்கிள் செய்யப் படுகிறது., பல இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் தொட்டியாக நம் நாட்டை உபயோகப் படுத்துகின்றனர்., பணத்திற்காக நம்மாட்களே இதற்கு உட்ந்தையாகவும் இருக்கின்றனர்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

மிகவும் அருமையான பதிவு. பாராட்டுகள்.

நானும் முன்பு எல்லாம் அதிக கவனம் செலுத்தியதில்லை, எங்கே, ஏது என்று பார்க்காமல் கையில் இருக்கும் குப்பையை போட்டு விடுவேன்.

ஒரு நாள் தினமலரின் செய்தி படித்தேன், அதில் வெளிநாட்டு பயணிகள் இருவர் பஸ்ஸில் பயணம் செய்யும் போது வேர்க்கடலை வாங்கி சாப்பிட்டதாகவும், அவற்றின் கூட்டை தங்கள் கைப்பையில் சேகரித்து, பஸ் நிலையத்தில் குப்பைத் தொட்டியில் போட்டதாகவும், அந்த பஸ்ஸில் ஏற்கனவே ஒரு வண்டி குப்பை இருப்பதையும் படம் பிடித்து போட்டிருந்தார்கள். நாமாக இருந்தால் ஏற்கனவே குப்பை கிடக்கிறதே, இதுவும் கிடந்துபோகட்டும் என்று தானே நினைப்போம்.

அந்த செய்தியானது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது, இப்போ எல்லாம் ஒரு சின்ன குப்பையை கீழே போடப்போனால் கூட அந்த செய்தி மனதில் நினைவுக்கு வரும், உடனே அதை என் பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு, குப்பை கொட்டும் இடம் வந்தால் போடுகிறேன்.

மேலும் வீட்டில் சிறுவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும் போது, அந்த சாக்லெட் கவரை தூக்கி கீழே போடாமல், அவர்களாகவே குப்பை தொட்டியில் போடவும் சொல்லிக் கொடுக்கிறேன், அவ்வாறு செய்தால் மேலும் ஒரு சாக்லெட். நாம் நம் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

said...

i think this is, by far, the best post you've ever made.
I remember the days when we used to carry "manja pai" or any other cloth bag when we went shopping. Its high time we return back to that again instead of using dozens of plastic bags every week. That could be a good start and we could build on top of that.
It would be nice if you post on simple ways we could protect the environment. It might create some awareness amongst us here in this forum.