இந்த வார த(பி)த்துவங்கள்

இன்னைக்கு தூங்குனா நாளைக்கு எந்திரிக்கலாம்
நாளைக்கு தூங்குனா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

பஸ்ல கலெக்டரே ஏறினாலும்
மொத சீட்டு டிரைவருக்கு தான்

சைக்கிள் கேரியர்ல டிபன் வச்சி எடுத்துகிட்டு போகலாம்
டிபன் கேரியர்ல சைக்கிள வச்சி எடுத்துகிட்டு போக முடியுமா?

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமா தியேட்டர்
உள்ள போயி டிக்கெட் வாங்கினா அது ஆப்பரேசன் தியேட்டர்
(சில படங்களை காசு கொடுத்து உள்ள போயி பார்க்கும் போது ஆப்பரேசன் தியேட்டருக்கு போன மாதிரி இருக்கும்)

என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால
மீன் குழம்புல நீந்த முடியுமா?

அயர்ன் பாக்ஸ்ல அயர் செய்ய முடியும்
ஆனா பென்சில் பாக்ஸ்ல பென்சில் செய்ய முடியுமா?
இது தான் வாழ்க்கை

நீ என்ன தான் காஸ்ட்லி மொபை வச்சிருந்தாலும்
அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் செய்து வச்சிருநதாலும்
உனக்கு நீயே கால் செஞ்சிக்க முடியாது
இது தான் வாழ்க்கை

க்ரீம் பிஸ்கெட்டுல க்ரீம் இருக்கும்
ஆனா நாய் பிஸ்கட்டுல நாய் இருக்குமா?

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கலாம்
ஆனா ஆயிரம் யானை நினைச்சாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது.

குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்
குப்புற படுத்துகிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது

என்னதான் கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கியிருந்தாலும்
சொறிநாய் துரத்தினா ஓடித்தான் ஆகனும்
(ஹி ஹி.... )

சேர் உடைஞ்சா உக்கார முடியாது
கட்டில் உடைஞ்சா படுக்க முடியாது
ஆனா முட்டை உடைஞ்சாதான் ஆம்லெட் போட முடியும்
(அதனால உனக்கு கஷ்டம் வந்தா ஆம்லெட் போட தான்னு நினைச்சிக்கோ...)

உலகம் தெரியாம வளர்பவன் வெகுளி
கிரிக்கெட் தெரியாமல் விளையாடுபவன் கங்குலி
(மன்னிச்சிக்கோ வாத்தியாரே....)

வழக்கம் போல தமிங்கிலத்தில் தட்டச்சியது மட்டும் நான்...

23 பின்னூட்டங்கள்:

said...

கலக்கிட்ட சாமி

said...

//நீ என்ன தான் காஸ்ட்லி மொபை வச்சிருந்தாலும்
அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் செய்து வச்சிருநதாலும்
உனக்கு நீயே கால் செஞ்சிக்க முடியாது
இது தான் வாழ்க்கை

என்னதான் கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கியிருந்தாலும்
சொறிநாய் துரத்தினா ஓடித்தான் ஆகனும்//

athu sari

said...

//இன்னைக்கு தூங்குனா நாளைக்கு எந்திரிக்கலாம்
நாளைக்கு தூங்குனா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?//

String தியரிப்படி பார்த்தால் முடியும். :-)

said...

என்ன வலி வந்தாலும் பல்லக் கடிச்சிட்டு பொருத்துக்கலாம்
பல்வலி வந்தா எதக் கடிச்சிக்கிட்டு
பொருத்துக்க முடியும் ?

said...

பஸ்ல நீ ஏறினாலும்
பஸ் உன் மேல ஏறீனாலும்
டிக்கட் வாங்கப் போறது நீதான்:-)


அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்;
பல் கொட்டினா வேற பல் வாங்கலாம்;
ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது:-)

said...

பித்தனின் பித்தளை மொழிகள் பிரமாதம் அதனை தொகுத்து வழங்கிய த(பி)த்துவங்கள் அருமை தான்.

said...

மீனை வெயில்ல போட்டா கருவாடு
கருவாட தண்ணீல போட்டா மீனாவுமா?

போட்டு தாக்கிட்டோம்ல!;-)

said...

கொட்டாவி விடும் பொழுது தண்ணி குடிக்கமுடியாது :-)

said...

குழலி.. நம்மதையும் சேர்த்துக்கங்க...

வாழ்க்கைல எல்லாரையும் பழிவாங்க முடியாது! என்னைக்குமே காக்காநாளதான் நம்ப மேல 'கக்கா' போகமுடியும். ஆனாபாருங்க.. நம எவ்வளவு முயற்சிசெஞ்ச்சாலும் காக்கா மேல நாம... ஹிஹி..

அதேபோலா எல்லோராலையும் எல்லா வேலையையும் செய்ய முடியாதுங்க.. கையால 'கால்' கழுவலாம். ஆனா என்னைக்கும் 'காலால' கைய கழுவவே முடியாது!

ஒரே குடும்பத்துல இருந்து வந்தாலும் ஒரே குணம் இருக்காது.. பாருங்க.. பாமாயில் வச்சி வடைதான் சுடலாம்.. பெனாயிலு வைச்சு பாத்ரூம் தான் கழுவலாம்..!

350KG தூக்கற பலசாலியா இருதாலும் 'கக்கா' வந்தா போய்த்தான் ஆகணும். வெயிட்டு கம்மின்னு தூக்கிட்டு திரிய முடியாது!

அய்யோ.. கப்பு தாங்கலையே.. நான் ஜீட்டு... :)

said...

இந்தப் பதிவிலும், பின்னூட்டத்துலயும் இருக்கும் த(பி)த்துவங்கள் எல்லாமே சூப்பரோ சூப்பர்!

:-)

said...

ஹி ஹி...

பின்னூட்டமளித்த, த(பி)த்துவ பின்னூட்டமளித்த அனைவருக்கும் நன்றி....

said...

மிளகாய அரைச்சா மிளகாய் பொடி ஆகலாம்
பருப்பை அரைச்சா பருப்பு பொடி ஆகலாம்

பல்லை அரைச்சா பல்பொடி ஆகுமா? இல்லேனா
மூக்கை அரைச்சா மூக்கு பொடி தான் கிடைக்குமா?

said...

http://bunksparty.blogspot.com/2006/01/blog-post.html

என்ற பதிவில் என்னுடைய பின்னூட்டம் நீக்கப்பட்டதால் அதே பின்னூட்டம் இங்கே கிட்டத்தட்ட அதே வார்த்தைகளுடன்(நினைவிலிருந்து எழுதுகின்றேன்)
----------------------
//வைகோ: இலஙகை தமிழன் காசு கொடுக்கிறான். நம்மூர் தமிழனுக்கு குரல் கொடுத்தா பிரயோஜனம் இல்லை.
//
ஆமா இவருதான் புரோக்கர் வேலை பார்த்தாரு வைகோ காசு வாங்கும்போது

எப்படிங்க கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எழுதறிங்க, எழுதும்போது உறுத்தலையா உங்களுக்கு

said...

குழலியின் கருத்தை நீக்கியது நான் தான். எனினும் மற்ற கருத்துக்க்ள் நீக்க படவில்லை. குழலிக்கு நன்றி மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கருத்து வேறுபாடு தாண்டி நாம் நட்பு தொடர வேண்டும்.அதுவே ப்லாகின் இலக்கணமாக இருக்க வேண்டும். ப்லாகின் எத்தனையோ நண்பர்களுக்கு நாம் எடுத்துக் காட்டாக இருப்போம்.

said...

No wonder.kulali was already hijacked by tiger group

said...

எப்படி இருந்த குழலி ... ( ஹை பிட்ச் வாய்ஸ்)
இப்படி ஆயிட்டாரேஏஏஏஏஏஏஏஏ ( லோ பிட்ச் வாய்ஸ்)
:-))))

said...

//எப்படி இருந்த குழலி ... ( ஹை பிட்ச் வாய்ஸ்)
இப்படி ஆயிட்டாரேஏஏஏஏஏஏஏஏ ( லோ பிட்ச் வாய்ஸ்)
:-))))
//
எதுவும் உள்குத்து இருக்குதுங்களா??

said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பாலச்சந்தர் கணேசன்.... கருத்து வேறுபாடில்லாமல் வாழ்க்கையே இல்லையே...அதையும் தாண்டி எப்போதும் நட்பாகவே இருப்போம்...

said...

//No wonder.kulali was already hijacked by tiger group
//
யாருப்பா அது..... எங்கே புலிகளை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ எங்கேயாவது எழுதியிருக்கிறேனா? பின்னூட்டமிட்டிருக்கிறேனா? ஏற்கனவே இருக்குற முத்திரையில் இன்னும் ஒன்னு சேர்க்கிறிங்களே.... இது நியாயமா?

said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

said...

த(பி)த்துவங்கள் எல்லாமே சூப்பர்.

"என்னதான் 4 காக்கா சேர்ந்து இருந்தாலும் அதை காக்கான்னுதான் சொல்லனும், முழுசுன்னு சொல்லக் கூடாது"

said...

good post keep it up

said...

நண்பரே,
நானும் கடலூர்தான்.கலக்கறீங்க!நண்பரே,
நானும் கடலூர்தான்.கலக்கறீங்க!