பாடிலாங்க்வேஜூம் வடிவேலுவும் - உடல்மொழி - 2

உடல்மொழியின்(பாடிலாங்க்வேஜ் ) முக்கியத்துவம், இரண்டாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் வடிவேலுவின் இடம்

பாடில்ங்க்வேஜ் பற்றி சும்மா ஒரு போஸ்ட் போட்டேன், நிறைய நண்பர்கள் உள்பெட்டியில் வந்து (சரி சரி இரண்டு நண்பர்கள் தான்) இதைப்பற்றி அடிக்கடி எழுதலாமே என்றார்கள், சரி நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன்,


நம்ம வடிவேலு என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர் படங்களில் வந்ததற்கும் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில் வந்ததற்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? அவருடைய வாய்ஸ் மாடுலேஷன், பாடிலாங்குவேஜ்களில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலு ஃபீல்டில் இல்லாத போதும் இன்னும் வடிவேலுவின் இடம் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணம்.


நாம் பேசும் வார்த்தைகள் மூலமே பெரும்பாலும் பிறருடன் கம்யூனிகேஷன் செய்துவிடுகிறோம், நம்முடைய வார்த்தைகளே பிறருக்கு நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்களா? அது மட்டும் போதுமா? என்றால் நிச்சயம் இல்லை.

"ராஸ்கல் என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு"

இது வடிவேலுவின் பிரபலமான ஒரு டயலாக், இந்த டயலாக்கை ரகுவரன் சொல்வது போல நினைத்து பாருங்கள், வடிவேலு சொல்வதை போல நினைத்து பாருங்கள். ரகுவரன் சொல்வது வில்லத்தனமாகவும் வடிவேலு சொல்வது காமெடியாகவும் இருக்கும்.

ஆராய்ச்சி முடிவுகள் நிரூபிப்பது என்னவென்றால் நாம் தொடர்புகொள்ள பயன்படுத்தும் மொழி, சொற்கள் மூலம் பிறர் புரிந்து கொள்வது வெறும் 7% மட்டுமே... ஆனால் 93% நாம் சொல்வதை பிறர் புரிந்து கொள்வது நம் வார்த்தைகள் மூலம் அல்ல.

நம்ப முடியவில்லையா? நம் வார்த்தைகள் நாம் சொல்ல வருவதை பிறருக்கு புரிய வைப்பதில் வெறும் 7% மட்டுமே துணைபுரிகிறது மீதி 93% என்பது நம் குரல், மாடுலேஷன், நம் உடல்மொழிகள் மூலம் தான் பிறருக்கு புரியவைக்கிறோம்.

நம் வார்த்தைகள் பிறருக்கு வெறும் 7% மட்டுமே புரியவைக்கும் என்றால் மிச்சம் 93%த்தை ஏன் நாம் கவனிக்காமல் இருக்கிறோம்? இந்த 93% ஐயும் திறமையாக பயன்படுத்தியதால் தான் சிவாஜி கணேசன், வடிவேலு போன்றவர்கள் காலத்தை தாண்டியும் நிற்பதும் எல்லா டயலாக்கையும் ஒரே மாடுலேஷனில் பேசும் நடிகர்கள் டொக்காவதும் காரணமாகும்.

நாம் பிறரிடம் தொடர்புகொள்வது

1) நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் - 7%
2) நம் குரல் (வாய்ஸ் டோன், மாடுலேஷன்) - 38%
3) நம் உடல்மொழி(பாடிலாங்க்வேஜ்) - 55%

நம் குரல் மூலம் நம்மை பிறர் புரிந்து கொள்வதும், குரல் மூலம் நாம் பிறருக்கு உணர்த்துவதும் நாம் நன்றாக அறிந்ததே.

ஆனால் 55% உடல்மொழிகள் மூலம் நாம் தொடர்புகளை மேற்கொண்டாலும் நாம் அதில் பெரும்பாலும் கவனம் செலுத்துவதே இல்லை.

ஒருவர் பேசும் வார்த்தைகளை அவர் உண்மையாக பேசுகிறாரா, அல்லது மறைத்துக்கொண்டு பேசுகிறாரா என்பதை நம்மால் கண்டுபிடித்து விட முடிந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்?

பிசினஸ் டீலிங்குகளில் கலக்கலாம், மேனேஜர் அப்ரைசலில் பட்டைய கிளப்பலாம், யாரேனும் டிவியில் பேட்டி கொடுத்தால் ஏய் பார்ரா டுபாக்கூர் உடறான் என்று கண்டுபிடித்து கலாய்க்கலாம். ஆனால் சில கில்லாடிகள் இருக்கிறார்கள் உடல்மொழியை வைத்து எங்கே நாம் டுபாக்கூர் விடுகிறோமா என்பதை கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பொய் உடல்மொழிகளை வெளிப்படுத்துவது, டிவி விவாதங்களில் பேசும்போது மண்டையை மண்டையை ஆட்டி முடியை சிலுப்பி விடுவதும், உடல் மொழியில் ஆக்ரோசமாக வெளிப்படுத்துவதையும் உற்று நோக்கினால் அது உண்மையான உடல் மொழிகளை மறைக்கும் உத்தியாக இருப்பதாக‌ கருத வேண்டியுள்ளது.

ஒருவரின் வார்த்தைகள் பொய் சொல்லலாம் ஆனால் எவ்வளவு தான் மறைத்தாலும் நம் உடல்மொழி மட்டும் பொய் சொல்லாது.

ஐந்தறிவு நாய் ஒன்று கூட்டல் கழித்தல் கணக்கிற்கெல்லாம் கூட சரியான விடையை சொன்ன அதிசயம் நடந்தது எப்படி? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தலித்கள் பொய்வழக்குகள் போடுபவர்களா? தலித்களுக்கு எதிரான சாதிவெறி பிடித்த கட்சி திமுக!

மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரது தலித் சாதியை குறிப்பிட்டு திட்டியதாக போலிசில் பிசிஆர் கேஸ் கொடுத்தார்.

ஒரு நியாயமான கட்சியாக தலித் ஆதரவு கட்சியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? கட்சித்தலைமை தலித் கொடுமை புரிந்த கட்சிகாரரை தானே கட்சியை விட்டு நீக்க வேண்டும்? ஆனால் இன்று காலை அழகிரியை அழைத்து கோபாலபுரத்தில் வைத்து கட்டை பஞ்சாயத்து செய்கிறார்கள் அந்த வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென்று.

இந்த மாதிரி வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்கவேண்டுமென்று ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தலித் சாதி மருமகனை கூப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளார்கள் சாதிவெறி பிடித்த தலித் விரோதி கருணாநிதி குடும்பத்தினர்கள். தலித் பெண்ணை திருமணம் செய்திருப்பதால் தானே அழகிரிக்கு இந்த அவமானத்தை செய்துள்ளது சாதிவெறி பிடித்த கருணாநிதி குடும்பம்.

ஒரு பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் பெறவைக்க தலித் மருமகனை மிரட்டியும் அடிபணியாததால் சாதிவெறிபிடித்த திமுக தலைமை ஆதிக்க முதலியார் சாதிவெறியர் அன்பழகன் மூலம் ஒரு தலித் விரோத அறிக்கையை வெளியிடுகிறார்கள், அதில் சாதிவெறியால் பாதிக்கப்பட்டவரையே கொடுமை செய்ததை போல சித்தரித்து வன்கொடுமை கேஸ் கொடுத்தவர்கள் பழிவாங்கும் நோக்குடன் பொய் புகார் கொடுத்துள்ளார்கள் என்று முதலியார் சாதிவெறி அன்பழகன் அறிக்கை சொல்கிறது, பிசிஆர் கேஸ்களை பொய்யாக கொடுப்பவர்கள் தலித்கள் என்று சாதிவெறியர் அன்பழகன் கூறுகிறாரா?

தலித்களுக்கு எதிரான சாதிவெறி கொண்ட திமுக தலைமை பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்க சொல்லி கட்டை பஞ்சாயத்தும் செய்து, தலித்கள் பொய்யாக கேஸ்கொடுக்கிறார்கள் என்பது போன்று அறிக்கையும் கொடுத்து கடைசியாக தலித்களின் மீதான மிரட்டலை அஞ்சாமல் எதிர்கொண்டு கேசை வாபஸ் வாங்காத தலித்களின் மருமகன் அழகிரியையும் கட்சியை விட்டு நீக்கி தான் ஒரு ஆதிக்க சாதிவெறி பிடித்த, தலித்களுக்கு எதிரான கட்சி என்று திமுகவும், அதன் தலைமையும் நிரூபித்துள்ளது.

----சாவுங்கடா---

ஒரு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஒரு சமுதாயம் அந்த காலகட்டத்திற்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஏற்கனவே இதை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன், தற்போது இங்கேயும்

சமூகம் காலத்துக்கேற்றவாறு தன்னை தானே சரிசெய்து கொள்ளும் வலிமை உடையது, அதற்கு தேவை ஏற்படும் போது அந்த பிரச்சினையின் தீர்வுக்கும் மாற்றத்துக்குமான‌ தலைவர்களை தானே உருவாக்கும், அரசியலில் தூய்மை, நேர்மை, ஊழல் இல்லாத அரசியல் என்ற ஒரு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பும் சுதந்திரத்துக்கு பின்பும் சில காலங்கள் இருந்து வந்தது. ஆனால் அது சமூக பிரச்சினைகளை சுத்தமாக ஒதுக்கிவைத்திருந்தது, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அதிகார பரவலாக்கத்துக்கு தேவையான தலைவர்கள் அப்போது தேவைப்பட்டதால் சமூகம் பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை உருவாக்கியது, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்காக அது சோஷலிஸ்ட் கட்சி ஆட்கள், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், அண்ணாதுரை, கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்றவர்களை சமூகம் தனது தேவைகளுக்காக உருவாக்கியது.

அரை நூற்றாண்டுகாலத்தில் தற்போது மீண்டும் அரசியலில் தூய்மை, ஊழலற்ற நிர்வாகம், அரசியலில் வெளிப்படை தன்மை இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் சமூகம் தனக்காக அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களை உருவாக்குகிறது. தேவை ஏற்படின் மீண்டு இந்த சமுதாயமே பெரியார், அம்பேத்கார், லல்லு, முலாயம், கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்ற தலைவர்களையும் உருவாக்கும்.

பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்...

ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி அதன் சமூக பார்வை குறித்து டிப்பிக்கல் தமிழ்நாட்டு முற்போக்கு ஸ்டைல் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன, அர்விந்த் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர் அல்ல விமர்சனங்கள் வரட்டும் நல்லது தான்.

இந்திய தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என முழங்கும் கெஜ்ரிவால் போல தமிழ்தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என்று தமிழகத்தில் வந்தால் ஒரு மாற்றத்துக்கான ஆரம்பம் ஏற்படலாம். கவிஞர் தாமரை சில நாட்களுக்கு முன் அவரது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது போல பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் தூய்மையில்லாதவர்களால் நல்ல‌ அரசியலை முன்னெடுக்க முடியாது.

மாற்று கொண்டு வருவோம் என முழங்குபவர்கள் புதியவர்களை, பொது வாழ்வில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டியதேவை உள்ளது, விஜயகாந்த் மாற்று கொண்டு வருகிறேன் என மற்ற கட்சியில் சீட்டு கிடைக்காதவர்கள், பணக்காரர்கள், உள்ளூர் தாதாக்களை எல்லாம் களம் இறக்கினால் சீன் தான்.

அப்படி வரும் புதியவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்றால் இந்த டெக்னிக்கெல்லாம் தெரிய வர கொஞ்ச நாளாவது ஆகும், அது வரை சமூகத்துக்கு லாபம் தானே!

கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? - உடல் மொழி

கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா?

சாதியொழிப்பு பற்றி பொய் சொல்லும் சுப.வீ அல்லது உண்மையை மறைக்கும் சுப.வீ.


நீயாநானா விவாதத்தில் சாதி என்பது 2000 ஆண்டு பழமையானது அதை நூற்றாண்டுகால சாதி எதிர்ப்பு போராட்டத்தால் அழித்துவிடமுடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்ய முடியும்.என்று குறிப்பிட்டார் சுப.வீ

இது தொடர்ச்சியாக திராவிட மற்றும் போலி சாதி எதிர்ப்பு ஆட்களினால் தங்களது இயலாமையை மறைக்க தொடர்ந்து சொல்லிக்கொண்டு வரும் பொய்.

2000ம் ஆண்டுகால தமிழர்களின் சித்தமருத்துவத்தை நூறாண்டில் அலோபதிக்கு மாற்ற‌ முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் உணவை  இட்லி தோசையாக நூறாண்டில் மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் மதிய உணவான புளிக்காய்ச்சலை சாம்பாராக மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழர்களின் குடுமியை நூறாண்டுகளில் கிராப்பாக மாற்ற முடிந்தது
2000ம் ஆண்டுகால தேவதாசிகள் ஆடிய சதிர் ஆட்டமென்ற நடனத்தை பரதநாட்டியமாக மாற்றி உச்சியில் தூக்கி வைக்க முடிந்தது
2000ம் ஆண்டுகால தமிழ்பெயர்கள் சுரேஷ், ரமேஷாகி இப்போ ராகுலில் வந்து நிற்க முடிகிறது

ஆனால் சாதியை மட்டும் நூறாண்டுகளில் ஒழிக்க முடியாதாம், அட ஒழிக்க கூட வேண்டாம் சாதியொழிப்பில் எவ்வளவு தூரம் முன்னேறி உள்ளது என்றால் நம் முன் தெரிவது முட்டை தான்.

நூறாண்டுகாலம் என்பது மூன்று தலைமுறை என் தாத்தா தலைமுறை, என் அப்பா தலைமுறை, என் தலைமுறை என மூன்று தலைமுறை பெரியார் தமிழகத்திலே நேர்மையாக உருவாக்கிய சாதிய ஒழிப்பு என்பதை சாதியொழிப்பு முற்போக்கு பேசுபவர்கள் நேர்மையாக கடைபிடித்திருந்தால் இந்த மூன்றாம் தலைமுறையில் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போல தமிழ்நாட்டில் பாதி பேராவது சாதியை கடந்திருப்பார்கள்.

உண்மையில் சாதியொழியாமல் இருக்க காரணம் சாதி ஆதரவாளர்களால் அல்ல... போலி சாதியொழிப்பாளர்கள் தான் சாதியை காப்பாற்றுகிறார்கள். சுபவீ ஜிங் சாங் கொட்டிக்கொண்டிருக்கும் திமுக தலைவர் அரசியலில் சாதிபார்த்து சீட்டு தருகிறார், கழகத்தின் பொதுச்செயலாளரான அன்பழகனுக்கே முதலியார் கோட்டாவில் சீட்டு கொடுத்திருந்தார்கள். தர்மபுரியின் தலித்களின் மீதான தாக்குதலில் கைதானவர்களில் 10 பேர் பாமக ஆனால் 16 பேர் திமுக, உண்மை அறியும் குழு எல்லாம் அனுப்பிய திமுக அந்த தாக்குதலில் கைதான 16 பேர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? நியாயமாக சாதியொழிப்பை பற்றி பேசும் சுப.வீ இதை கருணாநிதியிடம் கண்டிக்க வேண்டாமா? எதிர்த்து பேச வேண்டாமா?  சாதிக்கு ஆதரவளிக்கும் திமுக தலைமைக்கு எதிராக போராட வேண்டாமா? ஏன் திமுகவிடம் மட்டும் ஜால்ரா?


சாதியொழிப்பை நேர்மையாக முன்னெடுத்திருந்தால் சாதியொழிப்பு பேசும் கட்சிகள் குறிப்பாக சமீபமாக ரொம்ப சீன் போடும் திமுக காரர்கள் அனைவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும், இல்லையெனில் கட்சியிலிருந்து வெளியே போ என்று நேர்மையான சாதியொழிப்புக்கு போராடலாமே ஆனால் செய்ய மாட்டார்கள், ஏன் தெரியுமா? இவர்களுக்கு எல்லாம் தெரியும், வெளியே சாதியொழிப்பை பேசிக்கொண்டு வீட்டினுள், கட்சியினுள் எல்லாம்  சாதியை காப்பாற்றுபவர்கள்.

எங்கள் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் வட்டத்திலேயே நிறைய திருமணங்களை பேராசிரியர் அன்பழகனும், வீரமணியும், முக ஸ்டாலினும் நடத்தியுள்ளார்கள், அவைகள் எல்லாம் சாதி திருமணங்கள் தான், என்ன ஒரே வேறுபாடு என்றால் பார்ப்பன புரோகிதர்களுக்கு பதில் இந்த புரோகிதர்கள், இங்கே நேர்மையான சாதியொழிப்பு இல்லை, நேர்மையான முற்போக்கு இல்லை. நேரடியான சாதி ஆதரவாளர்களை you can identify them, you can argue with them, you can convince them. ஆனால் சாதியொழிப்பு பேசிக்கொண்டே சாதியை வைத்திருக்கும் போலி முற்போக்காளார்கள் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கொல்லும் எய்ட்ஸ் போன்றவர்கள்.

என்னையே எடுத்துக்கொள்ளலாம் சாதியொழிய வேண்டுமென்று வீரவசனமெல்லாம் பல ஆண்டுகளாக பேசிவிட்டு நான் எந்த பெண்ணுடனும் இரு தலை காதலில் இல்லாமல் இருந்ததால் திருமணத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தேன், பெற்றோர் சாதி பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நான் சாதி எதிர்ப்பாளனாம் அதனால் திருமண சான்றிதழில் 6 இடங்களில் Caste not mentione என்று குறிப்பிட்டிருந்தேன், போலித்தனமாக இல்லையா இது, திருமணம் ஒரே சாதியில் ஆனால் திருமண சர்ட்டிபிக்கேட்டில் கேஸ்ட் நாட் மென்ஷன்ட் என்றால் நான் சாதியொழிப்பாளனாகிவிடுவேனா? இது போன்ற பேச்சொன்றும் செயலொன்றுமாக செயல்படுபவர்களால் தான் சாதி சைலண்ட்டாக கட்டிகாக்கப்படுகிறது.

உதாரணமாக சுப.வீ யையும் ஜால்ராமணி ஐ ஆம் ஸாரி வீரமணி அவர்களையும் எடுத்துக்கொள்வோம்.  சாதியொழிப்பை எப்படியாகினும் செய்வேன் என்ற உறுதியிருந்திருந்தால் சாதியின் அடிப்படை, பார்ப்பனியத்தின் அடிப்படை பிறப்பால் வேறுபாடு பார்ப்பது, இன்று திமுகவின் தலைமை பதவிச்சண்டையில் இருப்பவர்கள் கருணாநிதிக்கு பிறந்த மகன்கள் ஸ்டாலின் மற்றும் அழகிரி. திமுகவின் தலைமை பதவியின் அடிப்படை ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பிறப்பால் கிடைக்கிறது.

பார்ப்பனியத்தை எதிர்ப்பதாக சொல்லும் ஜால்ராமணியின் திகவின் தலைமை பொறுப்புக்கு தயாராக இருப்பவர் ஜால்ராமணியின் மகன் அன்புராஜ், இது பார்ப்பனியம் இல்லையா?

பெரியார் சொல்லிக்கொடுத்தது சுயமரியாதை, காரைக்குடியில் திராவிடமணி என்ற ஒரு திக தலைவர், 90களின் மத்தியில் அவரது மகனை 10-12 வயதான  சிறுவனை தம்பி என்று தான் அழைக்க வேண்டும், இல்லையென்றால் திராவிடமணிக்கு கோபம் வந்துவிடும், சுயமரியாதையை அடிப்படையாக கொண்ட திராவிட கழகத்தின் தொண்டர்கள் அந்த சிறுவனை சுயமரியாதையை விட்டுவிட்டு தம்பி தம்பி என்று குழைவார்கள்.

சாதியொழிப்பிற்காக நேர்மையாக போராடாமல் பதவிக்காக சாதி, பணத்துக்காக சாதி, அதிகாரத்துக்காக சாதி, விசுவாசத்துக்காக என அவர்களின் சாதி நடவடிக்கைகளை ஆதரித்து விட்டு வாயால் சாதியொழிக என வடை சுட்டால் நூறாண்டுகள் அல்ல சுப.வீ அய்யா ரெண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்களை போன்ற போலிகளால் சாதியை ஒழிக்க முடியாது.

இதே நேரத்தில் கொளத்தூர் மணி, கோவை ராமக்கிருஷ்ணன், புதுவை லோகு அய்யப்பன் போன்ற நேர்மையான சாதி எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிக குறைவே. நமது வட்டத்திலேயே குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சுகுணா திவாகர் சாதி மறுப்பு திருமணம் தான் செய்வேன் என்று பெண் பார்த்து வேறு சாதியில் தான் திருமணம் செய்தார்(அவருடையது காதல் திருமணம் அல்ல) இவர்களைத்தான் நாம் ஆதரிக்க வேண்டும், போற்ற வேண்டும் போலிகளை அல்ல...

அமெரிக்க துப்பாக்கி சூடு, பொதுமக்களின் ஆயுதங்களை பறிக்கும் அரசும் பறிக்க கோரும் முற்போக்காளர்களும்

அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து மீண்டும் ஒரு விவாதமும் கூக்குரல்களும் துவங்கியுள்ளது, அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாராம், துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று. இதில் அறிவுஜீவி தளத்தில் இயங்குபவர்களும் கூட இதையே சொல்ல ஆரம்பித்துள்ளது தான் சற்று வேதனையான விசயம்.

எப்போதுமே ஆயுதங்கள் அதிகாரம் கொண்டவை, எவனிடம் ஆயுதம் உள்ளதோ அவனே ஆதிக்கம் செய்ய முடியும்,  எவனிடம் ஆயுதம் உள்ளதோ அவனால் தான் ஆதிக்கத்தை எதிர்க்கவும் முடியும் எனவே தான் அரசு ஆயுதங்களை தம்மிடையே குவித்துக்கொண்டும் பொதுமக்களை நிராயுதபாணியாகவும் வைத்திருக்கும்.  ஈழத்தில் புலிகளை சமாதான  ஒப்பந்தத்தில் கையெழுத்திடவைத்து முதலில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் செய்ய சொன்னது அவர்களின் ஆயுதங்களை ஒப்படைக்க சொன்னது, அதே போல புலிகளும் தங்கள் ஆளுமைப்பகுதிகளில் டெலோ, ஈபிஆர்எல்எஃப் இயக்க போராளிகள் தங்கள் ஆயுதங்களை களைய வேண்டும் என்று கெடுவிதித்து செய்தன.  எந்த அரசாங்கமும் எந்த போராளி அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சு வார்த்தையோ ஒப்பந்தத்துக்கோ வரும் போது முதலில் கேட்பது அரசுக்கு எதிராக போராடும் இயக்கங்கள் ஆயுதங்களை களைய வேண்டும், அரசுக்கு எதிராக செயல்படும் ஆயுத இயக்கங்கள் கேட்பது ஆயுதங்களை களையமாட்டோம்.

சுகுணாதிவாகர் ஒரு முறை எழுதியது இன்னமும் நினைவில் உள்ளது "துப்பாக்கி குழலில் இருந்து தான் அதிகாரம் பிறக்கும் என்றால் பெரிய துப்பாக்கி குழலிலிருந்து பெரிய அதிகாரம் பிறக்கும்"

அரசாங்கத்து எதிரான  இயக்கங்கள் ஆயுதம் வைத்திருப்பதை மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உட்பட்ட பொதுமக்களும் ஆயுதம் வைத்திருப்பதை அரசு தனது அமைப்பிற்கான அச்சுறுத்தலாகத்தான் பார்க்கிறது.  முதலில் பொதுமக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை பற்றி சொல்வதென்றால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் "அரசியல் எனக்கு பிடிக்கும்" என்ற நூலில் அரசு பற்றி எழுதியதிலிருந்து ஆரம்பிக்கலாம்... வேட்டைகலாச்சாரத்தில் இருந்த ஆதிமனிதன் அத்தனை பேரிடமும் ஆயுதங்கள் உண்டு, விலங்குகளை வேட்டையாடவும் விலங்குகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்கவும் மனிதர்கள் அத்தனை பேரும் ஆயுதங்களை தரித்திருந்தனர். காட்டை விட்டு வெளியேறி விவசாயம், சமவெளி வாழ்க்கை ஆற்றுப்படுகை நாகரிகம் என்று ஆரம்பித்த போது அரசுகள் தோன்ற ஆரம்பித்தன. அரசு தோன்ற ஆரம்பித்த உடன் முதன் முதலில் செய்த செய்கை என்ன வெனில் அது தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்தது. 

வேட்டை அல்லாத சமவெளி விவசாய நாகரீகத்தில் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் தங்கள் பாதுகாப்புக்கு மட்டுமே தேவைப்பட்டன. அரசு முதலில் மக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்த போது  ஆயுதமற்ற மக்களின் பாதுகாப்பை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியது, அதன் தொடர்சி தான் படை, இராணுவம், காவல் என எல்லாம் உருவாக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தனி மனிதனின் ஆயுதம் கைக்கொள்ளாமல் இருக்க அவனது பாதுகாப்பை ஏற்ற அரசு தனிமனிதனின் பாதுகாப்பை பல நேரங்களில் உறுதி செய்வதில்லை, அரசு எந்திரங்களான காவல்துறை, இராணுவம் எதிரி நாடு மட்டுமின்றி சொந்த நாட்டு மக்களிடமே அத்துமீறலை செய்கிறது, இதற்க்கு பல்வேறு உதாரணங்கள் இருந்தாலும் கடந்த ஆண்டு நடந்த இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூசையின் போது நடந்த பரமக்குடி துப்பாக்கிச்சூடு ஆயுதமின்றி இருந்த தலித் மக்களின் மீது ஆயுதம் தரித்த அரசின் கையாளான காவல்துறையின் அத்து மீறல் கொலைகள்.  இந்த ஆண்டு முத்துராமலிங்கத்தேவர் குருபூசையின் போது ஆயுதமின்றி இருந்த தேவர் சமூகத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அரசு கணக்கின் படி 11பேரை கொலை செய்தனர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர்.(ஆயுதமின்றி இருப்பவர்களை கொலை செய்வது என்பது சாதிவித்தியாசமில்லாமல் நடைபெறுவது, சமீப காலங்களில் குருபூசையின் போது ஆயுதங்களை கொண்டு செல்வது கிட்டத்தட்ட முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்தது, அப்படியெனில் ஆயுதமின்றி வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை, அப்படி செய்திருந்தல் பரமக்குடியில் 6 தலித் மக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள், குருபூசையில் 11 தேவர் சமூக மக்கள் கொலைசெய்யப்பட்டிருக்கமாட்டார்கள், அப்படி உறுதி செய்ய முடியாத போது அவர்கள் ஆயுதங்களை கைக்கொள்வதை தடைசெய்யக்கூடாது.

வெளிப்படையாகவே சொல்லலாம், அரசு தரும் பாதுகாப்பு போதாமல் எத்தனை எத்தனை கட்சி இயக்க தலைவர்கள் எத்தகைய பாதுகாப்புடன் ஆயுதங்களுடன் செல்கிறார்கள் என்பது அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியாதா என்ன? அவர்களை எல்லாம் விட்டு தான் வைக்கின்றன அரசு, ஏனெனில் அவர்கள் பாதுகாப்புக்கு பிரச்சினை வந்தால் சமூக சிக்கல்கள் வரும் என்பதால்.

தாளமுத்து நடராசன் என்ற காங்கிரஸ் பிரமுகர் தன் பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களால் கடுமையாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார், ஓசூரில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் புகுந்த 14 பேர் கொண்ட திருட்டு ரவுடி கும்பல் தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கற்பழித்தது, தற்போது திருடர்களால் கொள்ளையடிக்க வருபவர்கள் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது, இங்கே தனிமனிதன் ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது என்னும் அரசு என்ன மாதிரியான பாதுகாப்பை தருகிறது?

ஆயுதம் என்பது பயன்படுத்தப்பட அல்ல, பயன்படுத்தப்படாமல் இருக்கவே, ஆயுதம் அதிகாரத்தை கொடுக்கும் போது அது மிகுந்த பொறுப்புணர்ச்சியையும் தருகிறது, அந்த பொறுப்பு இல்லாமல் குருபூசைகளின் போது முந்தைய காலங்களில் எடுத்து சென்ற ஆயுதங்களை கொண்டு பொதுமக்களையும் மாற்று சாதியினரையும் தொந்தரவு செய்ததால் தற்போது முற்றிலுமாக ஆயுதங்களை தடைசெய்ய இரண்டு சமூகங்களும் வன்முறைக்கு இலக்காகி உள்ளன.

ஒரு அரசாங்கத்தால் ஒவ்வொர் குடிமகனுக்கும் 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்வது செயல்முறையில் கொஞ்சம் சாத்தியமில்லாதது தான், எனவே ஒரு அரசு குடிமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதை தடை செய்யக்கூடாது, ஆனால் அதை முறைப்படுத்தி வைத்திருக்க‌ வேண்டும். 
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவை பற்றி எப்போதுமே நிறைய எதிர்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது, அதையும் வழக்கம் போலவே நம்பி வந்திருந்தோம் எதிரிகளுக்கு மனித உரிமை தருகிறதோ இல்லையோ அவர்கள் குடி மக்களின் பாதுகாப்பை அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாக உறுதி செய்தே வந்துள்ளது. சில அடிப்படை மனித உரிமைகள்(அவர்கள் குடிமக்களுக்கு மட்டுமாவது) மற்ற நாட்டைவிட அங்கே உள்ளதாகவே தெரிகிறது. நாம் அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெறும் இம்மாதிரியான துப்பாக்கி சூட்டு கொலைகளை மட்டுமே அறிவோம், ஆயுதங்கள் தனிமனிதர்களிடம் இருப்பதால் எந்த அளவிற்க்கு அரசால் தடுக்க முடியாத பிற கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்திருந்தால் ஒரு வேளை அமெரிக்காவின் ஆயுதக்கலாச்சாரம் என்று கூக்குரல் இடும் முன் சற்று யோசிக்க தோண‌லாம்.

பொதுமக்களிடம் இருக்கும் ஆயுதத்தை களையாமல் இருக்கும் அமெரிக்க அரசு மற்ற எந்த அரசையும் விட எமக்கு சற்று முற்போக்காகவே தெரிகிறது. அப்போ இம்மாதிரியான துப்பாக்கி சூட்டு கொலைகளை தடுக்க என்ன செய்வது? என கேட்கலாம், தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் சாலைவிபத்துகளில் கொல்லப்படுகின்றனர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பதிலிருந்து, அனுமதிக்கப்பட்டதை விட வேகம், சாலைவிதிகள், கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் வண்டி ஓட்டுவது என மிகப்பெரும்பாலான விபத்துகளுக்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் மிக மோசமான ஓட்டுனர்களே, எண்ணிக்கையில் மோசமான வாக ஓட்டிகள் ஏற்படுத்திய மரணங்களில்ன் எண்ணிக்கை இம்மாதிரியான துப்பாக்கி சூட்டி இறந்தவர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும். ஆனாலும் இன்னும் டிரைவிங் லைசன்ஸு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

துப்பாக்கி கலாச்சாரம் என்று கூக்குரலிட்டு பொதுமக்களிடமிருந்து ஆயுதங்களை மொத்தமாக அரசாங்கத்தை களைய செய்வதை விட துப்பாக்கி வைத்திருப்பதை முறை படுத்துதல் வேண்டும். துப்பாக்கியை களைவது வேறு முறைப்படுத்துதல் வேறு, இந்த  உலகில் பொதுமக்களிடம் இன்னமும் ஆயுதங்களை விட்டு வைத்திருக்கும் அமெரிக்க அரசு நிச்சயம் என்னளவில் ஒரு முற்போக்கு அரசு தான்.

பிரபலங்களுக்கு மட்டுமேயான நாடு தானோ?


பிரபலங்களுக்கு மட்டுமேயான  நாடு தானோ?

நண்பர் முரளி ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார், இதே மாதிரி சைபர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நானே ஏன் இவ்விசயத்தில் சின்மயிக்கு ஆதரவாக இல்லாமல் உள்ளேன் என்கிறார்.... சின்மயி மீதான ஆபாச வசை தாக்குதல்களை எங்கேயும் நான் ஆதரிக்கவில்லை. அதற்கான நடவடிக்கை அதற்கான நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்  There should be  no special treatment for any one. இப்பிரச்சினையில் என்னுடைய அனைத்து கருத்துகளும் கீழ்கண்டவையை அடிப்படையாக கொண்டே...

1) அதிகாரத்துவத்துக்கு எதிரான என் மிகச்சிறிய எதிர்ப்பு குரல்

என் வலைதளத்தில் வெளிப்படுத்திய கருத்துகளால் கோபம் அடைந்த ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை மற்றும் குடுமத்தை தாக்கி(என்னை மட்டுமின்றி வேறு பலரையும்)  எழுதினார், என் மனைவியின் புகைப்படங்கள் ஆபாச தளங்களில் போர்னோ படங்களோடு இணைக்கப்பட்டன, இது தொடர்பாக பல்வேறு புகார்களை சைபர் கிரைமுக்கு அனுப்பினேன், கூகிள் சர்ச்சில் வெளிவந்த புகைப்படங்களுக்காக கூகிளுக்கும் பல்வேறு போர்னோ தளங்களில் வெளியிடப்பட்ட  போட்டோக்களை முடக்க சொல்லி அந்த தளங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன், இந்த அத்தனையிலும் சைபர் கிரைம் மெயில் ஐடியையும் சிசியில் போட்டிருந்தேன், இது தொடர்பாக பலமுறை தொலைபேசியிலும் பேசி புகார் அளித்தேன், ஒரு விசயத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும், அனைத்தையும் பொறுமையாக கேட்டாலும் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, முடிந்த அளவு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையே வழங்கப்பட்டது, நான் அதிகபட்சமாக கேட்டது இம்மாதிரியான செயல்களை அந்த நபர் செய்வதை நிறுத்த செய்யுங்கள் என்றதே.

ஒரு சாதாரணனான‌ என் புகார் தொடர்பாக(என்னை மாதிரி மிகப்பலர் அளித்த புகார்) எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் ஒரு பிரபலம் அளித்த புகாருக்கு உடனடியாக சிறைக்கு கொண்டு அடைத்தது வரையான நடவடிக்கை எனில் அப்போ என் மாதிரியான சாதாரண மக்களுக்கு என எதுவுமில்லை, பிரபலமாக இருந்தால் மட்டுமே எமக்கான நியாயம் கிட்டும், இன்று தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரு பிரபலத்துக்கு சாதாரணனைவிட ஸ்பெசல் ட்ரீட்மெண்ட் கிடைக்கிறதென்றால், ஒரு சாதரணர் மீது ஒரு பிரபலம் அத்துமீறினால் என்ன செய்ய இயலும் என்ற பயம் வருகின்றது.


சமீபத்தில் டிவி நடிகர் வெங்கட் மற்றும் அவர்களின் தாயார் மீது ஒருவர் புகார் அளித்திருந்தார், வாடகைக்கு விட்டுருந்த அந்த சாதாரணரின் இடத்தை காலி செய்ய மாட்டோம், நாங்கள் செல்வாக்கானவர்கள் என்று மிரட்டுவதாக, அது தொடர்பாக அந்த பிரபல டிவி நடிகர்கள் கைது செய்யப்பட்டார்களா என்ன? இதெல்லாம் ஒரு சாதாரண குடிமகனை பயமுறுத்துகிறது.

 ஒரு சாதாரண பொது சனத்தை விட கொஞ்சம் அதிகமான பிரபலத்தை உடைய டிவி பிரபலங்களுக்கு இவ்வளவு செல்வாக்கும் உள்ளதென்றால் இதையும் விட மிகப்பிரபலமான சினிமா நடிகர்கள், அதையும் விட அதிக பலமுள்ள அரசியல் கட்சிதலைவர்கள் இவர்களையும் விட பெரும் அதிகார மைய்யங்களான ஜெயலலிதா, கருணாநிதி அவர்களை போன்ற அரசு அதிகாரமுடையோட் அவர்களையும் விட மாபெரும் அதிகாரமய்யமான சோனியா காந்தி அவர்களின் செல்வாக்கும் அவர்கள் அதிகாரமும் அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய இயலுமே. உண்மையில் சொல்லப்போனால் இம்மாதிரி பெரும் அதிகாரம் படைத்தவர்கள் போடும் பிச்சை தான் அவர்களையெல்லாம் விமர்சித்துவிட்டு இன்னமும் நாம் சாதாரணமாக சுற்றி திரிவது...

2) இடஒதுக்கீடு பற்றிய சின்மயியின் புரிதலற்ற கருத்து பரப்பல்.
    இடஒதுக்கீட்டினால் படித்தவனாகிய நான், இடஒதுக்கீடு தொடர்பாக இடஒதுக்கீட்டை ஆதரித்து தொடர்ந்து எழுதியும் பேசிக்கொண்டும் வருபவன், இடஒதுக்கீடு தொடர்பான சின்மயியின் கருத்துகள் மட்டுமின்றி அது தொடர்பான எந்த ஒரு விளக்கத்தையும் பெற்றுக்கொள்ளவும் உரையாடவும் அவர் தயாராக இல்லை, நூற்றுக்கு அருகில் மதிப்பெண் வாங்கியிருக்கும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை என்று கூறி இடஒதுக்கீடு தேவையா என்று கேள்வியை மட்டும் எழுப்புகிறார் சின்மயி. இடஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தை திறப்பவர் அது தொடர்பான ஒரு பார்வையை வைத்துவிட்டு மறுப்புக்கான எந்த இடத்தையும் அளிக்காமல் அந்த விவாதத்தை மூடுகிறார், எது வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று சொல்லி ஒதுக்கிவிட்டு போக என்னை போன்ற ஒரு சாதாரணன் அல்ல அவர் , எனக்கெல்லாம் வெறும் 400 பேர் டிவிட்டரில் தொடர்கிறார்கள் என்றால் அவரை இலட்சக்கணக்கானவர்கள் தொடர்கிறார்கள், அவர் சொல்லும் செய்தி லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது. இடஒதுக்கீட்டை பயன்படுத்திய எம்மை போன்றோரை இது சமூக தளத்தில் சிக்கலுக்கு உண்டாக்கும் செயலாகும், இது சமூக தளத்தில் இடஒதுக்கீட்டை பயன்படுத்திய எம்மை போன்றோரை கீழாக பிறரை பார்க்க தூண்டும், இது எம் போன்ற இடஒதுக்கீட்டை பயன்படுத்தியவர்கள் மீதும் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் மீதும் ஒருவிதமான உளவியல் தாக்குதலை ஏற்படுத்தும்.இது மேலும் மேலும் இடஒதுக்கீடு பற்றிய தவறான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வாய்ப்பாக உள்ளது. ஒன்று இம்மாதிரியான விசயங்களில் பிரபலங்கள் விவாதங்களை திறந்தால் அதன் எதிர்கருத்துகளையும் சொல்வதற்க்கு இடமளித்து  தொடர்ந்து நடத்த வேண்டுமோயொழிய நான் மட்டும் எதுவேண்டுமானாலும் சொல்வேன் என்று சொல்லிவிட்டு போவது தவறானது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான பரப்புரைகளை தொடர்ந்து எதிர்த்து வருபவன் நான். இது

2) இதில் சாதி எங்கே வந்தது?
சின்மயி பல்வேறு இடங்களில் அய்யாங்கார் சாதியை குறிப்பிடும் இடங்களில் Higheyngar என்று குறிப்பிட்டுள்ளார் அது மட்டுமின்றி ஒரு இடத்தில் அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை, அவர்கள் நாசாவில் டாலர்களில் சம்பாதிப்பதில் பிசியாக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பொதுவெளியில் சாதாரணமாக Higheyngar என்று குறிப்பிட்டு பேசுவது பிற சாதிகளை சேர்ந்தவர்களை உளவியல் ரீதியாக தாக்குதலை, உளைச்சலை ஏற்படுத்தும் செயல்.

3) தலித் மற்றும் பிற சாதித்தலைவர்களை விமர்சித்தது
தலித் அரசியலிலும் பிற்படுத்தப்பட்டோர் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடுடையவன் நான், இது தொடர்பாக தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட இயக்கத்தலைவர்களுடன் சில இடங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன், பணியாற்றிக்கொண்டுள்ளேன். சாதிய படிநிலை சமூகமான இந்தியாவில் அரசியலானாலும் சரி சமூகமானாலும் சரி சாதியை பிரிக்க முடியாத அளவிற்க்கு உள்ளது. மொழியால் உமக்கு ஏதேனும் மறுக்கப்பட்டால் அந்த மொழியை கொண்டு தான் அதை பெற வேண்டும், மதத்தால் உமது உரிமைகள் மறுக்கப்பட்டால் அந்த மதத்தை அடையாளமாக கொண்டுதான் போராட வேண்டும், அது போல சாதியால் மறுக்கப்படும் உரிமைகளை சாதியாக கொண்டு தான் பெற்றாகவேண்டும், சின்மயி "சோ கால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்" என்று யாருமில்லை, அரசியல்வாதிகளுக்கு சாதி ஓட்டுக்காக சாதியை வைத்திருக்கிறார்கள் என்று பொருள் பட பேசுகிறார், இதிலும் அதே போல கருத்தை கொட்டிவிட்டு விவாதத்தை மூடுகிறார்...

வர்றார் சண்டியர் என்ற தலைப்பில் ஒருவர் படம் எடுத்த போது வராத எதிர்ப்பும் போராட்டமும் சண்டியர் என கமல் படம் எடுத்த போது எழுந்தது, ஏனெனில் கமலின் ரீச்சும் வீச்சும் அதிகம் அதைப்போலவே எம் போன்ற ஒரு சாதாரணனின் பேச்சை விட சின்மயி போன்ற பிரபலங்களின் பேச்சும் வீச்சும் அதிகம்.

4)மக்கள் ஊடகங்கள் கைவிட்டு போகும் நிலைக்கான எதிர்ப்பு
அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் சினிமா போன்ற மாஸ் மீடியாக்களும் பிரபலங்களுக்காகன ஊடகங்கள், அவர்களின் பேச்சு மட்டுமே அதில் பதிவாகும், அதில் எதிர்தரப்பில் உரையாட கூட எதிட்தரப்பில் பிரபலமானவராக இருந்தாக வேண்டும், ஆனால் இணையம் குறிப்பாக வலைப்பதிவுகள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை மக்கள் ஊடகங்களாக இருந்துவருகின்றன, ஒரு சாதாரண வேறு எந்த ஊடகத்திலும் பிரபலமாக இல்லாத ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் மக்கள் ஊடகத்தில் ஓரளவுக்கு பிரபலங்களுக்கு இணையாக ஃபாலோயர்ஸ்களை பெற முடிந்துள்ளது, ஆனால் இங்கேயும் பிரபலங்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும் என்ற நிலை உருவாவது ஆல்டர்நேட்டிவ் மீடியா ஆதரவாளனான, மக்கள் ஊடக ஆதரவாளனான என்னால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை...

கற்பழிக்கப்பட்ட பெண்களின் கேஸ்கள் பலதும் பெரிய நடவடிக்கை ஏதுமின்றி அப்படியே கிடக்க தமிழகமெங்கும் தினந்தோறும் ஒவ்வொரு குழாயடியிலும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண சண்டை போன்றதொரு வாய்ச்சண்டைக்கு  சிறை அளவு கொண்டு சொல்ல ஒரு பிரபலத்தால் முடியுமெனில் இந்தியாவும் தமிழகமும் பிரபலங்கள் மட்டுமே வாழத்தகுதியான ஊர் தானோ?


நாட்டில் கற்பழிக்கப்பட்ட பெண்களின் புகார்களெல்லாம் அப்படியே கிடக்க சாதாரணமாக பக்கத்து பக்கத்து வீடுகளின்

செலிபிரட்டி அட்ராசிட்டி! - சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்?


நேற்று நான் இந்த ட்விட்டை எழுதும் போது முதலில்  சின்மயி  கூறியதாக "என்னைப் பற்றி ஐந்து பேர் கொண்ட ஒரு குழு அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் டிவிட்டர், பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்து வருகிறது" என்ற அளவிலேயே பத்திரிக்கைகளில் வந்திருந்தன, ஆனால் பிறக்கு "சின்மயிக்கு ஆபாச தொல்லை கொடுத்தது இந்த 6 பேர்தான்!", "சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்" என்றெல்லாம் ஒரு கோடி பேர் படிக்கும் தினத்தந்தியிலும் பல இலட்சம் பேர் படிக்கும் தட்ஸ்தமிழிலும் வர ஆரம்பித்துள்ளது, செக்ஸ் தொல்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பேச்சாலோ செய்கையாலோ பாலியல் உறவுக்கு அழைக்கும் செயல் பற்றிய குற்றம்.

இந்த குற்றச்சாட்டு தவறானதாகவோ அல்லது அதிகப்படியானதாகவோ கருதினால் புகார் அளிக்கப்பட்டவர்கள் சின்மயி மீது அவதூறு வழக்கு தொடுக்கலாம்(defamation case).

செய்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை பற்றி சின்மயியே கூறிய ஒரு டிவிட்டை குறிப்பிட விரும்புகிறேன்.

Chinmayi
@ezharai Someday you ll need to meet an intelligent journalist to tell you how news is made 'newsworthy'

சின்மயின் மேற்கண்ட கூற்றுப்படி ஒரு கோடி பேர் படிக்கும் தினத்தந்தியிலும் மேலும் பல பத்திரிக்கைகளிலும் வந்த "சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்" என்ற செய்தி எப்படி 'newsworthy' ஆக ஆக்கப்பட்டது?

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

சின்மயியின் டிவிட்டை படித்து பாருங்கள் "சோ கால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்" என்றெல்லாம் பொங்கியிருப்பார்...

இந்த பிரச்சினை பல மாதங்களாக இருந்து வந்துள்ளது, குறிப்பாக ராஜன்லீக்ஸ் க்கும் சின்மயிக்கும் இடஒதுக்கீடு தொடர்பாக கருத்தியல் ரீதியாக கடும் வேறுபாடு இருந்துள்ளது. பல மாதங்களாக இருந்த பிரச்சினைக்கு உடனடியாக அப்போதோ அல்லது அடுத்து வந்த சில நாட்களிலோ மாதங்களிலோ புகார் அளித்திருக்கலாம், அதை செய்யாமல் தற்போது  சின்மயி பணப்பிரச்சினைக்காக ஒருவர் மீது புகார் கொடுக்க சென்றவர் போனதே போனோம் இதுக்கும் குடுத்துடுவோம் என்ற ரீதியில்  புகார் கொடுத்தது மட்டுமின்றி செக்ஸ் தொல்லை என்ற அளவில் ஊடகங்களில் அதை பிரச்சாரப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு உதவிப்பேராசிரியருக்கு இதில் தொடர்புள்ளது ஒரு உதவிப்பேராசிரியருக்கு இதில் தொடர்புள்ளது என்று அழுத்தி சொல்லிவைத்தது அவரின் வேலைக்கு வேட்டு வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னது போலவே உள்ளது.

சின்மயியை பொதுவெளியில் ஆபாசமாக பேசியவர்கள் அதற்கான எதிர்வினைகளையும் குற்றச்சாட்டையும் எதிர் நோக்கித்தான் ஆகவேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீது சின்மயி சாற்றிய குற்றசாட்டை மறுக்கும் பட்சத்திலோ அதிகப்படியான குற்றச்சாட்டு என்று கருதும் பட்சத்திலோ ,

1) சென்னை சைபர் கிரைம் ஒருதலைபட்சமாக ஒரு பக்க குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்காது என்றே நம்புகிறேன், எனவே தாமாகவோ அல்லது ஒரு வழக்கறிஞரின் உதவியுடனோ அவர்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கலாம்,

2)சின்மயி உங்களை பற்றி தரக்குறைவாக விமர்சித்திருந்தால் அதற்கான ஆதாரங்களுடன் கவுண்டர் ஃபைலிங் செய்யலாம்.சின்மயி பொது வெளியில் பேசிய எழுதிய  பிற கருத்துகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால்  அதற்காகவும் கூட புகார் அளிக்கலாம்.

சின்மயி தொடர்பாக என்றில்லாமல் பொதுவாக குறிப்பிடுகிறேன்.

கன்வென்சனல் ஊடகங்களான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் அனைத்தும் பிரபலங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும், அவைகள் பிரபலங்களின் ஊடகங்களாக தான் இருந்ததேயொழிய சாதாரண பொது மக்களின் ஊடகங்களாகஇருப்பதில்லை, இம்மாதிரியான மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களில் பிரபலங்கள் ஏதேனும் ஒரு கருத்தை உதிர்த்து விட்டு போய்விடுவார்கள், அதற்க்கு மாய்ந்து மாய்ந்து பொதுமக்கள் யாரேனும் மறுப்பு எழுதினாலும் அவைகள் எதுவும் பிரசுரமாகாது, இணைய ஊடகங்களான வலைப்பதிவுகள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவைதான் பிரபலங்களையும் பொதுமக்களையும் ஒரே தளத்திற்க்கு கொண்டு வந்தன, இங்கே பிரபலம் என்ற பீடத்தின் மேல் உட்கார்ந்து கருத்து சொல்லிவிட்டு ஓடிவிட முடியாது, பிரபலங்கள் கருத்து உதிர்த்தாலும் அதற்க்கு மறுப்புகள் எதிர்வினைகள் வந்து சேரும். இந்த மனமுதிர்ச்சி அற்ற பிரபலங்கள் மிக மோசமான குற்றச்சாட்டுகளை பல கோடி பேர் படிக்கும் ஊடகங்கள் வழியாக தங்களின் பிரபலத்தை தவறாக பயன்படுத்தி வெளிப்படுத்தினால், அனைவரும் பிரபலங்களின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லவோ அய்யோ நமக்கென்னப்பா என்று விலகிப்போகும் வாய்ப்புண்டு, இது  இணையம் என்பது  பொது மக்கள் ஊடகமாக இல்லாமல் கண்வென்சனல் ஊடகங்களை போன்றே பிரபலங்களுக்கான ஊடகமாக மாறிவிடும்.

பிரபல நடிகை குஷ்பு அவர்கள் டிவிட்டரில் இயங்கி வருகிறார், இணைய வெளியில் இயங்கி வரும் அவரை நான் பார்த்த வரையில் யாரும் தரக்குறைவாக விமர்சிப்பதோ பேசுவதோ இல்லை, குஷ்பு மேம் என்றோ குஷ்பு மேடம் என்றோ தான் பலரும் குறிப்பிடுகிறார்கள், அதற்காக குஷ்பு தன் கருத்தை எங்கேயும் வலியுறுத்தாமல் இருந்ததில்லை, தன் கருத்தின் மீதான விமர்சனங்களை இணையத்தில் குஷ்பு எப்படி கையாள்கிறார் என்பதே அவரை குஷ்பு மேடம் என்றும் குஷ்பு மேம் என்றும் அழைக்க வைக்கின்றது, குஷ்பு ஒரு கட்சியில் இருக்கிறார் என்பதால் அல்ல, ஏனெனில் குஷ்புவின் கட்சித்தலைவர் கருணாநிதியை அவரோட ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் கடும் விமர்சனங்களை பொழிந்து தள்ளினர் இணைய பயன்பாட்டாளார்கள்.

இணையம் பொது மக்கள் ஊடகமாக இருக்க வேண்டுமா? அல்லது  பிரபலங்களின் ஊடகங்களாக இருக்க போகின்றதா என்பது இந்த கேஸில் ஆரம்பித்து இனி வரும் காலங்களில் தெரிந்து விடும்.

இதுநாள் வரை இதற்க்கு நேரமில்லை, அதற்க்கு நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்பவர்களிடமும் சரி பல நேரங்களில் என் மனைவியிடமும் சின்மயியை பார், திரைப்பாடல்கள் பாடுறாங்க, கச்சேரி டிவி நிகழ்ச்சி செய்யாறாங்க,  ஒரு நிறுவனம் நடத்துறாங்க இதோடு வலைப்பதிவும் டிவிட்டரிலும் இயங்குகிறார், சரியாக நேரத்தை முறைப்படுத்தினால் செய்யமுடியும் என்று ஒரு முன்மாதிரியாக மட்டுமே சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன், சின்மயின் தொடக்ககால வலைப்பதிவுகளில் நான் ஆதரித்து பின்னூட்டமிட்டுள்ளேன், ஆனால் இப்போது சொல்கிறேன் I HATE YOU CHINMAYI

இணையத்தில் செலிபிரட்டிகளுக்கு கொம்பு முளைத்துவிடவில்லை - பாடகி சின்மயி யின் பரபரப்பு புகார்!

பொதுவில் பேசும் பேச்சுக்கு வரும் பின்விளைவுகளை எதிர்நோக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள், தயவு செய்து பொது இடங்களில் ஆல் இன் ஆல் அழகு ராஜா/ராணி போல கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஒரு அரசியல், சமூக கருத்தை உதிர்க்கும் முன் நூறு முறை யோசித்து செய்ய வேண்டும், பாடகி சின்மயி இடஒதுக்கீட்டு எதிராகவும், ஈழம் பற்றிய சர்ச்சையான கருத்துகளை உதிர்த்த போது அதற்க்கு மிகவும் சாதாரணமாகவும் டீசண்டாகவும் வந்த எதிர்வினைகளை மிக மூர்க்கத்தனமாகவும், மிகுந்த அலட்சியப்போக்குடனும் அதை எதிர்கொண்டார்.  அதை ஒரு உரையாடலாகவோ விமர்சனமாகவோ அவர் கருதவில்லை....

இணையம் ஒரு சுதந்திர பூமி இங்கே, செலிபரிட்டிகளுக்கு கொஞ்சம் கூடுதலாக ஃபாலோயர்கள் இருப்பார்கள் என்பதை தவிர பிரபலங்கள், செலிபரிட்டிகளுக்கு ஸ்பெசலாக இங்கே எந்த கொம்பும் முளைத்துவிடுவதில்லை,  கருத்து என்று எதை உதிர்த்தாலும் சைலண்ட்டாக போகமாட்டார்கள் எதிர்வினைகள் இருக்கும் அதை முறையாக எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் பேசாமல் இருக்க வேண்டும்.

பாடகி சின்மயி பற்றி மிகக்கேவலமாக பேசியும் சித்தரித்தும் வந்தவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும், எமது கடும் கண்டனங்கள், . சின்மயி புகார் கொடுத்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளை படித்தால் சின்மயி செகண்ட் ஆஃப்பை மட்டுமே புகாராக தந்துள்ளார், ஃபர்ஸ்ட் ஆஃபை எங்கேயும் சொல்லவில்லை போலும்...

நானும் இணைய ஆபாச சித்தரிப்பில் முன்பு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன், அதன் வலி எமக்கும் தெரியும், சிங்கப்பூரில் பிரபலமாக இருந்த ஒரு சமூக இணையதளத்தில் என் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு அதில் நான் பாம்பேவிலிருந்து பெண்களை கொண்டுவந்து தொழில் செய்வதாக மூர்த்தி என்பவன் குறிப்பிட ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட போன்கால்கள், எல்லா வித இன(சீன, இந்திய, மலாய்) ஆட்களும் அழைத்து பொண்ணு புரோக்கர் தானே நீ, பொண்ணு இருக்கா, எவ்ளோ ரேட்டு என்று கேட்ட போது அதை என்னால் இயல்பானதாக எடுக்க  முடியவில்லை தான். என் குடும்ப பெண்களின் போட்டோகளை ஆபாச தளங்களில் அப்லோட் செய்யப்பட்டிருந்த போது அதை நீக்க படாத பாடு பட்டேன், கூகிள் சர்ச்சில் ஆபாச போட்டோக்களுடன் எங்கள் போட்டோக்களும் வந்ததை கூகிளுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பும் அளவுக்கு போக வேண்டியிருந்தது. இதில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்புடன் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தோம்.

சின்மயி இப்பிரச்சினையிலிருந்து மன உறுதியுடன் மீண்டு வர விரும்புகிறேன், அதே சமயம் சர்ச்சைக்குறிய கருத்துகளை பொதுவில் உதிர்க்கும் போது  அதன் டீசண்டான எதிர்வினைகளை அதற்குறிய மரியாதையுடன் அலட்சியப்படுத்தாமல் எதிர்கொள்ள வேண்டும், நான் பெரிய அப்பாடக்கர், கருத்து மட்டுமே சொல்லுவேன் எதிர்வினைகள் என் மயிருக்கு சமம் என்ற அலட்சியத்துடன் செயல்படுவது சரியான நிலைப்பாடு அல்ல.

இன்டர்நெட்டில் ஆபாசப் படம் : பாடகி சின்மயி பரபரப்பு புகார்!
http://www.soundcameraaction.com/cinema-news/item/452-singar-chinmayi-files-a-complaint-about-degrading-pictures-on-twitter

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.tamilveli.com/v2.0/index.php?itemId=363010


 

அட்டகத்தி - ஒரு தலித்திய கொண்டாட்ட பின்னணி - குழலி


அட்டக்கத்தி  திரைப்படத்தின் பின்னணி ஒரு முக்கிய அரசியலை செய்துள்ளது ஆனால் அட்டக்கத்தி திரைப்படம் பற்றிய  கிட்டத்தட அனைத்து பேச்சுகளும், விமர்சனங்களும், பேட்டிகளும் படம் ஒரு நகைச்சுவையான, லேசான கதையமைப்புடைய ஒரு டைம் பாஸ் படம் என்பதையே வலியுறுத்துகின்றன.

இயக்குனர் இரஞ்சித் தன் படத்தில் செய்துள்ள இந்த அரசியலை கவனிக்காமலேயே போய்விடக்கூடாது.
 
எல்லா கதைகளும் பழைய கதைகளே, புதியதாக எந்த கதையும் திரைஉலகில் வருவதென்பது சந்தேகமே, ஆனால் எந்த கதையையும் அனுபவிக்க வைக்க கூடிய, பொறுந்த வைக்க கூடிய  செயலை செய்வது தேர்ந்தெடுக்கப்படும் கதைக்களனே. அழகி திரைப்படமாகட்டும், பருத்திவீரனாகட்டும் அந்த படத்தின் கதைகளை விட கதைக்களன்களே  அந்த படத்தினை ஒரு அனுபவமாக மாற்றுகின்றது.
 
முதன் முறையாக ஒரு திரையுலக இணையதளத்திற்க்கு கட்டுரை எழுதியுள்ளேன், இந்த கட்டுரையின் மீதியையும் படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்துங்கள்



திரு.சுப.உதயகுமார் கைதாக தயாராக இருப்பதாக அறிவித்து பேசிய பேச்சு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் திரு.சுப.உதயகுமார் அவர்களின் பேச்சு... கைதாக தயாராக இருப்பதாக அறிவித்து பேசிய பேச்சின் கோப்பு...

 ஐ லவ் யூ உதயகுமார் சார்...

 



கூடங்குளம் மக்கள் மீது இந்திய, தமிழக பாசிச அரசுகளின் தாக்குதல் படங்கள்


கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது தமிழக மற்றும் இந்திய பாசிச பயங்கரவாத அரசும் அதன் காவல்துறையும் மக்களை தாக்கிய படங்கள்...

முக்கியமான ஊடகங்கள் எல்லாம் அரசுக்கு  மாமா வேலை பார்க்க சென்றதால் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்ட போராட்டகள படங்கள் இங்கே...



















சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா மறைவு


பாவாணர் என்னும் போது கூடவே நினைவுக்கு வரும் மற்றொருவரின் பெயர் திரு.கோவலங்கண்ணன். பாவாணரின் நூல்களை ஆதரித்து பாதுகாத்தது மட்டுமின்றி அந்நூல்களை இணையத்திலும் தன் சொந்த கைப்பொருளை செலவு செய்து வெளியிட்டுள்ளார். நேற்று இரவு(14.05.2012) அன்று சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்.

அய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. நாளை (16.05.2012) நண்பகல் வரை கீழ் கண்ட முகவரியில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.


No 10, UBI Road 4,
Teochew Funeral parlour,
singapore 408609

முனைவர் மு.இளங்கோவனின் பதிவு

பாவாணர் இணையதளம்

ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், தம்பி அண்ணன் ஷாநவாஸ் அழைக்கிறார்


"ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்"

சாப்பாட்டு இடம் : ஜூராங் நூலகம், சிங்கப்பூர்

சாப்பாட்டு நாள் : ஞாயிறு, பிப்ரவரி 12, 2012



தமிழ் படைப்பாளிகள் என்னும் திமுக ஃபேஸ்புக் அணி

தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையும் என் எதிர்வினையும்.

இனி அறிக்கைக்கான என் எதிர்வினை சிவப்பு வண்ணத்தில்...

ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது எல்லாம் முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவது வழக்கமாகிவிட்டது. காப்பீட்டுத் திட்டத்தை மாற்றுவது, இலவசத் திட்டங்களை நிறுத்தி வைப்பது அல்லது பெயரை மாற்றுவது, தலைமைச்செயலகத்தை அரசு மருத்துவமனையாக அறிவிப்பது என்று தொடரும் திட்டங்களில்

SO WHAT?
ஊழலுக்காக அதுவும் இதற்க்கு முன் ஒரு பாலிசி கூட இல்லாத ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்க்கு பல்லாயிரம் கோடி இன்சூரன்ஸ் பாலிசியாக மக்கள் வரிப்பணத்தை கொடுத்து கொள்ளையடிக்க தரப்பட்ட காப்பீட்டு ஊழல் திட்டத்தை மாற்றுவதும், விதான் செளதா போன்று ஐகானிக் கட்டிடமாக இருக்கபோகின்ற தலைமை செயலகத்தை ஊழலே செய்தாலும் குறைந்த தமிழ், திராவிட கட்டட கலையையாவது கொண்டிருக்குமேயென்று பார்த்தால் தண்ணி தொட்டி போன்ற இந்த தலைமைசெயலகத்தையும் மாற்றும் செயலுக்காகவெல்லாம் பொங்கி போராட தேவை இல்லை.

தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும். என்று அறிக்கையின் அடியில் இருக்கின்றதே, இவர்களெல்லாம் யார்? யார்? இந்த அறிக்கையில் சிலபகுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாத படைப்பாளிகளுக்கும் கல்வியாளர்களுக்கும் நீங்கள் சொல்லும் இந்த தமிழ்படைப்பாளிகள் லிஸ்ட்டில் இடமிருக்கின்றதா?

ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் இது வரை வந்ததெல்லாம் வெறும் டிரெயிலர் தான் இன்னும் மெயின் பிச்சரே ஆரம்பிக்கவில்லை இவ்வளவு விரைவாக தமிழ்மான போராட்டத்தை ஆரம்பித்துவிட்டீர்களே இன்னும் மெயின் பிக்சரின் போது போராட சக்தி வேண்டாமா?


இப்போது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இதற்கு எதிராக எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையாணையும் ஜெயலலிதாவின் திட்டத்தை ஒத்திப்போட்டிருக்கிறது.

நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்கிற அறிவிப்பு, ஏதோ எல்லாவற்றையும் மாற்றியமைக்கிற எதேச்சதிகாரப் போக்கு என்றோ பழைய ஆட்சியின் சாதனைகளாகச் சொல்லப்படுபவற்றின் மீதான சேறு வாரியிறைப்பு என்றோ இருபெரும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான அதிகாரப்போர் என்றோ மட்டும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. ஏனெனில் ‘தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்ற முந்தைய அரசின் அறிவிப்பை மாற்றி ‘சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று அறிவித்தது, சமச்சீர்க்கல்வியை நிறுத்திவைத்தது, தலைமைச்செயலகத்தில் இருந்த நூலகத்தை முடக்கிப்போட்டது, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்பவை எல்லாம் அறிவுத்தளத்தின் மீது நடத்தப்படும் வன்முறை, கலாச்சாரத் தாக்குதல், சிறிய அளவிலான மாற்று அரசியல் முன்னெடுப்புகளையும் சிதைப்பது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியெல்லாம் எல்லோரும் அறிவுத்தளத்தின் மீதான தாக்குதல் மண்ணாங்கட்டி என்று புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, இதெல்லாம் மிகைப்படுத்தும் செயல.


தமிழ்புத்தாண்டு தொடர்பான விசயத்தில் தமிழ் தேசிய மொழியாக இருக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கூட இந்த தமிழ்புத்தாண்டு மாற்றத்தை முறைப்படி கூட அறிவிக்காத வெற்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டு தமிழ் மக்களிடத்தில் தம்மிடமிருக்கும் ஊடகம் வழியாகவாவது அதற்க்கான மனமாற்றத்தை செய்யாமல் சித்திரை திருநாளென்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி காமெடி செய்துகொண்டே புத்தாண்டு அறிவிப்பதெல்லாம் வெயிட் வெயிட் எனக்கு தமிழ்துரோகி பட்டம் எதுவும் கொடுக்கும் முன் கருணாநிதி தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவிப்பதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் தை ஒன்றை தான் தமிழ்புத்தாண்டாக கருதி புத்தாண்டு வாழ்த்துகள் சொல்கிறேன்.


கருணாநிதியின் வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற ரீதியிலான அரசு ஆணைகள், "பப்புலிசிட்டி பரமசிவமாக" செய்த செயல்களுக்கெல்லாம் தமிழ் கவசத்தை போர்த்திக்கொண்டு போராட கிளம்ப வேண்டாம்

இன்னொருபுறம் தலித் மக்களின் தலைவர் இமானுவேல்சேகரனின் நினைவுநாளில் பரமக்குடியில் ஏழு தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட போலீஸ் வன்முறையும் துப்பாக்கிச்சூடும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சாதியச்சார்பையும் மனித உரிமைகளைக் கிஞ்சிற்றும் மதிக்காத மனப்போக்கையுமே காட்டுகிறது. தங்கள் முன்னோடிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய தலித் மக்களின் மீது தாக்குதல் நடத்தியது, ‘கலவரம் நடக்கும்’ என்று காரணம் சொல்லி தலித் தலைவர் ஜான்பாண்டியனைப் பரமக்குடிக்கே செல்லவிடாமல் தடுத்து கைது செய்தது ஆகியவை ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. இன்னொருபுறம் மற்ற ஆதிக்கசாதித் தலைவர்களின் விழாக்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிற அரசு, இமானுவேல் சேகரனின் நினைவுநாளை இனி வரும் காலங்களில் மரணத்தின் கரும்நாளாக அடையாளப்படுத்துவது, கலவர பீதியூட்டி தலித்மக்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை தொடரத்தான் போகின்றன.
தலித்கள் மீதான பரமக்குடி தாக்குதல்கள் தொடர்பான கண்டனங்களையும் கோரிக்கைகளையும் நான் மதிக்கிறேன், ஆதரிக்கிறேன்.


எல்லா ஆட்சிகாலத்திலும் தலித்துகளின் மீதான அரச ஒடுக்குமுறை நடந்துவருகின்றது இதற்க்கு கருணாநிதி ஆட்சி என்றோ ஜெயலலிதா ஆட்சியென்றோ எந்த வேறுபாடுமில்லை, இது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே நடைபெறுவதாக சித்தரிப்பது கருணாநிதியை காப்பாற்றி அவருக்கு கூஜா தூக்கும் செயலே.


உண்மையில் இப்பிரச்சினையில் இந்த படைப்பாளிகளுக்கு அக்கறை இருக்குமெனில் பரமக்குடி துப்பாக்கி சூட்டை மட்டுமே முன்னிருத்தி ஒரு போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமேயொழிய இதில் கொண்டுவந்து ஊழல் இன்சூரன்ஸ் திட்ட எதிர்ப்பு பப்புலிசிட்டி பரமசிவமான கருணாநிதியின் ஊழல் மற்றும் பப்புலிசிட்டி திட்டங்களை நீக்குவதை எதிர்ப்பதையும் இதில் இணைத்து ஒரு விதமான இந்த திமுக ஆதரவு ஜால்ரா குழுவின் போராட்டத்தை எதிர்ப்பவர்களை பலவீனப்படுத்தும் முகமாக இணைக்கப்பட்ட அஜெண்டாவோ என்றே சந்தேகப்பட வைக்கிறது.


நேரடியாகப் போலீஸ் தலித் மக்களின் மீது நடத்திய தாக்குதலைத் தமிழக முதல்வரே ‘இது ஒரு இன மோதல்’ என்று வர்ணித்தது சமூகமாற்றத்தை விரும்பும் எழுத்தாளர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் நடந்துமுடிந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணக் கமிஷன் அமைப்பதற்கே மறுத்த ஜெயலலிதா, பிறகு எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்குப் பிறகு ஒப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக்கமிஷனை அமைத்துள்ளது. இதுவரை தமிழக அரசுகளால் நியமிக்கப்பட்ட எல்லா ஓய்வுபெற்ற நீதிபதிகளின் விசாரணைக்கமிஷன்களுமே அரசுக்குச் சாதகமான அறிக்கைகளையே அளித்துள்ளன. அதிலும் தொடக்கத்திலேயே போலீஸைக் காப்பாற்றும் மனோபாவத்தோடும் நோக்கத்தோடும் ‘இன மோதல்’ என்று வர்ணித்த ஒரு முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கமிஷன் நீதி வழங்கும் என்பதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைப்போல எங்களுக்கும் நம்பிக்கையில்லை. எனவே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவினை எதிர்த்தும் பரமக்குடியில் தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரசு வன்முறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தும் நாங்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

* வாக்களித்தபடி குழந்தைகளுக்கான சர்வதேசத் தரத்திலான மருத்துவமனையைத் தமிழக அரசு வேறு இடத்தில் கட்டித்தர வேண்டும்.

* அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.

* சமச்சீர்க்கல்வி, தமிழ்ப்புத்தாண்டு, நூலகம் போன்ற உணர்வு ரீதியிலான பண்பாட்டு விஷயங்களில் எதேச்சதிகாரப் போக்கை மேற்கொள்வதைத் தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

* தலித் மக்களின் முன்னோடி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

* மனித உரிமைகளையும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளையும் மீறி பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

* கண்துடைப்பு சம்பத் கமிஷன் கலைக்கப்பட வேண்டும்.

* பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைச் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

* துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும்.

* துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

- தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும்.
ஏனிந்த அறிக்கையில் 13,000 மக்கள் நலப்பணியாளர்களை நீக்கியதை விட்டு விட்டார்கள் இந்த தமிழ்படைப்பாளிகளும் கல்வியாளர்களும்? எந்தவிதமான தகுதியும் இன்றி(வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி என எதுவுமே இல்லாமல்) வெறும் கட்சிக்காரனுக்காகவும் கட்சிகாரன் சிபாரிசுக்காகவுமே உருவாக்கப்பட்டு போடப்பட்டிருந்த திமுக நலப்பணியாளர்களை நீக்கியதை விட்டுவிட்டார்களே... கட்சிக்காக அறிக்கை விடும் போது அவர்களை மட்டும் கழற்றிவிடுவது பாவமில்லையா?


கிறித்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு, பிறகு கிறித்துவர்களே வந்து எங்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டாமென்று அறிவித்த பின் திரும்ப பெற்றுக்கொண்டது என வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற ரீதியில் கருணாநிதியின் செயல்பாடுகளின் முக்கியமானது "சோ கால்ட்" சமச்சீர் கல்வி,

சென்ற ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட புத்தகங்கள் இந்த ஆண்டு வழக்கம் போல 2,7ம் வகுப்புகளுக்கு மாற்றி1,2,6,7 என 4 வகுப்பு மாணவர்கள் படிக்க இந்த பாட திட்ட மாற்றம் ஒரு தொடர்ச்சியாக வரும், ஆனால் வரலாறு முக்கியம் என்கிற ரீதியில் ஆட்சி பறிபோகும் நேரத்தில் சாகும் போது சங்கரா சங்கரா என்று எல்லா வகுப்பு பாடங்களையும் மாற்றியதின் விளைவு புதிய பாடத்திட்டத்தில் தொடர்ச்சியற்று இருக்கிறது.


இது மட்டுமின்றி உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்றுவிப்பி திறன், ஆசிரியர் மாணாக்கர்கள் விகிதம், பயிற்றுவிப்பு முறைகள் அதன் பின் பொது பாடத்திட்டம் என பல்வேறு படிநிலை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் வெறும் "பொதுப்பாடத்திட்டத்தை" சமச்சீர் கல்வி என்று சொல்வதே ஒரு ஏமாற்று வேலை, பொது பாடத்திட்டத்தை சமச்சீர் கல்வி என சொல்வது உண்மையான சமச்சீர் கல்வி எது என்பதை அறியவிடாமல் இருந்தால் உண்மையான சமச்சீர் கல்வியை மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்துவிடும்.


இந்த படைப்பாளிகளும் கல்வியாளர்களும் உண்மையிலேயே தமிழ் உணர்வோடும் மக்களுக்காகவும் போராட வேண்டுமெனில் போராட்டத்தை முதலில் போலி தமிழ், போலி முற்போக்கு பேசும் கருணாநிதியையும் அவரது கட்சி திமுகவையும் எதிர்ப்பதிலிருந்து ஆரம்பிக்கட்டும், இவ்வளவு நாளும் டீக்குடிக்க போயிருந்தார்களோ இந்த படைப்பாளிகளும் கல்வியாளர்களும். இல்லையில்லை ஜெயலலிதா ஆட்சியை எதிர்க்க தானென்றால் தமிழ் படைப்பாளர்களும், கல்வியாளார்களும் என்ற பெயரில் அறிக்கை தராமல் திமுக இணைய அணி, திமுக ஃபேஸ்புக் அணி என ஏதேனும் ஒரு பெயரில் அறிக்கையை அனுப்புங்கள் சிரித்து விட்டு சென்று கொண்டே இருப்போம்.

சோதனை இரண்டு

தமிழகத்தின் சோதனை இரண்டு

சோதனை ஒன்று


தமிழகத்தின் சோதனை ஒன்று

திமுகவுக்கு வாக்களிக்க போகும் மதிமுகவினரே சிந்திப்பீர்

திமுகவுக்கு வாக்களிக்க போகும் மதிமுகவினரே சிந்திப்பீர்

இத்தனை நாள் நீங்கள் பேசிவந்த கருணாநிதியின் தமிழின துரோகமும் ஈழத்துரோகமும் கருணாநிதியின் குடும்ப அரசியலும் வைகோ மீதான கருணாநிதியின் வஞ்சமும் உங்களின் ஈகோவின்முன் ஒன்றுமில்லாமல் போய்விட்டதா?

கருணாநிதியின் தமிழின துரோகத்தைவிட உங்கள் ஈகோ பெரிதா?
கருணாநிதியின் ஈழத்துரோகத்தைவிட 21 சீட்டு உங்களுக்கு பெரிதா?
வைகோவுக்கு வந்து சேரவேண்டிய திமுக தலைமை பதவி கருணாநிதியின் குடும்ப அரசியலால் பழிவாங்கப்பட்டதை எதிர்ப்பதைவிட உங்களுடைய ஈகோ பெரிதா?

உங்களின் இனப்பாசம் உண்மையெனில் உங்களின் ஈழப்பாசம் உண்மையெனில் உதயசூரியனுக்கு வாக்களிக்காதீர்கள்... இல்லை எங்களுக்கு எங்களின் 21 சீட்டு ஈகோதான் பெருசு என்றால் உங்களுக்கும் கருணாநிதி ஈழப்பிரச்சினையின் போது நடந்துகொண்ட முறைக்கும் வேறுபாடு எதுவுமில்லை

திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள்

திமுக கூட்டணியை வீழ்த்த தேவையான டாப் 10 காரணங்கள் இங்கே விளக்கங்கள் கீழே


1. உண்மையான தமிழின ஆதரவு தலையெடுக்க விடாமல் இருக்கும் திமுகவின் போலி தமிழின ஆதரவு

2. தமிழின துரோகம்

3. ஊடக ஆதிக்கம்

4.சுமங்கலி கேபிள்விஷன் மற்றும் மீடியா மாஃபியா

5. டாஸ்மாக் வியாபரத்தின் உச்சம், போதையில் தள்ளாடும் தமிழகம்

6. திரைத்துறையை கபளீகரம் செய்த கருணாநிதி குடும்பம்.

7.நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப வருமானத்தை பெறுக்குதல்

8.ஸ்பெக்ட்ரம் ஊழல்

9.சங்கராச்சாரியின் விடுதலையை நோக்கி நடத்தப்படும் வழக்கு, தாகி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு

10.பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிக்காரர்களின் சொத்துகள் மற்றும் குடும்ப அரசியல்.

இது மட்டுமின்றி உமாசங்கர், சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளின் மீதான அப்பட்டமான தாக்குதல்கள், அதிகார துஷ்பிரயோகம், வெளிப்படையாக பேசியதற்காக அவமானப்படுத்தப்பட்ட அஜீத், ஈழ விழிப்புணர்வு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்த வழக்கறிஞர்கள் மீது போலிசை ஏவி தாக்குதல் நடத்தி திசை திருப்பியது என வேதனைகள் ஏராளம் ஏராளம்...

கடந்த ஐந்தாண்டுகளில் மாபெரும் ஆக்கிரமிப்பை நடத்திய கருணாநிதி குடும்பத்திற்க்கு ஒரு அதிகார இடைவெளி கொடுக்கவில்லையென்றால் தமிழகம் ஒரு மாபெரும் மோசமான ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்...


1. உண்மையான தமிழின ஆதரவு தலையெடுக்க விடாமல் இருக்கும் திமுகவின் போலி தமிழின ஆதரவு

போலி தமிழின ஆதரவு போலி முற்போக்கு போலி சாதியொழிப்பு போலி பார்ப்பன எதிர்ப்பு பேசும் திமுக அழிந்தால் மட்டுமே உண்மையான தமிழின ஆதரவு முற்போக்கு

சாதியெதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு அரசியல் சக்திகள் வளர இயலும் இதற்க்கு மிகப்பெரும் தடைகல்லாக இருப்பது போலித்தமிழின ஆதரவு பேசும் திமுக.

தமிழின ஆதரவு என்று சொல்லிக்கொண்டே ஈழ அழிவுக்கெதிராக தமிழார்வலர்கள் நடத்திய போராட்டங்களையெல்லாம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது, அரசில் இருந்து கொண்டே தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் எதுவும் செய்யாதது, சாதிக்கெதிரானவர்கள் என சொல்லிக்கொண்டே ஆதிக்க சாதி சார்பு அரசியல் செய்வது என அனைத்தும் போலித்தனமே... இந்த போலி கட்சி அழிந்தால் மட்டுமே உண்மையான தமிழின ஆதரவு முற்போக்கு கட்சிகள் தலையெடுக்க இயலும்.

2. தமிழின துரோகம்

2008ல் தமிழீழத்தின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பு போர் உச்சத்தில் இருந்து மாபெரும் மனித அழிவு பேரவலத்திற்க்கு பின்புலமாக காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது, அந்த காங்கிரஸ் கூட்டணி அரசினை தாங்கி பிடித்துக்கொண்டிருந்தது திமுக.

திமுக என்பது தமிழின ஆதரவு கட்சி என்பதாலேயே வேறு எக்கட்சிக்கும் கிடைக்காத பல தமிழ் ஆர்வலர்கள் மொழி இனப்பற்றாளார்கள் முற்போக்காளார்களின் பலத்த ஆதரவு கிடைத்தது, இதனால் தமிழினத்தினை காக்க வேண்டிய கடமை வேறு யாரையும் விட இக்கட்சிக்கு உண்டு. மேலும் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறது ஆனால் துரோகத்தின் உறைவிடமாக திமுக ஈழப்படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததால் இதற்கான பொறுப்பை திமுக ஏற்க்க வேண்டும். தமிழக மக்களே நேற்று ஈழத்தமிழன் பிணங்களை எண்ண முடியாமல் எண்ணியபோது இங்கே திமுக குடும்பம் ஸ்பெக்ட்ரம் பணங்களை எண்ணமுடியாமல் எண்ணிக்கொண்டிருந்தது... நேற்று ஈழத்தமிழனுக்கு நேர்ந்த போது கடமை தவறி வேடிக்கை பார்த்த திமுக நாளை தமிழக தமிழனுக்கு நேரும்போதும் வேடிக்கை தான் பார்க்கும்.


3. ஊடக ஆதிக்கம்

எந்த ஒரு மோசமான அரசாங்கம் அமைந்தாலும் அந்த அரசின் ஊழல்களையும் அராஜகங்களையும் வெளிப்படுத்துபவை ஊடகங்களே, 1991-96ல் நடைபெற்ற அதிமுக அரசின் மிக மோசமான ஊழல் மலிந்த அரசாட்சியை ஊருக்கு தைரியமாக வெளிச்சம் போட்டு காட்டி அதை எதிர்த்து போராடி அடிவாங்கியது கருணாநிதியோ திமுகவோ அல்ல, அதை செய்தது தமிழ் ஊடகங்கள் குறிப்பாக நக்கீரனும் சட்டப்போராட்டம் நடத்தியது கோமாளி என வர்ணிக்கப்படும் சுப்பிரமணியசாமியும்தான்(சுப்பிரமணிய சாமியின் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் இந்த விசயத்தில் பாராட்டவே செய்கிறோம்). ஆனால் இன்று தமிழக மக்களிடம் எந்த செய்தி சேரவேண்டும் எது சேரக்கூடாது என்பதை முடிவு செய்வது கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள்.

ஈழப்படுகொலை உச்சத்தில் இருந்த போதும் அதை மக்களிடம் சென்று சேரவிடாமல் தடுத்ததும் இந்திய துணைக்கண்டம் முழுதும் ஸ்பெக்ட்ரம் ஊழல், அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் கனிமொழி நடத்திய பேரங்கள் வெளியானதும் அது தொடர்பான செய்திகளை தமிழக மக்களிடம் சென்று சேராமல் செய்யும் அளவிற்க்கு ஊடகங்களை கையில் வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தின் ஊடக ஆதிக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

30 சேனல்கள் 60 எஃப் எம் ரேடியோக்கள் பத்திரிக்கைகள் என இக்குடும்பத்தின் ஆதிக்கம் மிகப்பெரியதும் ஆபத்தானதும்.

4.சுமங்கலி கேபிள்விஷன் மற்றும் மீடியா மாஃபியா
தங்கள் குடும்ப தொலைக்காட்சியை தவிர்த்து வேறு எந்த தொலைக்காட்சியையும் சரியாக தெரியவைக்காமல் அழிக்கும் வேலையை செய்வது மாறன் குடும்பத்தின் சுமங்கலி கேபிள் விஷன் மூலமே, தமிழகத்தின் 90% கேபிள் இணைப்புகளை அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல், ரவுடித்தனத்தின் மூலம் கொண்டு வந்து இதன் மூலம் பிற தொலைக்காட்சிகள் நல்ல நிகழ்ச்சிகளை அளிக்கும்போது அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரச்சினை செய்வது, தொலைக்காட்சிகளுக்கு பிரைம் பேண்ட் தராதது மட்டுமின்றி இத்தொழிலில் ஏற்கனவே இருந்த

ஹாத்வே போன்ற நிறுவனங்களின் கேபிள்களை அறுத்து ரவுடித்தனம் செய்து வேறு மாற்றே இல்லாமல் செய்தது.மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்ததை பயன்படுத்தி பிற தொலைக்காட்சிகளுக்கு அனுமதி மறுத்தது, என்டிடிவி யுடன் ஸ்டார் விஜய் இணைந்து செய்திகளை வெளியிடுவதை பல்வேறு காரணங்களை கூறி தடைசெய்தது, ராஜ்டிவியை கிட்டத்தட்ட அழித்தது என மீடியா மாஃபியாவாக செயல்படுவது.


5. டாஸ்மாக் வியாபரத்தின் உச்சம், போதையில் தள்ளாடும் தமிழகம்

அரசாங்கமே சாராயம் விற்க்கலாமா என கண்டனம் செய்த திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்தது டாஸ்மாக் கடைகளை தெருவுக்கு தெரு திறந்ததும் கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மாக் வியாபரத்தை 500% ஆக உயர்த்தியதும் டாஸ்மாக் கடைகளை நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பதுமாக தமிழகத்தின் பெரும் இளைஞர்களை குடிகாரர்களாக ஆக்கியதும்.

நல்ல கட்டிடங்களும் கழிப்பறை வசதிகளும் இல்லாமல் இயங்கும் பள்ளிக்கூடங்கள் எத்தனையோ இருந்த போதும் மூன்று இலட்ச ரூபாய் செலவில் டாஸ்மாக் பார்களை ஏசி வசதி செய்ய அனுமதித்ததும் பின் கடும் எதிர்ப்புகளுக்கு பின் இத்திட்டத்தை திரும்ப பெற்றதென்றாலும் இந்த அரசின் நோக்கம் எதை நோக்கி இருந்தது என குறிக்கின்றது.


6. திரைத்துறையை கபளீகரம் செய்த கருணாநிதி குடும்பம்.

முப்பதாயிரம் ரூபாய்க்காக முதுகொடிய வேலை செய்யும் உயர்கல்வி படித்த கடுமையாக உழைக்கும் நம் போன்றவர்களிடையே முந்தா நாள் வரை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த தயாநிதி அழகிரி கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து விநியோகிக்கும் அளவுக்கு பணம் வந்ததெப்படி? உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி, கலாநிதி மாறன் போன்றவர்கள் தமிழகத்தின் பெருமளவிலான திரை அரங்குகளை மிரட்டியும் அதிகார துஷ்பிரயோகம் செய்து வளைத்தும் வைத்து பிறர் யாருமே இத்தொழில் செய்யமுடியாத அளவிற்க்கு கபளீகரம் செய்துள்ளனர்.

சிறு வியாபாரிகளே, சிறுமுதலாளிகளே, பஸ் உரிமையாளர்களே, முதலாளிகளேஉங்களுக்கும் இதே நிலைதான் இவ்வாட்சி தொடர்ந்தால். உங்கள் தொழிலை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

7.நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடும்ப வருமானத்தை பெறுக்குதல்

ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் 2006ல் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், கலைஞர் காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு ஆயிரத்தி ஐநூறூ கோடி ரூபாய்களென ஐந்து ஆண்டுகளில் 7500கோடி ரூபாய் காண்ட்ராக்டை எந்த அனுபவமுமில்லாத ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பித்த உடனேயே பெறுகிறது.

ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையை நவீனமாக்க 50கோடிகள்
தேவையென்று மத்திய அரசின் குறிப்பு தெரிவிக்கிறது 2500 கோடிகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் நவீனமாக்க இயலும் அனைத்து PHC க்களையும் நவீனமாக்க இயலும் ஆனால் மிகச்சிறப்பாக செயல்படும் அரசாங்க எல்.ஐ.சி நிறுவனத்தையும் தாண்டி ஸ்டார் இன்சூரன்ஸ்க்கு இத்தனை கோடி காண்ட்ராக்ட் தரப்பட்டதன் காரணம் ஊழலே...

இலவச வண்ணத்தொலைக்காட்சியினால் பெருகிய கேபிள்வருமானம், குடும்பத்தொலைக்காட்சிக்கு பெருகிய பார்வையாளர்கள் என ஒவ்வொன்றிலும் குடும்பத்தின் வருவாயை பெருக்கும் காரணங்களே முண்ணனியில் உள்ளன.


8.ஸ்பெக்ட்ரம் ஊழல்

தமிழனுக்கு இப்படியொரு தலைகுனிவை தமிழின விரோதிகளாலும் கூட ஏற்படுத்தியதில்லை, உலகின் மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு இலட்சத்தி எழுபத்தியாறாயிரம் கோடி ஊழலின் ஊற்றுக்கண் தமிழன் என்ற தலைகுனிவை ஏற்படுத்தியது மட்டுமின்றி ஊழலில் கிடைத்த பணமே ஈழத்தமிழினத்தின் மரண ஓலத்தையும் மறைத்தது. ஊழலே அனைத்துக்கும் காரணம், ஊழலே கொள்கைகளை மறக்க செய்யும், ஊழலே மக்களை ஏமாற்ற செய்யும், ஊழலே கடமை தவற செய்யும்... ஊழலே அனைத்துக்கும் காரணம்..

9.சங்கராச்சாரியின் விடுதலையை நோக்கி நடத்தப்படும் வழக்கு, தாகி கொலைவழக்கு, தினகரன் எரிப்பு வழக்கு

பார்ப்பன சங்கராச்சாரி மீது நடைபெற்று வரும் கொலை வழக்கை மிக பலவீனமாக கையாண்டு இந்த வழக்கிலிருந்து சங்கராச்சாரி விடுதலையாகுமளவிற்க்கு நடத்தப்படுகிறது,ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வாக்குமூலம் அளித்த பலர் பிறழ் சாட்சியாக மாறுமளவிற்க்கு வழக்கை பலவீனமாக கையாள்கிறது இந்த அரசு.''சங்கராச்சாரியார் மீது வீண் பழி சுமத்திக் கைது செய்த ஜெயலலிதாவுக்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது!'' என்று காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்தவர்கள், தீவிரப் பிரசாரத்தில் இறங்கி​யுள்ளனர் என்றால் இந்த அரசு கருணாநிதி அரசு யாருக்கு சாதகமாக நடந்து கொள்கிறது?

தாகி என்கிற முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டினன் தற்கொலையா செய்து கொண்டார்? அவரை கொன்றவர்கள் யார்? ஏன் வழக்கு பலவீனமாக நடத்தப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்? தினகரன் அலுவலகத்தில் மூன்று பேரை உயிருடன் கொளுத்தி எரித்த வழக்கு என்ன ஆனது?

10.பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிக்காரர்களின் சொத்துகள் மற்றும் குடும்ப அரசியல்.

குடும்பத்தின் தலைவர் முதல்வர், ஒரு மகன் துனை முதல்வர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர், மகள் எம்பி, பேரன் மத்திய அமைச்சர், துணைவியோ ஒரு இணை அரசாங்கத்தையே நடத்துகிறார்... மொத்த குடும்பமுமே கட்சி ஆட்சி என அத்தனையும் கையில் வைத்திருக்கிறதே இதுவே ஒரு வகையில் பார்ப்பனியம் தான் கருணாநிதியினால் பிறந்தவர்கள் என்ற பிறப்பின் அடிப்படை தவிர வேறு என்ன தகுதி இவர்களுக்கு?

பெருகியுள்ள ரவுடித்தனம், பெருகியுள்ள அமைச்சர்கள் கட்சிகாரர்களின் சொத்தைப்பற்றியெல்லாம் விளக்கவும் வேண்டுமோ?

இப்படம் இன்றே கடைசி - மணற்கேணி 2010 போட்டி இறுதிநாள்

மணற்கேணி 2010

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2010ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2010 நிர்வாகக் குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/