தொரையின் துறை பறிபோன கதை சில அரசியல் கிசு கிசுக்கள்

வாரம் இருமுறை பத்திரிக்கைகள், இட்லி வடை போன்றவைகள் எல்லாம் துரையின் துறை போனதைப்பற்றி கிசு கிசுக்கின்றன.

தொரை காலேஜ் கட்டறாரு, தொரை சொத்து சேர்த்துட்டாரு, தொரை நண்பருக்கு சாதகமா நடந்துக்கிட்டாரு இது தான் கம்ப்ளெய்ண்ட் இதனால தான் தூக்கிட்டாங்க என்று புலனாய்வு பத்திரிக்கைகளெல்லாம் பொலனாய்வு செய்து போட்டாங்க, இதற்காகவெல்லாம் நடவடிக்கை எடுக்கனும்னா தாத்தாவும் தாத்தா குடும்பத்து மேலயும் தான் மொதல் நடவடிக்கை எடுக்கனும்னு தெரியாதா என்ன அவிங்களுக்கு, பின்னே தாத்தா குடும்ப சொத்தெல்லாம் தாத்தா கதை வசனம் எழுதி சேர்த்ததா?

தொரைக்கு துறை புடுங்கப்பட்ட விசயம் நடந்ததென்னமோ இப்போதான் ஆனா பூர்வாங்க வேலைகள் ரொம்ப நாளா நடக்குது, அரசியல் வட்டத்தில் இதற்காக கிசுகிசுக்கப்படும் காரணங்கள்

1. தொரைக்கு தலைவர் தாத்தாவா குடிதாங்கியா என்பதில் தொரைக்கும் குடிதாங்கிக்கும் எந்த டவுட்டும் இல்லையாம், ஆனால் தாத்தாவுக்கு நிறையவே இதில் டவுட் உண்டு.

2. தாத்தாவுக்கு பின்னால வாரிசை கவுக்க எதிர் ஆளுங்க போடுற சதுரங்க பிளானில் வாரிசுக்கு ஆதரவா வாரிசின் பின்னால தம் நண்பர்கள் நிற்பாங்க அப்படிங்கற நம்பிக்கை தாத்தாவுக்கு இல்லை, தொரை மேல மட்டுமில்ல, வீரபாண்டி கோட்டையிலே உள்ள சிக்ஸ்பேஸ் மேலயும், பிச்சை, மணியானவர் என பலர் மேலும் நம்பிக்கையில்லையாம்.

3. குடிதாங்கிக்கும் தாத்தாவுக்கும் ஒறவு புட்டுக்கிட்ட போது தொரை பெயரில் வெளியான அறிக்கையில் தொரையோட பெயர் மட்டும் தான் தொரைதாம் மற்றதெல்லாம் யாருடையது என்று சொல்லி தெரியனுமா?

4.கலக்க போவது காமெடியில் டி.ராஜேந்தர் வறுபடுவது மாதிரி தொரையோட மிமிக்கிரியில் அதிகம் வறுபடுவது அப்போதைய 'இளைய'வாம் இளைய தொணை ஆன பின்பும் தொரை மிமிக்கிரியில் தொடருதாம், தொரைக்கு தொணை மேல மரியாதையில்லைங்கறது தொணைக்கும் தாத்தாவுக்கும் வருத்தமாம்

5. தொரையை மட்டம் தட்ட தொரை ஆளுங்களை தொரை ஊருல பதவி கொடுக்காம காலி செய்தார் அப்போதைய இளைய இப்போதைய துணை, தொரை அழுது ஆர்பாட்டம் செய்து திரும்ப வாங்கிட்டாரு, தொரை இல்லாம ஊருக்குள்ள கட்சி நடத்த முடியும்ங்கற நிலை வரும்வரை விட்டு கொடுத்து இப்போ காலி செய்ததாக பேச்சி

6. வீரபாண்டி கோட்டியிலே கொடி நாட்ட போனாராம் இளைய, சிக்ஸ்பேஸ் உடன் முட்டியதில் தொடருந்து நிலையத்துக்கு ஒரு ஆளும் வரலையாம், அப்புறம் தாத்தா ராசியா போக சொல்லியிருப்பதால் அண்ணா தம்பி என்று உருகுகிறார்களாம்

7.சிக்ஸ்பேஸ்க்கும், குடிதாங்கி கட்சிக்கும் நடக்கும் மோதலை உண்மை என்று தாத்தா வீட்டில் இருக்கும் பொடிசு கூட நம்பலையாம்

8. கோல்ட் ஹேர் காரரோட க க கல்லூரியில் பாதி கவிதைக்கு போயிருச்சாம்

9.பன்னீர்சோடா வாசம் வீசும் ஒருவர் காலேஜ் கட்டுறாருன்னு தகவல் போனதாம், என்னதான் மறைத்தாலும் மொத்தமா நூறூ ஏக்கர் வாங்கினா தெரியாதா என்ன? பாதி காலேஜ் போயிருந்தா கூட பரவாயில்லை, முழுசும் கேட்குறாங்களாம்.

10. தாத்தாவோட தொடர்புக்கு இருக்கும் எல்லா பை-பாஸ் வழிகளையும் நேரம் பார்த்து வெட்டெறிந்துவிட்டு தான் மறுவேலையாம், பின்னே நெல்லுக்கு மட்டும் பாயனுமோ இல்லியோ இங்கே வழியில இருக்கிற புல்லு பூண்டுக்கெல்லாம் பாயுதே...

11 பின்னூட்டங்கள்:

said...

கிசுகிசுன்னா இப்படித்தான் இருக்கனும்!


அடிச்சு ஆடுங்க தல!

said...

என்ன பாஸ் இது....
ஒன்னுமே புரியலையே...
:P

said...

//ஜெகதீசன் said...
என்ன பாஸ் இது....
ஒன்னுமே புரியலையே...
:P//
ஹா ஹா நம்பிட்டோம்

//
வால்பையன் said...
கிசுகிசுன்னா இப்படித்தான் இருக்கனும்!


அடிச்சு ஆடுங்க தல
//
இன்னும் நிறைய இருக்கு அப்பப்போ எடுத்து விடுவோம் :-)

said...
This comment has been removed by a blog administrator.
said...

//இன்னும் நிறைய இருக்கு அப்பப்போ எடுத்து விடுவோம் :-)//

தொடர்ந்து அரசியல் சித்து விளையாட்டுகளை அம்பலப்படுத்துங்கள்.

said...

ஒரிஜினல் மனிதா, பொது இடத்தில் ஒழுங்கு மரியாதையா பேச உங்க வீட்டில் சொல்லி தரலையா? வேற எங்கேயாவது வச்சிக்கோ உம்மோட விளையாட்டையெல்லாம்...

said...

இந்த மாட்டர்ல சம்பந்தப் பட்ட சாமி(ஆசாமி) ஒன்னு அண்மையில் சிங்ப்பூருக்கு வந்த போது ஆர்ச்சட் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரு நாளைக்கு 3000 வெள்ளி(சொந்த காசா?) வீதம் கொடுத்து தங்கியது.

இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கடிகாரம் வாங்கியது.

வாங்கிய அளவுக்கு மீறிய பொருட்களை, விமான நிறுவன முக்கிய அதிகாரிகளிடம் பேசி கூடுதல் எடைக்கு பணம் கட்டாமல் ஊருக்கு போய் சேர்ந்துள்ளது.(பிச்சைக்காரன் கூட வருமான வரி கட்டுவதாக நகைச்சுவை எடுக்கிறார்கள்]

said...

அப்போ 'எல்லாத்துலயும்' குடிதாங்கி இல்லைன்னு ஒண்ணுமில்லே அப்டின்றீ்ங்க ... ?

said...

//தருமி said...
அப்போ 'எல்லாத்துலயும்' குடிதாங்கி இல்லைன்னு ஒண்ணுமில்லே அப்டின்றீ்ங்க ...
//
தருமி அய்யா நீங்க வேற எல்லையில் இருக்கிங்க... இந்த கிசு கிசு எல்லாம் எங்க ஊர்காரங்களுது... சிக்ஸ்பேஸ்-தொரை-பன்னீர்வாசம்-குடிதாங்கி எல்லாம் இணையும் ஒரு புள்ளி உண்டு. உங்க ஊர் கிசு கிசு எழுதுங்களேன் அதில் குடிதாங்கி ஒன்றில் கூட வரமாட்டார்...

said...

என்னா தல, தொர எப்போ உங்க கச்சில எணைய போவுதாம்? :) சின்ன கொய்யா ஒத்துக்குமா? :)

said...

அய்யா அத்திவெட்டியாரே, என்னாச்சி இந்த சிங்கைவாசிகளுக்கு? இந்த பெரிசு தான் பதிவு போட்டு கிசுகிசு எழுதுது.. நீங்க பின்னூட்டத்துல.. :(