திரட்டி நடத்த ஆகும் செலவு கணக்கு மற்றும் சக்திவேல் என்னும் காமெடி பீஸ்

சக்திவேல் என்னும் பதிவர் பதிவுலகின் சமீபத்திய காமெடி பீஸ் என்பது பதிவுலகறிந்ததே, அவரின் (காமெடி)அறசீற்றத்தின் உச்சகட்டமாக நேற்று தமிழ் திரட்டிகளின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார்... அது "6. பதிவர்களின் பதிவை மட்டும் வெளியிட்டு பணம் சம்பாதித்து விட்டு மாங்கு மாங்கென்று எழுதும் பதிவர்களுக்கு நயா பைசா தராமல் இருக்கும் திரட்டிகள்."

திரட்டி நடத்த ஆகும் செலவை சக்திவேல் ஏற்றுக்கொண்டால் நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ், திரட்டி.காம் ஆகிய முக்கிய நான்கு திரட்டிகளிடமும் பேசி அவர்களின் மொத்த மாத வருமானத்தையும் சக்திவேலிடம் தரத்தயாராக உள்ளேன்.

சக்திவேல் மட்டுமல்ல, ஏற்கனவே செல்வராஜ் என்பவரும் இதே போல திரட்டி நடத்துபவர்கள் பெரும் பொருள் ஈட்டுவது போன்று பதிவிட்டிருந்தார், அதற்காகவே இந்த தகவல்.

இனி திரட்டி செய்ய மற்றும் நடத்த ஆகும் செலவுகள் கீழே:

One Time Cost (ஒரு முறை ஆகும் செலவு)

ஒரு PC அல்லது லேப்டாம் ரூ. 50,000

திரட்டி சாப்ட்வேர்
(இணையத்தில் ஓப்பன் சோர்ஸ் என்ற முறையில் இது கிடைத்தாலும், அதை அப்படியே பயன்படுத்த இயலாது, பல மாற்றங்கள் செய்ய வேண்டும், இதற்கு ஒரு மாதம் ஆகும், அதாவது 22 Mandays, 1 Manday = 8 Manhours) மொத்தம் (22 X 8 = 176 Man hours) ஒரு Man hour = 15$, 1$ = ரூ. 45 மொத்தம் 176 Manhours க்கு இந்திய மதிப்பில் ரூ 1,18,800

தள முகப்பு வடிவமைப்பு (web page designing) = ரூ 15,000

வருடாந்திர செலவுகள்

தள முகப்பு வடிவமைப்பு மாற்றுதல் = ரூ.15,000

திரட்டியை பிரபலமாக்க செய்யும் விளம்பர செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

போட்டி நடத்துவது மற்றும் இன்ன பிற பரிசு செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

திரட்டி விடயம் தொடர்பாக பதிவர்கள் மற்றும் பலருடன் தொலைபேசியில் உரையாடுவது = ரூ 25,000 (இந்தியாவிற்குள் என்றால் ரூ 5,000)

புதிய சர்வீஸ்களை உருவாக்குவது(ஒரு மாதம்) = 1,18,000

மாத செலவுகள்

செர்வர் ஹோஸ்டிங்( திரட்டிகளின் பளு கூடுதல் என்பதால் டெடிக்கேட்டர் செர்வர் போக வேண்டும், இது குறைந்தது $100 ஆகும் ) ரூ 4,500

தினம் 2 மணி நேரம் வேலை செய்தல் (பதிவுகளை அப்ரூவ் செய்தல், மின் மடல் அனுப்புதல், தளம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தல், ப்லாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் மற்றும் பல வலைதளங்களின் கோடிங் மாறும் போது திரட்டி கோடிங்கை மாற்றுவது மாதம் 60 மணி நேரம், 1 Manhour = 15$, 1$=Rs45)
மொத்தம் 60 X 15 X 45 = Rs 40,500
(இதில் பொண்டாட்டியுடன் பேசாமல், குழந்தையோடு விளையாடாமல் தினம் இரண்டு மணி நேரம் செலவு செய்து குடும்பத்தில் வசை வாங்கும் கணக்கையும், கணிணி முன் உட்கார்ந்து உடம்பு குண்டடித்தல், கண் பார்வை, முதுகுவலி பிரச்சினைகள் ஏற்படுத்தும் மருத்துவ செலவு கணக்கில் இல்லை)

ப்ராட் பேண்ட் இணைய செலவு மற்றும் மின்சாரம் = 1500

ஆக ஒரு திரட்டியை மாதா மாதம் நடத்த தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 46,500 ஓராண்டிற்கு ரூ 5,58,000

மாத செலவு தவிர்த்து ஓராண்டுக்கு தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 2,08,000 (விளம்பரம் மற்றும் போட்டி செலவு குறைந்த அளவு கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது)

ஒரு முறை திரட்டியை நிறுவ எடுக்கும் உழைப்பு மற்றும் செலவு ரூ 1,83,000

ஆக மொத்தம் ஒரு ஆண்டிற்கு திரட்டி நடத்த ஆகும் உழைப்பு மற்றும் செலவு ரூபாய் ரூ7,66,000 மற்றும் One time cost ரூபாய் 1,83,000 ஆக மொத்தம் 9,49,000( ஒன்பது இலட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் ரூபாய்கள் மட்டுமே)

திரட்டி நடத்துபவர்களில் பெரும்பாலும் கணிணி வல்லுனர்கள் என்பதால் அவர்களின் உழைப்புக்கான பொருள் செலவு சேர்க்காமலும் கூட மாதம் ரூபாய் 6,000(செர்வர் ஹோஸ்டிங் + இணைய மற்றும் மின்சார செலவு) (12 X 6000 = 72,000) மற்றும் ஆண்டுக்கு 70,000 முதல் 90,000 ஆக மொத்தம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணமாக செலவு செய்தே ஆக வேண்டும்...

கணிணி வல்லுனர்கள் உழைப்பை சேர்த்தால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ரூபாய் பத்து இலட்சமும், அதை சேர்க்காமல் பணமாக ரூபாய் ஒன்றரை இலட்சமும் செலவு செய்யும் இந்த திரட்டி செலவை அண்ணன் சக்திவேல் எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாதமும் திரட்டிகளுக்கு கிடைக்கும் முழுவருமானத்தையும் அண்ணன் சக்திவேலுக்கு அளிக்க நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ் மற்றும் திரட்டி.காம் திரட்டிகளிடம் பேசி வாங்கி தர நான் தயாராக உள்ளேன், அண்ணன் சக்திவேல் இதற்கு தயாரா என்று தெரிவிக்கவும்...

இவ்வளவு பணமும் உழைப்பும் போட்டு திரட்டிகளை ஏன் நடத்துகிறார்கள் என்றால் அது அவர்களின் "நானும் ஏதாவது செய்யனும் என்கிற சுயஅரிப்பு" மட்டுமே, திரட்டி நடத்துவதால் கிடைக்கும் மனதிருப்தி, தமிழ்மணம் காசி, தேன்கூடு சாகரன் என்று கிடைக்கும் பெயர் அதனால் ஏற்படும் திருப்தி மட்டுமே....


திரட்டி கிசு கிசு
திரட்டி நடத்தி நடத்தி அது நடத்துவதற்கான மாத செலவுகளும் உழைப்பும் கை மீறி போவதால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை தன் உழைப்பில் உருவாக்கி சமீபத்தில் அதிக பிரபலமான ஒரு திரட்டியை ஒரு குழுவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார் அந்த திரட்டி ஓனர்...

இந்த கிசு கிசுவுக்கான குளூ : அந்த திரட்டி பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை

60 பின்னூட்டங்கள்:

said...

//
திரட்டி நடத்தி நடத்தி அது நடத்துவதற்கான மாத செலவுகளும் உழைப்பும் கை மீறி போவதால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை தன் உழைப்பில் உருவாக்கி சமீபத்தில் அதிக பிரபலமான ஒரு திரட்டியை ஒரு குழுவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார் அந்த திரட்டி ஓனர்.
//
யாருங்க அது???

said...

ஏன் ஒரு காமெடி பீசுக்கெல்லாம் பதில் போட்டு விளம்பரம் தரீங்க?

said...

//

இந்த கிசு கிசுவுக்கான குளூ : அந்த திரட்டி பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை
//
ஓ... அந்தத் திரட்டியா...

said...

"ads for indians" அப்படின்னு சொல்லீட்டு அவரு பதிவுல ஒரு 50% இடத்துல விளம்பரங்களாப் போட்டுருக்காரே... அதை கிளிக் பண்ணுறவங்கல்லாம், இதே திரட்டிகள் வழி தான அவரு blogக்கு போயிருப்பாங்க? அதனால அவருக்கு வரும் வரும்படியில கொஞ்சத்த திரட்டிகளுக்குத் தருவாரா?

said...

//ஜெகதீசன் said...
ஏன் ஒரு காமெடி பீசுக்கெல்லாம் பதில் போட்டு விளம்பரம் தரீங்க?
//
நிஜம் தான், காமெடி பீஸ் இப்போ இம்சை இளவரசனா மாறுதே...

////

இந்த கிசு கிசுவுக்கான குளூ : அந்த திரட்டி பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை
//
ஓ... அந்தத் திரட்டியா...
//
அதே தான் கண்டுபுடிச்சிட்டிங்களே

said...

//"ads for indians" அப்படின்னு சொல்லீட்டு அவரு பதிவுல ஒரு 50% இடத்துல விளம்பரங்களாப் போட்டுருக்காரே... அதை கிளிக் பண்ணுறவங்கல்லாம், இதே திரட்டிகள் வழி தான அவரு blogக்கு போயிருப்பாங்க? அதனால அவருக்கு வரும் வரும்படியில கொஞ்சத்த திரட்டிகளுக்குத் தருவாரா?
//
திரட்டிகளுக்கு கூட வேண்டாம், அவர் பதிவை வந்து படிக்கும் வாசகர்களுக்கு தரட்டுமே

said...

//ஜெகதீசன் said...

ஏன் ஒரு காமெடி பீசுக்கெல்லாம் பதில் போட்டு விளம்பரம் தரீங்க?//


ரிபீட்ட்ட்ட்

said...

அப்போ மீதி 9 குற்றச்சாட்டுகளை ஒத்து கொள்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

என்ன கொடுமை இது... தமிழ்வெளியிலாவது மேல ஒரு மூலையில கூகுள் விளம்பரங்கள் இருக்கு.. தமிழ்மணத்தில அது கூட இல்லையே... வேற எதை வச்சு இந்தத் திரட்டிகள் எல்லாம் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறாங்கன்னு சக்திவேல் விளக்குவாரா?

said...

சும்மா விட்டு விடுங்க நண்பா...

பாவம் தெரியாமல் சொல்லுகின்றார் என்று நினைக்கின்றேன்...

said...

//dondu(#11168674346665545885) said...
அப்போ மீதி 9 குற்றச்சாட்டுகளை ஒத்து கொள்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//
வாங்கய்யா நல்லா இருக்கிங்களா?

said...

டோண்டுவுக்கு எனக்குத் தெரிந்தவரை நான் பதில் சொல்லலாமா?

said...

// dondu(#11168674346665545885) said...

அப்போ மீதி 9 குற்றச்சாட்டுகளை ஒத்து கொள்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

மற்ற மீதி திரட்டி நடத்துவர்களின் வேலை பழு மற்றும் சங்கடங்கள்.. இதைப்பற்றி அவரே பதிவில் சொல்லியுள்ளார்..

said...

//டோண்டுவுக்கு எனக்குத் தெரிந்தவரை நான் பதில் சொல்லலாமா?
//
தாராளமாக ஜேக்

said...

//
9.பதிவர்கள் ஏதாவது கேள்விகள் கேட்டால் அதற்கு பதில் தராமல் நழுவிச் செல்வது.
//

முற்றிலும் தவறான அவதூறு...
இவர் எந்தத் திரட்டிக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்கள் பதில் தரவில்லை என்பதைத் தெரிவிப்பாரா?

திரட்டிகளுக்கு நான் அனுப்பிய கேள்விகளுக்கு அவர்களால் முடிந்த அளவு விரைவாக பதில் தந்திருக்கிறார்கள்...
தமிழ்மணம், பதிவர்கள் எவ்வளவு கிறுக்குத்தனமான கேள்விகள் கேட்டாலும், அதற்கும் தெளிவாக பதில் சொல்லிவிட்டு இறுதியில் "புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி" அப்படின்னு நன்றியும் சொல்லுவாங்க...

said...

இவரு விளம்பரத்துக்காக இவர் பதிவில் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் தரவேண்டிய அவசியம் ஒன்னும் திரட்டிகளுக்கு இல்லையே...
:P

said...

"ரமணா" மாதிரி போட்டுத் தாக்குறீங்க்ளே பாஸு..!
ஆரம்பிருச்சா அடுத்த எபிசோடு..?

said...

dondu(#11168674346665545885) said...
அப்போ மீதி 9 குற்றச்சாட்டுகளை ஒத்து கொள்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

பாயிண்ட புடிச்சாரு பாருங்க டோண்டு சாரு!

said...

பிரபல பதிவர் திரு சக்திவேல் ஐயா ஒரு தமிழ் வலைப்பதிவு திரட்டியை ஆரம்பித்து திரட்டி ஓனர்கள் படும் இன்பத்தை தானும் பெற்று நிறைவான வருமானத்தையும் ஈட்டலாமே!

அட்வான்ஸ் வாழ்த்துகள் சக்திவேல் ஐயா!

said...

டோண்டு சாருக்கு ஒரு பதிலை மட்டும் சொல்லிவிட்டு யோசித்துக் கொண்டிருக்கும் ஜெகதீசன் மேடைக்கு வரவும்.

said...

திரட்டி என்றால் பால் திரட்டி இல்லையா ?

அவ்வ்வ்

இம்புட்டு செலவு செய்து விக்கிறதுக்கு பதிலாக சேட்டுக் கடையில் வாங்கித் திண்ணுட்டு போகலாம் !

:)

//குழலி / Kuzhali said...
//dondu(#11168674346665545885) said...
அப்போ மீதி 9 குற்றச்சாட்டுகளை ஒத்து கொள்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
//
வாங்கய்யா நல்லா இருக்கிங்களா?
//

அவரு நல்லா இருப்பதால் தான் பெரியார் ஏன் 'கீழவெண்மணி' சம்பவத்தில் நாயுடுகளுக்கு ஆதரவாக நடந்து கொண்டார் என்ற கேள்வியை 1000 தடவைக்கும் மேல் அலுப்பு இல்லாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

கம்யூனிச தூண்டுதலால் தான் அந்த சம்பவம் நடந்தது, கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் அரசியல் நிலை இல்லைனு பலரும் சொல்லிட்டாங்க,
பெரியார் தெலுங்கு பேசும் நாயுடு இல்லை, கன்னடம் பேசும் நாயக்கர் என்றும் பலர் சொல்லிவிட்டார்கள், இருந்தாலும் ஐயங்காருக்கும் ஐயருக்கும் பூணூல் லிங்க் இருப்பதுபோல் இருக்குமோன்னு ஆழமாக ஐயப்படுகிறார்.

டோண்டு இராகவன் சாருக்கு திருப்தியான பதில் தரமுடியுமான்னு பாருங்க, பாவம் அதையே டைப் செய்து விரல் நோவு வந்துவிடப்போகிறது என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
:)

said...

//திரட்டி என்றால் பால் திரட்டி இல்லையா ?
//
:-))))))))

said...

கோவி.கண்ணன் said...
திரட்டி என்றால் பால் திரட்டி இல்லையா ?

அவ்வ்வ்//

அது வெண்ணெய் திரட்டின்னு பிரபல பதிவர் சக்திவேல் சொல்கிறார்.

நீங்க என்ன சொல்றீங்க!?

said...

//பெரியார் தெலுங்கு பேசும் நாயுடு இல்லை, கன்னடம் பேசும் நாயக்கர்//
நாயுடு என்றால் தெலுங்கு பேசுபவர்தா என நான் எங்கு கூறினேன்? தான் கன்னட பலீஜா நாயுடு என பெரியாரே கூறியிருப்பதை நீங்கள் படித்ததில்லையா?

அதெல்லாம் சரி, ஒப்புக்குக் கூட கோபாலலிருஷ்ண நாயுடுவை பெயர் சொல்லி கண்டிக்காத, 54 தலித்துகள் இறந்ததற்கு ஒப்புக்கு கூட வருத்தம் தெரிவிக்காத பெரியார், சம்பந்தப்பட்ட பண்ணையார் கோபால கிருஷ்ண ஐயராக இருந்தால் என்ன கூறியிருப்பார்? அப்போதும் கம்யூனிஸ்டு சதி என விட்டிருப்பாரா?

அவர் நாயக்கர் என சொல்லி கொண்டது பலீஜா நாயுடுகள் தாங்களே தங்களை நாயக்கர் என சொல்லிக் கொண்டதுதான் என்பதையும் கேள்விப்பட்டதில்லையா?

100 முறை நான் இக்கேள்வியை கேட்பதன் காரணமே ஒரு முறை கூட நேர்மையான பதில் வரவில்லை என்பதால்தான்.

இப்போதாவது நேர்மையான பதில் வருகிறதா என பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஒதுங்கிய அந்த திரட்டி ஓனர் தற்பொழுது தான் நிம்மதியா இருப்பதாக சொல்லி வருகிறார்!
அவர் எந்த சக்திவேலால் பட்டாரோ!

said...

// dondu(#11168674346665545885) said...
அப்போ மீதி 9 குற்றச்சாட்டுகளை ஒத்து கொள்கிறீர்களா?//


நாராயணா நாராயணா!

வந்த வேலை முடிந்ததா!?

said...

சாதி ஸ்பெசலிஸ்டுகள் விவாதத்தை சிறப்பாகக் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.

ஆனா ஒரு ஆ.. தங்கம் பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்காது.

said...

//எதை வச்சு இந்தத் திரட்டிகள் எல்லாம் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறாங்கன்னு சக்திவேல் விளக்குவாரா?//

யாராவது கேடி அவர்கிட்ட அப்படி சொல்லியிருப்பாங்க!

சரி கூகுள் விளம்பரம் இருந்தா கோடி கோடியா சம்பாரிக்கலாமா!?

said...

//100 முறை நான் இக்கேள்வியை கேட்பதன் காரணமே ஒரு முறை கூட நேர்மையான பதில் வரவில்லை என்பதால்தான்.

இப்போதாவது நேர்மையான பதில் வருகிறதா என பார்ப்போம்.//

பெரியார் மீது இருக்கும் அவதூறுகளைப் பற்றி பெரியார் பற்றாளர்கள் தான் கவலைப்பட வேண்டும், ஆனால் நீங்கள் அதில் ஆவலாக இருப்பதைப் பார்த்தால் அந்த சந்தேகம் பற்றி யாரும் விளக்கிவிட்டால் (ஏற்கனவே சுகுணாதிவாகர் அதுபற்றிய விளக்கம் எழுதிவிட்டார்) அடுத்து டோண்டு இராகவன் பதிவில் பெரியார் முழக்கம் எழுதப்படும், தமிழோவியா ஓரம் கட்டப்படுவார் என்று நான் நம்புவதில்லை.

:)

said...

//தமிழ்மணம், பதிவர்கள் எவ்வளவு கிறுக்குத்தனமான கேள்விகள் கேட்டாலும், அதற்கும் தெளிவாக பதில் சொல்லிவிட்டு இறுதியில் "புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி" அப்படின்னு நன்றியும் சொல்லுவாங்க...//

நீங்கள் அனுப்பிய கேள்விகள் வெகு சுவாரஷ்யமா இருக்கும்னு நம்புறேன்!

said...

வால்பையன் said...
//தமிழ்மணம், பதிவர்கள் எவ்வளவு கிறுக்குத்தனமான கேள்விகள் கேட்டாலும், அதற்கும் தெளிவாக பதில் சொல்லிவிட்டு இறுதியில் "புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி" அப்படின்னு நன்றியும் சொல்லுவாங்க...//

நீங்கள் அனுப்பிய கேள்விகள் வெகு சுவாரஷ்யமா இருக்கும்னு நம்புறேன்!//

எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது.

said...

//அவர் நாயக்கர் என சொல்லி கொண்டது பலீஜா நாயுடுகள் தாங்களே தங்களை நாயக்கர் என சொல்லிக் கொண்டதுதான் என்பதையும் கேள்விப்பட்டதில்லையா?//

காட்டுநாயகர்களும், இன்னும் பிறரும் கூட நாயுடுகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள், அதற்காக அவர்களிடம் (பெண்) கொடுக்கல் வாங்கள் இருக்கிறதா என்ன ?

செட்டியார்களிலும் பல செட்டியார்கள் உண்டு, அதுக்காக ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக / எதிர்ப்பாக களம் இறங்க மாட்டார்கள், இறங்கனும் என்று நீங்கள் தான் எதிர்பார்க்கிறீர்கள்.

அதெல்லாம் விடுங்க வடகலை, தென்கலை ஐயங்கார் இரண்டும் ஒன்றா ? யானைக்கு நாமம் போடும் வழக்கே இன்னும் முடியவில்லையாமே ? இப்படி இருக்கையில் பலிஜாக்கள் நாயுடுகளாக இருப்பதால் மற்ற நாயுடுக்களுக்கும் ஆதரவாக எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்பது டோண்டு இராகவனின் தனிப்பட்ட எதிர்பார்ப்பா ?

ஒரு பண்ணையார் பார்பனராக இருந்தால் கண்டித்திருப்பார் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ? தனிப்பட்ட பார்பனர்களை பெரியார் தரக்குறைவாக நடத்தியது இல்லையே, குல்லுகப்பட்டர் என்று இராஜாஜியை பெரியார் பட்டப்பெயர் இட்டு அழைத்தாலும் அவரின் நெருங்கிய பார்பன நண்பர் ஆயிற்றே.

said...

எத்தனை சாதியிருக்கிறதோ அவர்களையெல்லாம் வரிசையாக நிற்க வைப்போம்!

யாருக்கு ”அங்கே” கிளை இருக்கிறதோ அவர்களே உயர்சாதி!

மற்றவர்கள் சாதியை பற்றி பேசாமல் இருந்து கொள்வோம்!

ஒகேவா!?

said...

\\சுவாரஷ்யமா\\

தோழர் வாலண்ணே..!
நீங்க கம்யூனிஸ்ட்டாண்ணே..!
:)

said...

\\எத்தனை சாதியிருக்கிறதோ அவர்களையெல்லாம் வரிசையாக நிற்க வைப்போம்!
யாருக்கு ”அங்கே” கிளை இருக்கிறதோ அவர்களே உயர்சாதி!
மற்றவர்கள் சாதியை பற்றி பேசாமல் இருந்து கொள்வோம்!
ஒகேவா!? \\

சரியான பதிலடி...!
கோவி.கண்ணன் தேவையில்லாமல், விவாதம் செய்கிறாரென்றே அடியேனுக்கு தோன்றுகின்றது.
இதை நான் சொன்னால்....?!?!?
:)

said...

சக்திவேல் பண்ணுற காமெடி-க்கு ஒரு அளவே இல்லையா? :)

said...

டக்ளஸ் நான் மனிதனாக இருக்க என்ன செய்யனும்!

எதையும் பேசாமா, எழுதாம இருக்கட்டுமா!?

கம்யூனிஷம் மட்டுமல்ல, எல்லா இஷத்துலயும் நான் இருக்கேன்!

said...

ஒதுங்கிய அந்த திரட்டி ஓனர் தற்பொழுது தான் நிம்மதியா இருப்பதாக சொல்லி வருகிறார்!
அவர் எந்த சக்திவேலால் பட்டாரோ!
//
அதே சக்திவேல்தானோன்னு பட்சி சொல்லுது.

சக்திவேல் சார்..

ப்ளீஸ் திரட்டி பாவம் , தமிழ்மணம் பாவம்..தமிழ்வெளி பாவம் , தமிழிஷ் பாவம்....

வுட்டுடுங்கோ....

said...

//திரட்டி நடத்த ஆகும் செலவை சக்திவேல் ஏற்றுக்கொண்டால் நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ், திரட்டி.காம் ஆகிய முக்கிய நான்கு திரட்டிகளிடமும் பேசி அவர்களின் மொத்த மாத வருமானத்தையும் சக்திவேலிடம் தரத்தயாராக உள்ளேன்
//
ப்ளீஸ் இதைப்பற்றி சக்திவேலிடம் யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ப்ளீஸ்...

said...

//பெரியார் மீது இருக்கும் அவதூறுகளைப் பற்றி பெரியார் பற்றாளர்கள் தான் கவலைப்பட வேண்டும், //

Appuram enna mayiththukku ramasamy kadavulai paththi pesinanam?

said...

கீழவெண்மணி' சம்பவத்திற்கு எதிராக ராஜகோபாலாச்சியார் என்னென்ன போராட்டங்கள் நடத்தினார் என அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...

said...

இப்பதிவினையை ஜாதிப்பிரச்சனை பற்றிய பதிவாக்க, அரும்பாடு பட்ட நண்பர் கோவி.கண்ணனுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.

said...

//டக்ளஸ்... said...
இப்பதிவினையை ஜாதிப்பிரச்சனை பற்றிய பதிவாக்க, அரும்பாடு பட்ட நண்பர் கோவி.கண்ணனுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.
//

டோண்டு இராகவன் சார், இங்கு பின்னூட்டம் இட்டு இருப்பதால் கேட்டேன். அவருடைய பதிவில் கேட்கலாம், ஆனால் அனானிகளா(ல்)க தரம் குறைந்த திட்டுகள் கிடைக்கும், அதுக்கும் கீழேயே டோண்டு சார், கோவி.கண்ணனை தரம் தாழ்த்தி பின்னூட்டுவதை நான் ஏற்கவில்லைன்னு மறுபதில் போடுவார். அவர் தான் அனானியாகப் போட்டு அவரே பதில் போட்டாரான்னு நான் அவரை போய் சந்தேகப்பட வேண்டி இருக்கும். தேவையற்ற சங்கடம் அவருக்கும் எனக்கும் ஏற்படும். அவருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று விருப்பபட்டு அவருடைய அந்தக் கேள்விக்கு இங்கு பதில் சொல்லுகிறேன்.

மேலும் டோண்டு இராகவன் குறிப்பிடும் கீழவெண்மணி பற்றி நண்பர் குழலியும் நானும் சிங்கையில் திரு வீரமணியிடம் அந்தக் கேள்வியை நேரடியாகக் கேட்டு நான் முந்தைய பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும் பதிலைப் பெற்றோம் என்பதால் இந்தப் பதிவில் அதைக் கேட்பது சரி என்று பட்டது.

said...

//Anonymous said...
//பெரியார் மீது இருக்கும் அவதூறுகளைப் பற்றி பெரியார் பற்றாளர்கள் தான் கவலைப்பட வேண்டும், //

Appuram enna mayiththukku ramasamy kadavulai paththi pesinanam?
//

அண்ணே, நீங்க பக்கத்துவீட்டுக்காரனை கேவலமாக நடத்துவதை எதிர்த்த வீட்டுக்காரன் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கனும்னு சொல்ல வர்றிங்க. உங்கப் பக்கத்து வீட்டுக்காரன் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட தலித். எதிர்த்த வீட்டுக்காரன் பெரியார்.

said...

ஒருசாரார் பெரியாரை கடவுளாக்க முயற்சிப்பதும், ஒருசாரார் பெரியாரை வில்லனாக்க முயற்சிப்பதும் கேலிகூத்தாக இருக்கிறது!

ஒரு மதகுருவின் ஒழுக்கத்தன்மையை கேள்விகுள்ளாக்கினால் அந்த மத அபிமானிகளுக்கு என்ன கோபம் வருமோ அதே கோபம் பெரியார் அபிமானிகளுக்கும் வருவது நகைப்புகுறியது!

பெரியாரும் வாழ்ந்த செத்த மனிதர் தான்! அவரிடமிருந்து வந்த கருத்துகள் எத்தையோ வீரியமிக்கவை, மனித நலனுக்கு தேவையானவை அதைவிட்டுவிட்டு சும்மா குழாயடி சண்டை போடுவது நம்மவர்களுக்கு அழகா!

கோவிஜி உங்களுக்காக எனது பதிவு காத்து கொண்டிருக்கிறது என்னான்னு போய் பாருங்க!

said...

கோவி.கண்ணன்.
நீங்கள் உங்களிருவர் சங்கடத்திற்காக இப்டி செய்வது நியாயமற்றது. விவாதத்தின் போது விமர்சன் வெப்பத்தைத் தாங்கத்தானே வேண்டும். இப்பிடித்தான், ஒரு காமெடிப்பதிவு , பின்னூட்டங்களால் சீரியஸ் பதிவாகி பலர் சங்கடத்திற்குள்ளானதை தாங்கள் அறிவீர்கள்தானே..!

said...

\\ஒரு மதகுருவின் ஒழுக்கத்தன்மையை கேள்விகுள்ளாக்கினால் அந்த மத அபிமானிகளுக்கு என்ன கோபம் வருமோ அதே கோபம் பெரியார் அபிமானிகளுக்கும் வருவது நகைப்புகுறியது!\\

ஆம். மதமே இல்லை என்றவரை, அவருடைய ஜாதியால் அவருக்கு அடையாளம் கொடுப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

said...

//நீங்க பக்கத்துவீட்டுக்காரனை கேவலமாக நடத்துவதை எதிர்த்த வீட்டுக்காரன் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கனும்னு சொல்ல வர்றிங்க.//

அப்படீன்னா ராமசாமிக்கும் அதே நியாயம் தானே. அதுக்கு மட்டும் எதுக்காக அவனோட அல்லக்கைகள் கவலைப்படட்டும்னு ஒரு சால்ஜாப்பு?

said...

//Anonymous said...
//நீங்க பக்கத்துவீட்டுக்காரனை கேவலமாக நடத்துவதை எதிர்த்த வீட்டுக்காரன் பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கனும்னு சொல்ல வர்றிங்க.//

அப்படீன்னா ராமசாமிக்கும் அதே நியாயம் தானே. அதுக்கு மட்டும் எதுக்காக அவனோட அல்லக்கைகள் கவலைப்படட்டும்னு ஒரு சால்ஜாப்பு?
//

இப்ப யாரு கவலைப் பட்டாங்க டோண்டு சாருக்கு விரல் வலி ஏற்பட்டுவிடப் போகிறது என்று மட்டும் தான் கவலைப்பட்டான், அவரும் நண்பர் தானே. என்னை பார்க்கும் போதெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் நண்பர் அவர்.

said...

//என்னை பார்க்கும் போதெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் நண்பர் அவர். //

போன கேள்விபதிலில் கட்டிபிடித்தால் எலும்பு முட்டாத பெண்களை மட்டுமே கட்டிபிடிக்க ஆசை என்று சொன்னதாக ஞாபகம்!

said...

நாளைக்கே அவர் சீரியஸா பேசற பதிவர்களுக்கு எல்லாம் பதில் பதிவு போடாம எனக்கு பதில் பதிவுப் போட்ட குழலி புத்திசாலியா இல்லை நான் புத்திசாலியானு கேள்விக் கேட்பாரு. அதுக்கும் பதிலை ஜாக்கிரதையா தயார் செய்து கொள்ளவும் :)

said...

//ஒரு பண்ணையார் பார்பனராக இருந்தால் கண்டித்திருப்பார் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ? தனிப்பட்ட பார்பனர்களை பெரியார் தரக்குறைவாக நடத்தியது இல்லையே,//
அப்படியா? தமிழ் ஓவியா எழுதியுள்ளதை பாருங்களேன். பெரியாரின் சாகும் காலத்தில் அவர் விட்ட அறிக்கை,
“நம்மை சூத்திரன் என்று கூறி, பூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிடவேண்டும் என்று தந்தை பெரியார் இறுதி உரையிலே (19.12.1973) சொல்லியிருக்கிறார்”.

பார்க்க: http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//“நம்மை சூத்திரன் என்று கூறி, பூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்த்து வாடா என் தேவடியாள் மகனே! என்று கூப்பிடவேண்டும் என்று தந்தை பெரியார் இறுதி உரையிலே (19.12.1973) சொல்லியிருக்கிறார்”.

பார்க்க: http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html

அன்புடன்,
டோண்டு ராகவன்//

சூத்திரன் என்று சொல்லவருகிறவனைத் தானே சொல்கிறார். சொல்லாதவங்களைச் சொல்லவில்லையே, அதுவும் தனிமனிதனைச் சுட்டிச் சொல்லவில்லையே.

சூத்திரன் என்றால் தாழ்ந்தவன் என்று தானே பொருள் அப்படி சொல்கிறவனை பெரியார் அப்படிச் செய்யச் சொல்வதில் என்ன தப்பு,

இப்ப அப்படிச் சொன்னால் வன்கொடுமை சட்டத்தில் போடுவாங்க, பெரியார் வாய்ப்பேச்சோடு நிறுத்திட்டாரேன்னு ஞாயமாக மகிழ்ச்சி அடையனும்

said...

எப்பா, கோவி.கண்ணன் ஸார் மற்றும் டோண்டு ஸார் கொஞ்சம் ரெண்டு பேரும் நிறுத்துங்கப்பா..!
மண்டை காயுது.

said...

நம்மில் பலர் எழுதுவது ஆத்ம திருப்திக்கு மட்டுமே. நான் சொல்வதையும் நாலு பேர் ரசிக்கிறார்கள் என்பது தன்னம்பிக்கை கொடுக்கும். இந்த தன்னம்பிக்கை நாம் செய்கிற மற்ற காரியங்களில் உதவியாக இருக்கும். அவ்வளவே!

நிறைய நண்பர்களைச் சம்பாதிக்க முடிகிறது.

இது காசை விடப் பெரிய சம்பாத்யம் என்று நான் நினைக்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com

said...

//இப்ப அப்படிச் சொன்னால் வன்கொடுமை சட்டத்தில் போடுவாங்க, பெரியார் வாய்ப்பேச்சோடு நிறுத்திட்டாரேன்னு ஞாயமாக மகிழ்ச்சி அடையனும்//

:-))))))))

said...

அண்ணே..!

பொளந்து கட்டிருக்கீங்க..!

ரொம்பக் கொதிச்சு போயிட்டீங்களோ..!

பாவம் சக்திவேலு.. புதுசு.. உலகம் புரியாதவரு.. எழுதிட்டாரு..

ஆனா பாருங்க.. அவரால கிடைச்ச புண்ணியம் ஒரு திரட்டியை துவக்கவும், நடத்தவும் எம்புட்டு செலவாகும்னு எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு..

பாவம் நீங்க.. எங்களுக்காக எம்புட்டு செலவழிக்குறீங்க..?!!!

திரட்டிகளில் இணைந்திருப்பவர்கள் அந்தந்த திரட்டிகளுக்கு தங்களது பக்கங்களில் கட்டாயமாக இணைப்புத் தர வேண்டும்னு ஒரு சட்டம் கொண்டு வரணும். அதுதான் பதில் மரியாதையா இருக்கும்னு நினைக்கிறேன்..!

said...

ஹஹ.. அது ஒரு காமெடி பீஸ் தல அதுக்கெல்லாம் பதிவு போட்டு நேரத்தை வீண் பண்ணிட்டு இருக்கலாமா?

said...

பெரியார் சகாப்தத்திற்கு முன் பார்ப்பனரல்லாதவர்களைப் பார்த்து "சூத்திரன்"என்று (தேவடியா மகன்) அழைத்ததே பார்ப்பனக்கும்பல் பெரியார் வாழும்போது "சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி" என்ற முழக்கம் எழுந்ததன் விளைவாகத்தானே சூத்திரன் என்ற சொல்லாமல் இருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

பார்ப்பனர்கள் செயத கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இது பற்றி பல் நூல்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது. முடிந்தால் வலைப்பூவில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

பார்ப்பான் மிஞ்சினால் கெஞ்சுவான்,கெஞ்சினால் மிஞ்சுவான். விட்டுத்தள்ளுங்கள் கோவி.கண்ணன்.

said...

அட.. வுடுங்க தல..! :) இதுக்கெல்லாம் கோபப்படக்கூடாது..! :)

---

ஆமா... எனக்கொரு சந்தேகம்?!?!?!?!

கீழவெண்மணியில் எரித்துக்கொள்ளப்பட்டது 44 தலித்துகள் தானே... போகிற இடமெல்லாம் 54..54..54.. என்று அவர் நினைவில் இருந்து இப்படி எழுதுகிறாரே.. கணக்கே தவறு.. இது மத்ததுகளில் எங்கே இருக்கப்போகிறது உண்மை!
(அந்த சம்பவத்தில் வெளியில் தெரியாமல்...மேலும் 10 பார்ப்பனர்கள் யாராவது எரித்துக்கொள்ளப்பட்டார்களா என்ன?)

ஆடு நனையுதேன்னு..... அட போங்கப்பா..!