சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


44வது பிறந்த நாளை கொண்டாடும் சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

இரண்டு வருசம்தான் அப்புறம் ஊருக்கு போயிடனும் முதல் தடவை வந்த போது சொன்னது, இரண்டிரண்டு வருடங்களாக கடந்து கொண்டே இருக்கின்றன.ஒரு ஒரு வெள்ளியையும் ரூபாய்க்கு மாற்றி கணக்கு பார்த்து செலவழித்தது போய் ஊரில் செலவு செய்யும் ரூபாய்களை வெள்ளிக்கு மாற்றி கணக்கு பார்க்க பழகிவிட்டது மனம்.

பைசா கையில் எதுவும் மிச்சமில்லையே சரி யு.எஸ் ஆவது போகலாம்... ம்...ஏனோ இந்த ஊரைவிட்டு நகர மனமில்லை... முதல் சில முறைகள் ஊருக்கு போன போது அங்கே கால்பதித்தவுடன் ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கும், இப்போதெல்லாம் இங்கே கால்பதிக்கும் போது தான் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கிறது...

இந்த ஊர், இந்த ஊர் தமிழ், ஒலி96.8, வசந்தம் என கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்போட்டுவிடும் ஆட்களை.... இந்த ஊரை விட்டு நகரவிடாது....பிறந்தநாள் வாழ்த்துகள்... சிங்கப்பூர்...

3 பின்னூட்டங்கள்:

said...

வாஸ்த்தவம்.

said...

தமிழையும் தமிழர்களையும் மதிக்கும் ஒரு நாடு...

சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் வாழ்த்துக்கள்!

:)

said...

:) Unmai Thalaivarey. But sometimes
itz v.lonly too here.