இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

செய்தி-1
அம்மாவின் ஆட்சியிலே மிதிவண்டி கொடுத்தனர், அம்மா ஆட்சியிலே இலவச பேருந்து அனுமதி கொடுத்தனர். ஆமா இப்போ யாரு இல்லை என்று சொன்னது? இதை நீங்க எங்கெல்லாம் சொல்லலாம், பொது கூட்டத்தில சொல்லலாம், கட்சிவிழாவில் சொல்லலாம், அட அரசாங்கம் கொடுத்த சலுகையை அரசாங்க விழாவில் சொல்லலாம், பத்திரிக்கயில் சொல்லலாம், ஆனால் பள்ளிக்கூடத்தில் சொல்லலாமா?

http://www.kumudam.com/reporter/070805/pg3.php

கடந்த மாதம் 25ம் தேதி கரூரில் அ.தி.மு.க. வினர் நிருபர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு அம்மாவின் அருமை பெருமைகள சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்திற்கு சென்று எல்லா மாணவமணிகளையும் அழைத்து பள்ளி வளாகத்தினுள்ளேயே இறைவணக்கத்திற்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியை வைத்து அம்மா புகழ் பாடியுள்ளனர், அதன்பிறகு பிட் நோட்டீசாக அதிமுக அரசின் சாதனை விளக்கத்தை வினியோகித்தனர்.

அதன் பிறகு கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி,பசுபதீஸ்வர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமரன் உயர்நிலைப்பள்ளிகளில் அம்மா புகழ் பாடப்பட்டது,

இப்படியே கலைஞர் புகழ் பாட திமுகவும், அன்னை புகழ் பாட காங்கிரசும், அய்யா புகழ் பாட பாமகவும், வைகோ புகழ் பாட மதிமுகவும் பள்ளிக்கூடங்களை நோக்கி படையெடுத்தால் என்ன ஆகும்?

செய்தி-2
பள்ளி மாணவர்களை தற்காலிக ஆசிரியரின் மூலம் பாமகவின் பயிலரங்கத்திற்கு அனுப்பினர் என்ற குற்றச்சாட்டோடு பெரும் பிரச்சினை பத்திரிக்கைகளின் மூலமும் அதிமுகவினரின் மூலமும் சில நாட்களுக்கு முன் கிளப்பப்பட்டது, வலைப்பதிவில் கூட ஒரு பதிவு போடப்பட்டிருந்தது, கட்டாயப்படுத்தி பயிலரங்கத்திற்கு அனுப்பினால் அது மாபெரும் கண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஆனால் அந்த மாணவி மற்றும் பெற்றோரினால் எப்படி அந்த பயிலரங்கிற்கு சென்றார் என பேட்டி கொடுத்தனர், யார் அதை பிரச்சினையாக்கியது என்றும் தெளிவாக பேட்டியில் கொடுத்தனர்.
http://ennar.blogspot.com/2005/07/blog-post_16.html
http://www.kumudam.com/reporter/170705/pg8.php

இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாயிருந்தும் இரண்டாவது செய்திக்கு தினப்பத்திரிக்கையால் தரப்பட்ட முக்கியத்துவம் முதல் செய்திக்கு இல்லை, ஹி ஹி வலைப்பதிவிலும் இல்லை. அட குறைந்தபட்சம் தினம் பத்திரிக்கை படிக்கும் எனக்குத் தெரியவில்லை, அதுசரி விடாம வாசகர் கடிதத்திலும், இது உங்கள் இடத்திலும், ***மணி பதில்களிலுமாவது போடலாமே?

வாழ்க நம் பள்ளிக்கூட அரசியல், வாழ்க நம் பத்திரிக்கையின் நடுநிலமை.

18 பின்னூட்டங்கள்:

said...

அம்மா சரணம் ...
தாயே சரணம் ..
தங்கத்தலைவியே சரணம் ..
புரட்சித்தலைவியே சரணம் ..
புன்னகைத்தலைவியே சரணம் ...
திராவிட பரிணாமமே சரணம்...
பன்முகச்செல்வியே சரணம் ..
தாயே...தாயே......

எட்டுவரிக்கவிதை ..

said...

என்ன சார் புரியாத ஆளா இருக்கிங்க. அம்மா கட்சிக்காரங்க அப்படி செய்யிறாங்கன்னு எழுதினா நாளைக்கு அரசாங்க விளம்பரங்கள் பத்திரிகைக்கு கிடைக்குமா?

சரி ஏன் வலைப்பதிவுல கூட இல்லைன்னு கேப்பிங்க. ஹ்ம்ம் அதுக்கு காரணம் உங்களுக்கே தெரியுமே ;-).

இதே விஷயத்தை பாமக செய்திருந்தால் இந்நேரம் talk of the blog இந்த மேட்டராக தான் இருக்கும் ;-).

said...

//என்ன சார் புரியாத ஆளா இருக்கிங்க. அம்மா கட்சிக்காரங்க அப்படி செய்யிறாங்கன்னு எழுதினா நாளைக்கு அரசாங்க விளம்பரங்கள் பத்திரிகைக்கு கிடைக்குமா?
//

அது சரி...

//இதே விஷயத்தை பாமக செய்திருந்தால் இந்நேரம் talk of the blog இந்த மேட்டராக தான் இருக்கும் ;-). //

உண்மையெல்லாம் பேசுகின்றீர், இது நல்லதுக்கில்லை ஆமா சொல்லிட்டேன் :-)

said...

ஆமாம் இரண்டுமே தவறுதான் கூற்றமே!! நான் சொல்கிறேன் இருப்பினும் சிறு வித்தியாசம் இருக்கிறது குழலி
கொஞ்சம் சிந்திப்போம் பள்ளிக்குழந்தைகளை பெற்றோருக்கும் , பள்ளி தலைமையாசிரியருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றதையும் பள்ளியிலேயே கட்சிவிளம்பரம் செய்ததும் ஒன்றாகாது.அது பெருங்குற்றம் இது சிறு குற்றம் அவ்வளவுதான் .
என்னார்

said...

//பள்ளிக்குழந்தைகளை பெற்றோருக்கும் , பள்ளி தலைமையாசிரியருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றதையும் //
பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்றது உண்மை செய்தியென்றால் நிச்சயம் தவறுதான் அதை நியாயப்படுத்த முடியாது, பள்ளி தலைமையாசிரியருக்கு இதையெல்லாம் சொல்ல வேண்டுமா? என்பது பற்றி எனக்கு சரி தவறு எது என்று தெரியவில்லை, அந்த பெண்ணின் தாயிடம் சொல்லிவிட்டுத்தான் பயிலரங்கிற்கு சென்றதாக அந்த பெண் பேட்டியில் கூறியுள்ளார்,

அந்த பெண்ணின் பெற்றோர்களும் அந்த பெண்ணும் கொடுத்த பேட்டிக்கான சுட்டி இதோ http://www.kumudam.com/reporter/170705/pg8.php

நன்றி

said...

குழலி... இது இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதது... சாரு ஒரு Intro அப்படீன்னு ஒரு பதிவு இருந்ததே.. அத இப்ப காணம்.. நீங்கதான் தூக்கிட்டீங்களா..

said...

இருக்கின்றது , தூக்கவில்லை, http://kuzhali.blogspot.com/2005/03/charunivedhitha-intro.html

தற்போது தான் அதில் உங்கள் பின்னூட்டத்தையும் பார்த்தேன்.

நன்றி

said...

நன்றி குழலி... நான்தான் கவனிக்கவில்லை... சமீப கால பதிவுகளில் தேடிப்பார்த்தேன்... அது நீண்ட நாட்களுக்கு முன் எழுதப்பட்டது என்பது அறிந்திருக்கவில்லை..

said...

அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. பா.ம.க. வின் பயிற்சி அரங்கம் வன்னிய சாதிக் குழந்தைகளுக்கு மட்டும் என்றும் படித்தேனே. ஏன்? பா.ம.க. தன் வன்னிய சாதிக் கண்ணோட்டத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. //
அதானே வைக்கப்படும் கேள்வி பலவீனப்படும் போது அடுத்த கேள்விக்கு தாவுவது வழமைதானே.

இதில் வருத்தமொன்றுமில்லை, ஏனெனில் இப்படியெல்லாம் பேசும்போது தானே மற்றொரு கோணத்தையும், ஊடக வன்முறையையும் எங்களால் எழுத முடிகின்றது, எதிர்ப்பே இல்லையென்றால் விழும் அடிகளை விளக்க சந்தர்ப்பமே கிடைக்காதே எங்களுக்கு.

//பா.ம.க. வின் பயிற்சி அரங்கம் வன்னிய சாதிக் குழந்தைகளுக்கு மட்டும் என்றும் படித்தேனே. ஏன்? பா.ம.க. தன் வன்னிய சாதிக் கண்ணோட்டத்திலிருந்து இன்னும் வெளியே வரவில்லையா//
இதற்கு சரியாக உறுதி படுத்திக்கொண்டு பதிலளிக்கலாம் என்றுதான் இரண்டு நாட்களாக பதிலளிக்கவில்லை, டோண்டு அய்யா இந்த பயிலரங்கம் வன்னிய சாதிக்கு மட்டும் அல்லவாம்,எந்த சாதியினரும் விருப்பப்பட்டால் கலந்து கொள்ளலாமாம், நீங்கள் விருப்பப்பட்டால் நானே அதற்கு ஏற்பாடு செய்கின்றேன்.

நன்றி

said...

//நீங்கள் விருப்பப்பட்டால் நானே அதற்கு ஏற்பாடு செய்கின்றேன்//

:-))

said...

//அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. //
அதானே வைக்கப்படும் கேள்வி பலவீனப்படும் போது அடுத்த கேள்விக்கு தாவுவது வழமைதானே."

என்னுடைய முதல் கேள்வியே இதுதான். நான் இச்செய்தியை நக்கீரனில் படித்தேன், ஆகவே கேட்டேன். எல்லா சாதி குழந்தைகளுக்கும் என்றால் மகிழ்ச்சியே. உண்மையிலேயே வேற்று சாதிக் குழந்தைகள் யாராவது அட்டெண்ட் செய்தார்களா என்பதையும் முடிந்தால் கேட்டு சொல்லுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. //
இந்த பதிவின் உங்கள் முதல் பின்னூட்டத்தின் முதல் வரி இது தான், அப்போது தாங்கள் அதெல்லாம் இருக்கட்டும் என்று எதை கூறுகின்றீர்?
நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால் மேலே எழுதிய பதிவில் இருப்பதெல்லாம் இருக்கட்டும் இதற்கு பதில் சொல்லுங்கள் என்பது போலத்தான் இருந்தது, ஒரு வேளை நான் புரிந்து கொண்டது தவறென்றால் மன்னிக்கவும், அப்போ அதெல்லாம் இருக்கட்டும் என்பதன் அர்த்தம் என்ன என்று விளக்கினால் நான் சரியாக புரிந்து கொள்கின்றேன்.

//உண்மையிலேயே வேற்று சாதிக் குழந்தைகள் யாராவது அட்டெண்ட் செய்தார்களா என்பதையும் முடிந்தால் கேட்டு சொல்லுங்கள்.
//
டோண்டு அய்யா என்ன கேள்வி இது?
முந்தைய பதிவுகளிலும் முந்தைய விவாதங்களிலும் நடந்ததையும்
இதையும் சேர்த்துதான் கூறினேன், ஒரு கேள்வி பலவீனப்படும்போது அடுத்ததற்கு தாவுவது வழமை என்று இதற்காக ஒன்று செய்யலாம் பயிலரங்கில் கலந்து கொண்டவர்களின் வருகைப்பதிவேட்டுடன் அவர்களின் சாதிச்சான்றிதழையும் சேர்த்து காண்பித்தால் கூட நம்புவார்களா? என்பது சந்தேகமே.

said...

//அதெல்லாம் இருக்கட்டும் குழலி அவர்களே. //
இந்த பதிவின் உங்கள் முதல் பின்னூட்டத்தின் முதல் வரி இது தான், அப்போது தாங்கள் அதெல்லாம் இருக்கட்டும் என்று எதை கூறுகின்றீர்?

அவை என் கேள்வி அல்ல, என் கேள்வி இதுதான் என்பததைத்தான் அவ்வாறு கூறினேன். இதில் என்ன குழப்பம் உங்களுக்கு? இப்பதிவில் அதுதான் என் முதல் பின்னூட்டம். மேலும், குழந்தைகள் பெற்றோரின் அனுமதியுடனே சென்றனர் என்பதையும் நக்கீரனே கூறி விட்டது. அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
அது எல்லா சாதியினருக்கும்தான் என்று கூறுவது ஒன்று, ஒரு விஷயம் நடந்து முடிந்த பிறகு யாராவது வேறு சாதியினர் வந்திருந்தால் அனுமதித்திருப்போம் என்று கூறுவது சுலபம்.
ஆனால் அவ்வாறு வேறு சாதியினர் நிஜமாகவே வந்தார்களா என்பது இன்னொன்று. அதைத்தான் உங்களை செக் செய்து கூறச் சொன்னேன். முடிந்தால் வருகைப் பதிவை பார்ப்பதும் தவறாக இருக்காது. இதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஏனெனில் நக்கிரனில் வெளியான செய்தி அப்படிப்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

college ku poi irukalamey..

2011 , 2017 election ku ippova thayaraguraangalama....
romba murpooku sindhanai ullavanga..paavam vidunga kuzhali...

V M

said...

//வன்னிய சாதிக் குழந்தைகளுக்கு மட்டும் என்றும் படித்தேனே//
நான் இன்னும் இந்த வார நக்கீரன் படிக்கவில்லை, அதில் வன்னிய சாதி மட்டும், என வெளியிட்டுள்ளனரா என்று எமக்கு தெரியவில்லை, மட்டும் என்ற வார்த்தைதான் அர்த்தங்களை மாற்றும் வார்த்தை.

//அவ்வாறு வேறு சாதியினர் நிஜமாகவே வந்தார்களா என்பது இன்னொன்று. அதைத்தான் உங்களை செக் செய்து கூறச் சொன்னேன். முடிந்தால் வருகைப் பதிவை பார்ப்பதும் தவறாக இருக்காது//

வந்தார்களா வரவில்லையா என்பதா இப்போது பிரச்சினை?, வேற்று சாதியினர் அனுமதிக்கப்படுவார்களா? என்பது தான் கேள்வி அதற்கு தான் சொன்னேனே நீங்கள் விருப்பப்பட்டால் நானே ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறினேன், அப்படி அவர்கள் அனுமதிக்கவில்லையென்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்,
என தரப்பை தெளிவாக சொல்லிவிட்டேன்,
மீண்டும் மீண்டும் இதில் கேள்வியெழுப்ப என்ன இருக்கின்றது அய்யா?

said...

hehehee

said...

அவங்க செய்யும்போது இவங்க செய்யக்கூடாதாங்கிற தொனிதான் நிக்குது. அதை கொஞ்சம் அவாய்ட் பண்ணலாமே!

மீடியாவை நாம குத்தம் சொல்லவே முடியாது. நாயை மனுஷன் கடிச்சாத்தான் நியூஸ்!