அதிசயம் ஆனால் உண்மை

இன்று காலை ஒரு அதிசயம் நடந்தேறியது, வழக்கமாக வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி வரை தூங்குவேன், அப்படி இன்று தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு கனவு, சேது ச்யான் கெட் அப்பில் கை,கால்களெல்லாம் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மொட்டையடித்து குறுக வளர்ந்திருந்த முடியோடு சிவப்பாக, இலேசான தாடியோடு, பார்ப்பதற்கு மனநிலை பாதிக்கப்படது போல இருந்த ஒரு இளைஞருக்கு (ஒரு வேளை முகமூடியோ, சின்னவனோ, ஞானபீடமாகவோ இருக்குமோ?! :-) ) ஒரு கிறித்துவ பாதிரியார் சோறு ஊட்டிக்கொண்டுள்ளார், ஒவ்வொரு கவளம் ஊட்டுவதற்கு முன்னும் தட்டில் சோற்றால் சிலுவை வரைந்து வரைந்து ஊட்டிக்கொண்டுள்ளார், அதே சமயம்

டொக்,டொக் என் வீட்டு கதவு தட்டப்படுகின்றது, வீட்டு நடையில் படுத்துறங்கிக்கொண்டிருந்த நான் கதவை திறக்க இரண்டு நடுத்தர வயது பெண்கள் நின்றிருந்தனர், ஏதாவது பொருள் விற்க வந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு சட்டையணிந்து கொண்டு வந்து என்ன என்று கேட்டேன், 'டு யூ நோ அபவுட் பைபிள்' என்றார் ஒரு பெண், சட சட வென்று பைபிள் பற்றியும் இயேசு கிறிஸ்து பற்றியும் ஆரம்பித்தனர், எந்த மதத்தைப்பற்றி யார் பிரச்சாரம் ஆரம்பித்தாலும் உடனடியாக நான் நாத்திகன் என்று கூறிவிட்டு வந்துவிடுவேன், அதே போல் இன்றும் நான் நாத்திகன் என்று பொய் சொல்லிவிட்டு வந்து நித்திரையை தொடர்ந்தேன், ஆனால் மீண்டும் மீண்டும் என் கனவும் அதைத் தொடர்ந்து பைபிள் பற்றிய பிரசங்கமும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது, அது எப்படி இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடந்தது என்பது எனக்கு புரியவில்லை

இது மாதிரி முன்பும் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன, எப்போதெல்லாம் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போதெல்லாம் என் தந்தை தொலைபேசியில் அழைப்பார், ஒரு முறை இரவு 12.00 மணிக்கு சன்னலை திறக்க கை சன்னல் கதவில் மாட்டிக்கொண்டு நகம் பெயர்ந்தது, பின் மருத்துவமனை சென்றுவந்தேன்,அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் வீட்டிற்கு தொலைபேசியில் பேசியிருந்தேன், மறுநாள் காலை 8.00 மணிக்கு என் தந்தையிடமிருந்து அழைப்பு, எப்படியிருக்கிறாய் என்று, நேற்று நீ பேசிவிட்டு தூங்கியபோது தூக்கத்தில் திடீரென் உன் நினைவு வந்தது, உடனே பேச வேண்டும் போலிருந்தது, உனக்கு ஆனால் இரவு வெகு நேரம் ஆகியிருக்கும் என்பதால் பேசவில்லை என இந்திய நேரப்படி அதிகாலை 5.30க்கு தொலைபேசியில் பேசுகின்றார், அப்போது என்ன நடந்தது என சொல்லவில்லை, இரண்டு மூன்று நாள் கழித்து நகம் பெயர்ந்ததை கூறினேன், என் அம்மா கூட அடிக்கடி கிண்டல் செய்வார் உங்க இரண்டு பேருக்கும் எப்படித்தான் தெரியுமோ என்று.

இது வரை எனக்கு இதற்கும் விடை கிடைக்கவில்லை, ஏதாவது இதற்கு அறிவியல் பூர்வமான, மன தத்துவப்படியான விடை கிடைக்குமா?

8 பின்னூட்டங்கள்:

said...

// ஒரு வேளை முகமூடியோ, சின்னவனோ, ஞானபீடமாகவோ இருக்குமோ?! //

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கற கணக்கா, பேசுங்கய்யா, பேசுங்க...

// இது வரை எனக்கு இதற்கும் விடை கிடைக்கவில்லை, ஏதாவது இதற்கு அறிவியல் பூர்வமான, மன தத்துவப்படியான விடை கிடைக்குமா? //

இதற்கு ESP (Extra Sensory Perception) என்று ஜல்லியடிக்கலாம், ஆனால்...

ஒரு நாள் எதேச்சையாக ஆனால் தொடர்புடையதாக இருந்த இரு சம்பவங்களை பதிவில் எழுதியதை போலவே ஒரு மாறுதலுக்கு ஒருநாள் முழுதும் நடக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இரு/பல சம்பவங்களை பற்றி (பதிவில் எழுதாதீர்கள்... இன்னும் அந்த நிலைமைக்கு வரவில்லை) டைரியில் எழுதுங்கள்.. அப்புறம் மொத்தமாக இதை பற்றி அலசுவோம்

said...

//// ஒரு வேளை முகமூடியோ, சின்னவனோ, ஞானபீடமாகவோ இருக்குமோ?! //

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கற கணக்கா, பேசுங்கய்யா, பேசுங்க...
//

யெய்யா முகமூடி நான் சொன்ன மூன்று பேரும் ஊருக்கு இளைச்சவங்களாய்யா? நீர் தான் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் இந்த வலைப்பதிவு உலகத்திற்கு தெரியும் இந்த 3 பேரின் சேட்டை என்ன வென்று.

முகமூடி இது மட்டுமல்ல, எனக்கு சில சமயங்களில் நடைபெறும் விடயங்கள் ஏற்கனவே நடந்த மாதிரியே இருக்கும், அதுவும் என்ன காரணம் என தெரியவில்லை, குழலியானந்தானு ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சிட வேண்டியது தான்., நல்ல துட்டு பார்க்கலாம். :-)

said...

இதைத்தான் டெலிபதி என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். பூட்டப்பட்ட வீடுகளில் இருக்கும் வளர்ப்பு நாய்களின் நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்து ஆராய்ந்ததில், எஜமான் எப்போதெல்லாம்(திட்டமிடாமல் கூட), வீட்டுக்குக் கிளம்புகிறாரோ, அப்போதெல்லாம், அவைகள் கிளர்ந்தெழுந்த்து ஒரு மாதிரியாக எஜமானை வரவேற்பதற்கு ஆயத்தமாவதை ஒளிப்பதிவுகள் காண்பிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்னுடைய இளமைக்கால நண்பர்கள் சிலர் இது மாதிரியான தொலைத்தொடர்பு தங்களுக்குள் இருப்பதாகக் கூறிவந்துள்ளனர். இதேபோல சிலர் பெரும் விபத்துக்கள் மற்றும் ஆபத்துக்களில் இருந்து, மயிரிழையில் தங்களுக்குப்புலப்படாத எதோ காரணங்களுக்காக பயணங்களைத் தவிர்த்து தப்பிப்பதும், இந்த தொலை உணர்வை விளக்குவதாக உள்ளது.

said...

முன்பே அறிந்திராத சில ஊர்களுக்கு செல்லும்போது ஏற்கெனவே அந்த ஊருக்கு வந்தது போன்ற உணர்வுகள் எனக்கு ஏற்பட்டதுண்டு - காரணம் என்னவாயிருக்கும்?

said...

//இருந்த ஒரு இளைஞருக்கு (ஒரு
//வேளை முகமூடியோ
//

முகமூடி இளைஞரா ?
வயசு 67 என்று சொன்னாங்களே?

said...

//முன்பே அறிந்திராத சில ஊர்களுக்கு செல்லும்போது ஏற்கெனவே அந்த ஊருக்கு வந்தது போன்ற உணர்வுகள் எனக்கு ஏற்பட்டதுண்டு - காரணம் என்னவாயிருக்கும்? /

// முன்பே அறிந்திராத சில ஊர்களுக்கு செல்லும்போது ஏற்கெனவே அந்த ஊருக்கு வந்தது போன்ற உணர்வுகள் எனக்கு ஏற்பட்டதுண்டு - காரணம் என்னவாயிருக்கும்? //

கூகிளில் Deja vu என்று தேடவும்

சின்னவன் தாத்தா, இந்த வயசிலயும் உங்களுக்கு எப்படி பகிடி பண்ண முடியுது

said...

அப்போ வார இறுதி இரவுகளில் எத்தனை மனிக்கு தூங்கப்போவீங்க?

// ஒரு கிறித்துவ பாதிரியார் சோறு ஊட்டிக்கொண்டுள்ளார்,//
இது ஒரு வேளை குழலியோ??

//ஆனால் மீண்டும் மீண்டும் என் கனவும் அதைத் தொடர்ந்து பைபிள் பற்றிய பிரசங்கமும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது//
P K S ல கமலுக்கு வந்த மாதிரி உங்களுக்கும் திடிர்னு ஏதோ சக்தி வந்திருக்கும் ...நல்லா பாருங்க

//இது வரை எனக்கு இதற்கும் விடை கிடைக்கவில்லை, ஏதாவது இதற்கு அறிவியல் பூர்வமான, மன தத்துவப்படியான விடை கிடைக்குமா?//

குழலி..இது ரொம்ப முக்கியமான கேள்வி.. நல்லா யோசித்து , உன்மையான பதில் சொல்லனும்..
சரியா.. நல்ல யோசிங்க.. சரி இது தான் கேள்வி..

வார இறுதில வழக்கமா தூங்க போறதுக்கு முன்னாடி என்ன சாப்பிடுவீங்க.. திரவ ஆகாரம் என்ன எடுத்துப்பீங்க?? ஒன்னும் அவசரம் இல்லை.. நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க ..குறிப்பா இந்த வாரம் என்ன திரவ ஆகாரம் எடுத்துக்கிட்டீங்க?? வெள்ளை நிறத்தில, இல்லை கருஞ்சிவப்பு நிறத்திலா.. கோக் பெப்சி கலர்ல ஏதாச்சும்???
இதுக்கு சரியா பதில் சொன்னா உங்களுக்கே உங்க கேள்விக்கு விடை கிடைக்கும்
:)
வீ எம்

said...

//// ஒரு கிறித்துவ பாதிரியார் சோறு ஊட்டிக்கொண்டுள்ளார்,//
இது ஒரு வேளை குழலியோ??//
ஓ இப்போதான் புரிகின்றது அது நீங்கதானா?

//வெள்ளை நிறத்தில, இல்லை கருஞ்சிவப்பு நிறத்திலா.. கோக் பெப்சி கலர்ல ஏதாச்சும்???
//
நாசமா போச்சி யெய்யா நான் ஒரு நல்ல 'குடி'மகன் அல்ல.... அதற்கும் எனக்கும் ரொம்ப தூரம் அதற்கு என்னவோ தெரியவில்லை என்னை மட்டும் அதற்கு பிடிக்கவே மாட்டேங்குது.