தங்கர் செய்த தவறுதான் என்ன?

சொல்ல வரும் கருத்தில் கடுமையான வார்த்தைகள் இருந்தால் கருத்தைவிட்டு வார்த்தையை பிடித்து தொங்கும் விபரீதம் நடைபெறும், அதற்கு இதோ மற்றுமோற் உதாரணம் தங்கர்பச்சான்.

நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் தரும் இன்னல்களை எடுத்து கூற வந்து "பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்கள்" என புயலை கிளப்பிவிட்டார்.

தாணு கமலிடமும் நேற்று முளைத்த காளான் சிம்புவிடமும் பட்ட அவதியெல்லாம் தெரிந்த விடயம் தான்.

தயாரிப்பாளர் G.V. தூக்கு கயிற்றை முத்தமிட்டதற்கும் காஜாமொய்தீன் மாத்திரை தின்றதற்கும், பழவண்டி வைத்து வியாபரம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களும் இந்த நிலைக்கு ஆனதற்கு வெறும் கந்துவட்டிகாரர்கள் மட்டுமா காரணம் இந்த பஞ்சாயத்து பேசும் நடிகர்களும் தானே காரணம்.

பணத்திற்காக வேலை செய்யாதவர்கள் யார்தான் உள்ளனர்? தங்கர்பச்சான் பணம் வாங்கமல் ஒளிஓவியர் வேலையையோ அல்லது இயக்குனர் வேலையையோ செய்வாரா? திரைப்படத்துறையைவிடுங்கள் யார்தான் பணம் வாங்காமல் எந்த வேலையைத்தான் செய்வர், ஆனால் work ethics என்பதே இல்லையா?? இந்த நடிக,நடிகைகள் படப்பிடிப்பின் இறுதி கட்டத்திலும் டப்பிங் போதும்தான் இந்த டகால்டி வித்தையெல்லாம் காண்பிப்பர், படத்தின் தொடக்கத்தில் பொத்திக்கொண்டு இருப்பார்கள்.

நடிகர்,நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் கொட்டி அழுதுவிட்டு பின் மாத்திரை தின்னும் தயாரிப்பாளர்கள் துணை நடிக/நடிகைகளுக்கும் தொழில்நுட்பர்களுக்கும் இன்ன பிற வேலை செய்பவர்களுக்கும் சரியான கூலி கொடுக்காமல் வயிற்றில் அடிப்பார்கள்.


தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இந்த நடிகர்களும்/நடிகைகளும் பணத்திற்காக செய்யும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை.

கேரவன் வேன் வேண்டும், அரசப்பரிலிருந்து நண்டு வறுவல், தாஜ் லிருந்து தோ-மியான், என்று பதார்த்ததிற்கு ஒரு உணவகத்திலிருந்து உணவு கேட்டு தயாரிப்பாளர்களை வறுத்தெடுக்கும் நடிகர்/நடிகைகளின் முகத்திரை கிழியும் போது கூச்சல்கள் எழத்தான் செய்யும்.

தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனரோ?

இத்தனை நாளும் இதெல்லாம் வெளிவராமலில்லை, ஆனால் அந்த துறையில் உள்ள ஒருவர் சொல்லும் போது அதற்கு அழுத்தம் அதிகம் என்பதால் தான் இந்த குதி குதிக்கின்றனர்.

தங்கரின் வரிகளின் வார்த்தைகளுக்கிடையில் சில வாக்கியங்களை எடுத்துவிட்டு சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து நடிகர்கள் "டிஸ்கஷன்"னுக்கு போகாதவர்களா? "டிஸ்கஷன்"னா என்னவென்று திரைப்படத்துறையில் இருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

நடிகைகளுக்கு ஆதரவாக போராடும் நாயகர்களே நீங்கள் டிஸ்கஷன் நடத்தாமல் இருந்தாலே போதும், அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரம்.

"தங்கர்பச்சான் படங்களில் இனிமேல் நடிப்பதா, வேண் டாமா?'' என்பது பற்றி முடிவு செய்ய, தனியாக ஒரு ஆலோ சனை கூட்டம் நடத்தி, அதில் முடிவு எடுப்போம்'' என்று விஜயகாந்த் கூறினார்."

தங்கரு உங்க அடுத்த படத்திற்கு 10கோடி சம்பளம் தருகிறேன் என பஞ்சாயத்து செய்தவரிடம் சொல்லிப்பாருங்க முதல் கால்ஷீட் உங்களுக்குத்தான்.

அடவிடுங்க தங்கர் காசு வாங்காமலே நான் உங்க படத்தில் நடித்து தருகின்றேன், எனக்கு கேரவன் வேன் வேண்டாம், அரசப்பர் நண்டு வறுவல் வேண்டாம்.

"நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்."

படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகரே வாழ்க உம் தலைமை.

52 பின்னூட்டங்கள்:

said...

சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லியிருந்தாலும் கொஞ்சம் காட்டமாகவே தான் இருக்கிறது

said...

குழலி,

தங்கர் பச்சான் வன்னியராய் பிறக்காவிட்டால் உங்கள் பதிவு எப்படியிருந்திருக்கும் என்று நினைக்க சிரிப்பு வருகிறது.

said...

//குழலி,

தங்கர் பச்சான் வன்னியராய் பிறக்காவிட்டால் உங்கள் பதிவு எப்படியிருந்திருக்கும் என்று நினைக்க சிரிப்பு வருகிறது.//

இதை எதிர்பார்த்தேன்... மிகச்சரியாக உங்களிடமிருந்தோ அல்லது இன்னொருவரிடமிருந்தும் எதிர்பார்த்தேன், ரோசா நீங்கள் முந்திக்கொண்டீர் அவருக்கு வாய்ப்புத்தராமல்.

அப்படியே சோனியாகாந்தியும், திருமாவும், காரல் மாக்ஸ்ம், ஆபிரகாம் லிங்கனும், சதாம் உசேனும், நெடுமாறனும், வைகோவும், சாருநிவேதிதாவும், சே குவேராவும், சில சமயங்களில் கருனாநிதியும், ஜெயலலிதாவும் உங்கள் சாதி டைரக்டரியில் பார்த்து வன்னியரா என்று சொன்னீகளென்றால் எல்லோருக்கும் புரியும்

நன்றி

said...

'டிஸ்கஷன்' என்ன?

said...

குழலி அவர்களே,
இத்தனை நியாயம் பேசும் தங்கர், தான் நியாயமாக தயாரிப்பாளர் என்ற முறையில் தன் படத்தின் நடிகைக்கு ஒப்பனை செய்த கலைஞருக்கு, அவரே சொன்னது போல் கேவலம் 600ரூபாய் சரியாக கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்தே இருக்காது.

மாட்டிக்கொண்டவுடன் பிலிம் காட்டினார். நல்லா வாங்கி கட்டிக்கொண்டார். அவ்வளவுதான்.

இந்த மாதிரி மண் வாரித்தூற்றுவது தங்கருக்கு முதல் தடவை இல்லை, அதனால் தான் நடிகர் சங்கமும் கொஞ்சம் ஓவராகவே ரியாக்ட் செய்துவிட்டார்களோ என்று நினைக்கிறேன்.

discussion இல் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்பதே எனக்கு புதிய தகவல்!

disclaimer - ஊடகங்களில் வருபவை மட்டுமே எனது சோர்ஸ்.

said...

//இதை எதிர்பார்த்தேன்... மிகச்சரியாக உங்களிடமிருந்தோ அல்லது இன்னொருவரிடமிருந்தும் எதிர்பார்த்தேன், ரோசா நீங்கள் முந்திக்கொண்டீர் அவருக்கு வாய்ப்புத்தராமல்.//
who is that another person mugamoodi ya?

said...

நல்ல பதிவு தல.. ஆனா சில சமயம் இந்த 'தங்க'ர் , பித்தளை மாதிரி பேசி பிரச்சனைக்கு வலிய போறாருனு எனக்கு தோனுது..

தங்கர், பாரதிராஜா, எஸ் ஜெ சூர்யா இவங்களெல்லாம் ஒரே ரகம்..
நாளைக்கே எல்லாரும் ஒன்னா மலேசியா ,சிங்கப்பூர்ல கூடி நின்னு கும்மியடிப்பாங்க
இதை தான் ஒரு பதிவுல சொன்னேன்.. "நடிச்சு , நடிச்சு .. நிஜ வாழ்க்கையிலும் நடிக்கவே செய்றாங்க"
எது எப்படியோ... ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. இப்போ கூத்தாடிங்க ரெண்டுபட்டிருக்காங்க.. யாருக்கு கொண்டாடமோ? :)

said...

//தங்கர் செய்த தவறுதான் என்ன?
//

கேவலம் 600 ரூபாயை, அதுவும் அன்றாடங்காய்ச்சி ஒப்பனை கலைஞருக்கு குடுக்காமல் இழுத்தடித்தது. நாவடக்க தெரியாதது... இது முதல் முறையல்ல!!!


எந்த நடிகராவது எந்த தயாரிப்பாளரையாவது கத்தி/துப்பாக்கி முனையில் மிரட்டி தன்க்கு இவ்வளவு சம்பளம் வேண்டுமென்று கேட்கிறார்களா என்ன? [இந்த கேள்வியில் உள்குத்து எதுவும் இல்லை ;)]

said...

//இத்தனை நியாயம் பேசும் தங்கர், தான் நியாயமாக தயாரிப்பாளர் என்ற முறையில் தன் படத்தின் நடிகைக்கு ஒப்பனை செய்த கலைஞருக்கு, அவரே சொன்னது போல் கேவலம் 600ரூபாய் சரியாக கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்தே இருக்காது.

மாட்டிக்கொண்டவுடன் பிலிம் காட்டினார். நல்லா வாங்கி கட்டிக்கொண்டார். அவ்வளவுதான்.//

இது தான் உண்மை.


இந்தப் பதிவில் நடிகைகளைப் பற்றிய உங்கள் 'நல்லெண்ணம்' வெளிப்படுகிறது. அப்போ கொஞ்ச நாள் முன்னாடி அக்கா டிஸ்கோ சாந்திக்காக நீங்கள் வடித்தது வெறும் விளம்பரக் கண்ணீரா?

தங்கரை ஆதரிக்கிறேன் என்று (இந்த விஷயத்தில் மட்டும்) உங்கள் மீது சேறு பூசிக் கொள்ளாதீர்கள்.

said...

//நல்ல பதிவு தல.. ஆனா சில சமயம் இந்த 'தங்க'ர் , பித்தளை மாதிரி பேசி பிரச்சனைக்கு வலிய போறாருனு எனக்கு தோனுது..
//
thangarukku konjam vai kozhuppu adhikam ddhaan thalai

//கேவலம் 600 ரூபாயை, அதுவும் அன்றாடங்காய்ச்சி ஒப்பனை கலைஞருக்கு குடுக்காமல் இழுத்தடித்தது.
//
thangar seydhadhu indha vitayathil thavaraanadhu, idhi erkanave oru pinnootathilum munbe kooriyullen

//இந்தப் பதிவில் நடிகைகளைப் பற்றிய உங்கள் 'நல்லெண்ணம்' வெளிப்படுகிறது
//
nallennam endru enna purindhu konteerkal?, nallennam ulladhu enbatharkaaka van ketpathiyum briyanikku oru hotel, juice kku oru hotel ketpadhiyum, dubbing pesa varaadhidhiyum aadharikka solkinreerkala?

discussion patri solkinreera? adhil kooda natikaikalai thavaraaka sollavillaiye, discussion patri naan kandipadhu natikarkali dhaan. neratiyak solkinren natikaikalin mudhal villankal indha hero kal dhaan adhan pin dhaan directors producers, politicians.

//தங்கரை ஆதரிக்கிறேன் என்று (இந்த விஷயத்தில் மட்டும்) உங்கள் மீது சேறு பூசிக் கொள்ளாதீர்கள்.
//
padhivai sariyaka paditheerkala? thangarai endha itathil aadharikkiren endha itathil ethirkiren endru thelivana variyari ulladhu

//அப்போ கொஞ்ச நாள் முன்னாடி அக்கா டிஸ்கோ சாந்திக்காக நீங்கள் வடித்தது வெறும் விளம்பரக் கண்ணீரா?
//
ennanga idhu periya pirachinaiya poiduchi, nallenam ulladhu aadharikirom enbatharkaka ellathium aadharika mudiuma? idhe dhaan PMK patri pesinalum, communism patri pesinaalum, rajini patri pesinalum edhi patri pesinalum vacha kudumi seracha mottai enkira alavil iruka solkinreerkal

enakku eppodhum natikaikalin meedhu nallenam undu, oru pakkam parents kalin suya nalam, innoru pakkam veru pala pirachinaikal, Anaal idharkaaka nallennam ulladhu enbatharkaaka van ketpathiyum briyanikku oru hotel, juice kku oru hotel ketpadhiyum, dubbing pesa varaadhidhiyum aadharikka solkinreerkala?

//who is that another person mugamoodi ya? //
yarindha naradhar, njanapeetama?

said...

தங்கர் பச்சானுக்கு பயங்கரமான வாய்க் கொழுப்பு மற்றும் தலைக்கனம் அதிகம் என்பது அவர் தந்த பல பேட்டிகளில்
ஊருக்கே தெளிவு! அவருக்கு நிச்சயம் இது (அவமானப்பட்டு பகிரங்க மன்னிப்பு கேட்கும் நிலை உருவானது)
தேவை தான். அதற்கு அவர் மட்டுமே காரணம். தங்கரைப் போன்ற ஆட்களுக்கு நீங்கள் வரிந்து கட்டுவது, வக்காலத்து வாங்குவது அனாவசியம் என்பது என் கருத்து.

அவரிடம் திறமை இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் சற்று பணிவும், அடக்கமும் இருந்தால் இன்னும் சோபிப்பார்.

--- எ.அ.பாலா

said...

//vacha kudumi seracha mottai enkira alavil iruka solkinreerkal//

அது, நானில்லை. :) மற்ற பதிவுகளிலும் நான் அப்படி பின்னூட்டியதில்லை.


//briyanikku oru hotel, juice kku oru hotel ketpadhiyum, dubbing pesa varaadhidhiyum aadharikka solkinreerkala? //

கண்டிப்பாக இல்லை. நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதியிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. :)

தங்கரின் திமிர்ப் பேச்சுக்கு நீங்கள் கட்டியிருக்கும் சப்பைக் கட்டை பாருங்கள்.

//நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் தரும் இன்னல்களை எடுத்து கூற வந்து "பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்கள்" என புயலை கிளப்பிவிட்டார்.//
//"பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் //

இப்போது சொல்லுங்கள் நீங்கள் என்ன விஷயத்தை ஆதரிக்கிறீர்கள், எதை எதிர்க்கிறீர்கள் என்று?

உழைத்தவருக்கு கூலி கொடுக்காத தங்கருக்கு நடிகர்களைப் குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது?

இந்தப் பதிவின் தலைப்பே தங்கர் ஒரு தவறும் செய்யவில்லை என்பதாகவே இருக்கிறது. (உள்ளே கூலி கொடுக்காதது தவறுதான் என்று நீங்கள் சொன்னாலும்).

said...

தங்கர் பச்சான் என்ன 'செலக்டிவ்' கம்யூனிஸ்டா? இவர் படங்கள் தியேட்டர்களில்
இலவசமாக ஓடுகிறதா? அல்லது கலைச்சேவைக்காக படம் எடுக்கிறாரா?

நடிப்பவர்கள் மட்டும் ஏன் இலவசமாக நடிக்க வேண்டும்? கோடி கோடியாக விஜயகாந்த்
வாங்குவது அவருடைய தவறா? குழலி இலவசமாக வேலை செய்கிறாரா?

தங்கர் பச்சானின் அபத்தமான உளறலுக்கு இந்த சப்பைக்கட்டு தேவையில்லை.

said...

குழலி,

இந்த பதிவில் சில கருத்துகளோடு ஒத்திசைந்தாலும் தலைப்பு தவறென்பதில் எனக்கு வேறு கருத்து கிடையாது. தங்கர் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் நீங்களே தலைப்பில் தவறேதும் செய்யாதது போல்
எழுதியுள்ளீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் தலைப்பு அப்படித்தான் சொல்கிறது. தவறுதான் என்ன என்று கேட்கும்போதே தவறே செய்யாத தொனி தெரிகிறது. அந்த ஆளுக்கு எதோ கொஞ்சம் தெரியும் என்பதர்காக என்ன வேண்டுமானாலும் பேசுவதா? அதுவும் தன் பக்கமே குற்றத்தை வைத்துக்கொண்டு .
இது, தான் எதோ பெரிய பருப்பு போலவும் மற்றவர்கள் முட்டாள் என்றும் அவர்கள் தன் காலை நக்கி கிடக்க வேண்டும் என்பது போலான ஆணவத்தைதான் காட்டுகிறது. அந்த ஆளுக்கு ஒன்னு தெரிஞ்சா அடுத்தவனுக்கு வேற தெரிஞ்சுருக்கும்.

அதேபோல
தயாரிப்பாளர்களுக்கு நீங்க என்ன சப்பைகட்டு கட்டினலும் இங்கு ஏற்க முடியாது. அவர்களின் பிரச்சினைக்கு 90% காரணம் அவர்கள் பேராசைதான். இங்கு என்னால் நடிகர்களை முழுவதும் குற்றம் சொல்ல முடியாது. அவர்களின் நேர்மையின்மையை பேசிய மாதவனை அழைத்து மன்னிப்பு கடிதம் வாங்கியது தெரியும் என்று நினைக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் இதுவும்.
இதெல்லாம் அவங்க மட்டத்துள உள்ள அரசியல்பா. நீங்க டென்சன் ஆகாதிங்கொ.

டிஸ்கஷன் பத்தி... மன்னிக்கனும் குழலி இத நான் உங்கள்கிட்ட எதிர்பார்க்கல. ஆமா டைரக்டர் யாரும் இத பண்றதில்லையா. எனக்கு எதுவும் இத பத்தி தெரியாது. தெரிஞ்சவுக ஆரும் சொன்னாதான் உண்டு.

அப்புறம் தங்கர் வன்னியரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. உண்மையிலே நம்ம சினிமா டேட்டாபேச அந்த அளவு எல்லாம் அப்டேட் பண்றதில்ல. நீங்க டிஸ்கஷன் அளவுக்கு இறங்கியதற்கு இது முக்கிய காரணமாக இருக்காது என்றும் நம்புகின்றேன். பொதுவாக நடிகர்களை பிடிக்காது திட்டுவது போல இந்த விஷயத்திலும் பிரச்சனையை விட்டு விட்டு பஞ்சாயத்து செய்யும் நடிகர்களை திட்டுவதாகவே பார்க்கிறேன் நடிகர்களை திட்ட உங்களுக்கு கொஞ்சம் அவல் கிடைத்திருக்கிறது.
(யப்பா ஒரு டிஸ்கிளைமர்: நான் நடிகர்களின் கொ.ப.செ அல்ல. அவர்கள் செய்யும் அணைத்தையும் எடுத்துப் போட்டு என்னிடம் விளக்கம் கேட்காதீர்:-) )

-சோழநாடன்

said...

Neat topic and insightful content - I wish more blogs were like yours! I'll definitely be back for more!

I've got a christian affiliate program site. It's mostly on christian affiliate program and that kind of stuff.

Check it out if you're not too busy :-)

said...

CBS News counters bloggers with 'nonbudsman'
After a controversial run-in with bloggers last year that helped sink "60 Minutes Wednesday," CBS has hired a "nonbudsman" to write a blog that will go behind the scenes at the news division.
Wow - Great blog! I have just opened a betteruniverse site. Check it out and see if it is something for you.

said...

I love your blog!! You can visit mine at
Visit Our Site

said...

Hi, I was just blog surfing and found you! You have a great blog. If you are interested, go see my Losing Weight related site. It isnt anything special but you may still find something of interest. Thank You.

said...

மோசமான மக்கள் அதிகம் புலங்கும் தொழில் திரைப்படத்தொழில். பொய்யும் பித்தலாட்டமும் ஆட்சி புரியுமிடம். ஒழுக்கமானவர்கள் இங்கு குப்பை கொட்டுவது கடினம். கொஞ்சம் அசந்தா ஆளையே முழுங்கிருவாங்க, நீ அவனை கவுக்கலைன்னா அவன் உன்னை கவுத்துருவான், முந்திக்கிறவன் பொழச்சான், இதுல யாரை போய் குற்றம் சொல்ல?

said...

தங்கர்ரும் சில நூறுருவாய் நோட்டுகளும்,
காடுவெட்டி குருவும் கடவுள் குரலில் பேசியும்,
ராமதாஸும் நூறு கழிப்பறைகளும், சில ரஜினி போஸ்டர்களும்

ஒ S.RA
மன்னிச்சுருங்க
குழலி அக்கா பதிவ படிச்சு படிச்சு நகைச்சுவைல என்ன பண்ணறதுன்னே தெரியல
//ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனரோ?//

இதெல்லாம் அந்த நாசமாப்போன makeup women தேவடியா(இப்படி தங்க சொல்லீருக்காரு) மு....
க்கு ஒரு பிச்சை காசு 600 க் குடுக்காம பிரச்சனை வந்ததுக்கு அப்பறமா சொல்லாம
படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே, நடிகைனா நான் இப்படித்தான் நினைக்கிறேன் அப்படின்னு சொல்லீருக்கலாம்..

அப்பறம் நீங்க தங்கரும் சில தைரியமான கருத்துக்களும்னு பதிஞ்சிருக்கலம்

said...

//டிஸ்கஷன் பத்தி... மன்னிக்கனும் குழலி இத நான் உங்கள்கிட்ட எதிர்பார்க்கல.
//
எந்த இடத்தில் இதை பயன்படுத்தினேன் என்று புரிந்திருக்கும், வடிவேலு போன்ற நடிகர்கள் பேசிய பேச்செல்லாம் படித்திருப்பீர்களே!, தங்கர் பச்சான் மீது காட்டிய ஆத்திரமும், காமிராவின் முன் நடிககளுக்கு பரிந்து பேசிய நடிகர்கள் உண்மையிலேயே நடிகைகளின் மீது நல்லெண்ணம் இருந்தால் //நடிகைகளுக்கு ஆதரவாக போராடும் நாயகர்களே நீங்கள் டிஸ்கஷன் நடத்தாமல் இருந்தாலே போதும், அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரம்.// என்று குறிப்பிட்டேன், இதில் என்ன தவறு இருக்கின்றது என எனக்கு புரியவில்லை

ஒருவேளை முகமூடி சொன்னது போல எனக்கு மூளைவளர்ச்சி இல்லையோ என்னமோ :-))

//அப்புறம் தங்கர் வன்னியரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது.//
போன வருடம் தங்கரின் ஒன்பது ரூபாய் நோட்டு படிக்கும் வரை எனக்கும் தெரியாது. உங்களின் புரிதலுக்கு நன்றி சோழநாடான்

சிலர் யார் யார் என்ன சாதி என்று டெலிபோன் டைரக்டரி மாதிரி சாதி டைரக்டரி வைத்துள்ளனர் போலும் அவர்கள் அப்படியே நான் ஆதரிக்கும் எதிர்க்கும் எல்லோருடைய சாதியையும் எடுத்துப்போட்டால் திசை திருப்ப வசதியாக இருக்குமல்லவா!

said...

எல்லோரும் ஏன் தங்கர் கேவலம் 600 ரூபாய் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள் ?

நவ்யா நாயர் ( இந்த சாதி பெயர் ஓகே வா என்று தெரியவில்லை ) அந்த Rs 600 பணத்தை கொடுத்து இருந்தாலும் இது முடிந்து இருக்கும்.


அவர் என்ன ஒரு 5 இலட்சம் சமபளம் வாங்கி இருப்பாரா இந்த படத்தில் நடிக்க.

எனக்கு என்னவோ இது வெறும் Rs600
ரூபாய்க்கு மட்டும் வந்த சண்டை இல்லை என்றே தோன்றுகிறது.


குழலி நீங்கள் நடிகர்களை பற்றி சொல்லவந்தது வேறு விதமாக திரிக்கபடுவதும் நன்றாகவே தெரிகிறதுநவ்யா ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு !!!


எங்கள் அன்பு தலைவி கேரள அணங்கு அஸின்


தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்காமல்
தன் உதவியாளர்களுக்கு தானே சம்பளம் கொடுக்கிறார்.


தானை தலைவி அஸின் வாழ்க வளர்க

said...

Totally agreed with ur comments. this seems to be a humiliating apology in front of somany people and press. If it has really hurted, they should have solved this matter in closed doors.

Thankar has totally surrendered fearing of money loss. This can be compared to producer durais surrender to pmk leader.

Vijayakanth has told that if someone talks against nadigar sangam, they will goon strike. Not able to digest the comments put by others. There is no surprise if political parties attacked them(actors) for showing them bad in screen.

said...

pesuvathuram oru quality vendum. 1)manoroma first has to tell to her son not to goto pros house 2)khusboo- tell your husband not to show actresses in half naked 3) vindhya-everyone knows 4) sripriya-sorry no comments.

said...

எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு வீட்டில் தவறு செய்யும் குழந்தையை அடிக்கும் ஈகோ மனப்பாண்மை தங்கரை அளவுக்கு மீறி தாக்குவதில் தெரிகின்றது. தயாரிப்பாளர் சங்கம் விஜயகாந்த்க்கு விதித்த 3 நாள் கெடுவிலிருந்து எத்தனையோ உள் விவகாரங்கள் இதனால் வெளிவராமல் அமிழ்ந்துவிடும்(ஆகா இன்னும் கொஞ்ச நேரத்தில் தங்கர் குழந்தையா என வரிகளுக்கிடையில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு சிலம்பமாட கிளம்பிவிடுவர் சிலர்)

தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனர்

said...

thangar's tongue slip revealed the truth.. thats true.. anyhow they all(including thangar) earning Rs by using us(people) and they play good in their adjustment world. we poor watch their play and make arguments with us.. but with our money they are taking rest in us,swiz or ausralia etc.. hmmm.. can we people stop watching movie(in theatre ot tv or vcd or dvd) for a day or month or so... thats it for now..

by reality

said...

"அரசியல்வாதிகள் எல்லாம் திருடர்கள்" என்று அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத சாமான்யன் சொன்னால் அரசியல் வாதிகள் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை .அதே நேரம் அதே அரசியல் வாதிகளை நம்பி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அடிபொடியோ அல்லது ஆதாயம் பெற்றுக்கொள்ளும் காண்ட்ராக்டரோ சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

எத்தனையோ திரைப்படங்களில் "அரசியல்வாதிகள் எல்லோரும் திருடர்கள்.அயோக்கியர்கள்" என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள் நடிகர்கள் .அதற்காக நல்லக்கண்ணு மாதிரி நல்ல மனிதர்கள் கொடிபிடிப்பதில்லை .இங்கு பிரச்சனையே வேறு .

"நடிகைகள் விபச்சாரிகள் " என்பது பரவலாக மக்கள் கொண்டுள்ள கருத்து தான் .அது தவறாகவும் இருக்கலாம் .ஆனால் அதே நடிகைகளை நம்பி பொழப்பு நடத்தும் தங்கர் சொன்னால் மன்னிப்பு கேட்பதுதான் நியாயம் .வாயை கொடுத்து விட்டார் .இனிமேல் மன்னிப்பு கேட்காமல் பொழப்பு ஓடாது என்பதால் மன்னிப்பும் கேட்டுவிட்டார் .பிரச்சனை அதோடு முடிந்தது .

தங்கர் சொன்னது தவறு தான் .அதற்காக அவர் மன்னிப்பு கேட்டது(வேறு வழியில்லை என்பதால் கேட்டதாக இருப்பினும்) வரவேற்கப்படவேண்டியது.இனிமேலாவது வாயை கட்டுப்படுத்திக்கொண்டு நல்ல திரைப்படங்கள் கொடுத்து சம்பாதிக்கும் நல்ல பெயரை குலைக்காமல் இருப்பாராக.

எதையுமே பொது இடத்தில் பேசினால் தான் பொறுப்பேற்கவேண்டியிருக்கிறது .விஜயகாந்த் ,வடிவேலு போன்றவர்கள் இந்த விஷயங்களில் எவ்வளவு யோக்கியர்கள் என்பது நாடறிந்த விஷயம் ..ஆனால் அதிகாரபூர்வமாக நல்ல பிள்ளைகளாக நடித்து நல்ல பெயர் வாங்கிவிடுவார்கள் .தங்கரும் அது போல இருந்தால் பிரச்சனை இல்லை .

இதை ஒரு சாக்காக வைத்து தங்கரின் திறமையை மறுப்போமேயானால் அது அபத்தம் .அழகி ,சொல்ல மறந்த கதை போன்றவை 'குருவி குடஞ்ச கொய்யா பழம்'-மையெல்லாம் தாண்டி தமிழில் வந்த உருப்படியான படங்களில் இடம் பெறுகின்றன .

said...

தொடர்ந்து முகமூடியும் மற்ற சிலரும் விஷமத்தனமாக எனது பதிவுகளை திரிக்கும் வேலையை செய்வதை மிக்கடுமையாக எதிர்க்கின்றேன்,

தங்கர் பச்சான் பிரச்சினையில் தங்கர் பச்சான் பயன்படுத்திய வார்த்தைகள் மிக்ககடுமையானது, அது கண்டிக்கப்படவேண்டியது என என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மிகத்தெளிவாக கூறியுள்ளேன்(இதை இனி ஒவ்வொரு பின்னூட்டத்திலயும் பதிவுலயும் footer ஆக போட வேண்டும் போல உள்ளது)

இதையும் மீறி முகமூடியும் இன்னும் சிலரும் என் பதிவுகளை திரிப்பது எந்த விதத்தில் நேர்மை என்று புரியவில்லை

ஒரு வேளை அவர்களின் செலக்டிவ் அளவுகோல் நேர்மையை வெளிப்படுத்தியதால் வந்த ஆத்திரமோ என்று நினைக்கின்றேன்,

எந்த ஒரு பதிவிலும் பின்னூட்டத்திலும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையை அவதூறாக நான் விமர்சிக்கவில்லை என்பதையும் இங்கே எடுத்து காட்ட விரும்புகின்றேன்(இதையும் footer ஆக போட வேண்டும் போல).

எனவே முகமூடி அவர்களே என் பதிவுகளையும் பின்னூட்டத்தையும் திரிப்பதைவிட வேறு ஏதேனும் நேர்மையான முறையில் என் கருத்துகளை எதிர்த்து பேசுங்கள் முடிந்தால்.

உடனே டிஸ்கஷன் விடயத்தை இழுப்பார்கள் பதிவை படித்து அதில் டிஸ்கஷன் பற்றி என்ன சொல்லியுள்ளேன் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

said...

//தங்கர் பச்சான் பிரச்சினையில் தங்கர் பச்சான் பயன்படுத்திய வார்த்தைகள் மிக்ககடுமையானது, அது கண்டிக்கப்படவேண்டியது என என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மிகத்தெளிவாக கூறியுள்ளேன்(இதை இனி ஒவ்வொரு பின்னூட்டத்திலயும் பதிவுலயும் footer ஆக போட வேண்டும் போல உள்ளது)//

Enge unga pathivula appaddi solli irukeengannu therinjukalama?????

//தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம்//
Oru velai ithai naan thappa purinchukitena

//தொடர்ந்து முகமூடியும் மற்ற சிலரும் விஷமத்தனமாக எனது பதிவுகளை திரிக்கும் வேலையை செய்வதை மிக்கடுமையாக எதிர்க்கின்றேன்,//

Enakennamo neenga than pazhasa manasula vachukuttu Mugamoodiya opposse panreengannu thonuthu

- Subbu

said...

//Enakennamo neenga than pazhasa manasula vachukuttu Mugamoodiya opposse panreengannu thonuthu
//
பழசை மனதில் வைத்துக்கொண்டு என்று எதை கூறுகின்றீர், பழசை மனதில் வைத்துக்கொண்டு செய்யும் அளவிற்கு அவரால் நான் காயப்படவில்லை, ஆனால் முன்பு அவர் எடுத்திருந்த நிலைக்கும் இதில் அவர் எடுத்திருக்கும் நிலைக்கும் உள்ள மாற்றத்தை தான் சுட்டிக்காட்டினேனே தவிர மனதில் வைத்துக்கொண்டு எதிர்க்கும் அளவிற்கு எனக்கும் அவருக்கும் ஒன்றும் பங்காளித் தகராறு ஏதுமில்லை

said...

//தங்கர் பச்சான் பிரச்சினையில் தங்கர் பச்சான் பயன்படுத்திய வார்த்தைகள் மிக்ககடுமையானது, அது கண்டிக்கப்படவேண்டியது என என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மிகத்தெளிவாக கூறியுள்ளேன்//

குழலி,
உங்கள் பதிவுகளில் "கண்டிக்கப்படவேண்டியது" எங்கேயும் என்போன்ற சாமான்யனுக்கு தெளிவ தெரியலங்க... எங்கேயாவது பின்னூட்டத்துல சொல்லிருந்தாலும் அதுக்கு சுட்டி குடுங்களேன்... பிரச்சினை முடிவுக்கு வரட்டும்!!!

said...

"என்னமோ போங்க" அவர்களின் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க:
http://randakka.blogspot.com/2005/09/blog-post.html#comments

நடந்த விஷயம் ரொம்ப சிம்பிள். வாய்க்கொழுப்புடன் தங்கர் பேசினார். வாங்கிக் கட்டிக் கொண்டார். மன்னிப்பு கேட்டார். சிலர் மன்னித்தனர், சிலர் மன்னிக்கவில்லை. ஒரு சங்கட நிலை நீடிக்கிறது.

இது போதாது என்று அவருக்கு ஆதரவாகப் பேசுகிறேன் பேர்வழி என்று இங்கு வலைப்பதிவர் குழு ஒன்று கிளம்பியிருக்கிறது. தங்கர் கடுமையான வார்த்தையைப் பேச, அதைப் பிடித்துக் கொண்டு பலர் தொங்குகிறார்களாம். ஆகவே அவர் கூறிய உண்மை மறைக்கப்பட்டதாம். இவர்கள் இவ்வாறு வருத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லோருமே தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை இம்முறையில் காட்டிக் கொண்டார்கள். இவர்களுக்கு எதிராக எழுதிய மற்றவரும் இவர்களின் பெண் உறவினர்களை இழுக்கிறார்கள். மொத்தத்தில் எம்.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் சேர்ந்திசையைக் கேட்ட உணர்வே ஏற்படுகிறது. தங்கர் பச்சானே இவற்றையெல்லாம் படித்தால் நொந்து நூலாகியிருப்பார். பாவம் அவர்,

விட்டு விடுங்கள் இந்த விஷயத்தை. அவர் தன்னால் காயப்பட்டவர்களை அதை மறக்கச் செய்து தன்னுடன் சேர்ந்து வேலை செய்யும் மனநிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டிய நிலையிலிருக்கிறார். இந்த மாதிரியான நேரத்தில் அனுகூல சத்ருக்கள் ஆகாதீர்கள் அவருக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வாங்க டோண்டு அய்யா வாங்க, என்னடா பிரச்சினை ஆரம்பித்து இத்தனை நாட்களாயிற்று இவரின் பின்னூட்டத்தை காணவில்லையே அதுவும் பிரச்சினையில் நான் வேறு இரண்டு பதிவு போட்டிருக்கேனே என்று நினைத்தேன் வந்துவிட்டீர்கள்

//தங்கர் கடுமையான வார்த்தையைப் பேச, அதைப் பிடித்துக் கொண்டு பலர் தொங்குகிறார்களாம். ஆகவே அவர் கூறிய உண்மை மறைக்கப்பட்டதாம். இவர்கள் இவ்வாறு வருத்தப்படுகிறார்கள். //
மேலே சொன்னதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்று உங்கள் மனசாட்சியிடம் கேட்டு பாருங்கள் புரியும்.

//இவர்கள் எல்லோருமே தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை இம்முறையில் காட்டிக் கொண்டார்கள்.//

வாங்கய்யா டோண்டு அய்யா இதில் என்னையும் சேர்த்துதான் கூறினீர்களா? நீங்கள் அளித்த இந்த பட்டமளிப்பில் நான் உண்டா, இல்லையா?

நீங்கள் இவர்கள் அனைவருமே என்று கூறியுள்ளீர் இருந்தாலும் ஒரு முறை உங்களிடமே கேட்டுவிட்டு அதன் பிறகு இதற்கு பதில் எழுதுகிறேனே

said...

"வாங்க டோண்டு அய்யா வாங்க, என்னடா பிரச்சினை ஆரம்பித்து இத்தனை நாட்களாயிற்று இவரின் பின்னூட்டத்தை காணவில்லையே அதுவும் பிரச்சினையில் நான் வேறு இரண்டு பதிவு போட்டிருக்கேனே என்று நினைத்தேன் வந்துவிட்டீர்கள்"

எல்லோருடையப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்து எழுதியது என்னுடையப் பின்னூட்டம். ஆகவே நேரம் ஆகி விட்டது.

"//இவர்கள் எல்லோருமே தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை இம்முறையில் காட்டிக் கொண்டார்கள்.//

வாங்கய்யா டோண்டு அய்யா இதில் என்னையும் சேர்த்துதான் கூறினீர்களா? நீங்கள் அளித்த இந்த பட்டமளிப்பில் நான் உண்டா, இல்லையா?"

நீங்களும் அதில் உண்டு. அப்படி நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக் கொள்ளலாமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Some of the magazines publish stories & gossips much worse than what Thankar said. Just for an sample - refer the latest Nakkerans cover story. What did the Actors union did about that?.

They were jumping on Thankar because he was from the same field.

So as long as you are not in the movie industry you can talk any nonsense about the artists.

said...

//நீங்களும் அதில் உண்டு. அப்படி நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக் கொள்ளலாமே?//

நான் என் மனசாட்சியிடம் கேட்டுபார்த்தேன் அது இல்லை என்று சொல்கின்றது, ஆணாதிக்க மனப்பாண்மையோடு எழுதினேன் என்று (என் பழவிலிருந்து வேண்டுமானாலும் காட்டுங்கள்) நிரூபித்தால் என் வலைப்பதிவில் தனியாக ஒரு பதிவு போட்டு வருத்தம் தெரிவிக்கின்றேன், அப்படி முடியாவிட்டால் அய்யா டோண்டு அவர்கள் என் மீது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றேன் என அவதூறு பரப்பியதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

டோண்டு அய்யா நான் உங்களைவிட வயதில் வயசில்,படிப்பில் அனுபவத்தில் மிக குறைந்தவன், எனவே என்னை குறி வைப்பதைவிட உங்கள் தகுதிக்கு இணையான ஆட்களை குறி வைங்கள், அதுதான் உங்கள் தகுதிக்கு பொறுத்தமாக இருக்கும்

நன்றி

said...

http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

என்ற பதிவில் டோண்டு அய்யா அவர்களின் 384வது பின்னூட்டத்திற்கான பதில் இங்கேயும்

//தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை//
இப்போதும் சொல்கின்றேன் தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு மற்றும் அது தான் பிரச்சினையே, நான் என்ன தங்கர் அந்த வார்த்தையை பயன் படுத்தியது சரி என்றா கூறினேன்.

அதற்காக நடிகர்/நடிகைகள் செய்யும் அட்டகாசங்களை எதிர்க்க கூடாதா?


//"பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இந்த நடிகர்களும்/நடிகைகளும் பணத்திற்காக செய்யும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை//
இங்கே தங்கர் பேசிய பேச்சிற்கு எதிர்வினைகள் தவறு என்று நான் சொல்லவில்லை, சரியாக படியுங்கள் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் தான் தவறு என்று கூறியுள்ளேன், அதற்கு என்ன காரணமென்றும் கூறியுள்ளேன்

//பணத்திற்காக மட்டும் என்று அழுத்திக் கூறும்போது நடிககைகளையும் சேர்த்தால் அவர்கள் விபசாரிகள் என்று கூறியப் பொருளும் வரும்.//
தவறாக பொருள் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அல்லது உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பவில்லை, தங்கர் பேசியது கடுமையானது என்று கூறிய பிறகும் வரிகளுக்கு இடையில் வார்த்தைகளை பிடித்துக்கொண்டு பேசுவது தான் இது.

// டிஸ்கஷன்களைப் பற்றிப் பேசியதும் துரதிர்ஷ்டவசமானதே//
எதிர்பார்த்தது தான் நீங்கள் இங்கே வருவீர்கள் என்று, சரியாக படியுங்கள் டிஸ்கஷன் என்ற கருத்தில் நடிகைகளை பற்றி அவதூறாக பேசவில்லை, நடிகைகளின் மீதான நல்லெண்ணத்துடன் பத்திரிக்கையாளர்களின் முன் ஆவேசம் காண்பித்த நடிகர்களின் வெளிவேசத்தை கிழிக்கத்தான் அது பயன்படுத்தப்பட்டது.

//"என்னை குறி வைப்பதைவிட உங்கள் தகுதிக்கு இணையான ஆட்களை குறி வைங்கள், அதுதான் உங்கள் தகுதிக்கு பொறுத்தமாக இருக்கும்."
உங்களை எதற்கு நான் குறிவைக்க வேண்டும்? நான் பொதுப்படையாகக் கூறியதை நீங்களே "நானும் அதில் உண்டா" என்று ஆசையுடன் கேட்டு உள்ளே வந்தால் நான் என்ன செய்ய முடியும்?
//
நீங்கள் என் பதிவினைப்பற்றி குறிப்பிட்டு எல்லோரும் என்று குறிப்பிட்டதால் அங்கே நான் மற்றுமொருமுறை உறுதிபடுத்திக்கொள்ள கேட்டேன்.

//உங்களையும் ஆணாதிக்கம் உள்ளவர்களில் ஒருவராக சேர்த்தது என் மனசாட்சிப்படி சரியே.
//
என்ன செய்வது, அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று மட்டையடித்தவர் நீங்கள், பின் ஆதரங்களோடு இல்லை என்று நிரூபித்த வருத்தம் தெரிவிக்க சொன்னபோது நான் அதை நம்பவேயில்லை என்று கூறி இந்த விடயத்தில் உங்கள் நேர்மையை ஏற்கனவே ஒரு முறை நிரூபித்தவர் தானே நீங்கள், உங்களால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும். இப்படித் தான் ஏதாவது சப்பைகட்டு கட்டுவீர்கள் என எதிர்பார்த்தேன், இருந்தாலும் நீங்கள் என்னை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியவன் என்று கூறியதால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது என் கடமை.

இனி இங்கே படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் நான் ஆணாதிக்கத்தோடு எழுதினேனா இல்லையா என்று.


எம்மால் ஒரு விடயத்திலோ ஒருவரையோ வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்று முழுவதும் ஆதரிப்பதும் முழுவதும் எதிர்ப்பதும் முடியாத விடயம்.

தங்கர்பச்சான் வெளிப்படுத்திய வார்த்தைகளை எதிர்த்தாலும் அதன்பின்னால் நடிகர்/நடிகைகளின் அட்டாகசத்தை எதிர்த்து தங்கர் கூறியதை ஆதரித்தால் இப்படித்தான் ஆணாதிக்க பட்டம் சூட்டுவீர்கள்

said...

"என்ன செய்வது, அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று மட்டையடித்தவர் நீங்கள், பின் ஆதாரங்களோடு இல்லை என்று நிரூபித்து வருத்தம் தெரிவிக்க சொன்னபோது நான் அதை நம்பவேயில்லை என்று கூறி இந்த விடயத்தில் உங்கள் நேர்மையை ஏற்கனவே ஒரு முறை நிரூபித்தவர் தானே நீங்கள், உங்களால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும்."

தமிழ்குடிதாங்கி மற்றவருக்கு வலுவுறுத்தியது தமிழ்வழிக் கல்வியே. வெறுமனே தமிழை ஒரு பாடமாகப் படிப்பதல்ல. மேலும் சம்பந்தப்பட்டக் குழந்தைகள் தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் கூடத் தமிழ்வழிக் கல்வி படித்த்தாகத் தெரியவில்லை. அதை பற்றிக் கேட்டதற்கு துக்ளக்கையும், தின மலரையும் அந்துமணியையும் கேட்டுக் கொள்ளச் சொன்னீர்கள்.

இப்போதும் கூறுவேன், குழந்தைகள் இப்போது தமிழ்ப்பாடம் படிப்பதாகக் கூறுவது ஒரு டேமேஜ் லிமிடிங்க் முயற்சிதான் என்று.

தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அன்புமணி தன் குழந்தைகளைத் தமிழ் கல்விமுறையிலேயே படிக்க வைத்திருப்பார் என்று வேறு ஒரு ஜல்லியடித்தீர்கள். ஐயா, அவரே ஆங்கிலப் பள்ளியில்தான் படித்தார் என்பதற்கு சரியானப் பதில் இல்லை. தில்லி தமிழ் கல்விக் கழகத்தில் தன் குழந்தைகளை அன்புமணி படிக்க வைக்காமல் போனதற்கு மேட்டுக்குடி மனப்பான்மை என்று கூறியதற்கும் சரியான பதில் இல்லை. உங்களிடம் அப்பள்ளிகளில் தரம் இல்லை என்று கூறிய நண்பர் இதையே அதற்கு முக்கியக் காரணமாக வைத்திருப்பார் என்று கூறியதற்கும் உங்களிடம் பதில் இல்லை. என்ன செய்யச் சொல்கிறீர்கள் என்னை?

"இனி இங்கே படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் நான் ஆணாதிக்கத்தோடு எழுதினேனா இல்லையா என்று."

மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுதியதைத்தான் பார்த்தீர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுதியதைத்தான் பார்த்திர்களே.//

நன்றாக பார்த்தேன் யாருமே நான் ஆணாதிக்க சிந்தனையோடு எழுதியதாக சொல்லவில்லை உங்களைத்தவிர. (உங்களுக்கு அப்படி எழுதுவதற்கு பல உள்நோக்கங்கள் இருக்கலாம்)

டிஸ்கஷன் பற்றி எழுதியதை தவறாக அர்த்தம் செய்து கொண்டவர்களும் நான் அதற்கு மறுப்பு தெரிவித்து எழுதியபின் எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.

தெக்கத்திடெர்மினேட்டர் லிங்கம் பதிவில் சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டீர், இது மாதிரி பல உங்கள் உள் நோக்கங்களுக்கு பல உதாரணங்கள் தரமுடியும், எனவே டோண்டு அய்யா இப்போதும் சொல்கின்றேன் நான் சின்னபையன் என்னை குறி வைக்காதீர்கள் உங்கள் தகுதிக்கு நான் சரியான இலக்கு அல்ல

said...

பிரச்சனை தங்கரின் சாதியில்லை. அவரது அரசியல் சார்புமில்லை. அவருடைய பேச்சில்தான்.

தங்கர் மட்டுமல்ல பலரும் இப்படிப் பேசியிருக்கின்றார்கள். அது மிகவும் தவறானது.

விபச்சாரி என்றாலே கேவலமில்லை என்பது ஒருபுறமிருக்க, விபச்சாரி என்பதைக் கேவலப் பதத்தில் பயன்படுத்தி அதைச் சகதொழிலாளிகடம் கரித்துக் கொட்டியதுதான் தவறு.

குழலி சொல்வது போல அவர் வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்ற நினைத்தால் அதைச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து வீண் பேச்சு எதுக்கு? அப்படியானால் தங்கர் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லும் அறிவு படைத்தவர் இல்லையா?

தங்கர் என்றல்ல....யாரும் இப்படிச் சொல்வது தவறுதான். வெளியாள் சொல்வதை விட வீட்டில் இருப்பவர் சொன்னால் வலி பெரிதாக இருக்கும். நம்மைப் பற்றியோ எவனோ தப்பாகச் சொன்னால் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் வீட்டிலிருப்பவர்கள் சொன்னால் வலிக்கும்தானே. அதுதான் தங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

சுருங்கச் சொன்னால், யாகாவாராயினும் நாகாக்க.

said...

குழலி தான் ஏதோ தங்கர் சொன்னதை கண்டித்தது போல் ஆடும் நாடகத்தை போன்ற ஒரு புளுகு இருக்க முடியாது. சும்மா வெற்று வார்த்தையாய் 'தப்பு' என்று ஒப்புக்கு சொன்னவர், எம்.கே.குமாரின் பதிவில் அத்தனை முறை அத்தனை அற்பபுழுக்கள் மீண்டும் மீண்டும் சொன்னபோது எங்காவது கண்டித்தாரா? ஏன் அவருடய பதிவிலேயே எழுதியதை கண்டித்தாரா?

கவனிக்கவும், நான் தங்கரை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. நான் எதிர்ப்பது இவரகளின் வார்த்தை பிரயோகங்களைத்தான். தன் பதிவில் 'கெட்ட வார்த்தை எழுதினால் திருப்பி தாக்குவேன்' என்று எச்சரிக்கை விட்டவர் அதை எனக்கு மட்டும்தானே பொருத்தினாரே தவிர, எங்காவது அவர் பதிவிலேயே நடிகைகளை பற்றி கேவலமாக வந்த பின்னூட்டம் பற்றி பேசியுள்ளாரா? அதற்கு ஏதாவது முனகலாவது வெளிப்பட்டதா? இப்போது பலர் சுட்டியவுடன் நடிக்கிறார்.

இப்போது பாருங்கள் என்னுடய இந்த பின்னூட்டத்திற்கு அவர் எழுதப்போகும் சப்பைகட்டை. அது சரி, சோறு தின்றால் அல்லவா...

said...

"தெக்கத்திடெர்மினேட்டர் லிங்கம் பதிவில் சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டீர்"

சம்பந்தமில்லாமல் ஏதும் பின்னூட்டமிடவில்லை. எனக்கு முன்னால் வந்தப் பின்னூட்டத்தின் எதிர்வினை அது. மேலும் அப்பதிவில் இளைஞர்களை வன்முறைக்குத் திருப்புவதைக் கண்டித்தீர்கள். அதற்குக் கூடுதல் உதாரணமாக மரம் வெட்டியவர்களையும் சேர்த்துக் கூறினேன், படச்சுருளை திருடுவது, திருட்டு வி.சி.டி. போடவைப்பேன் என பயமுறுத்துவது போன்றவையைக் கூட வன்முறையைத் தூண்டுவதற்கு உதாரணமாகக் கூறினேன்.

நீங்கள் மட்டும் என்னவாம், இப்பதிவில் சம்பந்தமில்லாது அன்புமணி விஷயத்தை இழுத்தீர்கள். அதற்கு பதில் கூறியதும் சௌகரியமாகத் தெக்குத் டெர்மினேட்டருக்கு ஓடுகிறீர்கள்.

"நான் சின்னபையன் என்னை குறி வைக்காதீர்கள் உங்கள் தகுதிக்கு நான் சரியான இலக்கு அல்ல"
உங்களை நான் குறிவைக்கவில்லை. உங்கள் கருத்துகளுக்கு என்னிடம் பதில் இருந்தால் அதைக் கூறுவதே நான் செய்வது. யாரையும் நான் குறிவைப்பதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//குழலி தான் ஏதோ தங்கர் சொன்னதை கண்டித்தது போல் ஆடும் நாடகத்தை போன்ற ஒரு புளுகு இருக்க முடியாது. சும்மா வெற்று வார்த்தையாய் 'தப்பு' என்று ஒப்புக்கு சொன்னவர்//

http://yaalisai.blogspot.com/2005/08/blog-post_20.html

என்ற பதிவில் ஆகஸ்ட் 20 ம் தேதி நான் இட்ட பின்னூட்டங்கள்

தங்கர் பச்சான் பல சமயம் உண்மையை பேசினாலும் சில சமயம் தேவையின்றி நாவடக்கமில்லாமல் பேசிவிடுகின்றார். அதனால் அவர் சொல்லும் கருத்தில் உள்ள உண்மை அடிபட்டுவிடுகின்றது.

//"காசுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்"//
இதெல்லாம் கொஞ்சம் அதிகமோ அதிகம், கொஞ்சம் கூட இறக்கமேயின்றி பணத்திற்காக தயாரிப்பாளர்களின் கழுத்தை இறுக்கி மாத்திரை திங்கவும் தூக்கு மாட்டிக்கொள்ளவும் காரணமாக இருக்கும் நடிகர் நடிகைகளை இந்த மாதிரி வார்த்தையால் சாடும்போது இந்த வார்த்தையை பிடித்து தொங்கிக்கொண்டு அவர்களுடைய தவறுகள் மறைந்து நடிகர்/நடிகைகள் புனிதர் பட்டம் பெற்றுவிடுவர், தங்கர்பச்சானுக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவைதான்

//"குருவி கடிச்ச கொய்யாப்பழம்" //

அது சரி இதுவும் சமரசத்திற்காக எடுக்கப்பட்டது தானே, முகமூடியாரே நேரில் பார்க்கும்போது படத்தில் காண்பித்ததெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தானுங்கோ

முகமூடியாரே நான் மட்டும் என்ன தங்கர் பேசியது நியாயம் என்றா கூறினேன், என் பின்னூட்டங்களை பாருங்கள்.

////"குருவி கடிச்ச கொய்யாப்பழம்" //
அது சரி இதுவும் சமரசத்திற்காக எடுக்கப்பட்டது தானே//

நான் மட்டுமென்ன தங்கர் குருவி கடிச்ச கொய்யாபழம் கலைக்காக எடுத்ததென்றா கூறினேன், அதுவும் வியாபாரத்திற்காக எடுத்தது என்று தானே கூறினேன்.

தங்கர் அளவுக்கதிகமாக பேசுகின்றார் என்றுதான் நானும் கூறுகின்றேன், அதற்காக தங்கர் சொல்வதில் கொஞ்சம் கூட நியாயமில்லை என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை.
சில நாட்களுக்குமுன் ஏற்பட்ட தானு, சிம்பு பணப்பிரச்சினை கேள்விப்பட்டீர்களா?

மாதவன் டப்பிங் பேச வராமல் இழுத்தடித்ததை படித்தீர்களா?

தயாரிப்பாளர்களும் நியாயவான்கள் சத்தியசீலர்கள் என்று கூறவில்லை, அதே சமயம் பழச்சாறு வரவில்லையென்றும், கேரவன் வேன் வரவில்லையென்றும் எத்தனை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நடிகர்/நடிகைகள் எல்லாம் படத்தின் தொடக்கத்தில் இந்த வித்தையை காண்பிக்க மாட்டார்கள், படம் முடிவடையும் போது தான் காண்பிப்பார்கள்.

//இப்போ உங்க கம்பெனியில் நீங்க தவிர்க்க முடியாத ஆளாயிட்டீங்க, அப்போ நீங்க கேக்குற சம்பளம் தருவாங்கன்னா - அதை விட ஜாஸ்தியா மத்த கம்பெனில தர தயாரா இருக்காங்கன்னா - நீங்க வேணாங்க எனக்கு கிடைப்பதே போதும்னு சொல்வீங்களா... ஆமான்னு சொன்னாலும் சொல்வீங்க.. //
வேலை செய்யும் போதும் ஒரு ethics இருக்கின்றது... இது மட்டுமே தற்போதைக்கு சொல்ல ஆசைப்படுகின்றேன், வேறெதுவும் பொதுவில் சொல்ல விருப்பமில்லை.

தங்கர் எடுத்ததே மூன்று படம் தான், அழகி, சோல்லமறந்த கதை, தென்றல் இதில் எது குப்பை?? அது சரி குப்பையின் அளவுகோல் பார்வைக்கு பார்வை மாறுபடத்தானே செய்யும். சரி விடுங்க உடனே தங்கர் ஆதரவாளர்னு ஒரு முத்திரை விழுந்து விடப்போகுது. ஆகவே பொது மக்களே, அன்பர்களே, நண்பர்களே வலைப்பதிவர்களே, வலைப்பதிவை வாசிப்பவர்களே என்னுடைய கருத்து என்னவென்றால் தங்கர்பச்சான் பேசியது அளவுக்கதிகமானது என்றாலும் அதில் உண்மையில்லாமல் இல்லை, இவர் பேசிய பேச்சுகளுக்காகவே இதுவரை எடுக்கப்பட்ட இவரது படத்தை குப்பை என்று ஒதுக்க எனக்கு மனம் வரவில்லை. நான் தங்கர்பச்சான் ஆதரவாளன் இல்லை.

http://egalaivan.blogspot.com/2005/08/blog-post_27.html

என்ற பதிவில் ஆகஸ்ட் 27ம் தேதியிட்ட பின்னூட்டம்

// தங்களுடைய சுயலாபத்துக்காகவா? தஞ்சாவூர் விவசாயி எலிக்கறி தின்னானே, அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு மத்திய அமைச்சரவையில் வேளாண்மைத்துறையை யாராவது கேட்டாங்களா? அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா? எல்லாம் சுய லாபத்துக்காக வருமானம் வரும் துறைகளைக் கேட்டு வாங்கினாங்க
//
இப்படி கூறிய இதே விஜயகாந்த் தான் பின் அவர்களிடமே தன் மண்டபம் இடிபடாமல் காப்பாற்ற போய் நின்றார்.
இதைப்பற்றிய ஒரு பதிவு இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்

படம் காட்டிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் தற்போதுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து எந்த இடத்திலும் மாறுபடவில்லை, விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?

தங்கர்பச்சான் அதிகம் பேசுகின்றார் என்பது கண்டிக்க வேண்டிய உண்மை, அதே சமயம் அவர் பேசுவதில் உள்ள உண்மையையும் நாம் உணரவேண்டும்

----------------------------------------------------------

இவையனைத்தும் நீங்கள் தங்கரை தாக்குவதற்கு முன்பே நான் எழுதிய பின்னூட்டங்கள்

என்பதிவிலும் பின்னூட்டங்களிலும் தங்கர் கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார், தங்கருக்கு வாய்கொழுப்பு அதிகம் என்று கூறியுள்ளேன், இதெல்லாம் தங்கர் பேசிய வார்த்தைகளை ஆதரித்தால் வந்திருக்கும் என நினைக்கின்றீரா?

என்னதான் ஆனாலும் என்னால் சிலர் மாதிரி (ஆ)பாசமாகவெல்லாம் கண்டிக்க முடியாது.

//ஆனால் அவர் அந்த வார்த்தையை கண்டித்தார் என்பது நாடகம் மட்டுமே. ஒப்புக்காக வெளிபூச்சுக்காக செய்வது. ஏனேனில் அதை சொன்ன குமாரை ஆதரிக்கிறார்//

அடுத்ததாக குமாரின் பதிவில் ஆதரித்தும் எதிர்த்தும் எந்த கருத்தையும் சொல்லவில்லை, ரோசாவசந்தின் பின்னூட்டத்தால் காயமடைந்த குமாருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டும்முன் ஒரு முறை நிதானமாக படித்து பார்த்துவிட்டு சொல்லலாம்.

//மற்றவர்களுக்காவது தங்கள் நிலையை வெளிப்படையாய் சொல்லும் தைரியம் உண்டு. இவர் அது கூட இல்லாத போலி. //

போலியா இல்லையா என்பது எல்லோருக்கும் நன்றாகவேத் தெரியும், தைரியம் பற்றி என்னிடம்(?!) சொல்வது அதுவும் எந்த மட்டையடிக்கும் பயப்படாமல் மருத்துவர் இராமதாசுவில் ஆரம்பித்து இதோ தங்கர் வரை வந்துள்ளேன்,

//அதனாலேயே' சோறு' திங்கிறாரா என்று சந்தேகம்.//

ஏற்கனவே தங்கரை ஒரு கருத்திற்காக ஆதரித்ததாலேயே நாய் பட்டம் கொடுத்துவிட்டீர், பின் உங்களுக்கு நான் சோறு தின்கிறேனா என்பதில் சந்தேகம் வந்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அன்பு பாலா,
// சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை."
-- தமிழ்பாதுகாப்பு இயக்கம் பற்றிய பாலாவின் பின்னூட்டம்
//

////"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?"//
என்ற தொனியில் நான் ஏதாவது கூறியிருந்தால்
-பாலா//

கீழேயுள்ள பின்னூட்டம் நீங்கள் இதே பதிவில் முன்பு இட்டது
//"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?" என்று விதண்டாவாதம் செய்பவரிடம் தர்க்கம் செய்வது வீண்வேலையே.
//

மேலேயுள்ளா மூன்று பின்னூட்டங்களில் நீங்கள் எடுத்த இரட்டை அளவுகோல் புரியும் என நினைக்கின்றேன், இதற்கு மேலும் என்னால் விளக்குவது இயலாத காரியம்

டோண்டுவைப்பற்றி பேசத்தேவையில்லைதான், எல்லாம் தெரிந்தது தான் இருந்தாலும் அவர் பதிவிற்கு சம்மந்தமில்லாமல்(என்னார் பதிவு உட்பட) எழுதும் பின்னூட்டங்களிலும் விவாதமில்லா இடத்திலும் தேவையேயில்லாமல் பாமகவையும் இராமதாசுவையும் அன்புமணியையும் இழுப்பதிலேயே அவரின் காழ்ப்புணர்ச்சி புரிகின்றது, மீண்டும் அதெல்லாம் இல்லை கருத்துக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் என சப்பை கட்டுவார் என்பதும் புரிகின்றது.

//ஜோ நான் சொன்ன கருத்தை மறுத்துவிட்டு, ஓவரா கம்மியா என்று சொல்ல முயற்சி செய்யுங்கள். விரலை பற்றி பேசலாம், அதற்கு முன்னால் சுட்டியதை கொஞ்சமாவது கணக்கில் எடுத்துவிட்டு!//

ரோசாவசந்திற்கு இப்போது இந்த விடயத்தில் எழுந்த ஆதங்கம் தான் தங்கர் விடயத்தில் எனக்கு தொடக்கத்திலேயே எழுந்தது, சுட்டி காட்டியதற்கு நன்றி ஜோ

ஏற்கனவே ஒருவரை விவாதத்திலிருந்து வில(க்)கிவிட்டார், இது ஒரு முடிவில்லா விவாதம் என தெரிகின்றது, இருந்தாலும் சந்திக்க தயாராகவே உள்ளேன்.

ரோசா ஒரு முறை காஞ்சிபிலிம்ஸ் பதிவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு அந்த படம் காஞ்சிபிலிம்ஸ் னால் வரையப்பட்டதல்ல என்றவுடன் வருத்தம் தெரிவித்தார், அந்த நேர்மை நான் தங்கர் பேசியதை கண்டிக்கவேயில்லை என ரோசா பேசியதற்கு சில நாட்களுக்கு முன்பே நான் பின்னூட்டங்களில் கண்டித்திருப்பதை ஆதாரத்துடன் இங்கே எடுத்துவைத்துள்ளேன், இங்கேயும் அதை எதிர்பார்க்கலாமா? எனகு தேவையில்லைதான் இருந்தாலும்...

said...

//ஏற்கனவே தங்கரை ஒரு கருத்திற்காக ஆதரித்ததாலேயே நாய் பட்டம் கொடுத்துவிட்டீர்//

குழலி, அப்படி நான் எதுவும் சொல்லவில்லையே! நான் எழுதியதை கொஞ்சம் மேற்கோள் காட்டி நிருபிக்க முடியுமா?

said...

//ரோசா ஒரு முறை காஞ்சிபிலிம்ஸ் பதிவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு அந்த படம் காஞ்சிபிலிம்ஸ் னால் வரையப்பட்டதல்ல என்றவுடன் வருத்தம் தெரிவித்தார், அந்த நேர்மை நான் தங்கர் பேசியதை கண்டிக்கவேயில்லை என ரோசா பேசியதற்கு சில நாட்களுக்கு முன்பே நான் பின்னூட்டங்களில் கண்டித்திருப்பதை ஆதாரத்துடன் இங்கே எடுத்துவைத்துள்ளேன், இங்கேயும் அதை எதிர்பார்க்கலாமா?//


நீங்கள் சொல்வது முழு உண்மையல்ல. காஞ்சி 'தான் வரையவில்லை' என்று சொன்ன உடனே நான் அவசரமாய் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அதற்கு பிறகு மெய்யப்பனும் மற்றவர்களும் அது காஞ்சி ஃபிலிம்ஸாலேயே manipulate செய்யப்பட்டிருப்பதையும், அது அவரால்தான் வரையப்பட்டுப்பதாகவே கொள்ள வேண்டும் என்றுயம் ஆதாரத்துடன் சுட்டி காட்டினர். அது என் பதிவில் உள்ளது. நான் அதற்காக மன்னிப்பை வாபஸ் வாங்கி காஞ்சியை திரும்பவும் திட்டவில்லை. ஆனால் காஞ்சி ஃப்லிம்ஸ் மீண்டும் வந்து தன் விளக்கத்தை தரவும் இல்லை. தான் சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்கவும் இல்லை. அவருடய நேர்மை அந்த வகைப்பட்டது.


அடுத்து உங்கள் விஷயத்தில் என் கருத்து அப்படியே உள்ளது. என்னால் குமார் புண்பட்டால் அதனால் என்ன வந்தது? அவர் எழுதிய மோசமான பதிவை நீங்கள் கண்டிக்கவில்லை. மாறாக ஆதரவாக குரல் கொடுத்தீர்கள்.

இப்போதும் கேட்கிறேன், குமார் அல்லது (நான் உடபட) யாருடய அம்மாவாக இருந்தாலும், அவர்கள் எந்த வகையில் பாலியல் தொழிலாளர்களை விட புனிதமானவர்கள் என்று விளக்க முடியுமா? அதை விளக்காமல் தொடர்ந்து நான் ஆபாசமாய் பேசியதாக உளருவது போல் ஆபாசம் வேறு உண்டா? நீங்கள்தான் என்னை நாய் என்று குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தீர்கள். மாறாக உங்கள் பதிவில் உண்மையிலேயே ஆபாசமாய் நடிகைகளை பற்றி எழுதிய எவனையும் நீங்கள் கண்டிக்கவில்லை, எச்சரிக்கை செய்யவும் இல்லை. அதைத்தான் நான் சுட்டி காட்டினேன். உங்கள் பதில் வெறும் சால்ஜாப்பாகத்தான் எனக்கு தெரிகிறது. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.அதை முன்வைத்தே (இதற்கு முன்பே உன்மையான வசைகள் வந்து விழுந்த என்னை திட்டிவிட்டு, என் கண்டனத்தால் 'காயப்பட்ட' குமாருக்கு ஆறுதல் சொன்ன போது ஏற்பட்ட அதே சந்தேகத்தைத்தான்) 'சோறு தின்கிறீர்களா' என்று சந்தேகித்தேன். உறுதியாயிற்று.

said...

////ஏற்கனவே தங்கரை ஒரு கருத்திற்காக ஆதரித்ததாலேயே நாய் பட்டம் கொடுத்துவிட்டீர்//

குழலி, அப்படி நான் எதுவும் சொல்லவில்லையே! நான் எழுதியதை கொஞ்சம் மேற்கோள் காட்டி நிருபிக்க முடியுமா?
//
நீங்கள் நேற்று அல்லது இன்று ஒரு பின்னூட்டத்தில் தங்கரை ஆதரிக்கும் நாய் என்ற கருத்தில் பின்னூட்டம் கொடுத்தீர் (என்னை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லையென்றாலும்) அதனால் தான் குறிப்பிட்டேன் இந்த பின்னூட்டங்களை தேடி கண்டுபிடிப்பது சற்று கடினம் தான் இருந்தாலும் தேடித்தருகின்றேன்.

நன்றி

said...

//நீங்கள் நேற்று அல்லது இன்று ஒரு பின்னூட்டத்தில் தங்கரை ஆதரிக்கும் நாய் என்ற கருத்தில் பின்னூட்டம் கொடுத்தீர் //

இல்லை, 'நடிகைகளை விபச்சாரிகள்' என்று சொன்ன நாய்கள்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அப்படி சொல்லாத போது உங்களை குறிக்க வாய்பில்லை. முடிந்தால் மேற்கோள் காட்டுங்கள். அல்லது சொன்னதை திரும்ப பெறுங்கள். (சும்மா வேண்டுகோள், திரும்ப பெறாவிட்டால் அதனால் பிரச்சனையில்லை. இத்தனை பேர் திட்டியிருக்கிறான்கள். ஆபாசமாய் பேசியதாக உளருகிறார்கள். நீங்கள் கூட குமாருக்கு ஆறுதல் சொல்லும்போது திரித்திருக்கிறீர்கள், என்ன எல்லாரிடமும் விளக்கமா கேட்டுகொண்டிருக்கிறேன்?)

said...

//அடுத்து உங்கள் விஷயத்தில் என் கருத்து அப்படியே உள்ளது//
மன்னிக்கவும் என் விடயத்தில் உங்கள் கருத்து மாறினால் நன்று அதே சமயத்தில் மாற வேண்டுமென்ற கட்டாய நிலைப்பாடு எனக்கில்லை, என் மீது தங்கரை கண்டிக்கவேயில்லை என்றும் இப்போது நாடகம் ஆடுகின்றேன் என்றும் நீங்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று நிரூபிக்கத்தான் எழுதினேன்.

//இப்போதும் கேட்கிறேன், குமார் அல்லது (நான் உடபட) யாருடய அம்மாவாக இருந்தாலும், அவர்கள் எந்த வகையில் பாலியல் தொழிலாளர்களை விட புனிதமானவர்கள் என்று விளக்க முடியுமா? //
எந்த இடத்திலாவது நான் இது பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ கருத்து சொல்லியிருக்கின்றேனா என்று சற்று எண்ணிப் பார்த்துவிட்டு பேசவும்

//அதை விளக்காமல் தொடர்ந்து நான் ஆபாசமாய் பேசியதாக உளருவது போல் ஆபாசம் வேறு உண்டா?//
நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்திய விதம் ஆபாசம் என்பதில் இப்போதும் எனக்கு மாற்று கருத்து இல்லை.

//மாறாக உங்கள் பதிவில் உண்மையிலேயே ஆபாசமாய் நடிகைகளை பற்றி எழுதிய எவனையும் நீங்கள் கண்டிக்கவில்லை, எச்சரிக்கை செய்யவும் இல்லை//
ஏற்கனவே நடிகைகளைப்பற்றிய என் நிலையை உணர்த்திவிட்டேன், அவர்களைப்பற்றி தவறாகவோ கேவலமாகவோ நினைக்கவில்லை என்று, பிறகு ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் சென்று எதிர்ப்பு தெரிவிப்பது நேரம் கிடைத்தால் செய்யமுடியும் ஆனால் அதற்கு முன் எனக்கு வரிசையாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துக்கொண்டுள்ளேன்.

// உங்கள் பதில் வெறும் சால்ஜாப்பாகத்தான் எனக்கு தெரிகிறது. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்//

இதே மாதிரியான பதிலைத்தான் நானும் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.

ரோசா நீங்கள் வைத்த பல குற்றச்சாட்டுகளுக்கு அதிலும் முக்கியமாக தங்கரை கண்டிக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டிற்கான பதில்களை சொல்லி உண்மையை வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இனிமேலும் இதையே மீண்டும் மீண்டும் பேசுவது ஈகோவை திருப்தி படுத்திக்கொள்ள மட்டுமே இருக்கும். உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று இருக்காது.

காஞ்சிபிலிம்ஸ் விடயத்தில் தவறான புரிதலுக்கு (அந்த பதிவில் இருக்கும் விடயங்களை அப்படியே பார்த்தால் நான் புரிந்து கொண்டதில் தவறில்லை) மன்னிக்கவும்.

said...

//'சோறு தின்கிறீர்களா' என்று சந்தேகித்தேன். உறுதியாயிற்று.
//
அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

said...

//ரோசா நீங்கள் வைத்த பல குற்றச்சாட்டுகளுக்கு அதிலும் முக்கியமாக தங்கரை கண்டிக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டிற்கான பதில்களை சொல்லி உண்மையை வெட்ட வெளிச்சமாகிவிட்டது.//

நான் தங்கரை ஒப்புக்காக கண்டித்தார் என்று சொல்லத்தான் செய்திருக்கிறேன்.

"இவர் எங்காவது நடிகைகளை கேவலமாய் பேசிய குமாரை ஒரு வார்த்தையாலாவது ஒப்புக்காவது கண்டித்தாரா? ...

...சும்மா வெற்று வார்த்தையாய் 'தப்பு' என்று ஒப்புக்கு சொன்னவர், எம்.கே.குமாரின் பதிவில் அத்தனை முறை அத்தனை அற்பபுழுக்கள் மீண்டும் மீண்டும் சொன்னபோது எங்காவது கண்டித்தாரா? ஏன் அவருடய பதிவிலேயே எழுதியதை கண்டித்தாரா? ....

..இவர் எங்காவது நடிகைகளை கேவலமாய் பேசிய குமாரை ஒரு வார்த்தையாலாவது ஒப்புக்காவது கண்டித்தாரா? ..

...தன் பதிவில் 'கெட்ட வார்த்தை எழுதினால் திருப்பி தாக்குவேன்' என்று எச்சரிக்கை விட்டவர் அதை எனக்கு மட்டும்தானே பொருத்தினாரே தவிர, எங்காவது அவர் பதிவிலேயே நடிகைகளை பற்றி கேவலமாக வந்த பின்னூட்டம் பற்றி பேசியுள்ளாரா? அதற்கு ஏதாவது முனகலாவது வெளிப்பட்டதா? ...

...என்னை பற்றி என் பிறப்பை, மனைவியை பற்றி பின்னூட்டங்கள் வந்துள்ளது. அந்த குமாரே பதிலுக்கு என்னை பற்றி அப்படி எழுதியுள்ளார். (நான் யாரையும் அப்படி பேசவில்லை). அதற்கு பின் குமாருக்கு இவர் எழுதிய ஆறுதல் மொழியை படியுங்கள்...."

இவைதான் நான் சொன்னது. இதில் எதையும் பொய் என நிருபிக்கப் படவில்லை. வந்த பதில் அத்தனையும் சால்ஜாப்புதான். இத்துடன் விடைபெறுகிறேன்

said...

//நான் தங்கரை ஒப்புக்காக கண்டித்தார் என்று சொல்லத்தான் செய்திருக்கிறேன்.
//
இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கும் முன்பே ஆகஸ்ட் 20ம் தேதியிலேயே கண்டித்திருக்கின்றேன், நீங்கள் என்னமோ இப்போது தான் கண்டிப்பதாக நாடகம் ஆடுவது போல கூறினீர், அதே சமயம் என்னால் பொது இடத்தில் கண்ணியக்குறைவாக கண்டிக்க முடியாது என கூறிவிட்டேன், அதையே மீண்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

//அதற்கு பின் குமாருக்கு இவர் எழுதிய ஆறுதல் மொழியை படியுங்கள்...."
//

//எது வேண்டுமானாலும் உளறலாம் அதையும் காட்டமாக உளறுவது தான் தன் பாணி என்று ஏதோ உருவகப்படுத்திக்கொண்டு எதையும் எதையும் உதாரணப்படுத்த வேண்டுமென்று கொஞ்சம் கூட இல்லாமல் கண்ட மேனிக்கு பேசும் அன்பர்களின் பேச்சுக்கெல்லாம் செவிசாய்க்க ஆரம்பித்தால் நீங்கள் தான் புண்படுவீர்கள் குமார்.
//
இது தான் நான் குமாருக்கு இட்ட ஆறுதல் மொழி இதில் என்ன தவறு கண்டீர்??

//பின்னூட்டம் பற்றி பேசியுள்ளாரா? அதற்கு ஏதாவது முனகலாவது வெளிப்பட்டதா? ...
//
முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன், அது உங்களுக்கு சப்பைகட்டாக தெரிந்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது

//வந்த பதில் அத்தனையும் சால்ஜாப்புதான்.//
இதைத்தவிர உங்களிடமி வேறு என்ன வரும் என நான் எதிர்பார்க்கமுடியும்.

// இத்துடன் விடைபெறுகிறேன்.//
நீங்கள் இப்படி சொல்லியும் நான் பதில் மொழி எழுதுவது தவறுதான், ஆனால் நீங்கள் கூறியதில் எனக்கு மறுப்பு இருக்கும் சமயத்தில் இது எனக்கு தேவைப்படுகின்றது.

வேறொரு இடத்திலாவது நல்ல சூழ்நிலையில் சந்திப்போம்.

said...

http://rozavasanth.blogspot.com/2005/09/blog-post_03.html
வில் நான் இட்ட பின்னூட்டம்,

இதற்கெல்லாம் பதிலெழுத வேண்டுமா என்று யோசித்தேன், சரி வாழ்வில் எத்தனையோ நிமிடங்களை வீணடிக்கின்றோம், சரி இப்படி சில நிமிடங்களை வீணடித்தால் பரவாயில்லை யாருடைய ஈகோவாவது திருப்தியாகுமே என்று தான் எழுதுகின்றேன்.

எனக்கும் என் தரப்பு கருத்துகளை வைப்பதற்கு அலுப்பாகத்தான் உள்ளது, என்ன செய்ய 2 தடவை சொல்லியும் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிந்து கொள்ளாத மாதிரி நடிப்பவர்களிடம் 50 தடவை சொன்னாலும் அது வீண் வேலை என்பது நன்றாக தெரிகின்றது. எனவே http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_30.html இங்கே இந்த பதிவரின் பின்னூட்டத்தையும் அதற்கு என் பதில்களையும் பார்த்துவிட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

//(குழலிக்கு தங்கரை முன்வைத்து எழுத வெளிகுத்து அரசியலும் இருக்கலாம்). //
இதே வெளிக்குத்து அரசியல் தான் திருமாவிற்கும் உள்ளதோ!,

நேரடியாக சொல்லவா நான் தங்கரை வன்னியர் என்பதால் ஆதரித்தேன் என கூசாமல் சொன்னீரே, திருமாவும் தங்கரும் பிறப்பால் ஒரே சாதியா?

//குழலி நேரடியாய் சொல்லாவிட்டாலும், மௌனத்தின் மூலம், குமாரை ஆதரிப்பதன் மூலம், என்னை திட்டுவதன் மூலம் ஆமோதித்தார்//

ரோசாவசந்தின் பெயர் வாதத்திற்கு பெயர் போனவர் என வலைப்பதிவு,தமிழ்மணம் என்ற ஒரு உலகம் இருக்கின்றது எனக்கு சில மாதங்களுக்கு முன் தெரிவதற்கு முன் திண்ணை மூலமும் மற்ற சில இணையபக்கங்களிலும் கேள்விப்பட்டிருந்தேன், அடேங்கப்பா என்ன வாதம் என்ன வாதம், அது வாதம் அல்ல வேறமாதிரியான வாதம் என்பது இப்போது புரிகின்றது.

//இது போன்ற தளங்கள் சாத்தியமாகாத வேறு வெளியில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது//
கடந்த இரண்டு நாட்களில் எனக்கு கிடைத்த அனுபவம் இது, இந்த பதிவு இதை மேலும் உறுதிசெய்கின்றது.

//ஆனால், தங்கரைக் கண்டித்தவர்களின் பதிவுகளைப் போய்ப் பழையதுகளைப் பார்த்தால், அவர்களுக்குத் தங்கரைக் கண்டிக்க, அவரின் இந்த நடிகைகள் பற்றிய கூற்றுமட்டும் காரணமாக இருக்காததென எனக்குத் தோன்றியது. //
எனக்கும் இதே தான் தோன்றியது.

உண்கின்ற உணவில் பிரச்சினையில்லாமல் வயிற்றில் பிரச்சினையிருந்தாலும் வாயுத்தொல்லை இருக்கும் அதற்கு காரணம் உள்ளே போன சரக்கு அல்ல, வயிற்றில் உள்ள பிரச்சினை, வயிற்றில் உள்ள பிரச்சினை தீரும் வரை அமிழ்தமே வயிற்றுக்குள் போனாலும் வாயுத்தொல்லை இருக்கும்.