குயில் கூவுவது ஏன்?

குயில் கூவுவதும் மயில் ஆடுவதும் ஏன்? குயில் ஆடியன்சை எதிர்பார்த்து கூவவில்லையாம், மயிலும் ஆடியன்சை எதிர்பார்த்து ஆடவில்லையாம் ஆகா வந்துட்டாருடா ஞானம்! அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்கோ! அது சரி அதைத்தான் கண்ணதாசன் சொல்லிட்டாரே நீ என்ன சொல்ற அதை சொல்லுபா!

குயில் கூவுதுனா அது இன்னொரு குயிலுக்கு சிக்னல் கொடுக்குதுனு அர்த்தம், அது ஆடியன்ஸ்காக கூவலை, அதே மாதிரி மயில் ஆடுதுனா அது இன்னொரு மயில்க்கு சிக்னல் கொடுக்குதுனு அர்த்தம்.

பல்லி உச் உச்னு சத்தம் கொடுக்குதுனா அது இன்னொரு பல்லிக்கு சிக்னல் கொடுக்குதுனு அர்த்தம், அதை கேட்டுக்கிட்டு வடக்கில் சூலம் தெற்கில் மூலம்னு போகாம இருக்க கூடாதுனு நம்ம சனங்களின் கலைஞன் விவேக் கருத்து சொல்லியிருக்கார்.

சிங்கம் உறுமினால் இன்னொரு சிங்கத்துக்கு சிக்னல் கொடுக்கறதா அர்த்தமில்லை, அது எல்லை பிரச்சினையாகவும் இருக்கலாம்.

சில விஷயம் நமக்கு சரின்னு பட்டாலும், சில சமயத்துல, அந்தச் சரிய, செய்யாம இருக்கறதுதான் சரி...

இது சரியாத்தானே இருக்கு

சில விஷயம் நமக்கு தப்புன்னு பட்டாலும், எல்லா சமயத்துல, அந்த தப்ப, செய்யாம இருக்கறது தப்பு இல்லை.

அட இதுவும் சரியாத்தானே இருக்கு

இங்கே குயிலும் மயிலும் பல்லியும் சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது வான்கோழி இன்டர்நேஷனலுக்கு போயிடுச்சிபா, ஆகஸ்ட்டு 15 னா இந்தியா சுதந்திரம் தினம், ஆகஸ்ட்டு 15 னா கொரிய சுதந்திரதினம் ஆனால் தமிழ் சினிமா ரசிகன் மட்டும் சற்று அதிகமாக சந்தோசப் படும் நாள் ஏன் என்றா கேட்கின்றீர்? என்ன மனுசன்யா நீ, இது கூட தெரியாத நீ தமிழனா? இங்கே செல்லுங்கள். தேவுடா தேவுடா

ஆயாளு எந்தா பரயுனு? கொறச்சி அட்வைஸ் பரஞ்சி, நன்னாயிட்டு பறயும் நன்னாயிட்டு பறயும். ஈயாலு எங்கன போயி, ஈயாலுக்கு புட்டியில புல்லா இருந்தாலும் காய்ச்சி குடிச்சா தான் நெறைக்கும், அட நான் சொல்றேன் அவர் காய்ச்சி குடிச்சது கஞ்சிதான் (தெனாலி கமல் வாய்ஸ்ல படிக்கவும்).

குயிலுக்கும் மயிலுக்கும் பல்லிக்கும் தான் சிக்னல் கெதியா ரீச் ஆகலைனு கோபம்னா இங்கே என்னடானு பார்த்தா குரங்குக்கும் கோபமாம். என்னனு குரங்குகிட்ட கேட்டா

நா என்ன பெர்சா தப்பு பண்ணிட்டேன்... அவன் செஞ்சதுதான் தப்பு, அதுக்கு நா பதில் செஞ்சேன் அவ்ளோதான்...

அவந்தான் தப்பு செஞ்சான்... நீ திரும்ப அதுக்கு பதில் செஞ்சே... ஒனக்கு அது சரி... அவனுக்கு நீ செஞ்சது தப்பா தோணுது...

அவன் ஆட்டத்த என்கிட்ட காட்ட வேணாம்... காட்டினா... நாங் காட்றத தாங்கமாட்டான்... பணம்... எல்லாம் பணத்திமிரு...

அடங்கொக்காமக்க மனுசனுங்களுக்குத்தான் பணம்னா குரங்குக்குமா?

சரி விடு குரங்காரேனு ஒரு இலவச அட்வைஸ் கொடுத்தேன்

சில விஷயம் நமக்கு சரின்னு பட்டாலும், சில சமயத்துல, அந்தச் சரிய, செய்யாம இருக்கறதுதான் சரி...

இது சரியாத்தானே இருக்கு

சில விஷயம் நமக்கு தப்புன்னு பட்டாலும், எல்லா சமயத்துல, அந்த தப்ப, செய்யாம இருக்கறது தப்பு இல்லை.

அட இதுவும் சரியாத்தானே இருக்கு

சரி இது சரிபட்டு வராதுனு வலைப்பதிவில ஒதுங்கிலாமேனு இங்க வந்து பார்த்தா

என் முகத்தினிலே பளபளப்பாய்
இருப்பவனும் நீதான்...
எண்ணமெல்லாம் எழுதி இங்கே
பதிப்பவனும் நீதான்...

என் பதிவை பாதி மட்டும்
படித்துவிட்டு...
பின்னூட்டத்தில் திட்டிவிட்டு...
நெகட்டிவ் குத்துவிட்டு ஓடுபவனும்
நீதான் !

ஒரு மண்ணும் புரியலை, என்னமோ நடக்குது மர்மமா இருக்குதுனு எதுனா ஓலப்பாயில் ஒன்னுக்கு போற மாதிரி கேட்டா குயில் கூவறது ஆடியன்ஸ்க்கு இல்லை, மயில் ஆடுறதும் ஆடியன்ஸ்க்கு இல்லைனு ஒரு ஒலக மகா தத்துவம் வரும், அதனால இப்போதைக்கு அப்பீட்டேய்......

21 பின்னூட்டங்கள்:

said...

முகமூடி சின்னவனிடம் பதிவெதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதால் நானே களத்தில் இறங்கி ஒரு பதிவு போட்டிருக்கின்றேன்.

தொடர்புள்ள அத்தனை தலைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன், சும்மா தமாசுக்காகதான் எழுதினேன். இதில் எந்த உள் அர்த்தமோ உள்குத்தோ எதுவுமே இல்லை. இது 100% தமாசு பதிவு.

ஹி ஹி சுத்தமா சரக்கு தீர்ந்துபோயிடுச்சி தல.

said...

ஒரு பதிவு போட்டாலும் சூப்பர் பதிவா போட்டு இருக்கீங்க..
ஒரே பதிவுல இவ்வளவு பேரா ?
அண்ணாச்சி.. நீங்க எங்க்யோ போயிட்டீங்க..
( ஆமா அப்படி என்னத்தான் அங்க பின்னூட்டம் போட்டு அழிச்சீங்க..
அதுக்குள்ள உங்களுக்கும் எனக்கும் சண்டைன்னு
கீ போர்ட் ல விரல போட்டு சில நாரதர்கள் பேசிக்கொண்டு இருக்காங்க ? )

said...

நான் ஏற்கெனவே சொன்னதுபோல், Blog-ல் நாரதர்கள் பெருகி விட்டார்கள்;

நாராயண நாமம் போற்றி, போற்றி!
எல்லாப் புகழும் நாராயணனுக்கே!!

கொல்பவனும் நானே; கொலை செய்யப்படுபவனும் நானே!

பதிவு எழுதுபவனும் நானே; அதில் பின்னூட்டம் இடுபவனும் நானே!!

எதை எழுதிநாயோ அது நன்றாகவே எழுதியிருக்கிறாய்!

எது எழுதப்படுமோ அது நன்றாகவே எழுதப்படும்!!

பரித்ராநாய சாதூனா!!

எங்கிருந்தோ வந்தான்;
இடைச்சாதி நான் என்றான்; இங்கிவனைப் பெற்றதற்கே என்ன தவம் செய்துவிட்டேன் - கண்னன்...
எங்கிருந்தோ வந்தான்...

said...

குழலியே கோபமா?
எழுத கை துடிக்கிறது..

said...

//என் பதிவை பாதி மட்டும் படித்துவிட்டு...
பின்னூட்டத்தில் திட்டிவிட்டு...
நெகட்டிவ் குத்துவிட்டு ஓடுபவனும் நீதான் !//

குழலி, மேற்கண்ட வரிகள் உம்மைக் குறிவைத்துதான் கேட்கப்பட்டுள்ளன என்று உமக்குத் தெரிந்தும் நீர் இன்னும் பொறுமையாய் இருப்பது ஏனோ?

பொங்கி எழ வேண்டாமா?!!!?

said...

//குழலியே கோபமா?
எழுத கை துடிக்கிறது..//

துடிக்கும் கரங்களை
கட்டுப்படுத்த வேண்டாம்
அணை போடத்தான்
நீர் தேங்கும்
நீர் தேங்கினால்

அணை கசியும்
அணை கசிந்தால்

விரிசல் விழும்
விரிசல் விழுந்தால்

அணை உடையும்
அணை உடைந்தால்

ஊர் அழியும்
ஊர் அழிந்தால்
எல்லாம் அழியும்

துடிக்கும் கரங்களை
விடுதலை செய்

சும்மா எழுதுங்க தல, எதுக்கு கோபம் வரவேண்டும். நான் தான் சொன்னேனே சும்மா தமாசுக்கு தான் இப்படி எழுதினேன், ஏற்கனவே இந்த மாதிரி எழுத வேண்டுமென ஒரு ஆசை.

said...

////என் பதிவை பாதி மட்டும் படித்துவிட்டு...
பின்னூட்டத்தில் திட்டிவிட்டு...
நெகட்டிவ் குத்துவிட்டு ஓடுபவனும் நீதான் !//

குழலி, மேற்கண்ட வரிகள் உம்மைக் குறிவைத்துதான் கேட்கப்பட்டுள்ளன என்று உமக்குத் தெரிந்தும் நீர் இன்னும் பொறுமையாய் இருப்பது ஏனோ?

பொங்கி எழ வேண்டாமா?!!!?
//

நாராயணா நாராயணா!!! உம் வேலை முடிந்ததா? ஹி ஹி வேறு இடம் பார்க்கவும்.

said...

அண்ணாச்சிகளா . சும்மா தமாஷ¤க்குத்தான். பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. எடுத்து விடுகிறேன். .

said...

மொதல்ல என்ன நடக்குதுன்னு தெளிவா யாராவது ஒரு கோனார் நோட்ஸ் போடுங்கப்பா...

யார் யார திட்டறாங்க... யார் எதுக்கு கோப படறாங்க.. யாருக்கு யார் மேல கோவம்... திடீர்னு பல்லியில ஆரம்பிச்சி சிங்கம் வரைக்கும் எதுக்கு பிக்சர்ல வருது... யாராவது வெளக்குங்கப்போ...

said...

// நாராயணா நாராயணா!!! உம் வேலை முடிந்ததா? ஹி ஹி வேறு இடம் பார்க்கவும். //

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... நாரதருக்கும் சனி பகவானுக்கும் வித்தியாசம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதென்று... இப்போது வேறு இடம் பார்க்க சொல்லிவிட்டார்கள்.. இனி என்ன செய்வார் அவர்... பொருத்திருந்து பார்ப்போம்

said...

நாராயாணன் இருக்குமிடம் எதுவோ, அதுவே நாரதன் இருக்குமிடம்!!

வேறெங்கும் நாரதன் நிரந்தரமாகத் தங்குவதில்லை; நாரதன் ஒரு தெளிந்த நீரோடை போல; எப்போதும் சலசலவென்று ஓடிக்கொண்டே இருப்பவன்;

சனியே,
நீர் தேங்கினால் என்ன ஆகும் என்று மேலே குழலியே புட்டு, இடியாப்பம் வைத்துவிட்டார்!! :-)))

said...

யோவ் குழலி, போய் தூங்கற வேலையப் பாரும் ஓய்!!

said...

//நீர் தேங்கினால் என்ன ஆகும் என்று மேலே குழலியே புட்டு, இடியாப்பம் வைத்துவிட்டார்!! :-)))
//

அய்யா ஞானபீடம் நீர் சாதாரண ஆளில்லையப்பா.... நீர் எங்கேயோ இருக்க வேண்டியவர், பிரிட்டனும் அமெரிக்காவும் ரொம்பத்தான் இழையறாங்க அங்க கொஞ்சம் உம்ம வேலையை காண்பிப்பது...

said...

//யோவ் குழலி, போய் தூங்கற வேலையப் பாரும் ஓய்!! //
இன்னும் 5 நிமிடம் தான் தல, கிளம்பிட்டேன்.

said...

நன்றி குழலி,
எல்லாப்புகழும் நாராயணனுக்கே!!

said...

குழலியே கோபமா ? படியுங்கள்.

said...

//மொதல்ல என்ன நடக்குதுன்னு தெளிவா யாராவது ஒரு கோனார் நோட்ஸ் போடுங்கப்பா...

யார் யார திட்டறாங்க... யார் எதுக்கு கோப படறாங்க.. யாருக்கு யார் மேல கோவம்... திடீர்னு பல்லியில ஆரம்பிச்சி சிங்கம் வரைக்கும் எதுக்கு பிக்சர்ல வருது... யாராவது வெளக்குங்கப்போ...//

சும்மா தமாசு அது சரி முகமூடி-67 இல் நீங்க 67னு சொன்னது உங்க வயசு தானே, மறைக்காம சொல்லுங்கோ

said...

குழலி உங்க தமாசு நல்லாத் தான் இருக்கு. புரியாம நாம எழுதுனா, நமக்குப் புரியாததும் நிறைய எழுதப் படும்னு புரிஞ்சிக்க வேண்டியது தான். :-)

said...

//புரியாம நாம எழுதுனா, நமக்குப் புரியாததும் நிறைய எழுதப் படும்னு புரிஞ்சிக்க வேண்டியது தான். :-)//
ஹா ஹா உண்மை உண்மை

said...

எனக்கு ஒன்னும் புரியல..என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது !

said...

//எனக்கு ஒன்னும் புரியல..என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது ! //
http://njanapidam.blogspot.com/2005/08/blog-post_19.html#c112437128938941942 அந்த சுட்டிக்கு போய் பாருங்கள் ஏதாவது புரிகின்றதா?

//சூடோ செக்கூலரிஸ்டுகளுக்கு ஜிகிடி எழுப்பும் கேள்வி//
ஜிகிடி உம்ம சேட்டை தாங்கமுடியலை