தங்கர்பச்சானும் உள்குத்து அரசியலும்

முன்குறிப்பு
இங்கே தங்கர்பச்சான் பேசியது சரியா? தவறா? என்ற கோணத்தில் இந்த பதிவு எழுதப்படவில்லை, ஆனால் தங்கர் பச்சானின் பேச்சுக்கு புரியப்பட்ட அதிக பட்ச எதிர்வினையில் உள்ள உள்குத்து அரசியல் தொடர்பானது

தங்கர்பச்சானின் பேச்சிற்கு அளவுக்கு மீறிய எதிர்ப்பு நடிகர்களாலும் நடிகைகளாலும் காட்டப்படதற்கு உள்ளே சில அரசியல் காரணங்கள்.

1. தங்கர் பச்சான் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர், திருமாவின், இராமதாசுவின் நடிகர்களின் மீதான விமர்சனங்களை தாங்கமுடியாமல் இந்த அரசியல் பாறைகளின் மீது மோதி ரஜினி போன்ற தலைகளுக்கே மண்டை உடைந்தது தான் மிச்சமானது , நடிகர்கள் அங்கே பட்ட காயம், ஈகோவிற்கு வசமாக மாட்டினார் தங்கர், யாரிடமோ பட்ட காயத்திற்கான ஈகோவை இவரை போட்டு தாக்குவதினால் தீர்த்துக்கொள்கின்றனர்.

2.இயக்குனர் சீமானும் கவிஞர் அறிவுமதியும், இயக்குனர் சேரனும் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர்கள், இவர்கள் அத்தனை பேருமே நடிகர்களுக்கு முதுகு சொறிந்து விட்டுக்கொண்டு திரையுலகில் பிழைப்பை ஓட்டுபவர்கள் அல்ல, திறமைசாலிகள் அதே சமயம் முதுகெலும்பு உள்ளவர்கள் எந்த நடிகனுக்கும் முதுகு சொறிந்து கொண்டும் கூஜா தூக்கியும் கலைவாழ்க்கையை நடத்துபவர்கள் அதே சமயம் அதிரடியாக பேசுபவர்கள், அடிக்கடி நடிகர்களின் உண்மையான முகத்தை கிழித்து காட்டியவர்கள், எனவே தங்கரை தட்டுவதன் மூலம் இவர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

3. சமீபத்தில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மாத்திரை தின்றதற்கு கமல்,விஜயகாந்த் மேலெல்லாம் கைகாட்டப்பட்டு பின் உடல் நலம் தேறி வந்தவுடன் என்ன நடந்தது என சொல்கிறேன் என புறப்பட்ட காஜா மொய்தீன் மடக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் வைத்து படம் எடுத்த அஜீத்தை பலிகடாவாக்கினார், ஆனாலும் இதில் பெருந்தலைகள் கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டனர், அதிலும் கட்சி ஆரம்பித்து தமிழர்களை காப்பாற்றப்போகும் கேப்டன் நிறையவே கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டார்

4.திரைத்துறை என்றாலே நடிகர்கள் என்றிருந்த நடிகர்களின் ஆதிக்கத்தை உடைத்தெரிந்து தயாரிப்பாளர்களின் கை ஓங்க ஆரம்பித்தது சமீப காலங்களில், தாணு விடயத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டதும், மாதவன் மன்னிப்பு கேட்டதும், ஜோதிகாவிலிருந்து பலருக்கும் ரெட் கார்டு போடப்பட்டதுமென தயாரிப்பாளர்களின் கை ஓங்கியது, அதிலும் கடைசியாக விஜயகாந்த்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு 3 நாள் கெடுவும் வைக்கப்பட்டது, தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்தை எதிர்த்து பத்திரிக்கையில் பேச இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேட்டி கொடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும் தங்கர் மாட்டினார், தயாரிப்பாளர்களுக்கு திரைத்துறை என்றாலே நடிகர்களின் ஆதிக்கம் மட்டுமே என்று காண்பிக்கவும் நடிகர்களின் வண்டவாளங்களை வெளியில் சொன்னால் என்ன ஆகும் என தயாரிப்பாளர்களை மிரட்டவும் தங்கர் பயன்பட்டார்.

5.திறமை இருக்கும் அதே சமயத்தில் வாயும் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் பயப்படாமல் முதுகு சொறிந்துவிடாமல் வெற்றிகளை கண்டிருக்கும் மனிதர்களின் மீது பொறாமை ஏற்படுவது இயல்பு, அதுவும் திரைத்துறையில் நடிகர்களுக்கு முதுகு சொறியாமல் எந்த பின்புலங்களும் இல்லாமல் ஒரு திறமைசாலி வெற்றி பெற்றால் அது கடும் பொறாமை தீயை ஏற்றிவிடும், அப்படி பட்ட இயக்குனர் தான் தங்கர், அவர் வாய்கொழுப்பு அவர் மீதிருந்த வன்மத்தை காட்ட சரியான தருணமாக அமைந்துவிட்டது.

6."நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்"

இது தங்கருக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கை, படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகர்கள் அவர்களை யாரும் விமர்சித்தால் வேலை நிறுத்தம் தானாம்! நடிகர்/நடிகைகளுக்கு வேலை நிறுத்தத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் திரைத்துறையை நம்பியிருக்கும் குடும்பங்கள்?!

7.தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனர்.
ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் ஏழு மாங்காய்கள் அடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாங்காய்கள் என்பது போகப்போகத் தெரியும்

எச்சரிக்கை அல்லது வேண்டுகோள்

இங்கே பதிவில் வந்து எவனாவது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினால் நானும் தமிழன் தான் எனக்கும் தமிழில் உள்ள அத்தனை தரக்குறைவான வார்த்தைகளும் தெரியும் நாய் மனிதனை கடிப்பது அதன் இயல்பு என்று சொல்லி அந்த தரக்குறைவு பேர்வழிகளை நாய்களோடு ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்த விரும்பவில்லை, தரக்குறைவு பின்னூட்டங்கள் அழிக்கப்படும், அதுவும் ஒரு அளவு வரை தான்.

16 பின்னூட்டங்கள்:

said...

குழலி !! நல்லா அலசியிருக்கீங்க..... சரி தங்கர் பேசினது தப்பே இல்லைன்னு சொல்றீங்களா...?

said...

//சரி தங்கர் பேசினது தப்பே இல்லைன்னு சொல்றீங்களா...?//

தங்கர் அத்தனை கடுமையாக விமர்சித்தது தவறானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் செய்யப்படும் எதிர்வினைகள் எத்தனை தூரம் உண்மையாக அந்த பேச்சிற்காக செய்யப்பட்டதா அல்லது இன்ன பிற காரணங்களுக்காகவா என்பதில் தான் உள்குத்தே உள்ளது.

மேலும் தங்கரின் கடுமையான வார்த்தைகளை எடுத்துவிட்டு பாருங்கள் நடிகர்/நடிகைகளின் அட்டகாசங்கள் புரியும்

நன்றி

said...

சரியாக சொல்லியிருக்கிறீர்கள் குழலி .. ஒவ்வொருவரின் அரசியலுக்கும் மாட்டிக்கொண்ட கேணையனாகி விட்டார் தங்கர் .

'உன் அம்மாவிடம் சொல்லு' இது நடிகை குஷ்பு சொன்னது ..இதற்காக எல்லா தாய்க்குலங்களிடம் மன்னிப்பு கேட்பாரா?

பாலியல் தொழிலாளிகளை கேவலமாக சித்தரித்தற்காக தங்கர் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டியது அவர்களிடம்தான் ..

said...

அடேயப்பா....

அதெப்படிங்க... உங்களால மட்டும் அவ்வளவு பொறுமையா பதில் சொல்ல முடியுது. மிக அருமையான அலசல். வாழ்த்துக்கள்.

said...

குழலி,

இருவரின் மீதும் தப்பு உள்ளது. தங்கரும் சற்று அதிகமாகத்தான் போய்விட்டார்,
நடிக / நடிகர்களும் தங்களின் கறைகளை மறைத்துக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார்கள்..

ஆக்ரோஷமாக பேசிய சில நடிகைகளிடம் ஒரு சில கேள்விகள் (அனைவருக்கும் தெரிந்ததே) கேட்டால் மெளனமாகி விடுவார்கள், அதே போல தங்கரிடம் சில கேள்விகள் கேட்டால் அவரும் பதில் சொல்ல முடியாது..

பேசியதற்கு அனைவரின் முன்பாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டார் என்ற அளவில் இதை விடுவது நல்லது..

இதுவே தங்கர் மேட்டர் பற்றிய கடைசி பதிவாக இருந்தால் நலம்..
விவாதிக்க இதை விட நல்ல விஷயங்கள் உள்ளது

said...

குழலி
உங்கள் பதிவு அருமை. ஆனால் தங்கர் கொஞ்சம் வாய் கொழுப்பு ஜாஸ்தி.
திரைப் படம் மூலம் சம்பாரித்து அதன் மூலம் புகழ் பெற்றுவிட்டு அந்த
துறையை குறை சொல்ல கூடாது அல்லாவா? நடிகைகளை தரக் குறைவாக
பேசியது குற்றம் அல்லாவா? "உள் குத்து இருக்கலாம்" என்று நானும் நம்புகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

said...

Thangar is a orignal TAMILTHIRAVIDAN but he don't say like that words but again i say he is one of the original THAMILAN in Tamilnadu*****

from KIng of Tamileelam

said...

தங்கர் தான் அப்படிப் பேசவில்லையென்பது நிரூபிக்கப்படும்வரை, தங்கருக்கு ஆதரவாக எதையும் எழுதவோ வாதிடவோ நான் தயாரில்லை. தங்கர் செய்தது 'மாபெரும்' தவறுதான். இதை மற்றவர்களுடன் ஒப்பிட்டு அந்தத் தவறைச் சிறுமைப்படுத்த நான் தயாரில்லை.
தங்கருக்கு ஆதரவாக உங்கள் முதலாவது பதிவு எழுதியிருக்க(க் கூடாது என்று நான் சொல்ல முடியாது)த் தேவையில்லை.

மற்றும்படி இதில் பலர் குளிர்காய்ந்தார்களென்பது உண்மை. தங்கருக்கு இது ஒரு பாடம். முதலில் நாவை அடக்கப்பழக வேண்டும். மற்றவரின் குறைகளைச் சொல்வதை அடக்குவது பற்றி நான் சொல்லவில்லை. வெறும் சவடால் மட்டுமே விட்டுக்கொண்டிருக்கும் அவர் உருப்படியாக ஏதாவது செய்துமுடிக்கட்டும்.

'ஒன்பது ரூவா' நோட்டு நாவலை இந்தா படமாக்குகிறேனென்று விழாவும் நடத்தியாகிவிட்டது. தயாரிப்பாளரின் காசில் சிலதைத் தின்றதுதான் மிச்சம். தங்கர் போக வேண்டியதும் செய்து காட்டவேண்டிதும் நிறைய இருக்கிறது.

said...

ஜி.வி.யின் மறைவுக்குப் பின் தயாரிப்பாளர்கள் மீது ஒரு பரிதாப (அலை) இருந்தது.
ஓவராக உளறிக் கொட்டி தங்களுடைய பக்க நியாயம் கேட்காமலே போகும்படி
செய்துவிட்டார்.

இதில் அரசியல் உள்ளதோ என்னவோ, இவருடைய பேட்டியை
படிக்கும்போதே மனிதர் நன்றாக அவஸ்தைப்படப் போகிறார் என்று நினைத்தேன்.
முன்பொருமுறை கங்கைஅமரனின் தூண்டுதலால் இதே போல் நடிகைகள் அனைவரும்
கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக கொடி பிடித்தார்கள்.

said...

"அரசியல்வாதிகள் எல்லாம் திருடர்கள்" என்று அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத சாமான்யன் சொன்னால் அரசியல் வாதிகள் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை .அதே நேரம் அதே அரசியல் வாதிகளை நம்பி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அடிபொடியோ அல்லது ஆதாயம் பெற்றுக்கொள்ளும் காண்ட்ராக்டரோ சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

எத்தனையோ திரைப்படங்களில் "அரசியல்வாதிகள் எல்லோரும் திருடர்கள்.அயோக்கியர்கள்" என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள் நடிகர்கள் .அதற்காக நல்லக்கண்ணு மாதிரி நல்ல மனிதர்கள் கொடிபிடிப்பதில்லை .இங்கு பிரச்சனையே வேறு .

"நடிகைகள் விபச்சாரிகள் " என்பது பரவலாக மக்கள் கொண்டுள்ள கருத்து தான் .அது தவறாகவும் இருக்கலாம் .ஆனால் அதே நடிகைகளை நம்பி பொழப்பு நடத்தும் தங்கர் சொன்னால் மன்னிப்பு கேட்பதுதான் நியாயம் .வாயை கொடுத்து விட்டார் .இனிமேல் மன்னிப்பு கேட்காமல் பொழப்பு ஓடாது என்பதால் மன்னிப்பும் கேட்டுவிட்டார் .பிரச்சனை அதோடு முடிந்தது .

தங்கர் சொன்னது தவறு தான் .அதற்காக அவர் மன்னிப்பு கேட்டது(வேறு வழியில்லை என்பதால் கேட்டதாக இருப்பினும்) வரவேற்கப்படவேண்டியது.இனிமேலாவது வாயை கட்டுப்படுத்திக்கொண்டு நல்ல திரைப்படங்கள் கொடுத்து சம்பாதிக்கும் நல்ல பெயரை குலைக்காமல் இருப்பாராக.

எதையுமே பொது இடத்தில் பேசினால் தான் பொறுப்பேற்கவேண்டியிருக்கிறது .விஜயகாந்த் ,வடிவேலு போன்றவர்கள் இந்த விஷயங்களில் எவ்வளவு யோக்கியர்கள் என்பது நாடறிந்த விஷயம் ..ஆனால் அதிகாரபூர்வமாக நல்ல பிள்ளைகளாக நடித்து நல்ல பெயர் வாங்கிவிடுவார்கள் .தங்கரும் அது போல இருந்தால் பிரச்சனை இல்லை .

இதை ஒரு சாக்காக வைத்து தங்கரின் திறமையை மறுப்போமேயானால் அது அபத்தம் .அழகி ,சொல்ல மறந்த கதை போன்றவை 'குருவி குடஞ்ச கொய்யா பழம்'-மையெல்லாம் தாண்டி தமிழில் வந்த உருப்படியான படங்களில் இடம் பெறுகின்றன .

said...

தொடர்ந்து முகமூடியும் மற்ற சிலரும் விஷமத்தனமாக எனது பதிவுகளை திரிக்கும் வேலையை செய்வதை மிக்கடுமையாக எதிர்க்கின்றேன்,

தங்கர் பச்சான் பிரச்சினையில் தங்கர் பச்சான் பயன்படுத்திய வார்த்தைகள் மிக்ககடுமையானது, அது கண்டிக்கப்படவேண்டியது என என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மிகத்தெளிவாக கூறியுள்ளேன்(இதை இனி ஒவ்வொரு பின்னூட்டத்திலயும் பதிவுலயும் footer ஆக போட வேண்டும் போல உள்ளது)

இதையும் மீறி முகமூடியும் இன்னும் சிலரும் என் பதிவுகளை திரிப்பது எந்த விதத்தில் நேர்மை என்று புரியவில்லை

ஒரு வேளை அவர்களின் செலக்டிவ் அளவுகோல் நேர்மையை வெளிப்படுத்தியதால் வந்த ஆத்திரமோ என்று நினைக்கின்றேன்,

எந்த ஒரு பதிவிலும் பின்னூட்டத்திலும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையை அவதூறாக நான் விமர்சிக்கவில்லை என்பதையும் இங்கே எடுத்து காட்ட விரும்புகின்றேன்(இதையும் footer ஆக போட வேண்டும் போல).

எனவே முகமூடி அவர்களே என் பதிவுகளையும் பின்னூட்டத்தையும் திரிப்பதைவிட வேறு ஏதேனும் நேர்மையான முறையில் என் கருத்துகளை எதிர்த்து பேசுங்கள் முடிந்தால்.

உடனே டிஸ்கஷன் விடயத்தை இழுப்பார்கள் பதிவை படித்து அதில் டிஸ்கஷன் பற்றி என்ன சொல்லியுள்ளேன் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

said...

kuzhali very good article with strong notes. where that 'rosa vasanth' and 'dondo' ********??????

said...

kuzhali,

பாராட்டுக்கள்! என் மனதில் உழன்று கொண்டிருப்பதைத்தான் நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்.

தங்கர் சொன்னது சற்று அதிகப்படி என்று வைத்துக் கொண்டாலும், அவர் மீது இத்தனை நடிக-நடிகையர் (அதுவும் அம்மா கட்சிக் காரர்கள்) பாய்ந்தது ஏன் என்பது வெளிப்படை.

இவர்களுக்குத் தன் கலையின் மூலம் தங்கர் விடை தரட்டும்.

ஒருவர் சொன்னது போல - 80-களில், வைரமுத்துவின் மீது நடிகைகளைத் தூண்டிவிட்டது ராஜா, அமரன் வகையறா ஆட்கள்தான். ஆனால், கலைஞர் போட்ட போட்டில் அவனவன் பொத்திக்கிட்டுப் போன சங்கதி எல்லோருக்கும் தெரிந்ததே.

said...


குழலி சொன்ன உள்குத்து இதாம்பா!!!!

தயாரிப்பாளர் சங்கம் - விஜயகாந்த் மோதல் விவகாரம்?!


ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை சம்பாதித்திருப்பார்கள்.

ஆனால் அவையெல்லாம் அதிகாரப்பூர்வமாக வெளியே தெரியாத ஆஃப் தி ரெக்கார்ட் எதிர்ப்புகளாகத்தானிருக்கும்.

ஆனால்... அதிகாரப்பூர்வமாக சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ளேயே கடுமையாக எதிர்ப்பைச் சந்தித்தவர் ரஜினிகாந்த்.

உழைப்பாளி பட ரிலீஸ் சமயம்... சூப்பர் ஸ்டார் என சொல்லப்படுகிற ரஜினிக்கே தடை விதித்தார் சென்னை செங்கை காஞ்சி மாவட்ட விநியோகஸ்தர் சங்க அப்போதைய தலைவர் சிந்தாமணி முருகேசன்!

அது கூட உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. தடைபோட்ட சங்கத்தின் மீரான் சாஹிப் தெரு அலுவலகத்திற்கே நேரில் வந்து பிரச்சனையை சுமூகமாக முடித்தார் ரஜினி.

ஆனால்... மூன்று நாள் கெடு கொடுக்கிறோம். மன்னிப்புக் கேள் எனவும், நம்பிக்கைத் துரோகி எனவும் காட்டமான கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிற ஒரே ஹீரோ.. விஜயகாந்த்தான்.

விஜயகாந்தை கண்டித்திருப்பது.. யாரோ.. எவரோ அல்ல. தமிழ் சினிமா உலகின் மிகப்பெரிய அமைப்பான தயாரிப்பாளர் சங்கம்தான்!

இந்த மோதலுக்கு காரணம்... ஈகோதான்.

இதை நடிகர் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையேயான பிரச்சினை என விஜயகாந்த் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்.

ஆனால்... இது தயாரிப்பாளர் சங்கத்திற்கும், விஜயகாந்திற்கும் இடையோன பிரச்சினை என தெள்ளத்தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

என்ன பிரச்சினை? எதனால் பிரச்சினை?

இந்தக் கேள்விகளுக்கு கொஞ்சம் பின்னோக்கிப் போய் அங்கிருந்து இந்த செய்திக் கட்டுரையை ஆரம்பிப்பதுதான் மிகச்சரியாக இருக்கும்.

கஜேந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த கொண்டிருந்த சமயம்.. பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணியையும் அரசியல் ரீதியாக கள்ளக்குறிச்சி ரசிகர் கூட்ட மேடையில் விமர்சனம் செய்தார் விஜயகாந்த்.

இதனால் கடுப்பான பா.ம.க. விஜயகாந்திற்கு எதிராக பிரச்சினை; போராட்டங்களைப் பண்ணியது. அதோடு கஜேந்திரா பட வெளியீட்டை தடுப்போம் எனச் சொல்லிவிட்டது. தடுத்தா தடுத்துக்கோ... என விஜயகாந்த் சொல்லிவிட்டார்.

ஆனால், பல கோடி போட்டு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ. துரை பதறிப்போனார். என் படம் ரிலீஸ் வரை பொறுமையாக இருங்க என விஜயகாந்திடம் கேட்டுக் கொண்டார்.

ஆனால் மசியாத விஜயகாந்த் மேலும் மேலும் பிரச்சினையை பேசிப்பேசி உண்டாக்கினார்.

திமுக உள்ளிட்ட பிற கட்சிகளும் இந்த விஷயத்தில் விஜயகாந்த்தை விமர்சிக்க... நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து பாமக தலைவர் ராமதாஸை போய் பார்த்துப் பேசினார் வி.ஏ. துரை!

கஜேந்திரா பட ரிலீசுக்கு எந்தப் பிரச்சினையும் பண்ண மாட்டோம் என ராமதாஸ் உறுதி அளித்தார்.

நான் கேட்ட வரத்தைத் தந்த ராமதாஸ் என் கடவுள் என அறிக்கை விட்டார் துரை.

இது விஜயகாந்த்தை டென்ஷன் பண்ணியது.

சினிமா பட வெளியீட்டு பிரச்சினையை அரசியல்வாதியிடம் கொண்டுபோன துரை மீது நடவடிக்கை எடுங்கள் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு நெருக்கடி கொடுத்தார் விஜயகாந்த்.

ஆனால்... பணம் போட்டவனுக்குத் தானே வலி தெரியும். படத்தை ரிலிஸ் பண்றதுக்கு துரை எடுத்த முயற்சிக்காக துரையை நாம் தண்டிக்கக்கூடாது என பெரும்பாலான தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, துரை மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.

அதிலிருந்தே தயாரிப்பாளர் சங்கத்தின் மீது ஆத்திரப்படத் தொடங்கினார்.

தனஷ், கோபிகா, அபிதா, சிம்பு என பல நட்சத்திரங்களுக்கும் அவர்களை வைத்து தயாரித்தவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நட்சத்திரங்களை கடுமையாக கண்டித்தது தயாரிப்பாளர் சங்கம்.

இதையெல்லாம் நடிகர்களிடம் பேசி தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக உசுப்பிவிட்டுக் கொண்டிந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில் காஜாமொகைதீன் தற்கொலை முயற்சி மேற்கொண்டபோது பேரரசு பிரச்சினையால் விஜயகாந்த்தும் ஒரு காரணம் என தெரிந்து விஜயகாந்த்தை செயற்குழு கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

பிரச்சினைகளுக்கெல்லாம் பிரச்சனையாக அமைந்தது மாதவன் விவகாரம்.

ஒரு பேட்டியில் பிரியசகி பட பிரச்சினையில் மாதவன் தனக்கு பிரச்சினை பண்ணியதாக உயிரை வாங்கும் ஹீரோ... கந்து வட்டிக்காரர்களை விட மோசமானவர்கள் ஹீரோக்கள் என தேனப்பன் பேட்டி கொடுத்திருந்தார்.

இதில் கடுப்பான மாதவன்... தயாரிப்பாளர்கள் நேர்மையில்லாதவர்கள் என சூடான பேட்டி கொடுத்திருந்தார்.

இது தயாரிப்பாளர்கள் பலரையும் உஷ்ண மூட்டினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனம் புழுங்கிப் போனார்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் ஏ.எல். அழகப்பன் எமோஷனலாகிவிட்டார். விஜயகாந்த் மீதிருந்த கோபம்தான் காரணம்.

மாதவன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இனி மாதவன் படங்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம். மாதவனை இனிமேல் யாரும் புக் பண்ணக் கூடாது என அறிவித்தார்.

ஆடிப்போனார் மாதவன்.

நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் என்ற முறையில் அவரிடம் ஆலோசனை கேட்டார் மாதவன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த விஜயகாந்த்தோ... மாதவன் விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டார்.

தயாரிப்பாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி அதை நடிகர் சங்கத்தில் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டார். மாதவனும் தலைவர் உத்தரவுப்படி லெட்டர் எழுதிக் கொடுத்தார். ஆனால் அந்த லெட்டரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொடுக்காமல் வைத்துக் கொண்டார்.

விஷயம் விபரீதமானது.

மரியாதையாக வந்து மன்னிப்பு கேள். இல்லையென்றால், அதற்கான பலனை அனுபவிக்கணும் என மாதவனுக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விட...

இதென்னடா வம்பா போச்சு என மிரண்ட மாதவன்.. விஜயகாந்த்திடம் தான் கொடுத்திருந்த கடிதத்தின் நகலோடு தயாரிப்பாளர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டார்.

இந்த கடிதத்தை மறைத்ததால் விஜயகாந்த் மீது தயாரிப்பாளர் சங்கம் உஷ்ணமானது.

இந்த உண்மை தெரிந்ததோடு ஒரு நடிகரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரவழைத்து மன்னிப்புக் கேட்டது விஜயகாந்த்திற்கு ஈகோ பிரச்சினையானது.

உடனே நடிகர் சங்கம் சார்பில் ஒரு கடிதம் எழுதினார் விஜயகாந்த்.

சம்பள பாக்கி வைத்திருக்கிற தயாரிப்பாளர்கள் சங்க பதவியில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பதவியிலிருந்து காலி செய்யுங்கள் என காட்டமான கடிதம் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பினார் விஜயகாந்த்.

எங்க சங்க நிர்வாகிகள் விஷயத்தில் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் எப்படி தலையிடலாம் என கொக்கரித்த தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் அழகப்பனும், முரளியும் மூன்று நாட்களுக்குள் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை விட்டனர்.

அரசியல் கட்சி துவக்க இருக்கும் நேரத்தில் தடைக்கு மூன்று நாள் கெடு கொடுத்த தயாரிப்பாளர் சங்கத்தால் தனது இமேஜ் பாதிக்கப்படுவதாக கொதித்துப் போனார் விஜயகாந்த்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு போனை போட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டினார் விஜயகாந்த்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யின் மகன் கங்காதரன் மரணம் ஏற்பட... மூன்று நாள் அதில் கழிந்தது.

அடுத்த சில நாட்களில்... சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பட விஷயத்தில் தங்கர்பச்சானுக்கும் நாயகி நவ்யா நாயருக்கும் பிரச்சினை. அதோடு பச்சானுக்கும் பெப்சி தொழிலாளிக்கும் பிரச்சினை.

விழா ஒன்றில் எல்லோரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதோடு நடிகைகளை விபசாரிகள் போல என பேட்டியும் கொடுத்துவிட்டார்.

இதை கையிலெடுத்தார் விஜயகாந்த்.

தயாரிப்பாளர்களை பழி வாங்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் ஆக முதன் முதலில் இறங்கிய தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்க வைக்க ஸ்டிரைக் நாடகமாடினார்.

தங்கரை மன்னிப்பு கேட்க வைக்கிறோம் என்று சொல்லி உத்தரவாதம் தந்த தயாரிப்பாளர் சங்கத்தை நம்ப வைத்து கழுத்தறுக்கும் விதமாக ஸ்டிரைக் அறிவித்தார்.

ஒரு வழியாக ஸ்டிரைக் அறிவித்து தங்கர் மன்னிப்பு கேட்டு ஸ்டிரைக் நாடகம் முடிந்தாலும் கூட...இனிமேல் எங்களை யார் திட்டினாலும் ஸ்டிரைக் தான் என அறிவித்தார் விஜயகாந்த்.

இதனால் மௌனமாக இருந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி. தியாகராஜன் கொதித்தெழுந்தார்.

ஸ்டிரைக் அறிவிப்பால் நாங்கள் வேதனைப்பட்டு தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்க வைக்க நீண்ட முயற்சி எடுத்தோம். ஆனால் நீங்கள் ஒப்புக் கொண்ட படி ஸ்டிரைக் வாபஸை அறிவிக்காமல் இழுத்தடித்தது மிகப்பெரிய துரோகம்.

இனிமேல் யார் நடிகர் நடிகையரைப் பற்றி பேசினாலும் வேலை நிறுத்தம்தான் என்று அறிவித்திருக்கிறீர்கள். ஸ்டிரைக்கே நடத்தக் கூடாது என திரையுலக அமைப்புகள் ஒன்று கூடி முடிவெடுத்திருப்பதை மறந்து விட்டீர்களா? என விஜயகாந்தை நம்பிக்கைத் துரோகி என முத்திரைக் குத்தி அறிக்கை விட்டார் தியாகராஜன்.

இந்த நம்பிக்கைத் துரோகி முத்திரையில் அப்செட்டில் இருக்கிறார் விஜயகாந்த்.

சாதாரண விஷயங்களுக்கே தொழில் முடக்கம் செய்ய நினைக்கிற விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து என்னென்ன பண்ணுவாரோ?

Source : http://webulagam.com/cinema/cinenews/0509/05/1050905022_1.htm

said...

vettunaa viraku vettatti maram

said...

அன்று தங்கர்பச்சான் விடயத்தில் தெரியாத உள்குத்து இன்று குஷ்பு விடயத்தில் தினமலருக்கு தெரிந்துள்ளது,

http://www.dinamalar.com/2005oct02/tn6.asp

நன்றி