கமல் என் கனவு நாயகன் - அசின் மன்றம் கலைப்பா?!

'கமல் என் கனவு நாயகன்' - சிலிர்க்கிறார் அசின், என்று அசின் பேட்டி விகடனில் வெளிவந்துள்ளது. அசின் அப்படி என்றால் குற்றமற்றவள் என்றும் அதாவது சின் இல்லாதவள் என்று அர்த்தம், இனிமையான சங்கீதம்னும் அர்த்தம் உண்டு என்று பேட்டியளித்த போது கமல் என் கனவு நாயகன் என்றும் அவர் காலேஜ் படிக்கும் போது அவர் கனவில் கமல் தான் வருவாரென்றும் இந்த பேட்டியில் கூறியதை படித்த குழலி கடுங்கோபத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image hosted by Photobucket.com

அது மட்டுமின்றி கோபத்தில் ரசிகர் மன்றத்தை கலைப்பதாக குழலி கூறுவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அசினுக்கு கோவில் கட்டும் பணியை நிறுத்த சொல்லிவிட்டதாகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமின்றி நடிகையாக வராமல் போயிருந்தா என்று மிக அற்புதமான ஒரு கேள்வியை கேட்ட நிருபரிடம் "அந்த பேச்சே கிடையாது, உங்க அம்மா மாதிரி நீயும் டாக்டரா ஆகியிருக்கலாமே?னு நிறைய பேர் என்னை கேட்டு இருக்காங்க. நோயாளிங்க பாவமில்லையா. பிழைச்சு போகட்டும்னு விட்டுட்டேன்" - சிரிக்கிறார்

"நோயாளிகளை விட்டுட்டீங்க... ஆனா ஆரோக்கியமானவங்களை உங்க அழகுசிரிப்பால நோயாளி ஆக்கிடுவீங்க போலிருக்கே" என்று நிருபர் விட்ட ஜொள்ளு ஆறாக பெருகிஓடியதும் கேள்விப்பட்ட குழலி மிகக்கடும் கோபத்தில் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசின் மன்றத்தை கலைத்துவிட்டு சிங்களத்து சின்னக்குயில் 'பூஜா' ரசிகர் மன்றம் ஆரம்பிக்க முனைவதாக வதந்'தீ' பரவியுள்ளது, ஆக மொத்தத்தில் ஏதேனும் ஒரு மன்றத்தில் மூளையை கழற்றிவிட்டு இருப்பதாக முடிவு செய்துள்ளார் போலும்.

Image hosted by Photobucket.com

மன்ற கலைப்பு விவாகரத்தை தெரிந்து கொள்ள +65 0000000 என்ற அவரது எண்ணிற்குதொடர்பு கொண்ட போது அவர் கைத்தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகின்றது.

இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம் அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாச்சி

நன்றி
விகடன்.காம்

11 பின்னூட்டங்கள்:

said...

ரொம்பத்தான்ன்ன்ன்ன்ன்ன் போயிட்டிருக்கீங்ங்கக குழலி , ஆமா சொல்லிட்டேன்.. ரொம்ப சின்னபுள்ளத்தனமால இருக்கு.. ஹோஓஓஓஓஓஒ !!

மொத்தமா அசின் பத்தியே எழுதறீங்க.. வேற எந்த நெனப்பும் இல்லயா??
அய்யா, அசின் பதிவு போதும்யா.. உங்க வழக்கமான பதிவுக்கு வாங்க.. !

ஒரு செய்தி :
நேத்து ராத்திரி 10:00 மணிக்கு ராஜ் டீவி ல அசின் தன் வலைத்தளத்தை திறந்து வெச்சத காமிச்சாங்க..பார்த்தீங்களா?

said...

'-' குத்திய நண்பரே இந்த பதிவில் எந்த உள்குத்தும் இல்லை என்பதையும் குழலி கூற சொன்னதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

said...

//நேத்து ராத்திரி 10:00 மணிக்கு ராஜ் டீவி ல அசின் தன் வலைத்தளத்தை திறந்து வெச்சத காமிச்சாங்க..பார்த்தீங்களா? //
என்னே அபாக்கியசாலி நான், இங்கே ராஜ் டிவி இணைப்பு இல்லீங்களே.

said...

என்னுடைய வகையில் ஒரு _ (மைனஸ்) குத்து!!!

said...

அசினுக்கு இத்தனை ரசிகர்களா? மன்றத்தை கலைக்கப்போகின்றார்கள் என உறுதி படுத்தப்படாதா தகவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க '-' ஆக குத்திக்கொண்டுள்ளீர்களே!

ஞானபீடம் அசின் மன்றத்தில் இளவட்டங்களுக்கு மட்டுமே அனுமதி, உம்மைப்போன்ற அம்பிகா ரசிகர்களுக்கு அல்ல.

said...

அசின் போன்ற இளவட்டங்களுக்கே
கனவு நாயகன்
எங்கள்
உலக நாயகன் தானே!

சகல கலா வல்லவனுக்கு என்ன வயசு பதினாறா???

said...

//சகல கலா வல்லவனுக்கு என்ன வயசு பதினாறா???
//
ஞானபீடத்தைவிட இரண்டு வயது உலக நாயகனுக்கு குறைச்சலாம்

said...

'அசினாயணம்' நல்லா போயிட்டிருக்கு.....
இங்கயும் போய் பாருங்க...

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/7925.html

said...

//At 10:03 PM, Anonymous said…

'அசினாயணம்' நல்லா போயிட்டிருக்கு.....
இங்கயும் போய் பாருங்க...

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/7925.html
//
அசின் ரசிகனாக இருக்கும் நீர் Anonymous ஆக இருக்க வேண்டும் உம் முகத்தை காண்பிக்கவும் ரசிகர் மன்றத்தில் ஒரு பதவி தருகின்றோம்.

said...

Dear kuzhali...
naa vena thatthu eduthukkava
"agila ulaga Asin jollu manram" thalaivar padhavi ai!!!

padhavi sogam yaara vittadhu!
lolz

said...

//அசின் ரசிகனாக இருக்கும் நீர் Anonymous ஆக இருக்க வேண்டும் உம் முகத்தை காண்பிக்கவும் ரசிகர் மன்றத்தில் ஒரு பதவி தருகின்றோம்.//

1. காலையில் எழுந்ததும், 'அவுங்க' படத்த கும்பிடணும்.
2. 'அவுங்க' பெருமைகளை எந்நாளும் பேசி திரியணும்.
3. 'அவுங்க' படம் ரிலீசாகும்போது, போஸ்டர், பேனர் ஏற்பாடு செய்வேன்.
4. 'அவுங்க' பிறந்த நாளுக்கு ரத்த தானம் கொடுப்பேன்.

இப்படி 'அவுங்க' நெனப்புலயே மூச்ச விடணும்.

இதுதாங்க இந்த எளியோனின் ஆசைகள்.
மத்தபடி, நமக்கு பட்டம், பதவி எதுவும் வேணாங்க..