இணையத்தில் அழகுக் கிளி அசின்

Image hosted by Photobucket.com

இணையத்தில் அழகுக் கிளி அசின் என்ற தலைப்பை விகடன்.காம் இல் பார்த்தவுடன் பரவசமாகிவிட்டேன், பரபரப்பாக இருந்தது, சரியென்று அந்த சுட்டியை சொடுக்கினால் சந்தா கட்டணம் கேட்கிறது விகடன், அட நம் தங்கத் தலைவி அசினைவிட பணம் பெரியாத என உடனே பணத்தை கட்டி உள்ளே சென்று பார்த்தேன் ஆகா என்னே நான் செய்த பாக்கியம் என்னே நான் செய்த பாக்கியம், என் தங்கத் தலைவி புரட்சித் தலைவி, சூப்பர்த் தலைவி தனக்கென தனி வெப்-சைட் ஆரம்பிக்கின்ற செய்தியை போட்டிருந்தனர், அதனோடு 'அய்யய்யோ அப்போ இனிமே மத்த பத்திரிக்கைக்கெல்லாம் பேட்டி தரமாட்டிங்களா?' என்று ஒரு உலகின் மிக முக்கியமான கேள்வியையும் 'அப்போ சிஸ்டம் முன்னாடியே கிடந்து அப்-டேட் பண்ற வேலைதான்' என புரட்சிக் கேள்வியையும் கேட்டுள்ளனர்.

Image hosted by Photobucket.com

இதுவா நமக்கு முக்கியம், நான் தேடியது தங்கத் தலைவி அசினின் இணைய தள முகவரி, ஆனால் அந்த நாசமா போன விகடன் பேட்டியில் இணைய தள முகவரியை போடவில்லை.

அய்யோ நானூனூனூனூத்தி அம்பது ரூபாய் வீணாப்போச்சே வீணாப்போச்சே, என நிணைத்தபோது கூகுள் ஆண்டவர் நினைவுக்கு வந்தார், கூகுள் ஆண்டவரிடம் முறையிட்ட போது மிகச்சரியாக தலைவி அசினின் இணைய தள முகவரியை தந்தார், அடடா இதை முன்பே செய்திருந்தால் நானூத்திஅம்பது ரூபாய் மிச்சமாகியிருக்குமே என்று நொந்துகொண்டேன்.
எங்கே தலைவி அசினின் படத்தை பார்த்தவுடன் மூளை வேலை செய்யமாட்டேங்குதே.

தலைவி அசின் ஆகஸ்ட்-16 2005ல் தான் ஆரம்பித்துள்ளார் இந்த இணையதளத்தை, 5 நாளில் 17,143 முறை அவரது இணையதளம் சொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இணைய தளத்திற்கு போன போது அடா அடா உலகத்தின் அதிசயமே அங்கேதான் இருக்கிறது, எத்தனை எத்தனை உலக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள், அவருடைய முந்தைய திரைப்படங்கள் நடித்துக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படங்கள் என்றும் அவருடைய ஃபேவரிட்ஸ் என்றும் எத்தனை அதிமுக்கிய புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன, தலைவி அசின் அவர்கள் ஆசியாவில் ஜாக்கிசானின் சாதனையை முறியடித்து தற்போது புருஸ்வில்லீஸ்,அர்னால்டு சிவனேசன் போன்றோரை நெருங்கிக்கொண்டிருக்கின்றார்.

Image hosted by Photobucket.com

நான் அசின் ரசிகனாக இருப்பதற்கு முக்கிய காரணம் அசினின் அழகைவிட, அவரின் நடிப்பை விட அவருடைய தங்கமான குணம் தான், அது எப்படி உனக்கு அசினின் குணம் தெரியும் என கேட்கக்கூடாது அக்காங்...

தலைவி அசினை தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்த்தாமல் ஓயமாட்டோம், தலைவி அசினுக்கு கோவில் கட்டாமல் ஓயமாட்டோம் என்று அகில உலக அசின் ரசிகர் மன்றத்தின் (இன்னும் மன்றம் ஆரம்பிக்கவில்லை) ஒரே தலைவன் என்ற முறையில் சபதமெடுக்கின்றோம்.

அடுத்ததாக விரைவில் எதிர்பாருங்கள் அசின்-31 என்ற ஒரு பதிவு, 31 அவரின் வயசல்ல, அவர் சமீபத்தில் தும்மிய தும்மல்களின் எண்ணிக்கை.

நன்றி
விகடன்.காம்
அசின்ஆன்லைன்.காம் (www.asinonlilne.com)

44 பின்னூட்டங்கள்:

said...

செலவும் பண்ணிட்டு புலம்பல் வேறா?

said...

பொழப்பத்துப் போயி,பாயைப் பிராண்டின காலமெல்லாம் போயே போச்.இப்பொ லேட்டஸ்டா இந்த மாரிதி ஒரு பதிவை ஆரம்பிச்சுக் கண்டதயும் எழுதிக் கொட்டறது தான் பொளுது போக்கு.

அப்பப்போ இந்த மாதிரி ஒரு குப்பய எழுத வேண்டியது.அப்புறம் கம்யூனிசம்,செக்கூலரிசம்னு சல்லியடிச்சு மனசாட்சியத் திருப்திபடுத்திக்கரது.

ஒத்து ஊதரதுக்கு கைதராபாத்தில இருந்து ஒரு பின்னூட்டம் வேற.

எப்ப தான் இவங்கெல்லாம் திருந்தப் போறாங்களோ???

said...

நல்லாச் சொன்னீங்க.! ஜிகிடி தோஸ்த்..!!

said...

அடடா அப்ப எனக்கும் உங்க ரசிகர் மன்றதில ஒரு பெரிய பதவி சீட் தாங்கப்பா? நானும் அண்மையில்தான் சினேகா ரகிகர்மன்றதிலிருந்து வெளியேறினேன். :-))

//எப்ப தான் இவங்கெல்லாம் திருந்தப் போறாங்களோ??? //

:-))

said...

ஆஹா..நீங்க பெண் இல்லையா :( இது உங்கள் வலைப்பதிவு..கண்ணியமாக என்ன வேண்டுமானால் எழுதலாம் :) தொடர்ந்து இது போன்று பயனுள்ள தகவல்களைத்தாருங்கள்..தங்கத்தலைவி அசின் வாழ்க !!!

said...

asinonline.com என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தான் அந்த இணைய தளத்துக்கு செல்கிறது. தமிழகத்தில் சம்பாதித்து தமிழில் இணைய தள முகவரி வைக்காமல் அன்னிய மொழியில் வைத்ததை எதிர்த்து தங்கத் தலைவர் தமிழிடிதாங்கி தலைமையில் ம.ம.மு.க. சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். (இரண்டு நாட்களில் தலைவர் அமெரிக்காவில் படிக்கும் தனது பேத்திகள் லிண்டா, குவாண்டா இருவரையும் பார்த்து பேச சென்றிருக்கிறார். கூடவே தமிழ் தெரியாத அவரது பேத்திகளின் பேச்சை மொழி பெயர்த்து செல்ல அருமை துணைத் தலைவர் பெல்லும் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது)

said...

//படிக்கும் தனது பேத்திகள் லிண்டா, குவாண்டா இருவரையும் பார்த்து பேச சென்றிருக்கிறார்//

சூப்பரப்பூ....
அப்படிப் போடுங்க அரிவாள.

said...

ஜிகிடி..வழக்கமா சொல்லுற ரெண்டு வரிகளை இங்கே காணுமே?! மிஸ்ஸிங்?!

(அது என்ன ரெண்டு வரிகள் என்று குழம்புவர்களுக்கு : "இந்தப் பயலுகளெக்கெல்லாம் ஆப்பு வைக்க யாரும் இல்லேன்னு நாங்கெல்லாம் தவிச்சில்ல போயிருந்தோம்.")

Kuzhali..relax..no tension plz. :)

said...

//வழக்கமா சொல்லுற ரெண்டு வரிகளை இங்கே காணுமே?//

ஹி..ஹி...வயசாயிட்டே வருதில்ல.அதான்.
எட்த்துக் கொட்ததுக்கு ரொம்ப டாங்ஸ்பா.

இன்னாபா மாயவரத்தான்......ஒரு பொன்னு அல்கா இருந்தடக் கூடாதே..கன்ட காவாலிப் பசங்கலும் போர இடத்துக்கெல்லாம் ஃபாலோ பன்னிட்டு வருவாங்கன்னு நம்ம அம்மா வூட் மேலே கூவீட்டு இருக்காங்கோ

said...

நன்றி நன்றி, பின்னூட்டமிட்ட அனைத்து தலைகளுக்கும் நன்றி, மாயவரத்தான் மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி, அது சரி ஜிகிடி பெயர் புதுசா இருக்கே ராஜா.

என்னதான் சொல்லுங்க, அசின் இணய தளம் ஆரம்பித்த பிறகுதான் ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரி இருக்கு.

//நானும் அண்மையில்தான் சினேகா ரகிகர்மன்றதிலிருந்து வெளியேறினேன். :-))
//
வாங்க உ.பி.தர்சன் நிச்சயமா பதவி உண்டு.


//செலவும் பண்ணிட்டு புலம்பல் வேறா? //
ம்.. என்ன செய்வது மணி நினைத்தது கிடைக்கலனா, கிடைச்சத வச்சி சந்தோச படற அளவுக்கு நமக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய மனசு இல்லை, அதனால கொஞ்சம் புலம்பவாவது செய்யலாமே...

நன்றி

ஜிகிடிக்கு ஸ்பெஷல் நன்றி.

said...

//பாயைப் பிராண்டின காலமெல்லாம் போயே போச்//
ஜிகிடி பாயை யார் பிராண்டுறாங்கனு நல்லா தெரியுதுங்கோ...

said...

//தகவல்களைத்தாருங்கள்..தங்கத்தலைவி அசின் வாழ்க !!!
//
நிச்சயமாக ரவி, தலைவி தனியாக ஒரு இணையதளம் ஆரம்பிக்கும்போது தனியாக நான் ஒரு பதிவு ஆரம்பிக்கலாம் என உள்ளேன்.

நன்றி

said...

nice posting kuzhali :-))

said...

vikatan password enna?

said...

பிகரு பிகருதான் இது சூப்பர் பிகருதான்
பிகருக்கேத்த டவுசர் நானுதான்.
அப்படின்னு பாடி முடிப்பீங்கன்னு நினைச்சேன்.
நம்மதியேட்டரில் புதிய படம் போட்டுருக்கு வந்து பாருங்க!.
http://arrasu.blogspot.com/

said...

//vikatan password enna?//
********

said...

wonderful kuzhali.. Very happy to see this blog..iLamai..inimai..puthumai..
asin munnaal periyavaaLum illai sinnavaaLum illai..
asin munnaale ego illai..
ellaam asin mayam..engengu kaaNinum Asin padangkaL..

ulakath thozhilaalarkalE onRu sErungkaL..asin rasigar manRaththil uRuppinaraaka serungkaL..

said...

//asin munnaal periyavaaLum illai sinnavaaLum illai..
asin munnaale ego illai..//

so,
periyavaaL==sinnavaaL==ego.

சரியா தெருத்தொண்டன் அய்யா???

said...

சர்கஸ்டிக் பதிவு என்றும் சர்ரியலிஸ்டிக் பதிவு என்றும் நாரத வேலை செய்ய இன்னும் ஓரிரு மணி நேரத்தில் கிளம்பும் சிலருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இது ஒரு சீரியஸ் பதிவு.

//asin munnaal periyavaaLum illai sinnavaaLum illai..
asin munnaale ego illai..
ellaam asin mayam..engengu kaaNinum Asin padangkaL..
//
நன்றி மிக்க நன்றி நீங்கள் தான் தலைவியைப்பற்றி சரியாக புரிந்து வைத்துள்ளீர், ரசிகர் மன்ற துணைத்தலைவர் பதவி உங்களுக்கு தரத்தயாராக உள்ளேன்.

said...

edu super -ra eruku carry on

said...

//அர்னால்டு சிவனேசன் //
super

said...

சூப்பர் தல, சூப்பர்,

said...

ஒரு குட்டி தூக்கம் போட கூடாதே, உடனே குண்டக்க மண்டக்க கெளம்பிருவீங்க... அசின பத்தி எழுதறதுக்கு முந்தி அவர் கொபசெவா இருக்கிற பமக தலைவர் கிட்ட பர்மிசன் வாங்குனீங்களா.. இதுக்கு ஒரு பஞ்சாயத்து பண்ணுங்க தலைவரேன்னு கோன்னு அழுது பாவம்..

said...

////நான் அசின் ரசிகனாக இருப்பதற்கு முக்கிய காரணம் அசினின் அழகைவிட, அவரின் நடிப்பை விட அவருடைய தங்கமான குணம் தான், அது எப்படி உனக்கு அசினின் குணம் தெரியும் என கேட்கக்கூடாது அக்காங்..

Engeyo ketta kural. super.. :))

said...

//vikatan password enna?//
//******** //

kosukkadi thangka mudiyale..

said...

அசின் வலையைத் திறந்தால் "லோடிங்.. லோடிங்" னு ஒரு மணிநேரமா சொல்லுது குழலி?!!!

said...

முகமூடிக்கு சொப்பனசுந்தரி தந்த கொழுக்கட்டை...
http://ramsanjay.blogspot.com/2005/08/blog-post_112422184682584203.html

said...

நன்றி குழலி, நம்ம அசினோட இனைய முகவரி கொடுத்தற்கு. அப்புறம் அசின் பத்தி எழுத கூட தலைவர் தேவை படுறார். 31 தும்மல்தானா. கரண்ட் தும்மல் ஸ்டேடஸ் என்னங்க குழலி.

உங்க அளவுக்கு ரஜினி ரசிகர்கள் இல்லைங்க. தும்முறத கூட லைவ்வா கணக்கு எடுக்குறீங்க. தலைவர் படம் நடிக்கப்போறேன்னு சொன்னா கூட செய்திகள் பார்த்தா தான் தெரியுது.

said...

//அப்புறம் அசின் பத்தி எழுத கூட தலைவர் தேவை படுறார்//
என்ன ராஜா நான் இதில் எங்கேயுமே உங்கள் தலைவரைப்பற்றி எழுதவில்லையே? என்ன குழப்புறிங்க?!

//உங்க அளவுக்கு ரஜினி ரசிகர்கள் இல்லைங்க//

நிச்சயமா எங்க அளவுக்கு ரஜினி ரசிகர்கள் இல்லைங்கறது உண்மை, அவங்க அதுக்கும் மேலே

said...

First report of blog censorship using Blogger "flag" option
A new report alleging that Google's new "flag" feature has been used to censor a blog on the grounds that readers have disagreed with the opinion of a writer has appeared, in what if proven true would be the ...
So you have a visitor coming your way. I read these things. :)
phentermine

I'm waching blogs all day long and I found yours which is really nice :)


You are making good job!
Keep up the super articles!


I enjoy reading the stories on your site. Keep up the super articles!


Your site is very good!
Congratulations!

said...

Hey, you have a great blog here! I'm definitely going to bookmark you!
I have a Wedding Photos Northampton site/blog. It pretty much covers Wedding Photos Northampton related stuff.
Come and check it out if you get time :-)

said...

உள்குத்துக்கு தலைவியை பயன்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம் :-)

அது சரி, குழலி, அதெப்படி எனக்கு பிடித்த ஸ்டில்லயே நீங்களும் போட்டிருக்கீங்க...
http://i-thoda.blogspot.com/2005_07_02_i-thoda_archive.html
( Great people think alike? )

said...

Missing Pregnant Phildephia Woman Found Dead
The body of a young pregnant woman from Philadelphia was found Saturday, three weeks after Internet bloggers helped her case get national attention by pressuring news media to cover stories involving black or ...
Great blog you have, I make sure I bookmark it.
Download sitesDownload moviesJoin and start downloading ##full length movies##

said...

Last night I was watching the Don Lapre infomercial about his program "The Greatest Vitamin in the World". I have to say that I liked it; I was very impressed and prompted to buy it, but I wanted to get some additional information looking before purchasing it. I advise you to do the same.

Recommended Website: http://greatest-vitamin-in-the-world-review.com/

said...

//உள்குத்துக்கு தலைவியை பயன்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம் :-)//
இதில் எந்த உள்குத்துமில்லை, எங்கள் தங்கத்தலைவி, மலையாள பைங்கிளி, அசின் எங்கள் இதயத்தில் ஒட்டிக்கொண்ட பிசின் (நன்றி வளவன்) அவர்களை கோட்டைக்கு அனுப்பாமல் ஓயமாட்டோம். இவன் அகில உலக அசின் ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவன்(மன்றம் ஆரம்பிக்க அன்புத்தலைவியின் ஆணைக்காக காத்துக்கொண்டுள்ளேன்)

//அது சரி, குழலி, அதெப்படி எனக்கு பிடித்த ஸ்டில்லயே நீங்களும் போட்டிருக்கீங்க...
http://i-thoda.blogspot.com/2005_07_02_i-thoda_archive.html
( Great people think alike? )//
நாட்டில எல்லா தீவிர ரசிகர்களும் ஒரே மாதிரிதான் ஹி ஹி :-)

said...

இவர்களை உமது கனவு கன்னிகள் என்று இங்கே
சொன்ன குழலியே!

இப்போது தனியாக
அசினோடு பிசின் போட்டு
ஒட்டிக் கொண்டுவிட்டீரே!!!

அந்த மற்றொரு கிளியை
என்ன செய்தீர் (எனக்கு வேண்டாம்!)

said...

கலக்கல் போட்டோஸ் வாத்யாரே... தலைவி இவ்ளோ அழகா?? :)
யார் என்ன சொன்னாலும் பின் வாங்க கூடாது ..நம்ம தலைவிய கோட்டைக்கு அனுப்பாம ஓயக்கூடாது ..புரியுதா..?
அப்புறம் அந்த மன்றத்துக்கு கொடி கட்ட , தோரணம் கட்ட ஏதாச்சும் பணம் வேணும்னா கூச்சபடாம
நம்ம முகமூடி கிட்ட கேளு தல..

அப்புறம் , தப்பி தவறி முகமூடி - கதை போட்டி ல நான் ஜெயிச்சி பரிசு வந்தா அதை நம்ம தலைவியின் மன்றத்துக்கு கொடுத்துடறேன் ..

முக்கியமான விஷயம்..நான் தான் மன்றத்து பொருளாளர்... ஒ கே வா?

வீ எம்

said...

விடறது ஜொள்ளு இதில் இத்தனை லொள்ளா?

said...

//இப்போது தனியாக
அசினோடு பிசின் போட்டு
ஒட்டிக் கொண்டுவிட்டீரே!!!
//
அசினுக்குத் தான் முதலிடம் ஞானம்
//அந்த மற்றொரு கிளியை
என்ன செய்தீர் (எனக்கு வேண்டாம்!)
//
அவரின் இணையதளத்தை தேடிக்கொண்டுள்ளேன், இந்த வாரம் விகடனில் அசின் பற்றி போட்டுவிட்டார்கள் அல்லவா? அடுத்தவாரம் குமுதத்தில் பூஜா பற்றி எதிர்பார்க்கின்றேன்.

//தலைவி இவ்ளோ அழகா?? :)
//
யாரிந்த துரோகி, இவருக்கு தக்க தண்டனை கொடுக்கவும்

//அப்புறம் அந்த மன்றத்துக்கு கொடி கட்ட , தோரணம் கட்ட ஏதாச்சும் பணம் வேணும்னா கூச்சபடாம
நம்ம முகமூடி கிட்ட கேளு தல.. //
ஹி ஹி மன்றம் ஆரம்பிக்க்க தலைவியிடம் கேட்டுள்ளேன், கிடைக்காமலா இருக்கும்

//அப்புறம் , தப்பி தவறி முகமூடி - கதை போட்டி ல நான் ஜெயிச்சி பரிசு வந்தா அதை நம்ம தலைவியின் மன்றத்துக்கு கொடுத்துடறேன் ..//
நன்றி நன்றி

//முக்கியமான விஷயம்..நான் தான் மன்றத்து பொருளாளர்... ஒ கே வா?
//
ஹலோ பொருளாளர் உங்ககிட்ட கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது வேண்டுமென்றால் துணைப்பொதுச்செயலாளர் தருகின்றேன்

//விடறது ஜொள்ளு இதில் இத்தனை லொள்ளா? //
ஹி ஹி

said...

அஸினுக்கு வயசு 27

said...

ஆகா ஆரம்பிச்சிட்டிங்களா சின்னவரே

said...

குழலி, அசினின் புகழை உலகத்துக்கு பறைசாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் :-(

http://thatstamil.indiainfo.com/news/2005/08/23/canada.html

said...

உங்கள் கருத்து இருக்கட்டும்.. அசினின் கருத்து என்ன.. அறியப் படியுங்கள்

குழலி தான் என்னோட சாய்ஸ் - அஸின்

அன்புடன் விச்சு

said...

i saw asinonline.comtodayonly
i like u r acting then else