கனடா கொண்டார் பட்டம்

முன்குறிப்பு
ஏற்கனவே நான் பதிப்பித்த இந்த பதிவை ப்ளாக்கர் தின்று சதி செய்துவிட்டதால் மீண்டும் பதிப்பிக்கின்றேன், இதற்கெல்லாம் அசந்துவிடமாட்டோம்.

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் வெளியாகவில்லை, சுயபுகழ் பேசும் வசனங்கள் இல்லை, தில்லானா தில்லானா பாடல்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, கொடிகள் இல்லை, மன்றங்கள் இல்லை, துதி பாடிகள் இல்லை, இத்தனை இத்தனை இல்லைகள் ஆனால் ஒரே ஒரு புகைப்படம் மொத்த கனடாவையும் கவிழ்த்துவிட்டது.
Image hosted by Photobucket.com
தங்கத்தலைவி அசினின் ஒரே ஒரு புகைப்படம் கனடாவை பித்து பிடித்து அலையவைத்தது, தலைவியை காண வேண்டுமென்ற ஆவலில் என்ன ஏதென்று விசாரிக்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு கனடாவிலிருந்து இந்தியா வந்து அலைகின்றார்கள் என்றால் தலைவியின் புகழ் உலகெங்கும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது எல்லோருக்கும் புலப்படும், வேறெந்த நடிகரும் நடிகையும் ஒரே ஒரு புகைப்படத்தால் மொத்த நாட்டையும் பித்து பிடித்து அலைய வைத்ததில்லை.

ஆனால் எம் தலைவியின் புகழ் பாரெங்கும் பரவுவதை கண்ட சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வயிற்றெரிச்சலில் அசின் செய்த பிராடு என பதிவெழுதி எம் தலைவியின் புகழை குலைக்க பார்க்கின்றனர், ஏற்கனவே கனடா முழுக்க அசின் பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறும் முகமூடியே அவர்களே நீர் எத்தனை பதிவு போட்டாலும் அசின் அசின் தான், ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவனின் ஒளி மறைவதில்லை, எனவே எத்தனை பதிவுகள் முயன்றாலும் அசின் புகழை யாராலும் மறைக்க இயலாது என சவால் விடுக்கின்றேன்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை யாரும் செய்யக்கூடாது என்றுதான் எங்கள் தலைவி இணையத்தில் அசின்ஆன்லைன் என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அவரின் புகழ் பரப்பிவருகின்றோம்.

இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ஒரே ஒரு புகைப்படத்தில் கனடாவை கைப்பற்றிய அசினுக்கு தீவிர ரசிகர்களின் சார்பாக கனடா கொண்டார் என்ற பட்டத்தை தங்கத்தலைவி அசினுக்கு வழங்குகின்றோம்.

எப்படியோ இன்று அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாயிற்று

நன்றி
அசின்ஆன்லைன்.காம்
தினமலர்.காம்

17 பின்னூட்டங்கள்:

said...

// கனடா கொண்டார் //

குழலி இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி......... அநியாயத்திற்கு ஜார்ஜ் புஷ் கோபத்திற்கு ஆளாகாதீர் அப்புறம் அவர் ஒசாமாவ விட்டிட்டு நம்ம அஸின் மேல படையெடுக்கப் போறார்.

அது சரி மெய்யாலுமே அந்த அம்மணி அழகா இருக்காங்கன்னு நினைக்கறீங்க.... அசின் பிசின் மாதிரி தான் எனக்கு தெரியறாப்புல :-))

said...
This comment has been removed by a blog administrator.
said...

//அது சரி மெய்யாலுமே அந்த அம்மணி அழகா இருக்காங்கன்னு நினைக்கறீங்க.... அசின் பிசின் மாதிரி தான் எனக்கு தெரியறாப்புல :-))
//

ஹி ஹி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரி தான் இதுவும்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

மீசையில மண் கொஞ்சமா ஒட்டீட்டு இருக்கு.அதயும் கொஞ்சம் தொடச்சிக்கிடும்.

said...

//மீசையில மண் கொஞ்சமா ஒட்டீட்டு இருக்கு.அதயும் கொஞ்சம் தொடச்சிக்கிடும்.//
ஜிகிடி ஜிமிக்கி அது ஒரு பக்கமா ஒட்டிக்கிட்டு இருக்கட்டுமே, அந்த மண்ணும் பாவம் தானே எத்தனை நாளாதான் கீழேயே கிடப்பது...

said...

அசினு தான் என் அழகுக் கசினு.
அவ மேலே நீ ஒட்டாதே பிசினு.

அசினுக்கு நான் ஹார்ட்டுல கொடுத்தேன் குசனு
நீ தலைக்குத் தேய்ச்சு ஊத்த வேணுமா லெமனு

இப்போதைக்கு அம்புட்டுதேன்.

said...

This blog is awesome! If you get a chance you may want to visit this PDF Writer site, it's pretty awesome too!

said...

விசய.காப்பி.ராசேந்தர் ஏதோ கோபமா இருக்கிங்க, அட இதில் உள்குத்து எதுவுமில்லைங்க அப்படினு சொன்னா நம்பவா போறிங்க... சரி விடுங்க...

said...

This blog is handsome! If you get a chance you may want to visit this junk writer site, it's pretty handsome too!

said...
This comment has been removed by a blog administrator.
said...

//
அன்யோன்யமாஸ் said...
This blog is handsome! If you get a chance you may want to visit this junk writer site, it's pretty handsome too!//

என்னது writer ஆ? அடடா என்னையெல்லாம் writer அப்படினு சொன்னால் அட junk writer அப்படினே சொன்னால் கூட writer அப்படினு வருதே, நானெல்லாம் writer என்றால் அப்போ உண்மையிலேயே writer ஆ இருக்கிறவங்களை கேவலப்படுத்திட்டிங்க போங்க!

said...

அழிக்கப்பட்ட பின்னூட்டங்கள் அனைத்தும் எரிதங்கள் மட்டுமே

நன்றி

said...

"அது சரி மெய்யாலுமே அந்த அம்மணி அழகா இருக்காங்கன்னு நினைக்கறீங்க...."
அட கணேஷீக்குதான் அப்படி ஒரு டேஸ்ட்!! அதுக்காக நீங்கள் இப்படி "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரி தான் இதுவும்" ன்னு சொல்லி ஏன் ஜகா வாங்கீட்டீங்க> இது சாரியாஇல்லை!!

said...

யோவ் தருமி,
இப்ப என்ன சொல்ல வாறீரு?
அதவிட என்னாத்துக்கு இங்க வாறீரு?
பானுமதி பத்தியா பேசிக்கிட்டிருக்கோம்?;-)

said...

kanada koNdaar pattam thantha kuzhali vaazhga.. asinin karuththaip padiyunggaL..

குழலி தான் என்னோட சாய்ஸ் - அஸின்

anbudan vichchu

said...

அசினெல்லாம் ஒரு பிகரு, அதுக்கு ஒரு வெப்சைட்டா...

(அசின் தளத்தில் உள்ள டவுன்லோடு லிங்க் சரியா வேலை செய்யல. யாராவது எதாவது செஞ்சி படம் டவுன்லோடு பண்ண வழி பண்ணுங்கப்பா)