பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....


சிங்கையில் யீஷூன் திரையரங்கில் பெரியார் திரைப்படம் வெளியாகியுள்ளது, நண்பர்கள், நான் முன்னாள் சென்றுவிட கோவி.கண்ணன் திரையரங்கில் வந்து இணைந்து கொண்டார், பெரியார் திரைப்படம் பார்க்கப்போகும் முன் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்காமல் வேறு புது முகம் யாரேனும் நடித்திருக்கலாம், பெரியார் தெரிவதற்கு பதில் சத்யராஜ் தான் நம் முன் வந்து நிற்பார் என்றேன், அதற்கு என் நண்பன் கூறினான், படத்தில் சத்யராஜ் தெரியமாட்டார், ஏனெனில் பெரியார் சத்யராஜை விட பவர்ஃபுல், சத்யராஜை விஞ்சி பெரியார் தான் படத்தில் தெரிவார் பார் என்றான், படம் பார்க்கும் போதே என் நண்பன் சொன்ன உண்மை புரிந்தது.

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகால வாழ்க்கை, ஐம்பதாண்டுகளுக்கும் மேலான சமூகப்பணி கொண்டவரின் வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்தில் அடக்குவது இயலாத காரியம், அதனால் பெரும்பாலுமான காட்சிகள் நீளமாகவும் ஆழமாகவும் இல்லாமல் மேலோட்டமாகவே இருந்தன, இடைவேளை வரை படம் வேகமாகவே நகர்ந்தது, இடைவேளைக்கு முன் அதிகமாக நமக்கு அறிமுகப்படாத காட்சிகள் இருந்ததால் படம் சுவாரசியமாகவும் இருந்தது, இடைவேளைக்கு பின் வந்த காட்சிகள் பலவும் நாம் அறிந்த விடயங்கள்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய பெரியாரின் விமர்சனங்கள், மணியம்மையை திருமணம் செய்து கொண்ட விடயம், ஆகஸ்ட்டு 15ஐ கருப்பு தினம் என கூறியது என பெரியார் மீது வைக்கப்படும் பல

விமர்சனங்களுக்கு இந்த படத்தில் பதில் கிடைத்துள்ளது, அறிஞர் அண்ணா, கலைஞர், தி.க. தலைவர் வீரமணி, எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் போன்றோர் இடம் பெறும் காட்சிகள் வெகு சிலவே.

தொடக்க காட்சிகளில் சத்யராஜே தெரிந்தார், வசன உச்சரிப்பும் அப்படியே, கோட்டை கழற்றி போட்டுவிட்டு கதராடை உடுத்தி வரும் அந்த காட்சி நிச்சயம் என்னை பரவசப்படுத்தியது, அதிலிருந்து சத்யராஜ் ஆளையே காணவில்லை, படம் முழுக்க பெரியார் தான்... ஓரிரு இடங்களில் வசன உச்சரிப்பு சத்யாராஜை நினைவுக்கு கொண்டுவந்தாலும் பெரியாரே ஆதிக்கம் செய்தார்.

இடஒதுக்கீடு
இடஒதுக்கீட்டின் தந்தையாக இருந்திருக்கிறார் பெரியார், அன்று அவர் ஆரம்பித்த போராட்டம் இதோ இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது, ராஜாஜி அவர்களிடம் சிறையில் பெரியார் உரையாடும் காட்சியில் இடஒதுக்கீட்டிற்கு காந்திஜி ஒத்துக்கொள்வது இருக்கட்டும், நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா என்று முகத்தை ஆழமாக பார்த்து கேட்கும்போது அதற்கு ராஜாஜியின் தாழ்ந்த பார்வையே இராஜாஜியின் எண்ண ஓட்டத்தை வசனங்கள் ஏதுமின்றி தெரிவித்து விடுகின்றது, இடஒதுக்கீடு ஏதோ சும்மா வந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இன்றைய தலைமுறைகளுக்கு அதன் நெடிய போராட்ட வரலாறு இதனால் தெரியவரும்.

பெரியாரின் சமரசம்
சமூக, அரசியலில் சமரசமற்று இருப்பது அதனால் எந்த இழப்பையும் ஏற்பது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விடயம், ஆனால் எதை சமரசம் செய்வது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பெரியார் சமரசமே செய்து கொள்ளாதவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது, ஆனால் திரைப்படத்தில் கம்யூனிசம் பற்றிய எழுத்துகளால் பெரியார் கட்சியும் பத்திரிக்கையும் பிரிட்டிஷ் காரர்களால் முடக்கப்படும் என்ற நிலை வந்தபோது கம்யூனிச பொருளாதார கொள்கை முக்கியம், ஆனால் அதை விட முக்கியம் சாதி ஒழிப்பு, அதனால் கொஞ்ச காலம் கம்யூனிசத்தை தள்ளி வைப்போம் என்று தன் முதற் குறிக்கோளை எதற்காகவும் இழக்காமல் இருக்க சமரசம் செய்து கொண்டார் என்ற காட்சியமைப்பு பெரியார் பற்றிய சமரசம் தொடர்பான என் எண்ணத்தை மாற்றியது.

பெரியாரின் கணிப்புகள்
காந்திஜியிடம் மேல்சாதி மக்களின் வாழ்வாதார மனுதர்ம கொள்கைகளை மாற்ற முயன்றால் உங்களையே உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று எச்சரிப்பதும், அனைவரும் அர்ச்சகர் சட்டம் 25 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதியினால் கொண்டு வரப்பட்டபோது கோர்ட் குறுக்கே வரும் பார்த்துக்கொள் என்று எச்சரிப்பதும் பெரியார் எந்த அளவிற்கு இந்த சமூகத்தின் அவலத்தை புரிந்து கொண்டுள்ளார் என்று நன்றாக தெரிகின்றது.

படத்தில் சாதியம் மற்றும் கடவுள் மீதான விமர்சனங்கள் நகைச்சுவையாக நக்கலாக சொல்லப்பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதால் படம் ஒரு ஆர்ட் பிலிம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் கொண்டு செல்கிறது.

வியாபார மண்டிக்கு பெரியாரின் தந்தை வரும் போது அனைவரும் "நமஸ்காரம்" சொல்லி மிகுந்த மரியாதை கொடுப்பதும், அதன் பின் மண்டிக்கு வந்து முனிசிபல் கவுன்சிலராகவும் மரியாதைக்குறியவராகவும் இருக்கும்

பெரியாரின் தந்தையை பெயர் சொல்லி அழைத்து அடா புடா என்று மரியாதையில்லாமல் பேசும் ஒரு உயர்சாதி முனிசிபல் கிளார்க்கை பற்றி பெரியார் கணக்கரிடம் அய்யா முனிசிபல் கவுன்சிலர் ஆனாலும் ஏனிந்த கிளார்க் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்று கேட்க அதற்கு கணக்கர் அவர்கள் சாதியில் உசந்தவர்கள் நம்மிடம் எத்தனை பணம் பதவி இருந்தாலும் நம்மால் அவர்களைப்போல ஆக முடியாது என்று சொல்வதும் படக்காட்சிக்காக அமைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது, இவைகளை சிறு வயதிலிருந்தே பெரியார் பார்த்திருப்பார் , அதன் காரணங்களையும் அப்போதிருந்தே அறிந்திருப்பார் அப்படியிருந்தும் திடீரென பெரியார் இந்த கேள்வியை கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு அப்போதிருந்த சூழ்நிலை புரிய வேண்டுமென்ற காரணமே இருந்திருக்கலாம்.

சட சடவென்று காலங்கள் மாறுவது பெரியாரின் தாடி வளர்வதை வைத்து புரிந்து கொள்ள முயன்றாலும் மின்னல் வேகத்தில் காலங்கள் மாறுவது படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் இழை லேசாக தடைபடுகின்றது. ஆனாலும் தொண்ணூற்றுஐந்தாண்டு கால வாழ்க்கையை சில சில சம்பவங்கள் மூலமாக காட்டும் போது இது ஏற்படக்கூடும், படம் கோர்வையாக காட்சி அமைப்புகள் பெரிதும் அறுபடாமல் காண்பித்திருக்க எடிட்டர் லெனினின் கத்திரி நன்றாகவே வேலை செய்திருக்கின்றது.

படத்தில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விடயம் ஒளிப்பதிவு, காலத்தை பிரித்து காட்டும் ஒளியமைப்பு ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானை ஒளிஓவியர் என்று சொல்லுவதற்கு பொருள் சேர்க்கின்றது.

என்ன தான் படத்தின் முடிவு நாம் அறிந்ததாகவே இருந்தாலும் படத்தில் பெரியாரின் இறப்பு சற்று கலங்க வைக்கிறது.

படத்தில் அத்தனை நடிகர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்... கடவுளே நீ கல்லா பாடல் நன்றாக மனதில் பதிந்து முணுமுணுக்க வைக்கிறது, 'ஓ ரசிக சீமானே' பாடலை நினைவு படுத்தும் ரகசியா பாடல் கேட்கும் படியாக
இருக்கின்றது, மற்ற பாடல்கள் சட்டென்று மனதில் பதியவில்லை.

பெரியார், அண்ணா முரண்பாடுகள், பெரியாருக்கு வாக்கு அரசியல் மீதிருந்த கோபம், அரசியல்வாதிகள் மீதிருந்த விமர்சனம் அத்தனையும் நேர்மையாக காண்பிக்கப்பட்டிருக்கின்றது

தமிழகத்தின் அத்தனை கட்சிகளுக்கும் பெரியாரே ஆதாரமாக இருந்திருக்கிறார்... தமிழகத்தில் பெரியாரின் தாக்கம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்காவது நிச்சயம் இருக்கும்.

கடவுள் எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என்ற புட்டியில் அடைத்து இன்றைய தலைமுறைக்கு ஊடகங்கள் காண்பித்திருக்கும் பெரியார் பற்றிய உண்மையான புரிதலை இந்த படம் ஏற்படுத்தும், பெரியாரை இந்த இரு கோணங்கள் தவிர்த்து மேலும் அறிந்து கொள்ள எத்தனித்தாலே போதும் மிச்சத்தை அதாவது அவர்களை உள்ளிழுப்பதை பெரியாரே பார்த்துக்கொள்வார், இந்த பெரியார் படம் இன்றைய தலைமுறையில் இன்னும் எத்தனையோ பேரை உள்ளிழுக்கப்போகிறது


தி.க. தலைவர் அய்யா வீரமணி அவர்களிடம் சில மாதங்களுக்கு முன் உரையாடிக்கொண்டிருந்த போது பெரியார் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும்போது சிதைக்கப்பட்டுவிடுமோ என்று என் கவலையை கூறினேன், அதற்கு இல்லை, நிச்சயம் அப்படியிருக்காது, நம்மிடம் பல விசயங்களை ஆலோசிக்கின்றனர், தகவல்கள் பெறுகின்றனர், படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் வெளிவந்த பின் பாருங்கள் என்றார், படம் முடிந்த பின் வீரமணி அய்யா அவர்கள் கூறியதை நினைத்துக்கொண்டேன்.... அத்தனை அற்புதமாக வந்திருக்கின்றது படம்.

இயக்குனர் ஞானசேகரனுக்கும் மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....

11 மாத பைத்தியகுழந்தை, தற்கொலை முயற்சி....நான் வியர்டா?

சாப்பிட்டிக்கொண்டே புத்தகம் படிப்பது, சோடா ஆர்வம் மற்றும் இன்ன பிற விசயங்கள் பல வலைப்பதிவர்களும் செய்வதாக சொல்வதால் அதெல்லாம் வியர்டே இல்லை என்றாகிவிட்டது.

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் ரொம்ப பொறுமைசாலி - ஷார்ட்டெம்பர்டு சரியான முன்கோபி

அல்ட்டவே மாட்டான் - சரியான அல்ட்டாப்பு, தலைக்கணம் பிடித்தவன்

கூட இருந்தா டைம் போறதே தெரியாது சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் - பேசறதுக்கு காசா கேக்குறாங்க, உம்மனாம் மூஞ்சி

முதல்முறை பாக்கும்போதே நல்லா பேசுறான் - சனியன் புடிச்சவன் ஒரு வருசமா இதே ஆபிஸ்ல இருக்கோம், லிப்ட்ல தனியா ரெண்டு பேர்தானே வரோம் ஒரு ஸ்மைல் கூட இல்லையே

பணத்தை பணமாவா செலவு செய்யறான் தண்ணியா செலவு செய்யறானே - சரியான கருமி, சோறாவது திண்றானா? இல்லையா?

இவைகள் அத்தனையும் என்னுடன் பழகியவர்கள், என் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் சொன்னது.


11மாத பைத்தியக்குழந்தை

பிறந்து பதினோரு மாதமே ஆகியிருந்தேன், கிராமத்தில் என் ஆயா(பாட்டி) என்னை வயலுக்கு தூக்கி சென்றிருந்தார், அங்கே வயல்வேலை செய்ய என்னை மரத்தடி நிழலில் போட்டுவிட்டு நான் விளையாடுவதற்கு அவர் கழுத்தில் இருந்த கயிற்றை கழற்றி கையில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார், அந்த கயிற்றை சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறேன், வேலை முடிந்து என்னை தூக்கிய ஆயா கையிலிருந்த கயிற்றை எடுத்தவுடன் கத்த ஆரம்பித்திருக்கிறேன், மீண்டும் கயிற்றை கொடுக்க அதை சுற்றிக்கொண்டிருந்தேன், வீட்டிற்கு சென்ற பின் அம்மா, அப்பா, அண்ணன் என எல்லோருமே கயிற்றை பிடுங்க முயற்சிக்க நான் கத்த அவர்கள் திருமப தர அங்கே ஒரு தொடர் ஓட்டமே நடதிருக்கு, சரி என்று கையில் கயிற்றை கொடுத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டு சட்டென்று விளக்கை போட அப்போதும் கையில் கயிற்றை வைத்து சுற்றிக்கொண்டிருந்தேனாம், வேறு வழியேயின்றி சில மைல்கள் தள்ளி இருந்த தியாக துருகம் என்ற ஒரு கிராம நகரத்திற்கு வந்து மருத்துவரை அந்த இரவில் பார்க்க அவர் தூக்க மாத்திரை தந்திருக்கிறார் விழிக்க விழிக்க அதை போடுங்கள் என்று சொல்ல, இரண்டு நாட்கள் தொடர் தூக்கத்திற்கு பின் எழுந்து சிரித்தேனாம், என் தந்தையின் மற்றொரு பெயர் "வெறியன்", வெறியன் சாமி என்கிற நாட்டார் தெய்வத்தின் நினைவாக அந்த பெயர் அவருக்கு, எனக்கும் இந்த சம்பவத்திற்கு பின் "வெறியன்" என்று சில சமயம் அழைப்பார்களாம், ஆனால் இந்த வெறியன் சாமி நினைவாக அல்ல, என்னுடைய வெறித்தனத்திற்காக,அதிலிருந்து எனக்கு விளையாட்டு பொருட்கள் என்பதே கிடைக்காமல் போக புத்தகங்களின் பக்கம் ஒதுங்கிவிட்டேன், நான்காவது படிக்கும்போதிலிருந்து ஆரம்பித்தது ஜூனியர் விகடன், ஐந்தாவதிலிருந்து ராணி முத்து, இந்த வயசிலேயே இந்த புத்தகங்கள் படிக்கிறாயா என்று சுற்றத்தார் அறிவுரைசொல்லிக் கொண்டேயிருக்க இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

நடு இரவு அழுகை....
ஒரு மூன்று வயதிருக்கும், அம்மாவழி தாத்தா வீட்டில் இருந்தோம், வழக்கம்போல இரவில் கத்த ஆரம்பித்தேன் மிகக்கடுமையாக கத்த வீட்டில் எல்லோரும பயந்து போய் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மாமாவீட்டிற்கு தூக்கி சென்றனர், வழியெல்லாம் கத்திக்கொண்டே வந்தேனாம், மாமா ஆசிரியர் என்றெல்லாம் ஆர்.எம்.பி என்ற மருத்துவம் படித்து அந்த கிராம மக்களுக்கு டாக்டராகவும் இருந்தார், பூச்சிக்கடி, தேள்கடி, காயங்கள் போன்றவற்றிற்கெல்லாம் முதலுதவி செய்து பின் கடலூர் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பார், ஏதேனும் பூச்சி கடித்துவிட்டதோ என்று பயந்த என் அப்பா அம்மா பதட்டத்தோடு நடு இரவில் என் மாமாவீட்டு கதவை தட்ட சிறிது நேரம் திறக்கப்படவில்லை, அப்போது அழுகையை நிறுத்திவிட்டு "அப்பா மாமா தூங்கறாரு போல வா போலாம் நாம என்றேனாம்...." அதே நேரம் மாமா வீட்டுக்கதவை திறக்க அந்த இரவில் பதட்டத்தை மறந்து எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்கொலை முயற்சி
நம்பினால் நம்புங்கள் அப்போது வயது வெறும் ஐந்தரை தான், பகல் பதினோரு மணி அளவில் தாத்தாவோடு சைக்கிளில் கொல்லைக்கு(வயலுக்கு) சென்று விட்டு அங்கிருந்த என் மாமா பையனோடு விளையாடிக்கொண்டே மலைக்கு சென்று சுற்றிவிட்டு நான் திரிந்து கொண்டிருக்க என்னையும் அவனையும் காணவில்லை என்று இங்கே அல்லோகலப்பட்டுக்கொண்டிருக்க சாயங்காலம் ஏழு மணி வாக்கில் மீண்டும் மோட்டார் கொட்டாய்க்கு நாங்கள் திரும்ப என் தந்தை எங்களை மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார், வரும் வழியில் அவர் எதுவுமே பேசவில்லை, கோபமாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன், வீட்டிற்கு சென்ற பின் என் மாமி அவனை அடிக்காதிங்க என்று என் அம்மாவிடம் சொல்ல யாருமே ஒன்றுமே சொல்லாமல் நிற்க சட்டென்று ஒரு வேகம், இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கட கடவென தோட்டத்தில் இருந்த கிணற்றிற்கு வேகமாக நடந்தேன், மிகக்குறைந்த உயரமே இருக்கும் அந்த தடுப்புக்கட்டையை தாண்டி எட்டி பார்க்க பயங்கர இருட்டாக இருந்தது, ஒரு நொடி தாமதித்து சரி குதித்துவிடலாமென்று நினைத்த போது அம்மா பின்னால் இருந்து சட்டென்று தூக்கிவிட்டார், என்னடா கெணத்துல உழ போனியா? என்றார். சாவு என்றால் என்ன? தற்கொலை என்றால் என்ன? அந்த வயதில் இது பற்றியெல்லாம் என்ன தெரிந்தது என்பதெல்லாம் சுத்தமாக எனக்கு நினைவில்லை அந்த சம்பவம் மட்டுமே நினைவில் இருக்கிறது. எழுத்தாளர்னா தற்கொலை முயற்சி செய்திருக்கனுமாமே! அப்போ நானும் எழுத்தாளனா?

பிடிவாதம்
பொதுவாக அமைதியானவன், விட்டுக்கொடுப்பவன் ஆச்சி பூச்சி என்று பெயர் சுற்றத்தில் இருந்தாலும் எதிலாவது பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் அது முடியும் வரை அதை விட மாட்டேன், பைத்தியம் மாதிரி அதை செய்து கொண்டேயிருப்பேன், கல்லூரியில் படிக்கும் போது பூஞ்சை மாதிரி இருப்பேன், ஆனால் தடகளப்போட்டி பயிற்சி எடுக்க வேண்டுமென வெறித்தனமாக பயிற்சி செய்து சில பதக்கங்களையும் வென்றேன்.

பிரான்சிலிருந்து நண்பன் எடுத்துவந்த ஒரு வீணாப்போன செல்போனின் பேட்டரி வாங்க ஒரு நாள் முழுக்க பெங்களூரை சுற்றி பைக்கில் வெறி பிடித்த மாதிரி சுற்றி சுற்றி வந்து, கடைசியாக இரவு 10.00 மணிக்கு பர்மாபஜாரில் ஆயிரம் ரூபாய் கொடுத்து பழைய பேட்டரியை வாங்கிவந்தேன், அந்த பேட்டரியும் வேலை செய்யாம போயி வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டது வேறு கதை.

ஒரு ஜெராக்ஸ் எடுக்க இரவு 1 மணி வரை செகந்தராபாத்தை சுற்றி வந்தேன், இப்படியாக இப்ப இப்பவே முடிக்கனும்னு இப்ப ராமசாமியா திரிவது இன்னமும் முழுசா நிற்கலை.

என் தந்தை அடிக்கடி சொல்வார், என்னை எவனும் 'பள்ளி'சாதியென்றே சொல்லா மாட்டான், எல்லோரும் என்னை என்ன சார் நீங்க ரெட்டியாரா, முதலியாரா என்று தான் கேட்பார்கள் என்று. அப்போது அவரது முகத்தில் ஒரு பெருமிதம் தோன்றும், 'பள்ளி' சாதியில் பிறந்துவிட்டோமே என்று தாழ்வுமனப்பாண்மையாலோ அல்லது ரெட்டியார், முதலியார் உயர்சாதி என்று தம்மை நினைக்கிறார்கள் என்றோ அல்ல, 'பள்ளி' சாதியை சேர்ந்தவர்கள் என்றாலே குடிப்பார்கள், சீட்டாடுவார்கள், குடும்பத்தை கவனிக்க மாட்டார்கள், ஊர் சுற்றுவார்கள் இந்த சாதி ஆட்கள் இப்படித்தான் என்ற பிம்பத்தை உடைத்துவிட்டேன் என்ற பெருமிதம் தான் அவர் முகத்தில், வர்ணாசிரமத்தின் முகத்தில் அவரால் இயன்ற அளவிற்கு அறைந்துள்ளார். பத்தாம் வகுப்பில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தேன் எங்கள் பள்ளியில் அந்த மதிப்பெண்ணிற்கு பயாலஜி குரூப் எளிதாக கிடைக்கும், அப்பா எவ்வளவோ சொல்லியும் அதற்கு அடுத்தபடியாக இருந்த கப்யூட்டர் சயின்ஸ் தான் எடுப்பேன் என்றேன், அவரும் பலரிடம் போய் ஆலோசனை கேட்டுவிட்டு சொன்னார், அதெல்லாம் மாமி வீட்டு பசங்களுக்கு தான் சரியாக வருமாம் பாம்பே, டில்லின்னு தான் வேலைக்கு போகனும் அதனால வேண்டாம்னு *** சார் சொன்னார் என்றார், அப்போது எரிய ஆரம்பித்தது தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ன மாமி வீட்டு பசங்களுக்கு மட்டும் தான் சொந்தமா, நான் போறேன் பார் என்று, எங்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்தாலும் என் வேலை கம்ப்யூட்டர் தான் என்றிருந்தேன் உறுதியாக. நடுவில் அதில் சிறிய தொய்வு வந்த போதும் என் சீனியர் ஒருவர் மீண்டும் அதை தூண்டிவிட்டார், இன்று என் சொந்தமும் சுற்றமும் அவர்கள் குழந்தைகளிடம் மாமி வீட்டு பசங்களுக்கு தான் அது சரி வரும் என்று அவர்கள் குழந்தைகளை பயமுறுத்துவதில்லை, மாறாக என் பெயரை சொல்லி சொல்கிறார்கள்...

மயக்கம் அடித்து விழும் வரை வேலை செய்வது

விளையாட்டுத்தனம், கால் தரையில் படாமல் மிதந்த காலகட்டம் அது, ஏகப்பட்ட அரியர்கள், நான் எஞ்சினியரிங் முடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்தவர்களில் எங்கள் கல்லூரி விரிவுரையாளரும் அடங்குவார், கடைசி ஆண்டு ஏழாவது செமஸ்ட்டர் இதிலே தூக்குறேன் எல்லாவற்றையும் என்று முடிவு செய்து தேர்வுக்கு 10 நாட்கள் முன்பு ஆரம்பித்து பகல், இரவு தூக்கமில்லாமல் படித்து எழுதினேன், 5 நாட்களில் காலை மாலை என 9 தேர்வுகள், பலரும் ஒன்டே மேட்ச் ஆட நான் மட்டும் 5 டே மேட்ச் ஆடிக்கொண்டிருந்தேன், முழு பலத்தையும் பயன்படுத்தி தேர்வு எழுதினேன், தேர்வு மையத்திற்கு நடக்க கூட வலுவில்லை, தூக்கமின்மை அழுத்தங்களால் ஒரு தேர்வில் தேர்வாரம்பித்த அரை மணி நேரத்தில் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன், அந்த ஒரு தேர்வை தவிர மற்ற அனைத்து அரியர்களையும் ஏழாவது செமஸ்ட்டரிலேயே முடித்து கல்லூரியை ஆச்சரியப்படவைத்தேன், எட்டாவது செமஸ்ட்டரில் மிச்சமிருந்த அந்த ஒரு தாளையும் முடித்துவிட்டு வந்தேன்

வேலைக்கு சேர்ந்து ப்ராஜெக்ட் செய்யும் போது என்னை நம்பி பணி இருந்த கட்டத்தில் மயக்கம் அடித்து விழும் வரை இரவு பகலாக வேலை செய்வேன். பல முறை அலுவலகத்தில் இரவுகளில் யாருமில்லா நேரத்தில் மயங்கி டேபிளில் தலை சாய்த்து படுத்து நானே எழுந்து ஒரு காபி குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்வேன். இப்போதெல்லாம் அந்தளவிற்கு செய்ய முடியவில்லை.

பயமின்மை
ராஜினாமா கடிதத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலைபவன்(ஒரு உவமானத்திற்கு தான் சொன்னேன், ஆனால் எந்த நேரமும் வேலையைவிட்டு வெளியேற தயாராகவே இருப்பேன்), சாப்ட்வேரில் முதலில் நுழைந்த போது இருந்த வேலையின்மை பற்றிய பயமெல்லாம் சில காலங்களிலேயே போய்விட்டது, தவறு என்று நான் கருதினால் என் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதை நேரடியாக கூட்டங்களிலேயே சொல்வேன், எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதினால் நேரடியாக பேசுவேன், அதையும் மீறினால் உடனே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துவிடுவேன், சில ஆண்டுகளுக்கு முன் அதிக சம்பளம், பணி நிரந்தர வாய்ப்பு, இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு என்று என் எதிரில் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு சிலவாரங்களிலேயே வெளிவந்தேன் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றிலிருந்து.

மெக்கானிக்கல் துறையிலிருந்து சாப்ட்வேர் மாறும்போது என் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தவிர மற்ற பலரும் கூறினார்கள் இருப்பதைவிட்டு விட்டு பறக்க ஆசைப்படாதே என்று, AS400 லிருந்து வெப்க்கு மாறியபோதும் இதே தான், Perl, PHP,ஜாவா என மாறிய போது நல்லா தெரிந்ததை விட்டுவிட்டு ஏன் போகிறாய் என்றார்கள்.

ஒவ்வொரு மாறுதலும் ஒவ்வொரு புதுவிசயமும் எனக்கு நல்லதாகவே அமைந்தது. இன்று ஜாவாவிலிருந்து ஒரு காவாவுக்கு மாறவும் சாப்ட்வேர் துறையே இல்லையென்றால் வேறு துறைக்கு மாறவும் தயாராகவே உள்ளேன், மெக்கானிக்கல் துறையிலிருந்து சாப்ட்வேர் துறைக்கு மாறாமல் நமக்கு தெரிந்ததையே செய்வோம் என்றிருந்திருந்தால் கடலூர் சிப்காட்டில் ஏதாவது ஒரு கம்பெனியில் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சிபாரிசில் வேலை செய்துகொண்டிருந்திருப்பேன்.

சேரனின் மாயக்கண்ணாடிகள் நம்மை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை முழுக்க, அந்த மாயக்கண்ணாடிகளை உடைத்து தான் வரவேண்டும் மாயக்கண்ணாடிகளை பார்த்து நாம் பயந்தால் இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டியது தான்.

கோபம்

அத்தனை எளிதில் யாரிடமும் கோப்படமாட்டேன், பொதுவாக எல்லோரும் பொறுமையானவன் என்பார்கள் ஆனால் குடும்பத்தினர், மிக நெருங்கிய நண்பர்கஆள் இவர்களிடம் மட்டும் கோபம் சட் சட்டென்று வரும், யாரிடம் எனக்கு அதிக உரிமையிருக்கின்றதோ அவர்களிடம் மட்டுமே எனக்கு கோபம் வரும், என் கோபத்தால் உறவு பாதிக்கப்படாது, என்னை புரிந்து கொள்வார்கள் என்று நினைப்பவர்களிடம் மட்டுமே கோபப்படுவேன், நான் இப்படியாக நினைத்துக்கொண்டு யாரிடமாவது உரிமையெடுத்து அவர்கள் என்னை தவறாக நினைத்துவிட்டால் அத்துடன் அந்த உறவின் நெருக்கம் முடிவுக்கு வரும், அதன் பின் அவர்களிடம் நெருக்கம் பாராட்ட மாட்டேன், மற்றவர்களிடம் அத்தனை சுலபமாக கோபப்படமாட்டேன், ஆனால் என்னை கோபப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அதிகரிக்க அதிகரிக்க அதை வெளியே காட்டாமலே இருப்பேன் ஒரு நாள் வெடிக்கும் எரிமலையாக... அன்று பார்ப்பவர்கள் நிச்சயம் என்னை அப்படி கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்....

நாலு, ஆறு என அழைத்த நண்பர்கள் மன்னிக்கவும் என்னால் பதிவிட இயலவில்லை, வியர்டுக்கு அழைத்த நண்பர்களுக்கு நன்றி, தாமதமானாலும் இப்போது போட்டுவிட்டேன்

குள்ளநரித்தனம், ரத்தம் குடிக்கும் ஓநாய்

சாதிக்கலவரங்கள் எப்படி உயர்த்தப்பட்ட சாதிக்காரர்களால் தூண்டிவிடப்படுகிறது என்பதை சில புனித பிம்பங்கள் தவிர பலரும் அறிந்திருக்க கூடும்... வேண்டும் முசுலீம்களை கொல்ல நாமெல்லாம் 'இந்து' என்ற வேசம் போட்டு தலித்களை பயன்படுத்திய கூட்டம் இப்போது தி.க.வினரோடு மோத இத்தனை நாள் 'பள்ளி சாதி'யாக இருந்தவர்கள் 'கம்மாள'காரர்கள் இப்போது 'சான்றோர் சாதி' ஆகிவிட்டார்கள்.... இரத்தம் குடிக்கும் ஓநாய்களே, இனியும் உமக்கு கிடைக்கு இரண்டு ஆடுகள் கிடைக்காது....

கடலூர் மாவட்டங்களில் சாதிக்கலவரங்கள் நடந்த காலகட்டங்களில் பெரும்பாலானவை நிலவுடமையாளர்களால் தூண்டிவிடப்பட்டவையாகவே இருக்கும், என்ன "படாச்சி" (படையாட்சி) அவனுங்க துள்ளுறானுங்களே எதுனா கேக்கறது, நாங்க எப்படி கேக்கமுடியும் நீங்க தான் கேக்கனும், இப்படியாக கொளுத்தி விட்டுவிட்டு சென்றுவிடுவர்கள் உயர்சாதி நிலவுடைமையாளர்களாக இருக்கும் ரெட்டியார்கள், உடையார்கள் இன்ன பிற அப்புறம் நேற்று வரை "பள்ளி"யா இருந்தவங்க படையாட்சின்னு ரெட்டியாரே சொல்லிட்டாரு, ஒடையாரே(உடையார்) சொல்லிட்டாருன்னு மூளையை மூத்திர சந்தில் வைத்துவிட்டு கிளம்பிடுவானுங்க.... ரெட்டியார் சொல்லி ஒண்ணு, உடையார் சொல்லி ஒண்ணு, தம் பங்குக்கு ஒண்ணுன்னு கலவர காடாகிடும் ஊரு, இப்போ இந்த மாதிரி எதுவும் வேலைக்காகலை போல கொஞ்ச நாளா அமைதியாத்தான் இருக்கு ஊரு மருத்துவர் இராமதாசு, வி.சி. தலைவர் திருமா போன்றோர்கள் அதிக அக்கறை எடுத்து கிளம்பும் பொறியை உடனடியாக அணைத்துவிடுவதால்....

தினமலரில் ஒரு குள்ளநரி ஓநாய்தனமாக இரத்தம் குடிக்க எழுதிய கடிதம் கீழே... இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு அப்போ மட்டும் தகுதியில்லாதவங்க, ஆனா பூணுல் அறுத்தவங்களை உதைக்க மட்டும் ஆள் தேவை, கோவில் கருவறைக்குள் அனுமதி இல்லை, கோவில் சிற்றம்பலத்தில் பாட போனால் கையை உடைத்து அனுப்புவார்கள் அப்போதெல்லாம் மனுசனா கூட மதிக்கவில்லை இப்போ "சான்றோர்கள்" பூணுல் அறுப்பாளர்களை உதைக்க வேண்டுமாம், குள்ள நரிகளின் குசும்பு வேலைகள் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது, ஓநாய்களின் அழுகுரல் ஓங்கி ஒலிப்பது புரிகிறது.


பூணுல் அறுப்பு வீர தீரம் ஓயுமா?

டி.வி.நரசிம்மன், மயிலாப்பூரிலிருந்து எழுதுகிறார்: ஈ.வெ.ரா., சிலை எந்த ஊரில் சேதப்படுத்தப்பட்டாலும், உடனே பிராமணர் பூணுõலை அறுத் தெறிந்து, தம் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்வதில், தி.க.,வினர் வெகு முனைப்புடன் செயல்படுகின்றனர்.பிராமணன் மட்டும் பூணுõல் அணிந்து கொள்வதில்லை. "கருமார்' அதாவது, இரும்பு உலைக் களத்தில் வேலை செய்கிறவரும், கோமுட்டி செட்டியாரும், வைசிய செட்டியாரும், சத்திரியர்களும் கூட பூணுõல் அணிகின்றனர்.வன்னிய குல சத்திரியர்கள் பூணுõல் அணிகின்றனர். அவர்கள் தங்களை சான்றோர் என அடைமொழியோடு அழைத்துக் கொள்கின்றனர். சத்திரியனுக்கு உரிய அந்த வேகம், ஆக்ரோஷம், ஆவேசம் இவைகளோடு விவேகமும் கொண்டவர்கள் என்பதாலேயே அவர்கள், "சான்றோர்' எனப்படுகின்றனர்.கருமார் இனத்தவர் பூணுõலை அறுத்தால், உலைக்கள நெருப்பிலேயே போட்டுப் பொசுக்கிடுவர்; வன்னிய குல சத்திரியர் பூணுõலை அறுத்தால் அறுக்கிற கையைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போடுவர்; பிராமணன் பூணுõலை அறுத்தால் அவன் ஒன்றும் செய்ய மாட்டான். அவன் கையில் தர்ப்பைக் கட்டுதானே இருக்கிறது; இது தான் நிதர்சனம்.ஈ.வெ.ரா., சிலைக்கு தினசரி அபிஷேக, ஆராதனைகள் செய்யச் சொல்லி பணம் கொடுத்துப் பணியில் அமர்த்தினால், தன் வயிற்றுப் பிழைப்புக்காக ஈ.வெ.ரா., சகஸ்ரநாமம் கூட இயற்றி, பூஜை செய்ய முடியும் பிராமணரால். புராண காலத்தில் இரண்யகசிபு, ராவணன் போன்றோர் கூட பூணுõல் அணிந்து கொண்டிருந்தனர். அவர்களும் முனிவர்களை இம்சை செய்ததாக புராணம் சொல்கிறது. ஆனால், அவர்கள் அதற்கான பயனை அடைந்து விட்டனர்.இவர்கள் கூற்றுப்படி ராவணன் தமிழ் பிராமண அரக்கன். ஆகவே, பூணுõல் அணிந்திருந்தாலும் அவன், "நம்மவன்' என்ற பாசம் தி.க.,வினருக்கு உண்டு. ஆனால், அவனை வேட்டையாடியவன் ஒரு சூர்ய குல சத்திரியன் தான்.சூர்ய குலம், சான்றோர் குலம் என்றாலே வன்னியகுல சத்திரியர் தான். அவர்கள் தான் பிராமணர்களை தி.க.,வினரிடமிருந்து காப்பாற்ற வேண் டும். தி.க.,வினர் பிராமணன் மேல் கை வைக்கும்போது, சான்றோர் குலம் கொடுக்கப் போகும் அடியில் தான் இவர்கள் அடங்குவர் போலிருக்கிறது.தங்களுக்கு சம வலிமை படைத்த சத்திரியனோடு மோதிப் பார்க்க தி.க.,வினர் தயாராகும்போது தான், இவர்களின் வீர தீரப் பிரதாபங்கள் அம்பலம் ஏறும்

பின்குறிப்பு:
அய் அய் ஆசை தோசை அப்பள வடை.....

மாயக்கண்ணாடி - சேரனின் சாதிய கூறு

மாயக்கண்ணாடி படம் பற்றி ஏற்கனவே தல பாலபாரதியின் விமர்சனத்தின் தலைப்பு மட்டுமே படித்தேன், எப்படியும் படம் பார்க்கப்போறோம் எதிர்பார்ப்பு இல்லாமல் போகலாமென.... பட விமர்சனம் எழுதலாமென நினைத்திருந்தேன் படம் பார்க்க பார்க்க அந்த ஆர்வமே போய்விட்டது..... முதலில் சுருக்கமா பட விமர்சனம்

இடைவேளைக்கு முன் - போடாங்க.....
இடைவேளைக்கு பின் - ம்....

சேரனுக்கு சொல்ல நினைப்பது - நாலு நல்ல வசனங்கள் மட்டும் படத்தை தூக்கி நிறுத்தாது....

இப்படியாக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன் படத்தின் கடைசி கட்டத்தில் ராதாரவி வழங்கும் அந்த பெரிய லெக்சர் வரை, ஏற்கனவே சேரன் மீது பாரதி கண்ணம்மா போன்ற படங்களின் வசனங்களில் சாதிய கூறு வசனங்கள் கொட்டி கிடந்ததும் சேரன் மீது புரட்சி புடுங்கி முற்போக்கு பிம்பங்கள் எதுவும் எனக்கு இல்லை.

முகவரி என்றொரு படம் அஜீத் நடித்திருந்தது, கிட்டத்தட்ட இதே கதைதான் எந்த உறுத்தலும் இல்லாமல் படம் முடிக்கப்பட்டிருக்கும், ஆனால் சேரன் இங்கே குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவு தருவது மாதிரி உன் தொழிலில் நீ தான் மாஸ்ட்டர், புது தொழிலுக்கு போகனும்னா அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும், இதைத்தானேய்யா சாதிய சனாதான தர்மம் சொல்லிக்கொண்டு வருகின்றது, பாட்டன் பூட்டன் அப்பன் தொழில் உனக்கு எளிதாக வரும் அதையே செய் என்று அதற்கு சப்பைகட்டும் கட்டுகிறது, முடிவெட்டுபவன் காலம் பூரா முடி வெட்டதான் வேண்டும் என்ன முதலில் தரையில் ரோட்டில் உக்கார்ந்து வெட்டலாம், பிறகு வேண்டுமானால் குளிர்சாதனம் பூட்டப்பட்ட கடையில் வைத்து வெட்டலாம், ஆனால் முடிதான் வெட்ட வேண்டும் கடைசிவரை என்பதைத்தான் வலியுறுத்துகிறாரா சேரன்.

ஏற்கனவே "செய்யும் தொழில் தெய்வம்" என்று சொல்லி அடித்தட்டு மக்களின் கையிலலேறிய பீ வாளியும், தொடப்பைகட்டையும், சவரகத்திகளும், இன்ன பிற கருவிகளும் கையிலிருந்து இறங்காமல் பார்த்துக்கொண்டது சமூகம், இப்போது புது உத்தியாக தொழில் திறமை, செய்யும் தொழிலிலேயே முன்னேறு என்று ஆரம்பித்துவிட்டது சாதிய கூறுகளை தொடர்ந்து வைத்திருக்க.....

பிற்சேர்க்கை
இதுல ஏங்க சாதிப் பிரச்சன வந்தது.? இதிலே சாதிய கூறுகள் நுட்பமாக திணிக்கப்பட்டுள்ளது, புது தொழிலுக்கு போனால் அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும்... என்பதில் ஆரம்பிக்கிறது, அப்படியென்றால் அப்போ அவனுடைய பழைய தொழில் பிறக்கும்போதே ரத்தத்தில் ஊறியிருந்ததா என்ன? அது கற்றுக்கொள்ளும்போது அதுவும் புதுத்தொழில் தானே? அப்போ மட்டும் அதில் எல்.கே.ஜி இல்லையா?

இங்கே பழைய தொழில் என குறிப்பிடப்படுவது என்ன? ஒரு தொழிலை புதிதாக கற்றுக்கொண்டாலும் அது எப்போது பழைய தொழிலாகுமென்றால் அவங்க அப்பன், குடும்பம் செய்யுற தொழில்தான் அவன் பிள்ளை புதிதாக கற்றுக்கொண்டாலும் அவன் பிள்ளைக்கு அது பழைய தொழில் தான்....

இன்னமும் சாதியை அடிப்படையாக வைத்து அடிமட்ட தொழில் செய்யும் முறை மாறவில்லை, இப்படியான நேரத்தில் அம்மாதிரியான ஒரு தொழிலை காண்பித்து இப்படியாக பேசியிருப்பது சாதிய கூறு அல்லாமல் வேறென்ன?

பாசிச தமிழ்மணம், ராயர் காபி கிளப்பை பார்த்தாவது திருந்துமா?

ஏ பாசிச தமிழ்மணமே, வலைப்பதிவருக்கு 24 மணி நேரம் கெடு அளிக்கின்றீர் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்க, ஏ பாசிச தமிழ்மணமே உமக்கு என்ன கலைஞர் கருணாநிதி என்று நினைப்போ விளக்கம் விளக்கத்திற்கு விளக்கம் அதற்கு தமிழில் அருஞ்சொற்பொருள் தருதல் அதற்கு இன்னொரு விளக்கமென்று ஸ்ப்பா தாங்கலை, ஏ பாசிச தமிழ்மணமே பதிவு வைத்திருப்பதால் அரவிந்தனை நீக்குகின்றாய் அன்பிற்கினிய ச.திருமலையை என்ன சொல்லி நீக்குவாய் அவர்கிட்டதான் வலைப்பதிவே இல்லியே இருந்தாலும் அது தமிழ்மணத்தில் இல்லியே, அட்லாண்டிக்கிற்கு அப்பால் இருந்து எழுதும் மாபெரும் எழுத்தாளர் சிந்தனையாளர் மா மேதை அன்பிற்கினிய பி.கே.சிவக்குமார் ஏற்கனவே மானத்துடன் பதிவை பாசிச தமிழ்மணத்திலிருந்து விலகியிருக்கும் போது அவரை எப்படி நீக்குவாய் பாசிச தமிழ்மணமே...

ஒரு வலைப்பதிவை நீக்க அதுவும் உம் மீது சந்தனம் பூசும் வலைப்பதிவை நீக்க பாசிசத்தனமாக மின் மடல் அனுப்புகிறாய், பாசிசத்தனமாக பதிவர் பக்கங்களில் அறிவைப்பை வெளியிடுகிறாய், வெளிப்படையாக கெடுவைக்கிறாய்.... ராயர் காப்பி கிளப்பு தெரியுமா? அதை பார்த்து திருந்துமா பாசிச தமிழ்மணம்?

எல்லே ராம் என்ற ராயர் காப்பி கிளப்பு யாகு குழு மாடரேட்டர் எத்தனை அழகாக சொன்னார் ஒரு கடிதத்தில் "பொது மேடை தந்து உபசரிக்கிறோம் என்பதற்காக அங்கே அசிங்கம் பண்ணித் தலையில் பூசிக்கொண்டு ஆடுவேன் என்பதா?

இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள். வெளிப்படையாகவே சொல்லுகிறேன். யாருக்காவது இங்கே வருவதோ, நாங்கள் ஏதாவது எழுதுவதோ, பேசுவதோ பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து தாராளமாக விலகி விடுங்கள். ராகாகிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே யாரையும் நாங்கள் கையைப் பிடித்து அழைத்து வரவில்லை.

இன்னும் மூன்று வருடங்களில் விண்வெளிக்கு இந்தியா போகப் போகிறது. தரையிலாவது கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் சொல்லுவதை நல்லவிதமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எல்லே ராமராயன்
"
எல்லே ராமராயன் எத்தனை அழகாக 'ர்' விட்டு போனதற்கு எவ்வளவு ஜனநாயகத்தன்மையோடு பதில் சொல்லியுள்ளார், என்னது என்ன 'ர்' விட்டு போச்சா? ஜெயேந்திரர் எவ்வளவு புனிதமானவர், அவரைப்போய் ஜெயேந்திரன் என்று சொன்னால் என்னாவது.... அது மட்டுமா சொன்னார் எவ்வளவு சனநாயகத்தன்மையோடு சொல்லியிருக்கிறார் "மட்டுறுத்துனர்/ஓனரான என்னால் உங்களை இங்கிருந்து விலக்கியிருக்க முடியும்.
கடிதத்தை வெளியிடாமல் இருந்திருக்கவும் முடியும். ஆனால் நான் செய்யவில்லை.
உங்கள் மடலை மட்டுறுத்தி, எதையும் மாற்றாமல் வெளியிட்டவனும் நான் தான்.
"புரியலையா மேலும் படியுங்கள்

--- In RaayarKaapiKlub@yahoogroups.com, "Nambi" wrote:
தீய சக்திகள் எல்லா இடத்திலும் உண்டு. ஆனால் அதை ஒரு பிரிவினர் மேல் மட்டும் தீவிரவாதம் என்றால் என்ன என்று சற்று சிந்திக்க வேண்டி உள்ளது. ஒஸாமாக்கள், புஷ் கள், ஜெயேந்திரன்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா?

அன்புடன்
நம்பி.

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2800

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2798

-0-

Re: Fwd: Condemnation


நம்பி,

ஒசாமா, தெரியும்; புஷ், கேள்விப்பட்டிருக்கிறேன்; ஜெயேந்திரன் யார்?

எல்லே ராமராயன்

------------------------------------------
எல்லே ராமராயன் இப்படின்னா இன்னொரு மாடரேட்டர் இரா.முருகனோ ஜெயேந்திரனில் "ர்" விட்டுபோனதற்கு துடித்து போனாராம், எல்லேராமின் மின் மடலிலிருந்து

"நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும். நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில் இன்னரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை."

(பாவம் இரா.முருகன் ஜெயேந்திரனில் "ர்" விட்டுப்போனதற்கே துடித்துப்போனவர் சொர்ணமால்யா, சங்கரராமன் கொலை இத்தியாதி இத்தியாதிக்கெல்லாம் என்ன ஆயிருப்பார் என்றே தெரியவில்லை)

ஜெயேந்திரனில் "ர்" விட்டுப்போன மாபெரும் ஆபாச செயலுக்கு, மாபெரும் குற்றச்சாட்டிற்கு ஒரு நீண்ட விளக்க மடல் அப்புறமாதான் நீக்கம், அதும் கூட "After this Nambi was banned from the group. i.e. he existed in the
group. but his priviledge to send mails were taken away." இப்படி சனநாயகத்தன்மையோடு இருக்கும் ராயர் காபி கிளப்பை பார்த்து கற்றுக்கொள்ளட்டும் பாசிச தமிழ்மணம்.

அண்ணார் எல்லே ராமராயனின்(பதிவர் முகமூடி அல்ல, அவரே இதை ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்) முழுகடிதம் மிகுந்த சனநாயகத்தன்மையோடு இருக்கும் படித்து பாருங்கள்.... பாசிசத் தமிழ்மணம் இனியாவது இதை படித்து திருந்தி நடக்கட்டும்.....


Re: Fwd: Condemnation


நம்பி,

இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள். தனிப்பட்ட முறையில் எனது நேற்றைய தூக்கம் பலியானதற்கு இந்துமதப் பெரியவர் ஜெயேந்திரர் பற்றிய உங்கள் இழி சொல்லே காரணம். மிகவும் வருத்தப்பட்டேன். 'அவன். இவன்' என்றெல்லாம் சபை நாகரிகம் கூட இல்லாமல் எழுதி விட்டீர்களே? ;-(((

மட்டுறுத்துனர்/ஓனரான என்னால் உங்களை இங்கிருந்து விலக்கியிருக்க முடியும். கடிதத்தை வெளியிடாமல் இருந்திருக்கவும் முடியும். ஆனால் நான் செய்யவில்லை. உங்கள் மடலை மட்டுறுத்தி, எதையும் மாற்றாமல் வெளியிட்டவனும் நான் தான். இந்துவான நீங்கள் ஒரு முஸ்லிம் பெரியவரைப் பற்றியோ, கிறிஸ்தவப் பாதிரியாரைப் பற்றி
யோ கேவலமாக இப்படித் துணிந்து எழுதியிருப்பீர்களோ?

இந்த வருட ஆரம்பத்தில் சென்னை சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக, ஜெயேந்திரரின் தரிசனம் எனக்கு மூன்று முறை கிட்டியது. அதில் இரண்டு முறை தனியே வெகு நேரம் பேசவும் முடிந்தது. இதற்கு முன் நான் அவருடன் பேசியதில்லை. அவரோடு பேசுவதற்கு டாட்டாக்களும், பிர்லாக்களும் காத்திருக்கையில் அவர் என்னோடு 45 நிமி
டங்கள் பேசியது மட்டுமல்ல, தனியறையில் பல வி்ஷயங்களைப் பற்றி இரு முறை பேசி ய்து என் அதிர்ஷ்டம், நான் எதிர்பார்க்காத மிகப்பெரிய ஆச்சரியம். பிறகு அவரது பலவித நடவடிக்கைகளை, மிக அருகில், பல பிராமணர் அல்லாத நண்பர்களோடு சேர்ந்து அருகே அமர்ந்து கவனிக்கவும் முடிந்தது. எந்த விதமான ஜாதிப் பிரஷ் டங்களையுமோ, ஏற்றத் தாழ்வுகளையுமோ நான் சத்தியமாக அங்கே காணவில்லை.
சொல்லப்போனால் கூட்டம் கூட்டமாகத் தமிழக அமைச்சர்கள் தான் அங்கே வந்து அவர் காலில் விழுந்து விழுந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் பிறந்த ஊரில் அரிஜனக் காலனியில், அங்கே இருப்பவர்கள் அடிக்கடி
கேட்டுக்கொண்டதனால், என்னால் இயன்ற அளவில், ஒரு காளி கோவில் கட்டித் தர ஏற்பாடுகள் செய்து வருகிறேன். (இதையெல்லாம் நான் வெளியில் சொல்லிக் கொள்ளுபவன் இல்லை. இப்போது வருத்த மிகுதியால் சொல்லும்படி ஆக்யிருக்கிறது. மற்ற நண்பர்கள் மன்னிப்பார்களாக.) மிகுந்த சந்தோ்ஷத்துடன் அதைக்கேட்ட ஜெயேந்தி ரர் மடத்திலிருந்தே கொஞ்சம் பண உதவி கொடுக்கவும் ஏற்பாடு செய்கிறேன், அரசிடம் சொல்லி ஏதாவது செய்யச் சொல்கிறேன் என்றார். அரிஜனக் காலனியில் கோவில்
கும்பாபி்ஷேகத்துக்கும் அவரே வருகை தருகிறேன் என்றிருக்கிறார். இத்தனைக்கும் என்னாலோ எங்கள் ஊர் மக்களாலோ அவருக்கு எந்த விதப் பிரதிபலனும் இல்லை. நான் எங்கள் ஊர் அரிஜனக் காலனிக்குள் நுழைந்து எல்லோருடனும் உட்கார்ந்து ஜாலி யாகப் பேசிக் கொண்டிருந்தது ஒரு இனிமையான, சகஜமான நிகழ்வு. மனித நேயம் பழகத் தெரிந்தவர்களிடம் மத மாச்சரியங்கள் அண்டுவது இல்லை.

நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும். நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில் இன்னொரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை.

பொது மேடை தந்து உபசரிக்கிறோம் என்பதற்காக அங்கே அசிங்கம் பண்ணித் தலையில் பூசிக்கொண்டு ஆடுவேன் என்பதா?

இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள். வெளிப்படையாகவே சொல்லுகிறேன். யாருக்காவது இங்கே வருவதோ, நாங்கள் ஏதாவது எழுதுவதோ, பேசுவதோ பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து தாராளமாக விலகி விடுங்கள். ராகாகிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே யாரையும்
நாங்கள் கையைப் பிடித்து அழைத்து வரவில்லை
. எங்களுக்குப் பிடித்ததை எங்கள் வீட்டுக்குள் தான் நாங்கள் பேசிக் கொள்கிறோம். எங்களுக்கு வெற்றுக் கூட்டம், வெறுப்பு கோ்ஷங்கள் தேவையில்லை. கற்றுத் தெளிந்த பல அறிஞர்கள் இங்கே எங்களுக்குப் பக்கபலமாக இருந்து எங்களை நல்ல வழியில் நடத்திச் செல்லுகிறார்கள்.

இன்னும் மூன்று வருடங்களில் விண்வெளிக்கு இந்தியா போகப் போகிறது. தரையிலாவது கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் சொல்லுவதை நல்லவிதமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எல்லே ராமராயன்

பின்குறிப்பு

"மாம்ஸ்களா ஆட முடியலையா?"

ஸாரி மாம்ஸ்களா

எங்க அப்பன் தாத்தன் இளிச்ச வாய்காலம் மலையேறிடுச்சி,
தட்டு தடுமாறின எங்க அண்ணனுங்க காலமும் முடிஞ்சி போச்சி
இப்போ ஃபுல் ஸ்பீடு தான், குறுக்கால நீ பூந்தா பேஜார் ஆயிடுவ

பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்



நேற்று இரவு சிங்கை வந்திறங்கிய பொட்டீக்கடையார் படம் இது, படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போய்விட்டார், மேற்படி படத்தில் காணப்படும் நபரை யாராவது பார்த்தால் உடனடியாக எமக்கு தெரிவிக்கவும்..

அமுக இளஞ்சிங்கம் வரவனை செந்திலின் பிறந்தநாள் ஏற்பாடுகள் சிங்கையில் செய்யப்பட்டிருந்தன, ஆனால் இளஞ்சிங்கம் அவசர அலுவல் காரணமாக வரமுடியாததால் சிங்கையில் அமுகவினர் சோகமாக காணப்பட்டனர், அமுக இளஞ்சிங்கம் வரவனைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

பொட்டீகடையார் அழைக்கிறார் - சிங்கையில் அமுக மாநாடு

பொட்டீக்கடையார் அழைக்கிறார்



அனானிகள் முன்னேற்ற கழகத்தின் (அமுக) முதல் உலக மாநாடு சிங்கையில் இன்றிரவு தொடங்கி ஞாயிற்றுகிழமை முடிவடைகின்றது(6,7,8 ஏப்ரல் 2007) மாநாட்டு அழைப்பாளர் அஞ்சா நெஞ்சன், அசகாய சூரன், அகில உலகமெங்கும் அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை படையெடுப்பு நிகழ்த்தும்(டேட்டிங் சைட்டுகளில்) பொட்டீக்கடையார் என்று அழைக்கப்படும் சத்ய ராஜேந்திர சோழர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமுக வின் மற்றொரு முக்கிய புள்ளி இளஞ்சிங்கமும் வருகை புரிகின்றார், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் மற்றும் இன்ன பிற விபரங்கள் இரகசியமாக வைக்கப்படுகின்றது.

மாநாட்டு விபரங்கள் சந்திப்பு தொடர்பாக இளம் புயல் குழலியை தொடர்பு கொள்ளவும்

நேரடியாக அமுக பொட்டீக்கடையாரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் மற்றும் இடவிவரங்களை பிறகு இதே பதிவில் வெளியிடுகின்றோம்.

அமுக மாநாட்டில் கண் பார்வையற்றவர்கள் பேசும் அதிசயமும், வாய்பேச முடியாதவர்கள் கேட்கும் அதிசயங்களும் நிகழ்த்தப்படும், ஹால்மார்க் முத்திரை பொறித்த வைர மோதிரத்தை பொட்டீக்கடையார் தம் மந்திர சக்தியால் வரவழைத்து இளம் புயல் குழலிக்கு வழங்கும் அதிசயமும் இடம்பெறலாம்.

அலைகடலென திரண்டு வாரீர்.... ஆதரவு தாரீர்

இடஒதுக்கீடு பாடல் - திரு.ஆர்யா ஐ.ஐ.டி. காரக்பூர்



1957. The first day of Dorothy Counts at the Harry Harding High School in the United States . Counts was one of the first black students admitted in the school, and she was no longer able to stand the harassments after 4 days.

இப்போதும் ஐ.ஐ.டி ஏ.ஐ.எம்.எஸ் போன்ற கல்விநிலையங்களில் உயர்சாதிவெறியர்கள் இம்மாதிரி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களை அவமானம் செய்ததாக படங்கள் வெளியாயின... இது தொடர்பான படங்கள் பதிவுகலை வலைப்பதிவிலே ஏற்கனவே படித்திருந்தேன் இப்போது சுட்டி கிடைக்கவில்லை யாரேனும் அந்த படங்களையும் சுட்டிகளையும் தந்துதவுங்கள்.

செல்லாவின் இந்த பதிவிலிருந்து ஐ.ஐ.டி. காரக்பூர் திரு. ஆர்யா அவர்களின் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான பாடல் இங்கே



F**k you..
For your mistakes
they just dont blame you
they blame your community
blame your ancestors too
They say its obvious
call it genetical issue

this is what happens
I know, for i went through
why wont your heart say
"f**k you" ??

So whats your fault
according to them?
can, being from this race
be a matter of shame?
They'll always be harsh
no matter what you proclaim

this is what happens
yeah this is true
why wont your heart say
"f***k you"??

I dont think you err
when you spit on them
their shitty practices
is to be condemn
we never wanted
but they rose the issue of "us and them"

we wanted equality
our policy needs review
its better to kick
and snatch it from you

you donno wat justice means
cause you are askew
and thts why our heart says
"f***k you"!!!

-- Saurav arya
http://panaache.blogspot.com/
Mechanical Engineering
IIT Kharagpur

நன்றி செல்லா...

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

க்ரீமிலேயர் வரையறை என்ன? பொருளாதார நிலை க்ரீமிலேயரை தீர்மாணிக்கின்றதா? ஏற்கனவே பலமுறை தேய்த்து விளக்கி சலித்து போனது புரியவேண்டாமென்று இருப்பவர்களுக்கு விளக்கி கிழிக்கத்தேவையில்லை, ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியாமல் இருப்பது தான் கொடுமை, விளக்கமாக பின்னொரு நாள் க்ரீமிலேயர் பற்றி எழுதுகிறேன் அதற்கு முன் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்கலாம் சோதனை முறையில். இதை வலியுறுத்தி முன்பு நான் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாக

செல்லா சொல்வது போல நாங்கள் என்று வந்துவிட்டால் கலைஞர் ராமதாஸ் குழந்தைகள் தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். அதுவே உங்களுக்கு என்று வந்தால் கோயிலில் மணியாட்டும்ஏழை அம்பிகள் தான் தெரிகிறார்கள்.

பொருளாதாரம் க்ரீமிலேயருக்கு அடிப்படையாக இருக்கக்கூடாது, க்ரீமிலேயர் பற்றிய உயர்சாதியினரின் கூச்சலுக்கு அடிப்படை காரணம் இடஒதுக்கீட்டை முழுமையாக ஒழிப்பதுவே, அதே மாதிரி இடஒதுக்கீட்டை ஒருதலைமுறை பயன்படுத்தினால் அவர்களின் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஒயின்ஷாப்பில் ஊற்றிக்கொடுக்கும் அரசாங்க வேலை இடஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டால், 'டி' கிரேட் பியூனாகவும், கிளார்க்காகவும் இடஒதுக்கீட்டால் பெற்றுவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியில்லையா? கலைஞருக்கும் இராமதாசுக்கும், பிற்படுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ், தாசில்தார்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?

படிக்காத, கல்வி விழிப்புணர்வு இல்லாத குடும்பத்திலிருந்து ஒரே தலைமுறையில் ஹைஜம்ப் அடித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாது, படிப்பறிவில்லாத குடும்பத்திலிருந்து கிளார்க்காகவும், 'டி' கிரேட் பணியாளர்களாகவும் வெளிவருவார்கள் (என் தந்தை தலைமுறை இப்படித்தான் பெரும்பாலும் ), அதிலிருந்து அடுத்த தலைமுறை தான் அடுத்த உயர்கல்வி நிலைக்கு கொண்டு சேர்க்க முடியும், உயர்சாதியினர் இடஒதுக்கீட்டிற்கே ஆப்பு வைக்கும் எண்ணத்தில் தான் இதை தடை செய்ய சொல்கின்றனர், ஒயின்ஷாப்பில் ஊற்றிகொடுக்கவும், 'டி'க்ரூப் கிளார்க்காக்வும் தலைமுறையை நிறுத்திவிட்டு அய்யோ பாருங்கள் இடஒதுக்கீடு கொடுத்தும் ஐஐடியில் இத்தனை இடம் காலியாக இருக்கின்றது, கல்லூரி ட்ராபவுட் இத்தனை என்று ஓலமிட்டு இடஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று மொத்த இடஒதுக்கீட்டிற்கும் ஆப்படிக்க நினைக்கின்றனர். பொருளாதாரத்தை க்ரீமிலேயருக்கு அளவுகோலாக கொள்ளச்சொல்லும் உயர்சாதி ஏழைப்பங்காளர்கள் முதலில் அவர்கள் சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு வழிவிடட்டும், எப்படியா? கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.

இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.

க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்

1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.

2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?

க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....

இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.

பிற்சேர்க்கை:

ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்


தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.

பின்னூட்டத்திற்கு இங்கே சுட்டவும்

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு

சமூகநீதிக்கு சாவு மணி அடிப்பதே குறிக்கோள் என்று அலையும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றம் 27% இடஒதுக்கீட்டிற்கு நேற்று இடைக்காலத் தடைவிதித்துள்ளது, அதற்கு காரணமாக சொன்னது புள்ளிவிபரங்கள் தேவையான அளவிற்கு இல்லையாம், கைப்புண்ணிற்கு கண்ணாடி கேட்டுள்ளது மனுநீதிமன்றம், இதெல்லாம் இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு அதன் பின் அதை செரித்துவிடும் நடவடிக்கை, முழுபுள்ளிவிபரம் வேண்டுமெனில் மிக எளிதாக ஒரு முறை உள்ளது, தற்போதுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எத்தனை விழுக்காடு உயர் சாதி மாணவர்கள் உள்ளனர், எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என கணக்கெடுக்கட்டும், இந்த கணக்கெடுப்பை ஒரே வாரத்தில் செய்துவிட முடியும்.

எலிமினேஷன் முறையில் இதை செய்யலாம், எஸ்.சி/எஸ்.டி அல்லாத, உயர்சாதி அல்லாத எல்லோரும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் தானே, எனவே மிக எளிதாக உயர்சாதியினர் எத்தனை விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிந்து விடும், அந்த உயர்சாதியினரின் விழுக்காடு இந்திய சமூகத்தில் அவர்களின் எண்ணிக்கைக்கு சமமா என்று தெரியாதா என்ன?

ஒரு கல்வி நிலையத்தில் 65% உயர்சாதியினர் ஆக்கிரமித்திருந்தால் உயர்சாதியினர் இந்திய சமூகத்தில் இருக்கும் எண்ணிக்கை விழுக்காட்டிற்கு மேலிருப்பதை இடஒதுக்கீட்டிற்கு ஒதுக்கட்டும், ஒரு 10 அல்லது 15% உயர்சாதியினர் எத்தனை இடங்களை ஆக்கிரமித்துள்ளனர், மற்றவர்கள் நிலை என்ன என்று உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதா என்ன? உயர்சாதிகளுக்கு உதவவே சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை செய்து மனுநீதி மன்றத்தை முதலில் நீதிமன்றமாக மாற்ற வேண்டும்.

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது தொடர்பாக இது வரை வந்த கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்துள்ளேன், மேலும் இது தொடர்பான கட்டுரைகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இந்த தொகுப்பு ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது பற்றியது, இன்னமும் இடஒதுக்கீடு- ஊடகங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - மனு நீதிமன்றங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - எதிர்ப்பாளர்களின் வாதங்களுக்கா பதில்கள், இடஒதுக்கீடு - வஞ்சகமாக ஏமாற்றப்படும் இடங்கள் என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டுள்ளேன் அவைகளை வரும் காலங்களில் வெளியிடுவேன்.

உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து நாளை தமிழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் செய்யும் கட்சிகள் மற்றும் பொதுமக்களை வாழ்த்துகிறேன், நாளை தமிழகத்தில் எழும் முழக்கம், தன் கோவணத்தை உருவிக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தை சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா முழுவதும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காதில் அறையும் எழுச்சி முழக்கமாக இருக்கட்டும்.


இட ஒதுக்கீடு பத்ரி

ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா? இராமநாதன்

சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா? குழலி

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா? குழலி

தலைமுறை வலிகள் குழலி

ஹிந்து கட்டுரை நன்றி சுந்தரமூர்த்தி

இடஒதுக்கீடு பற்றி ஞானி குரல்வலை

இயலாதோருக்கு இடஒதுக்கீடு அனுராதா

இடப்பங்கீடு சில நியாயங்கள்! திரு

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு… தருமி

நான் கண்ட மண்டல் கமிஷன். தருமி

சாதிகள் இருக்குதடி பாப்பா - முழுக்கட்டுரை தருமி

பூனைக்கு மணிகட்டும் காலம் ஆதவன் தீட்சன்யா

இட ஒதுக்கீடு குறித்து... கோவி.கண்ணன்

இட ஒதுக்கீடு எனும் ஆயுதம் சிவபாலன்

இடஒதுக்கீட்டின் வயது சில ஆயிரம் வருடங்கள் அசுரன் (தினகரன் கட்டுரை)

இடஒதுக்கீடு சில சிந்தனைகள் நேசக்குமார்

இடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு மகேந்திரன்.பெ

இடஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு? அறிவானந்தா

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா? குழலி

இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால், சுந்தரவடிவேல்

இடஒதுக்கீட்டின் கணிதம் ரவிசங்கர் அருணாச்சலம் மொழியாக்கம் : கார்த்திகேயன் இராமசாமி

இடஒதுக்கீடு பிரச்சனை: தலித் - பிற்படுத்தப்பட்டோர்ஒன்றிணைவதற்கான ஓர் அரிய வாய்ப்பு நன்றி கார்த்திகேயன் இராமசாமி

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா? கல்வெட்டு

பாக்கிஸ்தானில் இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்கள்

பாக்கிஸ்தான் தலைமை நீதிபதியாக ஹிந்து நியமணம் தட்ஸ்டமில் செய்தி தெரிவிக்கின்றது, ஆக இதனால் தெரிவது என்னவென்றால் மத அடிப்படைவாத நாடு என்று பொய்யாக இழித்தும் பழித்தும் சொல்லப்படும் பாக்கிஸ்த்தானில் இந்துக்கள் எத்தனை சுக வாழ்வு வாழ்கிறார்கள் என்பது புலப்படும் இந்துக்கள் அங்கே தலைமை நீதிபதியாக முடிகின்றதென்றால் அங்கே நிலைமை எப்படி இருக்கின்றது பாருங்கள்... இந்துக்கள் எத்தனை உயர்ந்த வாழ்க்கையோடும் உரிமைகளோடும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு இந்து தலைமை நீதிபதியானதே சான்று.

அய்யகோ இந்த இந்திய ஊடகங்களும் மேற்கு ஊடகங்களும் தான் பாக்கிஸ்தானை மத அடிப்படை வாத நாடு அங்கு பிற இனத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார்கள், பாருங்கள் இந்துக்களின் சுக வாழ்வை, கோவிலில் கும்பாபிசேகம் செய்கிறார்கள், தலைமை நீதிபதியாகிறார்கள்.... இனியாவது பாக்கிஸ்தான் மத அடிப்படைவாத நாடு என்று சொல்லாதிர்கள், இந்துக்கள் சுகவாழ்வு வாழும் நாடு பாக்கிஸ்தான், யூசுப் யுகானா போன்ற கிறுத்துவர்கள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளனர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லா மதத்தினரும் சுமுகமாக சுகவாழ்வு வாழும் நாடு தான் பாக்கிஸ்தான்.

பின்குறிப்பு
இந்தியாவில் ஒரு தலித் தலைமை நீதிபதியாகவும் ஒரு முஸ்லீம் குடியரசு தலைவராகவும் இருக்கின்றனர்

பாக்கிஸ்தானில் இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்கள்

பாக்கிஸ்தான் தலைமை நீதிபதியாக ஹிந்து நியமணம் தட்ஸ்டமில் செய்தி தெரிவிக்கின்றது, ஆக இதனால் தெரிவது என்னவென்றால் மத அடிப்படைவாத நாடு என்று பொய்யாக இழித்தும் பழித்தும் சொல்லப்படும் பாக்கிஸ்த்தானில் இந்துக்கள் எத்தனை சுக வாழ்வு வாழ்கிறார்கள் என்பது புலப்படும் இந்துக்கள் அங்கே தலைமை நீதிபதியாக முடிகின்றதென்றால் அங்கே நிலைமை எப்படி இருக்கின்றது பாருங்கள்... இந்துக்கள் எத்தனை உயர்ந்த வாழ்க்கையோடும் உரிமைகளோடும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு இந்து தலைமை நீதிபதியானதே சான்று.

அய்யகோ இந்த இந்திய ஊடகங்களும் மேற்கு ஊடகங்களும் தான் பாக்கிஸ்தானை மத அடிப்படை வாத நாடு அங்கு பிற இனத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார்கள், பாருங்கள் இந்துக்களின் சுக வாழ்வை, கோவிலில் கும்பாபிசேகம் செய்கிறார்கள், தலைமை நீதிபதியாகிறார்கள்.... இனியாவது பாக்கிஸ்தான் மத அடிப்படைவாத நாடு என்று சொல்லாதிர்கள், இந்துக்கள் சுகவாழ்வு வாழும் நாடு பாக்கிஸ்தான், யூசுப் யுகானா போன்ற கிறுத்துவர்கள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளனர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லா மதத்தினரும் சுமுகமாக சுகவாழ்வு வாழும் நாடு தான் பாக்கிஸ்தான்.

பின்குறிப்பு
இந்தியாவில் ஒரு தலித் தலைமை நீதிபதியாகவும் ஒரு முஸ்லீம் குடியரசு தலைவராகவும் இருக்கின்றனர்

தேவடியா மவனே, இழிபிறவி, நாகரிகம், விளிம்புநிலை இன்ன பிற

சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சளாற்று நாகரிகம், நைல் நதி நாகரிகம் எல்லா நாகரிகத்தையும் விட இப்போ பேசிக்கிட்டு இருக்காங்களே இங்கே நாகரிகம் நாகரீகம் இருக்கே சாமி தாங்கலைடா.... நாகரிகம்னு எதை எதையெல்லாம் சொல்கிறார்கள்.... வழக்கம் போல வெகு சன ஊடகங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பாசாங்கு நாகரிகம், போலித்தன நாகரிகம் இங்கேயும், வார்த்தைகளில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதும் ஆனால் கருத்தில் இருக்கத்தேவையில்லை இது தான் பச்சை நாகரிகம் இங்கே, "இழிபிறவி" என்று மூத்த பதிவர்கள், வயசில் மூத்த பதிவர்கள் இன்ன பிற நாகரிக கணவான்கள் எல்லாம் எழுதலாம் தப்பில்லை, அதில் எந்த தரக்குறைவும் இல்லை, ஆனால் தேவடியா மவனே என்பது ஆபாசம் அநாகரிகம்.... இழிபிறவியும் தேவடியாமவனேயும் ஒரே பொருள் தானே இந்த எழவில் இழிபிறவி எப்படி நாகரிகமானது, இழிபிறவி நாகரிகமான எழுத்தாக இருக்கும் போது தேவடியாமவனே மட்டும் எப்படி அநாகரிகமானது, வரிக்கு வரி இழிபிறவி என்ற எழுத்துக்களை படிக்கும்போது அதை எப்படி எந்த வித உறுத்தலும் இல்லாமல் படிக்க முடிகிறது? தேவடியாபையா என்ற எழுத்திற்கு எத்தனை அருவெருப்பு படுகிறோமோ அதே அருவெறுப்பு எப்படி இழிபிறவி என்ற எழுத்துகளுக்கு படாமல் நம்மால் தாண்டிப்போக முடிகிறது? எப்படியாக இந்த கட்டமைப்பு உருவானது?

திருநங்கைகளிடம் அசிங்கமாக ஆபாசமாக பார்த்து, பேசி இடுப்பில் கைவைக்கும் கணவான்களை "நண்பரே நீங்கள் செய்வது மிக தவறான செயல், தாங்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது, காந்தியை நினைத்து பாருங்கள், ஸ்ரீராமபிரானை நினைத்து பாருங்கள் அவர்களெல்லாம் எத்தனை ஒழுக்க சீலர்கள், தாங்கள் ஏன் இப்படி தவறுசெய்கிறீர்கள், நாங்களும் மனிதர்கள் தானே, எங்களை மட்டும் ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள்" என்று கதாகாலாட்சேபம் செய்தால் அது நாகரிகம் அப்படித்தானே?, அந்த நிலையில் இப்படியான கதாகாலாட்சேபம் செய்ய இயலுமா? "அடிங்கோ தேவடியாபயலே..." என்று வாயில் வருமா? சே... சே.... என்ன இருந்தாலும் அநாகரிகமாக கை வைத்தவனை அதைவிட அநாகரிகமாக தேவடியாபயலே என்று திட்டுவது அநாகரிகத்திலும் அநாகரிகம் என்று சொல்கிறோம், ஒரு வேளை "இழிபிறவி" என்று அறிவுறுத்தியிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமோ?

ஏற்கனவே சமூகத்தில் தவறாக உருவகப்படுத்தப்படிருக்கும் திருநங்கைகளை அவர்கல் எல்லாம் பாலியல் தொழில் செய்து பெண்களை வைத்து தொழில் நடத்துகிறார்கள் என்று மொத்தமாக சாணியடித்தால் சாணியடிப்பவரின் ஒழுக்கத்தையும் சந்தி சிரிக்கத்தான் வைப்பார்கள். இதில் என்ன அநாகரிகம்? திருநங்கைகளுக்காவது சமூகத்திலிருந்து ஒதுக்கல், படிப்பு, தொழில் இன்ன பிற என்று எந்த ஒத்துழைப்பும் கிடைக்காமல் சோற்றுக்கே வழியின்றி வேறு வழியின்றி பாலியல் தொழிலில் சமூகமே தள்ளிவிடுகிறதென்றால் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமாக இருக்கும் சிலர் இலட்சக்கணக்கில் வாங்கியவர்களுக்கும்/வாங்குபவர்களுக்கும் என்ன விளிம்புநிலை பிரச்சினை? திருநங்கைகளை பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்களிலும் காட்சி ஊடகங்களிலும் காண்பிப்பவர்கள் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமான அரிதாரங்களை அப்படி ஒரு படத்திலாவது காண்பித்திருப்பார்களா? காண்பித்துவிடத்தான் முடியுமா? திருநங்கைகள் என்றால் லிவிங் ஸ்மைல் மட்டும் வலைப்பதிவில் வந்து சவுண்டு விடுவார், மிஞ்சி மிஞ்சி போனால் விகடனிலோ ரிப்போர்ட்டரிலோ ஒரு கட்டுரை ஆவேசமாக வரும், ஆனால் சில அவர்களை காண்பித்தால் செருப்படி அல்லவா விழும், திரைப்படத் தொழிலே செய்ய முடியாதே, சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைமையாகிவிடும், அதனால் பொத்திக்கொண்டு போக வேண்டியது தான்.

உங்களுடைய(நம்முடைய) நாகரிக கையேட்டையும், நாகரிக பேச்சுகளையும் உங்களுக்கு (நமக்கு) சமமான அல்லது உங்களுக்கு (நமக்கு) மேலிருப்பவர்களிடம் காண்பிக்கலாம், ஆனால் புறக்கணிப்பின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் விளிம்புநிலை மனிதர்களிடமும் தயவு செய்து உங்கள் நாகரிக கையேட்டையும் அளவுகோலையும் தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள், நாகரிக கையேட்டை தூக்கிக்கொண்டு அவர்களிடம் ஓடும் முன் அவர்களிடத்தில் உங்களை வைத்து பாருங்கள்..... அந்த நிலையில்
நீங்களோ நானோ இருந்தால் அதையும் விட அநாகரிகமாக பேசுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.


தொடர்புடைய சுட்டிகள்

பத்தினி பதிவிரதை ராதிகா R. சரத்குமாரும், பாதக அலிகளும்

விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!

புது ப்ளாக்கர்க்கு தமிழ்மண கருவிப்பட்டையை சேர்ப்பது

புது ப்ளாக்கர் அடைப்பலகையில் தமிழ்மண கருவிப்பட்டை நிரலியை எளிதாக சேர்க்கும் விதமாக ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தி எழுதியுள்ள கருவி இங்கே (www.kuzhali.co.nr) கிடைக்கும், இத்துடன் புது ப்ளாக்கர் பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகள் சிதைந்து இருப்பதை சரி செய்யும் ஜெகத் அவர்களின் நிரலியையும் இணைத்துள்ளேன், இது ஏற்கனவே சில பதிவுகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை ஏற்கனவே தமிழ்மணத்தில் இருக்கும் ஒன்று தான், கூடுதலாக ஜெகத்தின் தமிழ் எழுத்துகள் சரி செய்யும் நிரலியையும் இணைத்துள்ளேன்.

தேசிய ஜல்லி















தேசிய ஜல்லி

என் மண்னைவுட்டு
மனையைவுட்டு

என் ஊட்டைவுட்டு
காட்டைவுட்டு

என் ஆட்டைவுட்டு
மாட்டைவுட்டு

எங்கோமணத்தை
மட்டும்வுட்டு

கரியெடுத்து
கரெண்டெடுத்து

நாடெல்லாம்
குடுக்கறாங்க

எங் குடுசைக்கும்
பம்பு செட்டுக்கும்
கரெண்டு கேட்டா

தண்ணிகுடுக்காத
சகோதரங்ககூட
பங்கு போட்டது
போவ ஜீரோவாட்ஸ்
பல்புக்கூட
பத்தலையே

சத்தம் போட்டு
கேட்டுப்புட்டா
தடாவும் பொடாவும்

சத்தம்போடாம
கேட்டுப்பாத்தேன்

சுத்தி சுத்தி
கொட்டுறானுங்க

லோடு லோடா
தேசிய ஜல்லி


இவர்களும் இந்தியர்கள்




களைந்(த்)த ஆடைகள்
சொல்லிக் கொள்(ல்)வோம்
இவர்களும் இந்தியர்கள்
உரக்க சொல்வோம்
ஜெய்ஹிந்த்

படத்திற்கு நன்றி விகடன்.காம்


ஒரே இந்தியா







ஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

போதை - குடிகாரர்களும் கவனிக்க


ஆளில்லா மைதானத்திலே
கோல் போட்டு
அலுத்துவிட்டேன்

இன்பம் கூட
வேண்டாம்
துன்பமாவது தா!

இரு கைகளிலும்
வாளேந்தி ஆவேசமாக
சுழற்றிவிட்டேன்

என் வாளில்
வெட்டுபடவும்
என்னை
வெட்டவும் தான்
ஆளில்லை

வெற்றி கூட
வேண்டாம்
தோல்வியாவது தா!

சதுரங்க ஆட்டத்திலே
வெள்ளை காயையும்
கறுப்பு காயையும்
மாற்றி மாற்றி
நகர்த்தி
பிளவாளுமையோ வென
மகிழ்ந்தேன்

மயிராளுமை யென
மட்டுப்படுத்தியது
மனது

என்னை நானே
கீறினேன்

குருதி வழிந்து
வலித்தது
குதூகலித்தேன்

மேலும் மேலும்
கீறினேன்
வலியோ
பழகிவிட்டது

விரல்களை
வெட்டியெறிந்தேன்

விரல்களின்றி
வாழ்ந்தபோது
விரல்களே
வீண்தானோ
என்றேன்

தற்போதொரு
கையில்லா
வாழ்க்கையும்
பழகிவிட்டது

அதனாலென்ன
வெட்டியெறியத்தான்
இன்னமும்
இரு கால்களும்
இரு காதுகளும்
இரு கண்களும்
ஒரு மூக்கும்
மிச்சமுள்ளதே

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா - காதலர் தின சிறுகதை


"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ, ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு" பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்க கையிலே அன்றைய தினத்தந்தியை வைத்துக் கொண்டு பொங்கிக்கொண்டிருந்தான் ஞாநி வாத்தியார் பையன், இந்த சாதி கட்சி தலைவனுக்கு வேற வேலையே இல்லை, காதலர்தினத்தை கொண்டாடக்கூடாதாம், காதலின் சக்தி தெரியுமா அவனுக்கு காதல் மதத்தை உடைக்கிறது, காதல் சாதியை அழிக்கிறது, காதல் வர்க்க வேறுபாட்டை களைகிறது, காதலைக் கண்டு சாதித்தலைவன் பயப்படறது ஒன்னும் ஆச்சரியமில்லை. சாதி அடிப்படையில் ஓட்டு பொறுக்க முடியாத சிக்கலை காதலும் கலப்பு மணமும் ஏற்படுத்திடுங்கறதாலதான் பயப்படுறானுங்க.

"அழாதடா ராசா என் கண்ணு இல்ல அழாத, இரு தாத்தா முட்டாய் வாங்கித்தரேன், ரெண்டு தேன் முட்டாய் குடுங்க"

முட்டாய் வாய்க்குள் போனதில் அழும் சத்தம் மட்டும் கொறைஞ்சாலும் விசும்பலோடு தாத்தாவோடு ஒட்டிக்கொண்டே போனான் ஒரு வாரம் முன்னாடி டெய்லரோட ஓடிப்போன செல்வி பையன்.

"தேவுடியா முண்ட, புள்ளைய உட்டுட்டு ஓடியிருக்கா பாரு அரிப்பெடுத்தவ"

கடைசி பஃப் புகையை இழுத்துவிட்டு பஞ்சை கீழே போட்டு ஆத்திரத்தோடு மிதித்தேன்

"ஏன் ஓடுனா என்ன? அவ புருசன் கையாலாகாதவனா இருந்திருப்பான் ஏன்டா இப்படி கற்பையும் கலாச்சாரத்தையும் தொடையிடுக்குல தேடுறிங்க"

"என்ன இருந்தாலும் சின்ன புள்ளைய உட்டுட்டு ஓடிட்டா பாரு"

"புள்ளை இருந்துட்டா எல்லாத்தையும் பொறுத்துக்கனுமா? ஆசாபாசம் எதுவும் இருக்க கூடாதா?"

"சரி சரி உடு மச்சான் உங்கிட்ட நம்மால பேச முடியாது, நான் கிளம்புறேன், நாலு நாளா முனிசிபாலிட்டி தண்ணி எங்க தெருவுக்கு வரலை, கவுன்சிலரை பாக்கப்போவணும், நீ ரொம்ப சூடா இருக்க, ஜில்லுனு ஒரு பெப்சி குடிச்சிட்டு போ" நண்பனிடம் சொல்லிட்டு சிகரெட்டுக்கும காசு கொடுத்துட்டு ரெண்டு நிஜாம் பாக்கை பிரிச்சி வாயில போட்டுக்கிட்டு சைக்கிளை எடுத்தேன்...

ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு வாய் முனுமுனுத்துக்கொண்டே வந்தது, காதல் மதத்தை ஒழிக்கும், காதல் சாதியை ஒழிக்கும், சைடு எஃபெக்டாடக நண்பன் சொன்னதும் ஒலித்துக்கொண்டே வந்தது.

சைக்கிள் என் தெரு முனையில திரும்பும்போது குறுக்கால ஒரு குட்டிப்பையன் ஓடிவந்தான், ஏய் ஏய் சடக்கென்று பிரேக் அடிச்சி மேலே இடிக்காம வண்டியை நிறுத்தினேன்...

"ஹேய் ராகவ், ராகவ் ஸ்டாப் ஐ சே" சத்தம்போட்டுக்கொண்டே அவனை பிடித்து தூக்கி வைத்துக்கொண்டார்இது கலைச்செல்வி அக்கா கொரல் மாதிரி இருக்கே....

"அக்கா, நீங்க கலைச்செல்வி அக்கா தானே?"

"ஆமான் டா குரு, என்னடா மறந்துட்டியா"

"இல்லக்கா பாத்து ஒரு அஞ்சாறு வருசமிருக்கும், கொஞ்சம் குண்டாயிட்டிங்க, அப்புறம் கலரா வேற ஆயிட்டிங்களா அதான் சட்டுனு அடையாளம் தெரியலை"

சட்டுனு அவங்க முகத்தில ஒரு லேசான பெருமித மின்னலடிச்சது....

"ம்...குரு வீட்ல எல்லாம் சவுக்கியமா? ஆமாம் என்ன பண்ணறே?"

"வி.எஸ்.டில வொர்க்ஷாப்ல தான்க்கா மெக்கானிக்கா இருக்கேன், அக்கா ஸ்டேட்ஸ்லருந்து எப்போ வந்திங்க?"

"ரெண்டுவாரம் ஆகுது, அவர் வீட்டுக்கு போயிட்டு நேத்துதான் இங்க வந்தேன்"

"மாமா வந்துருக்காரா? எப்பிடியிருக்காருக்கா?"

சொந்தக்காரங்க இல்லாம வேற யாரையும் சட்டுனு மாமான்னு கூப்புடமாட்டோம் ஆனா கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரை மட்டும் மாமானு சொல்லுவேன், அக்கா லவ் மேரேஜி, அவங்க வீட்டுக்காரர் அய்யிரு, பள்ளிக்கூடத்துலருந்தே அய்யிருபசங்களை மாமானு ஜாலியா கூப்புட்டே பழகிடுச்சா, அதான் சட்டுனு கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரையும் மாமானு சொல்லிட்டேன்.

"வந்திருக்காரு டா, நல்லா இருக்காரு, உள்ள வாயன் டா, டீ குடிச்சிட்டு போலாம்"

"இல்லக்கா, அர்ஜென்டா கவுன்சிலரை பாக்க போறேன், நாலு நாளா நம்ம தெருவுல தண்ணிவரலை "

"சரி பாத்துப்போ"

சட்டை போடாம துண்டு மட்டும் கட்டியிருந்த இருந்த ராகவை அக்கா தூக்கிக்கிட்டு உள்ளே போகும்போது தான் கவனித்தேன் ராகவ் முதுகுல குறுக்கால புதுசா போடப்பட்டிருந்த பூணுலை.

"காதல் சாதியை ஒழிக்கும், காதல் மதத்தை ஒழிக்கும்" நண்பன் சொன்னது ஸ்டீரியோ எஃபெக்டில் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.... வாய் மட்டும் அண்ணிச்சையாக முனுமுனுத்தது "அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு"

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கலாம், சரி அய்யிரு பையன் மீன் வாங்கப்போயிருப்பானா? ராகவ் முதுகுல போட்டுருந்த பூணுலை பார்த்த பிறகு அந்த நம்பிக்கையில்லை... பாட்டெழுதனவங்கிட்ட கேட்கனும் அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்திருந்தப்ப அது பேரு என்ன? ஷகீராவானு?

லவ் சிம்பல் போட்டு காதலர் தின வாழ்த்து சொல்லி போஸ்ட்டர் ஒட்டியிருந்துருக்கானுங்க விஜய் ரசிகர் மன்ற பசங்க, இவ்ளோ நாள் நியூ இயர்க்கு போஸ்ட்டர் ஒட்டுனானுங்க இப்போ காதலர் தினத்துக்குமா... ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.... போஸ்டரை பாத்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்....

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு.......

கவுன்சிலர் வீட்டை நெருங்கிய போது மெலிதான விசும்பல் சத்தம் வந்தது கூலிக்கு கை காலெடுக்கும் "லெஃப்ட்" கிருஷ்ணாவோடு ஓடிப்போன வசந்தா வீட்லருந்து......

கவுன்சிலரிடம் காத்திருந்து பேசிவிட்டு வீட்டுக்கு போய் சேரும் வரை அந்த மெலிதான விசும்பல் சத்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது..... வசந்தா பேசாம 40 இலட்சத்துக்கு வீடு, நல்ல வேலை, ஊருல நல்லபேருனு இருக்குற ஞாநி வாத்தியார் பைய் மாதிரி பசங்களோட ஓடியிருக்கனும்.......இல்லனா வசந்தா மட்டுமாவது அந்த சாதிக்கட்சி தலைவர் சொல்றதை கேட்டிருக்கலாம், நினைத்துக்கொண்டே அப்போது தான் கவனித்தேன்
"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு....... " என்று முனுமுனுப்பதை என் வாய் நிறுத்தியிருந்ததை.

பின்குறிப்பு:
கதாசிரியர் காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ எதிரானவர் இல்லையாம்.... கதாசிரியரே 11 முறை காதலித்தவர் தானாம்... (ஆனால் அவரைத்தான் யாரும் காதலிக்கவில்லை என்பது கதாசிரியர் எப்போதுமே வெளியே சொல்லாத ஒன்று.)

படம் உதவிக்கு நன்றி wwp.saint-valentines.co.uk

சாகரனுக்கு அஞ்சலி

தேன்கூடு திரட்டியை உருவாக்கியவரும் நமது சக வலைப்பதிவாளருமான சாகரன் கல்யாண் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள், அவரது குடும்பம் இந்த இழப்பை தாங்குவது மிக கடினம் என்ற போதிலும் அவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.

சென்னையில் லக்கிலுக்கை சந்தித்தபோது அவர் சாகரனுடன் பேசியதையும் சாகரனைப்பற்றியும் கூறியுள்ளார், மேலும் ஒருமுறை லக்கிலுக்குடன் ஜிசாட்டில் பேசிக்கொண்டோம், அப்போது லக்கியிடம் சாகரனுடம் பேசவேண்டுமென்று கூறியிருந்தேன், இது தவிர சாகரனுடன் நேரடி தொடர்போ மின்மடல் தொடர்போ இருந்ததில்லை, இனியும் இருக்காது என்று நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது.

முகமூடிக்கு ஜூரி(நடுவர்?!)யாக இருக்க தகுதி உண்டா?

யார் எப்படி போனா எனக்கென்ன என்று இருந்தேன், ஆனால் என்னையும் இருவர் இன்டிப்ளாக்கீஸ் அவார்டுக்கு முன்மொழிய (முன்மொழிந்தவர்களுக்கு நன்றி) வேறுவழியின்றி இதை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இன்டிப்ளாக்கீஸ் ஜூரி குழுவில் அனாமதேய வலைப்பதிவர் முகமூடி அவர்கள் ஜூரியாக(நடுவர்?!) இருக்கின்றார்.

இதில் கூட அவர் லாஸ் ஏஞ்செல்சில் இருக்கிறார் என்பதைத்தவிர அவர் யாரென்பதற்கான எந்த விபரங்களும் இல்லை, சரி அவரது பதிவிலாவது பார்க்கலாமென்று அவரின் வலைப்பதிவில் தேடியபோது அதிலும் இதே நிலைமை, ஆக இணையத்தில் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாத ஒருவர் ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளில் போட்டியில் கலந்துகொள்ள முன்மொழியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்போவது தம்மை யாரென்று தெரிவித்துக்கொள்ளாத ஒரு அனாமதேய பதிவர், தங்களை யாரென்று இன்டிப்ளாக்கிஸ் குழுவிற்கு தெரிந்தால் மட்டும் போதும் கலந்து கொள்பவர்களுக்கு தெரிய தேவையில்லை என்று ஜூரியும் இன்டிப்ளாக்கிஸ் குழுவும் கருதுவார்களெனில்(நான் கருதுகிறார்கள் என சொல்லவில்லை, கருதுவார்கள் எனில் என்று தான் கூறியுள்ளேன்) போட்டியில் கலந்து கொண்ட பல வலைப்பதிவாளர்கள் தங்களை எடை போடப்போவது யாரென்றே அறியாமல் ஒரு அனாமதேயத்தால் அவர்களின் வலைப்பதிவுகளின் தகுதிகள் அலசப்படும் ஒரு நிலை, அந்த நிலை சிலருக்கு இழிவாகக்கூடத் தோன்றலாம், எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

அடுத்தபடியாக இன்டிப்ளாக்கிஸ் விருதுக்காக தமிழ் வலைப்பதிவை தேர்ந்தெடுக்கப் போகும் இந்த 'முகமூடி' என்பவர் என்னையும் என் கருத்துகளையும், என் வலைப்பதிவையும் அவரின் வலைப்பதிவு மற்றும் பல இடங்களில் பல நேரங்களில் அப்யூஸ் செய்துள்ளார், நேரடியாக பெயர் குறிப்பிட்டும் என் வலைப்பதிவின் சுட்டி கொடுத்தும் அப்யூஸ் செய்த அவரின் பதிவுகளின் ஒன்று தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட், இது மட்டுமின்றி பல பதிவுகளிலும் இடங்களிலும் என் பெயரிலும் என் அடையாளங்களிலும் சில சிறிய மாற்றங்களை செய்து படிப்பவர்களுக்கு நான் தான் என்று எளிதாக புரியுமளவில் குறிப்பிட்டு அப்யூஸ் செய்துள்ளார், அந்த பதிவுகளையெல்லாம் எடுத்து போடலாம் என்றாலும் சொல்ல வந்த செய்தி சென்று சேர்ந்தால் போதும் என்பதால் அதை தற்போதைக்கு செய்யவில்லை என்றாலும் தேவைப்பட்டால் செய்யத்தயாராக உள்ளேன்.

இப்படியான அனாமதேய வலைப்பதிவர் முகமூடியால் நான் மட்டுமின்றி மேலும் பலரும் அப்யூஸ் செய்யப்பட்டுள்ளார்கள், அவரவர்களே அதன் சுட்டியை அளிப்பது, வெளிசொல்வது, சொல்லாமலிருப்பது இன்ன பிற விசயங்களே அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என நான் கருதுவதால் அதைப்பற்றி தற்போது நான் எழுதவில்லை.

மேலும் முகமூடி சில வலைப்பதிவர்களை ஸ்டாராக அறிவித்துள்ளார், அதே சமயம் அதில் "நிரந்தர பரமார்த்த குரு" என்ற பெயரில் முத்து (தமிழினி) பெயரும் உள்ளது இது பாராட்டா? நக்கலா?

இப்படியான ஒரு ஜூரி(நடுவர்?!) முன்பு என் வலைப்பதிவு வரும்போது எப்படியாக என்(மற்றும் பல) வலைப்பதிவு எடைபோடப்படும்? விருப்பு வெறுப்பின்றி தேர்வு முடிவுகள் இருக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது? இந்த சந்தேகத்தை இன்டி ப்ளாக்கீஸ்க்கும் எழுதியுள்ளேன்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்

நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், அப்போ நீங்க?

பின்குறிப்பு
முகமூடி எல்.ஏ.ராம் ஆக இருக்க முடியாது என்பது எல்.ஏ.ராம் அவர்களின் கருத்து, பார்க்க

மற்றுமொரு பின்குறிப்பு
இந்த பதிவையும் கிண்டலடித்து வரப்போகும் பதிவுகளை என் முடிக்கு சமானமாக கூட கருதப்போவதில்லை என்று கூற மாட்டேன், ஏனெனில் என் முடியை தினமும் வாருகிறேன், அதிகமாக வளர்ந்தால் வெட்டிக்கொள்கிறேன், அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.

ஒரே இந்தியா






ஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

தலைமுறை வலிகள்

தமிழ்மணம் விவாதகளத்தில் நான் இட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை, நான் இட்டு வெகுசில மணி நேரங்களே ஆகியிருந்தாலும் அது வெளி வரும் வரை பொறுமையில்லாததால் இங்கே அவைகள்.

விவாதகளத்தில் இருந்த பின்னூட்டங்களை படித்துவிட்டு வந்தால் எளிதாக புரியும்.

இடஒதுக்கீடு பற்றி ஒரு தவறான புரிதலை தந்துவிட்டு அதை நான் குறிப்பிட்டு எழுதியபோது

//திரு.டோண்டு சொல்லிய மாதிரி,”அவரவர் கவலை அவருக்கு. பாதிக்கப்பட்டவர்தான் அதன் வேதனை உணர்வர்”.நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி//

என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அவர் வலி எழுத தூண்டியதென்றால், எங்களுக்கோ தலைமுறை தலைமுறையான வலி..... என்ன செய்ய தூண்டும்????


இனி என் பின்னூட்டம்

சற்று உணர்ச்சி வசப்படாமல் சொந்த அனுபவங்களை தூரவைத்துவிட்டு சில விடயங்களை பார்ப்போம், ஒரு மாணவன் இன்று இருக்கும் கல்வி முறையில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது அவனுடைய சொந்த திறமையை மட்டும் பொறுத்ததல்ல, அதற்கு பல காரணிகள் உண்டு

குடும்ப சூழல்
சுற்றுப்புற சூழல்
பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கரை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி
கல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)
இதோடு மாணவனின் தனிப்பட்ட திறமை மற்றும் குடும்ப பொருளாதாரம்(+2 மதிப்பெண்களுக்கு குடும்ப பொருளாதாரம் ஒரு சிறிய காரணி மட்டுமே, +2 மதிப்பெண்களுக்கு இது பெரும் முக்கிய காரணியாக இருப்பதில்லை)

இப்படி பல காரணிகள் இருக்குமிடத்தில் மாணவனின் தனிப்பட்ட திறமை தவிர்த்து மற்ற எல்லா
காரணிகளுக்கும் பெரும்பாலும் சாதியே காரணமாக இருக்கின்றது.உங்கள் சுற்றுப்புற சூழலிலிருந்தே உதாரணம் தருகிறேன், தனிப்பட்ட திறமை என்பதை தவிர ஒரே சமூகம், ஒரே பள்ளி, ஒரே மாதிரியான குடும்ப சூழலில் இருந்து உங்கள் தெரு தம்பி(எனக்கு அண்ணா) பத்ரி ஐ.ஐ.டி சென்று படித்துள்ளார், இன்னொருவர் இரு முறை ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்து இடம் கிடைக்காமல் ஜி.இ.சி. திருநெல்வேலியில் பொறியியல் படித்தார், இன்னும் ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார் (இந்த இருவரும் வலைப்பதிவிற்கு தொடர்பில்லை என்பதால் அவர்கள் பெயரை சொல்வதை தவிர்க்கிறேன்), ஒரே மாதிரியான குடும்ப சூழல், சுற்று சூழல், சமூக சூழல் இருந்தும் பத்ரி தொட்ட இடத்தை மற்ற இருவர் தொடவில்லை, மற்ற இருவர் தொட்ட இடத்தை இன்னொருவர் தொடவில்லை என்றால் அது அவரவர்களின் தனிப்பட்ட திறமையில் உள்ள வித்தியாசம்.

உதாரணத்திற்கு நீங்கள் எடுத்த மதிப்பெண்களே எடுத்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் எடுத்து அவருக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த தனக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் அதே மதிப்பெண்கள் எடுத்த உயர்சாதி மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் ஒன்றா?(ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) இல்லையே, அப்போது மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியில் தாழ்வு இருக்கும்போது ஒரு உயர்சாதி மாணவன் வாங்கும் அதே மதிப்பெண்களை ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மாணவன் வாங்குகிறான் என்றால் இவ்விரு மாணவர்களின் திறமையும் சமமா? இல்லையே திறமைய் தவிர்த்து மற்ற சூழல்களில் குறைபாடு உள்ளவர்களை சமப்படுத்த தான் இடஒதுக்கீடு.

45கிலோ எடை உள்ளவன் 100கிலோ பளுதூக்கி 45கிலோ பிரிவில் தங்கம் வாங்கியவனை பார்த்து, 100கிலோ எடையுள்ளவன் ஹெவிவெயிட் பிரிவில் 100கிலோ பளு தூக்கி 10வது இடம் பிடித்து மெடல் வாங்காதவன் நானும் 100கிலோ தூக்கினேன், அவனும் 100கிலோ தூக்கினான் அவனுக்கு மட்டும் தங்கப்பதக்கம், எனக்கும் ஒன்றுமில்லையே என் வலி எனக்கு தான் தெரியும் என்று புலம்புவது சரியான செயலாகுமா?

இந்த பின்னூட்டத்தை எடிட் செய்து விடாதீர்கள் அல்லது நிறுத்திவிடாதீர்கள், "நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை." என்று சொன்னதாலேயே அவரின் ஊர் நண்பர்களை உதாரணம் காட்டி பேசவேண்டியதாகிவிட்டது.

கேசவன் சார் - கோட்டா கதை


"சார், ஏ.பி. சார்"

குரல் கேட்டு கதவை திறந்தார் அப்பா, கேசவ் சார் குரல்தான் அது, அப்பாவோட ஸ்கூல்ல ஒன்னா வேலை செய்யிற மேக்ஸ் வாத்தியார், அவர் பையன் கூட எங்க ஸ்கூல்தான், இங்கிலிஷ் மீடியம் அவன்.

"வாங்க வாங்க கேசவ் சார், உட்காருங்க"

அம்மா வந்து வரவேற்றார்

"வாங்க சார், டீ சாப்புடுங்க"

"இல்லமா இப்போதான் சாப்புட்டு வந்தேன்"

பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை.

"என்னப்பா படிச்சிக்கிட்டு இருக்க, லீவ் நாள்ல கூட படிக்கிற"

"என்ட்ரன்ஸ் எக்சாமுக்கு படிக்கிறேன் சார்"

"ம்.... என்ட்ரன்ஸ்லாம் டஃப்பா இருக்கும், நல்லா படி"

"சொல்லுங்க சார், நல்லா சொல்லுங்க, கோச்சிங் க்ளாஸ் போயிட்டு வர்ற நேரம் போக மீதி நேரம் பூரா கிரிக்கெட்டு கிரிக்கெட்டு தான் சார் இவனுக்கு"

அப்பா எப்பவும் இப்படித்தான் ஊட்டுக்கு வர்றவங்ககிட்ட என் மானத்தை வாங்குறதே வேலை இவுருக்கு, எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு படிச்சாலும் வர்றவங்ககிட்ட கொறை சொல்றதே வேலை.

அடிபட்ட அவமானமாக அம்மாவை பார்த்தேன், இதென்ன புதுசா, எப்பவும் நடக்கறது தானே கண்டுக்காத என்பது போல அம்மா பரிவாக பார்த்தார்.

சென்ட்டர்ல வக்கிற மாடல் டெஸ்ட்ல பர்ஸ்ட் ரெண்டு ரேங்க்ல வந்தா பேரை போர்டுல எழுதிப்போடுவாங்க, இந்த வாட்டியும் மணிமேகலைக்கிட்ட பர்ஸ்ட் ரேங்க்கை உட்டுறகூடாது எப்பிடியாவது பர்ஸ்ட்டு வந்துடனும், வைராக்கியத்தோடு ரூம்ல போய் படிக்கலாம்னாலும் ஹால்ல என்ன பேசிக்கிறாங்கங்கறதுலயே ஆர்வம் இருக்கு

"எந்த கோச்சிங் சென்ட்டர்க்கு போறான் பையன்"

"முனிசிபால்ட்டி ஸ்கூல்ல அசோசியேசன்ல நடத்துறாங்களே அங்க தான் சார் போறான், ஒங்க பையனும் +2 தானே, எங்க சேத்துருக்கிங்க"

"மெட்ராஸ்ல எக்ஸெல் கோச்சிங் சென்ட்டர்ல சேத்துருக்கேன், அய்யாயிரம் ஃபீஸ் புடுங்கிட்டாங்க, அண்ணன் வீட்லருந்து கோச்சிங் போறான்"

"இவனும் சொன்னான், ஆனா அவ்ளோ பணமும் கட்ட முடியாது, மெட்ராஸ்ல தங்கி படிக்கவும் யாருமில்லை, இவன் எப்பிடியாவது படிச்சி இஞ்சினியர் ஆயிட்டான்னா என் கடனே தீர்ந்துடும் சார்"

"ஒங்குளுக்கு என்ன சார் கொறச்சல், எங்கள மாதிரியா, அதான் கெவர்மெண்ட்டே கோட்டா குடுக்குதே அப்புறம் என்ன சார்"

அம்மா மட்டும் சரேலென உள்ளே சமயலறைக்கு சென்றார், அப்பாவோ மேலே என்ன பேசுறதுனு தெரியாம தெகச்சி போயிட்டார்.

"சரி அத உடுங்க சார், என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது"


"ஒன்னுமில்ல, உண்ணாமலை யுனிவர்சிட்டி செட்டியார் பி.ஏ. கஜேந்திரன் ஒங்க சொந்தக்காரர்தானே"


"நெருங்கிய சொந்தமெல்லாம் இல்லை, எங்க மச்சான் பொண்ணெடுத்த ஊருல ஏதோ சொந்தம்"

"இல்ல, என் பையனுக்கு உண்ணாமலையில ஒரு பி.இ. சீட்டு வாங்கனும், அதான் செட்டியார் பி.ஏ.வை வச்சி சீட்டு வாங்கிடலாம்னு"

"அட அங்க எல்லாமே காசுதான் சார், யாரை புடிச்சாலும் நடக்காது, நம்ம சொந்தகாரன், ஜாதிகாரன் இருந்தா கூட எவனும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க"

"அது தெரியுங்க, நம்பகமா காசு தந்து சீட் கன்ஃபார்ம் பண்ணனுமில்லை, வேற யாரு மூலமாவது போயி காசும் போயி சீட்டும் கெடைக்கலைனா"

"நான் வேணா என் மச்சான்கிட்ட சொல்றேன் சார், அந்த லிங்க்ல செட்டியார் பி.ஏ.வை புடிக்க முடியுதானு பாப்போம், ஆனா நான் என் பையன்கிட்ட சொல்லிட்டேன் ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு"

"அட ஒங்குளுக்குதான் கோட்டாவே இருக்கு, நீங்க எதுக்கு சார் பேமெண்ட் சீட்டுக்கு போகப்போறிங்க"

அம்மா உள்ளே பாத்திரத்தை உருட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டது

கேசவ் சார் போன பிறகு அம்மா அப்பாவிடம் சண்டைக்கு போனார்,

"அதான் மொதல்லயே ஒங்களுக்கு கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு குத்தி காமிச்சாரே, அப்புறமும் எதுக்கு ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன்னு சொன்னிங்க, திரும்பவும் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லிட்டு போறாரே, நீங்க எப்பவும் இப்புடித்தான் எகனை மொகனையா வாயவுட்டு வாங்கிக்கட்டிக்கறது"

"அட விடு சுந்தரா, இவர் ஸ்கூல்லயே இப்படித்தான் என்னையும் பி.கே. சாரையும் சொல்லுவாரு, ஒங்களுக்கு என்னா சார் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லுவாரு"

ஏதோ மொனவிக்கிட்டே அம்மா உள்ள போனாங்க

------------------

மூச்சிரைக்க சைக்கிள நிறுத்திட்டு உள்ள ஓடிவந்தேன்

அம்மா வாசல்லயே இருந்தாங்க, என்னை பார்த்துட்டு சைக்கிள் நிறுத்துற நேரம் கூட பொறுக்க முடியாம கேட்டாங்க

"என்னடா எவ்ளோ மார்க்கு?"

அம்மா பாஸானு கூட கேக்கலை, எனக்கு பாஸ் பண்றதுலாம் ஒரு மேட்டரேயில்லைனு அம்மாவுக்கு தெரியும்

"தொள்ளாயிரத்து தொண்ணுத்தி ரெண்டுமா"

சட்டென்று அம்மா முகம் இருண்டது

"என்னடா ஆயிரம் மார்க்கு கூட வாங்கலையா? இந்த மார்க்குக்கு சீட்டு கெடைக்குமாடா"

என் சத்தம் கேட்டு அப்பாவும் தங்கச்சியும் வந்தாங்க

"அம்மா நீ டென்ஷனாகாத, தமிழ், இங்கிலிஷ்லதான் மார்க்கு கம்மி, சப்ஜெக்ட்ல எல்லாத்துலயும் நூத்தி எண்பதுக்கும் மேல, மேக்ஸ்ல நூத்தி எண்பத்தஞ்சி"

அம்மா, அப்பா, தங்கச்சி என எல்லார் மொகத்திலயும் அப்போதான் நிம்மதி வந்துச்சி

"சரி சரி செவப்புகோடு வாங்குன கதையா இதுல மார்க்கு வந்துருக்குனு என்ட்ரன்ஸ்ல உட்டுடாத"

அப்பாவுக்கு எப்பவும் திருப்தி இருக்காது, நாலாவதுல ஒரு தடவை ரொம்ப வெளையாட்டுத்தனமா இருந்து ஃபெயிலாயி ரேங்க்கார்டுல மார்க்குக்கு அடியில செவப்பு கோடு போட்டு இருந்ததை இன்னும் சொல்லிகாமிச்சிக்கிட்டே இருப்பார்

"அப்பா"

"என்னடா?"

"கேசவன் சாரை பார்க்கும்போது சொல்லுங்க, கணக்குல பெயிலா போனா கோட்டா இல்லைனாலும் இஞ்சினியர் சீட்டு கெடைக்காதுன்னு"

"என்னடா சொல்லுற"

"கேசவன் சார் பையன் கணக்குல ஃபெயிலு"

அன்றைக்கு தெரியாது கோட்டா ஜல்லியடிக்கிற நிறைய கேசவன் சாருங்களை வாழ்க்கையில பாக்கப்போறேன்னு

இந்த கதையை குமுதம் வெளியிடுமா?

சுஜாதா எழுதிய அய்யோத்திய மண்டபம் கதையின் அடுத்த பகுதியான "ஸ்ரீரங்கம்" என்ற தலைப்பில் நான் எழுதிய இந்த சிறுகதை குமுதத்தில் வெளியிடப்படுமா? இந்த கதையை குமுதத்திற்கு அனுப்ப என்ன செய்யவேண்டும், விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குமுதத்தில் சுஜாதாவின் அய்யோத்தியா மண்டபம் கதையை படிக்க முடியாதவர்கள் பாலாவின் சேமிப்பில் இங்கே படிக்கலாம்.

ஸ்ரீரங்கம்

"அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது" என்றார். கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

அடிதாங்க முடியாத பிராமண மாமனாரை என்னி கண்ணீர் விட்ட கலைச்செல்வியின் கைத்தொலைபேசி சிணுங்கியது

"ஹலோ"

"கலை, அப்பா பேசுறம்மா, நல்லா இருக்கியா"

"நல்லா இருக்கேன் பா"

"என்னமா ஏர்போர்ட்லயா இருக்க"

"இல்லப்பா, இங்க மாமாக்கு அடிப்பட்டுடிச்சி, அதான் ஒரு வாரம் தள்ளிப்போட்டுட்டோம், என்னப்பா ஏர்போர்ட்லயா இருக்கிங்க"

"இல்லமா? நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலை"

"ஓ, இன்னைக்கு நாங்க கிளம்புறதா சொன்னதால ஏர்போர்போர்ட்டுக்கு வந்திங்களோனு நினைச்சேன், அடுத்த வாரம் வந்துடுங்கப்பா"

"நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலைனு சொல்ல தான்மா போன் பண்ணேன்"

"ஏன்பா, என்ன ஆச்சி, ஒடம்பு எதும் சரியில்லையா? என்ன ஆச்சி"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைமா, இந்த கட்டை நல்லா தான் இருக்கு, மனசு தான் சரியில்லை"

"தூரமா போறோமேனு வருத்தப்படுறிங்களா? ரெண்டு வருஷம் தான்பா அப்புறம் இங்க வந்துடுவோம், நான், நீங்க, மாமா எல்லாம் ஒண்ணாவே இருக்கலாம் பா, இதுக்கு மேலயும் நீங்க கஷ்டப்படவேண்டாம் பா"

"ரெண்டு வருஷத்திலயே இங்க வந்துடாதிங்கன்னு சொல்ல தான் போன் பண்ணேன்"

"ஏன்பா, அந்த சம்பாத்தியம் இங்க கிடைக்காதுனு பாக்குறிங்களா? இப்போலாம் சாப்ட்வேர்ல அங்க வாங்குற சம்பளத்துக்கு சமமா இங்கயும் கிடைக்கும் பா"

"பணம் வந்து என்னமா செய்யப்போவுது, மரியாதை, உரிமையில்லாத ஊருல அது ஒன்னுக்கும் ஒதவாது, ஆனா ஒனக்கு நல்ல சான்ஸ் கெடச்சிருக்கு கெட்டியா புடிச்சிக்கோ"

"என்னப்பா சொல்றிங்க ஒன்னுமே புரியலையே"

"அய்யிரு பையனை கல்யாணம் செய்திருக்க, இனிமே நம்ம ஜாதி பேரை எங்கயும் சொல்லிக்காத, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆத்துக்காரர் தோப்பனாருனு அய்யிரு பாஷை பேச கத்துக்கோ"

"அதை ஏன்பா நான் கத்துக்கணம், எப்பவுமே சுயமா இருக்கனும் சொல்ற நீங்களே இப்படி சொல்றிங்க"

"உன் பசங்களுக்கு வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியமெல்லாம் உனக்கு பொறக்கபோற கொழந்தைகளுக்கு சொல்லி குடு"

"ஏன்ப்பா பேசுறிங்க, நான் அய்யிரை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல ஒங்களுக்கு எதும் சங்கடமா"

"அய்யய்யோ அதெல்லாம் இல்லமா, நீ அய்யிர கல்யாணம் பண்ணிக்கிட்டதை சாமி குடுத்த வரமா பாக்குறேன் அதனால தான் சொல்றேன் உனக்கு பொறக்க போற பையனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிதரயோ இல்லியோ, திருக்குறள் சொல்லிதரயோ இல்லியோ ஆனா காயத்திரி மந்திரமும், சந்தியா வந்தனமும் கத்துக்க வை, மறக்காம பூணுல் போட்டுவுட்டுடு"

"என்னப்பா இப்படி பேசுறிங்க, மனசனுக்குள்ள வேறுபாடு பாக்ககூடாதுனு சொன்ன நீங்களே பூணுல் போட சொல்லுறிங்க"

"இந்த ரெண்டு வருசம் கழிச்சி ஊருக்கு வர்றதுலாம் வேண்டாம் மா, இங்க நெலமை அப்படியாயிடுச்சி, நாயும், பூனையும் நடந்த தெருவுல நம்மள மாதிரி ஜனங்க நடக்க உரிமையில்லாம இருந்துச்சி, கோயில்லுக்குள்ள போக வக்கில்லாம இருந்துச்சி, இதுக்கெல்லாம் போராடி உரிமை வாங்கித்தந்த பெரியார் தலையையே ஸ்ரீரங்கத்துல எடுத்துட்டாங்க, அத எதுத்து போராடனவங்களுக்கும் போலிஸ் அடி, ஜெயில் இப்பவே இந்த நெலமை இங்க, போக போக என்ன ஆகுமோ"

"ம்... நானும் பேப்பர்ல படிச்சேன்பா"

"ஏற்கனவே சாமியை தொடமுடியாது, சாமிகிட்ட போவ முடியாது, இனிமே கோயிலுக்கும்கூட போக முடியாத நெலமை வந்துடும், ஒழவு மாட்டவித்து ஒன்ன ஐ.ஐ.டி.ல எம்.டெக் படிக்க வச்சேன், ஆனா பி.இ. கோட்டால தான் படிச்ச, நம்மள மாதிரி படிப்புவாசனையே அறியாத ஜனங்களுக்கு இனி கோட்டாவும் இருக்காது, இங்க படிப்பில்லாம, மரியாதையில்லாம, உரிமையில்லாம ஈனபிறவியா அடிமையா தன்மானத்து உட்டுட்டு வாழுறதுக்கு சாகலாம் கலை, செத்துடலாம், ஆனா நீ அய்யிரு பையனை கல்யாணம் செய்துக்கிட்டதை நான் சாமி குடுத்த வரமாத்தான் பாக்குறேன்"

அதிர்ந்து போன கலைச்செல்வி தன் தந்தை பேசுவதை கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தால்

"கலை அதனால தான் சொல்றேன், இங்க வராத, உயர்வுனு இந்த சமுதாயம் எதெல்லாம் மதிக்குதோ அதெல்லாம் கத்துக்கோ, உன் பசங்களுக்கும் கத்துகுடு, தமிழ் பாட்டு வேண்டாம் தெலுங்கு கீர்த்தனை கத்துகுடு, பரதநாட்டியம் கத்துகுடு, அத்திம்பேர்னு பேச கத்துகுடு, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆனா எப்புடி இருந்தாலும் ஒன் கலர் ஒன்னை காட்டி குடுத்துடும் அதுக்காக யார் என்ன பேசனாலும் கவலைப்படாத, உன் மானம், சுயமரியாதை முக்கியமில்லை உன் புள்ளைங்க மரியாதை தான் முக்கியம், ஒன்னை அய்யிரு ஜாதியில ஏத்துக்கலைனாலும் ஒன் புள்ளைங்களை ஏத்துப்பாங்க, முக்கியமா ஒன் புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வச்சிடாத, ஏதாவது சமஸ்கிரத சாமி பேரா பார்த்துவை, கலை இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ"

"சொல்லுங்கப்பா"

"முடிஞ்சா ஒன் பேரை கூட சரஸ்வதி, லஷ்மினு மாத்தி வச்சிக்கோயேன், விசாரிச்சேன் அது ஈசி தானாம், கெஜட்ல மாத்திடலாமாம், இனி எங்களுக்கு போன் பேசாத, ஒன் ஊரை மறந்துடு, ஒன் சாதியை மறந்துடு, மீன், கறி சாப்பாடுற பழக்கத்தை மறந்துடு, ஒன் பேச்சு வழக்கை மறந்துடு, எல்லாத்தையும் மறந்துடு இப்போ நீ ஒரு அய்யிருக்கு பொண்டாட்டி, அதை மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ, எங்களை விட, ஒன்னை விட ஒனக்கு பொறக்க போற கொழந்தைங்க மரியாதை முக்கியம், அவங்க உரிமை முக்கியம், நாயைவிட பூனையைவிட பொறப்பால கேவலமா என் பேரப்பசங்க இருக்க கூடாது, எங்களை பத்தி கவலைப்படாத கலை, எம் பேரப்புள்ளைங்க அய்யிரு சாதியாயிடுங்கற சந்தோசத்துல நாங்க இப்படியே இருந்துட்டு செத்துடுவோம், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ, நல்லா இரு கலை, நல்லா இரும்மா கலை"

போன் கட்டாகிவிட கதறி கதறி அழ ஆரம்பித்தாள் தற்போதைய கலைச்செல்வியான வருங்கால சரஸ்வதி

இது தொடர்பான பாலபாரதியின் பதிவு

இன்னொரு வேணுகோபால்




இந்த பதிவில் அனானி பினூட்டங்கள் அனுமதிக்கப்படாது, அவரவர்கள் பின்னூட்டங்களுக்கு அவரவர்களே பொறுப்பு

e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை

ஊழலை ஒழிக்கப்போறோம், ஊழலை ஒழிக்கப்போறோம், திமுக அசிங்கம், அதிமுக அசிங்கம், பாமக அசிங்கம், எல்லா கட்சியும் ஊழல், எல்லாம் அசிங்கம் எல்லாம் அசிங்கம் எல்லாத்துலயும் ஊழல்னு குணா கமல் ரேஞ்சுக்கு பாட்டு படிச்சிக்கிட்டு இருந்தார் நம்ம ACF 'ரமணா' புகழ் விஜயகாந்த், அதுக்காக தேமுதிகனு ஒரு கட்சி கூட ஆரம்பிச்சார், ஆகா ஊழல் ஒழிப்பு ரட்சகனே, மாற்றம் தரும் பிதாமகனே என்று பத்திரிக்கைகளும் எலவச வெளம்பரம் தந்தாங்க, அப்படிப்பட்ட சரியாக இன்கம்டாக்ஸ் கட்டும், மக்களுக்காக மண்டபத்தையே தரும் இருக்கும் கொடை வள்ளல் , சரியாக சொத்து மதிப்பை காட்டும், தம் சாதி என்பதால் தெலுங்கு நாயக்கர் சாதிக்கு வெறும் 14 பதினான்கு மாவட்ட செயலாளர்களை மட்டுமே தந்திருக்கும் சாதி பார்க்கா சிங்கம் விஜயகாந்த் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக கட்சியிலிருப்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை.

அடடே நல்ல விசயம் தானே, ACFனு படத்துல மட்டும் படம்காமிக்காம EBCRAனு நெசத்துலயும் செய்யறாங்களே, இந்த EBCRA கெவுருமெண்ட்டு, தனியார்னு எங்கெல்லாம் ஊழல் இருக்கோ அங்கெல்லாம் அதை ஒழிக்க போறாங்க டோய்னு சந்தோசமா பார்த்தா... படா தமாசாகீதுப்பா மேட்டரு... யின்னா தமாசா இந்த EBCRA எதுக்குனா "இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம்" அட்றா அட்றா அட்றா... ஊளலை ஒளிக்க பிறந்த இயக்கத்தில் உள்ள ஊளலை ஒளிக்க இயக்கமா... புச்சா கீதேப்பா....சரி யாருடா விஜயகாந்த்தா ஆரம்பிச்சாரு அது கூட பரவாலேது, சொந்த கட்சியை சீர்படுத்தறாருன்னா விஜயகந்த் பாவா இல்லியாம் இதை ஆரம்பிச்சது, பாவா கட்சியில பாதிக்கப்பட்ட ராஜேந்திரன்னு ஒருத்தராம், இன்னா ராசானு கேட்டதுக்கு அவுரு சொன்னாராம் மாநாட்டுக்கு மூனு இலட்சம் செலவு செய்ததிலிருந்து கட்சி பதவி, தேர்தல்னு ஏகப்பட்ட வசூலாம், சரி பாவாகிட்ட சொல்லலாமேனா "கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்." அப்புடிங்கறார், இவுரை பத்தி தேமுதிக மாநில நிர்வாகிகிட்ட கேட்டா அவரு திமுக கைகூலியாம் அப்புடிங்கறாரு.... என்னமோ போங்கப்பா ஒன்னியும் பிரியலை...


அது சரி ரட்சகன், பிதாமகன்னு தூக்கிவுட்ட ஊடக பூடகங்கள் யின்னாத்துக்கு பாவா இப்போ ஒன்னிய கவுக்கறாங்க, சப்பை பய எனக்கு தெரியுது நான் சொன்னேன் விஜயகாந்த், இனி ஊடகங்கள் பாவா நீங்க கலைஞருக்கும் திமுகவுக்கும் மங்களம் பாடுவிங்கனு நெனச்சா நீங்க ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் மங்களம் பாடுறிங்க, சொந்த ரத்தம் உட்டுடுமா? அதான் தூக்கி புடிச்ச ஒங்களையே இப்போ கவுக்குறாங்க, நீ என்னானா இவுனுங்களை நம்பி எங்க மேட்டருங்களை கைவுட்டுட்ட, வச்சாங்களா ஆப்பு... பாவா உன் இமேஜை டேமேஜாக்க உடமாட்டானுங்க, நாங்க ஒன்னும் செய்யமுடியாது பாவா.... வேடிக்கை தான் பாக்கனும்....

இவ்ளோதான் நம்ம மேட்டரு, அப்பாலிக்கா இதுக்குமேல குமுதம் ரிப்போர்ட்டர்ல வந்தது, அட நம்ம வலைப்பதிவு பத்திரிக்கை வெட்டி ஒட்டு புகழ் இட்லிவடை போடுவாரா இல்லையானு தெர்ல, அதான் நாமளே போட்டுட்டோம்........

குமுதம் கவர்ஸ்டோரி

ஊழலை ஒழிப்பதற்காக தனி இயக்கமொன்று தே.மு.தி.க.வில் தலை தூக்கியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மற்ற கட்சிகளில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் புண்ணை அகற்றுவதற்காகத்தான் இந்த இயக்கம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம். இதனால் திகிலடித்துப் போய் நிற்கிறது தே.மு.தி.க.

‘ஊழலை ஒழிக்கப் போகிறேன்’ என்று ஒவ்வொரு சினிமாவிலும் டயலாக் பேசி நடிப்பவர் நடிகர் விஜயகாந்த். அதற்காகவே தே.மு.தி.க. என்ற கட்சியை அவதரிக்க வைத்தார் அவர். அந்த, ‘தே.மு.தி.க.வுக்குள்ளே ஊழலை ஒழிக்கப் போகிறோம்’ என்று, ஓர் அமைப்பினர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதால், தொண்டைக்குள் மீன்முள் சிக்கியதைப் போல துவண்டு நிற்கிறார்கள் தே.மு.தி.க. கட்சியினர்.

ஈரோடு, கோவை மாவட்ட எல்லையில் உள்ள தாசர்பட்டியில்தான் இப்படியரு புதிய இயக்கம் பூத்திருக்கிறது. தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தத் தாசர்பட்டியில் கடந்த ஏழாம் தேதியன்று (ஞாயிறு) மாலையில், அந்த ஏரியாவைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர், 'e.b.c.r.a' என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். "லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை" என்பது இதன் விரிவாக்கமாம்.

தாசர்பட்டிக்கு வெளியே ஒரு சோளக்காட்டை வெட்டிச் சமமாக்கி, அதில் மேடை போட்டு, ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் இப்படியரு இயக்கத்தை அறிவித்துள்ளனர் தே.மு.தி.க.வினர். இந்தத் திடீர் இயக்கத்தின் தலைவர் ராஜேந்திரன் என்பவர்.

‘‘பொதுக்கூட்ட மேடைக்கு தாரை தப்பட்டையுடன் மேளதாளம் முழங்க வந்த ராஜேந்திரனிடம், அவரது புதிய இயக்கம் பற்றி ‘என்ன இது திடீர் கலாட்டா’ என்று கேட்டோம்.

ராஜேந்திரன் சீரியஸாகப் பேச ஆரம்பித்தார். ‘‘சும்மா காமெடிக்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. எங்களின் செயல்பாடுகள் சிலபேருக்கு காமெடி போலத்தான் தெரிகிறது. ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.

எங்க தலைவர் விஜயகாந்த், கட்சி ஆரம்பித்தபோதே சிலபேர் அதை காமெடியாத்தான் நினைச்சு சிரிச்சாங்க. ஆனால், இப்போ தலைவரைப் பார்த்து அலறிக்கிட்டிருக்காங்க.

கட்சிக்குள்ளே இப்படியரு ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நாங்க ஆரம்பிக்கக் காரணமே, எங்க கட்சிக்காரங்கதான். கேப்டனுக்கு லஞ்சம் என்கிற வார்த்தையே பிடிக்காது. ஆனால், கட்சிக்குள்ளே பல இடங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுது. அதுக்கு ஒரு சரியான உதாரணம் தாராபுரம் தொகுதிதான்.

தலைவர் கட்சி ஆரம்பிச்சப்போ, இந்தத் தாசர்பட்டியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாயை மதுரை மாநாட்டுக்காகச் செலவு செய்தோம். தலைவர் எனக்கு தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியைத் தந்தார். நானும் வெறியோடு உழைக்க ஆரம்பித்தேன். ஆனால், கொஞ்ச நாளில் எனக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.

இங்கே தாராபுரம் நகர தே.மு.தி.க. நிர்வாகிகள், தொட்டதற்கெல்லாம் பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக, நகரத் தலைவராயிருக்கிற விஜயகுமார் மேலே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்தது.

இவர்கள் எல்லைமீறி என்னுடைய ஒன்றியத்துக்குள்ளும் நுழைந்து, கைவேலையைக் காட்ட ஆரம்பித்தார்கள். கட்சி உறுப்பினர் படிவத்தைக் கூட இரண்டாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய்னு விற்றுக் காசு பார்க்க ஆரம்பித்தார்கள். கட்சியின் பேர் பயங்கரமாக கெட்டுப் போக ஆரம்பித்தது.

இதனால், தே.மு.தி.க. கட்சிக்குள் காலை வைக்கவே பயப்படும் நிலை உருவானது. சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சீட் கேட்டவர்களிடம் எல்லாம் சரியான சில்லறை வசூல் நடந்தது.

எங்கள் கட்சி ஊழல் நிர்வாகிகள், தேர்தல் வேளையில் தி.மு.க., அ.தி.மு.க.காரர்களிடம் கைநீட்டிக் காசு வாங்கி கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்தார்கள். மாற்றுக் கட்சிக்காரர்களிடம், ‘நம்ம கட்சிக்கு வந்திடுங்க, கேப்டனிடம் சொல்லி பெரிய பதவி வாங்கித் தருகிறோம்’னு பீலா விட்டு வசூல்வேட்டை நடத்தினார்கள். பணம் வாங்கிய பின் கட்சியில் சேர்த்து, பதவி வாங்கித் தராதது தனிக்கதை.

ஈரோடு மாவட்ட நிர்வாகிகளிடம் இதுபற்றிப் புகார் செய்தோம். அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அங்கே தாராபுரம் நிர்வாகிகள் காசை வீசி காரியத்தைச் சமாளித்து விட்டார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.

சரி, கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.

உள்கட்சியில் நடக்கும் இந்த ஊழல் பிரச்னையை எப்படிக் கழுவிக் களைவது என்று உட்கார்ந்து யோசித்தோம். அப்போது உதயமானதுதான் இந்த ஊழல் ஒழிப்பு இயக்கம் என்ற ஐடியா.

தே.மு.தி.க.வில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை ஒழிப்பதுதான், இந்த இயக்கத்தின் முதல் வேலை. கட்சியை முதலில் சரி செய்த பிறகு, ஊரைத் திருத்தும் நோக்கத்தோடு இந்த இயக்கம் நகர ஆரம்பிக்கும்.

இந்த இயக்கம் கண்டிப்பாக கேப்டனின் கவனத்திற்குப் போகும். அவர் எங்களிடம் விசாரிக்கும்போது, ஊழல் செய்தவர்களின் ஒட்டுமொத்த பட்டியலையும் அவரிடம் ஆதாரங்களோடு காட்டுவோம். எங்கள் ஒன்றியத்திற்குள் மட்டுமல்ல, இந்த ஈரோடு மாவட்டத்திற்குள், எங்கள் கட்சிக்குள், எங்கே ஊழல் நடந்தாலும் அதைப் பட்டியலிடுவோம். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

இது கேப்டனுக்கு எதிரான இயக்கமில்லை. அவருக்குத் துணை புரியப் போகும் ஓர் இயக்கம். நாங்களும் தே.மு.தி.க.வினர்தான். கேப்டன் எங்களைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

அப்படியே தப்பித் தவறி எங்கள் மீது நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு வெளியே தள்ளினாலும் கூட, ஊழல் பெருச்சாளிகளின் பட்டியலை அவரிடம் காட்டுவோம். ‘இந்த மாதிரி ஊழல் பேர்வழிகள் இருந்தால் கட்சி எப்படி உருப்படும் தலைவா?’ என்று கேட்டுவிட்டு, கட்சியை விட்டு காலை வெளியே எடுத்து வைப்போம்’’ என்றார் நெத்தியடியாக.

ஈரோடு மாவட்ட தே.மு.தி.க.வுக்குள் இப்படியரு எரிமலை வெடிக்க, இதற்கு மற்ற மாவட்ட தே.மு.தி.க.வினரும் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.

‘‘பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்தோம். நீங்கள் துணிந்து மணி கட்டி விட்டீர்கள். உங்கள் வழியில் நாங்களும் எங்கள் மாவட்ட ஊழல் நிர்வாகிகளை எதிர்க்கப் போகிறோம்’’ என்கிறார்களாம் உற்சாகமாக.

இந்தத் திடீர் இயக்கம் பற்றி தே.மு.தி.க. மாநில நிர்வாகிகளிடம் கேட்டோம்.

"ராஜேந்திரனை, தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நாளாகி விட்டது. அவர் இப்போது தே.மு.தி.க.வில் இல்லை. தி.மு.க.வின் கைக்கூலியாகி விட்டார். அவரைப் பற்றிப் பேசி அவரைப் பெரிய ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை!" என்றனர் படுகாட்டமாக.

ஒரு பக்கம் கொஞ்சம் காமெடியாகத் தெரிந்தாலும், இந்தத் திடீர் இயக்கம் தே.மு.தி.க. க்குள் ஒரு திகிலையும், கலக்கத்தையும் கிளப்பியிருக்கிறது என்பதே நிஜம்!

கடைசிச் செய்தி : ஈரோட்டில் பூனைக்கு மணி கட்டியதை மகிழ்ச்சியோடு ஆமோதித்திருக்கும் மற்ற மாவட்ட நிர்வாகிகள், நடந்தவை யாவும் நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையில், கட்சிப் பதவிகளைப் பெறுவதற்காக தலைமை கழக நிர்வாகிகள் இருவருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலமாகத் தாங்கள் இதுவரை செலுத்திய பல லட்ச ரூபாய்களுக்கான ஆதாரங்களை தலைமைக்கு சரம் சரமாக அனுப்பி வருகிறார்கள்.

என் புத்தாண்டு ஆசைகள்

இந்த புத்தாண்டில் நிறைவேற வேண்டுமென்ற என் ஆசைகள்

1. தலித் - பிற்படுத்தப்பட்டோர் இணைப்பு சமூக, அரசியல் நிலைகளில் ஏற்படவேண்டும், இவர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மேலும் மேலும் மேம்பட வேண்டும்.

2. சாதிவாரியான முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வேண்டும், இது பல விடயங்களை தெளிவு படுத்தும், சமூக, அரசியல், பொருளாதார மத உரிமைகளிலும் பங்களிப்பிலும் யார் யாருக்கு எவ்வளவு உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொள்ளலம், முக்கியமாக சமீபகாலமாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரங்களை ஆதாரமாகக் கொண்டு அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு முடிவுகட்டலாம். 1931 கணக்கெடுப்பின்படி 52% இருந்த பிற்படுத்தப்பட்டவர்கள் 1999ல் தே.மா.க.க ன் புள்ளிவிபரப்படி 38.5%மாக குறைந்து உடனே 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் 41%மாக உயரும் அதிசய காட்சிகளை தவிர்க்கலாம்.(ஏனிந்த சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டுமென்று பின்பு விளக்கமாக எழுதுகிறேன்)

3.ம.தி.மு.க வும் வைகோவும் அ.தி.மு.க. வில் இணைய வேண்டும் (ஏன் இதற்கு ஆசைப்படுகின்றேன் என்று விளக்கமாக பிறகு எழுதுகிறேன்)

4. எனக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும்.

5. சென்ற ஆண்டின் இறுதியில் மருத்துவர் இராமதாசுவை சந்தித்தது போல இந்த ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல்.திருமாவை சந்தித்து உரையாட வேண்டும்.

6. தமிழகத்தில் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் எதுவும் இந்த ஆண்டு நடைபெற வேண்டாம்.

7. சபால்ட்டர்ன் கதைகள் என்ற என் மற்றொரு பதிவில் குறைந்தது இருபது கதைகளாவது எழுத வேண்டும்.

8. தமிழ்மணம் மேலும் மேலும் வளர்ந்து புதிய தளங்களை பதிவர்களுக்கு அமைத்து தரவேண்டும்.

9. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டே முழுவதும் அமல் செய்யப்படவேண்டும்.

இதல்லாமல் மேலும் பல ஆசைகள் உள்ளன, நேரம் கிடைக்கும் போது உங்களிடம் சொல்கிறேன்

ஐஐடி இடஒதுக்கீடு: புதிய சதி திட்டம்

நம் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஐஐஎம், ஐஐடிகளின் இயக்குனர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மனித வளத்துறை அமைச்சகத்தை நெருக்கி வருகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனத்தில் தனது தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த அந்த கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது பிற்பட்டவர்களுக்கு எதிரான அவர்களது மன நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நம் நாட்டைச் சேர்ந்த பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்காக கொடி பிடிப்பது ஏன்?

இந்தக் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் கிடைக்கும் முன்பே அவசர அவசரமாக நுழைவுத் தேர்வை நடத்தி முடிக்க ஐஐஎம், ஐஐடி நிறுவன இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் இந்த அவசரத்தைக் காட்டுகிறார்கள். இதனால் ஜனாதிபதியில் ஒப்புதல் கிடைத்து சட்டம் அதிகாரப்பூர்வமான பின்னர் தான் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.

நன்றி
தட்ஸ்தமிழ்