இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா?
இடஒதுக்கீடு விடயத்தில் அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் இடஒதுக்கீட்டுற்கு எதிர்ப்பு நிலையையே எடுத்துள்ளன, இதற்கு விகடனும் விலக்கல்ல என்பதை 'குழப்பும் அரசு, கொந்தளிக்கும் மாணவர்கள் - இட ஒதுக்கீடு' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை முழுக்க முழுக்க உயர் சாதி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் ஒரு விதமான பரபரப்பான அசாதாரண சூழல் இருப்பது போலவுமான தோற்றத்தை தருமாறு கட்டுரை எழுதப்பட்டுள்ளது, இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பாக சில மாணவர்களிடம் பேட்டி எடுத்து எழுதியவர்கள் பிரச்சினையின் இன்னொரு முக்கிய பக்கத்தை இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்களிடமிருந்து எதையும் பதிவு செய்யவில்லை.
இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தில் குதித்த டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் தவிர்த்த மற்ற மாநில மாணவர்களும் களம் இறங்கியிருக்கின்றனர் என்றும் ஜீனியர் விகடனில் குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்தே புரிந்து கொள்ளலாம் திராவிட கட்சிகள் தமிழகத்தில் செய்துள்ள சமூகப் புரட்சியை.
கீழே உள்ள படத்தை பெரிதாக்க படத்தின் மேல் சுட்டவும்.
கிட்டத்தட்ட எல்லா இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களும் வைக்கும் அதே கேள்விகளை முன் வைத்துள்ள இந்த மாணவர்களின் கேள்விகளுக்காவது கருத்து தளத்தில் பதிலளிக்கும் விதமாக கூட இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் யாரிடமும் கேட்காமல் இப்படி ஒரு கட்டுரை எழுதியுள்ளது , எல்லா கட்டுரைகளுக்கும் பெட்டி செய்தியாகவேனும் மற்ற கருத்தை வெளியிடும் விகடன் இந்த முறை அது கூட செய்யாதது பத்திரிக்கை தர்மமாக தெரியவில்லை.
திறமை திறமை என கூறும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்
திறமை ஒருவரின் பிறப்பினால் அமைவதாக கருதுகின்றீர்களா? அப்படியெனில் உங்களுக்கு பதில் இங்கே
திறமை ஒருவரின் பிறப்பினால் அமைவதில்லை என்னும் போது சமுதாயத்தில் எண்ணிக்கையில் மிகக்குறைவே உள்ள முற்பட்ட சாதியினர் கல்வி கூடங்களில் பெரும்பாலன இடங்களை பெறும் அளவில் உள்ளது எதனால்? சமுதாயத்தில் எண்ணிக்கையில் மிகஅதிகமாக உள்ள மற்ற சாதியினர் கல்வி கூடங்களில் குறைவான இடங்களை பெறும் அளவில் உள்ளது எதனால்? குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் விகிதாச்சார அளவில் கல்வி இடங்களில்அதிகமாகவும் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் விகிதாச்சார அளவில் கல்வி இடங்களில் குறைவான இடங்களும் பெறுவது எந்த விகிதாச்சாரத்திற்கும், எந்த கணக்கிற்கும் எந்த விதிக்கும் பொருந்தாமல் உள்ளதே….. இது வித்தியாசமாக தெரியவில்லையா? இதற்கு காரணம் என்ன? மேலும் தகுதி என்பது எதை வைத்து நிர்ணயிக்கப்படுகின்றது, தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்கள் தான் திறமை என்றால் அந்த திறமைக்கு காரணம் வெறுமனே அந்த மாணவனின் புத்திசாலித்தனம் மட்டும் காரணமில்லை, அந்த மாணவனுக்கு கிடைக்கும் சூழல், பெரும் பங்காற்றும் இந்த சூழல் பற்றிய என் முந்தைய பதிவு இங்கே, உயர் சாதி மாணவர்களுக்கு மிக எளிதாக கிடைக்கும் அந்த சூழல் மற்றைய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை(சில விதிவிலக்குகள் தவிர்த்து) எல்லாம் ஒன்றுதான் என்னும் போது ஒரு மாணவனுக்கு கிடைக்கும் சாதக சூழ்நிலை மற்ற மாணவனுக்கு கிடக்கவில்லை என்னும் போது அது சமூக அநீதி அல்லவா? சாதகமற்ற சூழலில் 80% மதிப்பெண்கள் வாங்குபவன் ஒருவனுக்கு சாதக சூழ்நிலை அமைந்தால் சாதக சூழலில் படிக்கும் ஒரு மாணவன் வாங்கும் மதிப்பெண்களுக்கு இணையாக அதை விட அதிகமாகவே வாங்குவார்கள், அப்போ சாதகமற்ற சூழலில் சற்று குறைவாக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் திறமை குறைந்தவனா?.
பொருளாதாரத்திற்கும் இந்த சாதக சூழலுக்கும் சற்றும் தொடர்பில்லை, நல்ல பொருளாதாரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கூட உருவாக்கி தரமுடியாத சாதக சூழலை ஒரு மத்தியதர வருமானமுடைய உயர்சாதி குடும்பத்தால் உருவாக்கி தரமுடியும், இதற்கு எது காரணம்?
உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டில் படித்து இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகமெங்கும் சென்று வேலைசெய்து தம் திறமைகள் நிரூபித்துக்கொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறையை பார்த்தாவது இட ஒதுக்கீட்டினால் திறமை பாதிக்கப்படுவதில்லை என்பது புரிந்து கொள்ளப்படுமா?
இட ஒதுக்கீட்டுக்கு மாற்றாக வேறு திட்டங்கள் ஏதும் கொடுக்கப்படாத நிலையில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் முன் வைக்கும் ஒரு தீர்வாக பள்ளி கல்வியை மேம்படுத்துதல், நிச்சயமாக செய்யப்பட வேண்டிய ஒன்று, இன்றைக்கு இதை செய்தாலும் இது பலன் கொடுக்க 12 ஆண்டுகள் ஆகும், மேலும் வெறும் பள்ளி கல்வியையும் தாண்டி குடும்ப சூழல், சமூக சூழல் எல்லாமே காரணிகளாக இருக்கும் இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சமுதாய சமநிலைக்கு என்ன திட்டத்தை முன்னெடுக்கின்றனர்?
எந்த குழந்தையும் பிறந்த உடன் அது உடனடியாக அரசாங்க காப்பகத்தில் விடப்பட்டவேண்டும் எந்த பெற்றோருக்கு பிறந்தது என்று கூட தெரியாமல் மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே உணவு, உடை, உறையுள், சூழல் எல்லாம் அளிக்கப்பட வேண்டும், இப்படி ஒரு சமுதாயம் அமைய வேண்டுமென ஓஷோ ஆசைப்பட்டார், அந்த மாதிரியான சமூகம் அமையும் போது இடஒதுக்கீடு நிச்சயம் தேவைப்படாது.
அச்சு ஊடகங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உருவாக்க முயலும் நச்சு சூழலை முறியடிக்க வேண்டும், இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தங்கள் கருத்துகளை எல்லா பத்திரிக்கைகளுக்கும் வாசகர் கடிதம், கட்டுரைகள் என அனுப்பலாம் (தினமலர் உட்பட) .
இட ஒதுக்கீடு தொடர்பான சிலரின் பதிவுகள்
சுந்தர மூர்த்தியின் முதல் தலைமுறையில் படித்து வந்த OBC நண்பர்கள் கவனத்திற்கு
பத்ரியின் இடஒதுக்கீடு
மனசாட்சியின் நான் ஏமாளியா? - பிற்பட்டோர் இடஒதுக்கீடு
இட ஒதுக்கீடு தொடர்பான என்னுடைய பிற பதிவுகள்
சாதிரீதியான இடஒதுக்கீடு தேவையா?
இப்படித்தான் பதில் சொல்லனுமோ?
18 பின்னூட்டங்கள்:
குழலி,
இந்த விஷயத்தில் தமிழக அச்சு ஊடகங்களின் பார்ப்பனீயப் போக்கு வியப்பு அளிக்கவில்லை; அவை பெரும்பாலும் அப்படித்தான் இருந்துள்ளன.
ஆங்கில மீடியாக்களின் (அச்சு, தொலைக்காட்சி) அராஜகமும் அயோக்கியத்தனமான செயல்பாடும் - கடும் கோபத்தை வரவழைக்கிறது.
மேட்டுக்குடியினருக்கு வாய்ப்புக் கிடைத்தால் இந்தியாவை முற்றாக 'சனாதன பொற்காலத்துக்கு' கொண்டு போகக் கொஞ்சமும் தயங்க மாட்டார்கள் என்பது - இந்த விஷயத்தில் அவர்களின் நடவடிக்கைகள் மூலம் நன்றாகப் புரிந்து விட்டது.
சமூக நீதியாளர்கள் தேவைப்பட்டால் தங்கள் போராட்டத்தை எல்லா தளங்களுக்கும், எல்லா நிலைகளுக்கும் கொண்டு சென்றேயாக வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை.
கோவிச்சுக்காதீங்க! "பசிக்கிறவனுக்கு மீனை கொடுப்பதற்கு பதில், மீன் பிடிக்கக் கற்று கொடுக்கலாம்" இல்லையா?
(நான் சாதிச் சண்டையில் இறங்க வில்லை).
உங்கள் கருத்துப்படியே 50 ஆண்டுகளாக இருக்கும் இடஓதுக்கீடு முதல் தலைமுறையினரை மட்டுமே பயணைடயச் செய்திருக்கிறது.
ஆனால் 12 ஆண்டுகள் பொறுக்க முடியாது என்கிறீர்கள்.
தமிழகத்தில் மாணவர்கள் எதிர்ப்பு நிலை எடுக்காததற்கு காரணம் பொதுவாகவே மாணவர்கள் இப்போது போராட்டங்களை ஆதரிப்பதில்லை என்பதால். அதோடு இட ஓதுக்கீட்டை ஆதரிக்கும் பாமகவுக்கு எதிராக மாணவர்கள் குரல் எழுப்பினால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு தெரியாதா?
சொல்லப்போனால் இதிலுள்ள அரசியலை உணர்ந்து படித்தால் தான் வாழ்வு என புரிந்து தங்கள் திறனை மேம்படுத்த உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்யுங்கள் தகுதியானவர்களை முளையிலேயே உருவாக்குங்கள். ஏழைக் குழந்தைகளை தீப்பெட்டீ தொழிற்சாலைக்கும் கட்டிட தொழிலுக்கும் ஹோட்டலில் லாரியில் க்ளீனராக ஆக்கிவிட்டு ஜாதிகளை காரணம் கூறி தகுதியானவர்களை முனைப்போடு படிப்பவர்களை ஏமாற்றிவிடாதீர்கள் என்று தான். அந்த குழந்தைகள் பள்ளி படிக்க வருமளவாவது கிராமங்களில் முழுமையான பள்ளிக் கூடங்களை வசதிகளை சலுகைகளை வழங்குங்கள். ஓரிடம்விட்டு ஓரிடம் நகர்ந்து கொண்டேயிருக்கும் நெடுஞ்சாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கும் ஒரு திட்டம் தயாரியுங்கள்.
இன்றும் சாக்கடைக்குள் இறங்கும் அவலத்தை துடைத்து இயந்திரங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் ஆலோசனையுடனே புதிய இயந்திரங்களை உருவாக்குங்கள். அவர்கள் வீட்டு முதல் தலைமுறை குழந்தைகள் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள்.
அதைவிட்டு விட்டு...
இடஒதுக்கீட்டுக்கான ஆதரவான குரல்கள் கூட எங்கேயிருந்து வருகிறது. புள்ளிகளில் ஏறிக்கொண்டுயிருக்கும் கட் ஆப் மதிப்பெண்ணை போட்டியில் அடையமுடியாமல் ஜாதிக்கொரு சலுகை என்றிருந்தால் அடைந்துவிடலாமே என்ற நப்பாசையில் ஒலிக்கும் குரலாகவே தெரிகிறது. இன்றைக்கு இருக்கிற மாணவர்களின் முனைப்பையும் திறனையும் ஓப்பிட்டால் அந்த சலுகை புள்ளிகள் கூட உயர உயரத் தான் போகும்.
"பொருளாதாரத்திற்கும் இந்த சாதக சூழலுக்கும் சற்றும் தொடர்பில்லை, நல்ல பொருளாதாரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கூட உருவாக்கி தரமுடியாத சாதக சூழலை ஒரு மத்தியதர வருமானமுடைய உயர்சாதி குடும்பத்தால் உருவாக்கி தரமுடியும், "
On what basis do you say that?
Give an example
//உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டில் படித்து இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகமெங்கும் சென்று வேலைசெய்து தம் திறமைகள் நிரூபித்துக்கொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறையை பார்த்தாவது இட ஒதுக்கீட்டினால் திறமை பாதிக்கப்படுவதில்லை என்பது புரிந்து கொள்ளப்படுமா?//
முக்கியமானதொரு காரணியைச் சுட்டியுள்ளீர்கள் குழலி. பார்ப்பனியப் பருப்பு வெளிநாடுகளில் வேகாதல்லவா? நன்றி. ;-)
//"பொருளாதாரத்திற்கும் இந்த சாதக சூழலுக்கும் சற்றும் தொடர்பில்லை, நல்ல பொருளாதாரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கூட உருவாக்கி தரமுடியாத சாதக சூழலை ஒரு மத்தியதர வருமானமுடைய உயர்சாதி குடும்பத்தால் உருவாக்கி தரமுடியும், "
On what basis do you say that?
Give an example//
Common Sense.....
My father is an engineer. Family Income Rs 1.2 lakhs per year
One of my classmate's father is a farmer (family income Rs 36,000 per year) and another classmate's father runs a theatre (Family income Rs 5 lakhs per month)
Assuming that all three have equal capacity, it is very obvious that I will be able to score high marks (My father helps me in studies, he knows when the exams are called for, where to apply, how to guide his son etc etc)
Now even though the theatre owner earns much, and even though his son comes to school in a car, he may not be able to guide his son. In reality , one of my classmates did not even apply for Anna Univ Entrance (way back in 1996) because there was NO ONE TO GUIDE HIM IN HIS Family. Those were the days application forms were filled at home and not by the friends gang)
I guess that you need no further discussion about the farmer
//On what basis do you say that?
Give an example//
You can awake some one who is sleeping, but not some one who pretends to sleep
The rich are not fools.They send their wards to coaching classes.
They engage the best teachers and
provide all facilities.
They can pay capitation fee and
get a seat in engineering or medical college.But the forward caste middle class parents struggle a lot to get seats for
their wards as they have no money
to pay capitation fees.
முக்கியமானதொரு காரணியைச் சுட்டியுள்ளீர்கள் குழலி. பார்ப்பனியப் பருப்பு வெளிநாடுகளில் வேகாதல்லவா? நன்றி. ;-)
Nor your OBC quota politics
Kazhali,
1. Well said and I agree with you that for some reason exposure seems to be higher among brahmins than anybody else. Reservation atleast helps in decreasing the gap in exposure level.
2. Eventhough I am for pro-reservation to a large extent, I do take offence to the statement of karthik ramas. More about it later.
3. Reservation is the easiest step governnment can do towards uplifting people. It is also less effective than lot of other steps that it could take. For example, improving the quality of education in primary schools, establishing career counselor centres esp. in rural areas specifically targetted towards backward caste people would bring in real & faster upliftment.
4. Given the power of majority(in these case the so-called 'lower caste') vote, if these demands are putforth, the political party will atleast do something due to the fear of votebank.
I am surprised none of the blogs of pro-reservation ever putforth these demands. why?
Pollitical parties who look for immediate sensationalism are not going to putforth such ideas. But the people who are fighting for their right should.
Sachita
PS: I used the term 'lower-caste' people not with any negative connotation but for a lack of better term
This is in reply to KArthik ramas comment.
" முக்கியமானதொரு காரணியைச் சுட்டியுள்ளீர்கள் குழலி. பார்ப்பனியப் பருப்பு வெளிநாடுகளில் வேகாதல்லவா? நன்றி. ;-) "
His statement indicates as
a. Brahmins get employed only in India. Everybody knows its quite the contrary.
I have been working in US of A for past 2 years. I do know that 80% of the tamil population here are actually brahmins. This is not to say that other caste people are not meritorous rather as nicely put in this blog due to the exposure factor.
2. Again, caste has no rule in admissions to IIT or AIIMS.
Karthikramas, your comment pretty much shows that you did not even attempt reading the post of Kuzahli.
3. It looks like its much more important for you to derate certain section of people than the upliftment of the other.
Sachita
If you read the pro-reservation blogs you will know one thing: there is more heat than light.
they do not want to think.they want to defend reservation by
blaming upper castes.
Dr. Bruno!
You have a very good point there! :)
Sachita,
Please start your own blog - so that you can participate in more discussions and also express your views in ur own (blog) space. :)
Now coming to ur comment -
>> His statement indicates as
a. Brahmins get employed only in India. Everybody knows its quite the contrary. >>
Nope! you have totally misunderstood his comments.
Karthik says that the "allegation" by the brahmins that 'merit' takes a backseat becoz of reservation policy falls flat in the light of the evidence that many of the OBC students who entered the engineering/ computers / IT stream(s) have gone on to become successful engineers and work for multinational companies in western and other asian nations.
If the "merit-will-decline-due-too-reservations" rhetoric employed by the anti-reservationists were trus then this couldn't have happened - was the essence of the point that karthik was making. You missed it completely!
>> 2. Again, caste has no rule in admissions to IIT or AIIMS. >>
Well - it seems that you have missed the whole debate Sachita!! ;)
In my personal opinion, reservation at the higher education is very ineffective - a case of too little too late. To ensure that all children have access to quality education, reservations must be made at the school levels. All the premier schools (like Padma-Sheshadhri, Carmel Garden) must provide a certain percentage of seats to the disadvantaged caste students. This would ensure that these students get exposure to quality basic education and are able to take up higher education on their merit. I suggest this because, unless students are provided quality education in the basics they will NOT be able to shine in higher studies.
As a corollary to this, the government should ensure that quality educational institutions are opened in rural areas. Existing premier institutions and applicants to open new schools should be enticed to open them in the our country's rural areas with government aids and tax breaks.
The reservation structure should taper like a pyramid. The largest volume of reservations must be in schools - this can be to the percentage suggested now; the reservation percentages must decrease gradually as one progresses to institutions of higher learning and there should be no reservations in research institutes and places of work.
//பொருளாதாரத்திற்கும் இந்த சாதக சூழலுக்கும் சற்றும் தொடர்பில்லை, நல்ல பொருளாதாரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கூட உருவாக்கி தரமுடியாத சாதக சூழலை ஒரு மத்தியதர வருமானமுடைய உயர்சாதி குடும்பத்தால் உருவாக்கி தரமுடியும்//
While I agree that the environment is important, the solution to this problem is not reservation. The solution is to make such guidance and facilities available widely.
As another poster mentioned, reservations are the easiest, least effective and politically most visible measure for the government. Measures such as increasing number of schools, teachers and providing quality primary and secondary school education in rural areas and the disadvantaged areas of the towns and cities is a much more effective way to improve the lot of the disadvantaged castes.
please see Hindus article today.
TN media cannot be different. That explains why always media speaks one thing, when society speaks differently.
//பொருளாதாரத்திற்கும் இந்த சாதக சூழலுக்கும் சற்றும் தொடர்பில்லை, நல்ல பொருளாதாரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கூட உருவாக்கி தரமுடியாத சாதக சூழலை ஒரு மத்தியதர வருமானமுடைய உயர்சாதி குடும்பத்தால் உருவாக்கி தரமுடியும்//
எனக்கு தெரிஞ்சு, தமிழ்நாட்ல பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பல பொறியாளர்கள், மருத்துவர்கள் உருவாகி இருக்காங்க. நல்ல பொருளாதார சூழலும், வாய்ப்பும் அமைஞ்ச பல உயர்சாதி மக்கள் வெளிநாடு போய் பிழைக்கிறது எல்லாம் உண்மைதான். ஆனா, இங்க அரசாங்க வேலைக்கு வாய்ப்பில்லாம, வேலை உத்தரவாதமில்லாத தனியார்களிடம் வேலை பார்க்கும் உயர் வகுப்பினருக்கு என்ன சலுகை இருக்கு. அவனுக்கும் இதே மாதிரியான பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்குல்லா
பொருளாதார அடிப்படைல இடஒதுக்கீடு, சாத்தியமானு எனக்கு தெரியல, எனக்கு தெரிஞ்ச ஒரு பேராசிரியர், முதுகுவலி பெல்ட் அரசு ஆஸ்பத்திரில 1000 ரூவாய்க்கு கீழ சம்பளம் வாங்குறவங்களுக்கு 100 ரூவானு கேள்வி பட்டு, கல்லூரில அந்த மாதிரி ஒரு சம்பள சான்றிதழ் வாங்கிட்டு போய் காரியத்த சாதிச்சவர் தான். ஏன் சார் யாருமே நியாயமா பேச மாட்றாங்க அப்படின்னு சொல்றீங்க. குமுதம்ல வாலி கவிதை எழுதி இருந்தார், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவா.
இடஒதுக்கீடு நல்ல விஷயம் தான் ஆனா இத எத்தனை நாளைக்கு நாம தொடரப் போறோம்னு யோசிக்கணும். இந்த இடஒதுக்கீடு மூலம் பயனடைஞ்சவங்க, தங்கள் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு கேக்க மாட்டாங்கனு என்ன நிச்சயம். அப்ப உயர் சாதி ஏழைகள் எல்லாம் எங்க போறது. இட ஒதுக்கீட் அது இதுனு சொல்லி தமிழ்நாட்ல அரசு வேலை இல்லாம பண்ணியாச்சு. அங்க சீனியர் யாராவது வேலை பார்க்க சொன்னா, சாதி பேர சொல்லி திட்டுனார்னு பொய் சொல்லி வேலை எதுவும் நடக்க விடாம பண்ற ஏகப்பட்ட பேர நான் உங்களுக்கு காமிக்கவா??
இடஒதுக்கீடு ஒரு தற்கால தீர்வு தான். இத இப்ப அமல் படுத்திட்டு, உடனே ஆரம்ப கல்வி நிறுவனங்களின் கல்வி தரத்த உயர்த்த அரசு பாடுபடணும். இல்லை இன்னும் 12 வருஷத்துக்கப்புறம் இருக்குற கட்சியின் நிலை பொறுத்து தான் அதுன்னா, உயர்சாதி மக்கள் எல்லாம் கடல்ல தான் விழணும்.
உயர்சாதி மக்கள் எல்லாம் கடல்ல தான் விழணும்.
Why they should fight back.As
Indians they have every right
to be treated as equals.
"தமிழ் சமத்துவம்" அளித்த கருத்துக்கு மேலூட்டு இட வேண்டுகிறேன்.
வீரமணி என்கிற ஞானி ஒரு பத்திரகையில் "Creamy layer is a tool used by forward caste to divide OBCs" என்று குற்றம்காண்பித்துள்ளார்.
வீரமணிக்கு ஒரு கேள்வி கேட்கவேண்டியது என்றால் OBC, இடஒதுக்கீடு போன்றவை தமிழ் மக்களை பிரிக்கவில்லையா. வீரமணி தமிழன் என்கிற பெருமையில்லாமல் OBC என்றே பெருமிதம் படுகிறார்!!!
மேற்படி கருத்து இட்டவர் சொல்வதை பார்தால் இந்தி பேசும் வகுப்பினர்க்கு தமிழர்களில் "முற்பட்டோர்" என கருதப்படும் வகுப்புகளைவிட முன்னுரிமை கொடுப்பது இடஒதுக்கீடு சட்டத்தின் நோக்கம் போல் தெரிகிறது.
தமிழகம் தமிழர்களுக்காகவே இல்லை போலுள்ள்து???!!!
Post a Comment