போடுங்கய்யா ஓட்டு

போடுங்கய்யா ஓட்டு பானை சின்னத்தை பார்த்து, நம்ம சின்னம் பானை சின்னம் என்று பானை சின்னத்திற்கு வீட்டிற்கு போவோர் வருவோரிடமெல்லாம் வாக்கு கேட்டு சின்னத்தை கரித்துண்டு, சாக்பீஸ், சுண்ணாம்பு கட்டி என்று எல்லாவற்றாலும் சுவற்றில் எழுதி சுவரொட்டிகளையும் குறிப்பு துண்டுகளை அளித்து.... சரி இதை ஒரு நாள் சாவகாசமாக எழுதலாம் இப்போது நான் செய்த தேர்தல் வேலைகள் முக்கியமல்ல....

இது ஒரு பிரச்சார பதிவு, கண்மூடித்தனமான அதிமுகவின் ஆதரவாளர்களும், கண்மூடித்தனமான திமுகவின் எதிர்ப்பாளர்களும் படிக்காமலேயே ஒரு - குத்திவிட்டு போய்விடலாம், மற்றவர்கள் படித்து பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம்.

இன்றைய நிலையில் இருக்கும் அரசியல்வாதிகளில் யார் பரவாயில்லை என்று பார்த்து வாக்களிக்கலாம்,

முதலில் நமது தேமுதிக கேப்டன் விஜயகாந்த்
விஜயகாந்த் ஒரு புனித பிம்பம் ஊழலுக்கு, குடும்ப அரசியலுக்கு எதிரானவர் என்ற காரணங்களுக்காக நீங்கள் அவருக்கு வாக்களிக்க போகின்றேன் என்று நினைத்தால்,

விருத்தாசலத்தில் அவரது மாற்று வேட்பாளராக நின்றவர் பிரேமலதா, அவரது மனைவி, குடியாத்தம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்தின் மச்சான்

//வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி கூட்டிக்கிட்டு போக முடியுமா இல்ல வேற பொண்ணுங்களை அழைச்சிக்கிட்டு போகமுடியுமா?..." //குமுதம் பேட்டியில் விஜயகாந்த்

ஆண்டாள் அழகர் மண்டபம், விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின்(தற்போது தேமுதிக) தலைமையிடம், சென்னை மாநகர நெரிசலை குறைக்க கட்ட திட்டமிடப்பட்ட மேம்பால பணியில் இந்த மண்டபம் சிறிதளவு இடிபடக்கூடும், பல கட்டிடங்கள் முழுமையாக இடிபடக்கூடும் என்பது வேறு விடயம், உடனே முறையிட்டார் பாருங்கள் விஜயகாந்த், யாரிடம் முறையிட்டார்? தஞ்சைவிவசாயிகள் எலிக்கறி தின்பதை தடுக்க விவசாயத்துறையை கேட்காமல் ஏன் நெடுஞ்சாலைத்துறையை கேட்டனர் என கள்ளக்குறிச்சியிலே முழங்கினாரே? பணம் சம்பாதிக்கத்தான் இந்த துறையை கேட்டு பிரச்சினை செய்கின்றனர் என விமர்சித்தாரே அவரிடம் சென்று மண்டபம் இடிபடாமல் காக்க சென்று முறையிட்டார் அதுவும் எப்படி நெடுஞ்சாலைத்துறையின் மேம்பால திட்டவரைபடத்திற்கு மாற்று வரைபடத்தோடு.


ஒவ்வெரு படத்திற்கும் விஜயகாந்த் பல கோடி வாங்குகின்றாரே சரியான வருமான வரி கட்டுகின்றீரா? எல்லாமே வெள்ளைப்பணமாகத் தான் வாங்குகின்றாரா? விஜயகாந்தின் பொறியல் கல்லூரி விதிப்படிதான் இயங்க்குகின்றதா? அங்கே அரசாங்கம் அனுமதித்தற்கு மேல் எந்த விதத்திலும் கட்டணம் வாங்கப்படவில்லையா?

தற்போதைய அரசியல்வாதிகளிலிருந்து மாற்றாக அவரை நினைப்பவர்கள் எதில் மாற்றாக இருக்கிறார் என்று கீழ்கண்ட் சுட்டியை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்

விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?
விஜயகாந்தின் முதிர்ச்சி
இரண்டு காந்தகளும் இரண்டு மண்டபங்களும்


மற்றபடி அவருக்கு ஒரு வாய்ப்பு தரலாமென்றால் அடுத்த தேர்தலில் தரலாம், அதுவரை அவருடைய செயல்பாடுகளை பார்க்கலாம்

தற்போது அதிமுகவைப் பார்க்கலாம்
1991-96 அதிமுக ஆட்சியைவிட மக்களுக்கு அதிக கேடுவிளைவித்த ஆட்சியென்றால் 2001-06 அதிமுக ஆட்சி தான், 1991-96ல் வெறும் ஊழலும், ஆடம்பர திருமணமும் மட்டும் தான் இதனால் ஒன்றும் உயிர் உரிமை போகும் அளவிற்கு மக்கள் பாதிக்கப்படவில்லை, ஆனால் 2001-06 ஆட்சியில் ஆடம்பரமும் ஊழலும் குறைந்தது போல தோன்றினாலும் அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் உலை வைத்தன.

திமுக-பாமக கட்சிகளின் வாரிசு அரசியல் என்ற ஒற்றை காரணத்திற்காக ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க முயலும் நடுநிலைமையாளர்களுக்கு மருத்துவர் இராமதாசு பொதுக்கூட்டத்தில் பேசியது MIDAS கம்பெனியின் விரிவு என்ன தெரியுமா? M - மன்னார்குடி, I-இளவரசி, D-தினகரன் A-அண்ட் எல்லாருக்கும் பின்னாடி S இந்த S தான் சசிகலா, குடும்ப ஆதிக்கம் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டுமே திமுகவை ஒதுக்குபவர்கள் இதை சற்று கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள் போராட்டம் நசுக்கப்பட்ட விதம், நடுத்தர மக்களுக்கும் நள்ளிரவு கைதுகளை அறிமுகப்படுத்தியது, சாலைப்பணியாளர்கள் வேலை நீக்கம், அதனால் இழந்த உயிர்கள், நெசவாளிகள் கஞ்சித்தொட்டி, சாதாரண மக்களின் இருப்பை மறைத்து அழித்து இந்து மதத்தை ஒரு முகப்படுத்த முயன்றது, பொடா அத்து மீறல்கள், கஞ்சா வழக்குகள் என ஆணவம் பிடித்த (இதை தைரியம் என்று பாராட்டுபவர்களும் உண்டு) அரசாக மட்டுமே இது இருந்தது, மீண்டும் இந்த ஜெயலலிதாவின் அரசு வந்தால் அடுத்த நான்கு ஆண்டுகளும் நரகவேதனை, அதை மறைக்க ஐந்தாம் ஆண்டு பறிக்கப்பட்டவை மீண்டும் சலுகைகள் என்ற பெயரில்.

நாஜிக்கள் கம்யூனிஸ்ட்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட் அல்ல


நாஜிக்கள் யூதர்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் யூதனல்ல

அய்யோ
நாஜிக்கள் என்னை கொல்லவருகின்றனர்
யாருமே அதை கேட்கவில்லையே

சன் டிவி, தினகரனின் ஊடக ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் சூப்பர் டூப்பர், ஜெயாடிவி என்று அதிமுக மன்னார்குடி குடும்பத்திடமும் உள்ளன,
அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்


அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்

திமுக கூட்டணியில் தற்போது திமுக-பாமகவின் குடும்ப அரசியல் மற்றும் சன் குழுமத்தின் ஊடக ஏகாதிபத்யம் என்ற ஒற்றை காரணம் தான் ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க முயல்கின்றனர் என்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உயிர் உரிமை பிரச்சினைகளுக்கு முன் இந்த ஊடக பிரச்சினை எந்த அளவு முக்கியம் என எடைபோடுங்கள், இந்த ஒற்றை காரணத்திற்காக அதிமுகவிற்கு வாக்களிக்க முயல்பவர்கள் விடுதலைசிறுத்தை, மதிமுகவிற்கு வாய்ப்பளிக்கலாம்.

திமுக கூட்டணிதான் சிறந்த ஆட்சி தரும், நல்ல கூட்டணி என்றெல்லாம் சொல்ல வரவில்லை, ஜெயலலிதாவின் ஆட்சியைவிட திமுக ஆட்சி எந்த பிரச்சினையும் self control ஆக செயல்படுவார்கள்

ஜோசப் அய்யவின் என்ன ஓட்டு யாருக்கு என்ற பதிவையும் படித்து முடிவு செய்யுங்கள்

உயிர் உரிமைப்பிரச்சனைகள் தான் எமக்கு தலையாய பிரச்சினை மற்றவைகள் எல்லாம் அதற்கு பிறகு தான்

பின் குறிப்பு
இந்த பதிவிற்காக திமுக கூட்டணியிடமிருந்து நான் பணம் வாங்கவில்லை

எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கோ, என் குடும்பத்திற்கோ ஒரு ரூபாய் கூட இலாபமோ, நட்டமோ இல்லை, பொது மக்களுக்கு என்ன நன்மையோ அதே நன்மை எனக்கும், பொது மக்களுக்கு என்ன தீமையோ அதே தீமை எங்களுக்கும்.

19 பின்னூட்டங்கள்:

said...

//வாக்கு கேட்டு சின்னத்தை கரித்துண்டு, சாக்பீஸ், சுண்ணாம்பு கட்டி என்று எல்லாவற்றாலும் சுவற்றில் எழுதி சுவரொட்டிகளையும் குறிப்பு துண்டுகளை அளித்து...//

செம்மண்ணை கொட்டாங்குச்சியில் நீரோடு கலந்து வர்ணமாக்கி, தேங்காய் மட்டையின் முனையைத் தட்டி தூரிகையாக்கி செம்ப(ட்)டைக்காக சாவடியை செவ்வர்ணமாக்கிய நினைவுகள்...ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

இருக்கும் திருடர்களில் எந்தத் திருடன் சிறிதளவாவது உயிராதாரத்தையும், எம்மக்களின் அடையாளத்தையும் சுரண்டாமல், அழிக்காமல் விட்டுச் செல்கிறவனுக்கே எம் சமூகத்தின் ஓட்டு. புதிய திருடனை உருவாக்கவும், மற்றுமொரு கூத்தாடிக்கு அவ்வாய்ப்பையும் அளிக்க மாட்டோம்.

குழலி, இப்பதிவிற்கு பின்குறிப்பு அவசியம் என்று கருதுகிறீர்களா?

said...

குழலி,
நம்ப பதிவு எல்லாமே பிரச்சார பதிவுதானே? இதில் என்ன நோட்டீஸ்?:)
விஜயகாந்த் பற்றி நீங்கள் கூறியதுபற்றி:
நான் கூட அவர் அரசியலுக்கு வந்ததை கேள்விக்கு ட்ப டுத் தவில்லை.அவர் குற்றம் யாரை சாட்டுகிறாரொ எதைவைத்து சாட்டுகிறாரோ அதைத்தானே அவரும் செய்கிறார்.மனைவிக்கு அவர் உரிமை கொடுத்தால் கருணாநிதி மகனுக்கு கொடுக்கிறார். அவ்வளவுதான்.இரண்டுமே தவறு என்பதுதான் அவர் நிலையாக இருக்கவேண்டும்.அல்லது மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.(வாயை தாங்க)
அம்மாவை தாக்காமல் அய்யாவை மட்டும் தாக்க ஆரம்பிச்ச கீழ்த்தரமான யுக்தி?
மற்றபடி இந்த தேர்தலில் அவரோ அல்லது இரண்டு மூன்று சீட்டோ அவர்கள் வென்று நன்றாக சேவை செய்து வளர்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
ரஜினியை கம்பெர் செய்தால் 1000000 டைம்ஸ் பெட்டர் என்பேன் நான்.

அதிமுகவின் 91-96 விட இப்போதுதான் மோசம் என்பது உணர்ச்சிவசப்பட்ட ஸ்டேட்மெண்ட் போல் எனக்கு படுகிறது.அப்போது அரசு ஊழியர் பிரச்சினை, ஹிந்துத்வா போன்று இல்லை என்றாலும் அடக்குமுறை, ஊழழழழழழல் என்று கொடிகட்டி பறந்தார்கள்.இப்பொது அடக்கி வாசிக்கிறார்கள்.

திமுகவை எதிர்க்க இவர்கள் சொல்லும் காரணங்கள் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

said...

/தெரு வரைக்கும் இழுத்து வந்து விட்டு விட்ட திருடர்களில், இதோடு நிருத்தி முச்சந்தி வரைக்கும் இழுக்க முயலாத மிதவாத திருடனை தெரிவு செய்யும் அளவு பரிதாப நிலைக்கு நாம் ஆளாகி விட்டதை எண்ணி எவரேனும் வெட்கப்படுகிறீர்களா/

நான் வெட்கப்படுகிறேன்.ஆனால் யாராவது ஒரு திருடர் கூட போய்த்தான் ஆக வேண்டும் எனும் போது வெட்கம் மட்டும் தான் பட முடியும்.

said...

குழலி அய்யா,
விசயகாந்த் கட்சி தொடங்கும் போது நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்றார்.

ஆனால், இந்த செய்தியை பெரியதாக போடுவதற்கு பத்திரிக்கையாளர் களுக்கு உறையில் பணம் வைத்து கொடுக்கப்பட்டது.

இது இலஞ்சம் இல்லையா?
வாக்களியுங்கள் இலவசமாக 15 கிலோ அரிசி தருகிறேன் என்கிறார். ஆனால், இது இவருக்கு வாக்களிப்பதற்காக மக்களுக்கு கொடுக்கும் இலஞ்சம்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்றார். சீமை பசு வாங்கிக் கொடுத்து எல்லாரையும் மாடு மேய்க்க சொல்லவா?.

ஊழலுக்கு காரணமாக இருக்கும் சீட்டுக்கு பணம் வாங்கும் இவரின் கல்லூரிகளை இவர் முதலில் இடிப்பாரா?.

திருமணத்திற்கு வரதட்சனை(இலஞ்சம்) வாங்க உதவும் இவரின் திருமண மண்டபத்தை முதலில் இடிப்பாரா? .

இப்படி நான் கேட்கவில்லை. இயக்குனர் சீமான் கேட்கிறார்.

said...

I'd appreciate you, If you suggest 49-O instead of voting to DMK.

Even you are also thinking like a politician.

said...

//I'd appreciate you, If you suggest 49-O instead of voting to DMK.
//
49-O விற்கும் ஞானிக்குமாக சேர்த்து ஒரு பதிவு எழுதிக்கொண்டுள்ளேன், முடிந்தவுடன் போடுகின்றேன்

said...

The same feedback I gave in joseph's blog.
மிகசிறந்த சாதனை
1) தமிழ்நாட்டில் கலகம் இல்லாமல் ஆண்டது. (தான் ஆட்சிக்கு வர புலியும் சிங்கமும் மோதட்டும் என்று இப்பொழுதே ஆரம்பித்தாகிவிட்டது).

2) ரவுடிகளை ஒழித்தது.

3)தீவரவாதத்தின் நிழல் கூட தமிழகத்தில் படாமல் காக்கும் தலைமை
(திமுக வந்தால் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் நன்றாக சம்பாதிப்பர்)
4) பெண்களுக்கு பாதுகாப்பு
5) ஒட்டுமொத்த வளர்ச்சி சிறப்பாகவே இருப்பது என்று positives பல இருக்கு.

திமுக:
1) குடும்பம், குடும்பதொழில். tata வை மிரட்டிய பெருமையுடைத்து.
2) உடன்பிறப்புக்களின் கட்டப்பஞ்சாயத்து.
3) தலைமை பலகீனமாகி வருவதால், திறமையற்ற ஆட்சியாளர்கள் (stalin, thayanidhi, azhagiri களின் குண்டா ராஜ்யம்)
4) தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் சமரசம், அதுவே தமிழ்பற்று என்ற பறைசாற்றல் (வீரப்பன் சாப்பிட்ட இட்லியை பிடித்தோம் என்று sun TVla vanthathu).
5) possibilities for Lawlessness and riots


Ammaku thaan en vote..ungal votum kooda apdiye irunthaal magizhven

said...
This comment has been removed by a blog administrator.
said...

//1) தமிழ்நாட்டில் கலகம் இல்லாமல் ஆண்டது.
//
பதில் திமுக காரன் மாதிரி சொல்ல வேண்டியதிருக்கும் இருந்தாலும் பிறகு சொல்கிறேன், இப்போதல்ல (இது ஒரு பிரச்சார பதிவல்லவா/)
//2) ரவுடிகளை ஒழித்தது.
//
தனக்கு பிடிக்காத ரவுடிகளை மட்டும் ஒழித்தது, திமுக பேரணியில் ரவுடி வீரமணியை வைத்து வெட்டி இருவரை கொன்றுவிட்டு பிறகு அவனை சுட்டு தள்ளினார்கள், ரவுடிகள் ஒழிந்தனர் ஆனால் அதிமுகவிற்கு பிடிக்காத ரவுடிகள் மட்டும், பேருந்தினுள் வைத்து கொளுத்திய ரவுடிகள் இன்னமும் உள்ளனர், ஆதிராஜாராம், சேகர் பாபு போன்றவர்கள் அதிமுகவில் உள்ளனர், உடனே மற்ற கட்சிகளின் தாதா பட்டியல் போட வருபவர்களுக்கு கொஞ்சம் பொறுங்கள் அதிமுகவின் சாதனையாக சொன்னது ரவுடிகள் ஒழிந்தனர், மாற்று கட்சி தாதாக்களை பட்டியலிட்டால் ரவுடிகள் இன்னமும் உள்ளனர் என்று தானே அர்த்தம்...


//3)தீவரவாதத்தின் நிழல் கூட தமிழகத்தில் படாமல் காக்கும் தலைமை
(திமுக வந்தால் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் நன்றாக சம்பாதிப்பர்)
//
பயங்கரவாதி வைகோவுடன் கூட்டே வைத்துள்ளார் ஜெயலலிதா, நக்கீரன் கோபால், நெடுமாறன், சுப.வீ எல்லாம் தீவிரவாதிகளா? என்னமோ இதற்கு முன்பெல்லாம் தமிழகம் காஷ்மீர் மாதிரி இருந்ததாகவும் இப்போது அமைதிப்பூங்காவாக இருப்பது போலவும்....

சம்பாதித்த தீவிரவாதி ஆதரவாளர்கள் பெயரையும் சொல்லுங்கள்

//4) பெண்களுக்கு பாதுகாப்பு
//
என்னங்க இதுக்கு முன்னாடி தெருவில் போன எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத மாதிரியும் அம்மா ஆட்சியில் ஆளூக்கு ஒரு போலிஸ் பாதுகாப்பு போட்ட மாதிரியும், இந்த ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த தாக ஏதேனும் புள்ளிவிபரம் இருந்தால் தாருங்கள் ஒத்து கொள்கிறேன்...

//5) ஒட்டுமொத்த வளர்ச்சி சிறப்பாகவே இருப்பது என்று positives பல இருக்கு.
//
யாருடைய வளர்ச்சிங்க? மன்னார்குடி குடும்பத்தின் வளர்ச்சியா? இரண்டே ஆண்டில் வளர்ந்த MIDAS ஆ? மணல் காண்ட்ராக்டர் ஆறுமுகச்சாமியா?

said...

4) பெண்களுக்கு பாதுகாப்பு

ஆத்தா ஜெயலட்சுமி, அக்கா செரினா ரெண்டு பேருக்கும் எவ்ளோ பாதுகாப்பு...நீங்க டிவியெல்லாம் பாக்கறதில்லையா?

said...

குழலி,

நீங்கள் ஒரு கட்சி சார்புடையவராக இருந்தாலும்(!), இங்கே வைத்துள்ள வாதங்கள் நடுநிலைவாதிகள் சிந்திக்க வேண்டிய வாதங்கள்.

இத் தேர்தல் இலவச அறிவிப்பின் உச்சத்தை எட்டிவிட்டதால் அடுத்த தேர்தலில் இதே ஆயுதம் பலிக்காது. எனவே, திமுக கட்டாயம் நல்லாட்சி புரிந்தே ஆகவேண்டும். பா.ஜ.க. கூட்டு, இரு அணிக்குமே வேண்டாததாக ஆகிவிட்டதால், சிறு கட்சிகள் ஜெ அல்லது முக, யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேர முடியும். ஆக அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதனை கட்டாயம் பக்குவப்பட்டுவிட்ட முக செய்வார் என நம்பலாம். ( 1996-2001 ஆட்சியே சாட்சி - பல நல்ல, சில கெட்ட விஷயங்கள் நடந்த அந்த ஆட்சியினை ஒப்பீட்டுக்குக் கூட - ஜெயக்குமார் தவிர, யாரும் குறிப்பிடாதது ஆச்சரியம் தந்தது). ஸ்டாலின் மேயரான போது, சோவே(!), அவர் சிறப்பாக செயல்பட நிறைய வாய்ப்பிருப்பதாக எழுதிய வாதங்கள் இங்கு முக வுக்கும் பொருந்தும்.

ஆக, திமுக தலைமையிலான, ஒரு அதிகம் ஊசலாடும் தன்மையில்லாத கூட்டணி ஆட்சியே ( ஒரு சிறு கட்சி காட்டும் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லாத), இந்தத் தேர்தலில் தமிழகம் முன்னிருக்கும் உள்ளதிலேயே சிறப்பான வழி.

பதிலடி பின்னூட்டம், பலே!

போட்டாச்சி ஒரு +

said...

Hello Kuzhali,

I am bit confused with your argument. It is true "captain" is not perfect and his accusations of dynastic politics against DMK and PMK is typicallu the pot calling the kettle black.

However, should we indians/tamilians choose DMK and PMK, because Captain does the same mistake?

Shouldn't we the educated lot, choose to kick all three parties? Shouldn't we ask the politicians for some better deal than this? Don't you feel insulted with this so called free t.vs/computers/cows and god knows what?

If these parties are genuinely concerned about the poor, why can't they give a plan for next five years to uplift their life?Maybe they don't want to?

Let me ask you and other commentators, if DMK and PMK win this elections, does it necessarily mean a victory for Indians? I am afraid not.They might very well win the elections, but I guess, we collectively as Indians have lost.

SInce we all know, freebie are no substitute for genuine governace.

Vignesh

said...

//However, should we indians/tamilians choose DMK and PMK, because Captain does the same mistake?
//
விஜயகாந்த் ஒரு புனித பிம்பம், அவர் ஊழலுக்கு எதிரானவர், குடும்ப அரசியலை எதிர்ப்பவர் என்ற காரணங்களுக்காக மட்டுமே விஜயகாந்த்தை ஆதரிப்பவர்கள் இதே தவறை விஜயகாந்தும் செய்கிறார் அதனால் யோசியுங்கள் என்றேன்.

//If these parties are genuinely concerned about the poor, why can't they give a plan for next five years to uplift their life?Maybe they don't want to?
//
நல்ல கேள்வி ஆனால் இதற்கு பதில் சொல்லும் அளவில் நானில்லை

//Let me ask you and other commentators, if DMK and PMK win this elections, does it necessarily mean a victory for Indians? I am afraid not.They might very well win the elections, but I guess, we collectively as Indians have lost.
//
உண்மை, இதற்கு பதில் என் பதிவிலேயே இருக்கின்றது
//திமுக கூட்டணிதான் சிறந்த ஆட்சி தரும், நல்ல கூட்டணி என்றெல்லாம் சொல்ல வரவில்லை, ஜெயலலிதாவின் ஆட்சியைவிட திமுக ஆட்சி எந்த பிரச்சினையும் self control ஆக செயல்படுவார்கள்
//

said...

//திருமணத்திற்கு வரதட்சனை(இலஞ்சம்) வாங்க உதவும் இவரின் திருமண மண்டபத்தை முதலில் இடிப்பாரா? .//

இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர் சுகுமாரன். ஒருவர் நல்லவராக இருப்பதற்கு எதிர்பார்க்கலாம். ஆனால் இப்படி அநியாயத்துக்கு நல்லவராக இருப்பார் என்றெல்லாம் ஆசைப்படக்கூடாது!.

said...

//அவருக்கு ஒரு வாய்ப்பு தரலாமென்றால் அடுத்த தேர்தலில் தரலாம், அதுவரை அவருடைய செயல்பாடுகளை பார்க்கலாம்//

இனிவரும் ஐந்தாண்டுகளுக்கு, அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்று கண்காணிக்கலாம். இப்போது ஆட்சியில் அமரப்போகும் அரசு, எதனை செய்யத் தவறுகிறது? எவ்வாறு செய்தால் செலவினங்களை குறைக்கலாம்? புதிதாக எதனைச் செய்யலாம்? என்பதனைச்சுட்டி கா ட்டுவதோடு மட்டுமின்றி, தாமும் தமது கட்சியினரும் மக்களுக்கு பொதுமக்களுக்கு சேவைகளைச் செய்யட்டும்.

said...

Hello Kuzhali,

Captain has own Viruthachalam with an lead of 14,000!!!!!!!!!!!!!!!

Can you analyze How this happened at a PMK strong hold and write a post for this

said...

//Hello Kuzhali,

Captain has own Viruthachalam with an lead of 14,000!!!!!!!!!!!!!!!

Can you analyze How this happened at a PMK strong hold and write a post for this
//
இதுக்கெதுக்கு அனானிமசா வந்துகினு, கண்டிப்பாக தேர்தல் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வரும்,சொந்த வேலை இருக்கு ஊரிலிருந்து அப்பா அம்மா வந்து இருக்காங்க....

எந்த கட்சியுமே போட்டியிட்ட எல்லா இடங்களில் வெல்லாமல்(குறைந்தபட்சம் 80% இடங்களில் கூட)இருக்கும் போது கணிசமாக 18 தொகுதிகளில் வென்ற பாமக வை வடமாவட்டங்களில் அடிவாங்கியது பாமக என்று தினமலருக்கு பின்னால் இருக்கும் காரணம் புரியாமல் இல்லை... இவர்களுக்கெல்லாம் பதில் பொட்டீகடை சத்யா சொன்னது போல
//விஜயகாந்த் ஜெயிச்சிட்டாராமா...ஒடனே பாமக காலின்னு சின்ன புள்ளைங்க டயர் வண்டிய ஓட்டிட்டு கத்திகினு இருக்குதுங்க...//

அருள்குமார் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்

http://whatiwanttosayis.blogspot.com/2006/05/blog-post_11.html

பாமக வேட்பாளர் மீதிருந்த அதிருப்தி விஜயகாந்த் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறினாலும் வாக்கு வித்தியாசத்தை வைத்து பார்க்கும் போது நல்ல பெயர் எடுத்துள்ள பாமக நகர்மன்ற தலைவர் வள்ளுவனோ அல்லது முந்தைய திமுக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசனோ நின்றிருந்தாலும் கூட வாக்கு வித்தியாசத்தை குறைத்திருக்கலாமே தவிர விஜயகாந்த்தின் வெற்றியை பாதித்திருக்க முடியாது என கருதுகிறேன்.

நக்கீரன்,விகடன்,குமுதம் என அனைத்து பத்திரிக்கைகளாலும் பாராட்டப்பட்ட மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் விகடனில் உங்க ஊர் எம்.எல்.ஏ, என்ற தொடரில் 30,40 மதிப்பெண்கள் வாங்கியபோது 70 மதிப்பெண்கள் வாங்கியவர் தமிழகத்தின் மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், நிறைய அடிப்படை வசதிகள் செய்து தந்தவர் என கலைஞரிடம் பாராட்டு பெற்ற குழந்தை தமிழரசனே சென்ற தேர்தலில் விருத்தாசலத்தில் தோல்வியை தழுவியவர் தானே, எனவே பாமக வேட்பாளர் அதிருப்தியையும் தாண்டி விருத்தாசலத்தில் விஜயகாந்த்தின் கவர்ச்சி செல்லுபடியாகியுள்ளது, விருத்தாசலமும் தமிழகத்தின் மற்றைய தொகுதிகளைப் போன்ற ஒரு சராசரி தொகுதி என்று நிரூபித்துள்ளது....

said...

எனவே பாமக வேட்பாளர் அதிருப்தியையும் தாண்டி விருத்தாசலத்தில் விஜயகாந்த்தின் கவர்ச்சி செல்லுபடியாகியுள்ளது, விருத்தாசலமும் தமிழகத்தின் மற்றைய தொகுதிகளைப் போன்ற ஒரு சராசரி தொகுதி என்று நிரூபித்துள்ளது....

Anyday this is better than the
caste based politics of PMK.
You support the caste based
politics of PMK and Dr.Ramadoss.
Vijayakanth may not be better than
Ramadoss but he may not stoop to the level of appealing on the basis
of caste.So to that extent he is better.

said...

அ.போ.அ!!