அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்

அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்

2003ல் நடந்த அரசு ஊழியர்கள் போராட்டம் அந்த குடும்பத்தில் இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என யாருமே நினைத்திருக்கவில்லை, திருமணமான ஒரு பெண், திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் ஒரு பல்தொழில் நுட்பக்கல்லூரியில்(பாலிடெக்னிக்) குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் ஒரு பெண், பல் தொழில் நுட்பக்கல்லூரியின் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் ஒரு பையன் என மூன்று பிள்ளைகள், அதிர்ந்து கூட பேசாத , சைடு வருமானம் இல்லாத ஆசிரியர் அவர், இன்னும் நான்கைந்து வருடங்களில் ஓய்வுபெறப்போகின்றவர், ஆயுள் காப்பீட்டு கழகத்தில் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தவர், மாவட்ட ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி

ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அவர்களுடைய சேம நலநிதி, சேமிப்புகளில் பணம் 50% மட்டுமே தரப்படும்(இத்தனைக்கும் இது இவர்களின் சேமிப்பு) மீதி 5.5 ஆண்டுகளுக்கு சேமிப்பு பத்திரமாக தரப்படும் என்பதில் ஆரம்பித்து சரண்விடுப்பு என எத்தனை எத்தனையோ சலுகைகளும் உரிமைகளும் சிக்கன நடவடிக்கை என பறிக்கப்பட்டது, ஓய்வு பெறும் போது கிடைக்கும் கணிசமான அவர்களது சேமிப்பை நம்பியே மகனையும், மகளையும் கரையேற்றும் கனவிலிருந்தவர்களுக்கு இடியாக இறங்கியது, இதய அடைப்பு வந்து சிக்கி சிகிச்சைக்கான பணத்தேவைக்காக சேமிப்பு பத்திரத்தை சேட்டு கடையில் அடகுவைத்த கொடுமைகளை கண்டபோது கோபம் வந்ததை தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாத கையாலாகத்தனம் நோகவைத்தது.

இதற்கெல்லாம் முடிவுகட்ட பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை அரசு ஊழியர்கள் தொடங்கினர், அன்று தெரியாது அவர்களுக்கு ஒரு கொடுமையான காலகட்டத்தை, கோர முகத்தை பார்க்கப்போகிறார்கள் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் தொடங்கியது, போராட்டத்தின் முதல் நாளன்றே கைது செய்யப்பட்டு மத்தியசிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் அந்த ஆசிரியர், அடுத்த நாள் பாய்ந்தது டெஸ்மா சட்டம்(Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002), முன் தேதியிட்டு அமல் செய்யப்பட்ட சட்டம் ஒரு அரச பயங்கரவாதத்திற்கு சமமானது, ஊழியர்களின் உரிமைகளை பறித்த சட்டம், வேலை நிறுத்தம் என்பது மட்டுமே ஊழியர்கள், வேலையாட்களின் ஒரே ஆயுதம், உரிமை அந்த உரிமை பறிக்கப்பட்டது, இலட்சனக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர், பலரும் தாம் வேலையிலிருக்கின்றோமா இல்லையா என்பதை அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் இருந்து மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டிய நிலை.

குடும்பத்தலைவர் வேலை இழந்தார், சிறைவாசம், இதையெல்லாம் அனுபவிக்க அவர் இலஞ்சம் வாங்கவில்லை, கொலை செய்யவில்ல, உயிரோடு யாரையும் எரிக்கவில்லை, பொய் கையெழுத்து போடவில்லை, கஞ்சா வைத்தில்லை, அவர் போராடியது இழந்து போன அவர்களுடைய உரிமைக்காக… சிறையிலிருந்த அவருக்கும் தெரிவிக்கப்பட்டது, பின்பு இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வேலை நீக்கம் நீதிமன்ற தலையீடு, மன்னிப்பு கடிதங்களுக்கு பிறகு 5000க்கும் மேற்பட்டோர் தவிர்த்து பிறருக்கு வழங்கப்பட்டது, அந்த குடும்பத்தலைவர் இந்த வேலை நீக்க பட்டியலிலும் இருந்தார், மீண்டும் இவர்கள் மாநில நிர்வாக தீர்பாணையத்தில் முறையிட்டு அதன் பிறகு ஜெயலலிதாவிற்கு பிடித்த 9 எண் கூட்டுத்தொகை வரவேண்டுமென நீக்கப்பட்ட 999 ஊழியர்களில் இவரும் ஒருவர், படிப்பு முடிக்காத மகன், திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு மகள் மூத்தமகளின் திருமணத்திற்கு வாங்கிய கடன் இன்னும் அடைக்காமல் இருக்கும் நிலை… மேலும் ஒரு இடி இறங்கியது அந்த குடும்பத்தில் அதீத அழுத்தத்தினால் மாரடப்பு (ஹார்ட் அட்டாக்) ஏற்பட்டு சில இலட்சம் செலவு செய்தார்கள் அவர்களுடைய சக்தியையும் மீறி , உயிருக்காக போராடி மீண்டார், பாராளுமன்ற தேர்தல் வந்த போது மீண்டும் வேலை வழங்கப்பட்டு இன்று நிரந்தர இதய நோயாளியாக மனம் உடைந்து தள்ளாடி நடந்து போகும் நெடு நெடுவென உயர்ந்த மனிதர் இன்று சுருங்கி தளர்ந்து போய்கொண்டிருப்பதற்கு அவர் என்ன கொள்ளையடித்தாரா? கொலைசெய்தாரா? உயிரோடு யாரையும் எரித்தாரா? பொய் கையெழுத்து போட்டாரா? கஞ்சா வைத்திருந்தாரா?

ஊழியர்களின் உரிமை வேலை நிறுத்தம், அவர்களின் கோரிக்கைகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அல்லது பேச்சு வார்த்தைக்கு அழைக்கவே படாமல் தான் வேலை நிறுத்தம் என்ற அவர்களின் உரிமை ஆயுதத்தை கடைசியில் எடுத்தனர், ஆனால் அராஜக அதிமுக அரசு செல்வி ஜெயலலிதாவின் ஆணவத்தினால் நசுக்கப்பட்டு நீதிமன்றங்களும் ஊழியர்களின் உரிமை பிடுங்கப்பட்டதை நியாயப்படுத்திய து(நீதி மன்றங்களின் மீது இது தொடர்பாக மிகக்கடுமையான விமர்சனம் உண்டு), செய்தியில் ஒரு பெண் அரசு ஊழியர் கூறியது போராட்டமா நடத்துகின்றீர் உங்கள் மீது விபச்சார வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டினார்கள் என்றார், நீங்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு காலத்தில் உங்கள் உயிருக்காகவோ உங்கள் உரிமைக்காகவோ ஜெயலலிதாவின் அரசை எதிர்க்கும் நிலை ஏற்படுகின்றதோ அப்போது இதே விபச்சார வழக்கு மிரட்டல் எல்லா வீட்டு பெண்களுக்கும் ஏற்படும்,.

நாஜிக்கள் கம்யூனிஸ்ட்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட் அல்ல


நாஜிக்கள் யூதர்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் யூதனல்ல

அய்யோ
நாஜிக்கள் என்னை கொல்லவருகின்றனர்
யாருமே அதை கேட்கவில்லையே

என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றது

அராஜக அதிமுக அரசை எதிர்த்து விழும் ஒவ்வொரு வாக்கும் போராட்ட காலத்தில் உயிர் நீத்த அரசு ஊழியர்களுக்கான அஞ்சலியாக இருக்கட்டும்.

உயிர் உரிமைப்பிரச்சனைகள் தான் எமக்கு தலையாய பிரச்சினை மற்றவைகள் எல்லாம் அதற்கு பிறகு தான்…

28 பின்னூட்டங்கள்:

said...

ரணங்களும் வடுக்களும் நினைவை விட்டு அகலாது சங்க பொதுச்செயலாளர் சிறப்பு பேட்டியின் சுட்டி இங்கே

said...

குழலி நல்ல பதிவு. கஞ்சா கைது கலாச்சாரம் ஜெ.வின் ஆட்சியில்தான் தலைவிரித்தாடுகிறது. அதையும் எழுதலாமே?

said...

எனக்கு தெரிந்து சில வீடுகளில் கணவன், மனைவி, மகன் என்றூ
ஒட்டுமொத்த குடும்பமே வேலை இழந்தது.

said...

நல்லிரவில் கைது என்பது நடுத்தரமக்கள் அறியாத ஒன்று. அறிய வைத்து, வீட்டுக்குச் செல்லாமல் நடுத்தெருவில் யாரோ போல சொந்தவீட்டுக்குப் போவதற்கும் அஞ்சி... இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இன்றைக்கும் சொல்லிப்பாருங்கள் நடுங்குகிறார்களா இல்லையா என்று. ஐயா தங்களை வேலையை விட்டு நீக்கியதற்குகூட இவர்கள் பயப்படவில்லை ஆனால், நல்லிரவில் போலீஸ் என்பது அவர்களின் நெஞ்சை விட்டு அகலாத ஒன்று.

said...

அரசு அலுவலகங்களில் நடக்கும் கொடுமைகளையும் கொஞ்சம் எழுதுங்களேன்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் படிக்க நேர்ந்தது.

அரசு அலுவலங்களில் தினசரி பெரும்பாலான ஊழியர்கள் என்ன என்ன வேலை செய்கிறார்கள் (அவர்களின் அன்றாட நடவடிக்கைகள்) என்பது பற்றிய ஒரு Running commentary மாதிரி இருந்தது அது.

அதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை ஆட்சியில் இருப்பவர்கள் ஒருபுறம் சுரண்ட இந்த அரசு ஊழியர்கள் மறுபுறம் எப்படி சுரண்டுகிறார்கள் என்று தெரிந்துகொள்ளமுடிந்தது. வரிப்பணத்தை மட்டுமில்லாது மக்கள் உழைத்து சம்பாதித்ததையும் லஞ்சமாக சுரண்டுகிறார்கள்.

ஆனால் இது இப்போது கொஞ்சம் மாறியுள்ளது. "எனக்கென்னடா? நான் கவர்மெண்ட் மாப்பிள்ளை, வேலை செய்தாலும் சம்பளம், செய்யாவிட்டலும் சம்பளம், கேட்க எவன் இருக்கான்" என்று எந்த நடவெடிக்கை பயம் இல்லாமல், மன்றம், யூனியன் என்று வைத்துக்கொண்டு அரசை மிரட்டிக்கொண்டு இருந்த காலம் எல்லாம் கொஞ்சம் குறைந்து தான் இருக்கிறது.

மக்களின் வரிப்பணம் பாதிக்குமேல் இவர்களுக்கு சம்பளமாக போயும். மேலும் மேலும் சம்பள உயர்வுகேட்டு போரட்டம் செய்தால், வளர்ச்சித்திட்டங்களுக்கு உலக வங்கியிடம் தான் கையேந்தவேண்டி வரும். அப்போது அவன் சொன்னபடிதான் இங்கு ஆட்சி செய்யும் சூழல் உருவாகத்தான் செய்யும். அவன் பல மானியங்களில் கைவைப்பான், அதையும் அரசு செய்துதான் ஆகவேண்டும்.

ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் வேலையை இழப்போம் என்கிற பயம் இப்போது அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. அதுவே ஒரு வெற்றிதான்.

said...

குழலி,
அவசியம் தேவையான பதிவு. அதிகார அத்துமீறல்களை அவ்வப்பொழுது நினைவூட்ட வேண்டியிருக்கிறது நம் தமிழ் சமுதாயத்திற்கு. இந்த முட்டாள்தனமான சர்வாதிகார சட்டத்தினால் எத்தனை குடும்பங்கள் தலைவனை இழந்து நிற்கதியாயிருப்பது இந்த "ஜெ" மற்றும் ஆதிக்கவெறி பிடித்த தரகு சமுதாயத்திற்கு தெரியும்?

ஜெ.வை கோட்டையில் சந்திப்பதற்கு முன் ஒரு அமைச்சரை அனுகினர் தொழிற்சங்க நிர்வாகிகள். அப்பொழுது அவர் கூறியது,
"வருடா வருடம் உங்கள் 2 இலட்சம் பேருக்கு 200 கோடி உரூபாய் செலவு செய்வதை விட 1 கோடி பேருக்கு தேர்தல் சமயத்தில் தலைக்கு 200 உரூபாய் வீதம் தூக்கி எறிந்தால் அடுத்த முறையும் நாங்கள் தான் அரசமைப்போம். அதனால பொத்திக்கிட்டு போங்க"
இவர்கள் அரசாங்க ஊழியர்களை மட்டும் அவமானப் படுத்தவில்லை.
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையே எலும்புத் துண்டுக்கு அலையும் நாய்களாகக் கருதுகின்ற சர்வாதிகாரப் போக்குக்கும் முடிவு கட்டியே ஆக வேண்டும்.

said...

அரசு ஊழியர்கள் யோக்கியமா என்ற கேள்வியை எதிர்பார்த்தேன், அரசு ஊழியர்கள் அனைவரும் நேர்மையாக வேலை செய்கிறார்கள் என்று கூற மாட்டேன் ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேறு சட்டங்கள் வழிகள் உள்ளன, இது போராட்டத்தை ஒடுக்குவதற்கு அவர்களின் உரிமைகளை பறிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர அவர்களின் தவறுகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்க்கை அல்ல...

//ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் வேலையை இழப்போம் என்கிற பயம் இப்போது அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது.
//
சரியாக சொல்லுங்கள் இந்த வேலை இழப்பு ஒழுங்காக வேலை செய்யாததற்கா? அல்லது அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்கா? உதாரணத்திற்கு ஜெயலலிதா வண்டியில் உங்கள் காரால் மோதி விபத்து ஏற்படுத்துவிட்டீர் அதற்கு விபத்து வழக்கு பதிவு செய்வது சரியா? கஞ்சா வழக்கு பதிவு செய்வது சரியா?

//மேலும் மேலும் சம்பள உயர்வுகேட்டு போரட்டம் செய்தால்,
//
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த போராட்டம் சம்பள உயர்வு கேட்டு அல்ல, ஏற்கனவே இழந்ததை திரும்ப பெற என்பது தெரியுமா உங்களுக்கு

said...

ivvalavu kodumaigal (?) nadanthum antha kaalakattathil arasu oozhiyargal meethu perumpaalonor anuthaaba padavillai, maaraga santhosha patta mathiriye irunthathu. Perumbalana aarasu oozhiyargal makkalin atrupthiyaiye petru irukindranar, ithil aasiriyargalum vilaku illai. Arasu palliyil paditha enaku avargal sincerity pathri nalla mathipu kidayathu. TESMA sattam thevaipadugira nilamaiyil thaan perumpaalana arasu oozhiyargal irunthargal enbatharku lack of public reactione saatchi. Aanal thandika patta sila appavagalukaga kandipai varunthikiren aanal athu en vottai maatradhu.

said...

//நாஜிக்கள் கம்யூனிஸ்ட்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட் அல்ல


நாஜிக்கள் யூதர்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் யூதனல்ல

அய்யோ
நாஜிக்கள் என்னை கொல்லவருகின்றனர்
யாருமே அதை கேட்கவில்லையே//

இதன் அர்த்ததைப் புரிந்து கொள்ளுங்கள். இதே அடக்குமுறைதான் நாளை நமக்கும். சர்வாதிகாரிகளால் கிடைக்கும் ஒரு சில நன்மைகள், அவர்களால் விளையும் மாபெரும் கேட்டின் முன் ஒன்றுமேயில்லை.

said...

நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் எதைச் சொல்வது

said...

//ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த போராட்டம் சம்பள உயர்வு கேட்டு அல்ல, ஏற்கனவே இழந்ததை திரும்ப பெற என்பது தெரியுமா உங்களுக்கு//

இந்த போராட்டங்களின் போது, அரசு ஊழியர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு காரணம் அவர்க்ளால் ஏற்பட்ட பாதிப்பு.

காசு கொடுக்காவிட்டால் அரசு அலுவலகங்களில் எதுவுமே நடக்காது என்ற நிலைதான் அதற்கு காரணம்.

ஏன் அரசு ஊழியர்களே, அவர்களுக்கு சேரவேண்டிய சலுகைகளையும், வைப்பு நிதி, பணி மாற்றம் போன்றவற்றைக்கூட, சக அரசு ஊழியனுக்கு லஞ்சம் கொடுத்துதானே பெறவேண்டிய நிலை இருந்தது.

டீ குடிக்க வெளியில் சென்று நேரம் செலவு செய்யவேண்டாம், அது மேசைக்கே வரும். காலையில் இத்தனை மணிக்கு வரவேண்டும், சாயந்தரம் இத்தனை மணிக்கு செல்லவேண்டும். சரியாக இத்தனை மணி நேரம் வேலை செய்திருக்கவேண்டும் என்ற வரைமுறையெல்லாம் எப்போது ஏற்பட்டது.

எவ்வளவுதான் நடவெடிக்கை எடுத்தாலும், இன்னும் சில அலுவலகங்களில் இது போன்ற கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

said...

ஜெயக்குமார் நீங்கள் சொல்வதை மறுக்கவில்லையே....
//எவ்வளவுதான் நடவெடிக்கை எடுத்தாலும்,
//
மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்காக அல்ல, ஜெயலலிதா அரசை எதிர்த்து போராடியதற்காக என்பது தான் காரணம்...

//சரியாக சொல்லுங்கள் இந்த வேலை இழப்பு ஒழுங்காக வேலை செய்யாததற்கா? அல்லது அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்கா? உதாரணத்திற்கு ஜெயலலிதா வண்டியில் உங்கள் காரால் மோதி விபத்து ஏற்படுத்துவிட்டீர் அதற்கு விபத்து வழக்கு பதிவு செய்வது சரியா? கஞ்சா வழக்கு பதிவு செய்வது சரியா?
//
நீங்கள் பேசுவதை பார்த்தால் நான் மேலே சொன்ன உதாரணத்தில் விபத்து வழக்கு பதிவு செய்யாமல் கஞ்சா வழக்கு பதிவு செய்தால் சரிதான் என்று சொல்வீர்கள் போல :-)

said...

குழலி, "அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியரும்" என்று கூறினால் சரியாக இருக்கும். மிக பல அரசு ஊழியர்களின் திமிர் பிடித்த செயல்கள் ஆட்சியாளர்களை விட மோசமாக இருந்தது/இருக்கிறது. அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை அதனால் தான் இந்த ஆதரவற்ற நிலைமைக்கு தள்ள பட்டார்கள்.

மிக பலறது தவறால் சில நல்லவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பது வருந்த தக்கதே.

said...

அரசு ஊழியர்கள், தங்கள் சலுகைகளை மீண்டும் கேட்டு செய்யும் போராட்டம், அரசு எந்திரம் ஸ்தம்பித்து போகும் அளவிற்கு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு செய்தால் இது போன்ற நடவடிக்கைகள் எடுத்துதான் ஆகவேண்டும். அரசு ஊழியர்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கிராமப்புரங்களில் உள்ள ஆசிரியர்கள். காலை 11 மணிக்குதான் பள்ளிக்கு செல்கிறார்கள். மாலை 3 மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். கேட்டால் பேருந்து வசதி இல்லை, அது இல்லை, இது இல்லை என்று சொல்கிறார்கள். பிறகு எப்படி கிராமப்புரங்கள் கல்வியில் முன்னேறும். கல்வியை ஒரு சேவையாக செய்த காலம் எல்லாம் மலையேறிப்போய்விட்டது. இப்போது எல்லாம் பணம்மயம் என்றாகிவிட்டது. அதனால் தான் ஆசிரியர்களுக்கு, அவர்களிடம் பயிலும் மாணவனிடத்திலும், அந்த ஊர்மக்களிடமும் மரியாதை குறைந்துகொண்டே வருகிறது.

பொதுமக்களின் ஆதரவு அரசு ஊழியர்களுக்கு இல்லாமல் போனதிற்கு இதுவும் ஒரு காரணம். போராட்டம் என்பது அரசையோ அல்லது எதிர்தரப்பையோ மிரட்டுவது மட்டுமல்ல. அவர்களுக்கு உங்கள் நிலையை புரியும்படி எடுத்துச்சொல்வதும் அதற்கான ஆதரவை திரட்டுவதுமே. காந்தியே ஒத்துழையாமை இயக்க அஸ்திரத்தை கடைசியாகத்தான் பிரயோகித்தார்.

said...

இந்த அவலங்களைக் கொண்ட ஆட்சியைத்தான் பொற்கால ஆட்சி என அம்மா தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார். ஆம்! அவருக்கு தெரியும் இனிமேல் சட்டமன்றத்தில் நம்மை புகழ்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று!
அது மட்டுமா? அவரே சட்டமன்றத்திற்கு நுழைவதற்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பார்களா? என்பது சந்தேகம்.
ஜனநாயகத்தில் மிகப் பெரிய கொடூரமான குற்றம் ஒருவரின் வாக்குரிமையைப் பறிப்பது. அதைவிடக் கொடூரமான குற்றம் ஜனநாயகத்தில் போட்டியிடப்போகும் வேட்பாளரை போட்யிடவிடாமல் கடத்துவது. எம்.ஜி.ஆர். அண்ணன் மகள் லீலாவதி நியாயம் கேட்டுள்ளார். தேர்தல் கமிஷனின் நீயாயம் - நீதி என்னவாக இருக்குமோ? மக்கள் விரும்புவது ஆண்டிப்பட்டியில் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே! அத்துடன், இவரை கடத்தியவர்கள் யாராக இருந்தாலும், தூண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேர்தல் களத்தில் இருந்தால் அவர்களை தேர்தலில் போட்டியிட தடைச் செய்ய வேண்டும்.
தேர்தல் கமிஷன் நீதியை மறுத்தால், மக்கள் தங்கள் நீதியை கையில் எடுப்பார்கள் ஓட்டுக்களாக...
மே 8 அம்மா ஆட்சிக்கு மக்கள் வைக்கப் போகிறார்கள் வேட்டு!

said...

அரசு ஊழியர்கள் முதலில் அலுவலகத்திற்கு வரும் மக்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஒரு கெயெழுத்து போட சராசரியாக 30 - 3000 வரை தெண்டம் அழ வேண்டியுள்ளது. இதில் 1008 யூனியன் வேறு. முதலில் யூனியன் ஆட்கள் ஒழுங்காக அலுவலகம் வந்தாலே போதும்.

எவ்வளவுதான் எதிர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை.

லண்டன் ஜெயக்குமார் சொல்வது உன்மை. ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை. மேலும் எனக்குத் தெரிந்து ஒயின் ஷாப்பில் கூட பார்ட்னர்களாக் இருந்துள்ளனர்.

+2 தேர்வு முடிந்து, திருத்தும் பணி தொடங்கும் போதுதான் "கூலி" உயர்வு சிந்தனை வரும்.

இவர்கள் செய்தது 50% சரி என்றால் , அரசியலுக்கப்பால் முதல்வராக் ஜெ எடுத்தது 100% சரியே.

ஆந்திரா, கர்னாடகா, கேரளத்தில் நம்மை விட அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் குறைவு.

கல்வியைக் கெடுக்கும் ஆசிரியர்கள்
குறித்த நேரத்தில் முதலுதவி செயாத மருத்துவர்,
ஜாதி,பிறப்பு,இறப்பு மற்றும் பல சான்றிதழ்களுக்கு காசு கேட்கும் வட்டாட்சியர் & அலுவலர்கள்
காசு கேட்கும் ட்ராபிக் போலிஸ் (இப்பிரிவுக்கு தனியாக 50 பதிவுகள் வேண்டும்)
கலக்டர் அலுவலக ராசாதி ராசாக்கள்
இன்னும் பல அரசு அதிகாரிகள்

""இவைகலெல்லாம்" தங்கள் தேவைகளை குறைத்துக் கொண்டு ஒழுங்காக இருக்கும் வரை

எஸ்மா, டெஸ்மா எல்லாம் நிர்ந்தரச் சட்டமாக வேண்டும்.

இதை சொல்வதால் ஜெ அபிமானியல்ல.

கிராமத்தில் ஒரு (கொச்சையான) பழமொழி உண்டு

" பனை ஏறுபவன் பிட்டத்தை எட்ட மட்டும்தான் தாங்க முடியும்"

said...

good post kuzali

said...

// உயிர் உரிமைப்பிரச்சனைகள் தான் எமக்கு தலையாய பிரச்சினை //

Well Said குழலி !!

Good Blog!!

said...

Kuzali nice post.

said...

Nice post kuzali.

said...

அரசு அலுவலர்களை கைது செய்து அரசின் கடமையை நிறைவேற்றிய காவலர்கள் உத்தமர்களா? புகார் குடுக்க காவல் நிலையம் சென்றால் நல்ல மரியாதையாக உட்கார வைத்து பேசுவார்கள் நீங்கள் அரசியல் செல்வாக்குடன் இருந்தால்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் அரசு செயல்படக்கூடாது. ஜெ அரசின் நடவடிக்கைகள் அவ்வாறானவைதான்.
//அய்யோ
நாஜிக்கள் என்னை கொல்லவருகின்றனர்
யாருமே அதை கேட்கவில்லையே//
இதைபுரிந்து கொண்டால் நலம்.
எப்பவுமே எல்லோராலும் பன்னீராக இருக்கமுடியுமா? :-) கொஞ்சம் பொன் அய்யனாக மாறினாலும் நிலைமை மோசம் தான். :-))

said...

உங்களுடைய இக்கட்டுரையுடன் நா மிகவும் ஒத்துப் போகிறேன். அரசு ஊழியர்கள் அனைவரும் லஞ்சம் வாங்குபவர்கள் என்ற பிம்பத்தை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார்கள். ஜெயக்குமார் போன்ற அ.தி.மு.கவின் நியமிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளர்கள் அதை நியாயப்படுத்துகிறார்கள்.

அராஜகம் என்பது தனக்கு பிடிக்காதவர்களின் மேல் ஏவப்படும் வரை அது நமக்கு ஒப்புதலாக இருக்கிறது. இதுதான் வேதனைக்குரிய மனோபாவம். அரசு ஊழியர்களின் மேல் பொதுமக்கள் அனுதாபப் படவில்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரிய செய்தியா? அரசாங்கத்திம் மீதான சாதரண மக்களின் பயத்தையே அது எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு மக்களை பயமுறுத்தி வைத்திருக்கும் அரசு சிறந்த ஜனநாயக அரசா?
அடகுமுறையே ஆளுமை என்ற ரீதியில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சி அமைந்திருக்கிறது. இதைப் பாராட்டுபவர்கள் தங்களும் உறைந்திருக்கும் சாடிசத்தை தட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.

ராஜ்குமார்

said...

ஜெயக்குமார் மற்றும் பால்ராஜ்

அரசு ஊளியர்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் இங்கு மாற்றுக்கருத்து இல்லை

/*எஸ்மா, டெஸ்மா எல்லாம் நிர்ந்தரச் சட்டமாக வேண்டும்.*/
இந்த சட்டங்கள் ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊளியர்களை தண்டிக்க அல்ல போராட்டத்தில் ஈடுபடும் ஊளியர்களை தண்டிக்க என்பதை மனதில் கொள்ள வேண்டும்

இதற்கு மட்டுமாவது பதில் சொல்லுங்கள்

நீங்கள் P.F ல் போட்டுள்ள பணத்தில் முதல் 50,000 வட்டி கிடையாது என்றால் ஒத்துக் கொள்வீரா?15 வருடம் இப்படியே என்றால் கிட்டத்தட்ட 60,000 நட்டம்.

அவர்கள் ஒன்றும் சட்டென அரசுக்கு அறிவிக்காமல் வேலை நிறுத்தத்தை தொடங்கவில்லை

முதலில் அரசுக்கு கோரிக்கை

அடுத்து அடையாள உண்ணாவிரதம்

முழக்கப் போராட்டம்

அடையாள வேலை நிறுத்தம்

அதற்கடுத்தே வேலை நிறுத்தப் போராட்டம் இதில் எந்த நிலையிலும் அரசு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்பதே உண்மை

மக்களின் மனநிலை இதுதான் தன் மகன் BE படித்து முதல் சம்பளமே 18000 வாங்க வேண்டும்.ஆனால், ஒரு அரசு ஆசிரியர் கிட்டத்தட்ட 20 வருட சர்வீஸ்க்கு அடுத்து 18,000 சம்பளமாக வாங்கினால் ஆஆஆ வென வாய்பிளப்பார்கள்.

said...

நல்லதொரு பதிவு குழலி

said...

இந்தப் பதிவு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் பிரச்சனையில் அதிமுக அரசு எதேச்சார்காரமாய் நடந்து கொண்டிருப்பதை கண்டிப்பதுடன் அரசு ஊழியர்களின் போக்கை மறைமுகமாக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. பெரும்பாலான அரசு ஊழியர்களின் அன்றாட நடவடிக்கை ஆதரவளிப்பதற்கு தகுதியற்றது. காவல்துறையிலும் மருத்துவமனைகளிலும் பல மனிதாபிமானமற்ற செயல்கள் நம்மைச் சுற்றி உள்ளோருக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அடக்குமுறைகளை அரசு ஊழியர்கள் பொதுமக்களின்மேல் பல்வேறு அளவுகளில் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
அரசின் முறையற்ற செயல்களுக்கு சம்பந்தபட்டவர்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும், எதிர்கட்சிகளிடமிருந்தும், நீதி மன்றங்களிடமிருந்தும் கண்டனங்கள் வரும்போது தவறுகள் சரிசெய்யப்படுகின்றன. ஆனால் அரசு ஊழியர்களால் பொதுமக்களும் வேறு துறைசார்ந்த அரசு ஊழியர்களுமே படும் தொல்லைகளுக்கு முடிவு எப்படித்தான் வரும்?

நடராஜன்.

said...

இது தொடர்புடைய என்னுடைய பதிவு poetraj.blogspot.com

said...

awesome post

1. You write well in tamizh

2. Uir, Urimai enru pesi makkalai unarchipurvamai thunduvathil naan en munnorgalukku satrum kuraindhavan ellai enru nirubhithu erukkirirgal

3. En amma,appa erandu perum arasu uziyargalthan.Avargalathu seyalbadugalil enakku udanbadu kidaiyathu

4. Tamizh peyarai solli kondu thirudargalukku vakkalathu vangathirgal.

5. araru uziyargal mel edukkapatta nadavadikkaigalal makkalin urimai(tax payers rights) have been firmly established


let me conclude will you ever write one sensible post.

said...

//அரசு ஊழியர்கள், தங்கள் சலுகைகளை மீண்டும் கேட்டு செய்யும் போராட்டம், அரசு எந்திரம் ஸ்தம்பித்து போகும் அளவிற்கு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு செய்தால் இது போன்ற நடவடிக்கைகள் எடுத்துதான் ஆகவேண்டும். //

ஐயா யாராவது இவரை பேசுவதை நிறுத்தச் சொல்றீங்களா? தாங்கமுடியலை...