தினமலருக்கு என்ன ஆச்சி?

பிராமண சங்கம் ஒரு சாதி சங்கம்; அந்த ஜாதியின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட என்பது எல்லோருக்கும் தெரியும்; அரசியல் கட்சியாக வளரும்போது ஒரு ஜாதிக்காக மட்டும் போராட முடியாது ஏனென்றால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர வாய்ப்புண்டு உதாரணத்திற்கு வன்னியர்களுக்காக பாமக ஆரம்பிக்கப்பட்டது வன்னியர் சங்கத்தில் இருந்த தலைவர்கள் ராஜினாமா செய்துவிட்டு பாமகவில் பொறுப்பேற்றனர் அதற்கு காரணம் ஜாதிகட்சியிலும் அரசியல் கட்சியிலும் ஒரே நேரத்தில் பொறுப்பு வைத்துக்கொள்வதில்லை என்பதால் தான்.

பாமகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர்ந்தனர், இதனால் தான் இன்று பாமக வளர்ந்துள்ளது அதனால் தாம்ப்ராஸ் பதவியில் இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு....மேலும் படிக்க இங்கே
தினமலரின் இது உங்கள் இடம் பகுதியில் சிந்திப்பார்களா தாம்ப்ராஸ் உறுப்பினர்கள் என்ற தலைப்பில் துரை.ராமகிருஷ்ணன் பம்மல் சென்னையிலிருந்து எழுதியதாக வெளியிடப்பட்டுள்ளது....
(எப்படிப்பா தினமலரில் இருந்து அத்தனை பெரிய பெரிய செய்திகளை பதிவிடுகின்றனரோ? ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா தினமலரிலிருந்து யுனிகோடாக மாற்றுவதற்கு, பார்த்து பார்த்து ஈ-கலப்பையில் அடிப்பதற்குள் ஸ்ப்ப்ப்பா....)

ஒரு வேளை இந்த செய்திக்கும் அதிமுகதான் எங்கள் எதிரி, பிராமணர் சங்கம் என்ற செய்திக்கும் அல்லது தினமலர் தில்லுமுல்லு என்ற செய்திக்கு தொடர்பு இருக்குமோ

நான் சொல்லவந்தது ஏதேனும் புரிகிறதா?

14 பின்னூட்டங்கள்:

கருப்பு said...

குழவி,

என் வலையில் படித்துப் பார்க்கவும். தினமலத்தினைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

கறுப்பு.
http://karuppupaiyan.blogspot.com

Pot"tea" kadai said...

//"தினமலருக்கு என்ன ஆச்சி?"//

எனக்கு அந்த சந்தேகம் தான்?!!

மாயவரத்தான் said...

சுரதா உபயோகிக்கவும் குழலி

குழலி / Kuzhali said...

//சுரதா உபயோகிக்கவும் குழலி
//
நன்றி தல ஊர்நிலவரம் எப்படி?

சங்கரய்யா said...

குழலி,
padma extension-ஐ firefox-ல் நிறுவினால் பெரும்பாலான யுனிகோடல்லாத தமிழ் பக்கங்களை தானாகவை யுனிகோடிற்கு மாற்றிவிடும். முயற்சித்து பாருங்கள்

மாயவரத்தான் said...

//தல ஊர்நிலவரம் எப்படி? //

ஹிஹி.. என்கிட்ட கேட்டா என்ன பதில் வரும்னு நீங்க தான் ஏற்கனவே முடிவு செஞ்சு வெச்சிருப்பீங்களே.

இருந்தாலும் சொல்றேன்..

* அ.தி.மு.க. கூட்டணி பார்டரில் பாஸ் பண்ண சான்ஸ் அதிகம்.

* ஒரு வேளை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும், தி.மு.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது.

* விருத்தாசலத்தில் 'வி'க்கு விக்டரி நிச்சயம்.

* எங்க ஊரில் ஏற்கனவே பம்பரம் தான் சுழலும் என்றார்கள். இப்போது விஜய டி. வேறு நிற்பதால், தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர் காங்கிரஸ் (மணிசங்கர் பி.ஏ.) ராஜ்குமாருக்கு ஆதரவாக விழவேண்டிய தி.மு.க. வாக்குகள் விஜய டி.க்கு போகுமென்பதால், பம்பரத்துக்கு சான்ஸ் அதிகம்.

* நீங்கள் எதிர்பார்க்காத ஒரு கட்சிக்கு இரண்டிலக்க சீட்டுகள் கிடைக்கும் என்று பட்சி ஆருடம் கூறுகிறது. (நாஸ்டர்டாமஸ் வேறு அப்படி தான் கூறுகிறாராம்)

மாயவரத்தான் said...

//பாமகவின் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர்ந்தனர், இதனால் தான் இன்று பாமக வளர்ந்துள்ளது//

இருங்கள்.. நிறுத்தி நிதானமாக வயிறு வலிக்க சிரித்து விட்டு வருகிறேன்.

Anonymous said...

காணவில்லை - தின-மலம் தாங்கி ஜெ-வை காணவில்லை. கேடி தயாநிதி கும்பலால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்.

தின-மலம், பார்பன சங்க பிரச்சனையில் மாட்டியிருக்கின்றது. அதை எப்போதும் தாங்கி பிடிக்கும் ஜெ மவுனம் காக்கிறார். இதற்கு இடையே பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. கேடி தயாநிதி மற்றும் நக்கீரன் கும்பலால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Anonymous said...

In general free publicity for Dinamalar in this election!!

Anonymous said...

http://www.dinakaran.com/epaper/2006/Apr/30/14_2.jpg

Anonymous said...

**தினமலருக்கு என்ன ஆச்சி? **

Antha Oruva Paper vanthathal...

தினமலருக்கு vaitha valikitham

oudmass koduko sollungo

-BUL BUL TARA

Anonymous said...

onnu puriyudhu.

nethu varai jaathi katchi yaga irundha pamaka ippo podhu katchi yagi vitadhu.

maaraga dinamalar jaathi paper aagivittadhu indru.

ப்ரியன் said...

/*எப்படிப்பா தினமலரில் இருந்து அத்தனை பெரிய பெரிய செய்திகளை பதிவிடுகின்றனரோ? ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா தினமலரிலிருந்து யுனிகோடாக மாற்றுவதற்கு, பார்த்து பார்த்து ஈ-கலப்பையில் அடிப்பதற்குள் ஸ்ப்ப்ப்பா....*/

அன்பின் குழலி,
http://suratha.com/reader.htm

இந்த தளத்தில் உங்களுக்கு யுனித்தமிழாக மாற்ற வேண்டிய தினமல்ர் சேதியை முதல் பெட்டியில் வெட்டி இட்டுவிடுவிட்டு .Thatstamil என்னும் பொத்தானை அழுத்தினால் கீழ் உள்ளப் பெட்டியில் யுனித்தமிழாக மாறிய செய்தி கிடைக்கும்.

ப்ரியன் said...

உதாரணத்திற்கு இதோ மாற்றப் பட்ட செய்தி,

சிந்திப்பார்களா தாம்ப்ராஸ் உறுப்பினர்கள்?

துரை.ராமகிருஷ்ணன், பம்மல், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த சில நாட்களுக்கு முன்பு, உங்கள் டீக்கடை பெஞ்ச் பகுதியில் பிராமண சங்கம் கட்சி ஆரம்பித்தது பற்றி விமர்சனம் செய்திருந்ததை பார்த்தேன். நீங்கள் எழுதியதற்கு மேலும் சில விளக்கங்கள் தர விரும்புகிறேன்.

ஒரு கட்சி நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் பிராமணர்களைப் போல் படித்தவர்களை

மட்டும் கொண்டு, கட்சியை நடத்த முடியுமா என்பதை தாம்ப்ராஸ் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திராவிட கட்சிகளின் கைங்கர்யத்தால் அரசு வேலை வாய்ப்பில் பிராமணர்

களுக்கு 3040 வருடமாக இடமில்லை. அதனால், பிராமணர்களில் பெரும்பாலோர் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்ந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

இவர்களில் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், வக்கீல்களாகவும் பதவி வகித்து வருவோர் ஏராளம். அதனால், கட்சி வேலைக்காக லீவு போட்டு விட்டு அவர்கள் வருவர் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏன் ஓட்டுப் போடக்கூட பல பேருக்கு லீவு கிடைக்காமல், ஓட்டுப் போட முடியாமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

பிராமண சங்கம் ஒரு ஜாதி சங்கம்; அந்த ஜாதியின் முன்னேற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும்; அரசியல் கட்சியாக வளரும்போது ஒரு ஜாதிக்காக மட்டும் போராட முடியாது. ஏனென்றால், பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர வாய்ப்புண்டு.உதாரணத்திற்கு, வன்னியர்களுக்காக பா.ம.க., ஆரம்பிக்கப்பட்டது. வன்னியர் சங்கத்தில் இருந்த தலைவர்கள் ராஜினாமா செய்து விட்டு, பா.ம.க.,வில் பொறுப்பேற்றனர். அதற்கு காரணம் ஜாதி கட்சியிலும் அரசியல் கட்சியிலும் ஒரே நேரத்தில் பொறுப்பு வைத்துக் கொள்வதில்லை என்பது தான்.

பா.ம.க.,வின் கொள்கை யை ஏற்றுக் கொண்டதால் பிற ஜாதியினரும் அக்கட்சியில் சேர்ந்தனர். இதனால் தான் இன்று பா.ம.க., வளர்ந்துள்ளது.அதனால், தாம்ப்ராஸ் பதவியில் இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சியில் பதவி வகிக்கட்டும். இதனால் கட்சியின் கொள்கை பிடித்துப் போய், பிற ஜாதியினரும் வந்து சேரக்கூடும். அரசியல் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் கொள்கைகளால் தாம்ப்ராஸ் எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும்.சிந்திப்பரா தாம்ப்ராஸ் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்!
- தினமலர்