அட்சய திருதை - தி.மு. - தி.பி.

அட்சய திருதை - தி.மு. (திருமணத்திற்கு முன்)

அல்வாசிட்டியின் ஏதோ ஒரு பதிவில்: குட்டி இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு நகைக்கடைகளில் கூட்டம் என்ன என்று விசாரித்தால் அட்சயதிருதையாம், அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது அட்சய திருதை அன்று என, உள்ளே மனைவிகள் வெள்ளிகளை(டாலர்) தங்கமாக்கி கொண்டிருக்க வெளியே அழும் குழந்தைகளை சமாதானப்படுத்தியபடி பாவமாக கணவர்கள்.... இப்படி நீண்டது அந்த பின்னூட்டம்

அட்சய திருதை - தி.பி. (திருமணத்திற்கு பின்)


என்னங்க அடுத்த வாரம் அட்சய திருதை...

என்னது அட்சய திருதையா அதெல்லாம் வியாபாரிகள் செய்யும் விற்பனை தந்திரம் என்று தொடர்ந்த பேச்சின் மீதியை கேட்கத்தான் யாருமில்லை அங்கே

*****

தம்பி அட்சய திருதைக்கு ஒரு கிராம் வாங்கி சாமிக்கு படைங்க....

ஆகா நீங்களுமா?


*****

ஏப்ரல் 30

ஹலோ நான் தான் பேசுறேன், இன்னைக்கு முஸ்தபால கிராம் ரேட்டு எவ்வளோங்க...

மேலிடத்தின் தணிக்கைக்குப் பிறகு அனுமதியோடு இந்த பதிவு வெளியிடப்படுகின்றது, எனவே இதைப்பற்றி மேலிடத்தில் போட்டுக்கொடுக்க நினைப்பவர்களுக்கு சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

5 பின்னூட்டங்கள்:

Pot"tea" kadai said...

:-) :-)

அஹிம்சையாம் இம்சை!

நாங்க எஸ்கேப் சாமியோவ்...

முத்துகுமரன் said...

:-) :-) :-)

அகிம்சையான இம்சை!

(*நன்றி- பொட்''டீ''கடை)

ramachandranusha(உஷா) said...

தகவலுக்கு நன்றி திரு. செந்தில்.
புது கல்யாணம் இல்லையா. முடிவு இப்படி வெற்றிக்கரமான தோல்வியில்தான் முடியும் என்பது
தெரியாதா என்ன :-))

மாயவரத்தான் said...

(கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

டேய்... இந்த அட்சய த்ருதியைன்றததயெல்லாம் எவண்டா கண்டுபுடிச்சான். மவனே.. அவன் மட்டும் என் கையில மாட்டினான், மவனே..கைமா தாண்டி.

(இந்த பின்னூட்டம் 'மேலிடத்தின்' அனுமதியின்றி அளிக்கப்படுகிறது!)

Anonymous said...

அட்சய திருதை

Goverment holiday illaya

sun t.v,jj tv star tv ithula special programe illaya

enayya ithu tamizlan thiruvillava .....

-Bul Bul Tara