இப்படி தான் பதில் சொல்லனுமோ?
இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நாகரீகம் இந்த முறை வெகுவாக குறைந்துவிட்டது.
தாழ்த்தப்பட்ட சாதி என்று கூட எழுதாமல் தாழ்ந்த சாதி, கீழ் சாதி என்று தம் மன அழுக்கை காட்டியுள்ளனர் மேலும்
சிலந்திவலை என்ற வலைப்பதிவில்
//குறைந்த மதிப்பெண் பெற்ற சில பிற்படுத்தப்பட்ட(முதலில் தாழ்ந்த ஜாதி என்று எழுதி சிலர் சு(தி)ட்டி காட்டிய பிறகு பிற்பட்ட என்று மாற்றினார் ) ஜாதி மாணவர்களை அவர்கள் தகுதிக்கு மீறிய கல்விக்கூடங்களில் சேர்த்துவிட்டால் போதுமா?// என்று விடத்தை கக்கிவிட்டு பிறகு
//ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா ஜாதியிலும் அறிவில் சிறந்த மாணவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய கல்விக்கூடங்களில் சேர்வதற்கு ஒதுக்கீடு எதுவும் தேவையில்லை.// இப்படியும் எழுதியுள்ளார்
// இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் பாதிப்பேர் எப்படியோ சமாளிக்கிறார்கள் என்று வைத்துகொண்டாலும், 25% தேர்ச்சி பெறக்கூட முடியாதவர்களாக போனால் //
என மொத்தமாக கேவலப்படுத்துகின்றார்
அந்த விடம் கக்கிய பதிவின் சில பின்னூட்டங்கள்
//இட ஒதுக்கீடு என்ற பெயரில் சீட் வாங்கிவிட்டு ஒரு சிலர் அடித்த கூத்துகளை பார்க்கும்பொழுது வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. மொத்த ஸ்காலர்ஷிப் பணத்தையும்(பெற்றோர்கள் பணக்காரர்கள்)
வாங்கி மது,மாது என்று அமோகமாக வாழ்ந்தார்கள்.
//
இனி இட்லி வடையின் பதிவில்
//அவர்களின் சிறுசிறு தவறுகள் கூட ஒதுக்கீட்டைச் சொல்லி ஏளனப்படுத்தப் படுகின்றன. 'ரிசர்வேஷன்ல படிச்சுட்டு வந்து விஷயமும் தெரியாம நம்ப தாலியை அறுக்குறானுக!' என்று சொல்லியிருக்கிறோம், அலுவலகங்களில் கேட்டே வருகிறோம்.
//
//கிட்டத்தட்ட LKG, UKG யிலிருந்து ஆரம்பித்து 14 வருடங்கள் ஒரே கல்விநிறுவனத்தில் படித்தும், அத்தனை வருட இடைவெளியில்கூட சக மேல்சாதி(என்றழைக்கப்படுகின்ற) மாணவனுக்குச் சரியாக தன்னை வளர்த்துக்கொள்ள முடியாமல் +2 முடித்ததும் மேலே படிக்க இட ஒதுக்கீடு வேண்டுமானால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
//
//49.5 இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இத்துடன் நிறுத்திவிட கூடாது - ரானுவம், பாராளுமன்றம், சட்டசபை, அமைச்சர்கள், இந்திய கிரிக்கேட் அணி ஏன் வலைப்பதிவில் கூட கொண்டு வர வேண்டும்
//
எத்தனை விடம் தோய்த்த கேலி
இனி சில பின்னூட்டங்கள்
//வலைப்பதிவு... ஹி.. ஹி... நாங்க திறமை காமிச்சாதான் கிடைக்கும்னு இருக்கச் சொல்ல தான் ஒதுக்கீடு கேப்போம். வலைப்பதிவு ஆத்தோட தண்ணி; நீயும் குடி, நானும் குடி, அள்ளிக் குடி மேட்டரு. . . அதுக்கெல்லாம் ஒன்னும் வேணாம் போ!
வேணும்னா, மேல்குடி இவ்ளோ சனம்தான் பதிவு வெக்கலாம்னு ஒரு லிமிடேசன் ரூல் வெக்கிலாம். அப்பவும் இந்த முகமூடிகளை எந்த கணக்குல சேர்க்க?..
//
//இப்படி எல்லாவற்றிற்கும் 'அவாளையே' குத்தம் சொல்லிக் கொண்டிராமல், கொஞ்சம் தன்நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அநாவசிய ஆத்திரங்களைக் குறைத்தால், இட ஒதுக்கீடும் வேண்டாம்; ரத்த அழுத்தமும் வராது.
தவறாக எண்ண வேண்டாம்.
//
//
I challenge the concerned jokers to go ahead with 50% Reservation for not only students but also for teaching staff. Its better that Government builds one more IIT and IIM and call them RIIT and RIIM (R stands for you know what) and let others live in peace and maintain their standards. RIIT and RIIM may be put under AICTE for added glory. It will be wiser for the government to offer the best of education from primary education and make them face the world rather than give them feel of artificial security by reservation.
Naam Arjun Raknewala sab Yudh nahi jeeet saktein
aur IIT IIM koi Kurushetra bi nahi hein
Na is Arjun ke paas koi Krishn bhi hai
Paritranaya sadhunam vinasaya Sathuskratham
Dharma samsdha banarthaya sambavami yuge yuge
Tora Tora Tora
//
என்று தனியும் இந்த பிரச்சாரம் என்ற என் பின்னூட்ட பதிவில் வந்த சில பின்னூட்டங்கள்
At 9:18 PM, அப்பாவித்தமிழன் said…
//மிக்க நன்றி இதனால் இழப்பு அந்த நிறுவனத்திற்கு தான், திறமையில்லாமல் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இன்று உலகம் பூராவும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்துறையில் புகுந்து விளையாடுகின்றனர் என்பது அன்னாத்தைக்கு பிரியுமோ இல்லையோ//
ண்ணா, சூப்பர்ங்ணா. அப்புறம் யாரை ஏமாத்தறதுக்குங்க்ணா இன்னும் இட ஒதுக்கீடு? 'புகுந்து விளையாடறவங்க' ஏங்ணா சைட்லயே புகுந்து விளையாடணும்?
இன்னும் எந்தெந்த பதிவில் எந்தெந்த பின்னூட்டங்களில் எத்தனை விடங்கள் கக்கப்பட்டுள்ளதோ!
தயிர் சாத குடும்ப சூழல் என்று நான் அடித்த நக்கலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.
தாழ்ந்த சாதி, கீழ் சாதி, Reservation IIT, தகுதிக்கு மீறிய கல்வி என்றெல்லாம் பேசுபவர்களிடமும் நக்கல், நையாண்டி செய்பவர்களிடமும் எத்தனை விவாதம் செய்தாலும் ஆகாது....
அவர்களுக்கான பதில் கீழ்கண்டவாறு தான் இருக்க வேண்டும் போல
மேல்சாதியினர் புத்திசாலித்தனத்தினால் பெறுகிறார்கள் என்றால் மற்றையவர்கள் அவர்களின் அரசியல் பலத்தினால் பெறுகின்றனர், மேல் சாதியினருக்கு புத்திசாலி தனம் பலமென்றால் மற்றவர்களுக்கு அரசியல் பலம், இட ஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் ரீதியாக ஒழிக்க முடிந்தால் ஒழித்து கொள்ளுங்கள்....
மேலே நான் சொன்னது தாழ்ந்த சாதி, கீழ் சாதி, Reservation IIT, தகுதிக்கு மீறிய கல்வி என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும் மட்டுமே... மற்றபடி இதை வைத்து திரித்தல், சொறிதல் செய்பவர்கள் தாராளமாக செய்து கொள்ளலாம்
20 பின்னூட்டங்கள்:
குழலி, உங்களுடைய பொறுமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஒரு + போட்டாச்சு...
நா கூட எழுதனும்னு நெனைச்சிக்கிட்டே இருக்கேன் ஆனா எழுத முடியல...
//தயிர் சாத குடும்ப சூழல் என்று நான் அடித்த நக்கலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்//
நன்றி குழலி அவர்களே. எனது பின்னூட்டம் உங்களை வருத்தி இருந்தால் எனது மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீதர்
ஆமாம், இப்படித் தான் பதில் சொல்லணும்.
//உங்களுடைய பொறுமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் //
//இப்படி எல்லாவற்றிற்கும் 'அவாளையே' குத்தம் சொல்லிக் கொண்டிராமல், கொஞ்சம் தன்நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அநாவசிய ஆத்திரங்களைக் குறைத்தால், இட ஒதுக்கீடும் வேண்டாம்; ரத்த அழுத்தமும் வராது.
தவறாக எண்ண வேண்டாம்.//
திரு. முத்து[தமிழினி] 'அவாள்லாம்' எனக் குறிப்பிட்ட கருத்துக்கான பதிலே நீங்கள் குறிப்பிட்ட எனது கருத்து.
//
இதில் விடம்[விஷம்] என்ன கண்டீர்கள்?
எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்று வைத்துக் கொண்டால் இப்படித்தான்!
சற்று மனசாட்சியுடன் எழுதுங்கள்.
நான் முடிந்தவரை கண்ணியம் காப்பவன்!
வாழ்க! வளர்க!
ewtha othikkiidu peRRu kalluurikku vawthaalum palkalaikkazakam wirNayiththa kuRaiwthapadsa mathippeN peRRaal thaan theerssi peRamudiyum. athanaal paddam peRRu veLiyee vawthavarkaLin tharam kuRaivu enRu solluvathu mika mika thavaRu.
tharaththappaRRi romba kavalaippaddiirkaL enRaal எந்த ஒதிக்கீடு பெற்று கல்லூரிக்கு வந்தாலும் பல்கலைக்கழகம் நிர்ணயித்த குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி பெறமுடியும். அதனால் பட்டம் பெற்று வெளியே வந்தவர்களின் தரம் குறைவு என்று சொல்லுவது மிக மிக தவறு.
தரத்தப்பற்றி ரொம்ப கவலைப்பட்டீர்கள் என்றால் பல்கலைகழகத்திடம் தேர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அதிகப்படுத்த சொல்ல வேண்டியது தான் தீர்வு.
இடஒதுக்கீட்டை முழுவதும் எதிர்ப்பது என்பது ஒன்று அதை சரியாக புரிந்துகொள்ளாமை அல்லது என் பங்கு போகுதே என்கிற ஆற்றாமை.
"நமது மனங்களில் இருந்து பிறப்பு/குல அடிப்படையிலான வேறுபாடுகள் ஒழியும் வரை பிறப்பு/குல அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் இருக்கவேண்டும்" என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் குழலி.
How about the comments and posts in blogs supporting reservation ?.
Have a look and you will know how
much hatred is there.
"மேல்சாதியினர் புத்திசாலித்தனத்தினால் பெறுகிறார்கள் என்றால் மற்றையவர்கள் அவர்களின் அரசியல் பலத்தினால் பெறுகின்றனர், மேல் சாதியினருக்கு புத்திசாலி தனம் பலமென்றால் மற்றவர்களுக்கு அரசியல் பலம், இட ஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் ரீதியாக ஒழிக்க முடிந்தால் ஒழித்து கொள்ளுங்கள்.."
அதற்கெல்லாம் என்ன அவசியம் குழலி அவர்களே. திறமைக்கு எங்குமே மதிப்பு உண்டு. இப்பவேத்தான் பார்க்கிறோமே. ஐ.ஏ.ஸ். தேர்வுக்கு போவதை விட எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படித்து தனியார் துறையிலோ அல்லது அல்லது வெளிநாட்டிலோ வேலைக்குப் போவதுதானே அதிகமாகியுள்ளது.
திறமை என்பது மேல் சாதியினருக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பதில் நான் தெளிவாகவே உள்ளேன். ஆனால் ரிசர்வேஷன் வேண்டும் என்பவர்கள் அவ்வாறுதான் சிந்திக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறேன். இல்லாவிட்டால் ஓப்பன் காம்படிஷன் என்ற உடனேயே இது மேல்சாதியினருக்கு (அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு) மட்டுமே சாதகமான விஷயம் என்று ஏன் பதறுகிறார்கள்?
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுவே இட்டான் என்பதைக் காண்பிக்க அதன் நகலை நான் என்னுடைய "வெளிப்படையான எண்ணங்கள்" பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன்.
நீங்கள் இப்பதிவில் நக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே என்று மேலே நான் சுட்டிய உங்கள் பதிலை போன்றே நான் கூறும் என்னுடையப் பதிவும் பார்ப்பனன் என்று நக்கல் செய்பவனுக்காகவே இடப்பட்டது என்பதையும் இப்போதாவது பலர் காண்டக்ஸுடன் உணர்ந்து கொள்ள முடியும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இட ஒதுக்கீடை நான் ஆதரிக்கிறேன். அதனால் பயன் அடைந்தவர் பலர். ஆனாலும் பயனடைந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் கூட இன்னமும் அதையே பிடித்து தொங்குவது தவறு என்பது என் கருத்து.
'தாழ்ந்தது' என சொல்லப்படுகிற சாதியை சார்ந்த ஒருவர் பொருளாதாரத்தில் முன்னால் நிற்கும் வேளையில் 'உயர்ந்தது' என சொல்லப்படுகிற ஒரு சாதியை சார்ந்தவர், பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் அவர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும்.
இதற்கெல்லாம் தீர்வு...சாதியை விட்டுவிட்டு பொருளாதார முறையில் ஒதுக்கீடு கொண்டுவருவது தான்.
குமாரின் பின்னூட்டம் தணிக்கை செய்யவேண்டி இருப்பதால் தற்போதைக்கு அவர் பின்னூட்டத்தை அழிக்கின்றேன்....
அப்பாவித்தமிழன் என்ற பெயரில் வந்தவர் சந்திப்பு அவர்களின் பதிவில் சொன்ன
//யேன் நைனா உனுக்கு அரிக்கிது? சொம்மா குந்திகினு சோறு துன்ற சொகம் போயிறுன்னு பயமா கீதா? இப்படியே 'அவாள்' 'இவாள்'ன்னு வாய் சவடால் பேசிகினே எம்மா நாளுதான் ஏமாத்தி சீட் வாங்கறது. நெசமான ஏழ,பாழதான் சீட் வாங்கி படிக்கட்டுமே. நம்ம ஊட்டு புள்ளங்களுக்கு என்ன கேடு? படிச்சி சீட் வாங்க வாணா?//
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவு மனம் புரையோடியுள்ளது என அறியலாம்.
I don't find any difference between the contents of "Nandhan" and "Appavi Thamizhan" but the way in which it is said makes it look.... shall i use the word "ugly" here?
ஒரு அனானி பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டு இங்கே
-------------------
அப்பாவித் தமிழன் ஆணந்த், ஆணந்த் விநாயகம், மாசி, மகேஷ், கிங் KK, சின்னவன் அனைவரும் ஒரே நாய்தான் என்பதை சன்னாசி நிருபித்துள்ளார். பா என்று எழுதினாலே பார்ப்பனரை (கூறுபவர்) சொந்த பெயரில் (கூறாமல்) இது தமிழன் என்று போட்டு (சொல்கிறார்).
------------------
??அப்பாவித் தமிழன் ஆணந்த், ஆணந்த் விநாயகம், மாசி, மகேஷ், கிங் KK, சின்னவன் அனைவரும் ஒரே நாய்தான் என்பதை சன்னாசி நிருபித்துள்ளார். பா என்று எழுதினாலே பார்ப்பனரை (கூறுபவர்) சொந்த பெயரில் (கூறாமல்) இது தமிழன் என்று போட்டு (சொல்கிறார்).??
இந்துமகேஷை உட்டுட்டியே ராசா
Just one info kuzhali. I agree with you. As per your argument, if one having political backup to do any thing he want to do, then what modi(with his political power) did to muslims during gothra, what lalu did in bihar are right(as per your argument).
வணக்கம்,
ஏன் இவர்கள் இன்னும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள் என்ற காரணங்களை தெளிவாக விளக்கவில்லை. "கல்வி நிறுவனங்களின் தரம் கெட்டுவிடும்" என்பதையே பதிலாக சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அவர்கள் பாதுகாப்பில் உள்ள IIT/IIM களுக்கு 100 கோடிக்கு மேல் இந்த "தாழ்ந்த" ஜாதியினரின் வரிப்பணம் தேவைப்படுகிறது.ஆனால் மிகவும் கடினமாக உழைத்து (வழிகாட்டுதலின்றி)மதிப்பெண் பெறும் அவர்களின் பிள்ளைகளோ தேவையில்லை.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தும் அண்ணா பல்கலைக்கழகம் கூட நல்ல தரத்துடன் தான் இருக்கிறது. (இது இரண்டு கல்வி நிறுவனங்களையும்் ஒப்பிடும் முயற்சி அல்ல) தரம் என்ற பதிலுக்கான எனது வினாவேயாகும்.
நல்ல மதிப்பெண் வாங்குபவர்க்கு எதற்கு இடஒதுக்கீடு என கேட்கிறார்கள் சிலர்.அவர்களுக்கான பதில், நல்ல மதிப்பெண் வாங்கும் எனது சகோதர, சகோதரி கள் வெறும் 10 பேர் தான் அதிலும் கல்வி கற்ற குடும்பங்களின் இரண்டாம் தலைமுறையினர் தான் இவர்கள். ஆண்டாண்டு காலமாக கல்வி கற்றவர்களின் "உயர்ந்த" தலைமுறையினருடன் போட்டி போட மற்ற "தாழ்ந்தவர்களுக்கு" மேலும் சிறிது ஊட்டசத்து தேவைப்படுகிறது , அதற்கு தான் இந்த இட ஒதுக்கீடு.
இந்த நாட்டில் எத்தனை நிறுவனங்கள்் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து ஒருவரை அளவிடுகிறது? சிபாரிசுகளின்(உயர்ந்த மென்பொருள் நிறுவனங்களில் கூட) மூலமே முதல் வாய்ப்பை பெறுகிறார்கள் பலர். எங்களுக்கு சிபாரிசு செய்யவோ, கறுப்பு தோல் உடையவரை! ஏற்கவோ ஓரிரு ஆட்கள் வேண்டுமல்லவா, அதற்காகத்தான் இட ஒதுக்கீடு கேட்கிறோம். ்
என்று இந்த நாட்டில் ஏற்ற தாழ்வு அழிந்து சகோதரத்துடன் சம வாய்ப்பும், மதிப்பும் அளிக்கபடுகின்றனவோ அன்று அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அரசு துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டாம் என நாங்களே குரல் கொடுக்கிறோம்.
பெருபான்மையாக உள்ள சமூகத்தினர்க்கு உதவாத கல்வி நிறுவனங்களுக்கு எதற்காக எங்கள் வரிப்பணம் வீணழிய வேண்டும்.எங்களுக்கு கல்வியை அளிக்காத அவற்றை தனியாருக்கு தாரை வார்த்துவிடலாமே அரசு?
பதிலை "உயர்ந்தவர்" களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
தீ
தீ அவர்கள் சொன்ன கருத்து மிக அருமை!!
நான் அதை முழுமனதுடன் ஏற்றுகொள்கிறேன்!!
நான் சந்திப்பு அவர்களின் பதிவில் சொன்ன கருத்தை இங்கேயும் சொல்கிறேன்!
The reservation should be given. It may be based on economic status or any other based.
I want a Poor / ill treated should have a chance to study in all premier institution.
Amidst of poverty & ill treatment, if any body scores 45% mark then I personally treat it is as 90% mark (wealthy & happy minded student's 90% = 45% that of poor or ill treated student)
P.S. Today Nalini Chidamparam has supported the reservation Bill. Mr.Chidaparam has already supported it.
எந்த சலுகை வந்தாலும் அதை வலியவன் தட்டிச் செல்லும் சாபக்கேடு நம் நாட்டிற்கு உண்டு...
இட ஒதுக்கீடு சாதி வாரியாக வரும்போது தேவையான மக்களைச் சென்றடைகிறதா??
பெரும்பாலும் பொருளாதர ரீதியில் முன்னேறிய, exposure அதிகம் உள்ள, ஒருவருக்கே அந்த இடம் கிடைக்கிறது...
இதை விடுத்து பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு அமைவதே இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குத் தீர்வாக அமையும்.
Post a Comment