விஜயகாந்த்தின் விஜயம் ஜெயமாகுமா? மீள்பதிவு
இது முன்பே எழுதப்பட்ட பதிவு இங்கே ஒருமுறை மீண்டும் மீள் பதிவு செய்கின்றேன்.
விஜயகாந்த் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளீர், மக்கள் மாற்றாத்தை விரும்புவதாக வேறு ஒவ்வொரு கூட்டத்திலும் கூறுகின்றீர்... இதற்கு தினமலரும்,குமுதம் வேறு அது இது என்று உங்கள் ஆதரவு நிலையெடுத்துள்ளன, அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், இந்த நிலையில் இப்போதுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து எந்த விதத்தில் மாறுபடுகின்றனர்.
முதலில் புரட்சிக்கலைஞர் என்று ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளீரே நீங்கள் செய்த புரட்சி என்ன? ஒருவேளை கதாநாயகியின் தொப்புளில் பம்பரம் விட்டதோ! உங்களைவிட 20 அல்லது 25 வயது குறைந்த கதாநாயகியோடு டூயட் பாடுகின்றீரே அதுவா? 45 வயதிற்கு மேலும் இன்னமும் சுவற்றில் கால்வைத்து படங்களில் சண்டை போடுகின்றீரே அதுவா? சற்று விளக்கம் தருகிறீரா?
ஆடம்பர அரசியலில் இருந்து மாறுபடப்போகின்றீரா?
மாவட்ட எல்லையிலிருந்து 100 கார்களில் பவனி வருகிறீர், கட்-அவுட்,சுவரொட்டி எல்லாம் தூள் பறக்கின்றதே உங்களின் விழாக்களில்.
சட்டத்தை மதிது நடக்கப்போகிறீரா? வன்முறைக்கு முடிவுகட்டப்பொகின்றீரா?
பாமகவோடு மோதியபோது உங்களது விசிறிகள் கூட பாமக கொடிக்கம்பங்கள்,அலுவலகங்களை உடைத்தனரே? இவர்களை வைத்துக்கொண்டா வன்முறைக்கு முடிவு கட்டப்போகின்றீர்
நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரானவரா?
ஒவ்வெரு படத்திற்கும் பல கோடி வாங்குகின்றீரே சரியான வருமான வரி கட்டுகின்றீரா? உமது பொறியல் கல்லூரி விதிப்படிதான் இயங்க்குகின்றதா? அங்கே அரசாங்கம் அனுமதித்தற்கு மேல் எந்த விதத்திலும் கட்டணம் வாங்கப்படவில்லையா?
குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவீரோ?
கருனானிதி,மூப்பனார்,இராமதாசு,வாழப்பாடி இராமமூர்த்தி வாரிசுகள் இப்போது அவர்களின் அரசியல் வாரிசாக உள்ளனர், உமது மன்றங்களில் கூட உங்கள் மனைவி மற்றும் மைத்துனரின் ஆதிக்கமாமே? இந்த கிச்சன் கேபினட் அரசியலிலும் தொடருமா?
தனி மனித ஒழுக்கம்?
இது சற்றே அதிகப்படியான எதிர்பார்ப்புதான்,எல்லோருக்குமே தெரியும் அது எந்த அளவுக்கு உள்ளது என்று.
விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை எதிர் நோக்கும் சகிப்புத்தன்மை?
தங்களை எதிர்த்து நடிகர் சங்கத்தேர்தலில் பெயர் தெரியாத நாடக நடிகையை மிரட்டியது, அவர் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றது அவரை பேட்டிகண்ட நிருபரையும், பத்திரிக்கைகாரையும் பத்திரிக்கையிலிருந்த செல்வாக்கை வைத்து திரைய்லக செய்தி சேகரிப்பு பிரிவிலிருந்து நீக்கியது இவையெல்லாம் உங்களது விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையை காட்டுகின்றது.
ஆடம்பர,வன்முறை,குடும்ப அரசியல்,தனிமனித ஒழுக்கம்,விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையின்மை, நேர்மை இவைகளில் இப்போதிருக்கும் அரசியல் வாதிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை, எனவே என்ன வித்தியாசம் காட்டபோகின்றீர் என தெரிந்து கொள்ளலாமா?
உங்கள் ஆதரவு நிலை எடுத்திருக்கும் குமுதமும் தினமலரும் உங்களிடமிருந்து என்ன வித்தியாசத்தை கண்டுகொண்டார்கள் என தெரியவில்லை.
கீழ்கண்டவைகளை அரசியலுக்கு வருமுன் சற்று யோசிக்கவும்
சினிமாக்கார்கள் தும்மினாலும் கூட செய்தியாகும்,கூட்டம் கூடும் பூமியிது.... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா? ராமராஜனுக்கும்,பாக்கியராஜீக்கும் கூடிய கூட்டமெல்லாம் வேறெந்த நடிகருக்கும் கூடியதில்லை... ராமராஜன் 500 ரூபாய்க்கு சிங்கி அடிக்கின்றார், பாக்கியராஜ் கடனில் மூழ்கியுள்ளார்,
நீங்கள் வரும்படி வரும் பொறியியல் கல்லூரி,திருமணமண்டம, திரையரங்கம் என முதலீடு செய்துள்ளீர், இதெல்லாம் நிலைக்க வேண்டும்?
ஊருக்கு நூறு ரசிகன் (இதில் ரஜினி கமல் விஜய் அஜீத் என அவர்கள் ரசிகர்களும் அடங்கும்) என்றாலும் அந்த நூறும் உம் ரசிகர்கள் என எடுத்துக்கொள்வோம்... இந்த நூறு ஓட்டும் உமக்கே என்றாலும் மன்றம் என்று குடும்பத்தை கவனியாமல் அலையும் அவர்களுக்கு எதிராகத்தான் அவர்கள் குடும்ப ஓட்டு விழும்
நீர் கோலத்தில் பாய்ந்தால் அரசியல்வாதிகள் புள்ளியில் பாய்வர், உம்மைவிட அதிக விசிறிகள் பலம் வாய்ந்த ரஜினிக்கு அரசியல்வாதிகளொடு மோதி ஏற்பட்ட தோல்வியை எண்ணிப்பார்க்கவும்,
தமிழக அரசியலில் கட்சியைவிட சாதிக்கு முக்கிய இடம் உண்டு, தங்களுக்கு அந்த பலம் உண்டா? தமிழகத்தை மட்டும் கணக்கில் கொள்ளவும், ஆந்திராவிலிடுந்து இங்கு வந்து ஓட்டு போடமுடியாது!
பத்திரிக்கைகளை நம்புகிறீரா? அய்யோ பாவமே... உங்கள் பேட்டியை நடுப்பக்கத்தில் போட்டுவிட்டு முதல் பக்கத்தில் கும்பகோணம் தீ விபத்திற்கு நீங்கள் அறிவித்த பணம் எங்கே என கேள்வி கேட்பர், ரஜினிக்கு ஆப்பு வைத்தவர்களே இந்த பத்திரிக்கைகள் தான்.
சுனாமி உமக்கு ஒரு நல்ல வாய்ப்பு தந்தது, பாதிக்கப்பட்டபர்களுக்கு உதவி செய்து நல்லப்பெயர் வாங்கியிருக்கலாம்... இருந்தாலும் விவேக் ஓபராய் செய்த உதவிகளை கொச்சைப்படுத்தி அவர்மீது பாய்ந்ததெல்லாம் ஒரு விடயமே இல்லை... தமிழக மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.
உமது நிர்வாக திறமை அனைவரும் அறிந்ததே, நடிகர்கள் கோடிகோடியாக சம்பாதித்தாலும் நடிகர் சங்கக்கடனை நடிகர்களிக் கைக்காசை போடாமல் கலைநிகழ்ச்சிவைத்து ரசிகர்களிடமிருந்து வசூலித்து அடைத்ததே நல்ல சான்று.
முதல்வராக முதல்லில் எதிரியை மாற்றுங்கள்... பாமகவும், மருத்துவர் இராமதாடுவும் தமிழக அரசியலில் 3 (அ)4 வது இடத்திலுள்ளனர், அவரோடு மோதினால் உமக்கு அதிக பட்சம் 3 (அ)4 வது இடம் தான் கிடைக்கும், இப்போது உமது படம் பிரச்சினையின்றி வெளியாகவும் உமது பொறியியல் கல்லூரி வியாபாரம் நன்றாக நடக்கவும் செல்வி.ஜெயலலிதாவை எதிக்கவில்லையென்றால் உமக்குக் முதலிடம் கனவு மட்டுமே
உமக்காக ஜெயலலிதா பாமகவின் மீது நடவடிக்கை எடுக்க அவர் ஒன்றும் அரசியல் கத்துக்குட்டி அல்ல, பாமகவின் பலமும் வட மாவட்டங்களிலே அவர்களது கூட்டணியின்றி வெற்றிபெறுவது கடினம் எனவும் அவருக்கு தெரியும்.
கும்பல் கூடினால் 4 பேர் வருங்கால முதல்வர் என கூவினால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத்தான் செய்யும், அதுவும் பாமகவின் கோட்டையான கள்ளக்குறிச்சியிலும் திருவண்ணாமலையிலும் கூடிய கூட்டம் இன்னும் 2 பட்டாம் பூச்சிகளை கூடுதலாக பறக்கச்செய்யும்... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா?
அரசியலுக்கு வாருங்கள் அது உமது உரிமை, ஆனால் நான் வித்தியாசமானவன்,மக்களுக்கு மாற்றம் தரப்போகின்றேன் என ஜல்லியடிக்காமல் வாருங்கள், உங்களுக்காக குமுதமும் தினமலரும் ஜல்லியடித்தாலும் ஒரே ஒரு தோல்வி அவர்களை உமக்கு எதிராக மாற்றிவிடும், ரஜினிக்கும் அதேதான் நடந்தது.
அரசியலில் வாழ்ந்த நடிகர்களைவிட வீழ்ந்தவர்கேளே அதிகம். எனவே கவனம் தேவை
மற்றைய விஜயகாந்த் தொடர்பான என் பதிவுகளின் சுட்டிகள்
விஜயகாந்த்தின் முதிர்ச்சி
இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்
18 பின்னூட்டங்கள்:
/20 அல்லது 25 வயது குறைந்த கதாநாயகியோடு டூயட் பாடுகின்றீரே அதுவா? /
எம்ஜியார் 35 அல்லது 40 வயது குறைந்த கதாநாயகியோடு டூயட் பாடலாம் இவர் பாடக்கூடாதா என்னையா நியாயம் இது .
அவனவன் எந்த தொகுதியில் நமக்கு செல்வாக்கு இருக்கிறது, நம் சாதி ஓட்டு எவ்வளவு இருக்கிறது. வெற்றி வாய்ப்பு எப்படி . இந்த தொகுதி நமக்கு பாதுகாப்பானதா என்றெல்லாம் பார்த்து தொகுதி தேர்ந்தெடுக்கும் போது. மக்களை மட்டுமே நம்பி விருத்தாசலத்தில் நிற்கும் விஜயகாந்தை எவ்வளவோ பாராட்டலாம்.
Hello kuzhali,
I enjoy reading your blog on politics. Though I am a rajini fan, I see your argument in favor of ramadoss.
I would like to know, how you will interpret the coming assembly election outcome. If PMK winds, your intrepretation is obvious, that Dr is a great man and a saviour.
But if PMk loses? I would like to know in advance what you will have to say.
I hope, you do not degrade the electorate for not voting the PMK.
Vignesh
இந்த பதிவுக்கு ஏதேனும் பதிலளிப்பார் என நம்ம எஸ்.கே வை தேடுகின்றேன் ஆளை காணலை, சரி அவர் இந்த பதிவை பார்க்காமல் இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது, பதிவை பார்க்கும் வாய்ப்பிருந்தால் பின்னூட்டத்தை எதிர்பார்க்கலாம்.... நம்ம மாற்றம் தரும் விஜயகாந்த் தற்போதுள்ள அரசியல் வாதிகளிடமிருந்து எந்த விதத்தில் மாறியிருக்கின்றார் என...
//I hope, you do not degrade the electorate for not voting the PMK.
//
முன் முடிவுகளோடு அனுகுகின்றீர், ம்... இப்படி முன்முடிவுகளோடு இருந்தால் நான் சொல்வது/எழுதுவது புரியாமல் போக வாய்புள்ளது, உங்களுக்கு மட்டுமல்ல முன் முடிவுகளோடு உள்ள அனைவருக்கும் தான்...
//But if PMk loses? I would like to know in advance what you will have to say
//
இந்த முறை பாமக,திமுக தோல்வியடைந்தால் அது வேறு எந்த வெளிக்காரணத்தாலும் இருக்காது, திமுக-பாமக ஒத்துழைப்பு குறைவினால் தான் இருக்கும், இந்த பதிவில் கூறியது
//இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்
//
என்னை ஆவலுடன் எதிர்பார்த்த உங்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, எனது சிற்றுரையைத் துவங்குகிறேன்!
[திரு. 'நெ.சி', உங்களையும் சேர்த்துத்தான்!]
பொத்தாம் பொதுவில், எங்கே இவர் நாம் குறிப்பிட்ட ரஜினி, ராமராஜன், பாக்கியராஜ், இன்னும் பலரைப் போல உதார் காட்டாமல், தீவிரமாகவே அரசியலில் இறங்கி, கட்சியும் அமைத்து, நம்ம ஊருக்குள்ளேயே புகுந்து, நம்ம ஆளுகளையே வளைச்சுப் பிடிச்சு, நமக்கே சவால் விடுகிறாரே, என்ற
அச்ச உணர்வில் எழுந்த ப[பா]திப்பு இது என்று கருதியதால், முன்னமேயே பதிலிறுக்காமல் விட்டு விட்டதற்கு, இரண்டாங்கண் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
கேப்டன் செய்த ஒரு சில நல்ல நிகழ்வுகளை நீங்கள் பாரட்டியபோதிலும், கூடவே ஈற்றடியாய்,
'பத்திரிகைகளை நம்பாதீர்',
'தமிழக மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்',
'உமக்கு முதலிடம் கனவு மட்டுமே'.
'ரஜினிக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்துப் பார்க்கவும்.',
'மன்றக்காரனுக்கு எதிராகத்தான் அவர்கள் குடும்ப ஓட்டு விழும்',
'ஆந்திராவிலிருந்து இங்கு வந்து ஓட்டு போட முடியது',
'கூட்டமெல்லாம் ஓட்டாகுமா?', என்றெல்லாம் பயமுறுத்தல்களாகவும், மிரட்டல்களாகவும், தன்னச்ச விளைவுகளாகவும், வைத்திருக்கும் உங்கள் பதிவு, நீங்கள் பா.ம.க.வின் மீது கொண்டிருக்கும் பாச உணர்வினால் விளைந்த அச்ச வெளிப்பாடாகவே நான் காணுகிறேன்.
'நான் வித்தியாசமானவன், மாற்றம் தர விழைகிறேன்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி இவர் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
''கலைஞரே என் கடவுள்', [அ] 'தாயே என் தெய்வம்', [அ] 'டாக்டரே என் ட்ராக்டர்'
என்று அடிவருட வேண்டும் என்கிறீர்களா?
வழக்கமான குழப்பத்தை விட, கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கிறீர்கள் என்பது மட்டும் இந்தப் பதிவில் இருந்து தெரிகிறது!
இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்!
'வரலாறு நிகழ்வதை யாரும் மாற்ற முடியாது!
மக்கள் மாற்றம் வேண்டுமென நினைத்து சில வாரங்கள் ஆகிறது!
முன்னே நிற்கும் முதன்மைக் கட்சிகளும், தங்கள் 'இலவச' அறிவிப்புகளின் மூலம், தங்கள் நிறங்களைத் தோலுரித்துக் காட்டி வருவதை மக்களும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!
காங்கிரஸுக்கே, காமராஜருக்கே, கலைஞருக்கே, அம்மாவுக்கே அவ்வப்போது 'அல்வா' கொடுத்தவர்கள் தமிழர்கள்!
முப்பதாண்டு கால கழக ஆட்சிகள் ஒரு முடிவுக்கு வரும் நேரம் இன்னும் 3 வாரங்களில் நிகழத்தான் போகிறது'
-- என்றெல்லாம் நிச்சயமாக நம்புபவன் நான்!
'இரு கழகங்களோடு சேர்ந்துதான் வளர்வது' என்ற முடிவை எடுத்ததால், வாய்ப்பை இழந்தவர்கள், பா.ம.க., ம.தி.மு. க., காங்., பா.ஜ.க. மற்றும் பலர்.
இதில் துணிந்து தனியே நிற்பது மட்டுமன்றி, 'சிங்கத்தை[அது சிங்கமாயிருப்பின்!] அதன் குகையிலேயே சந்திக்கத் துணிவுடன் கிளம்பியிருக்கும் கேப்டனை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்!
முடிவு மக்கள் கையில்!
வீழ்வது யாராயிருப்பினும், வெல்வது தமிழகமாக இருக்கட்டும்--- இம்முறையாவது!"
நன்றி! வணக்கம்!
பி.கு. தாங்கள் எதிர்பார்ப்புக்குக் குறைவின்றி எழுதியுள்ளேன் எனவும் நம்புகிறேன்!
//தீவிரமாகவே அரசியலில் இறங்கி, கட்சியும் அமைத்து, நம்ம ஊருக்குள்ளேயே புகுந்து, நம்ம ஆளுகளையே வளைச்சுப் பிடிச்சு, நமக்கே சவால் விடுகிறாரே, என்ற
அச்ச உணர்வில் எழுந்த ப[பா]திப்பு இது
//
??
இப்போது மீள்பதிவு மட்டுமே.... இந்த பதிவு எழுதப்பட்டது 03/06/2005
//'நான் வித்தியாசமானவன், மாற்றம் தர விழைகிறேன்' என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி இவர் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
//
அட அதைத்தான் என்ன வித்தியாசம் என கேட்கின்றேன், பதிவை படித்ததிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு விஜயகாந்திற்கும் தற்போதுள்ள வித்தியாசம் என்ன என எனக்கு புரியவில்லை என்று, சரி உங்களிடம் கேட்டால் ஏதாவது வித்தியாசம் தெரியவருகின்றதா என பார்த்தேன் நீங்க என்னனா காமராசருக்கும், கலைஞர், ஜெயலலிதாவிற்கு கொடுத்த அல்வா பற்றி பேசுகின்றீர்
உங்களின் பின்னூட்டத்திலிருந்தும் விஜயகாந்த் எங்கே தற்போதுள்ள அரசியல்வாதிகளிருந்து வேறுபடுகின்றார் (என அவரும் அவரது ஆதரவாளர்களும் சொல்லிக்கொள்வதால்) என எனக்கு புரியவில்லை, அதை தெரிந்து கொள்ள தான் கேட்டேன்...
//நீங்கள் பா.ம.க.வின் மீது கொண்டிருக்கும் பாச உணர்வினால் விளைந்த அச்ச வெளிப்பாடாகவே நான் காணுகிறேன்.
//
ஹி ஹி... பாமக வெற்றிபெற்றவுடன் நான் தான் சட்டமன்ற பாமக கொறடாவாகப்போகிறேன் போல!!!
நான் விவரமாகத்தான் எழுதியுள்ளேன்; நீங்கள்தான் புரிந்தும் புரியாதது போல நடிக்கிறீர்கள்!
கீழ்கண்ட வகைகளில் VK வித்தியாசப் படுகிறார், மற்றவர்களிடமிருந்து:
1. பதுங்காமல், பல கோடிகள் கை மாறாமல், சொன்னபடி தனிக் கட்சி அமைத்தது.
2. தனித்துப் போட்டி என்ற தமிழக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியில் இருந்து பிறழாதது.
3. என் சாதித் தொகுதி எங்கே? வெற்றி வாய்ப்புள்ள தொகுதி எங்கே? என்று அலைகிற அரசியல்வாதிகளுக்கு நடுவே, விருத்தாசலத்தில் துணிந்து நிற்கும் தைரியம்.
4. இப்போது முடியும் என்று பல புள்ளி விவரங்களோடு 'அலறும்' முன்னணிக் கூட்டணிக் கட்சிகளுக்கு முன்னமேயே, குறைந்த விலை அரிசி/ரேஷன் கொடுக்க முடியும் என அறிவித்தது.
5. பெரிய பெரிய கட்சிகள் கூட வேட்பாளர் பங்கீட்டுக்கும், அறிவிப்புக்கும் அல்லாடிக் கொண்டிருந்த அரசியல் சூழ்நிலையிலும், தன் கட்சி வேட்பாளர்களை முறைபடி அறிவித்த வேகம்.
6. தான் போட்டியிடுவது என்று அறிவித்த பின்னர், வேறு எதேனும் காரணத்தால், அது ஒருவேளை முடியாமல் போய்விட்டால், மற்ற யாரையும் பலியாடாக்காமல், தன் மனைவியையே நிறுத்திய தெளிவு.
[3 விஜயகாந்த்களை வேட்பாளர்களாக அறிவித்து சூழ்ச்சி செய்யும் திறனை [யார் என்று உங்களுக்கே தெரியும்!] இதன் மூலம் முறியடிக்க முடியும்!!]
7. அனைவருக்கும் முன்னமேயே தன் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி, மற்றவர்களை யோசிக்க வைத்த சாணக்கியம்.
8. பா.ஜ.க. கூட்டுக்காக தூது விட்ட போதும், அதன் பாதகமான விளைவுகளை எண்ணி ஒதுக்கிய புத்திசாலித்தனம்.
[இந்த அறிவு வர, மற்றவர்களுக்கு 3 தேர்தல் தேவைப்பட்டது!]
9. ஒவ்வொரு தொகுதியிலும் இதுவரை முறையான பிரச்சாரம் நடைபெற்று வருவதாக வரும் அறிவிப்பைக் கண்டு மற்றவர்களுக்கு புளியைக் கரைக்கும் நகைச்சுவை உணர்வு.
10. கடைசி தகவல்களின் படி 12.5% க.க-ல் வந்திருப்பது.
போதுமா? இல்லை இன்னும் வேண்டுமா?
பி.கு.::
1. இது மீள்பதிவு என்று தெரியும். நான் பின்னூட்டம் இடாதற்கு அதுவும் ஒரு காரணம்! 3/06-ல் அவர் கட்சி ஆர்ம்பித்தாயிற்று!
2. பா.ம.க.ச.ம. கொறடா ஆக முடியாது, தேர்தலில் போட்டியிடாமல்! வேண்டுமானால் கொ.ப.செ. ஆகலாம்! வாழ்த்துகள்!
எஸ்.கே மிக்க நன்றி
//பதுங்காமல், பல கோடிகள் கை மாறாமல், சொன்னபடி தனிக் கட்சி அமைத்தது.
//
மற்ற அரசியல்வாதிகளெல்லாம் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து தானே இருந்தார்கள், ஒரு வேளை ரஜினி படம் காண்பித்ததை சொல்கின்றீரா? ரஜினி நடிகர் அவ்வளவே...
//2. தனித்துப் போட்டி என்ற தமிழக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியில் இருந்து பிறழாதது.
//
இது சூப்பர், மற்றவர்களெல்லாம் ஏற்கனவே தனித்து போட்டியிட்டவர்கள் தான்... இருந்தாலும் ஒரு கணக்குல இதை ஏற்றுக்கொள்ளலாம்
//3. என் சாதித் தொகுதி எங்கே? வெற்றி வாய்ப்புள்ள தொகுதி எங்கே? என்று அலைகிற அரசியல்வாதிகளுக்கு நடுவே, விருத்தாசலத்தில் துணிந்து நிற்கும் தைரியம்.
//
ஹா........
//5. பெரிய பெரிய கட்சிகள் கூட வேட்பாளர் பங்கீட்டுக்கும், அறிவிப்புக்கும் அல்லாடிக் கொண்டிருந்த அரசியல் சூழ்நிலையிலும், தன் கட்சி வேட்பாளர்களை முறைபடி அறிவித்த வேகம்.
//
அதாங்க ஆச்சரியமே.... 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு ஆள் கிடைத்தார்களே....
//6. தான் போட்டியிடுவது என்று அறிவித்த பின்னர், வேறு எதேனும் காரணத்தால், அது ஒருவேளை முடியாமல் போய்விட்டால், மற்ற யாரையும் பலியாடாக்காமல், தன் மனைவியையே நிறுத்திய தெளிவு.
//
என்னது தெளிவா? இதற்கு பெயர்தானேப்பா குடும்ப அரசியல்... இதை செய்றாங்கனு தானே கலைஞர் இராமதாசை எல்லாம் பின்னி பெடல் எடுக்கறார் விஜயகாந்த், இதை மற்றவர்கள் செய்தால் குடும்ப அரசியல் இவர் செய்தால் தெளிவா?? எஸ்.கே. கிச்சு கிச்சு மூட்டாதிங்க தல.
//7. அனைவருக்கும் முன்னமேயே தன் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி, மற்றவர்களை யோசிக்க வைத்த சாணக்கியம்.
//
இதெல்லாம் ஒரு வித்தியாசமா?
//8. பா.ஜ.க. கூட்டுக்காக தூது விட்ட போதும், அதன் பாதகமான விளைவுகளை எண்ணி ஒதுக்கிய புத்திசாலித்தனம்.
//
ம்...இந்த விசயத்தில் விஜயகாந்த் சூப்பர்
//10. கடைசி தகவல்களின் படி 12.5% க.க-ல் வந்திருப்பது
//
?!
ம்... தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கும்
இதையும் கொஞ்சம் படிங்க
இதையும் கொஞ்சம் படிங்க
"என் குடும்பத்தில் இருந்து யாராவது பதவிக்கு வந்தால், செருப்பால் அடியுங்கள்" என்று VK சொன்னதாக நினைவில்லை!
மற்றும், விருத்தாசலம், வன்னியர் பூமி. அங்கு VK நிற்பது என்பது அவரது தனிப்பட்ட முடிவு.
இங்கு 'தனக்கு' வெற்றி வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புகிறார்.
ஒருவேளை அவரால் முடியவில்லை என்றால், வேறு நபர்களை நிறுத்துவது நிச்சயம் பலிகடா போலத்தான்.
அதனால்தான், மாற்று வேட்பாளராக, தன் மனைவியை நிறுத்தியது ஒரு தெளிவு என்று சொன்னேன்.
இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால், அது நிச்சயமாக மகிழ்ச்சி சிரிப்பல்ல என்று நினைக்கிறேன்.
மற்றும், தேவையில்லாமல், ரஜினியை அடிக்கடி இழுப்பது கூட ஒருவகையான மனோதத்துவ ரீதியன ஆறுதல் சமாச்சாரமே என கருதுகிறேன்!
--அதாவது, ரஜினியை தண்ணி காட்டியதாக சொல்லப்படுகின்ற செய்திகள் ஒரு வகையான தெம்பைக் கொடுப்பதால், அதை உதாரணம் காட்டி, VK-வும் அப்படிப் போய்விடுவார் என்ற மூடநம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறீர்களோ!
மீண்டும் சொல்கிறேன், தங்களது நேர்மை அன்றிலிருந்து இன்றுவரை எனக்குப் பிடித்த ஒன்று!
முடிவு மக்கள் கையில்!
வீழ்வது யாராயிருப்பினும், வெல்வது தமிழகமாக இருக்கட்டும்--- இம்முறையாவது!"
//"என் குடும்பத்தில் இருந்து யாராவது பதவிக்கு வந்தால், செருப்பால் அடியுங்கள்" என்று VK சொன்னதாக நினைவில்லை!
//
அப்போ இப்படி சொல்லாமல் குடும்ப அரசியல் செய்தால் தப்பில்லை.... அப்படிதானே தல...
//ஒருவேளை அவரால் முடியவில்லை என்றால், வேறு நபர்களை நிறுத்துவது நிச்சயம் பலிகடா போலத்தான்.
//
ஹி ஹி அப்போ மற்ற தொகுதிகளில் நிற்கும் அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் என கருதுகின்றீரா? அல்லது அவர்களெல்லாம் பலிகடாவா?
நான் 'குடும்ப' அரசியலுக்கு எதிரி அல்ல.
டாக்டர் மகன், டாக்டராகுதலும், நடிகன் மகன், திரைத்துறைக்கு வருவதும், [இன்னும் பல உதாரணங்கள் கொடுக்கலாம்; பிரச்சினை திசை திரும்பிவிடும் அபாயம் இருக்கிறது!] எப்படி இயல்பானதோ, அதுபோலத்தான், ஒரு அரசியல்வாதியின் மகனும், தான் வளர்ந்த சூழ்நிலை காரணமாக, அரசியலில் ஈடுபடுவது நடக்கக்கூடிய ஒன்றே!
ஆனால், திணிக்கப்படுவதும், நான் கு.அ.வுக்கு எதிரி, செருப்பால் அடி என்றெல்லாம் சொல்லிவிட்டு, நுழைவது அசிங்கம்.
அதை இவர் செய்யவில்லை. அவ்வளவுதான்.
ஒரு மாற்று வேட்பாளருக்கே இப்படி அலறுகிறீர்களே, மத்திய அமைச்சர்கள், மேயர்கள், வ.க. முதல்வர்கள் இப்படி எல்லாம் வந்ததற்கு என்ன சொல்கிறீர்கள்?
டா.அன்புமணி திறமையானவர்தான். பொதுநலத்துறையை பிரச்சினை இல்லாமல் நடத்திச் செல்லுகிறார். இங்கு நான் குறை கூறுவது தந்தையை, அவரை அல்ல!
ஆனால், ஸ்டாலின்?
முட்டுக்கொடுத்து வளர்ந்தவரால், தனித்து முன்னேற முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை இல்லையா?
இல்லாவிடில், ஒரு த.மா. இப்போது திடீரென தலை தூக்கி ஆட முடியுமா?
வ.கா. மு. பதவிக்கு தானும் போட்டி என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை த.மா. வால் வளர்க்க முடிந்தது, தளபதியின் தோல்வி அல்லவா?
முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா?
இவருக்காக, வல்லவரான, வைகோ வை வெளியே துரத்தி விட்டு, இப்போது 'லபோ-திபோ' என அடித்துக் கொள்ளல் என்ன நியாயம்?
VK-வின் துணைவியார் அவரது செயல்பாடுகளூக்குப் பக்கபலமாக இருந்துவந்திருக்கிறார் என்பது, ஊரறிந்த ஒரு செய்தி.
இப்போது, அதை வைத்து இவரும் கு.அ. பண்ணுகிறார் என ஏன் அலற வேண்டும்?
மற்றும், நான் குறிப்பிட்டது, விருத்தாசலத்தில்,[அது சிங்கக்குகையோ, எலிவளையோ] ஏன் தன் மனைவியை மாற்று வேட்பாளராகப் போட்டார் என்பது பற்றி மட்டுமே!
உடனே, 234 தொகுதி வேட்பாளர்களும் பலிகடாவா என்று கேட்பது,.....சரியாகப் படவில்லையே!
முடிவு மக்கள் கையில்!
வீழ்வது யாராயிருப்பினும், வெல்வது தமிழகமாக இருக்கட்டும்--- இம்முறையாவது!"
நன்றி! வணக்கம்!
>> வ.கா. மு. பதவிக்கு தானும் போட்டி என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை த.மா. வால் வளர்க்க முடிந்தது, தளபதியின் தோல்வி அல்லவா? >>
இந்த கோயபல்ஸ் ரொம்பக் காமெடி கோயபெல்ஸா இருக்காருபா! ;))
மொத அவரு கல்யாண மண்டபத்த எப்பம் பொதுமக்களுக்குத் தாரவார்க்க போறாருன்னு கேட்டு சொல்லுங்கப்பா!
வ.கா.மு. == வருங்கால முதல்வர்
த.மா== தயாநிதிமாறன்
தளபதி== ஸ்டாலின்
உங்கள் குழப்பத்துக்கு[!] வருந்துகிறேன், திரு.'நியோ'.
//ஆந்திராவிலிடுந்து இங்கு வந்து ஓட்டு போடமுடியாது!
//
நான் ஆந்திராவில் இருந்து வந்தவன் தான்
இந்த தேர்தலில் ஓட்டுபோட தான் போகிறேன்.
இப்படி ஒருவரின் பூர்வீகத்தை கின்டல் செய்து எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லை?
kuzhali
oru vishayam mattum unmai
vijaykanth onnum kamaraj kidayathu...
vijayaraj avaollo thaan...
enna onnu inaikku irukura arasiyal vaathigalavida pala madangu thevalam....
kamrajar maathiri thalaivar varanum illatti naan intah veena poona katchigalukku thaan support panuvaen sonna athu buthisali thanam illa..
yenna
enakki kamarajarayae naan poi vakuruthigalai nambi .. thokka adichomo
anaikkae nama azhivu kaalam amabichuduchu..
kamarajar mathiri thalaivarunga inimae namakku kidaika matanga ..
nama paniya dhrogathu kidaikavum koodathu..
simple a sollanum na ..
we are not worth it..
so jus choose best among the worst..
avollo thaan
- Raji
Post a Comment