அரசியல் புரளிகள்
வாய் வழி செய்திகள் பற்றி ஒரு பெரும் ஆச்சரியம் எனக்கு உண்டு, அதிலும் குறிப்பாக அரசியல் வாதிகள் பற்றிய செய்திகள் ஆச்சரியமான விதத்தில் பரப்பப்படுகின்றன.
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான அனைவருக்கும் இந்த செய்தி கள் தெரிந்திருக்கும்,
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மேயர் மு.க,ஸ்டாலினின் இளமைக்கால வாழ்க்கை என்றும், அவர் ஒரு பெண் பித்தர் போலவும் குறிப்பாக பிரபல தொலைகாட்சி செய்தி வாசிப்பாளரோடு(தற்போது அம்மா ,அக்கா வேடங்களில் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்) இணைத்தும் பேசுவார்கள்,.
பாமக நிறுவனர் தாழ்த்தப்படவர் என்று பொய் சான்றிதழ் கொடுத்து மருத்துவர் படிப்பு படித்ததாகவும், அது தொடர்பாக அரசு மருத்துவர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அரசியலுக்கு வந்ததாகவும் கூறுவார்கள்
இந்த இரண்டு புரளிகளும் நான் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருபவைகள், பின்னூட்டத்தில் சிறில் அலெக்ஸ் மக்களுக்கு மு.க.ஸ்டாலினின் இளமைகால வாழ்க்கை ஞாபகத்தில் இருக்கிறதோ என்று எழுதியிருந்தார்
ஆனால் இந்த இரண்டு புரளிகளும் எனக்கு தெரிந்த வரை ஊடகத்திலும் வந்ததில்லை, மிக சமீபத்தில் என் அலுவலக நண்பரோடு தமிழக அரசியல் பற்றி பேசிக்கொண்டிருந்த போது இந்த இரண்டு புரளிகளையும் கூறினார், உடனே யார் இதை உங்களுக்கு சொன்னது? எப்படி உங்களுக்கு இது தெரியும் ஏதாவது பத்திரிக்கையில் படித்தீர்களா? அது எந்த பத்திரிக்கை? என்றேன், இல்லை நான் சிறு வயதிலேயே கேள்விப்பட்டேன் என்றார், 1985(நம்புங்கள் அப்போது நான் படித்துக்கொண்டிருந்தது ஐந்தாம் வகுப்பு)லிருந்து மருத்துவர் இராமதாசு பற்றிய செய்திகளை ஆர்வத்தோடு படித்தும் முக்கிய செய்திகளை நினைவில் கொண்டும் உள்ளேன் ஆனால் இது வரை இப்படி ஒரு செய்தியை நான் படித்ததில்லை, ஆனால் பலரும் அதிலும் குறிப்பாக நான் பாமக தொடர்பாக பேசும்போது நிச்சயம் இதை எதிர்கொள்வேன், யார் என்னிடம் இதைப்பற்றி கேட்கும் போதும் உடனடியாக நான் கேட்பது இது எப்படி உங்களுக்கு தெரியும் என்பேன் யாரோ சொன்னார்கள் என்பதை தவிர வேறெந்த பதிலும் கிடைப்பதில்லை, இதே போல மு.க.ஸ்டாலின் பற்றியுமான இந்த புரளிக்கு யாரோ சொன்னார்கள் என்பதை தவிர்த்து வேறு பதில் கிடைத்ததில்லை, அந்த யாரோவிற்கு யார் சொல்லியிருப்பார்கள்??
அட ஒரு வேளை மக்கள் கிசு கிசு வாக எங்கேயாவது படித்திருப்பார்களா என்றும் ஒரு எண்ணமும் எனக்கு இருந்தது, கிசு கிசுக்களின் உண்மை பொய் ஆதாரங்கள் பற்றி ஆராய்ந்தாலும் மு.க.ஸ்டாலின் மற்றும் மருத்துவர் இராமதாசு மேலான இந்த புரளிகள் எனக்கு தெரிந்த வரை கிசு கிசுவாக கூட நான் எங்கேயும் படித்ததில்லை பிறகெப்படி இத்தனை ஆண்டுகளாக, இத்தனை மக்களுக்கு யாரோ சொன்னார்கள் யாரோ சொன்னார்கள் என்று தெரிந்தது? யார் இந்த புரளிகளை கிளப்பிய விஷமிகள்.
எந்த வித ஆதாரமும், பத்திரிக்கை ஊடக செய்திகளும், கிசு கிசுக்களின் உண்மை பொய் ஆதாரங்கள் பற்றி ஆராய்ந்தாலும் அட குறைந்த பட்சம் கிசு கிசுக்கள் கூட எங்கேயும் வெளிவந்திராத போதும் எல்லாம் தெரிந்த மாதிரி தோட்டத்தில் வைத்து மருத்துவர் இராமதாசு தண்ணியடிக்கலாம் என்று அள்ளித்தெளித்து சென்ற வலைப்பதிவர் முகமூடி மாதிரி எந்த காலத்தில் எந்த புண்ணியவான் கிளப்பிச்சென்றானோ இந்த புரளிகளை,
கொஞ்சமே கொஞ்சம் மூளையை உபயோகித்து யோசித்தால் மருத்துவர் இராமதாசுவை பற்றிய பொய் சான்றிதழ் புரளி எத்தனை பொய்யானது, அப்படியிருந்திருந்தால் இத்தனை நாட்களில் எந்த அரசும், அரசியல்வாதியும் பத்திரிக்கையும் இதை தோண்டாமலிருந்திருப்பார்களா என்று புரியும் ஆனாலும் இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் நாமும் தொடர்ந்து பரப்பிவருகின்றோம்.
இதனால் மு.க.ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்ற போட்டியில் ஸ்டாலின் மீது பரப்பப்பட்டுள்ள இந்த அபாண்டமான புரளி மக்களிடம் உளவியல் ரீதியாக ஸ்டாலினை பின்னிருத்துகின்றது.
ஊடகங்களில் வராமல் எப்படி இந்த செய்திகள் வாய்வழியாகவே பலராலும் பரப்பப்படுகின்றன?யாரோ சொன்னார்கள் என்பதை எந்த கேள்விக்கும் உட்படுத்தாமல் நாமும் விளையாட்டாக இந்த மாதிரி செய்திகளை பரப்புவதற்கு ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்குமா?
இந்த இரு தலைவர்களின் மீதான இப்படி பரப்பப்படும் குற்றச்சாட்டிற்கு ஏதேனும் ஆதாரங்கள், பத்திரிக்கை செய்திகள் அல்லது குறைந்த பட்சம் கிசு கிசு வாக எங்கேயாவது கூறப்பட்டிருந்தாலும் எனக்கு தெரிவியுங்கள் நானும் தெரிந்து கொள்கின்றேன், இப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் யாரிடமும் தயவு செய்து யாரோ சொன்னார்கள் என்று இந்த தகவல்களை பரப்ப வேண்டாமென்று வேண்டுகின்றேன், அப்படி உங்களிடம் யாரேனும் சொன்னாலும் எப்படி இந்த செய்தி உங்களுக்கு தெரியும் என்று கேளுங்கள்.
9 பின்னூட்டங்கள்:
ராதிகா விஜயகாந்தை துப்பாக்கியால் சுட்டதாக பரவிய வதந்தி....
ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதி படையை அனுப்பிய உண்மையான காரணம் என்று பரவும வதந்தி.....
போன்றவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மக்களுக்கு பரபரப்பாக எதாவது மெல்லுவதற்கு வேண்டும்.மற்றபடி சிந்திக்க எல்லாம் நம்ம மக்களை கேட்காதீங்க சாமி...
நான் அறிந்தவரை மருத்துவர் ராம்தாஸ் அவர்கள் ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்தார் என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். அதே போல சமீப காலன்க்களில் அவர் மரங்கள் நடுவது போன்ற நல்ல செயல்களில் உண்மையான மனதுடன் ஈடுபட்டு வருகிறார் என்பதை ஒத்துக் கொள்வதிலும் எனக்கு எந்தப் பிரச்சினை இல்லை.
அவருடைய அரசியல் கொள்கைகளில் எனக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும், தனி மனித வாழ்க்கையில் அவர் மேல் எழும்பிய வதந்திகளை இதுவரை நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. இப்போது இவை எழுகின்றன என்றால் அது மிகவும் கண்டிக்கத்தக்கதே.
என் நண்பர் குழலி அவர்கள் பதிவுகளைப் பொருத்தவரை உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை சோதிக்க போட்டோ மற்றும் எலிக்குட்டி சோதனை போதும் என்று நான் நினைப்பதால், மூன்றாம் சோதனையான என் தனிப்பதிவு பின்னூட்டம் வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
i dont believe these two gosssips.
however i am reminded of onething:
vashappadi ramamoorthy(when he was deadly against maruthuvar ramadoss)once said that he will be compelled to declare why ramadoss has left service while he was serving at usilampatti unless he(ramadoss)changed his approach
(this information is 100% correct information;it was published in
print media also)
I am also from North TN and I have never heard of that rumour about Dr. Ramadoss. Here are some more classic ones that used to circulate -
1) MGR ordered Panruti Ramachandran to deposit crores of money in Swiss bank. The money was deposited in the name of "Ramachandran" and was swindled by Panruttiyar after MGR's death.
2) Jayalalitha had a baby with Andhra actor Shoban babu. This apparently came out in newspapers as well. Different versions of rumors, for several years claim that Jayalalitha's daughter studies at Ooty, Hyderabad, Bangalore etc.
The sources of such rumours remain a mystery and the best thing one can do is to demand a solid, plausible source and explanation(if not proof) for such theories rather than accepting them at face value and spreading them further. These rumours, started by some vested interests, spread just like a spam email penetrating their way through the innocence and stupidity of people.
அன்பின் குழலி,
//பாமக நிறுவனர் தாழ்த்தப்படவர் என்று பொய் சான்றிதழ் கொடுத்து மருத்துவர் படிப்பு படித்ததாகவும், அது தொடர்பாக அரசு மருத்துவர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அரசியலுக்கு வந்ததாகவும் கூறுவார்கள்//
இந்த விஷயம் எனக்கு இத்தனை நாளாத்தெரியாதே.. இனிமேல் யாராவது கேட்டால்.. "குழலி தாம்பா சொன்னாரு... அவர் பாமக காரராச்சே.. அவருக்குத் தெரியாமல் சொல்வாரா.." அப்படீன்னு சொல்லிடலாமில்லே...
தமிழ் நாட்டில் வதந்திகளெல்லாம் இப்படித்தான் பரவுகிறது.. நீங்கள் இதை விலாவரியாக எழுதியிருக்க வேண்டாம்..
இப்பொழுது ப்ரிண்ட் மீடியாவே வதந்திகளைப் பரப்பும் மீடியாவாக இருக்கிறது.. "என்று வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள்.." என்று எழுதி விட்டால் செய்தியாகிறது... அப்புறம் யாரும் மறுப்பு சொன்னால் "அப்படியெல்லாம் இல்லியாம்.." என்று இன்னொரு செய்தி போட்டு.. பேட்டி வாங்கி இன்னும் ரெண்டு இஷ்யூ வித்துடுவாங்க..
உங்களுக்குத் தெரியாததா..
வதந்திகளைப் பரப்பாதீர்கள்..இதெல்லாம் வதந்திதான் என்று எழுதினாலும்.. அது பரப்புவதுதான்...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..
மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள்.
//கண்ணதாசன் தனது சுயசரிதையான 'வனவாசம்' எனும் நூலில் எழுதியிருக்கிறார்//
கண்ணதாசன் அந்தகாலத்து வைகோ என்று உங்களுக்கு தெரியாதா? அவரும் நிறைய டூப் அடிக்கிற பார்ட்டி தான்...
Your blog keeps getting better and better! Your older articles are not as good as newer ones you have a lot more creativity and originality now keep it up!
இவைகள் எல்லாம் புரளி என்று ஒதுக்க முடியாது. நிருபிக்கபடாத சாதாரண மனிதர்களுக்கு தெரிந்த உண்மை என்றும் கொள்ளலாம். அய்யா அவர்களை வேறு ஸ்டாலினோடு சேர்த்துவிட்டீர். அய்யா அவர்கள் செய்தது குற்றமாயினும் அது ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தில் நடந்துவிட்ட ஒரு தவறான செயல் அவ்வளவே. ஆனால் ஸ்டாலின் மீது உள்ளது காமகுற்ற சாற்று. அதுவும் கற்பழிப்பு. ஆனால் இதுபோன்ற குற்ற சாட்டுகளை மறுக்கலாம் அல்லவா? ஸ்டாலின் புரளி (உங்கள் கருத்துப்படி ) கொஞ்சம் கேவலமானது என்பதால் அதை பற்றி பேச கூட தயங்கலாம். ஆனால் அய்யா இதை பற்றி பேசலாம். அல்லது குரு போன்றவர்களையாவது வைத்து பேசலாம். மக்களுக்கு தெரியாத விஷயத்தை எதற்கு நாமே பேசி கிளப்பிவிட வேண்டும் என்று நினைத்தால் இணையத்தில் ஆவது ஏதோ ஒரு நபர் மூலம் அய்யா அவர்களின் பழைய certificate ஐ போடலாம் அல்லவா? சாதி சான்றிதழ் அவரிடம் இருக்குமே? அய்யாவின் சமூகப்பணி மிக அதிகம் என்பதாலும், அவரால் தாழ்பட்டவர் கூட தேர்தலின் ஜெயித்திருக்கிறார் என்பதாலும் இதை எல்லாம் ஒரு குற்றமாக நான் கருத வில்லை. ஸ்டாலின் புரளியில் சம்பந்தப்பட்டவர் இப்போது எதிர்க்கட்சி டிவி யில். அதிமுக ஸ்டாலினுக்கு ஏதோ ஒரு செக் வைத்திருப்பதாக கருதலாம் அல்லவா?. ஆதித்ய கரிகாலனை கொன்றவர் உத்தம சோழன் என்ற புரளியும் உண்டு. ஆதித்ய கரிகாலனை கொன்ற ரவிதாசன் உத்தம சோழன் காலத்தில் ஒரு குறுநில மன்னன் போல வாழ்ந்ததாக கேள்விபடுகிறேன். ராஜராஜன் பட்டத்திற்கு வரும்வரை அவன் தண்டிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் இடத்தில் இவை உத்தசோழன் ஆட்சி இருக்கும் வரை புரளியாக வாழ்திருக்க வாய்ப்புண்டு.கல்வெட்டு, ஓலைசுவடி எல்லாம் இதைப்பற்றி இல்லை. ராஜராஜனுக்கும் இது தெரிந்திருக்கவேண்டும் . ஆனால் அவரும் ரவிதாசனை தன்டித்ததோடு நிறுத்தி கொண்டார்(குலபெருமை கருதி இருக்கும்). நாம் இப்போதுதான் அவற்றை ஒப்பிட்டு நடந்திருக்கலாம் என்று யூகிக்கிறோம். ஏன் என்றால் இப்போது உத்தம சோழனும் இல்லை ராஜராஜனும் இல்லை, கண்டனம் தெரிவிக்க சோழ பரம்பரையும் இல்லை. சில நேரங்களில் மிகப்பெரிய உண்மைகள் மக்களிடத்தில் வாய்மொழியாகவே இருக்கும். வருங்காலத்தில் தான் இவை பற்றி அதிகம் பேசப்படும். அப்படி பேசப்படும் காலத்தில் குற்றம் செய்தவர் பதவியில் இல்லாமல் இருக்கவேண்டும். வசதி இல்லாமலும் இருக்கவேண்டும். மக்கள் செல்வாக்கு இல்லாமலும் இருக்கவேண்டும். இந்த மூன்று காரணிகளும் இப்போது இல்லாத பட்சத்தில் இவை புரளிகலாகவே மக்கள் மன்றத்தில் நீறு பூத்த நெருப்பாக வாழும்.இதைபோல காந்தியை பற்றியும் உண்டு. அவற்றை எல்லாம் இணையத்தில்தான் பார்க்கமுடியும். பேப்பர் நியூஸ், கல்வெட்டு எல்லாம் கிடையாது. வருங்காலத்தில் காங்கிரஸ் இல்லாமல் போகும் போது இவை எல்லாம் popular மீடியா வில் வரும் (மக்கள் டிவி ஏற்கனவே இது போன்ற காந்தி மீது உள்ள குற்றசாட்டுகளை வெளிப்படையாக கூறியது, அதன் பிறகு விட்டு விட்டது என்று நினைக்கிறேன்). அதைப்போலவே முத்துராமலிங்க தேவர் மீது இணையத்தில் சொல்லப்படும் குற்ற சாட்டுகளை நான் இதுவரை தமிழ்பத்திரிகைகளில் கண்டதில்லை, ஆனால் சாதாரண மக்கள் பேசி கொள்வதை கேட்டு இருக்கிறேன்.இவை எல்லாம் புரளியா?
Post a Comment