இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?

இட ஒதுக்கீடு தொடர்பாக என் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவு.

இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர்.

ஒரு தலைமுறைக்கு 33 ஆண்டுகள், இட ஒதுக்கீடு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது, சரியாக சொல்லப்போனால் முதல் தலைமுறையில் அதன் பலன் தெரியவில்லை, ஏனெனில் தொழிற் கல்விகளுக்கான(professional courses) (உதாரணம் பொறியியல்,மருத்துவம்,சட்டம் மற்ற கல்விகள்) அடிப்படை தகுதிகள் பெறும் அளவிற்கு கூட அந்த கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, மேலும் தொழிற்கல்விகள் படிக்க முனைந்தவர்கல் மிக மிகக்குறைவே, மேலும் அன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி கல்லூரிகள் இருந்தன, மேலும் SSLC, PUC முடித்தவுடன் அரசாங்கம் அளித்த கடைநிலை ஊழியர்கள், எழுத்தர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் என்று தான் அவர்களால் செல்லமுடிந்ததே தவிர பெரும் எண்ணிக்கையில் அவர்களால் முன்னேற முடியவில்லை, ஆதலால் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பெரிய பலன் அடையவில்லை.

இரண்டாம் தலைமுறை, அதாவது எண்பதுகளின் இறுதியில் தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்லூரிகளினுள் அடியெடுத்து வைத்தனர்,
கிட்டத்தட்ட கடந்த பதினைந்து பதினாறு ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு அதன் பலனை தந்து கொண்டிருக்கின்றது, இட ஒதுக்கீட்டை அனுபவித்துள்ள இந்த தலை முறையின் சந்ததிகள் இன்னமும் கல்லூரி நிலையை எட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே... அதற்குள் தலைமுறையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சாரரே இட ஒதுக்கீட்டை பயன் படுத்துகின்றனர் என்பது எத்தனை அப்பட்டமான பொய்.

எழுபதுகளில் தொழில்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் பயனுற்றவர்கள் மிக மிக குறைவே அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கையும் விழுக்காடு அளவில் மிகக்குறைவே என்பது கண்கூடு, இருந்தாலும் இப்படி ஒரு பொய் பிரச்சாரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகின்றது, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் தேவை ஆனால் அதன் தேவை இன்றே என்ற அளவில் இல்லை,

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான பொய் பிரச்சாரம், இட ஒதுக்கீட்டை பயன்படுத்திய/பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முதல் தலைமுறை தான் இப்போது உள்ளது.

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்று கவலைப்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அதன் காரணத்தால் இட ஒதுக்கீட்டையே நிறுத்த சொல்வது வினோதமான ஒன்று.

43 பின்னூட்டங்கள்:

said...

அது சரி. ஒரே குடும்பத்தில் வரிசையாக ஓராண்டு இடைவெளியில் நான்கைந்து பிள்ளைகள் இருக்கிறார்களே. அவர்களை எப்படி கணக்கில் கொள்வீர்கள்?

said...

//அது சரி. ஒரே குடும்பத்தில் வரிசையாக ஓராண்டு இடைவெளியில் நான்கைந்து பிள்ளைகள் இருக்கிறார்களே. அவர்களை எப்படி கணக்கில் கொள்வீர்கள்?
//

இது என்ன கேள்வி? இதற்கும் பதிவிற்கும் என்ன தொடர்பு, இந்த கேள்வியின் நோக்கமென்ன? இந்த கேள்வியால் நீங்கள் நிறுவ முயல்வது என்ன?

உங்கள் கேள்விக்கான பதில் உங்களுக்கே தெரியும், இருந்தாலும் கேட்பதால் சொல்கிறேன் அவர்கள் அத்தனை பேரும் ஒரே தலைமுறை தான்.

said...

புரியவில்லையா, புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?

ஒரு குடும்பத்தில் தான் ஏற்கனவே ஒருவர் அந்தச் சலுகையை அனுபவித்து விட்டாரே. அடுத்த குடும்பத்தினருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தானே?

said...

சரி அடுத்த கேள்வி. ஒரு தலைமுறையில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர் அடுத்த தலைமுறையில் தனது பிள்ளைகளை இட ஒதுக்கீடு முறையில் பயனளிக்க விட மாட்டேன் என்று ஒப்புக் கொள்வீர்களா?

said...

//புரியவில்லையா, புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?
//
யார் புரியாத மாதிரி நடிக்கிறார்கள் என இதை படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்...

//ஒரு குடும்பத்தில் தான் ஏற்கனவே ஒருவர் அந்தச் சலுகையை அனுபவித்து விட்டாரே. அடுத்த குடும்பத்தினருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் தானே?
//
முதலில் உங்களுக்கு வலியுறுத்துவது, இட ஒதுக்கீடு சலுகையல்ல உரிமை...

இந்த கேள்வியில் உள்ள லாஜிக்கை(?!) படிப்பவர்கள் உணர்வார்கள்.

said...

இட ஒதுக்கீடு சமூக நீதி அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது.
creamy layer பொருளாதார அடிப்படையில் கூறப்படுவது
வெவ்வேறு அடிப்படைகளில் ஒரு
பிரச்சினையை தீர்க்க முடியுமா?
சமூக நீதி நிலை நாட்டப்படும் வரையில் இட ஒதுக்கீட்டை தவிர்க்க முடியாது
தமது சகோதரர்களுக்கு இதுவரையில் மறுதலிக்கப்பட்டவற்றை இனியாகிலும்
கொடுக்க வேண்டும் எனும் மணவள்ம்
உயர் கல்வி பெறும் மாணவர்களிடம்
கூட இல்லாத சமுதாயத்தில், சமூக நீதி எப்பொழுது நிலை நாட்டப்படும்?
இட ஒதுக்கீடு எப்பொழுது நிறுத்தப்படும்?

said...

இட ஒதுக்கிட்டிற்கு நான் எதிரியில்லை. பொருளாதார ரீதியிலும் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
1970 கடைசியில் இட ஒதுக்கீட்டில் இடம் பிடித்தவர்க்களின் பிள்ளைகள் மறுபடியும் இட ஒதுக்கீட்டில் பல வாய்ப்புகளை பெற்றுக் கொண்டு இருக்கின்றார்க்கள் என்பது மறுக்க முடியாது உண்மை. கண்கூடாக பலரை பார்த்து இருக்கின்றேன். இதற்கு சட்டத்தில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். உண்மையில் இந்த ஒதுக்கீடுகள் கூக்கிராமளை இன்னும் சரியாக அடையவில்லை என்பது வருத்துக்கூறியது.

said...

தனியார் கல்லூரிகளில் பிற்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு எப்போது கேட்பீர்கள்?

said...

தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பற்றி மறந்தவர்கள் தனியார் நிறுவனங்களில் மட்டும் கேட்பது ஏன்?

said...

//1970 கடைசியில் இட ஒதுக்கீட்டில் இடம் பிடித்தவர்க்களின் பிள்ளைகள் மறுபடியும் இட ஒதுக்கீட்டில் பல வாய்ப்புகளை பெற்றுக் கொண்டு இருக்கின்றார்க்கள்
//
உண்மை இருக்கும் ஆனால் இதன் அளவு மிக மிகக்குறைவு, சற்று யோசித்து பாருங்கள் 1970ல் இட ஒதுக்கீட்டில் பொறியியல் மருத்துவம் படித்தவர்கள் எத்தனை பேர் அவர்களின் சந்ததிகள் எத்தனை ஆட்கள் இட ஒதுக்கீட்டை தற்போது பயன்படுத்தி உள்ளார்கள் என்றால் அது மிகக்குறைவாகவே இருக்கும், நிச்சயம் இந்த இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் பீதியை கிளப்பும் அளவில் அது இல்லை. மேலும் 1970களில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் அதிகம் அல்ல, இட இதுக்கீட்டின் மூலம் பரவலாக வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது 80களின் இறுதியில் தான் அவர்களின் சந்ததிகள் கல்லூரிக்கு வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என முடிவு செய்து கொள்ளுங்கள், இதை காரணம் காட்டி இன்றைய நிலையில் இட ஒதுக்கீடே வேண்டாம் என்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்களேயொழிய வேறு தீர்வுகள் எதையும் அவர்கள் முன்வைப்பதில்லை.

உதாரணத்திற்கு நிறைய பணம் உள்ள ஒரு ஒயின் ஷாப்(அட நம்ம காதல் படத்து தண்டபானி மாதிரினு வைத்துக்கொள்ளுங்களேன்)உரிமையாளரினால் so called திறமை என சொல்லப்படும் அதிக மதிப்பெண்கள் வாங்க கொடுக்க முடியாத சூழலை ஒரு மத்திய தர உயர் சாதி கிளார்க்,அக்கவுண்டன்ட் அவர்கள் குழந்தைகளுக்கு உருவாக்கி தரமுடியும்,இது உதாரணம் மட்டுமே, பணம் அதிகம் இருப்பவர்களால் சாதக சூழலை உருவாக்கி தருவது இயலாது, அது படிப்பு தான் உருவாக்கி தரும்.

said...

இந்த ஒயின் ஷாப் உதாரணத்தின் மூலம் என்ன
சொல்ல வருகிறீர்கள்?

said...

kuzhali,

arumai! thodarnthu ithu paRRi ezuthungaL! :)

said...

Mr.Kuzhali
May I point out that reservation was introduced by Justice party much before the nation became independent.So reservation has been
around for atleast more than 60 years.And if a family has five memebers all of them get the benefits.There is no creamy layer
concept. So grandfather,son(s)/daugther(s)/grandson(s)/Grand
daughter(s) continue to benefit for three generations.Now it can be fourth or fifth generation that is enjoying the benefits.

said...

//reservation has been
around for atleast more than 60 years.
//
ஆனால் பரவலாக தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்டவர் பயனடைய ஆரம்பித்தது எண்பதுகளின் இறுதியில் மட்டுமே

said...

Mr.Kuzhali
Are you going to say that they did not get much benefit before late eighties.With the importance given
to education after 1947 avenues
were opened up for all to get educated.Govt. made special allocations for educating SCs,STs, and OBCs by giving facilities like hostels,free education,scholarships etc.
This continues even now.
OBCs benefitted much from this.

said...

உங்கள் லாஜிக் படியே 33 ஆண்டுகளில் இரண்டு தலைமுறை கல்லூரியை தொட்டுவிடுகிறது.

அதனால் இன்று பயனை அனுபவிப்பவர்கள் முதலாம் தலைமுறையினர் மட்டுமே அல்ல.

தீர்வாக இடஒதுக்கீட்டால் பலன் அடைந்த ஒரு தந்தையின் கீழ் வந்த குடும்பத்தினர் எத்தனை தலைமுறையாக உரிமை கோரலாம் என நிர்ணயிக்கலாம்.

said...

Anonymous,

I do agree that the justice party introduced reservations. But can you tell me how many professional colleges in Madras presidency at that time? Were there any IIT's? Were there any IIM's?

Until the 20's you need to know sanskrit to be an doctor. Do you know that? Justice party removed that requirement, thereby opening the medical seats to the tamils.

I did my degree in 80's. There were only 8 engineering colleges and 3 medical colleges in Tamilnadu at that time. You have to score very high marks (even if you are a BC or SC) because the seats were very limited. The situation changed in the 90's once the private professional colleges opened up.

So do not compare the justice govt period and the current one.

My father was the first graduate in his village. Both of us studied in govt arts colleges. My children might make an attempt to join a professional institution in 10 years time.

So will my children be a third generation enjoying the quota or a first generation enjoying the quota?

said...

You talk of only technical education.How about colleges,
universities and govt. jobs.
OBCs have been benefitting since the days of Justice Party by reservation in these institutions
and in govt. jobs.As indicated earlier govt. apart from reservations provided various facilities to OBCs. So your argument is flawed.

said...

So will my children be a third generation enjoying the quota or a first generation enjoying the quota?

Perhaps third if you both availed quota.

said...

மேலே அருண்மொழி சொல்வதில் நிறைய உண்மைகள் உள்ளன. அவற்றைப் புறக்கணிக்க முடியாது.

மேட்டுக்குடியார்தான் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை உணர்ச்சிப்பூர்வமாக அணுகுகிறார்கள்; கருத்து ரீதியாகவோ, சமூக தளத்திலோ அணுகுவதில்லை.

ஆனால், பிற்படுத்தப்பட்டோரே இவ்விஷயத்தில் உணர்ச்சிவசப்படுவதாக பரப்புரை செய்கிறார்கள் அவர்கள்! நல்ல கூத்து!

said...

Even though I am aware of fact that some kinda of reservation is required for sometime for under previllaged, I am of the opinion politicians use this only to divide our society for their own benefit. Parties of DK origin, congress (most servile psychophanctic than admk) and PMK thrive by spreading such hatred in society, esp. anti brahminism. Many brahmins are hopelessly castist on one hand and mindless hatred for brahminism is also prvelant on the other hand. Real problem is we dont have anyone who beleives he is a leader, all we got is vote beggers. If this situation is not checked soon, we are heading for blood bath in near future all over the country.

Anyways this what our HR minister has to say on questions regarding reservation. How dumb.
http://www.ibnlive.com/news/decision-on-quota-is-final-arjun/11063-4-single.html

said...

Anonymous,

The current issue is about the reservations in the higher educational institutions.

The current quota of 69% is not there from the justice party period. I am not sure whether you know the facts.

Please check the facts and provide the details for your argument.

said...

குழலி சரியாக சொன்னீர்கள். இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் 2ம் தலைமுறை மிக மிக குறைவாகவே இருக்கவேண்டும். எனக்கு தெரிந்தவரையில் யாரும் இல்லை, எல்லோரும் முதல் தலைமுறையினரே. இடஒதுக்கீடு இல்லையெனில் எனக்கு தெரிந்த பல பேர் பொறியியல் & மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கமுடியாது. அவர்கள் எல்லாம் அவர்கள் குடும்பத்தில் முதலாவதாக பட்டப்படிப்பு படிப்பவர்கள்/படித்தவர்கள்.

said...

I never said that 69% was there since the days of Justice Party.
The issue is simple, how long reservation has been around and
how many generations have used it
among OBCs.I argue that more than two generations have used it.
Even if you take post 1947 only
Generation I Father in 1950s
Generation II son(s)/daughter(s) in 1970s
Generation III in late 1990s and in 200s
Most men in tamil nadu become father
by early/mid 20s most women in tamil nadu give birth to first
child
OBCs tend to marry early in life
or atleast get their daughters married off by early/mid 20s
So a generation here is not 33
but 25 or 24
Since quota starts from school level even a five year old child
benefits.
In light of above my contention is
to claim that only now, and first
generation is benefitting is wrong.
There will be first generation
graduates/post graduates in some
families but not in all families.

said...

இட ஒதுக்கீடு, அரசியல் வாதிகளுக்கு அது வோட்டு வங்கி. அனுபவிப்போருக்கு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம். கிட்டாதோருக்கு கசப்பானதொரு அனுபவம்.

தொழில்துறை உள்ளிட்ட மேல் கல்விகளுக்கு, அறிவின் பலத்தில் இடமளிப்பதே நாட்டுக்குப் பலம். வோட்டு வங்கியை கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ள சுயலாபக் கட்சிகளும், இலவசம், சலுகைகளை இழக்க விரும்பாத மக்களும் மாறாத வரையில் இது தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அனுபவிக்கின்ற சதவிகிதம் அதிகம், அல்லோர் குறைவு. யார் குரல் ஊரெட்டும், என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

said...

Anonymous,

I enjoyed your comment. From where you found that most men in Tamil nadu become father by early/mid 20s?

Oh dear, I got to pick up a fight with my parents for arranging my marriage very late!!!.

So I assume that you want to remove all kinds of reservations in schools/arts colleagues/state govt offices etc etc .. GOOD LUCK.

said...

//இட ஒதுக்கீடு, அரசியல் வாதிகளுக்கு அது வோட்டு வங்கி. //

இது ஜனநாயகத்தில் இருக்கும் checks and balance.
சிறுபான்மை (Fc,christian,jain , parsi,)முன்னேறியிருக்கிறது. பெரும்பான்மை
(obc, sc/st/muslims) பிந்தங்கி இருக்கிறது. இதைத் தான் அரசியலும்
பிரதிபலிக்கிறது.

said...

First of all are there 2 catagories 1] BC and 2] OBC ?

I am of the opinion there are not many professional colleges before 1980's. Means the number of seats available were very less compared to the period before 1980's. Do we mean to say that all the seats were taken by Brahmins in that period?

said...

குழலி நானும் வந்துட்டேன் வலை பதிய, வந்து பாருங்க. ஆலோசன கூறுங்க,
http://kilumathur.blogspot.com

said...

First of all are there 2 catagories 1] BC and 2] OBC ?

I am of the opinion there are not many professional colleges before 1980's. Means the number of seats available were very less compared to the period AFTER 1980's. Do we mean to say that all the seats were taken by Brahmins in that period?

said...

இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புதெரிவிப்பவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை மாறாக இடஒதுக்கீட்டு உரிமையை கோரும் ஒரு சமூகத்தையே எதிர்க்கிறார்கள் இடஒதுக்கீடு தருவதால் திறமையற்றவர்கள் வரப்போவதில்லை "தகுதி யிருந்தும் வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாயில்" அவ்வளவே குழலியின் கருத்துக்களுக்கு அனானிமஸ் கேள்வி கேட்பது அவரின் புரிந்து கொள்ள மருக்கும் தன்மைதானேயொழிய வேறெதுவும் இல்லை. தொடருங்கள் குழலி....(அப்படியே என் புதிய வலைக்கும் வந்து ஆலோசனை சொல்லுங்க)

said...

//சரி அடுத்த கேள்வி. ஒரு தலைமுறையில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர் அடுத்த தலைமுறையில் தனது பிள்ளைகளை இட ஒதுக்கீடு முறையில் பயனளிக்க விட மாட்டேன் என்று ஒப்புக் கொள்வீர்களா?//

This is a very good suggestion. Few from pro reservation group (like me) may accept this. (In fact if you analyse carefully, this will really help the poor and down trodden). But I don't think the persons who are against reservation are going to accept. As told in another comment "இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புதெரிவிப்பவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை மாறாக இடஒதுக்கீட்டு உரிமையை கோரும் ஒரு சமூகத்தையே எதிர்க்கிறார்கள்"

By the way The Merit List for Admission to Medical Colleges (2005) in TamilNadu gives and Interesting point. Read the full piece here at
http://www.hindu.com/2005/07/20/stories/2005072011970100.htm

Open Seats - 430
321 BC students,
57 MBC students
14 SC students will get into the open competition.
38 Forward Community

How is this possible in Tamil Nadu ????? ie students from backward communities outshine those from forward communities

2 Answers for this question
1. Periyar
2. Kamarajar
Doctors from Forward Communities cannot get seats BECAUSE THE STUDENTS FROM THE "BACKWARD" COMMUNITIES PREFORM BETTER THAN THE STUDENTS FROM THE "FORWARD" COMMUNITY
It was because of the Education drive initiated in this state 40 years ago..... by the MID DAY MEAL PROGRAM.. by providing free meals.... and scholarships and jobs

Thus came a generation of teachers and clerks in the 70s and 80s from these communities . The children of those people (teachers and clerks and other educated people) are able to compete with the forward class students.

So We can safely conclude that reservation has UPLIFTED the down trodden.

In few years, there will be a scenario where the seats in the open category are grabbed by students in ratio that reflects the general population (5% for Forward Community in Open Competition). When we reach such a state, That is an indication that there is no forward community and no backward community.(of we are able to conduct election in keeripatti !!!)

For example
When there are 100 seats if the backward community students are able to take 75 of them and the SC/ST 20 of them and Forward Community 5 of them (assuming 5% of population is Forward, 20 % is SC and 75 % is Backward) it is the time to stop reservation

As of now the backward communities are NOT ON PAR, they are little backward.... May be the situation will come to a level ground in another 5 years.... THen we can think modifying the present policies

BUT WHAT I HAVE TOLD IS FOR TAMIL NADU ONLY....... This may not hold good for other states because of reasons I have already told

said...
This comment has been removed by a blog administrator.
said...

விடாது கருப்பின் இந்த பின்னூட்டம் திருத்தப்பட்டுள்ளது

//இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மேல்வர்க்க . நீங்கள் எழுதுங்கள் குழலி. பெட்டைக்கோழி கூவியா பொழுது விடியப் போகிறது? எந்த ஆட்சி வந்தாலும் அவர்களால் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்ய இயலாது! //

said...

How is this possible in Tamil Nadu ????? ie students from backward communities outshine those from forward communities

simple, you have a system that
is skewed against the forward
castes.you win by having rules
in your favor, no fair play, no
level playing field.you are
shamelessly using that and want
more.you have a vested interest
in perpetuating it so that you
grab all and leave nothing to
forward castes.kuzhali and others
want only this.

said...

இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய அனைவருக்கும் நன்றி. உயிர் இழந்தவர்க்கும், உயிர் இழக்கப்போவதாக பிலிம் காட்டுபவர்க்கும் நன்றிகள் பல. உங்கள் போராட்டம் வீணாகவில்லை. உங்களுடைய இடங்கள் அப்படியே இருக்கும்.

தகுதி, திறமை கொஞ்சம்கூட இல்லாத கூட்டம் இன்னும் பல இடங்களை சுலபமாக பெற்றுவிட்டது. நாங்க போராடி இருந்தால் கூட இவ்வளவு இடம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆகவே உங்களுக்கு எங்கள் அனைவரின் மனமார்ந்த நமஸ்காரம்.

said...

அருள்மொழி அவர்களே!
//தகுதி, திறமை கொஞ்சம்கூட இல்லாத கூட்டம் இன்னும் பல இடங்களை சுலபமாக பெற்றுவிட்டது//
இதன் மூலம் நீங்கள் கூட்டமென்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? தகுதியற்ற யாரும் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியாது. இட ஒதுக்கீடே தகுதியிருந்தும் வாய்ப்பில்லாதவர்களுக்கான வாயில்தானே ஒழிய அது சாவியில்லை. இது உரிமை சலுகையில்லை இந்தியா சுதந்திரத்துகாக போராடியது சலுகைக்காக அல்ல அது உரிமை. உங்களின் நமஸ்காரத்திற்கு நமஸ்காரம்

said...

I have posted my opinion on Reservation in the below link:

http://kaipulla.blogspot.com/2006/05/reservation-haunts-againmore-teeth.html

said...

இட ஒதுக்கீடு குறித்து பல வாதங்கள் இருப்பினும், ஒரு மத்திய அமைச்சர் எடுத்துக் கொண்ட கொள்கையை சரியாக புள்ளி விவரங்களுடன் வாதிட முடியாமல் இருப்பது மிகக் கேவலமானது.

http://www.ibnlive.com/news/decision-on-quota-is-final-arjun/11063-4-single.html

said...

At the end of the day, the castes that really suffer because of these increases in reservation are not just brahmins, but Saiva Valar - Pillais and Mudaliars. Nagarathars do not really worry much on this account. Affleunt Brahmins are able to atleast get into IITs, BITS-Pilani and other central institutions. Poor Brahmins and Saiva Velalars are the real sufferers.

In my opinion, if something that is going to disunite Tamils in the long run, it is the unexpressed hatred that is prevailing among Saiva Velalars against reservation and backward castes, as most of us are neither very affluent nor networked. Our traditional jobs and lands have been taken away. The only positive thing that is emerging is the growth of IT services where Brahmins and Saiva Velalars are miles ahead of the rest. Unless reservation includes poor from forward communities, it is only going do more damage Tamil identity. Already majority of Brahmins are alienated, not slowly Saiva Velalars are also getting alienated. This is ironical considring the lead role they played in Justice party and DMK, to develop backward castes.

said...

//you win by having rules
in your favor, no fair play, no
level playing field.you are
shamelessly using that and want
more.you have a vested interest
in perpetuating it so that you
grab all//

I will give an example for this

The truth about Merit in AIIMS
Please read an interesting article from Times of India

http://timesofindia.indiatimes.com/articleshow/1543278.cms

Striking AIIMS docs live in a glass house by Akshaya Mukul
[ Tuesday, May 23, 2006 01:55:32 amTIMES NEWS NETWORK ]

NEW DELHI: The main grouse of AIIMS students - at the forefront of the stir against 27% reservation for OBCs - is that merit is being sacrificed at the altar of votebank politics. But they forget two things: 25% reservation that AIIMS graduates get in PG admission and the Supreme Court judgment of 2001 that declares the earlier system of 33% reservation for them bad in law.

In fact, the SC, while stating that 33% institutional reservation is "unconstitutional", agreed with the findings of the Delhi High Court, which had earlier set aside the reservation.

The HC had found that "AIIMS students, who had secured as low as 14% or 19% or 22% in the (all-India) entrance examination got admission to PG courses while SC or ST candidates could not secure admission in their 15% or 7% quota in PG courses, in spite of having obtained marks far higher than the in-house candidates of the institute." HC had analysed admission data over five years.

The apex court also agreed with the HC that the "figure of 33% reservation for in-house candidates was statistically so arrived at as to secure 100% reservation for AIIMS students. There were about 40 AIIMS candidates. The PG seats being 120, 33% thereof worked out to be 40." That meant all 40 AIIMS graduates were assured of PG seats.

Merit here was clearly being sacrificed, the study showed. For instance, in the January 1996 session, an AIIMS student with 46.167% marks - lowest for an AIIMS student that year - got PG admission.

However, an SC student with the same grades was admitted but denied coveted course such as obstetrics and gynaecology. The SC student got shunted to community while AIIMS students easily won berths in prestigious disciplines.

Twelve AIIMS candidates were selected even though they got less marks than the SC candidate who secured 60.33% marks. Similarly, 16 AIIMS students got admission to PG courses even though they got less marks than another ST student who got 62.16%.

Basing itself on this study, SC said, "Institutional reservation is not supported by the Constitution or constitutional principles." "A certain degree of preference for students of the same institution intended to prosecute further studies therein is permissible on grounds of convenience, suitability and familiarity with an educational environment," it added.

Preferences, the court said, had to be "reasonable and not excessive...Minimum standards cannot be so diluted as to become practically non-existent." In the similar vein, SC said, "It cannot be forgotten that the medical graduates of AIIMS are not 'sons of soil'. They are drawn from all over the country."

The court reasoned that these students had "no moorings in Delhi. They are neither backward nor weaker sections of society. Their achieving an all-India merit and entry in the premier institution of national importance should not bring in a brooding sense of complacence in them".

Extending the damning logic, the court said in preserving quotas for its own students, "the zeal for preserving excellence is lost. The students lose craving for learning."

--WHY Don't you oppose this

Why don't you ask the Prime minister and the president to cancel Institute Quota in AIIMS

After you people are in the streets fighting for merit..

Can you give an answer as to why you are NOT OPPOSING A QUOTA that enables some one with 17 % to get a PG Seat, but opposing a quota that will enable some one with 62 % to get a PG Seat

Please reply, if you have conscience.....

said...

The ugly side of few perverted minds in Delhi

For nearly two weeks few guys in the capital were shouting that Merit is going to be compromised due to reservations. All the while, there has been clearcut evidence as to show that Merit will be NO WAY affected due to reservations and that reservations are going to uplift the society as a whole.

Now the cat is out of the bag.

As per Rediff a guy called Armaan, a doctor leading the agitiations says

" We prefer reservation for people who deserve it. It's not that we don't have a conscience. We do care for the poor, those who really need help. We should have reservation on the basis of economy."

So, at last as we have been telling all these days, these depraved guys never bothered about Merit. Merit was just an excuse for Apartheid. I would like to know the reaction of all those who were crying in the name of Merit (including two self-centered caste-centered nepotistic chaps who resigned from the knowledge commission in the name of merit) as to the new shift in demand by the Doctors that they are ready for Quota based on Economy, but not for quota based on Caste.

For those who do not know the difference, let me explain

Now if seats are reserved on the basis of caste, let us assume that a Student from FC will get the seat if he scores 297 out of 300 where as a student from SC will get the seat even if he scores 291 out of 300 (these are the cut off values from MBBS Admission in Tamil Nadu in 2005)

So far the apartheid guys were shouting loud that merit will be affected. There were even remarks from few of those "intelligent" chaps that a guy who scored 292 (SC guy who has got seat) is less talented (or less meritorious – let me repeat the word play) than the forward caste guy who scored 296 (and there fore cannot get the seat as the OC cut off is 297)

But now they WANT QUOTA ON ECONOMY. So they have no problem when a poor guy with mark 292 gets the seat while a rich guy with mark 296 does not get the seat. And strangely, in this case, (according to these doctors and also a person called Narayana moorthy, for whom I had great regard, until he too advised economy based quota) the merit is not affected when quota is based on economy.

Now I am not able to understand this……

If the earlier claim that merit is going to be affected by reservation based on caste is true, then merit is going to be affected if the quota is based on economy or for that matter any other reason like the state of domicile (Delhi – 100 percent reservation for Delhi Undergraduates) , Religion (eg Andhra Pradesh) , college graduated (eg JIPMER)

So a person whose primary aim is preservation of merit should NOT ALLOW ANY QUOTA.

But See the Delhi Doctors.

They have gone on Mass CL today. They do not want a SC student getting 292 marks get MBBS. But they were silent when Private colleges were started that made any person, even those who passed 12th after 3 attempts get MBBS. What were they doing when the private colleges were opened? They did not even give a sign of protest. Do those AIIMS guys think that we all are fools to believe that they are crusading for merit at present? What were they doing for those sponsored seats and NRI quotas

They have no problem when some one gets MBBS from Private College even though he gets 50 marks in 12th. They never fought. It was Tamil Nadu students who had always fought against the private medical colleges

They have no problem of a student getting low marks in PG entrance in AIIMS, but getting MD Gen just because he studied MBBS there. At that juncture they never represented to PM or President

And as per the latest statement, they have no problem if a poor guy who gets 292 marks become a doctor while a rich guy who gets 296 has to watch

BUT THEY ARE WORRIED when a SC Guy (or a OBC Guy) who takes 292 marks get admission instead of a Forward Community guy who gets 296.

SO in effect, all these hullabaloo over the past two weeks were not against reservations. It is in fact against the students from the reserved community.

They were not fighting for merit as they were claiming (we already knew that merit is a mask) They fight to maintain apartheid

And see this report in Economic times by Urmi Goswamy from Delhi(as per http://thoughtsintamil.blogspot.com/2006/05/blog-post_23.html) that sums up the issue

PRIVATE schools and parents worried about their children studying along side children belonging to weaker sections can breathe easy. The government proposes to let them off the reservation hook. The model Right to Education Bill proposes that private schools that receive no funds from the government will not be required to take children from weaker sections. The Model Bill will form the basis of states' legislation to enable the fundamental right of education.

SO there are guys in Delhi who cannot breathe easy when a student from weaker society studies along with his children. Their main worry seems to be the community of the student who studies along with them and not the marks of the students who studies in the college. God Save India !!!

said...

See the delhi doctors

They want a quota based on Institute preference.

They want a quota based on economy

But they are against a quota based on Caste

Why does not IBNLive and REdiff raise voice against the Insitute quota by which those who have got 15 % (yes 15 out of 100) get PG seats where as other candidates are left in the open